Thursday, July 26, 2012

காதல் ஜோடி...காதல் ஜோடி...கேட்டியா..? அவங்க கடற்கரையில கட்டிப்பிடித்ததை பார்த்தியா...?

கனகாலமாக "கிளுகிளுப்பாக" ஒன்றும் எழுதவில்லை என்பதனாலும்,என் மனதுக்குள் நீண்ட நாட்களாக இருந்த ஒரு விடயத்தை பகிரங்கமாக எந்த ஒழிவு மறைவும் இல்லாமல் உங்களுடன் பகிர்ந்துகொள்ள முயற்சிக்கின்றோம்..!(நானும் என் நண்பன் Hamprishan Defender..)

கவனத்திற்க்கு:-இந்த பதிப்பு வயது??? வந்தவர்களுக்கு மட்டும்..!(இந்த பதிப்பை பெண்கள் வாசிக்கும்போது உங்களுக்கு இது தகாததாக இருந்தால் ஒதுங்கிக்கொள்ளவும்..இந்த பதிப்பை எழுதியே ஆக வேண்டிய கட்டாயத்தில் நான்..தம் இருந்தா வாசித்து முடியுங்க..!)

Post Comment

Tuesday, July 24, 2012

தல ரசிகனாக இருக்கிறதுக்கு எந்த தகுதியும் தேவையில்லை ஆனால் தல ரசிகனுக்கு எதிரியாக இருக்கிறதுக்கு தகுதி வேணும்டா...!

போதுமான அளவு அஜித்தின் புகழ் பாடிவிட்டதால் இந்தமுறை நேரடியாக பஞ்சாயத்துக்கு போவோம்...! இங்கு பகிர்ந்து இருப்பவை எல்லா விஜய் ரசிகர்களுக்கும் பொருந்தாது.(எங்கையாவது ஒரு சில நல்ல??? விஜய் ரசிகர்கள் இருந்தால்; அவர்கள் மனதை இந்த பதிப்பு புண்படுத்தி இருந்தால் பெரிய ஒரு மன்னிப்பை கேட்டுக்கொண்டு தில்லா போவம் பில்லா பத்தின பதிப்புக்குள்...!)

Post Comment

Sunday, July 22, 2012

இனி ஒரு முறை இலங்கையில் இனப்பிரச்சனை தலை தூக்குமா...?

நீண்ட காலங்களாக வித்தியாசமான எந்த பதிப்பும் எழுதவில்லை என்பதனாலும்; என் நண்பன் Aruran Thirumoolanathan இன் விருப்பத்திற்க்கு இணங்க இந்த பதிப்பினை எழுதுகின்றேன்...!
சமூக அக்கறை கருதி எழுதி கிழிக்கிற அளவுக்கு நான் இன்னும் வளரலங்க..சும்மா ஒரு சேன்ஞ்(Change)க்கு இந்த பதிப்பை எழுதுகின்றேன்...!
இந்த பதிப்பு யாரையும் புண்படுத்தும் நோக்கத்திலோ, இழிவுபடுத்தும் நோக்கத்திலோ எழுதப்படவில்லை என்பதை இத்தால் அனைவருக்கும் அறியத்தருகின்றேன்..!
சரி மேட்டர்(Matter)க்குள் போவமன்..!

Post Comment

Wednesday, July 18, 2012

நடிகர்களின்(ரஜினி,அஜித்,விஜய்) கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது சரியா...பிழையா...?

எனக்கும் எனது ஸ்கூலில் படித்த ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் அடிப்படையிலேயே இந்த பதிப்பினை எழுதும் யோசனை வந்தது..!அவர் சொன்ன எந்த கருத்துகளிலும் எனக்கு சற்றும் உடன்பாடு இல்லை..!சரி எது எப்படியோ இப்ப நாங்கள் பதிப்பிற்க்குள் போவோம்..!

இந்த பிரச்சனை முன்னம் இருந்தே பரவலாக கதைக்கப்பட்டு வந்த ஒரு விடையமாகும்.அதாவது புத்திமதி, பகுத்தறிவு, கம்மியூனிசம் பேசும் ஆயிரக்கணக்கான அதிபுத்திசாலிகள்(தங்களை தங்களே நினைத்து கொள்பவர்கள்) மற்றவர்கள் எல்லோரையும் அடிமுட்டாள்கள் என்று நினைத்துக்கொண்டு ஒரு சில கேள்விகளை...கேள்விகளை கேட்டா..பரவயில்லை சமூக வலைத்தளங்களில் தங்களை மற்றவர்கள் சமூக அக்கறை உள்ளவர் என்று நினைக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் போடும் அலப்பரைக்கு அளவே இல்லை...!எதோ அப்படி STATUS போடுபவர்கள் மட்டும்தான் நல்லவர்கள் என்றும் மற்றவர்கள் எல்லோரும் நாசமாய்போனவர்கள் என்றும் சமுதாயம் நினைக்கும் என்று ஒரு நப்பாசைதான் அவர்களுக்கு..! 

Post Comment

Monday, July 16, 2012

யாராலும் கணிக்க முடியாதவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன்...!

முக்கியமான கருத்து:-இந்த பதிப்பில் வரும் எந்த ஒரு சொல்லும் திரு.வே.பிரபாகரனை பற்றி என்னால் எழுதப்பட்டது அல்ல...நான் எனது மேற்படிப்பிற்காக செய்த ஒரு ஆங்கில BOOK REPORT இன் தமிழ் மொழிபெயர்ப்பே இந்த பதிப்பாகும்..இதனை வாசித்த பின் இறுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு விடை கூறவும்...!

Post Comment

Thursday, July 12, 2012

டேய் என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுடா...!

இதை கட்டாயம் சொல்லியே ஆகணும்:-நான் அஜித்(தல)யின் தீவிர ரசிகன், பக்தன் என்றும் சொல்லலாம்.முதல் முதலாக எழுதும் திரைப்பட விமர்சனமும் இதுதான்.எல்லாவற்றையும் தலயுடன் தொடங்க வேண்டும் என்பதற்காக இவ்வளவு நாள் காத்திருந்தேன்.தலயின் ரசிகன் என்பதையும் தாண்டி நடுநிலையாக இருந்து படத்தினை விமர்சிக்க முயற்சிக்கின்றேன்...! சரி விமர்சனத்துக்கும் போவமன்...!

படத்தினை இயக்குநர்,நடிகர்,நடிகைகள் மற்றும் பலரை பற்றி எல்லோரும் போதிய அளவு விமர்சித்ததன் காரணமாக நேரடியாக நான் விமர்சனத்திற்கே போவோம்.."தல ஆட்டம் இப்ப இருந்து ஆரம்பம்...பில்லா டேவிட் பில்லா...கதையின் கலக்கல் நாயகன்..."

Post Comment

Wednesday, July 11, 2012

சிங்கள Girls VS தமிழ் Girls...!

நீண்ட நாட்களாக நான் கண்ட, கேள்விப்பட்ட விடையங்களின் கோர்வையாக மட்டும் இல்லாமல் கொஞ்சம் நியத்தின் நிழல்களையும் அடிப்படையாக கொண்டு எழுதப்படும் பதிப்பாக இது இருக்கும்(அதனால் நீங்கள் அடையும் மன வருத்தத்திற்க்கு நான் பொறுப்பாளி அல்ல...!)
வெறுமனையே இரண்டு கலாச்சாரத்தையும் எதிர் எதிர் கலாச்சாரமாக பார்க்காமல்; ஒன்றின் அடிப்படையில் இருந்து மற்றையது தோன்றியதாக கொண்டு இந்த பதிப்பிற்க்குள் செல்வோம்...!

முதலாவதாக கலாச்சாரம் என்றால் என்ன என்று பார்ப்போம்:-ஆரம்ப காலத்தில் உடைகள் எதுவும் இல்லாமல் இருந்த காலம் தொடக்கம் இப்போது விதம் விதமான உடைகள் வரைக்கும் பரந்து விரிந்து நிற்கின்றது கலாச்சாரம்...!கலாச்சாரம் என்பது மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்டது.ஒவ்வொரு இனத்தவரினதும் மூதாதையர் வகுத்து கொடுத்த வழிமுறைகளை பின்பற்றியதால் தொடர்ந்ததே இந்த கலாச்சாரம்.இது ஒவ்வொரு இனத்தவருக்கும் வேறுபாடும்.(இதனால்தான் நாங்கள் பொதுவாக வெள்ளையர்களை பற்றி பேசும் போது அவர்களை நியாயப்படுத்துவதற்காக "அது அவர்களின் கலாச்சாரம் என்று சொல்லிக்கொல்கின்றோம்...!")

கலாச்சாரம் என்பது தோற்றம் பெற்றதோ..?இல்லை நாமாக தோற்றுவித்ததோ..? அது எதுவாக இருக்கட்டும் ஒரு இனத்தின் தனித்தன்மையை பேணுவதற்க்கு கலாச்சாரம் என்பது முக்கியம்.அது மட்டும் இல்லை ஒரு இனத்தினை சமுதாயத்தில் நிலை நிறுத்துவதற்க்கும், அதன் சிறப்புக்களை எடுத்துக்கூறுவதற்க்கும் கலாச்சாரம் என்பது முக்கியமானதாக அமைகின்றது.இதிலும் ஒரு கலாச்சாரத்திற்க்கு நிர்ணயத்தை,அங்கீகாரத்தை கொடுப்பதற்க்கு பெண்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கின்றது.இது எந்த இனமாக இருந்தாலும் பெண்களின் ஈடுபாடு முக்கியமானதாகும்.
ஏனெனில் ஒரு சமுதாயம் பெண்ணின் கலாச்சார வெளிப்பாடில் இருந்தே அந்த இனத்தினை மட்டுக்கட்டுகின்றது.

சிங்கள சமுதாயம் வணங்குவது இந்துவின் சார்பாலர்களான கடவுல்களையே??? ஆகும்.அதனால் இருவரினது கலாச்சாரமும் ஒன்றாக இருக்கும் என்று இல்லை.இரண்டும் முற்றிலும் வேறுபட்டது ஆனால் ஒன்றுக்கு ஒன்று எதிரானது அல்ல.

கலாச்சாரத்தில் இரு சாராரும்:-இருவரது கலாச்சாரமும் அருமையானது. அனுபவிக்க வேண்டியது.இருந்தும் தமிழர் நம் பண்பாட்டின் படி சேலை,வேஷ்டி என்று நமது பாரம்பரியம்(உடைகளில் மட்டும் இல்லாது..?) நீண்டுகொண்டு போனாலும் சிங்களவர்களினது பண்பாடானது அவர்களின் வசதிக்கு ஏற்ப அமைந்ததாக இருக்கின்றது.அவர்கள் சேலை கட்டும் விதமே தனி; அவ்வளோ அருமையாக இருக்கும்."இப்ப எல்லாம் எங்கைங்க நம்ம தமிழ் பொண்ணுங்க சேலை கட்டுறாங்க..!"என்று சலித்துகொள்பவர்களும் உள்ளனர்.அரிதாகிக்கொண்டு செல்கின்றது சேலை கட்டும் பண்பாடு..!

கலாச்சாரம் என்பது வெறுமனையே உடையுடன் நின்றுவிடாமல் சமூக நடத்தையிலும் செல்வாக்கு செலுத்துகின்றது என்பதே உண்மை.(இந்தப் பக்கம் நான் சிங்கள பொண்ணுங்க பக்கம்..) ஒரு சமுதாயத்துடன் எவ்வாறு பழக வேண்டும் என்பது சிங்கள பெண்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு சம்பவம்:-பஸ் இல் பிரயாணம் செய்யும்போது இருவர் இருக்க கூடிய ஆசனத்தில் ஒரு பெண் மட்டும் இருக்கின்றாள்.முதலில் அந்த பெண்ணை தமிழ் பெண்ணாக நோக்குவோம்-இப்ப அவ பக்கத்தில ஒரு பையன் போய் இருந்தால் ஏதோ அவன் அவளை பித்து சாப்பிட்டுடுவான் போலவே பார்க்குறது இல்லாடில் அந்த பெண் அந்த ஆசனத்தில் இருந்து எழுந்து ஏதோ உத்தம பத்தினி போல நடித்துக்கொள்வது என்று தங்களது நடிப்பு திறமையை பஸ்சிலும் தமிழ் பெண்கள் தொடர்கின்றனர்.(நீங்க பஸ்ல மட்டும்தான் இப்டி நடிப்பீங்களா..?இல்லை இல்லை...)
அது ஒரு சிங்கள பொண்ணாக நோக்கினால்-அவள் பக்கத்தில் வந்து யார் இருந்தாலும் எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல் இருப்பாள்.அந்த இடத்தில்தான் சமுதாயம் ஏதோ தமிழ் பெண் நல்லவள் என்றும் சிங்கள பெண் தெரியாத பையனின் பக்கத்தில் இருப்பதால் அவளை கெட்டவள் என்றும் சமுதாயம் இடை போட்டுகொள்கின்றது.இது முற்றிலும் மாறுபட வேண்டும்.அந்த இடத்தில் அவ்வாறு நடிக்க வேண்டிய காரணம் ஏன் என்று எனக்கு தெரியவில்லை.அப்டி நடித்துதான் நல்லவள் என்று காட்ட வேண்டும் என்றால் நீங்க எல்லாம் சினிமா நடிக்கவே போய் இருக்கலாமே..?நல்லா நடிக்குறீங்கடி...!

தனியார் கல்வி நிலையங்கள் தொடங்கி பல்கலைக்கழகம் வரை இந்த கூத்து தொடர்கின்றது.தமிழ் பெண்கள் நடிப்பின் உச்சக்கட்டங்கலாகவே இருக்கின்றனர்.நட்பு என்று வந்துவிட்டால் அதுக்கு ஆண்பால்,பெண்பால் கிடையாது..தெரியாது.இதுதான் நட்பின் வரைவிலக்கணம்.ஆனால் அந்த இடத்திலும் தமிழ் பெண்கள் பின்தங்கியே இருக்கின்றார்கள்.(பாரதி சொன்ன புதுமை பெண்ணை காணவில்லையே...!)ஏன் இவர்கள் பின்தங்கி இருக்க வேண்டும்..?எனத்திற்காக பயப்பட வேண்டும்..?என்னத்திற்காக நடிக்க வேண்டும்..?எல்லாமே சிதம்பர ரகசியம் போல இருக்கிறது...!
இல்லை தெரியாமல் தான் கேட்கின்றேன்..அப்டி நீங்கள் கதைத்தால் என்ன நடக்க போகுது..?(இந்த கேள்விக்கு ஒரு நல்ல பதில் இருக்கு ஆனால் இங்கு அதை குறிப்பிடுவது சரியாக படவில்லை...அதனால் விட்டு விடலாம்..)

எல்லோருக்கும் பிடித்த விருப்பம் எனக்கு மட்டும் வெறுத்துபோன(அலுத்துப்போன) விடயம் அதுதானுங்க காதலை அடிப்படையாக கொண்டு நோக்குவோம்:-ஒரு தமிழ் பெண்ணிடம் ஒரு ஆண் அவளை கண்டவுடன் காதலை சொன்னால் ஏதோ அவன் அவளை கற்பழித்ததுபோலவே றியாக்ஷன் கொடுக்கிறது..ஏன் ஏன் இந்த ஓவர் ஆக்டிங்..ஓஒ இப்ப பெண்கள் தரப்பில் இருந்து சொல்லலாம் கண்டவுடன் காதல் சொல்பவனை எப்டி காதலிப்பது என்று எப்டி நம்புவது என்று..அப்ப நான் கேட்கின்றேன்.நீங்கள் தீர விசாரித்து காதலித்த ஆளையா இப்பவும் காதலிக்குறீங்க.அப்ப அந்த காதல் ஏன் முறிவுக்கு வந்தது..?அதுக்கு பதில் சொல்வதற்க்கு இடையில் இன்னொரு காதலனை பிடித்து(இல்லை இல்லை மாற்றி விடுவார்கள்..காதலங்களின் கவனத்திற்க்கு..!)

இதுவே ஒரு சிங்கள பெண்ணிடம் காதலை சொன்னால் அவளுக்கு பிடித்திருந்தால் பிடித்திருக்கு இல்லை என்றால் முடியாது என்று முகத்துக்கு நேர் சொல்லுவாளுகள்.இப்டி நீங்க செய்தால் இந்த பயபுள்ளயள் தங்களது வேலைய ஒழுங்கா பார்த்திட்டு போவாங்கள தானே.(அவன் அவன் ஒழுங்கா படித்து நால்லா வருவான்..வந்திருப்பான்..)அதை விட்டுட்டு பத்து பதினைந்து வருடமாக அலைய விடுறது(அப்டி அலைய விட்டு பார்க்கிறதில என்ன தான் சுகம் இருக்கோ தெரியலை..)

காதலும்,கல்யாணமும்,சுகமும்,சந்தோசமும் இருவருக்கும் ஒன்றுதான்.இருந்தாலும் இடைப்பட்ட கால கட்டத்தில் ஒரு சாரார் மட்டும் நடிப்பதுபோல தெரிகின்றது.(பிறப்பும் இறப்பும் நிட்சயம் இடையில் ஏன் நாடகம்??)சொல்லுங்கம்மா...சொல்லுங்க..?

கடைசியாக கல்யாணம்:-சந்தோசமான வாழ்க்கை,வெள்ளையர்களுக்கு இணையான வாழ்கையை வாழ்பவர்கள் சிங்களவர்கள்.எனக்கு அவர்களின் கல்யாண வாழ்க்கையில் உடன்பாடு இல்லை அதனால் அதனை நான் விமர்சிக்க விரும்பவில்லை.தமிழர்களது பெருமையே திருமண வாழ்வில்தான் இருக்கிறது அது இப்போதைய கால கட்டங்களில் பெரும்பாலாக காணக்கிடைக்கவில்லை.(இது பெண்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விடயம் இல்லை என்பதால் இதனை விட்டு விடுவோம்)இது இருவருக்கும் பொதுவானது என்று வைத்துக்கொள்வோம்.இதுலும் அந்த வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து வாழ்பவர்கள் சிங்களவர்கே...!

வாழவேண்டும் என்று வாழ்பவர்கள் தமிழ் பெண்கள்; வாழ்க்கை வாழ்வதற்கே என்று வாழ்பவர்கள் சிங்கள பெண்கள்...!

Post Comment

Thursday, July 5, 2012

சந்தானம் காமடியனா ஹீரோவா...?

அசத்தலான தலைப்பு(க்குள்) செல்வதற்க்கு முன்னம் இளைஞர்களின் தலைவர், நகைச்சுவை திலகம் "சந்தானம்" அவர்களை பற்றி கொஞ்சம் அலசுவம்...!

Post Comment