Sunday, April 29, 2012

எனது வலைப்பூ பதிவின் பெயர் உருவாகியதற்கான அறிமுகம்..

"யாழ்பாடி" என்ற அந்த பெயர் எனது சிந்தனையில் நீண்டகாலமாக உதித்ததொன்று அந்தவகையில் எம் இரத்தங்களினால் மறக்கப்பட ஒன்றை மீண்டும் எமது இரத்தங்களின் கண்களில் படும்படி செய்வதில் என் உளமார மகிழ்ச்சி அடைகின்றேன்.யார் இந்த யாழ்பாடி என்ற எண்ணம் இதை பார்க்கும் உங்கள் ஒவோருவரினதும் உள்ளத்தில் கேள்வியாக எழலாம்.அந்தவகையில் முதலாவதாக எம் இனத்தின் பழமையான இசைக்கருவிகளில் யாழ் முதன்மையானது ஒன்றாகும்.        

அந்த யாழை மீட்டு எடுத்தவரே யாழ்பாடி ஆவார்.இதனால்தான் போலும் பழம்தமிழ் வாசகம் ஒன்று பின்வருமாறு இருக்கின்றது "குழலினிது-யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச்சொல் கேளாதார்".குறிப்பாக யாழ்பாடி என்பவரது இயற்பெயர் 'கவிவீரராகவர்' தொண்ட நாட்டை சேர்ந்த இவர் யாழில் வல்லவர்.

இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டைவருவது வழக்கம்.ஒரு நாள் இவ்வாறு சண்டை வருகின்றபோது கவிவீரராகவர் தாம் "ஈழ மண்டலம்" போகப்போவதாக சொல்கின்றார்.அதற்கு அவர் மனைவி 'ஆம் அங்கு சென்று வள நாடு வாங்கி வர போகின்றீர்களோ?"என கிண்டலாக பேசினாள்.மனைவியின் பேச்சை தாங்க முடியாத அவர் தனது நண்பர்கள் சிலருடன் மரக்கலம் ஏறி ஈழம் வந்தடைந்து அங்கு மணற்றி என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து அனுராதபுரியை வந்தடைந்தார்.

அந்த காலகட்டத்தில் அனுராதபுரியை ஆட்சி செய்தவன் ஏலேலன் என மகாவம்சத்தில் சொல்லப்படும் மன்னன் ஆவார்.அந்த மன்னனே எல்லாளன் என்று தமிழ் வரலாற்று குறிப்புக்கள் கூறுகின்றன.தக்க தருணத்தில் அரச சபை சென்று தான் பாடிய ஒரு பாடல் பற்றி அரசனிடம் விண்ணப்பித்தான்.அந்தகாலத்தில் கண்தெரியாதவன் முன் அரசன் விழிக்ககூடாது என்பதனால் அரசனின் விருப்பத்தினான் ஒரு திரை போட்டு அதன் மறைவில் கவிவீரராகவர் பாடலை இசைத்தார்.குறிப்பாக அந்த மன்னன் இவருக்கு கண்கள் குருடாக இருந்தாலும் அகக்கண்ணால் காணும் திறனுடையவனாக இருக்கின்றானே என கூறி திரையை அகற்றினார்.அதுமட்டும் அல்ல அவர் பாடலுடன் கூடிய யாழிசையிலும் மன்னன் முழ்கிவிட்டார்.பின்னர் மன்னன் உமக்கு என்ன பரிசு தரவேண்டும் எனக்கேட்க புலவர் தனது மனைவியுடன் நடந்த சம்பவத்தை கூறினார்.அதற்கு அரசன் உனது விருப்ப படி மணற்றி என்ற ஊரையே பரிசாக தருகின்றேன் அத்துடன் யானை,பல்லக்கு,பரிசனங்கள் மற்றும் திரவியத்தை கொடுத்து அனுப்பினார்.

குறிப்பாக யாழ்பாணத்து முதல் அரசன் இந்த யாழ்பாடியே!என கொள்ளவேண்டும்.இக்காலத்தில் மணற்றியில் சைவ சமய தமிழ் குடிகள் இருந்து உள்ளனர்.இவர்கள் ஏற்கனவே ஏலேலன் எனப்படுகின்ற எல்லாளனின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள்.கவிவீரராகவர் மணற்றி முழுவதையும் சுற்றிப்பார்த்து நல்லூரை அடைந்து சில காலம்  வாழ்ந்தார்.பின் தனது மனைவி சென்று தனக்கு நேர்ந்த கதையைகூறி மன்னனிடம் சில குடிமக்கள் மற்றும் பிரதானியை தரவேண்டும் என வேண்ட அதற்கு தொண்டை மன்னன் பதிலாக மணற்றியில் விளையும் உப்பை தரவேண்டும் என கேட்க அதற்கு சம்மதித்து கவிவீரராகவர் குடும்பத்தையும் பரிபாரங்களையும் மரக்கலம் மூலமாக மணற்றியை நோக்கி அனுப்பி வைக்கின்றார்.மணற்றியை அடைந்த பின்னர் முடி சூடிக்கொண்டு தனது நாட்டிற்கு "யாழ்ப்பாணம்"என்ற பெயரை சூட்டினார்.தொடற்சியாக எழுவது வருடங்கள் யாழ்ப்பாணத்தை சிறப்பாக ஆட்சி செய்து பரகதி அடைந்தார்.

குறிப்பாக இச்சம்பவம் இற்றைக்கு இரண்டாயிரத்துஐம்பது வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றது.ஏன் எனில் கி.மு.145ம் ஆண்டு எல்லானால் அனுராதபுரத்தை கைப்பற்றினான் என்று வரலாறு கூறுகின்றது.எனவே மறக்கப்பட்ட அல்லது மறைக்கபட்ட "யாழ்பாடி" என்ற நாமம் அனைத்து உலக வாழ் தமிழ் இதையங்களை சென்றடைய வேண்டுமென வணங்குகின்றேன்.

Post Comment

11 comments:

 1. வாழ்த்துக்கள் நண்பா... முதல் பதிவிலே பழுத்ததொரு அனுபவம் தெரிகின்றது.. தொடந்தும் ஆக்கங்கள் எழுதி பதிவுலகில் சிறந்ததொரு இடத்தை பிடிக்க எனது வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
 2. நன்றி அண்ணா....உங்கள் வாழ்த்துக்கு உரியவனாக நடந்துகொள்வேன்...

  ReplyDelete
 3. GREAT JOB CONGRTZ..........KEEP IT UP & GO AHEAD.

  ReplyDelete
 4. உண்மையில் ஆழமான தொரு விடயத்துடனேயே தங்கள் ஆரம்பம் மகிழ்ச்சி தருகிறது...

  தொடருங்கள்...

  தங்களை ஒரு குழுமத்தில் அறிமுகப்படுத்துகிறேன்..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  இலங்கைப் பதிவரின் முதல் குறும்பட வெளியீடும் தமிழ் இணைய உலகில் வித்தியாசமான வெளியீடும்

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் அறிமுகம் செய்த குழுமத்திற்கு நன்றி....

   Delete
 5. Vaazhthukkal nanba.
  muyatshi thiruvinaiyakka Vaazhthukkal.

  ReplyDelete
 6. முதல்ப்பதிவே பலரும் அறியாத எமது வராற்று சுவட்டை அறியவைத்துள்ளது!! தொடர்ந்து எழுதுங்கள்!!! Word Verification முறையை இல்லாமல் செய்துவிடுங்கள்.

  ReplyDelete
 7. நன்றிகள்.....நிட்சயமாக இதை தொடர்ந்து எழுதுவேன்..புராதானைத்தை புதுமை ஆக்குவோம்...

  ReplyDelete
 8. இந்த இணைய பக்கத்தை பார்த்த பிறகு தமிழ் இனி மெல்லச்சாகும் என்ற வசனம் பிழை என்று கூறலாம் ஏன் என்றால் இவளவு தமிழ் ஆர்வலர் இருப்பது அரிது

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி...நண்பா..!

   Delete