Saturday, June 30, 2012

அஜித்தின் நிஜ ரசிகன் தனுஷா...சிம்புவா...?

முதலில் சிம்பு,தனிஷ் ஒவ்வொருவருக்கும் சின்னதாக ஒரு அறிமுகம் கொடுத்துவிட்டு பிரச்சனைக்குள் போவோம்...!பிறப்பு:-பெப்ரவரி 3, 1983

தொழில்:-நடிகர்,பின்னனிப்பாடகர்,திரைக்கதை எழுத்தாளர்,
                    இயக்குநர்,பாடலாசிரியர்

சினிமாவில் களமிறங்கியது:-1998-தற்போது (ஆனால் 2002 ஆம் ஆண்டு    விஜய டி. ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படதின் முலமாக நாயகனாக அறிமுகமானார்)


பிறப்பு:-பெப்ரவரி 25, 1984


தொழில்:-நடிகர்,பின்னனிப்பாடகர்,பாடலாசிரியர்

சினிமாவில்  களமிறங்கியது:- 2002 ஆம் ஆண்டு இவரது சகோதரர்   செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை திரைப்படதின் முலமாக நாயகனாக அறிமுகமானார்.

சிம்பு,தனுஷ் இருவருக்கும் நிறைய ஒற்றுமை இருக்கின்றது.இருவருக்கும் சினிமாவில் முழுமையான நுழைவாக 2002 ஆம் ஆண்டு திகழ்கின்றது.
இயக்குநர் பின்னணியின் மூலமாக அறிமுகமானவர்கள்.இருவரும் நல்ல பாடகர்கள் இவ்வாறாக ஒற்றுமைகள் பல இருந்தாலும்...!

என்னதான் நல்ல ஒற்றும்மை இருந்தாலும் இவங்க இரண்டு பேருக்கும் அப்பப்ப சின்ன சின்ன கொளுவல்கள் வரும்...நல்ல போட்டி இருக்கலாம் அதுக்காக தனுஷ் என்ன செய்தாலும் அதைபோல அல்லது அதுக்கு ஒருபடி மேலாக சிம்பு செய்யவேண்டும் என்று துடிப்பது எல்லாம் என்ன நியாயம்..?

கொஞ்சம் கலாய்ப்பமன்:-ஆரம்ப காலத்தில் ரெண்டு பேரும் நல்லாகதான் இருந்தாங்க எப்ப தனுஷுக்கு கல்யாணம் என்றது நடந்ததோ அத்தோட ஆரம்பித்ததுதான் இந்த தொல்லைகள்..


முதலில் ஐஸ்வர்யா(ரஜினினியின் மகள் தனுஷ்ஸின் மனைவி) காதலித்தது அப்போதைய லிட்டில் சூப்பர்ஸ்டார் சிலம்பரசன் என்கின்ற சிம்புவை தான்.ஆனால் காலக்கொடுமை விஜய டி. ராஜேந்தருக்கும் ரஜினிகாந்துக்கும் இடையில் இருந்த கருத்துவேறுபாடு காரணமாக சிம்பு  ஐஸ்வர்யா காதல் முடிவுக்கு வந்தது.அவசர அவசரமாக தனுஷுக்கு கல்யாணமாகியும் முடிந்தது.(இங்கதான் தலைவர் வம்பை வளர்த்து விடுகின்றார்...!)
என்னதான் இருந்தாலும் சிம்பு நீங்கதான் FIRST...தனுஷ் நீங்கதான் BEST..  (அப்பாடா ஒருமாதிரி சமாளித்துட்டேன்)

அன்றில் இருந்து தனுஷ்க்கும் சிம்புக்கும் ஒரு பலமான போட்டி..ஆரம்ப காலத்தில் சிம்புவின் படத்திற்க்கு கதாநாயகிகளாக நடித்த தம்(திவ்யா),வல்லவன்(நயன்தாரா) பிற்காலத்தில் பொல்லாதவன்(திவ்யா),யாரடி நீ மோகினி(நயன்தாரா) ஆக மாறியது.தனுஷ் WHY THIS KOLAVERI...என்றால் இதுக்கு போட்டியாக சிம்பு LOVE ANTHEM என்று ஆள் ஆளுக்கு பாட்டு பாடுறதிலையும் போட்டி போடா தொடங்கினார்கள். இது இப்டி இருக்க தனுஷின் சச்சினுக்கான ஒரு பாடலை YOU TUBE இல் இருந்து தூக்கும் அளவுக்கு அவர்களின் கோபங்களும்,போட்டிகளும்,பொறாமைகளும் தொடர்ந்தது.இதே சண்டை நாயகிகள் விடயத்திலும் இருவருக்குள்ளும் போட்டியை வளர்த்தது.இதை பார்த்த சிம்பு தானும் அவ்வாறு செய்ய எண்ணி சிக்கலில் சிக்கினார்.இவர் தனது "போடாபோடி" படத்திற்காக "திருடாதிருடி" படத்தின் நாயகி சாயாசிங் ஐ கேட்டபோது அவர் மறுத்துவிட்டார்..(அவர் மறுத்ததும் ஒரு கருத்து இருக்கு..எல்லாம் சிம்புவின் லீலைதான்)

ஐஸ்வர்யாக்கு பிறகு சிம்பு காதலித்தது நம்ம எல்லோருக்கும் தெரிந்த பரந்த மனதுக்கார நயன்தாராவை...!(பீடா சாபுடுறது என்றால் நம்ம சிம்புவைதான் கேட்கணும்...)


இவர்களின் காதலும் ஓய்விற்க்கு வர..தனுஷ் தொத்திக்கொண்டார்..(அதாவது தனது படத்தின் ரொம்ப நெருங்கிய நாயகியாக மாற்றினார்..)


என்னதான் இருந்தாலும் தனுஷ் உங்களுக்கு சிம்பு அளவுக்கு ஏலாது..(அவரை பாருங்க என்னமா..என்னமா...?...)

இவங்க சண்டை கதாநாயகிகளில் தொடங்கி முன்னணி நடிகர்களுக்கு ஆதரவுகொடுப்பது வரைக்கும் தொடருகின்றது..அதுதாங்க சிம்பு தல தல...என்றால் தனுஷும் தல தல என்கின்றார்.
(அப்பாடா தலைப்புக்கு வந்துட்டன்)

தலைப்புக்குள் போவமன்:-முதலில் சிம்பு பக்க நிஜத்தினை பார்ப்பமன்...!
இவர் ஆரம்ப காலத்து படங்களிலும் சரி..பின்னர் இவர் கலந்துகொண்ட விழாக்களிலும் சரி..தான் ரஜினியின் தீவிர ரசிகன் என்று சொன்னார்..எப்ப ஐஸ்வர்யா கைய விட்டு போச்சுதோ அன்றையோட ரஜினியின் புராணம் பாடுவதை சிம்பு நிறுத்திக்கொண்டார்..அதன் பின் தனது பக்க ஆயுதமாக தூக்கிகொண்ட ஆயுதம்தான் "தல" என்னும் போர்வாள்...மன்மதன் படத்தில் தல வாழ்க என்று கோஷம் போடுரத்தில் தொடக்கி..(சிலம்பாடம் படத்தில் தான்தான் சின்ன தல என்று சொல்லும் அளவிற்க்கு இவர் தல பக்தர்) இப்ப "வாலு" படத்தில் பெரிய கட்டவுட்டுக்கு பாலாபிசேகம் செய்வது வரைக்கும் இவரின் வம்புகள் தொடர்கின்றது...

சிம்பு மங்காத்தா வெளியான போது "ஓஸ்தி" படத்திற்க்கு மொட்டை போட்டுவிட்டு சென்னை வந்து மங்காத்தா படத்தின் முதற்காட்சியை பார்த்தது குறிப்பிடத்தக்கது..அதுமட்டுமா அடுத்தடுத்து ரெண்டு காட்சிகள் பார்த்தார்...(இடம் கிடைக்காமல் தான் நின்றுகொண்டு மங்காத்தா பார்த்ததாக ஒரு கதையும் விட்டார்...நாங்கள் அப்டியே நம்பீட்டம்..) இறுதியில் தன்னை ஒரு அஜித்தின் வலுவான யாராலும் அசைக்க முடியாத பெரும் ரசிகன் என்பதையும் உறுதி செய்துகொண்டார்..


இதனை உறுதிசெய்வது போல தலயும் இவரது பிறந்தநாளில் கலந்துகொண்டு சிறப்பித்தார்..(இது போதுமே சிம்புவிற்க்கு...)

பிரச்சனை:-இவர் சும்மா தன் வாயை கொடுத்து அப்பஅப்ப வம்பில மாடிக்கொள்வார்..ஆனால் இவர் ஒரு நல்ல மனுஷன் ஐயா..இவர் கதைக்குறத்தை குறைத்துவிட்டு செயலில் இறங்கினால் சிம்பு பக்கமும் சிலம்பாடம்தான்...(நீ எல்லாம் நல்லா வரணும்...சிம்பு...வரணும்...)

அடுத்து வேறையாரு இந்தியாவின் புருஸ் லீ "தனுஷ்"ஐ பற்றி பார்ப்பம்...!

இவர் ஆரம்பக்கலாமான 2003 ஆம் ஆண்டு வெளியான திருடாதிருடி படத்தில் "பார்த்த உடன் என்ல காதல் வர நான் என்ன அஜித்தா..."என்று ஒரு வரி வரும்..அப்பவே எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தலயிற்க்கு ரசிகரானார்..
ஐஸ்வர்யாவை திருமணம் செய்த பின்னும் (ரஜினியின் மருமகன் ஆனா பிறகும்) இவர் ஒரு போதும் ரஜினியை தூக்கிபிடித்தது இல்லை...

இவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் அஜித் பற்றி கேட்டால் அதற்க்கு உணர்வு பூர்வமாக பதில் அழித்து தான் ஒரு அஜித்தின் தீவிர ரசிகன் என்பதை அடிக்கடி உணர்த்திக்கொண்டு இருப்பார்..அண்மையில் மங்காத்தா வெளியான உடன் நடந்த நிகழ்சியில் இவர் "தல..தலதான்.." என்று சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் இவர் தலயில் எவ்வளவு மரியாதையை விருப்பம் வைத்திருக்கின்றார் என்பது புரிகின்றது...
(இவர் ரஜினியை பற்றி பேசாமல் அஜித்தை பற்றி பேசும்போதே என்ன தெரியுது...அடுத்த ரஜினி...அடுத்த சூப்பர்ஸ்டார்...இதை நான் வேறை சொல்லனுமா..அதுதான் உலகுக்கே தெரியுமே...!)

என்ன ஒரு விசியம்...சிம்பு வெளிப்படையாக தான் அஜித் ரசிகன் என்பதை காட்டிக்கொள்கின்றார் தனுஷ் மனதிற்க்குள் நிலை நிறுத்திகொள்கிறார்...
அஜித்தின் ஆதரவு என்றும் சிம்பு,தனுஷ் என்று வேறுபடாது ரெண்டு பேருக்கும் ஒன்றாகத்தான் இருக்கும்..தலயே அப்டி செய்யும் போது நாம் மட்டும் ஏன் சமூக வலைத்தளமான FACEBOOK இல் சிம்புவின் பேஜ்,குரூப் இனை மட்டும் ஆதரிக்கவேண்டும்.. (தனுஷும் தல..ரசிகன்தானே...இனி அவருக்கும் தல ரசிகர்களாகிய எங்களின் ஆதரவினை கொடுப்போம்...!) சினிமா உலகில் அஜித்திற்க்கு பல நடிகர்கள் ரசிகர்களாக இருக்கின்றார்கள் அதில் இவர்கள் ரெண்டுபேரும் வெளிப்படையாக தெரிகின்றார்கள்...!

எது எப்டியாக இருந்தாலும் முடிவாக சொல்கிறேன்...சிம்பு,தனுஷ் ரெண்டு பேரும் நல்ல திறமையான நடிகர்கள்...சிவாஜி,எம்.ஜி.ஆர் பிறகு ரஜினி,கமல் இப்ப அஜித்(தல),விஜய் அப்புறம் சிம்பு,தனுஷ் இந்த இளமையான அடுத்த தலைமுறை அஜித்தின் ரசிகர்களாக இருப்பதில் இருந்து தெரிகின்றது தல ஒரு சொல்லு அல்ல அது ஒரு சொர்க்கம் என்று...!

சிம்பு,தனுஷ் இருவருமே அஜித்தின் ரசிகர்கள்தான்...இது மாற்ற முடியாதது...அடுத்த தலைமுறை அஜித்தைதான் பின் பற்றுகின்றது என்பதும்..உண்மை...பெருமை...!

              "அடுத்த தலைமுறை தலயின் தலைமுறை...!"

Post Comment

7 comments:

 1. super nanba .........thats why this is
  THALA nadu!!

  ReplyDelete
  Replies
  1. athaan nanba ithun ini thala naadu than...thala thala thaan...:)

   Delete
 2. correct a sonnaay nanbaa..simbu,dhanush ku appaal ippa irukkira perumbaalaana actors ku ajith i thaan pidikkum..

  ReplyDelete
  Replies
  1. "அடுத்த தலைமுறை தலயின் தலைமுறை...!" ithu maatra mudiyaatha onru...thala thalathaan...:)

   Delete
 3. Ammooooooooooooooooooooooooooooo Thala rasigana iruppathula evlo peruma da enakku

  ReplyDelete
 4. THALA AJITH NA MASSS...VIJAY FUCKSSSSSSSSSSSSSSS

  ReplyDelete
  Replies
  1. நாம அஜித்தின் தீவிர ரசிகர்களாக இருப்போம்...ஆனால் மற்ற எந்த நடிகர்களையும் தூற்ற வேண்டாமே...!!! என்ன சகோ நான் சொல்லுரது!!!

   Delete