Thursday, June 21, 2012

அஜித்தின்னா அஜித்தான்...

வாழ்த்துக்கள் :- பதிப்பிற்க்குள் நுழைவதற்க்கு முன்...இந்த மாதம் 22 ஆம் திகதி தனது 38வது பிறந்தநாளை கொண்டாடும் "இளைய தளபதி" விஜய்க்கு முன்கூட்டிய பிறந்தநாள் வாழ்த்துக்களை கோடான கோடி அஜித்தின் உயிர் ரசிகர்களின் சார்பில் சொல்லிக்கொண்டு; பதிப்பிற்க்குள் நுழைவோம்...

"நூறு கோடி பேர்ல ஒராள்,ஆறு கோடி பேர்ல மொத்த ஆள்" 1971 MAY 01 இல் உதயமான எங்கள் நட்சத்திர நாயகன் "தல" நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்.வெறுமனையே பத்தாம் ஆண்டு வரைக்கும் படித்துவிட்டு; மோட்டார் வாகனம் பழுது பார்ப்பவராக தனது ஆரம்ப வாழ்கையை தொடங்கிய இவர் யாருடைய உதவியும் இல்லாமல் தனி ஒரு மனிதனாக இன்று இந்த நிலைமைக்கு வந்து இருக்குறார்.அஜித்தின்னா ஒரு நெருப்பு.."தொட்டு பார்க்க நினைக்காதே...சாம்பலாக்கி விடுவோம்.."என கூறும் என்னை,உங்களை போன்ற உயிர் ரசிகர்கள்..இதை எல்லாம் விட ரஜினி...கமல் என்ற மூத்த தலைமுறைக்கு பிற்பாடு "தல" தான் நியம்..அஜித்க்கு போட்டியாக கருதப்படும் "புறாவுக்கு மணி அடித்தவர்.." ஒரு கல் ஒரு கண்ணாடி பட நாயகனால் "சுட்டி T.V காட்டூன் காமடியன்" என்று பெயர் பெற்ற ஒரு நபர் இருக்கின்றார்(தன்னை தானே போட்டியாளராக நினைத்துகொள்கிறவர்).

                                                                               
                                                                       குட்டி "தல"

தல எல்லாத்தையும் தாண்டிதான் இந்த நிலைமைக்கு வந்தவர் என்பதற்கு நல்ல ஒரு உதாரணம்..ஆரம்ப காலத்தில் பாதணி விளம்பரம் ஒன்றில் நடித்து இருக்குறார்..இப்படி இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த 'தல' தான் என்(எங்கள்) தல....
பாதணி விளம்பரத்தின் போது "தல"

சினிமா என்ற காட்டிலே "தல" என்ற தனிமனிதன் எவரது துணையும் இல்லாமல் தனி முயற்சியாலும்,தன்னம்பிக்கையாலும் தானாகவே வளர்ந்து இன்று யாராலும் வெட்ட முடியாத காட்டு மரமாக திகழ்கின்றார்.
"தகப்பன் தூக்கிவிட்ட தளபதி இல்லடா தானாக வளர்ந்து நின்னவன் தலடா.."

அமராவதி தொடக்கம் பில்லா-2 வரைக்கும் நீண்டு செல்கின்றது இவரது சினிமாப்பயணம்.இதற்கு இடையில் இவர் சந்தித்த வெற்றியை விட தோல்விகளே அதிகம்.. 'தோல்வியின் போது துவண்டுவிடுவது தலயின் குணமோ,தல உயிர்களாகிய எங்களின் குணமோ இல்லை..' வெற்றியின் போதும் சரி; நினைத்தும் பார்க்க முடியாத தோல்வியிலும் சரி நாங்கள் தல கூடவே இருப்போம்... (ஏன்னா நாங்க ராணுவம் போல...)

இந்திய சினிமா வரலாற்றில் சண்டைக்காட்சிகளுக்கு டூப் போடாமல் நடிக்ககூடிய ஒரே ஒரு நடிகன் நம்ம "தல" மட்டும்தான்..உதாரணமாக பரமசிவன்.பில்லா,மங்காத்தா போன்ற படங்களை சொல்லலாம்..அண்மையில் பில்லா பாகம் இரண்டில் 10,000 அடி உயரத்தில் கேலிகொப்டரில் இருந்து ஒற்றைக்கையில் தொங்குவதுபோல ஒரு சண்டைக்காட்சியில் சும்மா அசால்ட்டாக நடித்தார்..

தலடா...

இந்த காட்சி படமாக்கப்பட்டது தொடர்பாக பில்லா-II இன் சண்டைக்காட்சி வடிவமைப்பாளரான "ஸ்றீபன்' என்பவர் தனது சமூக வலைத்தளமான FACEBOOK இல் கூறிய கருத்து பின்வருமாறு.."தான் இவ்வளவு காலமும் பார்த்த நடிகர்களிலே இப்படி ஒரு கெத்தான,மாஸ் நடிகரை பார்க்கவில்லை எனவும் ஒற்றை கையால் கெலிகொப்டரில் தொங்கியபடி அஜித் சண்டை பிடிக்கும்போது தனது இரத்தம் உறைந்து போனது.."என குறிப்பிட்டுள்ளார்..

வெற்றிகளுக்காவவோ,நடிகன் என்பதற்காகவோ சேர்ந்த கூட்டமில்ல எங்கள் கூட்டம்; தலயின் தனிப்பட்ட குனத்திட்காக சேர்ந்த கூட்டம்..எங்கள் மாபெரும் கூட்டம்..!"இது காசு குடுத்து கூட்டின கூட்டம் இல்லடா;தல மேல வைத்த அன்பால தானா சேர்ந்த கூட்டம்..எங்க கூட்டம்..."                                                 

இவர் தனது மனதில் பட்டவற்றை வெளிப்படையாக பேசுபவர்.இவரை பொதுவாக சந்தோஷ நிகழ்வுகளில் காண்பது கஷ்டம் (குறிப்பாக விருது வழங்கும் விழா) இன்னும் சொல்லப்போனால் சந்தோஷ நிகழ்வுகளில் இவரின் "தல" தெரியாது என்றே சொல்லவேண்டும்...

இவரது படங்களுக்கான "பிரமோஷன்" வேளைகளில் இடுபடுவது இல்லை,(குறிப்பாக மாநிலம் மாநிலமாக போய் விளம்பரம் செய்வது இல்லை..!) தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுப்பதில்லை,தனது படத்திற்கான பாடல் வெளியீட்டு விழாக்களை கூட கொண்டாடவிடுவதில்லை
(மங்காத்தா,பில்லா-II...)  மற்றவர்கள் ஓடாத தங்களது மொக்கை படங்களுக்கு 100வது,150வது நாள் விழா கொண்டாடும்போது இவர் தனது 100 நாள் கடந்து ஓடிய படங்களுக்கு கூட எதுவித விழாக்களையும் கொண்டாடுவதில்லை,தனது ரசிகர்களையும் கொண்டாடவிடுவதில்லை...!
                                                                             
                                                                    கருத்து கருத்து...                   

நம்ம "தல" யை துக்க நிகழ்ச்சிகளில் முதலாவதாக காணமுடியும்.மேலும் சொன்னால் இவரது பத்திரிகை நண்பன் ஒருவரின் இறந்த நிகழ்விற்க்கு சென்ற வேளையில் உடலை தூக்குவதற்க்கு ஒருவர் குறைந்த போது அங்கு இருந்தவர்களில் "தல" மட்டுமே சென்று தூக்கினார்.மேலும் பின்னணி பாடகி "சின்னக்குயில்" சித்திரா அவர்களின் மகளின் இறந்த கிரிகைக்கு முதலாவது ஆளாக சென்று இறுதிவரைக்கும் இருந்து எல்லா வித சடங்குகளையும் முடித்து வைத்தார்.

இவ்வாறானான தூய, நல்ல மனிதாபிமான குணங்களை உடைய ஒருவருக்கு இத்தனை ரசிகர்கள் இருப்பதில் என்ன ஆச்சரியம்...

இது..இது...மச்சீ..மரண மாஸ்...

அஜீத் விழாவில் கலந்து கொள்ளாததால், விஜய் டி.வி. சென்னை தலைவர் ஸ்ரீராமும், நிகழ்சிகளின் தலைவர் பிரதீப் மற்றும் துணை தலைவர் மகேந்திரன் அவரை நேரில் சந்தித்து விருதை வழங்கினார்கள்.

விஜய் டி.வி:-உங்களுக்கு யார் யாரை சேர்த்தால் பெருமை என்று நினைக்கும் போது(நல்லா குடுத்தான்கையா ஒரு சூப்பர் ஸ்டார் அவார்ட்டு...) எல்லாம் சேர்த்துக்கொள்ள; பிறகு வேணாம் என்று சொல்லிவிட்டு மற்றவர்களை பக்கம் போற வேலையை எல்லாம்  "புறாவுக்கு மணி அடித்தவர்.." உடன் வைத்துகொள்ளுங்கள்..நம்ம தல எந்த பக்கமும் சாயாத தல...அவர் ரசிகர்களும் அப்டிதான்...
(இப்டி சொல்லுறதுக்கு தல ரசிகர்களால் மட்டும்தான் முடியும்...) 

  அஜித் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த சிம்பு...!

நல்ல செய்திதான்:-அஜித் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த சிம்பு...!

அஜித்தின் தீவிர ரசிகர் சிம்பு என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். அவருடைய எந்த படம் வெளிவந்தாலும் அதை முதல்நாளில், முதல்ஷோவில் பார்த்துவிடுவார். அந்தளவுக்கு அஜித்தின் தீவிர வெறியரான அவர் இப்போது ஒருபடி மேலே போய் அவரது கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்துள்ளார். என்ன சொல்றீங்க என்று கேட்கிறீர்களா...! அட அமாங்க! அவர் இப்போது நடித்து வரும் வாலு படத்தில் தான் இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறார்.

புதுமுகம் விஜய் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் புதிய படம் வாலு. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். கூடவே காமெடியில் சந்தானம் கலக்க வருகிறார். சமீபத்தில் தான் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமானது. படத்தின் கதைப்படி சிம்பு தனது காதலி ஹன்சிகாவுடன் அஜித்தின் பில்லா-2 படத்தை முதல்நாளில் போய் தியேட்டரில் பார்க்கிறார். இந்தக்காட்சியை சென்னை கமலா தியேட்டரில் வைத்து எடுத்தனர். அப்போது தான் சிம்பு அஜித்தின் பில்லா-2 
கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்து இருக்கிறார். பிறகு ஹன்சிகாவுடன் அமர்ந்து படத்தையும் பார்க்கிறார். இதைதான் படமாக்கி இருக்கிறார்கள். கூடவே படத்தில் அஜித் ‌தோன்றும் ஒவ்வொரு காட்சிக்கும், அவரை பற்றி பஞ்ச் டயலாக் கொடுத்து புகழ்ந்து தள்ளியுள்ளாராம்.


அஜித் ரசிகன் ஒருவனின் பார்வையில் "இளைய தளபதி" விஜய்:- கூடிய அஜித் ரசிகர்கள் இவரை வெறுப்பதற்க்கு காரணம்; இவர் தகப்பன் தூக்கி விட்ட தளபதி என்பதாலும், கூடிய அளவு தனது ரசிகர்களை (முடிந்த அளவு) முட்டாள் ஆக்குவதனாலும் பேரும்பாலும் நம்ம தல ரசிகர்களுக்கு இவரை பிடிக்காது..
                                                                            
                                                 என்ன இப்படி கேட்டுடீங்கள்...!

தொடரும் தலையிடி...!

ஆ...ஆ...ஆ...ஆ....!

விஜய் உருவானதும் தகப்பனால்தான் இப்போது இல்லாமல் போய்க்கொண்டு இருக்கின்றது அதே தகப்பனால்தான்..ஒரே மாதிரியான படங்களை தொடராக கொடுப்பது, தேவை இல்லாமல் வாயை கொடுத்து வம்பில் சிக்கி கொள்வது என்று...தொல்லைகள் தொடருகின்றன..!

எல்லாவற்றையும் தாண்டி இன்று ; தமிழக சினிமா உலகில் தலக்கு என்று ஒரு ஆசனம் தயாராகத்தான்..இருக்கின்றது...
(யார் காலையும் வாராமல்,யார் காலுக்கும் போகாமல் தனக்கென தானாக உருவாக்கிய இடம்..அதுதோல்விகள் பல கண்டு சளைக்காமல் முன்னுக்கு வந்த நாயகன் என்(எங்கள்) தல இவ்வாறான ஒரு கெத்தான, மரண மாஸ் ஆனா ஒருவருக்கு ரசிகனாக இல்லாமல் வேறை யாருக்கு ரசிகனாக முடியும்...இபோதும் எப்போதும் உரக்க சொல்லுவேன்...நான் ஒரு அஜித்தின் வெறியன்..பக்தன்...என்று..!

"தல ரசிகன் என்று சொல்லடா, தல நிமிர்ந்து நில்லடா..."
                                         

Post Comment

7 comments:

 1. Naan orutharukum rasigan illai.bt real lifla ajith big fan. waalnda ajith madiri than walanum.good man

  ReplyDelete
  Replies
  1. ajiththin padankalukkaaka serntha kuddam illai bass ivalavu perum...avarin nalla kunaththukkaaka serntha kuuddam...athuthaan namma thala....

   Delete
 2. நமக்கு பின் இருப்பவர்கள் நம்மை இழிந்தால் கலங்ககூடாது.! ஏனெனில் நாம் அவர்களுக்கு முன்னால் இருக்கிறோம் என்பதை மறந்து விட கூடாது.!

  அதுபோல தான் நாங்களும், I Mean இளையதளபதி ரசிகர்களாகிய நாங்களும்..

  So be cool always.. dont blame other.

  ReplyDelete
  Replies
  1. ippa yaarum yaaraiyum elinthal sayyavillaiyae...?ella aarampamum unkal pakkaththi irunthuthaan vanthathu...ellavatraiyum aarampiththu viddu ipothu nallavarkal pola vesam poddal ellam marakkappaddu vidumaa..?illai marainthuthaan pokumaa...?

   Delete
 3. naducha filmla athikama flap kuduthum manam thalaraama naducha pothathu... konjam producer pathium konjam nenachu paarkanum... athana producer kudumpatha caduthirupan... nenachu paaruca... boss

  ReplyDelete
 4. ETHUKU AJITHUKU INTHA JAALRA?

  ReplyDelete
 5. So sad to hear the guys like you... please dont run behind these stars :-( They are travelling benz and BMW what where as his fans still in bus, The cini stars and Cricketers are the one who need to be taxed heavily and their money should be spent to national welfare, They are not creating anything new, we can't earn a signle penny with their products(movies) out side tamilians, All these fellow's are mere useless, Youth please go behind your future instead of ajith please read the history of CheGuvera, Omar Mukhtar, Schinldler there are lot of people who are much better than this idiots "thala, thalapathi, Superstar, Ulaganayagan" all are waste. No body out side india knew these guys and their history is worthless. Before 1940 no body mind about these cini stars, but now everyone worshiping them..It is ridiculus

  ReplyDelete