Thursday, June 7, 2012

நிலா ரசிகை காதல்கொள்கிறாள்...


இது ஒரு:-நியத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் எனது நண்பன் ஒருவனின் கண்ணீர கலந்த காதல் கதை...!

அவள் நிலவின் தீவிர ரசிகை இருமுறை காதலில் தோல்விகண்டவள் அன்புக்காக ஏங்கும் குழந்தை;இணையத்தளத்தில் ஒருவனை சந்திகின்றாள் ஒரு கிழமைக்கும் மேலாக அவனுடனேயே பேசுகின்றாள், அவன் புகைப்படம் இருந்தும் ஏனோ அவள் அதனை பார்க்கவில்லை; அவள் மனதும் அதை பார்க்க தூண்டவில்லை..!


                                                     
ஒரு இரவில் மழையின் ஆட்சி நடந்துகொண்டிருக்கின்றது மின்னல்களின் அணிவகுப்பு அரங்கேறிகொண்டிருக்கின்றது. ஜன்னலோடு உறவாடிக்கொண்டிருந்த நிலவை ரசித்தபடியே இணையத்தளத்திற்குள் நுழைந்தவள் அவனுடைய குறுந்தகவல் வந்து சேரவே முதல் முறையாக அவன் புகைப்படத்தை பார்க்கலாம் என எண்ணி அப்பகுதிக்குள் பிரவேசிக்கின்றாள் அப்போது நேரம் இரவு 11.00 மணி..!

புகைப்படத்தை பார்த்தவள் ஒரு கணம் தன் இமைகளுக்கு இமைக்கவே தடை விதிக்கின்றாள் தன்னை மறந்துவிட்டால் போலும் இப்படி நிகழ காரணம் ?

ம்ம்ம்... கனவில் தன் கற்பனையில்,மனத்திரையில் நாள்தோறும் ரசித்து செதுக்கிவைத்த தன் கனவுக்காதலன் இவனேதான் தன் பஞ்சுக்கைகளை கணணித்திரையில் வைத்து அவன் வதனத்தை தொட்டுப்பார்கிறாள் 10 நிமிடத்திற்கு மேலாகிவிட்டது, உறைபனியாய் இருந்தவள் மின்னலைப்போல் ஒரு நியாபகம் தன் நினைவை எட்ட குறுந்தகவல்களின் வருகையை பார்க்கிறாள் அது கானல்நீராகிவிடவே..; தன் பிஞ்சு விரல்களால் ஒரு தகவலை அவனுக்கு பதிவுசெய்கிறாள், அதில் "இதுவரை காணாத உன் புகைப்படத்தை இன்று பார்த்தது தவறு என்று என் உள்ளம் எண்ணுகின்றது " என எழுதப்பட்டிருந்தது.காரணம் அவள் அவன் மேல் காதல் கொள்கின்றாள்; தகவலும் சென்றாகிவிட்டது அப்போது நேரம் அதிகாலை 1.00 மணி..!

மேகத்தின் போர்வையில் ஆரவாரமின்றி உறங்கும் நிலவைப்போல் தானும் உறங்க செல்கின்றாள் ஆனாலும் அவள் மின்னல் கண்களும், கண்ணாடி இதயமும் என்னவோ அவனையே நினைத்துக்கொண்டிருக்கின்றது.பதில் ஏதும் அனுப்பியிருப்பானோ..? இல்லாவிட்டால்..? என பலவாறு சிந்திக்கின்றாள். விடியும் வரை காத்திருக்க அவள் மனம் விடவில்லை; எழுந்து ஜன்னலோரம் சென்றவள் அமைதியான தென்றல் தலைகோத நிலவிடம் நலம் விசாரிக்கின்றாள்.

 
பொறுமை இழந்தவளாய் மீண்டும் கணணியின் முன் அமர்கிறாள்..!.
ஆச்சர்யம் முன்னரை விட குறுந்தகவல்களின் வரவு அதிகமாயிருந்ததை எண்ணி அவள் மனம் மகிழ்கின்றது; அமைதி அவளை சூழ்ந்துகொல்கின்றது.
மெதுவாய் அவனிடம் பேச்சுக்கொடுத்தவள் அவன் ராசி,நட்சத்திரத்தை கேட்டு திருமணபொருத்தம் பார்க்கின்றாள். கரணம் இரு மனம் பொருந்தினாலும் ஜாதகம் எனும் காலனை வரவழைத்து காதலை பிரிக்கும் உலகம் இது. அதுவும் பொருந்தியது; இனி அவள் மகிழ்ச்சியை சொல்லவா.....வேண்டும். அந்த நடு இரவில் நிலவை விட அழகாக பிரகாசிக்கின்றது அவள் வதனம்.

அவன் கடல்கடந்த வாழ்கை வாழ்பவன், காதலின் வலி அறிந்தவன்; குறும்புகளின் குழந்தையாக நகைச்சுவையாக பேசக்கூடியவன்; எப்போதும் அவன் இதழ்களில் சிரிப்பு குடிகொண்டிருக்கும். இணையத்தளத்தில் சந்தித்தவனோ அவளின் குரலை கேட்க ஆசைபடுகின்றான்..!


அவள் தொலைபேசி சிணுங்கும் நேரம் அதிகாலை 4.00.மணி
ஹலோ...!!! சொல்லி பொதுவான தலைப்பில் பேசுகின்றான். குடும்பத்தினரை பற்றி விசாரித்தவன் தந்தையை பற்றி கேட்டபோது ரகசியமாய் தலையணை நனைக்கின்றாள்; தொலைபேசி துண்டிக்கப்பட்டுவிட்டது.

அமைதியாய் கட்டிளின்மேல் அமர்ந்து சிந்திக்கின்றாள். அவள் மனம் அவனையே நினைத்துக்கொண்டிருக்கின்றது இறுதியாக ஒரு முடிவிற்கு வருகின்றாள். இது காதலாகவே இருந்தாலும் அவள் அவனிடம் சொல்லப்போவதில்லை; காரணம் தன் முதல் காதலியை மறந்து அவன் இவளை ஏற்றுகொள்ளுவான் என்பதில் இவளுக்கு நம்பிக்கை இல்லை. அவனிடம் இதை சொல்லி அவன் நட்பை இழந்துவிடவும் அவள் தயாராக இல்லை; அதை விடவும் முக்கிய காரணம் ஒன்றுள்ளது இருமுறை தோல்விகண்டும் மீண்டும் அன்பிற்க்காய் ஏங்கும் இது போன்ற உள்ளங்களுக்கு இந்த சமுதாயம் வேறு பெயர் கொடுப்பதனால்...!!!"ஆமாம்...காதலின் வலியை விடவும் சமூகம் கொடுக்கும் வலி வலிமையானதே..."

இவளின் காதலும் சொல்லப்படாத காதலின் பட்டியலில் இறுதியாய் இணையப்போகின்றது.....!!!

???


RamJeyamKarthi(RJK) இன் நியவாழ்வின் நிழல்...


*இனிவரும் மாதங்களில் ஆறாம் திகதி ஒரு உண்மை காதல் கதையினை எழுத எண்ணி உள்ளேன்...*

Post Comment

2 comments:

  1. @Ram jeyamkarthi : தம்பி இந்த ஃபீலிங்க் முதல் காதலுக்கே வந்திருக்க வேண்டும். அதை விட்டு ஏற்கனவே இரண்டு முறை தன் காதலை தவறவிட்ட ஒரு பெண்ணிடம் ,, அவளுக்கு அனுதாபத்தை தெரிவிப்பது போல் இரவு பகலா கடலை போட்டதால் வந்த வினை : அத்துடன் இது நண்பனின் சோக கதை இல்லை நண்பியின் சோக கதை : ராம் -நீ எல்லாம் நல்லா வருவாடா ,,,,,,,

    ReplyDelete
    Replies
    1. சஜீவன் உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி...ராம் நல்லாவருவான் என்று எனக்கு தெரியும்...யாருக்குத்தான் காதல் வரவில்லை...ஏன் முதல் காதலித்த பெண்ணை காதலிக்க கூடாதா...?காதலி செய்வது என்றால் உங்கள் மொழியில் கடலை போடுவது என்றுதான் அர்த்தமோ...அப்ப நீங்களும் அப்டித்தான் செய்தீங்களா..?இதில் ஒரு உண்மை உண்மை...இருக்கிறது ஆனால் ஒரு வெளிப்படையான பொய்யும் இருக்கு...அதைத்தான் நீங்கள் கேள்வியாக கேட்டீங்கள்...

      Delete