Saturday, June 23, 2012

ஜோதிடத்தை நம்பலாமா..வேண்டாமா..?

ஜோதிடம் பொய் பொய் என்று பொதுவாக எல்லோரும் சொல்கிறார்கள்; அது உண்மையா...?

"பொய்" என்று சொல்கின்றவர்களில் எனக்குத்தெரிந்து பல பிரிவுகள் இருக்கின்றது...!

1. தங்களை வித்தியாசமாக / நாகரீகமாக காட்ட நினைப்பவர்கள்...!
2.ஜோதிடத்தில் தீமையான பலன்களை மட்டும் அதிகம்
கொண்டவர்கள்(அனுபவித்தவர்கள்)...!
3.ஜோதிடத்தை உண்மையிலேயே நம்பாதோர்..(ஜோதிடத்தின் தவறுகள் அறிந்தவர்கள் அல்லது விஞ்ஞானத்தை நம்புகிறவர்கள்.)


முதல் 2 பிரிவும் தேவையில்லை... 3ம் பிரிவுதான் முக்கியமானது... 

ஜோதிடம், பொதுவாக நட்சத்திரங்களையும் அவற்றின் கூட்டங்களையும் வைத்தே உருவாக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. ஆனால், அந்த நட்சத்திரங்களை வைத்து... மனிதனின் வாழ்க்கை காலத்தை தீர்மானிக்க முடியும் என்பதுதான் சற்று குழப்பமானதாகவும், சாதாரணமாக ஏற்றுக்கொள்ள முடியாத்தாகவும் இருக்கிறது.


எனினும், நாங்கள் இங்கு ஒன்றைக்கருத்திற்கொள்ள வேண்டும்.
கலீலியோவின் டெலஸ்கோப் கண்டு பிடிப்பின் பின்னரே.. விஞ்ஞான உலகில் இந்த நட்சத்திரங்கள்,கோள்கள் தொடர்பான அறிவு பெரும் வளர்ச்சியடைந்தது. இது நடந்தது 17 ம் நூற்றாண்டிலேயே...!
அப்படி இருக்கையில் எவ்வாறு... ஜோதிடங்கள் ஏற்கனவே இந்த நட்சத்திரங்களை தெளிவாக வைத்து கணிப்பிடப்பட்டுள்ளன? என்ற கேள்வி எழும்...?

இதற்கு நாங்கள் இன்னும் முன்னோக்கி பார்க்க வேண்டும்...


எகிப்திய பிரமிட்டுக்களில்... அண்டத்திலுள்ள (தென் அரைக்கோலம்) நட்சத்திரங்கள் அடங்களான அனைத்தின் நிலையான இருப்பிடங்களையும் பாறைகளில் உருக்களாக உருவாக்கும் முயற்சி நடை பெற்றதற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. (சில வேளை ஏற்கனவே உருவாக்கப்பட்டு சிதைவடைந்ததைத்தான்... நாங்கள் தவறாக உருவாக்கும் முயற்சி என்கிறோமோ தெரியவில்லை...)

இதிலிருந்து எமக்கு என்ன தெரியவருகின்றது என்றால்...

நாங்கள் இப்போது 400 வருடங்களுக்குள் உறுதிப்படுத்திய நட்சத்திரம் தொடர்பான‌ விடையங்கள்... ஏற்கனவே பண்டைய நாகரீக மக்களால் தெளிவாக அறியப்பட்டு பதிவும் செய்யப்பட்டுள்ளது என்பது...!
அத்துடன் அவர்கள் எவ்வளவு அறிவில் மேம்பட்டவர்களாக இருந்திருப்பார்கள் என்பதும் தெரிகிறது.

எனினும் இந்த ஜோதிடங்கள், தெற்காசியாவையே பிறப்பிடமாக கொண்டதாக கருதப்படுகிறது...(இதுவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே...!)
காரணம், எகிப்திய நாகரீகத்தின் முன்னோடி தென்னாசிய பகுதியினூடாக வந்ததற்கு சான்றுகள் உள்ளன. 
லெமூரியா கண்ட அழிவில் தப்பிய மக்கள் கூட்டங்களே இந்த ஜோதிடம் தொடர்பான அறிவை பரப்பி இருக்கலாம். 
லெமூரியாவில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் முதலில் காடாக இருந்த இந்தியாவை நாடாக்கி வாழ்ந்ததாலும்.... இன்றளவிலும் ஒரு தனி நாடாக விளங்குவதாலும் இந்தியா ஜோதிடத்தின் பிறப்பிடமாக கருதப்படுகிறது.

சரி... வரலாற்றை விட்டு நவீன உலகத்தோடு தொடர்பு படுத்திப்பார்ப்போம்.

இன்று... சமூகவலைத்தளமான ஃபேஸ்புக் முதல் கொண்டு... பல்வேறு ஊடகங்கள், அமைப்புக்கள் உலகம் முழுவதுமே எடுத்து... அதிலிருந்து சில முடிவுகளை எடுக்கின்றனர்.
உதாரணமாக... எந்த தினத்தில் பிறந்தவர்கள் அதிகம் கோபப்ட்டுகிறார்கள் என்றெல்லாம், 10000 இக்கு மேற்பட்டவர்களை கருத்துக்கணிப்பு செய்து முடிவெடுத்திருக்கிறார்கள்.


இதே போன்ற ஒரு மிகப்பெரியளவிலான கருத்துக்கணிப்பு... ஏன் பண்டைய எம்மை அறிவால் மிஞ்சிய(??) சமுதாயத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்க கூடாது? 
நாம் சாதாரண விடயங்களில் மேற்கொள்ளும் கருத்துக்கணிப்புக்களை அவர்கள் பிறந்த நாள், நேரம்,இடம் என்பவற்றை வைத்தும் அண்ட வெளியுடன் ஒப்பிட்டும் மேற்கொண்டிருக்க வாய்ப்புக்கள் உள்ளது.
வாய்ப்பே இல்லை என்று சொல்வது முட்டாள்தனமான அறிவற்ற எண்ணம்.எங்களால் எப்படி பிரமிட்களை அவர்கள் கட்சிதமாக உருவாக்கினார்கள் என்பதே கண்டு பிடிக்க முடியவில்லை. கி.மு 10000 ,5000 ஆண்டுகள் பழமையான இதையே தெளிவாக்க முடியவில்லை எனும் போது... லெமூரியாவை அடிப்படையாக கொண்ட சமுதாய தேடல் என்பது சாத்தியம் குறைந்ததுதானே?
(ஆனால், கண்டுகொள்ள முடியவில்லை என்பதற்காக அனைத்துமே பொய் என்று கூறிவிட முடியாது...!)

அப்படி, பண்டைய மக்களால் மிகப்பெரும் கருத்துக்கணிப்பினாலும், அண்டத்துடனான ஒப்பீட்டாளும் உருவாக்கப்பட்டதே இந்த "ஜோதிடம்" 

மேலும்... முக்கியமான ஒரு விடயம்...

சனிக்கோளில் கிட்டத்தட்ட 7 1/2 அண்டுகளுக்கு ஒரு முறை காந்த புலத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றனவாம்... அந்த மாற்றத்தினால் புவியின் காந்த புல ஈர்ப்பில் கூட மாற்றம் உணரப்படுகிறதாம். (இது நவீன விஞ்ஞானம் கூறியுள்ளது) அந்த மாற்றம் தான் பண்டைய ஜோதிடத்தின் படி 7 1/2 சனி என கூறப்படுகிறதாகவும் இருக்கலாம்.(காந்த புல மாற்றங்கள் மனித மூளையை பாதிப்பது அனைவரும் அறிந்ததே...)


இன்று... சனி கிரகமாற்றம் 7 1/2 ஆண்டுகளுக்கொருமுறை என்று கண்டுபிடித்த நாம் போகப்போக மற்றதையும் கண்டு(பிடித்து)கொள்ளுவோம்.

என்னதான் இவ்வளவு சொன்னாலும்; இன்று இருக்கும் ஜோதிடமுறை நிச்சயமாக மாற்றமடைந்து நம்பகத்தன்மையற்றதாகவே இருக்கின்றது..!
இடை இடையே தோன்றிய அரசர்கள்... தமது சுய நலம் கருதி பல மாற்றங்களை ஜோதிடத்தில் செய்திருப்பார்கள். (மேலே குறிப்பிட்ட படி 2ம் வர்க்க எதிர்ப்பாளிகள்). அதனால், இன்று நடை முறையில் இருக்கும் "ஜோதிடம்" பொய்யானதாக இருப்பதாகவே தோன்றுகிறது.

சும்மா... நாள் எல்லாம் சொல்லி... அன்று இப்படி நடக்கும், அப்படி நடக்கும் என்று சொல்வதெல்லாம் சும்மா 'பில்டப்தான்'.
மேலும் பரிகாரம் என்கிறதெல்லாம் பொய்...!மனத்திருப்திக்காகவும்,ஜோதிடர்களின் பணத்திருப்திக்காகவும் இடையே ஒட்டிக்கொண்ட இணைப்புக்கள்தான் இவை..!

குட்டிக்கதை:-ஒரு ஆணும் பொண்ணும் திருமணம் செய்யும் போது எல்லா பொருத்தமும் இருக்கின்றது(அது என்னவோ சொல்லுவாங்க எழு பொருத்தம்,ஒன்பது பொருத்தம் என்று..நமக்கு அது எதுக்கு..?ரெண்டு பேருக்கும் நல்ல பொருத்தம்..) இவர்கள் திருமண வாழ்க்கையை ஐம்பது வருடத்துக்கு மேல் வாழ்வார்கள் என்று ஒரு தேர்ச்சி பெற்ற ஜோதிடரால் கூறப்பட்ட போதும்..ஏன் அவர்கள் அவ்வாறு வாழ முடியாது மணம் முடித்து ஐந்து வருடத்தில் ஏன் அந்த பொண்ணு இறந்துபோகணும்..?(இப்ப ஜோதிடர்கள் என்ன குற்றம் சொல்லப்போறாங்களோ தெரியலையோ..)இவை எல்லாமே நம்மை விட மேலே இருக்கின்ற ஒரு அதீத சக்தியினால் தீர்மானிக்கப்படுகின்றது.(நான் அந்த சக்தியை கடவுள் என்ற கோட்பாட்டுக்குள் கொண்டுவரவிரும்பவில்லை)அது எதுவாகவும் இருக்கட்டும்..(இப்ப முடிவா என்ன சொல்லுறன் என்றால்...நம்புறது எல்லாம் நடக்காது; நடக்குறது எல்லாவற்றையும் நம்ப முடியாது..?)

ஒரு காலத்து ஜோதிடம் கணித்தால் கணித்ததுதான்..அவ்வளவு துல்லியமாக இருக்கும்.ஆனால் இப்பொது எல்லாம் அவை சாத்தியப்படுவதில்லை..உண்மையான(பழமையான) ஜோதிடம் என்றும் பொய்க்காது...இந்தக்கால(நவீன) ஜோதிடம் நீண்ட காலத்துக்கு நிலைக்காது..!

ஜோதிடத்தை முற்றாக பொய் என்று சொல்லவரவில்லை..இப்போதைக்கு நடைமுறையில் இருக்கும் ஜோதிடத்தில் குறைகள்(பொய்) இருக்கின்றது என்றுதான் சொல்லுறேன்..!

அண்டம் ஒருவரின் விதியைத்தீர்மானிக்கிறது என்றால்... அதை மாற்றவே முடியாதே..!

Post Comment

No comments:

Post a Comment