Saturday, May 5, 2012

வன்னியில் விபச்சாரமாம்,அடுத்தகட்ட போருக்கு தயாரா..?


இந்த பதிப்பு யாரையும் கொச்சைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுத்தப்படவில்லை,என் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது....


எச்சரிக்கை - பதிவின் நீளத்தை பார்த்துவிட்டு வாசிக்க தொடங்குங்கள்!


கொஞ்சம் வன்னிய பற்றி பார்ப்பம்....


வன்னி என்பது காட்டை குறிக்கும் ஒரு சொல்.வனம் சார்ந்தது வன்னி எனவே காடுகள் பொருந்திய அழகு நிறைந்த பிரதேசமாகும்.வன்னியர் என்பது ஒரு இனத்தினை குறிக்கும் சொல் அல்ல.வன்னிப்பிரதேசத்தில் குறுநில மன்னர்களால் ஆளப்பட்ட சிறிய பிரதேசங்கள் அல்லது சிற்றரசுகள் வன்னிமைகள் எனப்பட்டது.இங்கு வாழ்ந்த,வாழ்ந்துகொண்டு இருக்கும் மக்கள் வன்னியர் எனப்பட்டனர்.கிறிஸ்து சகாப்தத்து முன்பிருந்தே தென்னிந்தியாவில் இத்தகைய குறுநில அரசுகள் இருந்த வேளையில் ஈழத்திலும் குறுநில அரசுகள் இருந்தன.எனினும் துரதிஸ்டவசமாக இவைபற்றிய வரலாறுகள் எழுதி வக்கப்படாதபடியால் பண்டைய நூல்களின் வாயிலாகவே நாம் அறிந்துகொள்ள வேண்டி இருக்கின்றது.மேலும் வன்னி பற்றி கூறும் நூல்களாக சங்க இலக்கியங்கள்,கோணேசர் கல்வெட்டு,மட்டக்களப்பு மான்மியம்,வையாபாடல் முதலியனவாகும்.இதுதவிர ஐரோப்பிய பிரயாணிகளது குறிப்புக்களையும் உதவியாக கொண்டு வன்னி பற்றி அறிந்துகொள்ளலாம். 


சரி தலைப்புக்கு வருவமன்...,

வன்னியில் தமிழ் மாந்தர்கள் விபச்சாரத்தில் ஈடுபடக்காரணம்...

பெண் என்பவள் ஆரம்ப காலத்திலும்,இடைப்பட்ட காலத்திலும் ஆண் நம்பி வாழவேண்டிய நிலைமை அடிப்படையக்கப்பட்டுவிட்டது.(எனது கருத்து)
ஒரு பெண்ணுக்கு குறிப்பிட்ட ஒரு வயதுமட்டும் அதாவது பிறந்தது தொடக்கம் 25வயது வரைக்கும் தகப்பனது பாதுகாப்பு அவசியமாகும்.அதன்பின் 25வயது தொடக்கம் இறப்புவரைக்கும் கணவனது பாதுகாப்பு அவசியமாகும்.இது உள,உடல் தேவை,பாதுகாப்புக்கும் பொருந்தும்.

வன்னியில் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் 25வயது தொடக்கம் 35வயது உடையவர்களாகும்.இவர்களுள் எவரும் இதளுள் விரும்பி விழ்ந்தவர்கள் இல்லை.இழுக்கப்பட்டவர்கள் என்றே சொல்லவேண்டும்.இவர்களின் கணவன்மார் இறுதிக்கட்ட யுத்தத்திற்காக நிர்ப்பந்தத்தின்பேரில் அனுப்பப்பட்டவர்களாகும்.இறுதியில் இன்று அவர்கள் அனைவரும் இல்லாதோர் பட்டியலை நிரப்புகின்றவர்கள் ஆகிவிட்டார்கள்.தனக்கும்,தனது பிள்ளைகளின் பாதுகாப்பு அன்றாட உணவு,பிள்ளையின் கல்வி தேவைக்கான பணத்தை பெறுவதற்காக இன்னொரு ஆணை தேடுகின்ற நிலைமை அங்கு நிலவிக்கொண்டுதான் இருக்கின்றது.இது என்னை பொறுத்த வரையில் தவறில்லை.ஏன் எனில் அவர்களது வயதும்,அவர்களது தேவையும்,அவர்களது பாதுகாப்பும் கட்டாயமானதாகும்.(பாவம் அவளும் பெண்தானே).யுத்தத்திற்கு அவர்களது கணவன்மாரை அனுப்பி அவர்களது வாழ்கையை கேள்விக் குறியாக்கி விட்டு,இன்று கலாச்சாரம்,தமிழ் பண்பாடு குத்துதே குடையுதே என்று கத்துறதிலையும்,குற்றம் சாட்டுறதிலையும் என்ன நியாயம் இருக்கின்றது.?இதுவெல்லாம் அப்ப யோசித்து இருக்கணும்...!

குறிப்பாக இதுபற்றிய குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள்,அதனை தூக்கிபிடிப்பவர்கள் நாடு கடந்து வாழும் எமது சொந்தங்களாகும்."வன்னியில் விபச்சாரமாமே...!,நம் இனத்தை சீர்குலைக்கின்றார்கலாம் வாருங்கோ பொங்கி எழுவம்..."என்று வீர வசனம் பேசுற உங்களில் எத்தனை பேர் இன்று வன்னியில் நாதியற்று செய்வது என்னவென்று தெரியாது விபச்சாரம் என்ற படுகுழியிலும் இழுக்கப்பட்ட அந்த பெண்களுக்கு உதவி செய்துள்ளீர்கள்...?அவர்களின் பிள்ளைகளுக்கு உணவு,உடை என்ற கட்டாய தேவைக்களுக்கு உங்களில் எத்தனை பேர் உதவி செய்துள்ளீர்கள்...?சரி இத்தனையும் வேண்டாம் உங்கையிருந்து இத்தனை கதைக்குறீங்கதானே உங்களுக்கு ஒரு நேரடி சவால் முடிந்தால் செய்துகாட்டுங்கோ பிறகு அறிக்கையெல்லாம் விடலாம்...'உங்களுள் யாருக்காவது அங்கு இந்த நிலைமையில் இருக்கின்ற ஏதாவது ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க முடியுமா...?உங்களுள் எத்தனை பேருக்கு தைரியம் இருக்குதுன்னு பார்ப்பமன்...!சும்மாவா சொன்னான் பாரதியார் "வாய்ச்சொல்லில் வீரரடி..." என்று,கடைசிவரைக்கும் பாரதி சொன்னதில அதை மட்டும் பின்பற்றுங்கோ..!

மறுபடியும் ஒரு ஆயுதம் தாங்கிய போராட்டமா...?

எனக்கு இந்த பேச்சில் ஒரு காலமும் உடன்பாடு இல்லை.இனியும் உடன்படுவேன் என்ற நம்பிக்கையும் இல்லை.33 வருடங்களாக நம்மை விட்டு போன உயிர்கள் எல்லாம் போதும்.இனி ஒரு ஆயுதப் போராட்டம் வேண்டாம்.ஒரு தனி மனிதன் 33 வருடங்களுக்கு முன்பு காங்கேசன் துறையில் இருந்து ஓட ஆரம்பித்து இப்பதான் எல்லாம் ஓய்ந்து நிம்மதியாக தனது சொந்த இடத்துக்கு போய் நிம்மதியாக வாழ்வம் என்று செல்லும்போது மறுபடியும் ஒரு போராட்டம் வா போரிடுவம் என்றால் அவன் என்ன செய்வான்...?அவனும் மனிதன்தானே அவனுக்கும் ஆசா,பாசங்கள் இருக்கும்தானே..இது ஒரு நியாயம் அற்ற செயற்பாடாகும்.

வேண்டாம் இத்தோட நிறுத்திகொள்ளுங்க....

கவிதாயினி தாமரை

அண்மையில் பிரபல தமிழ் திரைப்பட பாடல் எழுத்தாளரான கவிதாயினி தாமரை அவர்கள் எழுதிய புரட்சிக்கவிதையில் "தலைவன் இருக்கிறான்,நாம் மறுபடியும் ஒன்றினைவோம்,பொங்கி எழுவோம்" என புரட்சி வசனங்களை எழுதியது உங்களுக்கு நினைவிருக்கும்.புரட்சி வசனம் என்பது பாமர தமிழன் எவனுக்கும் கைவந்த கலை..முடிந்தால் தாமரை அவர்களே உங்களுக்கு ஒரு சவால் இவளவும் எழுதுறீங்களே நீங்கள் எழுதினதுபோல ஒரு நிலைமை இங்கே வந்தால் 'உங்களது புருஷனை ஒரு படைத்தளபதியாக அனுப்பி வைக்கமுடியுமா'...?அதன் பின் நாங்க ஒன்றாகுறமா இல்லையா என்று பார்ப்பம்..சும்மா ஏத்தி விட்டுட்டு கூத்து பார்க்குற வேலையை இத்தோட நிறுத்தி கொள்ளுங்க...

அம்மணி ஏ.சி ரூம்ல இருந்துகொண்டு ஆயிரம் எழுதலாம்,ஆயிரம் கதைக்கலாம் களத்துல இறங்கி பாருங்கம்மா எங்களது சொந்தங்கள் பட்ட கஷ்டம் புரியும்.உங்களது விளம்பரத்துக்கும்,உங்களை பற்றி பத்திரிகைகளில் செய்தி வர வேண்டும் என்றதுக்காக எங்களது பிரச்சனையும்,எங்களது சொந்தங்களின் வாழ்கையுமா கிடைத்தது.போதும் நிறுத்தும் உமது கவிப்புரட்சி  விளையாட்டை....?

அடுத்தது நம்ம ஆல் டைம் அரசியல்வாதி...(ஐயா கலைஞர் மு.க.கருணாநிதி)
                                                       
                                                      கலைஞர் மு.க.கருணாநிதி


கலைஞர் மு.க.கருணாநிதி ஐயா உங்களுக்கு ஏன் ஐயா இந்த வயக்கெட்ட வயதுல இந்த வேலை எல்லாம்...இவர் தனது கலைஞர் தொலைக்காட்சியில் தேர்தல் நேரத்தில் மட்டும் ஒளிபரப்பாக்குவதற்கு என்று தமிழ் மனம் கவிழ்க்கும் ஒரு விளம்பரம் வைத்திருக்கார்.அதை கேட்ட உடனேயே எங்கள் தமிழ் சமுதாயம் அப்டியே நம்பி அவர் பின்னாடி போய் விடும்...(ஐயா அந்தகாலம் எல்லாம் போட்டுது நாம இப்ப உசாரு..)"நீங்கள் என்னை கல்லில் கட்டி கடலில் போட்டாலும் நான் கட்டுமரமாகதான் மிதப்பேன் நீங்கள் என்மேல் பயணிக்ககலாம் கவிழ்த்துவிட மாட்டேன்"அதுதானே நீங்க கவிழ்த்த  கவுழ்வையைதான் நாங்க பார்த்தமே...!எனக்கு ஒரு ஆசை நான் ஒருக்கா உங்களை கல்லில் கட்டி கடலில் போடணும் நீங்க மிதக்குறீங்களா இல்லையான்னு நான் பார்க்கணும்...அது என்ன அப்படி மிதக்க நீங்க என்ன திருநாவுக்கரசரா...? இதைதான் எங்க ஊர்ல சொல்லுவாங்க வயது வந்து பிதட்டுறது என்று...

   தமிழ் மக்களுக்காக ஐயா அவர்களின் உண்ணாவிரதத்தின்போது...

இது மட்டுமா ஐயா எங்களுக்காக நடத்திய நாடகம் இன்னமும் சொல்லுறேன் கேளுங்கோவன்..இங்கு எங்கள் சகோதரர்கள் இறந்துகொண்டிருக்கும்பொது அவர் காங்கிரசுக்கு குடைபிடித்திட்டு..கடைசியாக எங்களுக்காக ஒரு உண்ணாவிரதம் இருந்தாரே அப்பத்தான் அவர் தன்னை நல்லதொரு தெருக்கூத்தாடி என்று நிருபித்துகொண்டார்.இந்த உண்ணாவிரதத்தை யாரும் மறந்திருக்க மாட்டர்கள்..காலமை ஒரு தலப்பா கட்டு புரியாணியை முழுசாக சாப்பிட்டுட்டு நடக்கேலாம..
(நினைத்தாலும் நடக்க முடியாது அது வேற கதை..) ஏ.சி,சொகுசு மெத்தை,அவசர உதவிக்கு வைத்தியர்கள்,சுத்திவர மாந்தர்கள் என்று மதியம் வரை ஒரு உண்ணாவிரதம்.இதை இவர் புதுசா செய்துட்டாராம்..(ஐயாக்கு குசும்பு யாஸ்த்திதான்)உங்க பெயரை மிளிர வைக்க,நீங்க அரியல் செய்ய தமிழும்,தமிழனும்,நாங்களும்,எங்கள் ஈழப்பிரச்சனையுமா சிக்கினது..?இத்தோட நிறுத்திக்கணும் கலைஞரே...

சரவெடி சீமான்..
                                                               பொங்கும் சீமான் 

இவர் எப்ப போடோகு போஸ் கொடுத்தாலும் கைய தூக்கீட்டுதான் கொடுப்பார்.(எங்களில அவளவு பாசம்)இவரை நீங்க பார்க்கணும் என்றால் நீதிமன்ற வாசலிலும்,சிறைச்சாலையிலும் பார்க்கலாம் வாயை கொடுத்து அடிபட்டுகொள்வதுதான் இவர் வேலை...(சும்மா இருக்க மாட்டார் அவளோவு சுறு சுறுப்பு..)
எப்பபாரு "தலைவன் இருக்கான்,யுத்தம் வெடிக்கும்..."என்று வசனம் பேசுறதும்,ஆக்கிரோசமாக பேட்டி கொடுப்பதும்தான் வேலை...அண்ணே இந்தியாவில இருக்குற உங்களுக்கே இவ்வளவு பொங்கும்போது வன்னியில அந்த அவலத்தை கண்ட எங்கள் சொந்தங்கள் எவளவு பொங்கணும் அவர்கள் எல்லாம் சும்மாதானே இருக்குறார்கள்.நீங்க பொங்குறதை பார்த்துட்டு நீங்க எதோ நல்லது செய்ய போறீங்க என்று நம்மளில் கனக்கப்பேர் நம்புறாங்க..(அவங்களுக்கு தெரியுமா நீங்க பிள்ளபூச்சி என்று)நீங்க தமிழுக்கு நல்ல கருத்தான படங்களை மட்டும் எடுங்க அதுவே பெரும் காரியம்தான்.அதைவிட்டுட்டு சும்மா 'மைக்' கிடைக்கும்போதெல்லாம் அறிக்கை விடுறதை மொத்தமாக நீங்க நிறுத்துங்க... 

சரித்திரம் என்பது அங்கே தான் இருக்கிறது நாம்தான் அதை வடிவமைக்க வேண்டுமே தவிர யாரும் செய்துதரமாட்டார்கள்..செய்துதரவும் தேவையில்லை.நீங்கள் எல்லாம் தமிழை வளர்த்ததாலே போதும் உங்களுக்கு என்னத்துக்கு நம்ம நாட்டு அரசியல்.?எம்மவர் 33 வருடமாக செய்யாதது என்னத்தை நீங்கள் செய்திட போறீங்கள்..?எல்லாம் போதும்...மனிதனை மனிதனாக வாழ விடுங்க...


"வரலாற்று பதிவேட்டின் படி தமிழன் தமிழனாலேயே அழிவான்..."

Post Comment

16 comments:

 1. அடி தூள், அருமையான பதிலடி.... வாழ்த்துக்கள்..

  இந்த தலைப்பின் கீழ் உள்ள கருத்துக்கள் தொடர்பில் கொஞ்சம் கவனம் செலுத்தவும்....
  //வன்னியில் தமிழ் மாந்தர்கள் விபச்சாரத்தில் ஈடுபடக்காரணம்... //

  ReplyDelete
 2. தமிழகத்தின் தலைமைகள் எம் விடயத்தில் புடுங்கிய ஆணிகள் போதும்!! இனிமேலும் ஆணியை புடுங்க வேண்டாம்!! "வன்னியில் சில பெண்கள் விபச்சாரம் செய்கின்றனராம், கலாச்சாரம் கெட்டுபோய் விட்டது" என யாரவது நேரில் சொன்னால், காலில் கிடப்பதை கழட்டுவதை தவிர வேறு வழியில்லை!!! அனுபவிச்சுக்கொண்டு இருக்கிறவங்களோட வேதனை இந்த நாய்களுக்கு புரியாது!!!

  ReplyDelete
 3. நிட்சயமாக அண்ணா,எந்த அரசியலும்,அரசியல்வாதமும் எங்கள் பிரச்சனைக்குள்ளும் எம் மக்களுள்ளும் தலையிட வேண்டாம்...

  ReplyDelete
 4. அவர்கள் எல்லாம் சும்மாதானே இருக்குறார்கள்.
  என்று நீங்கள் இதில் குறிப்பிட்டு இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.எம் மக்களின் கரங்களை கட்டி
  போடிருகிறர்கள் என்று கூறியிருக்கலாம் . நாங்கள் முதுகு காட்டியவர்கள் அல்ல . முன் நின்று அடித்தவர்கள் .
  9 வல்லரசு நாடுகளின் சதியால் முடங்கி கிடகுறோம் . இதை கண்டு நாங்கள் பொங்காமல் இருக்கிறோம் என்று சொல்ல முடியாது.
  தனி நாடு அடையுமே நம் நாடு.அடங்காது எம் தாகம் .தாகம் அடங்கும் வரை ஓயோம்,சின்ஹலவன் காலை நக்கி வாழோம்.
  தமிழ் நாட்டில் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடாத்தி இலங்கைகு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்திய ஆதரிக்க காரணமாய் இருந்தவர்.
  எங்கட அண்ணன் சீமான் நீங்கள் பிள்ளபூச்சிஎன்று அவரை கூறினால் டக்கிலஸ் , கருணா , பிள்ளையான் அவர்களை என்ன வென்று கூறுவது.
  தமிழ் மக்கள் இன்றைய கால கட்டத்தில் சந்தோசமாக இல்லை ,அவர்கள் முடக்க படு இருக்கிறார்கள் ,அவர்கள் கல்வி, விளையாட்டு , பொருளாதாரம் , எந்த துறையிலும் சின்ஹலவனை தாண்டி முன் வர முடியாது,5 ஆம் கட்ட போராட்டம் நடக்கும், போராட்ட வடிவம் மாறலாம் . போராட்டம் மாறாது,

  ReplyDelete
  Replies
  1. Jeyendran Kagesan 5 ஆம் ஈழப்போரில் உங்களது பங்களிப்பு எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளலாமா?

   Delete
  2. முதலாம் கட்ட போரில் இருந்து இப்போ நான்காம் கட்ட போர் வரைக்கும் வந்து நிற்கின்றது.இனிமேலும் 5ம் கட்ட போருக்கு யாரும் தயாராக இல்லை என்பதே உண்மை.யாரும் யாருக்கும் எந்த இலாபமும் இல்லாமல் உதவி,ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்ய மாட்டார்கள்."போராட்ட வடிவம் மாறலாம் . போராட்டம் மாறாது"இதே வசனத்தை எத்தனை நூற்றாண்டுகளாக சொல்ல போகின்றீர்கள்..?

   Delete
 5. Aangilathil ezhthuvatharkku Mannikavum...
  HATS OFF!!! Well said.. about each and everyone who sit at their comfort and talks about TAMILS problem both in India and Western Country... I felt like I wrote this without knowing it.. PPL should really think about who actually cares about them and what should be done in order to get better lifestyle and atleast a decent food on their plate.
  PPL Who deserted SL for their perosnl reasons will have a Coffee and a burger in their hand and will talk abouot how PPL starve to death in Vanni... then same eveing have a Party and invite many guests as possible and boose and eat.. and Dumb the left overs in garbage bin.. ( I've seen it with my own eyes)
  Seeman is a BIG joke.. who the Hell is he??? More he scream means more money will deposited into his account.
  Our problem we will take care it... We need support NOT Fun out of many of us tears.

  ReplyDelete
  Replies
  1. நிட்சயமாக நண்பரே நீங்கள் சொல்லவதை நான் முற்றிலுமாக ஏற்கின்றேன்,சீமான்,பழநெடுமாறன் போன்றோர் என்ன காரணத்துக்காக எவ்வளவுக்கு எங்களில பாசமானவர்கள் என்று தெரியும்..மு.க.கருணாநிதியை கூட மன்னிக்கலாம்(ஏன் என்றால் அவர் எப்படி பட்டவர் என்று தமிழ் சமூகம் அறிந்து விட்டது ஆனால் சீமான் போன்ற அரசியல் வாதிகள் இன்னமும் நல்லவர்கள் என்ற போர்வையில் இருக்கத்தானே செய்கின்றனர்..(வன்னியின் கடைசி நிலவரம் பற்றியும் வரும் பதிப்புக்களில் பதிக்கவுள்ளேன்..அதற்கும் உங்களது கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்..நன்றி நண்பரின் கிச்சா...

   Delete
 6. பொறுப்புணர்வோடு எழுதப்பட்ட சிறந்த கட்டுரை. யுத்தத்திற்க்கு வலுகட்டாயமாக பிடித்து செல்லபட்டவர்களால் இன்று அனாதையாகிய பெண்களை வைத்து அன்று யுத்தத்தை முன் நின்று ஊக்குவித்தோர் இன்று ஐயோ விபச்சாரம் நடக்கிறதே தமிழ் இன சீர்குலைவு என்று வெளிநாடுகளில் பிரசாரம் செய்வது கொடுமை.
  தாமரையையும் மறக்காமல் சேர்ததிற்க்கு பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. உமது விமர்சனத்திற்கு நன்றி....வாயால் வெட்டி விழ்த்துவதில் தமிழனை கேட்கவா வேண்டும்...

   Delete
 7. Thambi Romba Nalla irukku; Ivanga thangada laabathukkaga namala usuppi vittu vedikka pakurathaye velaya kondu irukanga; vidinju elumpi poluthu pogalaya pakkathu naatu arasiyala vachu vilayadurathaye polappa vachurukanga; Aana ivangala nampiyum oru tamil kootam irukirathu kavalayana vishayam than ..

  Nalla pathivu thambi..:)

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் அண்ணா...எந்த நல்லதும் எங்களுக்காக செய்தது இல்லை ஆனால் எங்கள் நாட்டின் பிரச்சனை மட்டும் அவர்களின் அரசியல் லாபத்துக்காக வேண்டும்...இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று...

   Delete
 8. ivargalukku poluthu vanthu poluthu pona itha than velaya vachurukanga; Tamilar unarvukkaga poraduram endu solli kondu etho thangal suya laabathukkaga ellathayum pannuranga; ivargalala nanga adanja nanmai ondume illa; ivargalukku namma naatu arasiyal oru poluthu pokku amsam, pugal theda oru vali; avalavu than..aana ivargala nampura tamil kootam innamum irukku endathu than kavalayana vishayam.

  nalla pathivu thambi..

  ReplyDelete
  Replies
  1. இதில் வேடிக்கையான விசயம் என்ன என்றால்...சீமான் பழநெடுமாறன் போன்றோரை இன்னமும் நம்ம மக்கள் நம்புகின்றார்கள்..அவர்கள் எங்களுக்காகதான் கதைக்குறார்கள் என்று நம்பும் அணியும் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றது...என்ன செய்வது எல்லாம் தலை எழுத்து என்று இருக்க வேண்டியதுதான்...

   Delete
 9. ///- குறிப்பாக இதுபற்றிய குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள்,அதனை தூக்கிபிடிப்பவர்கள் நாடு கடந்து வாழும் எமது சொந்தங்களாகும் -//
  You have said the truth, but honestly speaking, Tamils from canada(since I live here) are speechless. I can feel that they are now hopelss. They don't know what to do. but there are people who manupulate stories for their own sake.

  ReplyDelete
  Replies
  1. என்ன செய்வது மாறன் அவர்களே... உலகம் எல்லாம் தமிழனுக்கு வீடு உண்டு... ஆனால் சொந்த மண் சொந்தமாகவில்லையே... இதுதான் நமக்கு கிடைத்த சாபக்கேடு...!! நன்றி சகோ... வருகைக்கும்...உங்களது பின்னூட்டலுக்கும்...!!!

   Delete