Wednesday, May 23, 2012

(ஜீ.ஜீ.)பொன்னம்பலமும் பொற்சுவடுகளும்...
கணபதி காங்கேசர் பொன்னம்பலம்

பிறப்பு:-November 8, 1901
இறப்பு:-December 9, 1977 (aged 76)

"ஒரு மனிதன் வாழும்போது மக்களால் வஞ்சிக்கப்பட்டாலும் இறந்த பின் நேசிக்கப்படுவான்.."ஆனால் இந்த கருத்துக்கு முற்றிலும் மாறுபட்டவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம்.இவர் இருக்கும்போதும் சரி,இல்லாதபோதும் சரி மக்கள்(குறிப்பாக பெரும்பான்மை மக்கள்)தன்னை நேசித்தாக வேண்டும் என்பதற்காக எம் தமிழ் மக்களின் பல உரிமைகளை அந்த காலகட்டத்தில் அடகு வைத்தவர்..இல்லை இல்லை விற்றவர் என்பதே உண்மை...


இவர் இங்கிலாந்தில் சட்டக் கல்வியை பூர்த்தி செய்து பட்டம் பெற்று இலங்கைக்கு வந்த ஒரு "கிருமினல்" சட்டத்தரணி ஆவார்.

ஒரு காலகட்டத்தில் பெரும்பான்மை என மெச்சப்பட்ட இனத்திற்கு தலையிடியாக இருந்தவர்,சிறுபான்மை எம் மக்களுக்கு தலையணையாக இருந்தவர் என்று என்றும் பலரால் நம்பப்படு(நம்பவைக்கப்பட்டு)கின்ற ஜீ.ஜீ.பொன்னம்பலம் எம் தமிழ் மக்களுக்கு செய்ததாக கருதப்படும் செயற்பாடுகளை(பொற்சுவடுகளை) பார்ப்போம்...

 • கொழும்பிலே 1929 இல் டொனமூர் கமிஷன் தீர்மானத்துக்கு எதிராக தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து தமிழர் மனதை கவர்ந்தார்..

 • இந்திய வம்சாவளியினரின் உரிமைகளுக்காக 1930 இல் குரல் கொடுத்து அவர்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுத்தார்.இதன்படி 7 வருடம் இலங்கையில் வசித்த கல்யாணம் முடித்த இந்தியருக்கும் 10 வருடம் இலங்கையில் வசித்த கல்யாணம் ஆகாத இந்தியருக்கும் பிரயாவுரிமை பெறமுடிந்தது.இந்திய வம்சாவளியினருக்கு பாராளுமன்றத்தில் 14% ஆசன ஒதுக்கீடு வேண்டும் என சோல்பரி ஆணைக்குழுவிடம் சிபாரிசு செய்தார்.

 • தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பிற்காகவும் உரிமைக்காகவும் 1944 ஆகஸ்ட் 29 அன்று "அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்"சை தொடக்கி வைத்து தலைவராகவும் இருந்தார்.

 • இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நேரவிருந்த நெருக்கடியை எதிர்த்து 1945 இல் சோல்பரி ஆணையாலர்களிடம் சரிசமமான பிரதிநிதித்துவத்திற்காக கருத்துகளை முன்வைத்தார்.(சிங்களவர்:தமிழர் சம உரிமை வேண்டி 50:50 என்ற ஒரு கொள்கையை முன்வைத்தார் இதன் போது அவர்கள் 50:40, 55:45, 53:47 தருவதற்கு சம்மதித்த போதும் இவர் 50:50 தான் வேண்டும் என பிடிவாதம் காட்டியது குறிப்பிடத்தக்கது)

 • 1948 இல் பிரயவுரிமைச் சிக்கலில் தமிழர்கள் இருந்தபோது தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களித்து பின்னர் இது தொடர்பாக திரு.ஜவஹர்லால் நேருவுடன் கலந்தாலோசித்து தமிழர்க்கு சாதகமான தீர்மானம் வருவதற்கு உறுதுணையாக இருந்தார்.

 • 1948 இல் முதலாவது சுதந்திர தின விழாவில் நந்திக்கொடி ஏற்றி,தமிழில் உரை நிகழ்த்திய பெருமை இவரையே சாரும்.

 • 1976 ஜனவரி 30 மு.க.கருணாநிதியின் தமிழ்நாட்டு அரசாங்கம் ஊழல் செய்ததாக இந்திரா காந்தியின் மத்திய அரசாங்கத்தினால் கலைக்கப்பட்டது.(அந்த காலத்துலையே ஐயா வேலைய காட்டீடார்) இதில்  மு.க.கருணாநிதிகக்கு ஆதரவாக ஜீ.ஜீ.பொன்னம்பலம் களம இறங்கினார்.இதில் என்ன ஆச்சரியம் என்றால் கருணாநிதிக்காக பொன்னம்பலம் நீதிமன்றத்தை விட்டு வெளிநடப்பு வரைக்கும் ஆதரவு கொடுத்தார்.கடைசியில் பொன்னம்பலம் தனது கிருமினல் சிந்தனையால் வெற்றி பெற்றார்.(இந்த வழக்குக்காக பொன்னம்பலம் எந்தவிதமான காசும் வாங்கவில்லை போக்குவரத்து செலவு,தங்கும் செலவு,சாப்பாட்டு செலவு என்பவற்றை கூட தானே செலுத்தினார்.)

இவர் தமிழுக்கும் தமிழருக்கும் செய்ததாக கருதப்படுபவையும் பிதற்றப்படுபவையும் மேலே குறிப்பிடப்பட்டவைகள் மட்டுமே..
(ஒன்று/இரண்டு விடுபட்டிருக்கலாம்)

இவரை இன்று எந்த தமிழனும் தூக்கி வைத்திருப்பதாக தெரியவில்லை மாறாக இவரின் மேல் கோபத்தில்தான் உள்ளனர்.ஏன் எனில் இவர் செய்த வேலைகள் அப்படி...?(இவர் தமிழனுக்கு செய்த துரோகங்களாக கருதப்படுபவற்றை வரும் பதிப்பில் "பொன்னம்பலம் பின் அம்பலம்"என்னும் தலைப்பில் எழுதவுள்ளேன்.)

இவர் செய்த நல்லதை விட கெட்டதே முக்கியமாகவும்,தமிழன் இந்த நிலைமையில் இன்னமும் இருப்பதற்கு காரணமாகவும் இருக்கின்றது..


இறந்தவர்கள் யாராயினும் அவர்கள் தமிழுக்காகவே இற(ரு)ந்திருக்க வேண்டும்..


Post Comment

2 comments:

 1. பதிவுலகில் உம்மைக் கண்டது மகிழ்ச்சி! தொடர்ந்து கலக்குங்கள்... :)
  வாழ்த்துக்கள் தோழா :)

  பிறேம்.
  http://prem-n-arangam.blogspot.com/

  ReplyDelete