Friday, May 11, 2012

தமிழக சினிமாவில் இலங்கை தமிழர்கள் அங்கீகரிக்கப்படுவார்களா?


கேரளம் தமிழ் இனத்தின் மீது தவறான புரிந்துணர்வை கொண்டுள்ளதாக புலம்பெயர்ந்த எம் மக்கள் கூக்குரல் இடுகின்றனர்.ஆனால் நான் ஒரு விடயத்தில் மட்டும் அவர்களை மதிக்கின்றேன்.ஏனெனில் வணிகரீதியற்ற யதார்த்தமான,தத்துரூபமான படங்களை எடுப்பதில் அவர்கள் கில்லாடிகள்..
தமிழக சினிமா ஒரு குப்பைக் கூடை என தமிழக பத்திரிகைகள் பல அண்மையில் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.ஆனால் இவ் விடயத்தில் தமிழக சினிமா மீது விமர்சனத்தையோ குற்றத்தையோ நான் முன்வைக்க விரும்பவில்லை ஏனெனில் பிறப்பால் நானும் ஒரு தமிழன்..


இலங்கையில் பிறந்த தமிழர்களை தமிழக சினிமா அங்கீகரிக்கவில்லை என்று நான் கூறினால் வாசக நண்பர்களாகிய நீங்கள் கேள்விகேட்பீர்கள்..!அது என்ன என்பதும் எனக்கு தெரியும்."ஏன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்,ராதிகா,ராதாரவி,
'லோடுக்குப்பாண்டி' என்று அறிமுகமாகி இன்று நாயகன் அந்தஸ்த்து வரைக்கும் போயிருக்கும் கருணாஸ்...இவர்கள் எல்லோரும் இலங்கை தமிழர்கள்தானே..?"என்று நீங்கள் நினைக்கலாம்,ஆனால் அது முற்றிலும் பிழையானது.இவர்கள் அனைவரது பூர்வீகமும் இந்தியாதான்,இன்னும் சொல்லப்போனால் இலங்கையில் பிறந்த இந்திய வம்சாவழியினர் என்றே சொல்ல வேண்டும்.

A.E.மனோகரன் 

ஏன் இலங்கையில் பிறந்த பொப் இசை சக்கரவர்த்தி A.E.மனோகரனால் தமிழக சினிமாவில் சாதிக்க முடியவில்லை?ஏன் அவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் என்பதனாலா..?

                                                   மலையாளத்து சிங்கம் ஜெயராம் 

மலையாளத்து சிங்கமாம் ஜெயராமை இன்றும் தமிழகம் தலையில் தூக்கி வைத்திருக்கிறது.ஆனால் இவர் ஒரு காலத்தில் "மலையாள நடிகைகளான அசின்,நயன்தார போன்றவர்கள் மயில் போன்றவர்கள் என்றும் தமிழக நடிகைகள் பண்ணி போன்றவர்கள்"என்று வர்ணித்து செம டோஸ் வாங்கிக்கொண்டவர்.இவ்வாறு சொன்னவருக்கு தமிழக சினிமா பரமசிவன்,பஞ்சதந்திரம்,தாம் தூம் போன்ற படங்களை தொடர்ந்து கொடுக்கலாம் தமிழ் நாட்டுடன் நெருங்கிய தொடர்புடைய ஈழத்து தமிழர்களுக்கு வாய்ப்பளிக்க முடியாதுள்ளதா...?

இந்திரனுடன் ரம்பா...

இவ்வளவும் ஏன்..நடிகை ரம்பாவுக்கு வாழ்க்கை கொடுத்ததே யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டு கனடாவில் வசிக்கும் வறோபகாரியான இந்திரன் என்பவர் ஆகும்.உங்கள் நாயகிகளுக்கு வாழ்க்கை கொடுக்க எம் தேசத்தவர் வேண்டும் ஆனால் தமிழக சினிமாவில் ஈழத் தமிழர்களுக்கு இடமில்லையா...?இந்த நியாயம் மட்டும் எனக்கு புரியவில்லை..!

தமிழக சினிமாவில் எம்மை அணைக்க மறந்த கைகள்...

                                                                                          சூப்பர் ஸ்டார் 
                                                                     
ரஜினிகாந்த்:-இன்னும் கூட தமிழக சினிமாவை தன் பக்கம் வைத்துள்ள இவர் கூட எம் மக்களை ஆதரிக்க வில்லையே..!ஈழத்தமிழர்களுக்கான போராட்டத்தில் குரல் கொடுக்கும் ரஜினி ஏன் எம்மவர் பக்கம் திரும்பவில்லை..?இன்னமும் கூட நம்மை கண்டுகொள்ளாது இருப்பது வருந்தத்தக்க செயலாகும்..
(நூறு தடவை சொல்ல வேண்டாம் ஒரு தடவை சொல்லுங்க)அது போதும்.


உலகநாயகன் 

கமல்ஹாசன்:-அரசியல் வேண்டாம் தனக்கு சினிமா மட்டும் போதும் என்று இருக்கின்றவர் இவர்.தமிழ் மீதும் தமிழ் மக்கள் மீதும் அக்கறை காட்டுபவர்(இருப்பது போல)..தென்னாலி என்ற திரைப்படத்தில் முழு ஈழத்தமிழனாக நடிக்க முடிந்த இவர் கூட எம் மக்களை தவிர்த்து விட்டாரே..?இவர் தனக்கு உதவி இயக்குனர் பணியில் ஒருவரை சேர்த்துக்கொள்ளும்போது(பொதுவாக)தோளில் தட்டிக்கொடுத்துதான் சேர்த்துக்கொள்வார்.(பாசத்தில் அல்ல பூ நூல் இருக்கிறதா என்று பார்ப்பதற்காக)இந்தியர்களுக்கே அந்த நிலைமை என்னும்போது நம் மக்களுக்கு...?
(நீங்க நல்லவரா கெட்டவரா...?)

                                                                                         S.A.சந்திரசேகர்

S.A.சந்திரசேகர்:-வேண்டாம் என்ற பிறகும் தான்தான் தயாரிப்பாளர் சங்க தலைவன் என(வடிவேல் போல)அடம் பிடித்துகொண்டு இருக்கின்ற இவரும் இந்த விடயத்தில் அமைதிகாப்பது ஏன்..?மகனின் படங்களின் வெளியீட்டின் போது மட்டும் அறிக்கை விட துடிக்கும் இவர் உதடுகள் இந்த விடயம் வந்தவுடன் அமைதி காப்பது ஏன்..?
 (மகனின் பட வெளியீட்டில் காட்டும் அக்கறையில் சற்றாவது எம் மக்களிடம் காட்டுங்கள் பாப்பம்..)

தமிழன் சீமான்

சீமான்:-தமிழ்,ஈழம் என்று உரக்க கத்தும் சீமான் கூட இந்த விடயத்தில் கத்துக்குட்டிதான் போல..?இவர் நினைத்திருந்தால் ஒரு ஈழத் தமிழனை ஒரு படத்தின் நாயகனாக நடிக்க வைத்திருக்கலாம்.இப்படி உருப்படியானதுகளை செயலாம்தானே...?(சும்மா மைக் பிடித்து கத்துற நேரத்துக்கு)
நாம் தமிழன் என்று இருந்தா பத்தாது ஒழுங்காக எம்மவரை வைத்து படம் எடுங்க பாப்பம்..?


                                                                    நாயகன்,நாயகி 

மு.க.கருணாநிதி:-தமிழை வைத்தும்,எங்கள் நாட்டு பிரச்னையை வைத்தும் அரசியல் செய்த உங்களால் ஈழ தமிழருக்கு தமிழக சினிமா கலையில் இடம் கொடுக்க முடியாதா?ஒரு காலம்(இப்பவும் கூட)தமிழக சினிமா மொத்தத்தியும் தனது சட்டை பையினுள் வைத்திருந்த போதும் கூட உம்மால் எம் மக்களுக்கு அங்கீகாரம் கொடுக்க முடியாதா?
(நடத்திய நாடகம் எல்லாம் பொது அரங்கேற்றும் எம்மை மேடையில்..)

செல்வி.?ஜெயலலிதா:-எம்.ஜி.ஆர் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்த காலத்திலும் சரி,அரசியலில் வந்து ஆட்சியை பிடித்த பின்னும் சரி அறிக்கைகள் மட்டும் விடுகின்ற நீங்கள் கூட எம்மை தவற விட்டு விட்டீர்களே..?உங்கள் எல்லோருக்கும் அரசியல் நடத்த நாங்களும் எம் பிரச்சனையும் வேண்டும் ஆனால் கலை உலகில் எமக்கொரு இடம் ஒதுக்க மாட்டீர்கள்..(சொந்த நாட்டு துரோகிகள் நீங்கள்)

இவற்றில் எல்லாம் இருந்து தப்பி வந்த முத்து...

"தாவடி மைந்தன்"ஜெய்ஆகாஷ் 


ஜெய்ஆகாஷ்:-பிறந்தது என்னவோ லண்டன்தான் ஆனால் பூர்வீகம் யாழ்ப்பாணத்தில் உள்ள தாவடி ஆகும்.இவர் லண்டனில் நடிகர்.?விஜய்யுடன் படித்தவராகும்.(இவருக்கும் விஜய்க்கும் நிறைய,நிறைய தொடர்புகள் இருக்கு...!)இவர் ஆரம்ப தமிழக சினிமா வாழ்க்கையை ரோயாவனம்,ரோயாக்கூட்டம் என ஆரம்பித்து பின்னர் ஆனந்தம் என்னும் தெலுங்கு திரைப்படம்(உண்மையில் இருநூறு நாட்கள் ஓடிய படம்)சேவல்,ராமகிருஷ்ணா என இன்று வரை தமிழக சினிமாவில் இருபதுக்கு மேற்பட்ட படங்களை நடித்துள்ளார் இருந்தாலும் இவர் இன்னும் நடிக்கிறாரா என கேட்பவர்கள் கூட இருக்கின்றார்கள்..
இதற்கு முழுக்க முழுக்க காரணம் நான் முன் சுட்டிக் காட்டியிருந்த தமிழக சினிமா ராஜ்யத்தின் தலைமைகள்தான்.
கண்டவரை எல்லாம் தூக்கி விடுகின்ற தமிழகம் ஏன் நம்மவரை மட்டும் உதாசீனம் செய்கின்றது..?

கண்டிக்க வேண்டியது... 

ஈழத்து தமிழ் பிரச்னையை வணிகப் பொருளாக கொண்டு பல படங்கள் எடுப்பதும்,அதில் அதிகம் காசு பார்ப்பதும் என தமிழக சினிமா எங்களது பிரச்னையை தனக்கு சாதகமாக்கியது.(7ம் அறிவு திரைப்படத்தில் வியாபாரத்திற்காக எம் உணர்வுகளை அடகு வைத்தார்கள்..)எம் மக்களுக்கு உங்களது சினிமா துறையில் அங்கீகாரம் கொடுக்கமுடியாவில்லை பிற்பாடு என்னத்திற்கு எங்கள் பிரச்னையை படமாக்கி காசு பார்க்கிறீர்கள்...?
இது ஏற்றுக்கொள்ள முடியாத,கட்டாயம் கண்டிக்கப் படவேண்டிய விடயம் ஆகும்...!
(இவ்வாறு நீங்கள் செய்வது இன அழிப்பிலும் கேவலமானதாகும்..) 

நாம் நாமாகவே வேரூன்றிவிட்டோம்...

இன்று எமது நாட்டின் இனப் பிரச்சனை காரணமாக ஐரோப்பா,ஆபிரிக்கா,அமேரிக்கா,அவுஸ்திரேலியா போன்ற கண்டங்களில் எல்லாம் பரந்து வாழும் எம் ரத்தங்களினால்தான் தமிழக சினிமா வெற்றி நடை போடுகின்றது(காசு பார்க்கின்றது)என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.
லண்டனை தலைமையகமாக கொண்டு தமிழ் சினிமா இறுவட்டுக்களை விநியோகம் செய்யும் பிரபல நிறுவனம் இப்போதைய தமிழக சினிமாவை பொருத்தவரை ஒரு மூலகர்த்தா...!(இந்த நிறுவனத்தின் உரிமையாளர் யாழ் மண்ணை பிறப்பிடமாக கொண்டவராகும்.)இவரது செல்வாக்கு காரணமாகவும்,எமது நாட்டை சேர்ந்த ஒரு சில தயாரிப்பாளர்களின் ஆதரவினால் இன்று எமது நாட்டு சொந்தங்களை தவிர்க்க முடியாத கட்டாய சூழ்நிலைக்கு தமிழக சினிமா தள்ளப் பட்டுவிட்டது.
இப்போது நாம் நாமாகவே தமிழக சினிமா கலைக் கூடத்தில் வேரூன்றிவிட்டோம்...வெட்ட நினைப்பது உங்கள் குணம்...வெட்ட வெட்ட தழைப்பது எங்கள் மனம்...


                                                  


                                                       
                                                                 


                     

Post Comment

13 comments:

 1. இலங்கையில் கண்டியில் பிறந்த ராமச்சந்திரன்தான் தமிழ் சினிமாவை தான் கைகளுக்குள் 20 ஆண்டுகளும், தமிழகத்தை 10 ஆண்டுகளுக்கு மேலாகவும் ஆட்சி செய்த எம்.ஜி.ஆர்!!!

  பாலுமஹேந்திரா என்கின்ற இன்றைய மத்திய அரசின் தேசிய விருது கமிட்டியில் இருக்கும் நபர்தான், ஒருகாலத்தில் தமிழ் சினிமாவின் ஒளிப்பதிவின் பாதையே மாற்றியவர், இவர் படங்கள்போல அன்று ஜதார்த்தத்தை வேறெந்த திரைப்படமும் பிரதி பலிக்கவில்லை!! இவரை தமிழ் சினிமா இன்றும் தூக்கிவைத்து தாங்குகின்றது!! இவர் ஒரு இலங்கையர் (மட்டக்களப்பு)

  அருண்பாண்டியன், ஊமை விழிகளில் தொடக்கி பல படங்களின் நாயகன், பின்னர் இயக்குனர், பின்னர் இப்போது தமிழ் சினிமாவின் முதல்தர தயாரிப்பாளர் (ஐங்கரன்) ஐவரும் இலங்கயர்தான்; ஒரு இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்!!

  தயாரிப்பாளர் செவ்வேல் கூட இலங்கயர்தான்!!!

  திறமைகளை தமிழகம் தட்டி கழிக்கவில்லை!! அதிலும் இதில் ரஜினியும் கமலும் என்ன செய்யணும் என்று எதிர்பார்க்கிறீர்கள்??? உங்களுக்கு திறமை இருந்தால் நீங்கள் மேலே செல்லலாம், ரஜினியோ கமலோ, அல்லது வேறு யாரோ தேவையில்லை!!!

  ReplyDelete
  Replies
  1. எம்.ஜி.அர் ஒரு இந்திய வம்சாவழியினர்..
   பாலுமஹேந்திரா,செவ்வேல் என்பவர்கள் இவ் பதிப்பினை எழுதும்போது மறுக்கப்பட்டவர்கள்.(மன்னித்து கொள்ளவும்)
   அனால் இப்போது முன்னைய காலத்தைவிட தமிழக சினிமாவில் ஈழத் தமிழர்களின் ஆதிக்கம் கூடிக் கொண்டுதான் போகின்றது..இந்த நிலை தொடர வேண்டும் என நினைக்கின்றேன்...
   (ரஜினி,கமல் முடிந்தால் தடிக்கொடுக்கலாம் தானே..)
   தவறுகளுக்கு மன்னியுங்கள் அண்ணா...

   Delete
  2. ரொம்பவே சரியாய் சொன்னிங்க ....

   Delete
  3. ரொம்பவே சரியாய் சொன்னிங்க - எப்புடி......

   கோசுபா, தமிழ் சினிமா ஒண்ணுதான் ஈழ தமிழர்களை ஆதரிக்கிற வழின்னு ஏன் நெனைகிரிங்க? என்னை மாதிரி லட்ச கனகானவங்க மத்தியில ஒரு நல்ல சகோதரனா சகோதரிய இருக்கீங்க. அதனால சினிமா பத்தின கவலைய விடுங்க. நல்ல ஆக்க பூர்வமான விசயங்கள்ல கவனம் செலுத்துங்க. நாங்க கூட இருக்கோம்.- நன்றி

   Delete
  4. எப்பூடி அண்ணா என்ன சொன்னாலும் அது சரியானதாகதான் இருக்கும் அது எனக்கு முன்னமே தெரிந்த விடயம்..நான் எண்ணத்தில் கவனம் செலுத்தவேண்டும் என்று எனக்கு தெரியும்...நண்பரே..நீங்கள சொல்லித்தான் நான் ஆக்கபூர்வமான விசயங்களில் கவனம் செலுத்தவேண்டும் என்ற நிலைமை எனக்கு இல்லை...நண்பரே..நான் இந்த பதிப்பை தொடங்கியதே ஆக்கபூர்வமாக ஏதாவது எழுதத்தான்....நன்றி உமது கருத்துக்களுக்கு......

   ஓஓ தமிழ் சினிமாவை விட என்ன வழியில் நீங்கள் ஈழத்து தமிழர்களை ஆதரிக்குரீர்கள்...இதை விளக்க முடியுமா...?

   Delete
 2. இலங்கையில் பிறந்த தமிழர்களை தமிழக சினிமா அங்கீகரிக்கவில்லை //// இந்த கருத்து எனக்கு சரியாக தென்படவில்லை..... இந்திய சினிமாவில் நிலைத்து நிற்கக்கூடிய திறமையுடையவர்கள் யாராவது புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்களா?............ ஏ.ஆர்.மனோகரனுக்கு சந்தர்ப்பம் அளிக்கவில்லையே எண்டு சொல்றீங்க, ஆனா அவரைவிட எத்தனையோ இந்தியாவை பிறப்பிடமா கொண்டவர்கள் சினிமாவுக்குள் வரமுடியாமல் வெளியே இருக்கிறார்கள்........................ அதையும் ஜோசிக்கவேணும்....

  ReplyDelete
  Replies
  1. அவ்வாறு அவரிலும் திறமையானவர்கள் இந்தியாவிலே இருக்கும்போது என்னத்திற்கு "சுராங்கனி..சுராங்கனி.."பாடலை இந்திய சினிமா பல முறை பயன் படுத்தியது..?மனோகரனின் பாடல்களின் இசையினை தழுவிய பாடல்கள் வந்த காலங்களும் உண்டு அவ்வாறு அவரின் இசையினை தழுவி தங்களது படத்திற்கு இசை அமைக்க முடியும் எண்டால ஏன் அவரை நேரடியாக தமிழக சினிமாவிற்குள் அனுமதித்திருக்க முடியாது..?இன்னமும் எமது இசையில் அவர்களது படம் ஓடிக்கொண்டுதானே இருக்கின்றது..?

   Delete
 3. //ஏ.ஆர்.மனோகரனுக்கு சந்தர்ப்பம் அளிக்கவில்லையே எண்டு சொல்றீங்க, ஆனா அவரைவிட எத்தனையோ இந்தியாவை பிறப்பிடமா கொண்டவர்கள் சினிமாவுக்குள் வரமுடியாமல் வெளியே இருக்கிறார்கள்........................ அதையும் ஜோசிக்கவேணும்//
  நடு நிலையான பார்வை நண்பரே.சஜிரதன் போன்றோரே இன்றைக்கு நமக்கு தேவை.இன்றும் சென்னை ரயில்,பஸ் நிலையங்களில் சினிமா கனவுகளோடு வந்திறங்குவோர் எத்தனையோ பேர்.சாதித்தவர்கள் சிலரே.சாதித்துக் கொண்டிருப்பவர்கள் வெகு சிலரே.

  ReplyDelete
  Replies
  1. வாய்ப்பு கொடுப்பதற்கு யாரும் தயாராக இல்லை என்பதால்தான் அவர்கள் அனைவரும் வெளியே நிற்கின்றார்கள்..இதுதான் நியம இந்திய தமிழக சினிமாவை பொறுத்த வரைக்கும் திறமையானவர்கள் திறமை இல்லாதவர்கள் என்று யாரும் இல்லை...வாய்ப்பு வழங்கப்பட்டவர்கள் வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்பதே நியம்..

   ஓஒ அவ்வாறு என்றால் ஏ.ஆர்.மனோகரனை விட உங்கள் சினிமா உலகில் பொப் இசை மேதாவிகள் இருந்தனர் எண்டால ஏன் நீங்கள் சுராங்கனி பாடலை வாங்கினீர்கள்..(சுட்டீர்கள்)

   Delete
 4. தம்பி கோகுலன் , நீ ஏண்டாப்பா உவனுங்க எல்லாம் நமக்கு உதவி செய்யவேணும் எண்டு நினைக்கிறாய் , எங்கடை ஆட்களால சொந்தமா கால் ஊண்ட முடியாதா? நமக்கு மனோகரன் பற்றி தெரிந்தபடியால் கதைக்கிறோம் , தமிழ் நாட்டில பெயர் தெரியாத எத்தனையோ பேரு தங்களுடைய கதை சுடப்பட்டு விட்டது , மெட்டு சுடப்பட்டு விட்டது என்று அழுது கொண்டிருகானுங்க தெரியுமா ? சினிமா ஒரு புரியாத புதிர் , குப்பைகள் கொண்டாடபட்டிருகின்றன , முத்துகள் குப்பைக்குள் போடபடிருகின்றன , அதனால பட்சி என்ன சொல்லுதுண்டா புடிச்சா ரசியுங்கள் , புடிக்காடி விடுங்கள்

  ReplyDelete
  Replies
  1. திருடுறது என்பது எல்லா இடத்திளையும்தான் நடக்கின்றது...இப அது முக்கியம் இல்லை பெரிய தமிழன் தமிழன் எண்டு கத்துற இந்தியா எங்கள் மக்களுக்கு என்னத்தை கிழிச்சு இருக்காங்க என்டதுதான் என்னுடைய கேள்வி...?

   Delete
 5. அப்புறம் நிரு என்னும் ஓர் இசை அமைப்பாளரை தெரியுமா ? கலாப காதலன் , ராமேஸ்வரம் போன்ற படங்களுக்கு இசைஅமைத்த புலம் பெயர்ந்து வாழும் இலங்கை தமிழன் , திறமை இருந்தும் மறுக்கபட்டவர் , அவரை பற்றியும் இந்த பதிவில் போட்டிருகாலாமே

  ReplyDelete
  Replies
  1. மறந்துவிட்டேன் என்று சொல்லுவதற்கு மனம் இல்லை...தெரியாது என்றே சொல்லவேண்டும்...எல்லோரும் சுயனலவாதிகலள்தான்...சும்மா தமிழையும் எங்கள் நாட்டு பிரச்சனையையும் வைத்து வியாபாரம் செய்கின்றனர்...

   Delete