Thursday, July 12, 2012

டேய் என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுடா...!

இதை கட்டாயம் சொல்லியே ஆகணும்:-நான் அஜித்(தல)யின் தீவிர ரசிகன், பக்தன் என்றும் சொல்லலாம்.முதல் முதலாக எழுதும் திரைப்பட விமர்சனமும் இதுதான்.எல்லாவற்றையும் தலயுடன் தொடங்க வேண்டும் என்பதற்காக இவ்வளவு நாள் காத்திருந்தேன்.தலயின் ரசிகன் என்பதையும் தாண்டி நடுநிலையாக இருந்து படத்தினை விமர்சிக்க முயற்சிக்கின்றேன்...! சரி விமர்சனத்துக்கும் போவமன்...!

படத்தினை இயக்குநர்,நடிகர்,நடிகைகள் மற்றும் பலரை பற்றி எல்லோரும் போதிய அளவு விமர்சித்ததன் காரணமாக நேரடியாக நான் விமர்சனத்திற்கே போவோம்.."தல ஆட்டம் இப்ப இருந்து ஆரம்பம்...பில்லா டேவிட் பில்லா...கதையின் கலக்கல் நாயகன்..."இந்த பதிப்பின் தலைப்புடனேயே படம் தொடங்குவதனால்தான் இந்த தலைப்பை நான் தெரிவு செய்தேன்..!படத்தின் தொடக்கம் சிறுவன் ஒருவன் "தம்" அடிக்கும் அஜித்தாக மாறும் வரையிலான காட்சிகளை எழுத்து ஓட்டத்துடனேயே காட்டி இருப்பது தமிழ் சினிமாவுக்கு புதிய ஒரு விடையமாகும்.இலங்கையில் அம்மா,அப்பா எல்லோரையும் இழந்து கடைசியில் அக்காவையும் இழந்து அகதி முகாமிற்க்கு வரும் ஒருவராக அஜித் கதையினுள் நுழைகின்றார்...அதுக்கும் எழுத்து ஓட்டத்துடனேயே...!(சும்மா பந்தாவாய் கோக் ஒன்னை போட்டுட்டு படத்தை பார்க்க துடங்கினன்..நம்புங்க குடித்தது கோக் தான்...!)

                        

உன் பேர் என்ன என்று கேட்பதில் இருந்து பில்லா..டேவிட் பில்லா...என்று சொல்லுவது வரைக்கும் திரை அரங்கு விசில் சத்தத்தாலும் கூக்குரல்களாலும் நிரம்பி வழிந்தது...!(காது எல்லாம் கிழிந்து விட்டது என்று என் நண்பன் சொல்லி அழுவது கேட்டேன்...)
சாரம் கட்டி இருக்கு அஜித்(டேவிட்) எப்டி "கோட் சூட்" போட்டார் என்பதை தத்துரூபமாக எடுத்து காட்டி உள்ளார்.(சுருக்கமாக சொல்லப்போனால் கதையின் மையம் இங்கு இருந்துதான் துடங்குகின்றது)
"சக்கரவர்த்தி டொலட்டி"க்கு இதுதான் முதல் படம் என்று சொல்ல வேண்டும்.தனது ஆங்கில பாணியில் ஒரு படத்தை குயாலாக எடுத்து முடித்திருக்கின்றார்.எதுக்கும் பயப்படாமல் வெறுமனையே ரத்தமும் சதையும் நிறைந்த ஒரு படத்தை கலக்கலாக எடுத்து விட்டிருக்கின்றார்...(ஆள் பலே கில்லாடிதான் போங்க...)


பதினொரு வருடங்களுக்கு பின்பு அஜித் இரண்டு படங்கள் அடுத்து அடுத்து வென்று இருக்கின்றார்...பில்லா பாகம் இரண்டு ஒரு தமிழ் சினிமாவின் இன்னொரு அத்தியாயம் சொல்லப்போனால் இன்னொரு ஆரம்பம் என்றும் சொல்லலாம்...பில்லா பில்லாதான் அஜித் அஜித்தான்...இந்த படம் பதினாறு வயது தொடக்கம் நாற்பது வயது வரைக்கும் இருப்பவர்கள் பார்ப்பதற்க்கு உகந்தது...ரத்தமும் சதையும் கலந்த ஒரு படம்...பில்லா..டேவிட்...பில்லா... கதை சொல்லும் கதையின் கதாநாயகன்.தனி ஒருவராக நின்று படத்தினை தூக்கி நிறுத்தி இருக்கின்றார்...!

படத்தில் வரும் ஒவ்வொரு வசனங்களும் ரஜினியின் பஞ்ச் வசனங்களுக்கு சவால் விடுவதாக இருக்கின்றது.(இனி நாங்க கொலரை தூக்கி விட்டு சொல்லுவம் இனி தலதான் என்று) ஒரு கொள்ளை கூட்டத்தின் தலைவன் எவ்வாறு கதைக்க வேண்டுமோ அதுக்கு தகுந்தால் போல படத்தின் வசன நடை இருக்கின்றது.."ஆசை இல்லை அண்ணாச்சி பசி...இவன் டேவிட் பில்லாடா தெரிந்திட்டு சாகுடா..."என்னும் படத்தின் வசனங்கள் ரசிகர்களை ஆசனத்தின் நுனிக்கே கொண்டு போய் விட்டது...!

படத்தில் பாடல்கள் அனைத்தும் பொருந்த வேண்டிய இடத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கின்றது..குறிப்பாக "மதுரை பொண்ணு..." பாடல் வாலிபர்கள் மனதில் கோடி பட்டாம் பூச்சி...சும்மா தாவணிய தூக்கி தூக்கி ஆடி இருக்காங்க...!(கலக்கலோ கலக்கல் தான்..இந்த பாட்டில எந்த பொண்ண பார்த்தாலும் சூப்பர் ஆக இருக்கு...மச்சீ என்று என் நண்பன் ஷான் சொல்ல கேட்டேன்..!)


படத்தி ஒரு பாடல் அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கின்றது.அதுக்கும் புரியாத ஒரு மொழி பாடல்.அதில் வெளி நாட்டு அழகிகள் நடனம் ஆடுவது போல காட்சிகள் அமைக்க பட்டிருக்கும்.எந்த பாடலும் வெறுமனையே பாடலாக இல்லாமல் பாடலுடன் சேர்ந்து கதையும் நகர்வது படத்திற்க்கு இன்னும் ஒரு பிளஸ்..!அஜித்தை மட்டும் நம்பி முற்றும் முழுதாக எடுக்கப்பட்ட படம்..இது என்று சொன்னால் அது மிகையாகாது..!எந்த இடத்தை பார்த்தாலும்,எடுத்துகொண்டாலும் அஜித்தை பின்புலமாக கொண்டே கதைகள் நகர்வது இன்னும் சுவாரஸ்யம்...!

படத்தி இரண்டு கதாநாயகிகள் என்று இருந்தாலும் அவர்கள் எவளோதான் கவர்ச்சி காட்டினாலும் அஜித் மட்டும்தான் கண்ணுக்குள் நிற்கின்றார்..சொல்லப்போனால் இந்த படத்தினை தனி ஒருவராக காவிச்சென்றவர்..என்று சொல்லலாம்..!இப்ப கூட சொல்லணும் போல இருக்கு அடுத்த அடுத்த.....தலதான் என்று...!


இன்னும் ஒரு பாடல் காட்சி இருக்கு அது நான் நினைத்து பார்க்காத அளவுக்கு செமையாக எடுத்திருந்தாங்க...சும்மா ஒரு இங்கிலீஷ் பட பாட்டு பார்குற போல இருந்தீச்சு...அது வேறை எந்த பாடும் இல்லை..."உனக்குள்ளே மிருகம் என்னும் பாடல்.." அஜித்தின் வரலாற்றில் இன்னும் ஒரு திருப்பு முனையான பாடல்...முழுக்க முழுக்க ஸ்டில்களை மட்டும் வைத்து மிகவும் தத்துரூபமாக எடுக்கப்பட்ட பாடல்...அஜித் அந்த பாடலில் ஒரு வித்தியாசமாக தெரிகின்றார்...!பாடல் புதியது அதன் வரிகள் மிகவும் கூர்மையானது..அதில் அஜித் புதிதாக இருந்தது...பாடல் காட்சி விஸ்வரூபமாக தெரிந்தது...!


படத்தின் எடிட்டர்க்கு பெரிய ஒரு நன்றி சொல்லியே ஆகணும் ஏன்னா இத்தனை கத்திரிக்கோல் போட்டு எந்த காட்சிகளிலும் அது தெரியாதது போல எடிட் செய்து இருக்கிறார்.படத்தின் சுவார்யஸ்திற்க்கும் இவர்தான் பொறுப்பு...தனது கடமையை முழுமையாக செய்து முடித்திருக்கின்றார்.படத்துக்கு மேலும் பலம் சேர்ந்தது இருக்கின்றார்..!

படத்தில் எந்த ஒரு காட்சியும் சலிப்பு தட்டுவது போல இல்லாமல்..அடுத்து என்ன நடக்க போகின்றது என்று தெரியாமல் ரசிகர்களை ஆசனத்தின் நுனிக்கே அடிக்கடி இயக்குநர் அனுப்பி விடுகின்றார்..அவ்வளோ பிரமாதமான திரைக்கதை...படத்தில் பெரிய திருப்பம் "பில்லா தான்தான் இனி எல்லா ஆயுத பிஸ்னஸ் எல்லாவற்றையும் செய்வதாக சொல்லும்" கணத்தில் இருந்து படம் சூடு பிடிக்க தொடங்குகின்றது...இறுதிவரை தனது தனித்துவத்திற்க்காக போராடும் ஒரு தலைவனாக பில்லாவை காட்டி இருப்பது "சக்கரவர்த்தி டொலட்டி"க்கு ஒரு பெரிய வெற்றி...!

பில்லா-II முடியும் இடத்தில் இருந்து பில்லா-2007 தொங்குகின்றது என்பது படத்தின் சளைக்காத கதையின் வடிவமைப்பிற்க்கு கிடைத்த மாபெரும் கரவோசம்..!பில்லா-III இனை குறி வைத்து "சக்கரவர்த்தி டொலட்டி" கதையை நகர்த்தி இருபது தெளிவாக தெரிகின்றது..அந்த படமும் தயாராகும் போலதான் இருக்கு போற போக்கை பார்த்தால்...!

படத்திற்க்கு மேலும் யுவனின் பின்னணி இசை தூக்கலாக இருக்க படம் செமையாக சூடு பிடிக்கின்றது.படத்தில் அஜிதிற்க்கு எவளோ பங்கிருக்கின்றதோ அதைபோல யுவனுக்கும் படத்தின் வெற்றியில் மாபெரும் பங்கு இருக்கிறது.மறுபடியும் யுவன் தான்தான் இனி அஜித்திற்க்கு ஏற்ற இசையமைப்பாளர் என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளார்...!
இறுதியில் படம் யுவனின் இனிய குரலுடன் தொடங்கும் "gang gang ganster..." பாடலுடன் முடிவுக்கு வருகின்றது..இறுதியாக எழுத்து ஓட்டத்துடன் அஜித்தின் சாகாசங்கள் காடப்படுகின்றது...!

வழக்கமையான படங்களை போல் அல்லாது (ஒரு ஆங்கில படத்தின் பாணியில் எடுக்கப்பட்ட தமிழ் படம்...சொல்லப்போனால் கமலுக்கு கூட வராத யோசனை இயக்குநருக்கு வந்ததுள்ளது என்றுதான் சொல்லவேண்டும்...)வித்தியாசமான ஒரு புதிய முயற்சி ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இருந்த படம்...இப்போது வழமைக்கு மாறாக சாதனைகளின் குமியலாக வலம்வந்துகொண்டிருக்கின்றது...!

படத்தின் கதையினை பக்கம் பக்கமாக சொல்லாமல் நான் ரசித்த விடயங்களை மட்டும் ஒரு கோர்வையாக எழுதினேன்..மிகுதியை படத்தினை பார்த்து அறிந்து கொள்ளுங்க...

பொதுவான ஒரு சினிமா ரசிகனின் கருத்து:-பில்லா பாகம் இரண்டு இனி தமிழ் சினிமாவின் ஒரு புதிய தொடக்கம்...நேரம் போறதே தெரியாமல் இருக்கின்றது படத்தின் முக்கிய ஒரு பிளஸ் பாயிண்ட்...படம் மங்காத்தா இல்லை எந்த படமும் பக்கத்தை நிற்க முடியாது.சில சில படங்கள் பில்லா வெளியாவதற்க்கு முன்னமே வெளியானது அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் செய்த புண்ணியம்...!இனி பில்லா அதுக்கும் டேவிட் பில்லாதான்...என்னும் அளவுக்கு இருக்கிறது இந்த படம்...மொத்தத்தில் படம் கலக்கல்...!
                 
        நண்பர்களுடன் நான் தெகிவளை கொன்கோர்ட் திரையரங்கிற்க்கு வெளியே...!
  
பில்லா..டேவிட்..பில்லா..தமிழ் சினிமாவில் ஒரு டான்..டானுக்கு எல்லாம் டான்..!

Post Comment

20 comments:

 1. சுட சுட விமர்சனம் :)

  ReplyDelete
 2. பாராட்டிறீங்களா; ஓட்றீங்களா? (“பசங்க“ சோபிக்கண்ணு கேட்பது ஞாபகத்துக்கு வர்றா)

  படம் சுமார் என்று சொல்லிக்கிறாங்களே...! அஜித்தின் அக்கா ஊட்டு பையன்கள் கூட அப்பிடித்தான் சொல்லியிருக்காங்க. நீங்கள நல்லாயிருக்கு என்கிறீங்க. அப்ப திங்கட்கிழமை பார்க்கவா?

  ReplyDelete
  Replies
  1. படம் பார்க்கின்றது பார்க்காமல் விடுறதும் உங்களது பிரச்சனை..!ஒரு சில பேர் படத்தை கூட பார்க்காமல்...சும்மா படம் சுமார் என்று சொல்லுறாங்க..அப்டி சொல்லவேண்டிய அவசியம் என்ன?உங்களது கருத்துக்களுக்கு மதிப்பு இருக்கு...அதை நீங்கலாக ஏன் வீண்அடித்துக்கொள்கின்றீர்கள்..?

   Delete
 3. i would give 60 for this movie. just good.

  ReplyDelete
  Replies
  1. அப்படி என்ன குறை கண்டீங்க என்று எனக்கு தெரியாது...ஆனால் உங்களுக்கு அந்த படம் அப்டியான ஒரு தோற்றப்பாட்டை கொடுத்து இருக்கலாம்..அதனால் நீங்கள் அப்டியான மார்க்ஸ் ஐ கொடுத்திருக்கலாம்...ஆனால் அதுதான் உண்மையானது என்று இல்லை...!எல்லொரு படம் மாஸ் என்றுதான் சொல்லுறாங்க...இவின் விஜய் ரசிகர்கள் கூட நல்லா இருக்கு என்றார்கள்...!

   Delete
 4. Replies
  1. mikka nantri unkaludan ennai inaiththukondathatkku...!

   Delete
 5. அருமையான விமர்சன நடை
  சினிமாவோடு இன்ன பிற விசயங்களும் எழுதுங்கள்

  வாசிக்க ஆவலுடன் காத்து இருக்கும் வாசகன்

  ReplyDelete
  Replies
  1. நிட்சயமாக நான் சினிமா பற்றி எழுதுவதை குறைத்து விட்டு கொஞ்ச நாளைக்கு போது விடையங்களை எழுதலாம் என்று முடிவு பண்ணி இருக்குறேன்..உங்களது ஆதரவுக்கு மிக்க நன்றி...தோழரே...!

   Delete
 6. BILLA 2 its really a new attemt of indian cinema.... THALA ROCKZZZZ in his great performance....and, vijay fans pathi sollavea veandaam THALA FILM MA PROMOTE PANRATHEA AVANUGATHAAN, athu yepaaditha namaku munnadi padam poi paathuranuga nu therriyala pa, thala fans vijay padam first day paaakavea maatoom.... THANK YOU VIJAY FANS.....

  ReplyDelete
  Replies
  1. அதுதான் அண்ணா எனக்கும் புரியலை...படம் துபாய் ல வெளிவாரதுக்கு முன்னமே படத்தை அங்கு ஒருவர் பார்த்ததாக நேற்று இரவு 12.00 மணிக்கு விமர்சனம் போடுறார்..தல ரசிகர்கள் யாரும் விஜய் படத்துக்கு இவ்வாறு எளிய வேலை செய்யுறது இல்லை..ஆனால் அவங்கள் .......புத்திய காட்டுறாங்க...எது எப்டியோ படம் அதிரடி சரவெடி...தலன்னா சும்மாவா...?

   Delete
 7. உங்களுடைய பதிவுகள் இலங்கைத்தமிழர்கள் பலரை சென்றடைய கூகிள்சிறி திரட்டியில்(http://www.googlesri.com/) இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் நிர்வாகியாவதன் மூலம் இணைக்கலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியை rss4sk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்து நிர்வாகியாகுங்கள். கூகிள்சிறியில் சேர்க்கப்படும் பதிவுகள் தன்னியக்கமுறையில் டிவிட்டர்,பேஸ்புக்,லிங்டின் போன்ற சமூக தளங்களில் பிரசுரமாகி அதிக வாசகர்களை சென்றடையும்.

  ReplyDelete
 8. வேகமாக போகும் வண்டியை துறத்தும் நாயை போல் உள்ளது பில்லா2 படம் பிளாப் என்று சொல்பவர்களை பார்த்தால் !! #தலடா

  ReplyDelete
  Replies
  1. மச்சான் நீ சரியாய் சொன்னாய்..கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை...:)

   Delete
 9. வேகமாக போகும் வண்டியை துறத்தும் நாயை போல் உள்ளது பில்லா2 படம் பிளாப் என்று சொல்பவர்களை பார்த்தால் !! #தலடா

  ReplyDelete