Sunday, July 22, 2012

இனி ஒரு முறை இலங்கையில் இனப்பிரச்சனை தலை தூக்குமா...?

நீண்ட காலங்களாக வித்தியாசமான எந்த பதிப்பும் எழுதவில்லை என்பதனாலும்; என் நண்பன் Aruran Thirumoolanathan இன் விருப்பத்திற்க்கு இணங்க இந்த பதிப்பினை எழுதுகின்றேன்...!
சமூக அக்கறை கருதி எழுதி கிழிக்கிற அளவுக்கு நான் இன்னும் வளரலங்க..சும்மா ஒரு சேன்ஞ்(Change)க்கு இந்த பதிப்பை எழுதுகின்றேன்...!
இந்த பதிப்பு யாரையும் புண்படுத்தும் நோக்கத்திலோ, இழிவுபடுத்தும் நோக்கத்திலோ எழுதப்படவில்லை என்பதை இத்தால் அனைவருக்கும் அறியத்தருகின்றேன்..!
சரி மேட்டர்(Matter)க்குள் போவமன்..!


மொழி தொடர்பாடலில் இருந்து என்று அடையாளமாக மாறியதோ அன்று ஆரம்பித்ததுதான் இனங்களுக்கிடையிலான பிரச்சனைகள்!!


கல்விச்சூழல் என்பது ஒரு மாணவனோ அல்லது மாணவியோ கிராமம் சார்ந்ததாக அல்லது நகர்ப்புறம் சார்ந்த இடத்தில் இருந்து தமது எத்தனையோ தியாகங்களுக்கு மத்தியில்தான் வாழ்வின் முறைசார் கல்வியின் இறுதிக்கூடமான பல்கலையும் பயில்கின்ற பல்கலைகழகத்திற்க்கு தெரிவு செய்யப்படுகின்றனர்.குறிப்பாக நாங்கள் ஒவ்வொரு இடத்திலும் வேற்றுமையையே காண்கின்றோம் ஆகவே வாழ்வின் பிறப்பில் இருந்து இறப்பு வரை வேற்றுமையையே கண்டு குறிப்பாக பகைமையை சந்தித்ததே மிச்சமாகும்.

கிராமபுறத்தில் இருந்துவரும் மாணவ சமுதாயம் நகர்ப்புறத்து மாணவர்களுடன் சங்கமிக்கும் வாய்ப்பு அதிகமாக பல்கலைக்கழகத்திலேயே காணப்படுகின்றது.இங்கு நாம் நோக்குவது யாழ்ப்பாணத்தின் ஒரு மூலைக்குக்கிராமத்தில் இருந்து வரும் ஒரு மாணவனிடம் அம்பாந்தோட்டையில் ஒரு மூலைக்குக்கிராமத்தில் இருந்து வரும் மாணவனும் தமது நட்பினை தொடர்வதற்க்கு மிகவும் ஒரு அரிய சந்தர்ப்பத்தை பெறுவதற்க்கு மிகப்பெரிய வாய்ப்பு ஏற்படுகின்றது.யாழ்ப்பாணத்து மாணவன் தனது மொழி, பண்பாடு, கலாச்சாரம், கிராமியச்சூழல், குடும்பம் என்பவற்றை தனது அம்பாந்தோட்டை நண்பனுக்கு கூற அவன் தனது மேற்கூறிய விடையங்களை பரஸ்பரமாக பகிர்ந்துகொள்வதன் ஊடாக அவர்களுக்கு இடையில் வேற்றுமைத்தன்மை குறைகின்றது.காரணம்-ஒருவன் இன்னொருவனது பிறப்பு சார் விடையங்களை அறிந்துகொள்வதன் ஊடாக அதற்க்கு மதிப்பளிக்ககூடிய சூழலே ஏற்படுகின்றது.இதனால் ஒவ்வொரு இனத்திலும் இருக்கின்ற இனவாதக்குளிர் காய்ந்து ஏப்பம் விடுகின்ற அரக்கர்களின் பின்னால் செல்கின்ற போக்கு குறைவாகவே காணப்படும்.அத்தோடு வெவ்வேறு வகுப்பிடை மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மாணவர்கள் ஒன்றாக கற்கின்ற போது காதல், நட்பு, ஒருவருடைய உணவை இன்னொருவர் வாங்கி பறித்து உண்பது போன்ற பல செயற்பாடுகள் இடம்பெருவதன் காரணமாக அங்கு வகுப்பிடை வாதமும் தாழ்த்தப்படுகின்றது எனவே பல்கலைக்கழகம் என்பது இன, மத, சமூக, சாதி போன்றவற்றின் ஒற்றுமையை வெளியிடுகின்ற ஒரு குறியீடாக திகழ்கின்றது.

மேற்கூறியது போல வேலை செய்யும் இடங்களிலும் இவ்வாறே நல்லினக்கங்கள் இருக்கின்றன.இவ்வாறன நல்லினக்கங்கள் நம்மவர் இடையே இருக்கும் பிரிவினையை துண்டு போடும், தூள் தூளாக்கும்.வேலை செய்யும் இடத்தில் பல சமூக மக்கள் இருக்கின்றார்கள் இதில் அவர்களின் விழாக்களுக்கும், திருமண வைபவங்களுக்கும் மற்ற இனத்தை சார்ந்தவர்கள் போகவேண்டிய கட்டாயம் ஏற்படும் இதில் ஒரு போதுமான ஒற்றுமையும், கலாச்சார பரவலாக்கமும் இடம்பெறும்.சடங்கு, சம்பிரதாயம் என்பது ஒவ்வொருவருக்கு இடையிலும் பழக்கப்பட்டதாக மாறிப்போகும்.ஒரு நாடில் இருக்கும் இனங்களுக்கு இடையில் இருக்கும் பிரச்சனைகளின் தொடக்க இடமாக அமைவது பல்கலைக்கழகங்களும் வேலை செய்யும் இடங்களும்தான்.ஏனெனில் அந்த இடங்களில்தான் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனினதும் வாழ்க்கையின் தொடக்க இடமாக/காலமாக அமைகின்றது.அவ்வாறான அந்த இடங்கள் சரியான ஒரு அடிப்படை கருத்துக்களை தன்னகத்தே கொண்டிருக்கும்போது கருத்து வேறுபாடுகள் கூட வருவதற்க்கு சந்தர்ப்பம் இல்லை.கருத்து வேறுபாடுகளே வராது என்னும்போது இனம் சார் பிரச்சனைகள் எங்கிருந்து கிளம்பப்போகின்றது..?

இலங்கையின் பெரும்பான்மையான இனமானது சிங்கள மொழியை பேசும் சிங்களவர்கள்; இவர்களுக்கு அடுத்தபடியாக சிறுபான்மை மக்கள் என சொல்லப்படும் தமிழ் மொழியை பேசும் தமிழர்களும் ஆகும்.இந்த பெரும்பான்மையும் சிறுபான்மையும் அண்மைக்காலமாக வாழ்கையில் அதிகமாக இணைந்து வரு(வாழு)கின்றது.அதாவது இரு இனங்களுக்கு இடையிலும் கலப்பு திருமணம் நடை பெறுவதனாலே இவ்வாறான நிலைமை காணப்படுகின்றது.இப்படி நடை பெறுவதால் தமிழ் இனம் அழிக்கப்படுகின்றது என்று நினைத்தால் அது பெரும் முட்டாள்தனம்.இதனால் கலாச்சாரம் விரிவடையும்,கலாச்சார பரிமாற்றம் இடம்பெறும்.பிறக்கும் குழந்தைக்கு இரு வகையான கலாச்சாரமும் தெரிந்திருக்கும்.இவ்வாறு கலப்பு திருமணம் நடைபெறுவதால் இனப்பாகுபாடு வராது.இதனால் ஒற்றுமையான ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும்.இனத்தின் தனித்தன்மையை பேணுவதற்க்கு பாதுகப்பதற்க்கு என்று எத்தனையோ வழிகள் இருந்தும் அந்தக்காலத்தில் இருந்து இந்த கலப்பு திருமணத்தில்தான் பெரியவங்களுக்கு ஒரு கண்ணு..!(அவர்கள் வாழ்ந்து முடித்து விட்டார்கள்..வாழ்பவர்களை நிம்மதியாக வாழ விடுவம் என்ற ஒரு நினைப்பு இல்லை..சாகபோற காலத்தில்தான் அவர்கள் இனத்தின் சிறப்பை காப்பாற்றபோறார்கலாம்...! விட்டால் சொல்லுவாங்க கரம் போட்டை கண்டு பிடித்தது கே.எஸ்.ரவிக்குமார் என்று..!)


இனியொருமுறை இனப்பிரச்சனை வந்தால் இலங்கையின் பொருளாதாரம்??? ஆட்டம் காணும் என்பது எல்லாம் பொய்..!ஏன்னெனில் இலங்கையின் பொருளாதாரம் முக்கியமாக நாடுகடந்த பெரும்பான்மையான தமிழ் பண முதலைகளினாலேயே கையாளப்படுகின்றது.இனப்பிரச்சனை வந்தால் அவர்கள் முதலீடு செய்ய மாட்டார்கள் என்று சொல்லவது எல்லாம் அடி முட்டாள்தனம்.ஏன் அப்படி என்றால் இதுவரை காலமும் 2009ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலகட்டத்தில் இவர்கள் முதலீடு செய்யவில்லையா..?அதனால் இலங்கையில் பொருளாதாரம்??? நாடுகடந்த தமிழர்களின் கையில்தான் இருக்கின்றது என்பதை கைவிட்டு விடுவோம்.எது நடந்தாலும் முதலீடு செய்பவர்கள் செய்துகொண்டுதான் இருப்பார்கள்.அப்படி அவர்கள் முதலீடு செய்யாத பட்சத்திலும் கூட இலங்கையின் பொருளாதாரம்??? ஆட்டம் காணாது.அது ஏன் என்றால் "பானையில் இருந்தால்தானே கோப்பையில் வரும்..." புரிந்தவர்கள் சிரித்துகொள்ளுங்க..!(அக்கறையும் சிரத்தையும் நாமாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர யாரும் சொல்லி வரக்கூடாது..அவ்வாறு வந்தால் அது அலட்சியப்போக்கியே காட்டும்..)

எதிர்க்கட்சியாக இருக்கலாம் ஆனால் ஒருநாளும் எதிரிக்கட்சியாக இருக்க கூடாது.குறிப்பாக இன்று எதிர்க்கட்சியின் நிலைமை எவ்வாறு இருக்கின்றது என்று சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை..!அண்மையில் ஆளும் கூட்டணியின் அறிக்கையின் படி 225 இல் 166 பேர் ஆளும் கூட்டணியில் இருக்கின்றார்கள்???(அப்ப எதிர்க்கட்சி என்றது என்கையா??? இருக்கு..)இதற்க்கு இடையில் பிரதான எதிர்க்கட்சியில் இடம்பெறும் ஆசனத்திற்க்கான இழுபறிகளில் இருக்கின்ற பலம் கூட குன்றிப்போகும் நிலைமை காணப்படுகின்றது.பிரதான எதிர்க்கட்சி சிறுபான்மை சார் ஆளும் கூட்டணி சாராத கட்சிகளுடன் இணைய வேண்டிய கொடிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது.இவ்வாறு இணைவதை தவிர வெறு வாய்ப்பை அவர்கள் தேட வேண்டும் என்றால் சூரிய மண்டலத்துக்கு தான் போக வேண்டும்.தமிழர் சார் கட்சிகளுக்கும் ஏனைய கட்சிகளுக்கும் நன்மை தீமைகளை விளக்கி கூறி நல்லதோர் இணக்கப்பாட்டினை கொண்டுவர வேண்டும்.எதனை ஒரு உடன் படிக்கையாக மாற்றினால் கூட நல்லம்..!எது எப்டியோ அழகான இலங்கை என்னும் (எங்கள்) நாடு இன்னும் சிதைக்கா(வடையா)மல் இருந்தால் நல்லம்...!

கட்சிளுக்கு இடையில் இருக்கும் ஒற்றுமையை விட மக்கள் மத்தியில் இப்ப எல்லாம் எங்கை இருக்கு ஒற்றுமை...??? அஜித்(தல) சொன்னது போல "இதுவரைக்கும் காட்டிக்கொடுத்தவன் எல்லாம் கூட இருந்தவங்கதான்..." என்பது முற்றும் முழுதாக உண்மையாகின்றது.மக்கள் ஒருவரை ஒருவர் நம்ப வேண்டிய நேரத்தில் நம்ப மாட்டார்கள்.ஆனால் போலி சாமியார்களை(அம்மாபகவான்,நித்தியானந்தா,சாய் பாபா...) மட்டும் நம்புவார்கள்.என்ன உலகமடா இது..!என்னதான் அரசியல் ரீதியாக நாம் இணைந்துகொண்டாலும் இணைத்து வாழ முடியாமல் இருப்பதற்க்கு காரணம் மக்கள் மக்களாக இல்லை..அதாவது அவர்களுக்கு சேர்ந்து வாழ வேண்டும் என்ற நோக்கம் இல்லை..அவர்கள் தாங்கள் மட்டும் நல்லாக இருந்தால் போதும் என்று நினைக்குறார்கள்..இப்படி இருக்கும்போது எங்கை இருந்து ஒற்றுமையை கொண்டுவர முடியும்..(கொய்யாலை கடுபாகுறார்கள் மை லோட்..)


எனக்கு தெரிந்து முத்தையா முரளிதரன் என்ற ஒரு தமிழ் பேசக்கூடிய??? ஒருவர் இலங்கை தேசிய கிரிக்கட் அணியில் விளையாடியதுடன் சரி..!அதன் பின் யாரும் விளையாடியதாக தெரியவில்லை...(என்னையா நடக்குது இங்கை..?) இலங்கையில் எங்கு வாழும் தமிழர்கள் இடையேயும் திறமைகள் இல்லை என்றால் அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம்...!(பச்சை,சிவப்பு,ரோஸ் பொய் என்று இதைதான் சொல்லுறது..!) திறமைகள் மலிந்துபோனது தமிழர்களிடையே தான்..!(அந்த திறமைகளை தமிழர்களால் முழுமையாக, சரியாக பயன்படுத்த தெரியாமல் இருப்பது வேறுகதை..!) சரி கிரிக்கட்டில் ஆவது முரளி என்ற ஒரு தமிழ் பேரை உடைய ஒரு நபர் விளையாடினார்.ஆனால் இலங்கையில் விளையாடப்படும் வேறு எந்த விளையாடிலும் தமிழ் சமுதாயத்தை சார்ந்த யாரும் விளையாடுவதாக தெரியவில்லையே..?(இந்த விஷயத்தில் யாரை குறை சொல்லுறது என்று தெரியவில்லை...?) திறமை இல்லாதவர்களுக்கு அணியில் இடம் கொடுக்க சொல்லி யாரும் சொல்லவில்லை..திறமை இருக்கும் ஒரு சமூகத்தை மட்டும் குறிபார்த்து மழுங்கடிக்காதீர்கள் என்றுதானே சொல்கின்றோம்..!(Hockey அணியில் 3-4 தமிழர்கள் விளையாடுகின்றார்கள், Basketball அணியில் ஆண்,பெண் என மொத்தமாக 3 பேர் விளையாடுகின்றார்கள், கடந்த ஆண்டு வரைக்கும் Football அணியில் இருவர் விளையாடினார்கள்..இது மட்டும் போதுமா என்பதுதான் தெரியவில்லை..?)இன ஒற்றுமைக்கு இது ஒரு முக்கியமான விடையமாகும்.ஆசைகளும், வெற்றி கனவுகளும் சக மனிதர்கள் எல்லோருக்கும் பொதுவானது அதை ஒரு சமூகம் மட்டும் தனக்கென சொந்தமாக்கிக்கொள்வதில் என்ன நியாயம் இருக்கின்றது..?

ஒரு நாட்டின் பெரிய இழப்பு அறிவுள்ள சமுதாயம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதுதான்..இலங்கையில் என்ன வளம் இல்லை..எல்லாம் அதிக அதிகமாக இருப்பதுதான் பிரச்சனை..இலங்கையின் அதிமுக்கியமான துறை பாதுகாப்பு துறை அதில் எத்தனை முக்கியமான பதவிகளை தமிழ் பேசும் மக்கள் நிரப்பி இருக்கின்றார்கள்..?(இந்த கேள்வியின் முடிவில் வெருமனையே ஒரு கேள்விக்குறியை மட்டும்தான் போடமுடியும்) உலகளாவிய ரீதியில் முக்கியமான வளர்ந்துவரும் எத்தனையோ கற்க்கை நெறிகள் உள்ளன.அதில் எதுக்கும் இலங்கையில் இல்லை என்று சொல்ல முடியாது.படித்து முடித்த பின் ஏன் எல்லோரும் வெளிநாடு போக வேண்டும்.அப்டி என்ன நம் நாடில் இல்லாதது வெளிநாட்டில் இருக்க போகின்றது..?இதில் சந்தோஷப்பட வேண்டிய ஒரு விடயம் என்னவென்றால் குறிப்பாக ஒரு கற்க்கை நெறியை பெரும்பான்மை சமூகம் மட்டும்தான் படிக்க முடியும் என்ற நிலை இல்லை..அதை நினைத்து சந்தோசப்பட்டுகொள்வோம்..!
ஒவ்வொரு துறையிலும் எவ்வாறு சகோதர மொழி பேசும் மக்களுக்கு என்று ஒரு உரிமை,இடங்கள் இருக்கின்றதோ அதைபோல தமிழ் பேசும் மக்களுக்கும் என்று ஒரு இடம் ஒதுக்கினால் என்ன???(இது மட்டும் நடக்கும் என்றால் உலகம் அழியுறது நிட்சயம்தான்..!) இவ்வாறு நடக்கும் பட்சத்தில் எந்த அந்நிய சக்தியாலும் நம் நாட்டை எதுக்கும் செய்ய முடியாது?

இந்த பிரச்சனை தொடருமானால் பெரும்பான்மை இனம் வாழும் சிறுபான்மை இனம் இன்னமும் அழியும்.இந்த அழிவை தீர்மானிப்பது நாம்தான்.ஆகவே இனி எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் இவ்வளவு காலமும் எடுத்ததுபோல முட்டாள் தனமான முடிவுகளாக இல்லாமல் தமிழர் உயிருடன் வாழ விடும் என்பதற்க்காக எடுக்கப்படுவதாக இருக்க வேண்டும்.ஒரு தனி மனிதன் 1983 ஆம் ஆண்டி இருந்து எத்தனை பிரச்சனைகள் எத்தனை போர் என்று பார்த்துப்பார்த்து சலித்துப்போன அவனுக்கு நிம்மதி என்பது இல்லையா..?எல்லோரையும் ஓட்டு மொத்தமாக சொல்ல வரவில்லை..ஒரு சில பேர் நாடுகடந்து இருக்கும் தமிழர்கள்..ஏதோ ஈழம் அமைப்பதாக கூறி தங்களது P.R ஐ தக்க வைத்துகொள்வதற்க்காக அங்கு இருந்து கத்துகின்றார்கள்.கோடி பிடிக்கின்றார்கள்.கூச்சல் போடுகின்றார்கள்.இத்தனையும் இலங்கையில் இருக்கும்போது செய்து இருந்தால் நீங்கள் ஒரு "தில்" ஆனா ஆள் என்று சொல்லலாம்.அதை விட்டுட்டு அங்கை போய் இப்படி செய்வதில் என்ன கண்டு விட்டீர்கள்...?என்ன சாதித்து விட்டீர்கள்..?நீங்கள் அவ்வாறு நடந்துகொள்வதால் இங்கு இருக்கும் உங்கள் சொந்தங்கள்தான் பாதிக்க படுகின்றார்கள்..!(பொல்லையும் கொடுத்து அடியும் வாங்குற கதையாய் எல்லே இருக்கு...!)


சாராம்சம்:-ஐந்து விதமான போர், வெவ்வேறு கால கட்டத்தை தாண்டிய யுத்தம், தாங்க முடியாத உயிர் இழப்பு, எத்தனை அநாதைகள், எத்தனை விதவைகள், எவ்வளவு பொருட்கள் சேதமாக்கப்பட்டன.இவை எல்லாம் எண்ணில் அடங்காது..போதும் போதும் எல்லாம் போதும் இங்கு மனிதன் மனிதனாக இல்லை..!மினிதம் என்பதே இல்லை..!

உலகத்திலேயே மிகவும் அழகாக ஒரு குட்டி தீவு..என்ன இல்லை எம் நாடில் ஆனால் நம்மவர்க்கு(நான் உட்பட) எல்லோருக்கும் வெளிநாட்டில் தான் ஒரு கண்..!(அப்ப இங்கு நம் நாட்டில் யார்தான் வாழப்போகின்றார்கள்..?எல்லாம் புரியாத புதிர்தான்..!) புனிதமாக போற்றப்பட வேண்டிய பூமியை எத்தனை போர்களை சந்திக்க வைத்து விட்டோம்.அருமையாக பள்ளி போகவேண்டிய எத்தனை இளம் சிறார்களை இழந்து நிற்கின்றோம்.அவர்கள் எல்லோரும் இலங்கையில் வருங்கால தூண்கள் என்பதை மறந்து விட்டோம்..இழந்தும் விட்டோம்.இனியாவது இழந்த எல்லாவற்றையும் ஒழுங்கமைக்கும் முகமாக சேர்ந்து வாழ்வோமா..?

வெவ்வேறுபட்ட இனங்கள் ஒருமித்து இருக்கும் மட்டும் இனப்பிரச்சனை இருக்கும்; அதன் வடிவங்கள் வேண்டுமானால் மாறுபடலாம் ஆனால் இனப்பிரச்சனை மாறுபடாது..விட்டும் போகாது..Post Comment

No comments:

Post a Comment