Monday, May 14, 2012

போரும் இல்லை,பொழிவும் இல்லை...?

போரும் இல்லை,பொழிவும் இல்லை பொறுமையைச் சோதிக்கும் கால கட்டம் இன்று,இலங்கை தமிழர்களின் வாழ்கை ஸ்தம்பித நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதே உண்மை..
வரலாறுகள் கூட குழப்பத்தில் உள்ளது.அவை என்னவென்றால் இராமன் வாழ்ந்த காலகட்டத்தை சரியாக கூற முடியவில்லை,இராமன் வாழ்வில் குறிப்பிட்ட இலங்காபுரி இந்த நாடுதானா?,கம்பனின் காலத்தை குறிப்பிட முடிந்தாலும் வான்மீகியின் காலம் புதிராகவே உள்ளது என்பனவாகும்.ஆனால் பல சரித்திர,இலக்கிய மேதாவிகளின் கருத்துப்படியும்,கிடைக்க பெற்ற சான்றுகளின் அடிப்படையிலும் இலங்காபுரிதான் இன்றைய இலங்கை(ஸ்ரீ லங்கா )என்ற முடிவுக்கு வரலாம்.அதனால்தான் போலும் யுத்தமும்,மரண ஓலமும் நம் மண்ணை விட்டு இன்னும் போன பாடாக இல்லை...


வரலாற்றை திரு(த்தி)ம்பி பார்ப்பம்...

இலங்கையின் ஆதிவாசிகள் இயக்கரும்,நாகரும் என்று கூறப்பட்டுள்ளது.நாகர்களின் மூதாதையர்கள் சிந்துநதிப் பள்ளத்தாக்கில் இருந்து கங்கைநதி சமவெளியின் ஊடாக தென் இந்தியாவை அடைந்து இலங்கையை வந்தடைந்ததாக சரித்திரம் கூறுகின்றது.இதற்கு சான்றாக இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களும் சிந்துநதியில் கிடைத்த தொல்பொருட்களும் ஒற்றுமையை காட்டுபனவாகவே உள்ளதால் நம்பககூடியதாக உள்ளது.
இராவணனையும் அவனது இயக்கர் குலத்தையும் வென்றவர்கள் நாகர்கள் என சித்தரிக்கப்பட்டுள்ளது.நாகர்கள் ஆதியில் சிந்துநதிப் பள்ளத்தாக்கில் இராகு,கேது ஆகிய சர்ப்ப நாகங்களை வழிபட்டு வந்தவர்கள் என்பதும்,பின்னைய காலத்தில் சிந்துநதிப் பள்ளத்தாக்கிலும் இலங்கையிலும் கிடைக்கப்பட்ட இரு நாகங்கள் ஒன்றிணைந்து இருப்பதுபோல செதுக்கப்பட்டதாக இலச்சினை கிடைக்கப் பெற்றது அவர்களின் வழிபாட்டு முறையை தெளிவுபடுத்துகின்றது.

மாற்றம் எமக்கு புதிதல்ல...
                                                           
                                                                                 திருக+கேது+ஈஸ்வரம்
                                                                   
நாகர்கள் இரு பிரிவினராக காணப்பட்டனர்.
இராகுவை வழிபடுபவர்களும்,கேதுவை வழிபடுபவர்களும் ஆவார்.
 • கேதுவை வழிபட்டவர்கள் மன்னாரை அண்மித்து ஒரு கோவில் கட்டினார்கள் என்றும் அதுதான் அன்றைய திருக்கேது கோவில் (இன்றைய திரு+கேது+ஈஸ்வரம்)என்றானது.

பின்னர் இவர்களது வழிபாட்டு தெய்வமாக சிவன் மாறியதாகவும் அதனால் சிவலிங்கம் அமைக்கப்பட்டு அவ்விடம் திருக்கேதீஸ்வரமானதாகவும் சரித்திரம் கூறுகின்றது.

இராமரைப் போலவே புத்த பெருமானும் கோசல நாட்டை சேர்ந்தவர் ஆகும்.இவரின் ஒரே ஒரு மகன் "இராகுல" என அழைக்கப்பட்டார் என்றும் புத்த பெருமான் இராகு வம்சத்தையே சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 • இராகு+இல=இராகுல என்றானது.("இல" என்பதே "ஈழம்" என்னும் பதத்திற்கு அடிகோலியது)
இல என்பது நாகர்களின் குலப்பெயர் என்றும் இராகு இல என்ற பெயர் காலப்போக்கில் இராகுல என்று பாரியதாகவும் கூறப்பட்டுள்ளது.

கங்கா,யமுனா நதிகளின் மேல் மட்ட மலைப்பிரதேசங்கள் இலங்கோ அல்லது இலங்கோபுர என்று அழைக்கப்பட்டுள்ளது.(இங்கு "கோ" என்ற திராவிடச் சொல்லும் "கிரி" அல்லது "கீர்" என்ற வடமொழிச் சொல்லும் மலையையே குறிக்கும்)

 • இல+கோ+புர= இலங்கோபுர என்றாகியது.(இன்று இவ் இடம்  அலம்கீர்பூர் என அழைக்கப்படுகின்றது)
கி.மு.2000 ஆண்டளவில் சிந்துநதி நாகரிகம் அலம்கீர்பூரை அடைந்து அதன் பின் மெல்ல மெல்ல இலங்கை வரை படர்ந்ததாக சரித்திர ஆசிரியரான "அஸ்கோ பார்பொல" குறிப்பிட்டு உள்ளார்.

ஒரு தலைவனாக இலங்கை வந்த இராமனுக்கு இலவ,குச என்ற மைந்தர்கள் இருந்ததாக வரலாறு கூறுகின்றது.இங்கு "இலவ" என்பது "இலவன்" எனவும் "'குச" என்பது "கோசன்" எனவும் தமது குலத்தின் வழியே பெயர்களைச் சூட்டிஇருந்தார்கள் என்றும் கருத்துகள் பல உள்ளது.
(நம்பவும் கூடியதாக உள்ளது)

இல,எலு என்ற இரு சொற்களும் ஒரு பொருள் தருபனவாகவே இருந்தது.சிங்களவர்கள் தமிழர்களை "தெமளு"என்றும் எங்கள் மொழியை "தெமள"என்றும் அழைப்பார்கள்.
 • இந்த "தெமளு" என்ற சொல் "தென் எலு"என்பதில் இருந்து காலப்போக்கில்"தெமளு" என்றானது."தெனளு" என்பது  "தெமளு" ஆகின்றதாம்.
அதாவது தென்பகுதியில் வசித்த 'எலு' மொழியைப் பேசியவர்கள் "தெமளு" என்று அழைக்கப்பட்டார்கலாம்.(எலு மொழியையே இராவணனும் பேசியதாக குறிப்பிடுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்)

 • தென் அல்லது தெம்+இல+அகம்=தெமிலகம் என்பது காலப்போக்கில் தமிழகம் ஆகின்றது.
அடுத்து சிங்கள என்ற சொல் எப்படி வந்தது என்று பார்த்தால்....
 • சிங்கம்+எலு=சிங்க எலு ஆகி சிங்கள ஆகியது.(ஆக மொத்தத்தில் இராவணன் பேசிய எலு மொழியில் இருந்தே சிங்கள மொழி தோன்றியது என்பது மறுக்கமுடியாத உண்மை)
இலங்கையின் மூதாதையர்களின் மொழியாகிய "எலு" மொழியை தென்னவர் பேசிய போது அம்மொழி "தென் எலு" "தெம் எலு"ஆகி "தெமலு" ஆகி இறுதியில் தமிழாகின்றது.

லாலா நாட்டில் இருந்து வந்த சிங்க இனத்தவர் இந்த "எலு" மொழியை பேசிய போது "சிங்க எலு"  "சிங்கலு" ஆகி சிங்களமாகின்றது.(ஆக மொத்தத்தில் ஆதி மொழி எலு(தமிழர் மொழி)யில் இருந்து உருவா(க்கப்பட்டது)கியது சிங்கள மொழி எனலாம்.

நாகர்கள் வாழ்ந்த இடம் நாகதுவீபம் என்று அழைக்கப்பட்டது.இது இலங்கையின் வடக்கு,வடமேற்குப் பிரதேசங்களிக்கு பொதுவான பெயராக அன்று இருந்தது.(மன்னார்-யாழ் தீபகற்பம் வரையிலான பகுதி)

இப்போது நயினாதீவு சிங்களவர்களால் "'நாகதீப" என்றுதான் அழைக்கப்படுகின்றது.

 • நயீ+இனார்+தீவு=நயினாதீவு ஆகின்றது.(நயீ என்பது சிங்கள சொல்ல நாகங்களை குறிக்கும்.இனார் என்பது இன்ன இனத்தவர் என்பதை குறிக்கும்.ஆக மொத்தத்தில்  நயினாதீவு ஒரு தமிழ் பழம் சொல் இது மட்டும் உறுதி)
நாகர்கள் கி.மு.3 ஆம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தே இலங்கைக்கு வரத்தொடங்கினர்.இவர்களே இல அகம்(தற்போதைய ஈழம்),இலம்கோ(தற்போதைய இலங்கை)என்ற பெயர்களை சூட்டியவர்கள் ஆகும்.)
நாகர்களின் தாய் நாடு கங்கா,யமுனா நதிகளின் மேல் மட்ட மலைப்பிரதேசமான இலங்கோபுர அல்லது அலம்கீர்பூர் என்று குறிப்பிடப்படும் இடமே,நாகர்களின் வருகை ஸ்ரீராமனுடைய வருகையுடன் தான் தொடங்கியதா என்பது சர்ச்சையான விடயமாகும்.

விரிவாக இந்த சரித்திர சம்பந்தமான யாத்திரையில் நுழைய முடியாது.ஏன் எனில் நான் ஒரு சரித்திர ஆசிரியன் அல்ல.ஆனால் "எலு", "இல" என்ற இரு பதங்களில்தான் இந்த நாட்டின் ஒருமைத்துவமும் சகோதரத்துவமும் அடங்கி இருக்கின்றது என்பதே நியம்.இதை நாங்கள் மறந்து விடக்ககூடாது.

இயக்கர்,நாகர் ஆகியோரின் காலத்திற்கு அப்பாற்பட்டது எமது நாகரிகம்.எம் நாகரிகம் ஒரு கால கட்டத்தில் வாடா இந்தியாவில் இருந்து குமரிக்கண்டம் எனப்பட்ட கடலால் விழுங்கப்பட்ட லெமூரியா பிரதேசத்தையும் உள்ளடக்கி இருந்தது.இந்து சமுத்திரத்தில் போதுமான அகழ்வாராய்ச்சிகள் நடைபெறுமாயின் எமது சரித்திரத்தை மறுபடியும் புதுப்பித்து எழுதவேண்டிய சூழ்நிலை எழக்கூடும்.
இவையெல்லாம் கம்பராமாயணத்துடன் தொடர்புபடுகின்றனவா என்றால் சரித்திரம் என்னும் ஏரியில்தான் கம்பனின் இராமாயணம் எனும் தாமரை மலர்ந்ததையும் நாம் மறக்ககூடாது.
கம்பகாவியநாயகன்எப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்தான்..?,அவன் காலத்திற்கும் வான்மீகியின் காலத்திற்கும் இடையில் என்னென்ன சமுதாய மாற்றங்கள் ஏற்பட்டன..?என்பது வருங்கால கம்பவாரிதிகளின் கடும் ஆய்விற்கு நல்லதோர் தீனியாகும்.

தலைப்பு எனது கருத்தில்:-இராவணன் காலத்தில் தோன்றிய போர் என்னும் பதம் இப்போதுதான் கொஞ்சம் இளைப்பாறுகின்றது,ஆனால் நாம் இன்னும் அதே நிலைமையில்தான் முடங்கிக் கிடக்கின்றோம்.இலங்கை என்பது சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமான நாடு அல்ல தமிழர்களாகிய நமக்கும் அதில் பங்கு உண்டு.அவர்கள்தான் பொழிவினை தரவேண்டும் என்றில்லை நாமும் கொஞ்சம் முயற்சி செய்து பார்த்தால் என்ன..?போர் என்ற பேரில் இலங்கை என்னும் அழகுத் தீவை சிதைத்ததுபோதும் இனி சீர்ப்படுத்தல் வேண்டும்...


இலங்கையனாக இரு,தமிழனாக வாழு....

Post Comment

3 comments:

 1. wel...
  nanpa unathu thalam enamum merukudappadukondu pokenrathu enpathil entha vetha ijamum elai..

  ethu pola enrum unathu tamilukkana panikal thodara tamilanaka pirantha emathu samuthaja nanparkal, sakothararkal unaku uruthunuijaka erupparkal....

  Ram.RA

  ReplyDelete
 2. nantri nanba ram.r avvalo periya padaippaali ellam illai summa enakku therinthavatrai naalu perukku therivikkanum endathatkaaga eluthukinren..iruppinum umathu vaalththukkalukkum umathu nampikkaikkum nantri....

  ReplyDelete
 3. Elu mozhi epidi Tamil aakum? ?

  ReplyDelete