Thursday, May 31, 2012

அம்மா பகவான் ஒரு ச(த)ரித்திரம்...

கவனம்--பதிப்பு கொஞ்சம் நீளம்தான் சும்மா வாசித்து பாருங்கோவன்... 


அம்மா பகவான் உருவாக்கம்:-விஷ்ணுவின் பத்து அவதாரங்களுள்(மச்ச அவதாரம்,கூர்ம அவதாரம்,வராக அவதாரம்,நரசிம்ம அவதாரம்,வாமன அவதாரம்,பரசுராம அவதாரம்,ராம அவதாரம்,பலராம அவதாரம்,கிருஷ்ண அவதாரம்,கல்கி அவதாரம்) பத்தாவது அவதாரம் என தன்னை உருக்காட்டிக்கொண்ட நபர்தான் இன்றைய அம்மா பகவான்.இவரின் அறிமுகம் என்னவோ சுமாராகத்தான் இருந்தது ஆனால் போகப்போக இவரின் புகழ் உச்சிக்குப் போகதொடங்கியது இதற்கு முக்கியமான காரணம் "வித்தியா மாலை" என்ற சொல்தான்.

Post Comment

Saturday, May 26, 2012

சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்கம் 2011 உலக கிண்ணம் வரைக்கும்...

கவனத்திற்கு:-இந்தியாவில் இருப்பவர்களே,சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களே நீங்கள் இந்த பதிப்பை வாசிப்பதனால் ஏற்படும் மன சங்கடத்திற்கு நான் பொறுப்பாளி அல்ல...

சென்னை சூப்பர் (பிக்ஸ்சிங்) கிங்ஸ் ஐ வம்புக்கு இழுப்பம்:-இவர்கள் கடைசி வரைக்கும் தாங்கள் PLAY OFF சுற்றுக்கு வருவமா..?இல்லையா..? என்ற சந்தேகத்துடன் இருந்த இவர்கள் இப்போது CUP ஐ கைப்பற்றும் அளவிற்கு முன்னேறி விட்டார்களாம்..(கைல காசு இருந்தா எல்லாத்தையும் வாங்கலாம்) அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க ஆட்டக்காரரான விஜய் இவ்வளவு போடிகளிலும் பிரகாசிக்காமல் நேற்று(2012.05.25) டெல்லிக்கு எதிராக இடம் போட்டியில் சதம் அடித்தது நம்ப முடியாத ஒன்றாகவே உள்ளது,அதிலும் டெல்லியின் முக்கியமான ஆட்டக்காரர்களான வோனார்,சேவாக்(இவர்கள் தொடர்ந்து பிரகாசித்து வந்தவர்கள் என்பது முக்கியமான விடயம்..)சொற்ப ஓட்டங்களுடன் பவிலியன் திரும்பியது,சேவாக் மூன்றாவது துடுப்பாட்டகாரனாக களம் புகுந்தது,டெல்லியின் முக்கியமான நல்ல பந்துவீச்சாளர்களான மோனி மோர்கல்,இர்பான் பதான் என்பவர்களின் திடீர் காயம் என்பவை சென்னை சூப்பர் கிங்ஸ்இன் 'கோல்மால்' தனத்தை வெளிப்படுத்துகின்றது.

Post Comment

Wednesday, May 23, 2012

(ஜீ.ஜீ.)பொன்னம்பலமும் பொற்சுவடுகளும்...
கணபதி காங்கேசர் பொன்னம்பலம்

பிறப்பு:-November 8, 1901
இறப்பு:-December 9, 1977 (aged 76)

"ஒரு மனிதன் வாழும்போது மக்களால் வஞ்சிக்கப்பட்டாலும் இறந்த பின் நேசிக்கப்படுவான்.."ஆனால் இந்த கருத்துக்கு முற்றிலும் மாறுபட்டவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம்.இவர் இருக்கும்போதும் சரி,இல்லாதபோதும் சரி மக்கள்(குறிப்பாக பெரும்பான்மை மக்கள்)தன்னை நேசித்தாக வேண்டும் என்பதற்காக எம் தமிழ் மக்களின் பல உரிமைகளை அந்த காலகட்டத்தில் அடகு வைத்தவர்..இல்லை இல்லை விற்றவர் என்பதே உண்மை...

Post Comment

Monday, May 14, 2012

போரும் இல்லை,பொழிவும் இல்லை...?

போரும் இல்லை,பொழிவும் இல்லை பொறுமையைச் சோதிக்கும் கால கட்டம் இன்று,இலங்கை தமிழர்களின் வாழ்கை ஸ்தம்பித நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதே உண்மை..
வரலாறுகள் கூட குழப்பத்தில் உள்ளது.அவை என்னவென்றால் இராமன் வாழ்ந்த காலகட்டத்தை சரியாக கூற முடியவில்லை,இராமன் வாழ்வில் குறிப்பிட்ட இலங்காபுரி இந்த நாடுதானா?,கம்பனின் காலத்தை குறிப்பிட முடிந்தாலும் வான்மீகியின் காலம் புதிராகவே உள்ளது என்பனவாகும்.ஆனால் பல சரித்திர,இலக்கிய மேதாவிகளின் கருத்துப்படியும்,கிடைக்க பெற்ற சான்றுகளின் அடிப்படையிலும் இலங்காபுரிதான் இன்றைய இலங்கை(ஸ்ரீ லங்கா )என்ற முடிவுக்கு வரலாம்.அதனால்தான் போலும் யுத்தமும்,மரண ஓலமும் நம் மண்ணை விட்டு இன்னும் போன பாடாக இல்லை...

Post Comment

Friday, May 11, 2012

தமிழக சினிமாவில் இலங்கை தமிழர்கள் அங்கீகரிக்கப்படுவார்களா?


கேரளம் தமிழ் இனத்தின் மீது தவறான புரிந்துணர்வை கொண்டுள்ளதாக புலம்பெயர்ந்த எம் மக்கள் கூக்குரல் இடுகின்றனர்.ஆனால் நான் ஒரு விடயத்தில் மட்டும் அவர்களை மதிக்கின்றேன்.ஏனெனில் வணிகரீதியற்ற யதார்த்தமான,தத்துரூபமான படங்களை எடுப்பதில் அவர்கள் கில்லாடிகள்..
தமிழக சினிமா ஒரு குப்பைக் கூடை என தமிழக பத்திரிகைகள் பல அண்மையில் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.ஆனால் இவ் விடயத்தில் தமிழக சினிமா மீது விமர்சனத்தையோ குற்றத்தையோ நான் முன்வைக்க விரும்பவில்லை ஏனெனில் பிறப்பால் நானும் ஒரு தமிழன்..

Post Comment

Wednesday, May 9, 2012

மறைக்கப்பட்ட ஈழத்தந்தை "செல்வா"வின் புகழ்..எச்சரிக்கை - பதிவின் நீளத்தை பார்த்துவிட்டு வாசிக்க தொடங்குங்கள்!

மலேசிய நாட்டில் பிறந்தவர்,"ஈழத்தந்தை"என்று அழைக்கப்படும் தகுதியை பெற்றார் என்றால் அதில் உள்ளடங்கியிருக்கும் செய்திகள் ஓராயிரமாக இருக்குமென்பதில் எந்த ஐயப்பாடுமில்லை என்பதே உண்மை.சொன்னால் என்ன தந்தை செல்வாவை பொறுத்தவரை அது உண்மையிலும் உண்மை என்றே சொல்லவேண்டும்.

Post Comment

Monday, May 7, 2012

ஒல்காப் புகழ் தொல்காப்பியம்...(பாகம் - 2)

(பாகம் -1 இனை படிப்பதற்கு இங்கே சொட்டுங்கள்) 


தொல்காப்பியர் காலமும் வரலாறு....


தொல்காப்பியம் என்ற இறவா காப்பியத்துக்கு தெளிவான காலம் இன்னும் கண்டறியப்படாதிருப்பதுபோல அதன் ஆசிரியர் "தொல்காப்பியனார்" காலமும்,வரலாறும் சிக்கல் மிக்கதாகவே காணப்படுகின்றது.தொல்காப்பியர் காப்பியர் குடியிற் பிறந்த ஒரு தமிழ் மூதறிஞர்.இவரை அகத்தியரின் முதல் மாணாக்கர் என்பர்.இது தவிர சம்தக்கினியின் மகனார் தொல்காபியர் என்றும்,இவர் பரசுராமரின் உடன் பிறந்தவர் என்றும்,இவரின் இயற்பெயர் "திரண தூமாக்கினி" என்றும் இவர் ஒரு ஆரியர் என்றும் பல கூற்றுக்கள் நிலவுகின்றன.தொல்காப்பியர் வாழ்ந்த காலம் வட மொழி தமிழில் கலப்பு ஏற்பட்ட காலமாக இருந்திருக்க வேண்டும்."வடசொற் கிழவி வடவெழுத் தொரு எழுத்தொடு புணர்ந்த சொல்லாகுமே" என்ற சொல்லதிகார எச்சவியல் நூற்பாமூலம் இதை அறியக் கூடியதாக உள்ளது.தொல்காப்பியர் தமிழ் மொழியோடு வடமொழியிலும் பாண்டித்தியம் பெற்றிருந்தார் என்பது "ஐந்திறம் நிறைந்த தொல்காப்பியன்"என்பதில் இருந்து புலனாகின்றது.


தொல்காப்பிய வைப்பு முறை...


தொல்காப்பியம் எழுத்ததிகாரம்,சொல்லதிகாரம்,பொருளதிகாரம் என்ற முப்பெரும் வைப்பு முறைமையைக் கொண்டது.இம்முப்பிரிவில் எழுத்துசொல்,பொருள் யாப்பு,அணி என்ற இலக்கணங்களும் இடம்பெற்றுள்ளன.இத்தகைய வைப்பமைப்பு முறைமையின் சிறப்பை தொல்காப்பியத்துக்கு பின் தோன்றிய தமிழ் இலக்கண நூல்களான இறையனார்,களவியல்,நம்பியகப் பொருள்,அபிநயம்,காக்கைப் பாடினியம்,தண்டியலங்காரம் போன்ற பல நூல்களில் காணப்பட்டாலும் அவற்றில் அந்த வைப்பு முறை முழுமையாக காணப்படவில்லை என்பதே உண்மையானதாகும்.இதனால் தமிழர் பழம் பெருமையினைப் பறை சாற்றும் கலங்கரை விளக்கமாக தொல்காப்பியம் விளங்குகின்றது.


இவ்வமைப்பு முறைமையின் முதல் பகுதியான தொல்காப்பிய எழுத்ததிகாரத்தை எடுத்து நோக்குவோமாயின் அது நூல்மரபு,மொழிமரபு,பிறப்பியல்,புணரியல்,தொகைமரபு,உருபியல்,உயிர் மயன்கியல்,குற்றியலுகரப் புணரியல் என ஒன்பது உப பிரிவுகளையும் 58 உட்கருத்துக் கூறுகளையும் கொண்டமைந்ததாகும்.இவ் எழுத்ததிகாரத்தால் தமிழ் மொழியின் சீரிய,கூரிய,இனிய,மெல்லிய,ஒலியமைப்பு முறை,அதன் புணர்நிலையில் ஏற்படும் ஒலி மாற்ற அமைப்பு முதலியனவற்றை துல்லியமாக உணர்ந்துகொள்ளலாம்.


தொல்காப்பிய சொல்லதிகாரம் கிளவியாக்கம்,வேற்றுமையியல்,வேற்றுமை மயங்கியல்,விளிமரபு,பெயரியல்,வினைவியல்,இடையியல்,உயிரியல்,எச்சவியல் என ஒன்பது இயல்புகளை உடையது.தொல்காப்பியம் என்னும் தமிழ் மொழியின் சரித்திர புகழ் பெற்ற நூல் தமிழரின் கலை,கலாச்சாரம்,மரபு,வழிபாட்டு முறை என ஒவ்வொன்றையும் ஆழமாக கருத்தூன்ற சொல்கின்றது.


இத்தகைய பெருமை மிக்க ஒல்காப் புகழ்மிக்க பெருநூல் தொல்காப்பியம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி,வேரூன்றி கிளைகள் பல பரப்பி பண்டைய தமிழர் நம் பெருமையையும்,மேம்பாட்டையும் விருச்சமாக்கி விளங்கிக்கொண்டிருப்பதை எமது தமிழ் பேசும் மக்கள் மாத்திரமன்றி ஆழிசூழ் உலகமெங்கும் வாழும் அனைத்து தமிழ் கூறும் மக்களும் உணர்ந்துகொள்ள வைக்க வேண்டியது நமது கடமையாகும். 


"தமிழர் நாம் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன்தோன்றிய மூத்த குடியினர்.."Post Comment

Saturday, May 5, 2012

வன்னியில் விபச்சாரமாம்,அடுத்தகட்ட போருக்கு தயாரா..?


இந்த பதிப்பு யாரையும் கொச்சைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுத்தப்படவில்லை,என் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது....


எச்சரிக்கை - பதிவின் நீளத்தை பார்த்துவிட்டு வாசிக்க தொடங்குங்கள்!


கொஞ்சம் வன்னிய பற்றி பார்ப்பம்....


வன்னி என்பது காட்டை குறிக்கும் ஒரு சொல்.வனம் சார்ந்தது வன்னி எனவே காடுகள் பொருந்திய அழகு நிறைந்த பிரதேசமாகும்.வன்னியர் என்பது ஒரு இனத்தினை குறிக்கும் சொல் அல்ல.வன்னிப்பிரதேசத்தில் குறுநில மன்னர்களால் ஆளப்பட்ட சிறிய பிரதேசங்கள் அல்லது சிற்றரசுகள் வன்னிமைகள் எனப்பட்டது.இங்கு வாழ்ந்த,வாழ்ந்துகொண்டு இருக்கும் மக்கள் வன்னியர் எனப்பட்டனர்.கிறிஸ்து சகாப்தத்து முன்பிருந்தே தென்னிந்தியாவில் இத்தகைய குறுநில அரசுகள் இருந்த வேளையில் ஈழத்திலும் குறுநில அரசுகள் இருந்தன.எனினும் துரதிஸ்டவசமாக இவைபற்றிய வரலாறுகள் எழுதி வக்கப்படாதபடியால் பண்டைய நூல்களின் வாயிலாகவே நாம் அறிந்துகொள்ள வேண்டி இருக்கின்றது.மேலும் வன்னி பற்றி கூறும் நூல்களாக சங்க இலக்கியங்கள்,கோணேசர் கல்வெட்டு,மட்டக்களப்பு மான்மியம்,வையாபாடல் முதலியனவாகும்.இதுதவிர ஐரோப்பிய பிரயாணிகளது குறிப்புக்களையும் உதவியாக கொண்டு வன்னி பற்றி அறிந்துகொள்ளலாம். 


சரி தலைப்புக்கு வருவமன்...,

வன்னியில் தமிழ் மாந்தர்கள் விபச்சாரத்தில் ஈடுபடக்காரணம்...

பெண் என்பவள் ஆரம்ப காலத்திலும்,இடைப்பட்ட காலத்திலும் ஆண் நம்பி வாழவேண்டிய நிலைமை அடிப்படையக்கப்பட்டுவிட்டது.(எனது கருத்து)
ஒரு பெண்ணுக்கு குறிப்பிட்ட ஒரு வயதுமட்டும் அதாவது பிறந்தது தொடக்கம் 25வயது வரைக்கும் தகப்பனது பாதுகாப்பு அவசியமாகும்.அதன்பின் 25வயது தொடக்கம் இறப்புவரைக்கும் கணவனது பாதுகாப்பு அவசியமாகும்.இது உள,உடல் தேவை,பாதுகாப்புக்கும் பொருந்தும்.

வன்னியில் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் 25வயது தொடக்கம் 35வயது உடையவர்களாகும்.இவர்களுள் எவரும் இதளுள் விரும்பி விழ்ந்தவர்கள் இல்லை.இழுக்கப்பட்டவர்கள் என்றே சொல்லவேண்டும்.இவர்களின் கணவன்மார் இறுதிக்கட்ட யுத்தத்திற்காக நிர்ப்பந்தத்தின்பேரில் அனுப்பப்பட்டவர்களாகும்.இறுதியில் இன்று அவர்கள் அனைவரும் இல்லாதோர் பட்டியலை நிரப்புகின்றவர்கள் ஆகிவிட்டார்கள்.தனக்கும்,தனது பிள்ளைகளின் பாதுகாப்பு அன்றாட உணவு,பிள்ளையின் கல்வி தேவைக்கான பணத்தை பெறுவதற்காக இன்னொரு ஆணை தேடுகின்ற நிலைமை அங்கு நிலவிக்கொண்டுதான் இருக்கின்றது.இது என்னை பொறுத்த வரையில் தவறில்லை.ஏன் எனில் அவர்களது வயதும்,அவர்களது தேவையும்,அவர்களது பாதுகாப்பும் கட்டாயமானதாகும்.(பாவம் அவளும் பெண்தானே).யுத்தத்திற்கு அவர்களது கணவன்மாரை அனுப்பி அவர்களது வாழ்கையை கேள்விக் குறியாக்கி விட்டு,இன்று கலாச்சாரம்,தமிழ் பண்பாடு குத்துதே குடையுதே என்று கத்துறதிலையும்,குற்றம் சாட்டுறதிலையும் என்ன நியாயம் இருக்கின்றது.?இதுவெல்லாம் அப்ப யோசித்து இருக்கணும்...!

குறிப்பாக இதுபற்றிய குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள்,அதனை தூக்கிபிடிப்பவர்கள் நாடு கடந்து வாழும் எமது சொந்தங்களாகும்."வன்னியில் விபச்சாரமாமே...!,நம் இனத்தை சீர்குலைக்கின்றார்கலாம் வாருங்கோ பொங்கி எழுவம்..."என்று வீர வசனம் பேசுற உங்களில் எத்தனை பேர் இன்று வன்னியில் நாதியற்று செய்வது என்னவென்று தெரியாது விபச்சாரம் என்ற படுகுழியிலும் இழுக்கப்பட்ட அந்த பெண்களுக்கு உதவி செய்துள்ளீர்கள்...?அவர்களின் பிள்ளைகளுக்கு உணவு,உடை என்ற கட்டாய தேவைக்களுக்கு உங்களில் எத்தனை பேர் உதவி செய்துள்ளீர்கள்...?சரி இத்தனையும் வேண்டாம் உங்கையிருந்து இத்தனை கதைக்குறீங்கதானே உங்களுக்கு ஒரு நேரடி சவால் முடிந்தால் செய்துகாட்டுங்கோ பிறகு அறிக்கையெல்லாம் விடலாம்...'உங்களுள் யாருக்காவது அங்கு இந்த நிலைமையில் இருக்கின்ற ஏதாவது ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க முடியுமா...?உங்களுள் எத்தனை பேருக்கு தைரியம் இருக்குதுன்னு பார்ப்பமன்...!சும்மாவா சொன்னான் பாரதியார் "வாய்ச்சொல்லில் வீரரடி..." என்று,கடைசிவரைக்கும் பாரதி சொன்னதில அதை மட்டும் பின்பற்றுங்கோ..!

மறுபடியும் ஒரு ஆயுதம் தாங்கிய போராட்டமா...?

எனக்கு இந்த பேச்சில் ஒரு காலமும் உடன்பாடு இல்லை.இனியும் உடன்படுவேன் என்ற நம்பிக்கையும் இல்லை.33 வருடங்களாக நம்மை விட்டு போன உயிர்கள் எல்லாம் போதும்.இனி ஒரு ஆயுதப் போராட்டம் வேண்டாம்.ஒரு தனி மனிதன் 33 வருடங்களுக்கு முன்பு காங்கேசன் துறையில் இருந்து ஓட ஆரம்பித்து இப்பதான் எல்லாம் ஓய்ந்து நிம்மதியாக தனது சொந்த இடத்துக்கு போய் நிம்மதியாக வாழ்வம் என்று செல்லும்போது மறுபடியும் ஒரு போராட்டம் வா போரிடுவம் என்றால் அவன் என்ன செய்வான்...?அவனும் மனிதன்தானே அவனுக்கும் ஆசா,பாசங்கள் இருக்கும்தானே..இது ஒரு நியாயம் அற்ற செயற்பாடாகும்.

வேண்டாம் இத்தோட நிறுத்திகொள்ளுங்க....

கவிதாயினி தாமரை

அண்மையில் பிரபல தமிழ் திரைப்பட பாடல் எழுத்தாளரான கவிதாயினி தாமரை அவர்கள் எழுதிய புரட்சிக்கவிதையில் "தலைவன் இருக்கிறான்,நாம் மறுபடியும் ஒன்றினைவோம்,பொங்கி எழுவோம்" என புரட்சி வசனங்களை எழுதியது உங்களுக்கு நினைவிருக்கும்.புரட்சி வசனம் என்பது பாமர தமிழன் எவனுக்கும் கைவந்த கலை..முடிந்தால் தாமரை அவர்களே உங்களுக்கு ஒரு சவால் இவளவும் எழுதுறீங்களே நீங்கள் எழுதினதுபோல ஒரு நிலைமை இங்கே வந்தால் 'உங்களது புருஷனை ஒரு படைத்தளபதியாக அனுப்பி வைக்கமுடியுமா'...?அதன் பின் நாங்க ஒன்றாகுறமா இல்லையா என்று பார்ப்பம்..சும்மா ஏத்தி விட்டுட்டு கூத்து பார்க்குற வேலையை இத்தோட நிறுத்தி கொள்ளுங்க...

அம்மணி ஏ.சி ரூம்ல இருந்துகொண்டு ஆயிரம் எழுதலாம்,ஆயிரம் கதைக்கலாம் களத்துல இறங்கி பாருங்கம்மா எங்களது சொந்தங்கள் பட்ட கஷ்டம் புரியும்.உங்களது விளம்பரத்துக்கும்,உங்களை பற்றி பத்திரிகைகளில் செய்தி வர வேண்டும் என்றதுக்காக எங்களது பிரச்சனையும்,எங்களது சொந்தங்களின் வாழ்கையுமா கிடைத்தது.போதும் நிறுத்தும் உமது கவிப்புரட்சி  விளையாட்டை....?

அடுத்தது நம்ம ஆல் டைம் அரசியல்வாதி...(ஐயா கலைஞர் மு.க.கருணாநிதி)
                                                       
                                                      கலைஞர் மு.க.கருணாநிதி


கலைஞர் மு.க.கருணாநிதி ஐயா உங்களுக்கு ஏன் ஐயா இந்த வயக்கெட்ட வயதுல இந்த வேலை எல்லாம்...இவர் தனது கலைஞர் தொலைக்காட்சியில் தேர்தல் நேரத்தில் மட்டும் ஒளிபரப்பாக்குவதற்கு என்று தமிழ் மனம் கவிழ்க்கும் ஒரு விளம்பரம் வைத்திருக்கார்.அதை கேட்ட உடனேயே எங்கள் தமிழ் சமுதாயம் அப்டியே நம்பி அவர் பின்னாடி போய் விடும்...(ஐயா அந்தகாலம் எல்லாம் போட்டுது நாம இப்ப உசாரு..)"நீங்கள் என்னை கல்லில் கட்டி கடலில் போட்டாலும் நான் கட்டுமரமாகதான் மிதப்பேன் நீங்கள் என்மேல் பயணிக்ககலாம் கவிழ்த்துவிட மாட்டேன்"அதுதானே நீங்க கவிழ்த்த  கவுழ்வையைதான் நாங்க பார்த்தமே...!எனக்கு ஒரு ஆசை நான் ஒருக்கா உங்களை கல்லில் கட்டி கடலில் போடணும் நீங்க மிதக்குறீங்களா இல்லையான்னு நான் பார்க்கணும்...அது என்ன அப்படி மிதக்க நீங்க என்ன திருநாவுக்கரசரா...? இதைதான் எங்க ஊர்ல சொல்லுவாங்க வயது வந்து பிதட்டுறது என்று...

   தமிழ் மக்களுக்காக ஐயா அவர்களின் உண்ணாவிரதத்தின்போது...

இது மட்டுமா ஐயா எங்களுக்காக நடத்திய நாடகம் இன்னமும் சொல்லுறேன் கேளுங்கோவன்..இங்கு எங்கள் சகோதரர்கள் இறந்துகொண்டிருக்கும்பொது அவர் காங்கிரசுக்கு குடைபிடித்திட்டு..கடைசியாக எங்களுக்காக ஒரு உண்ணாவிரதம் இருந்தாரே அப்பத்தான் அவர் தன்னை நல்லதொரு தெருக்கூத்தாடி என்று நிருபித்துகொண்டார்.இந்த உண்ணாவிரதத்தை யாரும் மறந்திருக்க மாட்டர்கள்..காலமை ஒரு தலப்பா கட்டு புரியாணியை முழுசாக சாப்பிட்டுட்டு நடக்கேலாம..
(நினைத்தாலும் நடக்க முடியாது அது வேற கதை..) ஏ.சி,சொகுசு மெத்தை,அவசர உதவிக்கு வைத்தியர்கள்,சுத்திவர மாந்தர்கள் என்று மதியம் வரை ஒரு உண்ணாவிரதம்.இதை இவர் புதுசா செய்துட்டாராம்..(ஐயாக்கு குசும்பு யாஸ்த்திதான்)உங்க பெயரை மிளிர வைக்க,நீங்க அரியல் செய்ய தமிழும்,தமிழனும்,நாங்களும்,எங்கள் ஈழப்பிரச்சனையுமா சிக்கினது..?இத்தோட நிறுத்திக்கணும் கலைஞரே...

சரவெடி சீமான்..
                                                               பொங்கும் சீமான் 

இவர் எப்ப போடோகு போஸ் கொடுத்தாலும் கைய தூக்கீட்டுதான் கொடுப்பார்.(எங்களில அவளவு பாசம்)இவரை நீங்க பார்க்கணும் என்றால் நீதிமன்ற வாசலிலும்,சிறைச்சாலையிலும் பார்க்கலாம் வாயை கொடுத்து அடிபட்டுகொள்வதுதான் இவர் வேலை...(சும்மா இருக்க மாட்டார் அவளோவு சுறு சுறுப்பு..)
எப்பபாரு "தலைவன் இருக்கான்,யுத்தம் வெடிக்கும்..."என்று வசனம் பேசுறதும்,ஆக்கிரோசமாக பேட்டி கொடுப்பதும்தான் வேலை...அண்ணே இந்தியாவில இருக்குற உங்களுக்கே இவ்வளவு பொங்கும்போது வன்னியில அந்த அவலத்தை கண்ட எங்கள் சொந்தங்கள் எவளவு பொங்கணும் அவர்கள் எல்லாம் சும்மாதானே இருக்குறார்கள்.நீங்க பொங்குறதை பார்த்துட்டு நீங்க எதோ நல்லது செய்ய போறீங்க என்று நம்மளில் கனக்கப்பேர் நம்புறாங்க..(அவங்களுக்கு தெரியுமா நீங்க பிள்ளபூச்சி என்று)நீங்க தமிழுக்கு நல்ல கருத்தான படங்களை மட்டும் எடுங்க அதுவே பெரும் காரியம்தான்.அதைவிட்டுட்டு சும்மா 'மைக்' கிடைக்கும்போதெல்லாம் அறிக்கை விடுறதை மொத்தமாக நீங்க நிறுத்துங்க... 

சரித்திரம் என்பது அங்கே தான் இருக்கிறது நாம்தான் அதை வடிவமைக்க வேண்டுமே தவிர யாரும் செய்துதரமாட்டார்கள்..செய்துதரவும் தேவையில்லை.நீங்கள் எல்லாம் தமிழை வளர்த்ததாலே போதும் உங்களுக்கு என்னத்துக்கு நம்ம நாட்டு அரசியல்.?எம்மவர் 33 வருடமாக செய்யாதது என்னத்தை நீங்கள் செய்திட போறீங்கள்..?எல்லாம் போதும்...மனிதனை மனிதனாக வாழ விடுங்க...


"வரலாற்று பதிவேட்டின் படி தமிழன் தமிழனாலேயே அழிவான்..."

Post Comment

Thursday, May 3, 2012

ஒல்காப் புகழ் தொல்காப்பியம்..(பாகம் - 1)

"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய,மூத்த குடியில் முகிழ்ந்த மொழி,தமிழ்"என்பது ஜயனாரித்தனார் கூற்று.இச் செந்தமிழ் சீர்மைகளை "கூடலினராய்ந்த ஓண்தீந்தமிழ்" என்றார் மாணிக்கவாசக சுவாமிகள்."யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" என்கிறார் பதிணெண்  மொழி வல்லாளர் பாரதியார்."மங்கையொருத்தி தரும் சுகம்,எங்கள் மாதமிழுக்கீடில்லை" என்றவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார்.
                                                                       Max muller
                                

செய்யுள் தன்மையில் கிரேக்க மொழியையும்,இலக்கியப் புலனமைவில் இலத்தீன் மொழியையும் வென்று நிற்பது செம்மொழியாகிய,தமிழ் மொழியென்று வின்சுவலோ  என்ற ஐரோப்பிய ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.வடமொழி மறைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த 'மக்ஸ் முல்லர்' என்ற பேரறிஞர் தனக்கே உரிய இயல்பாக வளர்ந்த,இலக்கிய செல்வமுள்ள இனிய மொழி தமிழ் எனப் போற்றுகின்றார்.


இத்தகைய சிறப்புமிக்க தமிழ் மொழியின் தலை சிறந்த நூலாகவும் மிகப் பழைமை வாய்ந்த இலக்கண நூலாகவும் திகழ்வது ஒல்காப்புகழ் தொல்காப்பியம் ஆகும்.இது தமிழ்மொழியின் அழகுச் செழுமையும்,மெல்லிய ஒலி நயமும்,சிறு சிறுசொற் குழுமமும்,தொன்மையும்,ஒண்மையும் ஒருங்கே தெரிந்துணரத்தக்க,தன்மையும் கொண்டதாக விளங்குகிறது.


தொன்மையும் தொல்காப்பியமும்....
காலத்தால் முந்திய தொல்காப்பியம் தோன்றிய காலம் இன்னும் சரியாக கண்டறியப்படாத அளவிற்கு தொல்காப்பியம் தொன்மை வாய்ந்ததாகும்.சரியாக வரையறுக்க படவில்லை என்று கூறுவதே சரியாகும்.இது கி.மு.4ம் நூற்றாண்டுக்கு முன் தோன்றியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது.இது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.இதனை நிலத்தரு திருவிற் பாண்டியன் அவையில் தொல்காப்பியர் இயற்றி,அரங்கேற்றியதாக தொல்காப்பியப் பாயிரம் வகுத்த பனம்பாரணர் என்பவரின் கூற்றாகும். 


பாண்டியன் நெடுஞ்செழியனை பற்றிய கல்வெட்டின்படி தொல்காப்பியர் காலம் கி.மு.3ம் நூற்றாண்டு என்று கருத்தில்கொள்ளலாம்.தொல்காப்பிய நூற்பாவிற்கு கடைச்சங்க நூல்களிற் கூட சான்றுகள் இல்லாத காரணத்தால் இது காலத்தை வென்ற மிகப் பழைமையான நூல் என்ற முடிவுக்கு நம்மை ஈர்த்து  செல்கின்றது.

சிறப்பும் தொல்காப்பியமும்...

தொல்காப்பியத்தின் பெருமைகளையும்,சிறப்புக்களையும் அதனை படித்தறிந்தவர்களின் வாயிலாகவும்,நாமாக அவ் நூலை படிப்பதன் மூலமாகவும் உணர்ந்தறியலாம்."தொல்காப்பியம் பண்டைய நூல்களுக்கெல்லாம் மணி முடியை விளங்குகின்றது"என்று ஏ.வி.சுப்பிரமணிய ஐயர் விமர்சித்துள்ளார்.தமிழர்களின் கலாச்சாரம்,தொன்மை,பெருமை,பழைமை என்பவற்றை தொல்காப்பியம் இன்றும் பறை சாற்றி நிற்கின்றது என்றால் அது மிகையாகாது.


தொல்காப்பியம் தமிழுக்கு மட்டுமல்லாது,ஒரு சமுதாயத்தின் நல்லதோர் மாற்றத்திற்கு முக்கியமானதாகும்.இனத்தின் தனித்துவத்தினையும் அதன் பண்பாட்டினையும் தொல்காப்பியர் மிகவும் அருமையாக அந்த நூலிலே விளக்கியுள்ளார்.தொல்காப்பியத்தின் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு அங்கமும் தமிழுக்காகவும்  தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டதாகும்.
அதன் சிறப்பினை வெறுமனையே இரண்டு பந்திகளில் விளம்பிடமுடியாது.


தொல்காப்பியர் காலமும் வரலாறு....(தொடரும்...)


(பாகம்-2இனை தொடர்வதற்கு இங்கே சொட்டுங்கள்)                                                                    

Post Comment

Tuesday, May 1, 2012

சிங்கள மொழியும் அதன் வரலாறும்...(பாகம்-2)

(பாகம் -1 இனை படிப்பதற்கு இங்கே சொட்டுங்கள்)


கி.பி 6ம் நூற்றாண்டளவில் தென்னிந்தியாவில் சைவம்,வைணவம் புத்துயிர் பெற்று தமது புதிய தலைமுறைக்கு வழிவகுக்க தொடங்கிய காலம் அது.இதனால் அங்கு பின்பற்றபட்டு வந்த புத்த சமயத்தில் 'மகாயானம்' என்ற ஒரு புதிய பிரிவு அறிமுகத்துக்கு வந்தது.இதன்படி புத்தர் மச்சபுராணம்,பாகவதபுராணம் என்பற்றில் எடுத்துக்காட்டபட்டுள்ளதைபோல விஷ்ணுவின் ஒரு அவதாரம் என்று ஒரு புதிய கொள்கை உருவாக்கம் பெற்றது. தென்னிந்தியாவில் குறிப்பாக காஞ்சியில் இருந்த புத்த கோவில்கள்(விகாரைகள்) எல்லாம் இதன் பிரகாரம் படிப்படியாக விஷ்ணு கோவில்களாக மாற்றம் பெற்றது.

இந்தநிலையில் இலங்கையில் வழக்கில் இருந்துவந்த புத்தசமயம் தள்ளாட ஆரம்பித்தது.புத்தசமயத்தின் மூல வடிவமான தேரவாதம் தன்னந்தனியாக விடப்பட்டது என்றுதான் சொல்லவேண்டும்.தென்னிந்தியாவில் ஏற்பட்ட பாதிப்பு இலங்கைக்கும் பரவிவிடும் என அஞ்சி மாகாவிகரையைச் சேர்ந்த மகாசங்க பிக்குகள் தமது மதத்தை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கினர்.மகாவிகாரையில் பாளி மொழியில் புத்தசமயம் போதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.தமிழில் புத்த சமயம் போதிக்கபட்ட அபயகிரி விகாரையில் மகாயான பெளத்தத்தின் பாதிப்பு தலைகாட்ட ஆரம்பித்ததிலிருந்து மகாசங்கத்தினருக்கு அச்சத்தை ஊட்டியது.இதனால் தமக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் வேறான ஒரு மொழியைத் தோற்றுவிக்க அவர்கள் முனைந்தார்கள்.(அப்போதுதான் சிங்களம் என்ற மொழி காலத்தின் கட்டாயத்தால் உருவாக்கப்பட்டது)

மகாவிகாரைப்பிக்குகள் இதற்காக 'தம்மதீப'க் கொள்கை என்ற ஒன்றை உருவாக்கினர்.இதன்படி இலங்கை பெளத்தர்களுக்குரிய ஒரு நாடு,சிங்கள இனத்தவர் தேரவாத பெளத்தத்தின் பாதுகாவலர்கள்,இலங்கை பெளத்தவர்களுக்கே சொந்தம் என வரையறுக்கபட்டது.ஆரம்பத்தில் இக்கொள்கை தமிழர்களுக்கோ இந்தியாவுக்கோ எதிரானதாக இருந்திருக்கவில்லை.தமிழர்களுக்கு எதிரான உணர்வு படிப்படியான மற்றம்.இலங்கையில் பெரும்பான்மையான மக்கள் பெளத்தர்களாக இருந்ததால் அவர்கள் சிங்களவர்களாகப்  படிமுறை மாற்றம் பெற்றனர்.சிறுபான்மை இந்துக்கள் தொடர்ந்தும் இந்துக்களாகவே இருந்தனர்.(அன்றும் கூட இந்த பெரும்பான்மை சிறுபான்மை(யை) விட்டுவைக்கவில்லை)இதனாலேயே பெரும்பானமையினர் சிங்களவர்களாகவும் சிறுபான்மையினர் தமிழர்களாகவும் உள்ள சமூக அமைப்பு இலங்கையில் தோற்றம் பெற்றது.(தோற்றுவிக்கப்பட்டது என்றே சொல்லவேண்டும்)சிங்கள இனத்தின் தோற்றத்துக்கு காரணமாக இருந்தது தமிழ் இனம் என்பதை மறுக்கமுடியாத பலரால் மழுங்கடிக்கப்பட்ட உண்மையாகும்.ஆனால் பின்னாளில் வந்த போர்த்துகேயர்,ஒல்லாந்தர்,ஆங்கிலேயர்,மலாயர் என்று பல இனத்தவரின் கலப்பை சிங்கள சமூகம் உள்வாங்கிக்கொண்டது.

சிங்கள வரலாற்றை கூறும் மற்றும் ஒரு உருவாக்க நூலான சூலவம்சத்தின் கதாநாயகன் மகாபராக்கிரமபாகு(கி.பி.1140-1173)ஆகும்.இவன் ஈழத்தின் வடக்கில் உள்ள வல்லிபுரம் என்னும் இடத்தில் பிறந்தவனாகும்.இவனது அரண்மனைக் கவிஞனாக இருந்தவர் போஜராஜ பண்டிதர் என்னும் பிராமணன் ஆகும்.இவரே சரஜோதிமாலை என்ற சோதிட நூலை தமிழிலே எழுதியவர். அக்காலகட்டம் தமிழுக்கும் அதன் பரிபாரங்களுக்கும் முக்கியமான காலகட்டம் ஏன்என்றால் அந்தக்கால அரசமொழியாக தமிழ் மொழி இருந்தது குறிப்பிடத்தக்கது.


 Robert Knox

17ம் நூற்றாண்டில் கண்டியரசனால் சிறைப்பிடிக்கப்பட்ட "Robert Knox" என்ற ஆங்கிலேயன் அங்கிருந்து தப்பி வடக்கு நோக்கி சென்றபோது அநுராதபுரத்தை அடைந்தான்.அங்கிருந்து இங்கிலாந்து திரும்பினான்.

   A Historical Relation of the Island of Ceylon


 அவன் 1681 இல் இலங்கை நிலைபற்றிய முழு விபரங்களையும் "A Historical Relation of the Island of Ceylon" என்ற புத்தகமாக எழுதி பிருத்தானிய-கிழக்கிந்திய வர்த்தக கம்பனியின் ஆதரவுடன் வெளிவிட்டான்.இதிலே அவன் 'தான் அனுராதபுரம் சென்றபோது அங்கிருந்த மக்களுக்குச் சிங்களம் புரியவில்லை எனவும் அவர்களது தொடர்பாடல் மொழி தமிழாகவே இருந்ததாகவும்,தான் மன்னனிடம் தொடர்புகொள்ள ஒரு மொழிபெயர்ப்பாளர்    தேவைப்பட்டதாகவும் கூறியுள்ளார்'.இதிலிருந்து சிங்கள மொழியின் வரலாறு எவ்வளவு காலம் முற்பட்டது எனவும் அதன் ஆதிக்கம் எப்படி உருவாகியது என்பதுவும் தெளிவு.

                                "உருவாகியது தமிழால் உருக்குலைகிறது தமிழை..."

                                                       Post Comment

சிங்கள மொழியும் அதன் வரலாறும்...(பாகம்-1)

இலங்கை அரசியல் வரலாற்றின் ஏகாதிபத்தியமாக விளங்கும் சிங்கள மொழியினை நோக்குவோமாக இருந்தால்..
சிங்கள மொழி எவ்வாறு உருவானது என்பதுவும் ஆராய்ச்சிக்குரிய விடயமாகும்.சிங்கள வரலாற்றை கூறும் மகாவம்சம்கூட முதலில் "பாளி" மொழியில் "பிராமி" எழுத்துக்களைக் கொண்டே பதிவு செய்யப்பட்டது.

பிராமி எழுத்துக்கள் 
                                                                 
பாளி மொழி சமஸ்கிருத மொழியில் இருந்து உருவான ஒரு மொழியாகும்.பிராமி எழுத்து இலங்கையில் வழக்கத்தில் இருந்த ஒரு எழுத்து வடிவமாகும்.வட இலங்கையில் கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட பிராமி எழுத்துக்கள் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என காபன் கணிப்புக்கள் கூறுகின்றன.இந்த பிராமி எழுத்துக்களை கொண்டே கி.பி.4ம் நூற்றாண்டளவில் முதன்முதலில் மகாவம்சம் எழுதப்பட்டது.இப்பிராமி எழுத்துக்களை புத்தபிக்குகள் மட்டுமே உபயோகித்து வந்தனர்.இடையிடையே படிப்படியாக வளர்ச்சியுற்று 8 ஆம் அல்லது 9 ஆம் நூற்றாண்டளவில் சிங்கள மொழி உருப்பெற்றது.இதிலிருந்து இப்போது பிளக்கத்தில் இருக்கின்ற சிங்கள மொழிக்கான எழுத்து வடிவம் முன்பு இருந்திருக்கவில்லை என்பது அப்பட்டமாக தெரிகின்றது.

ஆதிகால தமிழ் எழுத்தும்,தமிழை தழுவிய எழுத்தும் 

வட மொழியின் பாதிப்பால் தமிழ் மொழியில் இருந்து மலையாளம்,தெலுங்கு,கன்னடம்,துளு முதலிய மொழிகள் தோன்றிய அதே காலத்திலேயே சிங்கள மொழியிக்கான எழுத்து வடிவமும் உருவானது.இம்மொழிகள் அனைத்தும் வரி வடிவத்தில் ஒற்றுமை உடையவை.சிங்கள மொழிக்கு தமிழ் மொழியே அடிப்படையாக இருந்தது என்பது அதன் இலக்கண அமைவு திராவிட மொழிகளை ஒத்திருப்பதில் இருந்து அறிந்துகொள்ளமுடிகின்றது.

மன்னர் ஆட்சிக்காலத்துடன் மொழியினை இனி நோக்குவோமாக இருந்தால்..
பெளத்த சமையம் இலங்கைக்கு அறிமுகம் செய்யப்பட்டது இலங்கையில் தேவநம்பியதீசன் ஆட்சி செய்த காலம்(கி.மு 244 தொடக்கம் கி.மு 207 வரை).அப்போது புத்த சமயத்தை போதிக்கும் பீடங்களாக ஆராதபுரத்தில் இருந்த மகாவிகாரையும்,அபயகிரிவிகாரையும் விளங்கியமை குறிப்பிடத்தக்கது.காவிகாரையில் பாளி மொழியிலும்,அபயகிரி விகாரையில் தமிழ் மொழியிலும் புத்த சமயம் போதிக்கபட்டது.(தமிழின் சிறப்பை விழித்து நிற்கின்றது...) 
                                                                     

Post Comment