Thursday, July 5, 2012

சந்தானம் காமடியனா ஹீரோவா...?

அசத்தலான தலைப்பு(க்குள்) செல்வதற்க்கு முன்னம் இளைஞர்களின் தலைவர், நகைச்சுவை திலகம் "சந்தானம்" அவர்களை பற்றி கொஞ்சம் அலசுவம்...!குடும்ப பின்புலம்:-இவர் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில்தான் பிறந்து தனது வாழ்க்கையை ஆரம்பித்தார்.

பிறப்பு:-21 January 1980

கல்வி:-இவர் ஒரு mechanical engineer(திறமையாக படிக்க கூடியவர்,சினிமா துறையில் ஆர்வம இருப்பதனால் சினிமாவில் இறங்கி விட்டார்)

சினிமாவில் காலடி:-சிம்புவின் இயக்கத்தில் வெளிவந்த "மன்மதன்" படத்தில் இவர் அறிமுகமானார்.(இது தவிர இவர் சினிமாவிற்க்கு வருவதற்க்கு முன் விஜய் தொலைக்காட்சியில் "லொள்ளு சபா" என்ற நிகழ்ச்சியில் முன்னணி நடிகனாக இருந்தார்)

இப்ப தமிழ் சினிமாவில் "பிஸி ஓ பிஸி" என்று இருக்கும் நட்சத்திரம் யார்?
இப்ப நீங்கள் நினைக்கலாம் அது ஒரு முன்னணி நடிகராக இருக்கலாம் அல்லது முன்னணி நடிகையாக இருக்கலாம் என்று...அப்படி நினைத்தால் அது தப்பு கண்ணா...!இன்று தமிழ் சினிமாவில் பிஸியாக இருப்பவர் காமெடி நடிகர் சந்தானம்தான்!
கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன், சிம்புவின் வேட்டை மன்னன், போடா போடி, விக்ரம்மின் தாண்டவம் எனக் கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கும் சந்தானம் எப்போதும் ஷூட்டிங் ஷூட்டிங் என அலைந்து கொண்டிருக்கிறார்.இது தவிர அண்மையில் சகுனி என்று ஒரு படத்தில் நடித்து காமடியில் பட்டையை கிளப்பி இருப்பார்..! 
முன்னணி நடிகர்கள் தங்கள் படங்களில் சந்தானம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்(அதிலும் குறிப்பாக கார்த்தி,விஜய்,ஜீவா...போன்றோரை குறிப்பிட்டு சொல்லலாம்)தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அதுவே பாதுகாப்பானது என நினைக்கிறார்கள்(இப்ப எல்லாம் நடிகர்களை நம்பி படம் பண்ணுறதை விட சந்தானத்தை நம்பி படம் பண்ணலாம் என்று நினைக்கின்றார்கள் போல). ரசிகர்களும் சந்தானம் இருந்தால் தப்பித்தோம் என நம்புகிறார்கள்(இல்லாடில் இப்ப எல்லாம் நடிகர்கள்(அவர்கள்) பார்க்குற போலயா நடிக்கின்றார்கள்..அதனால்தான் சந்தானம் இருந்தாலாவது குடுத்த காசுக்கு நஷ்டம் இல்லாமல் பார்த்துவிட்டு வரலாம் என்று ரசிகர்கள் நினைக்கின்றார்கள் போல)
தமிழ்த் திரையுலகில் எப்போதுமே நகைச்சுவை நடிகர்களுக்குத் தனி இடம் உண்டு.நாகேஷ், தங்கவேலு, சுருளிராஜன், கவுண்டமணி, வடிவேலு, விவேக் என நட்சத்திர அந்தஸ்த்திற்கும் காமெடியன்கள் உயர்ந்ததுண்டு.இந்தப் பட்டியலில் சந்தானம் சேர்ந்திருக்கிறார்(இதிலும் சந்தானத்துக்கு என்று தனி இடம் இருக்கு என்றால் அது மிகை ஆகாது)
இளம் வயதிலேயே சந்தானம் விஸ்வரூப வளர்ச்சியைப் பெற்றிருக்கிறார்(விடா முயற்சி விஸ்பரூப வெற்றி...!) செம யூத்தாக இருப்பதே அவருக்குச் சாதகம் என்றுகூடச் சொல்லலாம். தமிழ்ப் படங்களைப் பொருத்தவரை காமெடியன்கள் எப்போதுமே நாயகர்களின் நல்ல நண்பர்கள். நாயகர்கள் என்னதான் சாகசம் செய்பவர்களாக இருந்தாலும்(என்னதான் பறந்து பறந்து அடிக்கின்றவராக இருந்தாலும்..)அவர்களோடு சுற்றவும் ஐடியா கொடுக்கவும் காமெடியன்கள் துணை தேவை. செம கலக்கு கலக்கின நாயகர்களான எம்.ஜி.ஆர்.கூட இதற்கு விதிவிலக்கல்ல.ரஜினி, கமலும் அப்படியே.
இப்படிப்பட்ட நண்பனாக வருவதற்கு சந்தானம் மிகவும் பொருத்தமானவராக இருக்கிறார். சில காமடியன்களை ஹீரோவின் மாமா அல்லது சித்தப்பாவாகத்தான் காட்ட வேண்டியிருக்கும்.சந்தானத்தின் கல்லூரிப் பையன் போன்ற தோற்றமும் பக்கத்து வீட்டுப் பையன் போன்ற நட்பான முகமும் அவரை நாயகர்களின் நண்பனாக்கியிருக்கின்றன(உதாரணமாக சொல்லப்போனால் நாயகன் 'கோழி' பிடிக்கின்ற படத்தில் நாயகனிடம் திருடுபவன் போலவும் காட்டலாம்..) ஏன்னா அவ்வளவத்துக்கு நவரசமும் பொருந்திய முகம் அது...!
நல்லா சொல்லிக்குடுங்க அந்த மர மண்டைக்கு...!
கவுண்டமணி பாணியைச் சற்றே மெருகேற்றி இவர் பேசும் சரவெடிப் பேச்சும், காட்சிகளுக்கேற்ற பஞ்ச் லைன்களும் காமெடியில் இவரைச் சக்கை போடு போட வைத்துள்ளன(இவரை கவுண்டரின் காமடியை பின்பற்றுபவர் என்று சொல்லாமல் கவுண்டரின் காமடியை இன்னும் ரசிகர்கள் மறக்காமல் இருப்பதற்க்கு உதவுபவர் என்று சொல்லலாம்...!)
சமீப காலங்களில் மதுரை போன்ற பகுதிகளில் இருந்தே காமெடியன்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னைவாசியான சந்தானம் தோற்றத்திலும் வசனங்களிலும் நவீனத்தன்மையைக் கொண்டிருக்கிறார்(அதிலும் சென்னையில் மக்கள் கதைக்கும் நையாண்டி கதைகளையும் சென்னை பேச்சு வழக்கு முறையையும் சந்தானம் கையாளும் முறைக்கு ஒரு தனி மதிப்பு இருக்கின்றது அதுதான் அவரின் தனித்த்தன்மையின் சிறப்பு என்றும் சொல்லலாம்).
அதற்கேற்ப சந்தானம் அஜித்(தல),விஜய்,சூர்யா, ஜீவா, தனுஷ், ஜெயம் ரவி என எல்லா முன்னணி நாயகர்களோடும் நடித்துவிட்டார். எந்திரனில் சூப்பர் ஸ்டாரையும் கலாய்த்துவிட்டார்(இல்லை இல்லை தலைவரை யாரவது கலாய்க்க முடியுமா..?)விநியோகிஸ்தர்களும் சந்தானத்தைக் கேட்கிறார்கள். பட விளம்பரங்களிலும் சந்தானத்தின் முக்கியத்துவத்தை உணர முடிகிறது. பட விழாக்களிலும் சந்தானத்தின் முக்கியத்துவம் தூக்கலாக உள்ளது.
தனி காமெடி டிராக் தேவையில்லை என்பது சந்தானத்திற்கு பலம். ஹீரோவின் நண்பனாகவே வருவதால் அவரது காமெடியும் கதையின் போக்கில் அமைந்துவிடுகிறது(இதுதான் அழகு..நீ எல்லாம் நல்லா வரணுமா இல்லை சந்தானம்..நீ நீ நல்லாய் வருவடா..!)
கொய்யாலை தலைப்பை விட்டுட்டு என்னத்தை கதைக்குறாய் என்று நீங்கள் திட்டுறது எனக்கு விளங்குது இந்தா ஓடோடி வந்துட்டேன் தலைப்புக்கு...
மறுபடியும் லோட் பண்ணீட்டீங்களா..?


இவர் மன்மதன் தொடக்கி இப்ப வரைக்கும் 90 படம் நடித்து விட்டார்.இப்ப எல்லாம் ஹீரோக்களின் காட்டில் மழை இருக்கோ இல்லையோ சந்தானத்தின் காட்டில் யோரான மழை..!நடிகர்களை புக் பண்றதுக்கு முன்னம் இப்ப இயக்குனர்கள் எல்லாம் சந்தானத்தைதான் புக் செய்கின்றார்கலாம்...இவர் ஒரு படத்தில் நடிக்கின்றார் என்றால் நம்பி அந்த படத்துக்கு போகலாம் அது எவளோ பெரிய மொக்கை படமாக இருந்தாலும் திரையரங்கினுள் இருக்கும்போது செம ஜாலியாக இருந்து பார்க்கலாம்...!

அண்மையில் வெளிவந்து காமடிக்காக ஓடிய படங்களில் முதலில் ஓகே..ஓகே வை பற்றி இங்கு சொல்லித்தான் ஆகவேண்டும்.அந்த படத்துக்கு ஹீரோ புக் செய்வதற்கு முன்னம் சந்தானம்தான் புக் செய்யப்பட்டாராம்.(அப்டின்னா பார்த்துகொள்ளுங்களேன்..)
சொல்லுறதுக்கு மறந்துட்டேன்..சகுனி படத்தில் கூட சந்தானம் தான் ஹீரோ என்றது போல சனங்கள் கதைக்கினம் என்று எதோ ஒரு இணையத்தளத்தில் வாசித்ததாக நியாபகம்..!உண்மையும் அதுவாக இருக்கலாம் என்று நம்புகின்றேன்.
சந்தானம் ஹீரோ ஆக நடித்திருந்தாலும்(Arai Enn 305-il Kadavul) இவர் அந்த படத்தில் கூட சர்வ சாதாரணமாக நடித்திருப்பார்.குறிப்பாக சொல்லபோனால் எல்லா ஹீரோக்களையும் ஒரு கை பார்த்துட்டார்(கலாய்த்து விட்டார்) இனி அவர் தான் ஹீரோ ஆகனும் என்று நினைத்து களத்தில் குதித்தாலும் அது தப்பில்லை..!ஏன்னா கவுண்டமணி தொடக்கம் வடிவேலு வரைக்கும் ஹீரோ ஆசை யாரைத்தான் விட்டு வைத்தது.வடிவேல் ஹீரோ ஆக நடித்தால் உடனே விவேக்கும் ஹீரோ ஆக நடிக்கணும் என்று கிளம்பி அந்த படம் போட்டது போட்ட படியே இருக்குது..(செத்தான் அந்த படத்தின் தயாரிப்பாளர்)
நகைச்சுவை நடிகனாக வந்து ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார் சந்தானம்..இனி அவர் தான் ஹீரோவாக நடிக்க போறேன் என்றால் யார்தான் வேண்டாம் என்று சொல்ல முடியும்..மாறாக தயாரிப்பாளர்கள் எல்லாம் சந்தோஷப்படுவார்கள்.(அவருக்கு ஹீரோ ஆகும் முழு தகுதியும் இருக்கு..மண்வெட்டி போல பல்லு வைத்திருக்கின்றவங்க எல்லாம் ஐம்பது படம் நடித்து அது எல்லாம் ஓடியதாக பீத்திக்கொள்ளும் போது நம்ம சந்தானம் நடிக்க வாறதுல என்ன இருக்கு...அதையே தாங்கீட்டம் இதை தாங்க மாட்டமா..?)
என்னைப் பொறுத்த வரைக்கும் சந்தானம் என்பவர் நடிகர்களுக்கு உயிர் கொடுக்கும் ஒரு நபர்..வந்த வருவையிலே அப்டியே போகவேண்டி படங்களுக்கு ப்ரெஸ் மீட்டிங் வைக்குற அளவுக்கு கொண்டுபோனவர் சந்தானம்தான்..அவர் ஹீரோவாக நடிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை..நடிக்க போறதும் வியக்கத்தக்க விடயம் இல்லை...!

சந்தானம் ஒரு காமடியர்களின் ஹீரோ...ஹீரோக்களை சீரோ ஆக்குவதிலும் அவரே ஹீரோ..!

Post Comment

2 comments:

  1. indaikku perumbaalaana hero kal santhanaththaalathan pilaikkiraanga........... santhaanam illaaddi avanga padam pappadamthaan.............

    ReplyDelete
    Replies
    1. perumpaalaana enru sollaamal perkalaiyum kurippidalaamae saji annaa...!

      Delete