Saturday, December 12, 2015

சிம்பு அண்மையில் போட்ட சில ‘பீப்’களுக்கு எதிராக பொங்கி எழும் மாதர் சங்கங்கள்...!

முன்குறிப்பு :- இது தொடர்பாக வாசிக்க ஆவல், விருப்பம் இல்லாதவர்கள் தயவு செய்து வாசிக்க வேண்டாம். பிற்பாடு வாசித்து விட்டு "இந்த பதிவை எழுதின நேரத்திற்கு ஏதாவது உருப்படியான வேலை செய்திருக்கலாம்..." என்றது போன்ற பின்னூட்டல்களை பதிக்க வேண்டாம்.. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் உங்கள் மானம், மரியாதைக்கு கம்பனி பொறுப்பு கிடையாது என்பதை தாழ்மையுடன் கம்பனி உறுப்பினர்கள் கூறிக்கொள்கிறார்கள்... என் கட்சிக்காரர் சிம்பு என்ன பண்ணீட்டார் அப்படி... நீங்க எல்லாம் கிழ்ர்ந்து எழும் அளவிற்க்கு என்று பார்ப்பம்...! 

நன்றாக இருந்தால் பாராட்டுவதற்கு நேரம் ஒதுக்க முடியாமலும், பிடிக்கவில்லை என்றால் எவ்வளவு நேரம் ஒதுக்கி என்றாலும் திட்டுவதற்கு தயாராக இருக்கும் சமூகத்திற்கான ஒழுக்கத்தை கெடுத்து விட்டாக குற்றம் சாட்டப்பட்டு கைதாக வேண்டும் என்ற அளவுக்கு அவர்களுக்கு எதிராக போர் கொடி தூக்கப்பட்டுள்ளது. வேற எந்த காரணமும் இல்ல ‘புண்#க்கு’ என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தி பாடல் எழுதி அதை பாடியமைக்காக சிம்புவும் அந்த பாடலுக்கு இசை அமைத்தமைக்காக அனிருதும் மூன்று வெவ்வேறு பிரிவுகளில் கைதாக போகின்றார்கள் என்ற நிலை. மாதர்சங்க, பெண்கள் அமைப்பு... இன்னும் என்ன என்ன எல்லாம் இருக்கோ அவை எல்லாம் சினிமா பாடல்களை கேட்டுதான் பெண்களை வழிநடத்துகின்றார்கள் போல... நீங்க எல்லாம் என்ன ‘பீப்’க்கு சங்கம், அமைப்பு வச்சிருக்கீங்களோ... சரி சரி அது என்ன ‘பீப்’? நம்ம சமூகத்தை அப்படி என்னதான் கெடுத்துட்டாங்க என்று பார்த்தா? ஒன்னும் இல்ல அந்தாளு ஏதோ ஒரு காண்டில ஒரு பாட்டு பாடீட்டு அத போய்...


கைல ஒரு போன் இருக்கு என்று நீங்க என்னவும் சொல்லலாம் என்றால் இவங்களும் என்னவும் பாடலாம்... என்ன பிழை இருக்கு...!?!

Post Comment

Tuesday, October 21, 2014

கத்தி - சினிமா விமர்சனம்!!!

பொதுவாக ஆக்‌ஷன் ஹீரோக்களின் படமாக இருந்தால் மக்களுக்காக போராட வேண்டும், அநியாயம் செய்யும் வில்லனை ஓட ஓட துரத்த வேண்டும் அல்லது அரசாங்கத்தை எதிர்த்து மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். இப்படியான கதையாக இருந்தால்தான் ஆக்‌ஷன் காட்சிகளின் மூலம் ஹீரோயிசத்தை உயர்த்திக்காட்டி ஹீரோவுக்கு மாஸ் இமேஜை உருவாக்க முடியும் அல்லது இருக்கும் மாஸ் இமேஜை தக்க வைத்துக்கொள்ள முடியும்! மிகவும் அருமையான ஒரு கூட்டனி விஜய் - முருகதாஸ், இதற்கு முதல் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத ‘துப்பாக்கி’ என்ற படத்தை கொடுத்த வெற்றிக்கூட்டனி கொடுக்கும் அடுத்த படம்தான் ‘கத்தி’! படம் தொடர்பான எதிர்பார்ப்புக்கு பஞ்சமே இல்லை! ‘துப்பாக்கி’ படத்தில் எப்படி தீவிரவாதிகளை அழித்து மக்களை காப்பாற்றும் இராணுவ வீரராக விஜய் நடித்து வெற்றி படம் ஒன்றை கொடுத்தாரோ, அதே போல ஒரு கதையை உள்ளடக்கிய படமே ‘கத்தி’!

ரசிகர்களால் உருவாக்கப்பட்ட First Look!!!

Post Comment

Thursday, August 21, 2014

‘கஞ்சா’வில் இருந்து உச்சக்கட்ட போதையை பெறுவது எப்படி?

‘புகைத்தல் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும்’ (இப்படி எல்லாம் போட்டுத்தான் புகைத்தல், குடி, போதை தொடர்பான பதிவுகளை எழுத வேண்டும் என்று கட்டளை போடப்பட்டிருப்பதாக கேள்வி!!!) உங்களை மட்டும் பாதிக்காமல் உங்களை சூழ இருப்பவர்களையும் பாதிக்கும். அதனால் புகைக்க விரும்புவோர் புகைப்பழக்கம் இருப்பவர்களுடன் மட்டும் சேர்ந்து புகைக்கவும்! இந்த பதிவை வாசிக்கும் போது உங்களை மோட்டிவேட் செய்வது போல இருந்தால் பதிவை தொடர்ந்து வாசிக்க வேண்டாம். இந்த பதிவு ஒரு தகவல் கோர்ப்புக்காக எழுதப்பட்டது. யாரும் இதனை வாசித்த பின்னர் முயற்சி செய்து பார்க்க வேண்டாம். சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லியாச்சு இனியாச்சும் தலைப்புக்குள் செல்வோமா? இந்த பதிவு நியமாகவே போதை அதிகமானது! விருப்பம் உள்ளவர்கள் மட்டும் வாசிக்கவும் அல்லது தகவல் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டும் வாசிக்கவும்!

Post Comment

Thursday, August 14, 2014

அஞ்சான் - சினிமா விமர்சனம்!!!

அஞ்சானின் வெற்றி சூர்யாவுக்கு எவ்வளவு  முக்கியமோ அதை விட லிங்குசாமிக்கு முக்கியமானதாகும். 2010ஆம் ஆண்டுக்கு (பையாவுக்கு) பிறகு லிங்குசாமிக்கு சரியான வெற்றி கிடைக்கப்பெறவில்லை, அதை தொடர்ந்து இயக்கும் சந்தர்ப்பங்களும் சரி வர அமையப்பெறவில்லை. 2014ஆம் ஆண்டில் சூர்யாவிடம் 3 கதைகளை சொல்லி அதில் ஒரு கதை சூர்யாவுக்கு பிடித்த பின்னரே படம் ஆரம்பமானது. ஆக லிங்குசாமியின் நிலை கூரிய கத்தியின் அலகில் நடைக்கும் பயணம் போன்றது. அடுத்து சூர்யா 2010ஆம் ஆண்டுக்கு (சிங்கம்-1) பிறகு பெயர் சொல்லும் அளவுக்கு படங்கள் வெளிவரவில்லை.2013ஆம் ஆண்டு சிங்கம்-02 மூலம் மீண்டும் உச்சம்தொட்டார். அதனால்தானோ மிகவும் யோசித்து நல்ல இயக்குநராக இருந்தாலும் கதையில் முக்கியத்துவம் செலுத்தி அஞ்சான் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆக மொத்தத்தில் இந்த படம் சூர்யாவுக்கு சிங்கம்-02 ஐ தொடர்ந்து தொடர் வெற்றிகளை குவிக்க வேண்டும் என்ற நோக்குடனான படமாகவும், லிங்குசாமிக்கு தொடர்ந்து சினிமாவில் நல்லதொரு இயக்குநராக நிலைத்து நிற்றகவேண்டும் என்ற கனவுடனான படமாகவும் அமையப்பெற்றுள்ளது என்பது யாராலும் மறுக்க முடியாது! சரி இந்த இன்றோ போது இனி படம் கொடுக்கிற காசுக்கு வெர்த்தா இல்லையா? என்று பார்ப்பம்!

இவங்களை போலவே படமும் ஸ்டைலிஸ் ஆக இருக்கு!

Post Comment

Wednesday, August 13, 2014

மீண்டும் ஆசை நாயகனாக ரசிகர் முன் தோன்றுவாரா அஜித்!!!

நீண்ட நாட்களாக பதிவிட வேண்டும் என்ற வரிசையில் இருந்து இன்று விமோட்ஷனம் பெற்ற பதிவாகும். நான் ஒரு அஜித் ரசிகன் என்பதை நான் சுட்டிக்காட்டித்தான் உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று இல்லை ஏன் என்றால் எனது பதிவுகளையோ அல்லது டுவிட்டரையோ தொடர்பவர்களுக்கு அது நன்றாக தெரியும். இருந்தும் எனது ஆதங்கங்களை முன் வைக்க வேண்டும் அது மட்டும் அல்லாது அனேகமான அஜித் ரசிகர்களின் சொல்ல முடியாமல் இருக்கும் ஆதங்கங்களை முதலில் முன் வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவுனை எழுத முன் வந்தேன். இந்த பதிவை வாசித்த பின்பு என்னை திட்டுபவர்களே அதிகமாக இருப்பார்கள் என்பதை நன்கு உணர்ந்தே இந்த பதிவினை எழுத ஆரம்பித்தேன் ஆதலால் இந்த பதிவு தொடர்பாக வரும் விமர்சனங்களுக்கு நான் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்கின்றேன்! கருத்துரைக்க விருப்புவோர் கருத்துரைக்கலாம் பதிலுரைக்க நான் தயாரான நிலையிலேயே இந்த பதிவினை எழுதுகின்றேன்! சரி பதிவுக்குள் போவோம்!

பழசுதான் ஆனால் வித்தியாசம் காட்டும் கதாப்பாத்திரங்கள்!!!

Post Comment