Monday, April 30, 2012

நிஜ ஹீரோ 'தல'தான்.... (பாகம்-2)

பாகம்-1 ஐ படிப்பதற்கு இங்கே சொட்டவும்.


பொறுத்த அமைதி பொங்கி எழுந்தது அன்றுதான் தமிழ் நாட்டு முன்னாள் முதலமைச்சருக்காக எடுக்கப்பட்ட "பாச தலைவனுக்கு பாராட்டு விழா"வில் நிறைய ஹீரோக்கள் கட்டாயத்தின்பேரில் கலந்துகொண்டனர்.அஜித்தும் கலந்துகொண்டார்."முதல்வர் முன்பாகவே நாங்கள் கட்டாயப்படுத்தபடுகின்றோம்"என்று கூறினார்.


  அனுபவம்,செல்வாக்கு மிக்க ரஜினி,கமல் செய்ய முடியாததை அஜித் செய்து காட்டினார்.யாரால் இப்படி பேசமுடியும்?இதுதான் நிஜ ஹீரோக்கு அழகு,அஜித் உண்மையான ஹீரோ.மற்றவர்கள் சினிமாவில்மட்டும் ஹீரோவாக இருக்க முயற்சி செய்தனர்.ஆனால் அஜித் குரல் எழுப்பி ரசிகர்களுள் நியத்திலும் ஹீரோ என்பதை நிருபித்தார்.

அஜித் தனது ரசிகர் மன்றங்களை கலைத்தது நல்ல ஒரு முயற்சி,மன்றங்கள் என்பதையும்தாண்டி இப்போது ஏதோ ஒன்று நம் ஒவ்வொரோரையும் கவர்ந்து ரசிகர் பட்டாளமாக்கியுள்ளது.கண் காண முடியாத ரசிகர் மன்றத்தினால் நாம் இன்னமும் இணைக்கபட்டுதான் உள்ளோம்.எல்லா ரசிகர்களும் தங்களுக்குள் விலகி இருக்குறார்கள்,தலைவனும் விலகியே இருக்கிறான் ஆனால் சிந்தனை மட்டும் மாறுபட்டதாக தெரியவில்லை.

இவர்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை.எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத நிஜமான ரசிகன்,ஹீரோ உறவு இது.இந்த உலகிற்கு ஓர் சிறந்த எடுத்துக்காடு ஆகும்.அஜித் ஒரு சிறந்த தொழிலாளி,எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தனது வேலையை முழு ஈடுபாட்டுடன் செய்கின்றார்.தொழிலாளர் தினத்தின் பெருமையை சொல்லாமல் "அஜித்" என்ற பெயர் பறை சாற்றி நிற்கின்றது.


தனது ரசிகர்களின் குடும்பத்தையும் கவனிக்க சொல்கின்றார்,தனக்கு கட்அவுட் வைப்பதையோ பால் அபிஷேகம் செய்வது என்பதைவிட உன்னுடைய வீட்டுக்கு உழைப்பதையே தான் விரும்புவதாக சொல்கிறார்,தான் படிக்காத கல்வியை தனது ரசிகர்கள் எவரும் இழந்து விடக்கூடாது என ஒரு அண்ணனாக அறிவுரை கூறுகிறார்,தனது ரசிகர்களை தேவையில்லாத பாதையிலே வழிகாட்ட விரும்பாதவர்.எனது சினிமாவைவிட உனது வாழ்க்கையே உனக்கு முக்கியம் என உணர்த்தியவர்,அரசியல் செய்ய ஆயிரம் பேர் உள்ளனர் தனது வேலை எதுவோ அதைமட்டும் பார்க்கின்றவர்.குழு குழுவாக தனது ரசிகர்களை தன்னுடைய சுய அரசியலுக்காக பயனடுத்தும் நடிகர்கள் மத்தியில் எங்கள் அண்ணன் அஜித் மட்டுமே "தல"யாக திகழ்கின்றார். 
                            
தல போல வருமா..?


காதல் கோட்டையில்
காதல் இளவரசன்
ஆனாய் - நீ
காதல் மன்னனில்
எல்லோரினதும் இதயத்தை
கொள்ளை கொண்டாய்

அமர்க்களத்தில் எல்லோரையும்
அமர்க்களப்படுத்தினாய்
ஜி மூலம் எல்லோரையும்
ஜி என்று கூப்பிட வைத்தாய்

எல்லோருக்கும் ராஜாவானாய்
ஆஞ்சநேயர் அவதாரம் எடுத்தாய்
எல்லோருக்கும் இரத்தம்
ரெட் என்று உணரவைத்தாய்

அமராவதியில் ஆரம்பித்து
அசலாக நிமிர்ந்து நிக்கிறாய்
ஏகனில் ஒருவனாக நின்று
எதிரிகளை அழித்தாய்

பரமசிவன் அவதாரமும்
உனக்கு அத்துப்படி
தீப்பொறி பறந்தது
திருப்பதியில்
அட்டகாசமாய் இருந்து

அவள் வருவாளா
என எதிர்பார்த்து காத்து இருந்தாய்
பில்லா வேடம்
போட்டாய் கிரீடமும்
தரித்தாய்..

எல்லோரையும் நீ
வருவாய் என ஏங்க
வைத்தாய்
அழகான , அன்பான ஷாலினி
மனைவியாக வந்து கிடைத்தாள்.
அது உன் பாக்கியம்

அழகான மகளாக
வந்துதித்தாள் அனோஷிகா
நீ இன்னும் பல
படங்களில் நடிக்க
வேண்டும் - பல

கெட்டப்புகளில் நடித்து
ரசிகர்களை கொள்ளை
கொள்ள வேண்டும்
என்பது தல ரசிகர்களின்
அவா.....

நன்றி தலைவா..

Post Comment

தமிழா ஒருமுறை திரும்பி பார்...?

பல கஷ்டங்களுக்கு மத்தியில்,பல இடர்களுக்கு முகம் கொடுத்து இலங்கையிலும்,உலகம் எங்கும் புலம் பேர்ந்து வாழ்கின்றது  நமது தமிழர் இனம்.நமது இனத்தின் உண்மையான பின்னணி பற்றி அறியமுடியாத மறைக்கப்பட்ட இந்த தருணத்தில் கொஞ்சம் வரலாற்றினை திருப்பி பார்ப்போம்..
வரலாறு எண்டதுமே மனதில் வரும் கேள்வி "யார் இலங்கையின் பூர்வீக குடிகள்?"என்பதாகும்.இன்று நமது அரசியல் வலைப்பின்னலில் எத்தனை பிரிவுகள் இருந்தாலும்,தமக்குள்ள எத்தனை முறன்பாடுகள்  இருந்தாலும் கூட இலங்கை  பூர்வீக குடிகள் தமிழர் அல்ல அவர்கள் வந்தேறு குடிகள் என்ற கருத்தில் ஒற்றுமையாக இருக்கின்றனர்.

                                                                
 இவ்வாறு அரசியல் ரீதியான சர்ச்சைகளை உடைய அந்த கேள்விக்கு பதில்தான் என்ன?யார் இலங்கையின் பூர்வீக குடிகள் என்ற வினாவிற்கான பதிலை நோக்குவோம்.இலங்கை பூர்வீக குடிகள் நாகரும்,இயக்கரும் ஆவர்.இன்று உள்ள நூல்களுள் தொன்மையின் சிறப்பினை பறை சாற்றி நிலைத்து நிற்கும் இராமாயாணம் என்ற இதிகாசம் இலங்கையை இராவணன் ஆட்சி புரிந்ததையும் இவன் இயக்கர் இனத்தை சேர்ந்தவன் எனவும் நாகர் இனத்தவளான மண்டோதரியை திருமணம் செய்தான் எனவும்,இவன் இலங்கையின் தென்கீழ் பாகத்தில் இருந்து இலங்காபுரியை தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்தான் என நூல் கூறுகின்றது.இராவணன் தொல்வியுற்றபின் இயக்கர்களின் ஆட்சி இங்கு தொடர்ந்ததாக எந்த சான்றுகளும் இல்லை.

இலங்கையின் வடபகுதி நாகதீவு அல்லது நாகதீபம் என பெயர் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு இலங்கையின் வடபகுதியைநாகதீவு,நாகதீபம் என்ற பெயர்களால் குறிப்பிட்ட காரணம் இப்பகுதியில்இலங்கையின் பூர்வீக குடிகளுள் நாக இனத்தவர்கள் இப்பிரதேசத்தில் வாழ்ந்தமையாகும்.இலங்கை தீவிலேயே பழையகாலத்திலே நாகர் இனத்தவர்களே பரந்த வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதாகும்.


இராவணன் சிறந்த சிவ பக்தன்.சிவபெருமானை அதீதமாக வழிபட்டவன்;இவன் வழிபட்ட கோணேச்சரமும்,இவன் அமைத்த கன்னியா வெந்நீர் ஊற்றுக்களும்,இராவணன் வெட்டும் இன்றும் காணப்படுகின்றன.சமய குரவர்களுள் முதன்மையானவரான சம்பந்தர் கோணேஸ்வரத்தின் மீது பாடிய தேவாரத் திருப்பதிகத்தில் "இராவணன் மேலது நீறு"என இராவணனது சமயபற்றை குறிப்பிட்டுள்ளார்.

"ஆர்கவி சூழ் இலங்கை அழகமர் மண்டோதரிக்குப் பேரருள் புரிந்த பிரான்"என மணிவாசகர் திருவாசகத்தில் இராவணன் மனைவி மண்டோதரி சிவனருள் பெற்றதை குறிப்பிட்டுள்ளார்.

இந்த இயக்கர்கள் திராவிட இனத்தின் ஒரு பகுதியினர் என ஆண்டுகளிற்கு முற்பட்ட "தமிழகம்" என்ற நூலில் இதன் ஆசிரியர்வி.கனகசபை எழுதியுள்ளார்.
          
 இதற்கு பிறகு நீங்களே சொல்லுங்க யார் வந்தேறு குடிகள்..?யார் பூர்வீக குடிகள்..?என்று...

             'தமிழ்,தமிழனின் வரலாறு பழையது, பெரியது..தனித்துவமானது..' 

Post Comment

நிஜ ஹீரோ 'தல'தான்.... (பாகம்-1)

அஜித்குமார் தமிழ் சினிமாவில் இன்றும் என்றும் கோடான கோடி ரசிகர்களினால் உச்சரிக்கப்படும் ஒரு மந்திர சொல்..நிறைய தோல்விகளை சந்தித்தபோதும் "எரிக்க எரிக்க எழுந்துவரும் நெருப்பு பறவைபோல" மீண்டும் எழுந்துவரும் நடிகர் அவர்.


சினிமாவினை சினிமாவாக பார்க்கின்ற ஒருவர்,சினிமாவினை சம்பளம் வாங்கும் தொழிலாக நினைத்து ஈடுபாடுடன் செய்து வரும் ஒருவர். எண்ணி அடங்காதது இவரது ரசிகர் கூட்டம்,இதனை இவர் ஒருபோதும் தனது சுய இலாபத்துக்காக பயன் படுத்தமாட்டார் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். 


75 வருட தமிழ் சினிமாவிலேயே "என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளையும்,ஒவ்வொரு நிமிஷத்தையும், ஏன் ஒவ்வொரு நொடியையும் நானா செதுக்கினது"என்ற வசனத்தை அஜித்தால் மட்டும்தான் இன்றும் என்றும் சொல்லமுடியும்.ஏனெனில் எந்தவொரு பின்னனியுமில்லாமல்,யார் தயவும் இல்லாமல் இத்தனை கோடி ரசிகர்களுடன் இருபது வருடம் தனிக்காட்டு ராஜாவாக வலம் வருகிறார்.


அமராவதி மூலம் தமிழுக்கு அறிமுகமாகி அந்த படத்தில் ஈட்டிய பணத்தில் மோட்டார்வாகன பந்தயத்தில் கலந்துகொண்டு விபத்துக்கு உள்ளாகி ஒன்றரை வருடம் படுத்த படுக்கை ஆனார்.

                                                              
ஒன்றரை வருடம் முடிவிற்குவர ஆசை நாயகனாக வலம்வந்தார்.இதன் பின்பு பெண்கள் கூட்டம் வெகுவாக அதிகரித்தது.

                                              
காதல்மன்னன்-ஆண்களையும் அஜித்பக்கம் சாய்த்தது,வாலி அஜித்தை ஒரு சிறந்த நாயகனாக்கியது.தனது நடிப்பிற்கு வசனம் தேவையில்லை தனது கண் அசைவிலேயே ரசிகர்களை கவர்வேன் என ஒரு புதிய அத்தியாயத்தையே தொடக்கி வைத்தார்.இந்த படமே என்னை அஜித் ரசிகனாக ஈர்த்தது.அஜித்தின் வெற்றிப்பட்டியல் ஆசை,காதல்கோட்டை,காதல்மன்னன்,வாலி,தீனா......என மங்கத்தா வரை நீண்டு சென்றுகொண்டு இருக்கின்றது.

இடையே நான் சூப்பர்ஸ்டார் ஆவேன்,நான் No-1 என்று பேசிய பேச்சுக்கள் திமிராக அறியப்பட்டன.எனக்கு அப்படி தெரியவில்லை.அவர் உணர்ச்சியகப்பட்டு பேசியிருந்தாலும் தனித்து நின்று தன்னம்பிக்கையுடன் போராடிய மனிதன் இவ்வாறு பேசினால் என்ன தப்பு...?தான் கொண்ட இலட்சியத்துக்காக மரணத்தையே தொட்டுவிட்டு வந்த நடிகர் ஆயிற்றே....! 

இதனை தங்களுக்கு ஆதயமாக்க முயன்ற மீடியாக்கள் தவறாக சித்தரிக்க அஜித் மன உளைச்சலுக்கு உள்ளாக்கினார்.பேட்டிகளை தவிக்க தொடங்கினார். அமைதியை ஆயுதமாக்கி ரசிகர்கள் பக்கமாக நின்றார்.இதனால் அஜித்தை ரசிகர்கள் தனிப்பட்ட முறையில் நேசிக்க தொடங்கினர்.நானும் நேசித்தேன்...நேசித்தேன் என்பதைவிட சுவாசித்தேன்.அஜித்தை பின்பற்றவும் தொடங்கினேன்.

பொறுத்த அமைதி பொங்கி எழுந்தது அன்று......


Post Comment

Sunday, April 29, 2012

தமிழ் உலகின் முதல்வரலாற்று நாவல்...

தமிழ் வரலாற்றுக்கு முதலில் சொந்தம்கொண்டாடிய நாவல் "மோகனாங்கி" ஆகும்.இதனை எழுதிய ஆசிரியர் எமது ஈழத்திருநாட்டினரான தி.த.சரவணமுத்துப்பிள்ளை ஆவர்.இவர் இங்கிருந்து தமிழ்நாடு சென்று தமிழில் நன்கு தேர்ச்சி பெற்ற பாண்டித்தியனாவார்.

தி.த.சரவணமுத்துப்பிள்ளை 

பின்பு சென்னை மாநிலக் கல்லூரியில் கீழைத்தேயச் சுவடி நிலையத்தின் பொறுப்பாளராகக் கடமையாற்றினார்.அப்பணி மேற்கொண்ட காலகட்டத்தில்,தான் மேற்கொண்டுகொண்டிருந்த தமிழ் வரலாற்று ஆராய்ச்சியின் பயனாகவே அவர் "மோகனாங்கி" எனும் நாவலை எழுத ஆரம்பித்தார்.

இந்த நாவல் 1896 ஆம் ஆண்டு இந்து யூனியன் அச்சுக்கூடத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.இந்த நாவலின் சுருக்கம் 1919 ஆம் ஆண்டு "சொக்கநாத நாயக்கர்" என்னும் பெயரில் வெளிவந்தது.17 ஆம் நூற்றாண்டில் திருச்சிராப்பள்ளியிலிருந்து ஆட்சி செய்த சொக்கநாத நாயக்கரின் (1659-1673 ) ஆட்சிக்காலத்தினை தழுவியதாக இந்த நாவல் எழுதப்பட்டது.விஜயராகவ நாயக்கரின் மகள் மோகனாங்கிக்கும் சொக்கநாத நாயக்கருக்குமிடையில் இருந்த காதலும் அதன் காரணமாக திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மன்னர்களுக்கு இடையே  ஏற்பட்ட போர் என்பன இந்த நாவலின் முக்கிய பாத்திரமாகும்.

ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்(இயற்பெயர் கண்ணுசாமி) 

தி.த.சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் நாயக்கர்களை தமது பதிப்புக்களில் அதிகமாக நிஜ நாயகர்களாக்கியதன் காரணம் என்ன?இது தற்செயலாக நடந்தவை அல்ல...ஈழத்தில் கடைசி சுதந்திர இராச்சியமாக இருந்த கண்டி அரச நாயக்கவம்ச மன்னர்களாலேயே ஆட்சி செய்யபட்டது .இவர்கள் தமிழுடனும்,தமிழர்களுடனும் நேரடித்தொடர்பு வைத்திருந்தவர்கள்.
கடைசி மன்னனான ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்(இயற்பெயர் கண்ணுசாமி) அக்கால சூழ்ச்சியாளர்களினால் ஆங்கிலேயர்களிடம் 1818 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.இந்த சம்பவம் நூலாசிரியரின் மனதில் பதிந்தமைதான் நாயக்கர்கள் நாயகர்கள் ஆக காரணம்...

"மோகனாங்கி" தமிழ் நாட்டினை மையமாக கொண்டபோதும் இலங்கை தமிழர்களின் பேச்சு வழக்குகளுக்கு அந்த நூலிலே குறைவில்லாமல் நிரப்பி இருக்கின்றார் ஆசிரியர்.உதாரணமாக 'வலேத்காரம், வீட்டுக்கு கிட்ட, சொன்னனான்,கன நாளாச்சு,சீ,விசர்' என்பனவாகும்.

                                                                ரா.கிருஷ்ணமூர்த்தி
 

பிற்காலத்தில் சிறந்த வரலாற்று நூலாசிரியரான கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு "மோகனாங்கி" முன்னுதாரணமாக விளங்கியமை மறுக்கப்பட முடியாததொன்றாகும்.

"மோகனாங்கி" வெளிவருவதற்கு முன்பும் சரி,வெளிவந்த பின்னும் சரி தமிழர் வரலாற்றில் மோகனாங்கிக்கு என்று தனி மரியாதையும் சிறப்பும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது.!

பளம் பெரும் தமிழ் இன்று பலமிழந்து தனியே தள்ளாடுகின்றது.
"அழிவை நோக்கிய மொழிகளில் தமிழும் ஒன்றாம்.!அழிந்திடுமா என் தமிழ் மொழி...?"

Post Comment

எனது வலைப்பூ பதிவின் பெயர் உருவாகியதற்கான அறிமுகம்..

"யாழ்பாடி" என்ற அந்த பெயர் எனது சிந்தனையில் நீண்டகாலமாக உதித்ததொன்று அந்தவகையில் எம் இரத்தங்களினால் மறக்கப்பட ஒன்றை மீண்டும் எமது இரத்தங்களின் கண்களில் படும்படி செய்வதில் என் உளமார மகிழ்ச்சி அடைகின்றேன்.யார் இந்த யாழ்பாடி என்ற எண்ணம் இதை பார்க்கும் உங்கள் ஒவோருவரினதும் உள்ளத்தில் கேள்வியாக எழலாம்.அந்தவகையில் முதலாவதாக எம் இனத்தின் பழமையான இசைக்கருவிகளில் யாழ் முதன்மையானது ஒன்றாகும்.        

அந்த யாழை மீட்டு எடுத்தவரே யாழ்பாடி ஆவார்.இதனால்தான் போலும் பழம்தமிழ் வாசகம் ஒன்று பின்வருமாறு இருக்கின்றது "குழலினிது-யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச்சொல் கேளாதார்".குறிப்பாக யாழ்பாடி என்பவரது இயற்பெயர் 'கவிவீரராகவர்' தொண்ட நாட்டை சேர்ந்த இவர் யாழில் வல்லவர்.

இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டைவருவது வழக்கம்.ஒரு நாள் இவ்வாறு சண்டை வருகின்றபோது கவிவீரராகவர் தாம் "ஈழ மண்டலம்" போகப்போவதாக சொல்கின்றார்.அதற்கு அவர் மனைவி 'ஆம் அங்கு சென்று வள நாடு வாங்கி வர போகின்றீர்களோ?"என கிண்டலாக பேசினாள்.மனைவியின் பேச்சை தாங்க முடியாத அவர் தனது நண்பர்கள் சிலருடன் மரக்கலம் ஏறி ஈழம் வந்தடைந்து அங்கு மணற்றி என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து அனுராதபுரியை வந்தடைந்தார்.

அந்த காலகட்டத்தில் அனுராதபுரியை ஆட்சி செய்தவன் ஏலேலன் என மகாவம்சத்தில் சொல்லப்படும் மன்னன் ஆவார்.அந்த மன்னனே எல்லாளன் என்று தமிழ் வரலாற்று குறிப்புக்கள் கூறுகின்றன.தக்க தருணத்தில் அரச சபை சென்று தான் பாடிய ஒரு பாடல் பற்றி அரசனிடம் விண்ணப்பித்தான்.அந்தகாலத்தில் கண்தெரியாதவன் முன் அரசன் விழிக்ககூடாது என்பதனால் அரசனின் விருப்பத்தினான் ஒரு திரை போட்டு அதன் மறைவில் கவிவீரராகவர் பாடலை இசைத்தார்.குறிப்பாக அந்த மன்னன் இவருக்கு கண்கள் குருடாக இருந்தாலும் அகக்கண்ணால் காணும் திறனுடையவனாக இருக்கின்றானே என கூறி திரையை அகற்றினார்.அதுமட்டும் அல்ல அவர் பாடலுடன் கூடிய யாழிசையிலும் மன்னன் முழ்கிவிட்டார்.பின்னர் மன்னன் உமக்கு என்ன பரிசு தரவேண்டும் எனக்கேட்க புலவர் தனது மனைவியுடன் நடந்த சம்பவத்தை கூறினார்.அதற்கு அரசன் உனது விருப்ப படி மணற்றி என்ற ஊரையே பரிசாக தருகின்றேன் அத்துடன் யானை,பல்லக்கு,பரிசனங்கள் மற்றும் திரவியத்தை கொடுத்து அனுப்பினார்.

குறிப்பாக யாழ்பாணத்து முதல் அரசன் இந்த யாழ்பாடியே!என கொள்ளவேண்டும்.இக்காலத்தில் மணற்றியில் சைவ சமய தமிழ் குடிகள் இருந்து உள்ளனர்.இவர்கள் ஏற்கனவே ஏலேலன் எனப்படுகின்ற எல்லாளனின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள்.கவிவீரராகவர் மணற்றி முழுவதையும் சுற்றிப்பார்த்து நல்லூரை அடைந்து சில காலம்  வாழ்ந்தார்.பின் தனது மனைவி சென்று தனக்கு நேர்ந்த கதையைகூறி மன்னனிடம் சில குடிமக்கள் மற்றும் பிரதானியை தரவேண்டும் என வேண்ட அதற்கு தொண்டை மன்னன் பதிலாக மணற்றியில் விளையும் உப்பை தரவேண்டும் என கேட்க அதற்கு சம்மதித்து கவிவீரராகவர் குடும்பத்தையும் பரிபாரங்களையும் மரக்கலம் மூலமாக மணற்றியை நோக்கி அனுப்பி வைக்கின்றார்.மணற்றியை அடைந்த பின்னர் முடி சூடிக்கொண்டு தனது நாட்டிற்கு "யாழ்ப்பாணம்"என்ற பெயரை சூட்டினார்.தொடற்சியாக எழுவது வருடங்கள் யாழ்ப்பாணத்தை சிறப்பாக ஆட்சி செய்து பரகதி அடைந்தார்.

குறிப்பாக இச்சம்பவம் இற்றைக்கு இரண்டாயிரத்துஐம்பது வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றது.ஏன் எனில் கி.மு.145ம் ஆண்டு எல்லானால் அனுராதபுரத்தை கைப்பற்றினான் என்று வரலாறு கூறுகின்றது.எனவே மறக்கப்பட்ட அல்லது மறைக்கபட்ட "யாழ்பாடி" என்ற நாமம் அனைத்து உலக வாழ் தமிழ் இதையங்களை சென்றடைய வேண்டுமென வணங்குகின்றேன்.

Post Comment