Thursday, July 26, 2012

காதல் ஜோடி...காதல் ஜோடி...கேட்டியா..? அவங்க கடற்கரையில கட்டிப்பிடித்ததை பார்த்தியா...?

கனகாலமாக "கிளுகிளுப்பாக" ஒன்றும் எழுதவில்லை என்பதனாலும்,என் மனதுக்குள் நீண்ட நாட்களாக இருந்த ஒரு விடயத்தை பகிரங்கமாக எந்த ஒழிவு மறைவும் இல்லாமல் உங்களுடன் பகிர்ந்துகொள்ள முயற்சிக்கின்றோம்..!(நானும் என் நண்பன் Hamprishan Defender..)

கவனத்திற்க்கு:-இந்த பதிப்பு வயது??? வந்தவர்களுக்கு மட்டும்..!(இந்த பதிப்பை பெண்கள் வாசிக்கும்போது உங்களுக்கு இது தகாததாக இருந்தால் ஒதுங்கிக்கொள்ளவும்..இந்த பதிப்பை எழுதியே ஆக வேண்டிய கட்டாயத்தில் நான்..தம் இருந்தா வாசித்து முடியுங்க..!)


காதல் என்றால் என்ன:-அது தமிழாலோ இல்லை எந்த மொழியாலுமோ..வரையறை செய்ய முடியாதது..அது அவ்வளவு புனிதமானது.அன்பின் அடிப்படை.,வாழ்க்கையின் அஸ்திவாரம்..!பாரதிராஜா,பாக்கியராஜ்...போன்ற பல காதல் திரைப்பட இயக்குன இமையங்கலாலேயே முழுமையாக காட்ட முடியாதது காதல்..ஏன்னா அது அவ்வளவு உண்மையானது..!(எவ்வளவு படம் எடுத்தாலும் நீங்க திருந்த மாட்டீங்கடா?)

கிளுகிளுப்பு பாகம்-01(பஸ்)

ஒரு மனுஷன் காலையில் எழுந்து ஏதோ தேவைக்காக பஸ்ல போவம் என்று கிளம்புறான்..அவன் பஸ்ல எறினதும்..அங்க காட்டுறாங்க பாருங்க கொஞ்ச சீன்...சும்மா சகீலா படத்தில வாற குஜால் சீன் தோத்துபோய்விடும்..
அவ்வளவத்துக்கு பஸ்ல இவங்க பெரிய அக்கப்போர் பண்ணுறாங்க..!நீங்க அதை மட்டும் பார்த்தீங்க என்றால் நீங்கள் போற தேவைக்கு போகாமல்...வழியில இறங்கி NET CAFEக்கு போகவேண்டி இருக்கும்..!
("தினம் தினம் இதை பார்க்குறேன்...துரும்பென உடல் இளைக்கின்றேன்")
                       
                     பஸ்க்குள் லீலை செய்யும் மன்மதா இதுக்கு ஒரு முடிவே இல்லையா?
என்னத்த ராசா அதுக்குள்ள தொலைத்தாய்..?
ஒரு காதல் ஜோடி பஸ்ல நிற்கிறாங்க..என்று வைத்துகொள்ளுவம்..ஏதோ அப்படி கட்டிப்பிடிக்காமல் நின்றால் அவள் விட்டுட்டு ஓடிப்போயிடுவாள் என்றது போல காத்துக்கூட போக முடியாமல் அவளோ இறுக்கமாக கட்டிபிடித்துகொண்டு இருக்குறது..கட்டிப்பிடித்துட்டு இருந்தா பறவாயில்லை..சும்மா நிற்பாங்களா அவங்க..அவளின் இடுப்பில இவன் வீணை வாசிக்குறான்..(அவன் வாசிக்குற வாசிப்பில வார சத்தம் காதை கிழிக்குது???)சத்தியமா தெரியாமல்தான் கேட்கின்றேன்..உங்க ஊர்ல இதுக்கு பேரா காதல்..?

சொந்தம்,பந்தம் எதுக்கும் அந்த நேரத்தில பக்கத்தை இருக்குறது கூட தெரியாம..சின்னவங்க பெரியவங்க என்று கூட பார்க்காம..இவங்க செய்யுற கூத்தை பாருங்க..எல்லா காம லீலையையும் நீங்களே செய்து காட்டுறது அப்புறம் அதை பார்த்த ஒருத்தன் சும்மா கிள்ளிப்பார்த்துட்டான் என்றால் ஆ...ஊ..என்று கத்தி ஊரை கூட்டுறது..! இது என்ன நியாயம்..?(ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பீலிங் என்று சொல்ல வாறீங்களா??? தக்காளி சுட்டே புடுவன்..:D)

கிளுகிளுப்பு பாகம்-02(கடற்கரை)

கதையின் களம் கடற்கரை;(இலங்கையில் கொழும்பும் அதன் கடற்கரை) அவன் அவன்..காத்து வாங்க போனேன் நல்ல கவிதை வாங்கி வந்தேன் என்ற காலம் போய்..காத்து வாங்க போனேன் நல்ல பிட்டு சீன் பார்த்து வந்தேன் என்று சொல்லும் நிலைமை வந்துவிட்டது...!
ஆங்காங்கே வளர்ந்திருக்கு புதரு..அதுக்குள்ள அனைக்குறாங்க பலரு...அதை பார்த்து திகைச்சு போனாங்க சிலரு..!(அப்பாடா T.R ட மானத்தை காப்பாத்தீடேன்...)

உண்மைல நீங்க கடற்கரைக்கு போனா என்ன செய்யனும்..? எதிர்காலத்தை பத்தி எவளவோ தீர்மானம் எடுக்கலாம்..இல்லையா வருங்காலத்தில எத்தனை பிள்ளையை பெத்துகலாம் என்று யோசிக்கலாம் அதை விட்டுட்டு நீங்க கடற்கரையிலையே பிள்ளையை பெருவதுக்கு வழி பார்த்தால் என்ன நியாயம்...?இல்லாடில் சின்னபிள்ளைதனமா கடல் தண்ணீல ஓடிப்பிடித்து விளையாடலாம்(ஓடி சரி இவங்க பிடிக்குற பிடியை பத்திதான் தெரியுமே???) இவங்களை நம்பி ஒரு ரைமிங் ஆக கூட கதைக்க முடியலை...!
                                                       
                             ஏனம்மா அவனை(???) இப்படி நசிக்கிராய்..அவனை(???) சும்மா இருக்கவிடன்..!
யார் மடியில யாரு..பார்த்தவங்க கைல பீரு..!
வெளிமாவட்டங்களில் இருந்து குறிப்பாக அ(இ)ந்த LOCATION ஐ தேடி வாறாங்கையா..இவங்க..!வந்தது தான் வந்தாங்க...களைப்பாற சும்மா இருப்பாங்களா..?இல்லை...அந்த நேரம் பார்த்து இவங்களுக்கு கை அரிக்க தொடங்கும்..அவங்களும் சும்மா இருக்க மாட்டங்க...எங்களையும் நிம்மதியா இருக்க விடமாட்டாங்க..(நாங்களும் ஆண்தானே நாங்களும் பாவம் தானே..எங்களுக்கும் அது அது??? தோணுமதானே..!) எல்லாம் முடித்த பிறகு கடலை,ஐஸ் கிரீம் எல்லாம் சாபுடுவாங்க..அது ஏன் என்றுதான் எனக்கு புரியலை..?நண்பன் சொல்லுறான் அது எல்லாம் விட்ட தெம்பை திருப்ப எடுக்குறதுக்குதான் என்று...(நீங்க என்ன நினைக்குறீங்க???)

                                         புதரை நோக்கி ஒ(இ)ரு படை எ(இ)டுப்பு..என்ன அவசரம் பாரு..!

நாங்க நாலு ஐந்து பசங்க ஒன்னா சேர்ந்து கிடைக்கிற கொஞ்ச நேரத்தில கடற்கரைக்கு போய் அங்கை சும்மா பம்பலாக விளையாடுவம் என்று போனால் எங்கை எங்களை விளையாட விடுறாங்க..(அவங்க விளையாடுறதைதான் பார்க்க விடுறாங்க...:P) நாங்க போகும் போது இனிமையான ஒரு இளையராஜாவின் LOVE SONG ஒன்று கேட்டுட்டு போனால் திரும்பி வரும்போது ஷனாக்கானின் ITEM SONG பார்க்கவேண்டிய நிலைமைக்கு போகவேண்டி இருக்கு...(இப்படியா சுத்துது உலகம்)

ஒன்னுமே தெரியாத ஒருவனுக்கு அனுபவத்தையையும் அவனது ஆசையையும்(காமத்தையும்) தூண்டி விடுவது இந்த புழுத்துப்போன காதல் ஜோடிகள்தான்..பிறக்கு அதை பார்த்த அவன் பாலியல் பலாத்காரம் செய்து விட்டான் என்று குளறுறது..(நீங்கதான் எல்லாத்துக்கும் முக்கிய தொடக்க காரணம்...!) தெரிந்தவங்க வந்தால் இருந்த புதருக்கு பின்னாலை ஒரு கள்ளப்பாதையை அமைத்து ஓடுகின்றார்கள்..
                              (எவ்வளவு முன்னேற்றம் அப்பா..)

குற்றச்சாட்டு:- இவர்களை பார்ப்பதற்க்கு,இவர்கள் உல்லாசமாக இருப்பதை கேடுப்பதற்க்கு என்றே இளம் சமூதாயத்தினர் வருகின்றார்கள் அதுக்கும் குறிப்பாக அவர்கள் தமிழர்கள் தானாம்..!(கொய்யாலை பண்ணுறது கிளுகிளுப்பு அதுல உங்களுக்கு ப்ரீடம்(freedom) வேறை வேணுமோ..தெருநாய் போல வந்தமா....முடித்தமா என்று போகாமல் கதைய பாருங்களேன்...) நீங்க ரூம்ல இருக்கும்போது யாரும் வந்து பார்த்தான் அது பிழை..போது இடத்தில நீங்க 'சூப்பகுளு' போட்டு ஓட்டினது போல வாயையும் வாயையும் வைத்திருந்தால் ஆனானப்பட்ட எஸ்.ஜே.சூர்யாவாக இருந்தாலும் நின்று பார்க்கத்தான் செய்வார்..அது யாராக இருந்தாலும் பார்க்கத்தான் முடியும்..நாயை கல் அடித்து விரட்டுவதை போல அடித்து துரத்தவா முடியும்...?(உங்களுக்கு இதுலயும் சரி..எதுலயும் சரி தமிழன்ல ஒரு கண்ணு...அய் ஆசைய பாரு..அஸ்க்கு புஸ்க்கு...:P)

கிளுகிளுப்பு பாகம்-03(பார்க்)

சின்ன பிள்ளைகள் விளையாடும் இடமையா..அது..!அதிலயாவது இவங்க தங்களது விளையாட்டுகளை விட்டு வைத்தாங்களா..அங்கயும் இவங்க அக்கப்போர் தாங்க முடியலைங்க..அங்கை ஒரு குடையை வைத்து அதுக்குள்ளயே ரெண்டு பேரும் போய் என்னதான் செய்யுறாங்களோ(தேடுராங்களோ) தெரியலை..இதை பார்த்த போது எனக்கு சகுனி படத்தில் தலைவர் சந்தானம் சொன்னதுதான் நியாபகம் வந்தது..!

                                            ரைற்ரு சைத்தான் குடைக்குள குடும்பம் நடத்துது..!

சந்தானம்:-குடைக்குள் குடித்தனம் செய்யுறவரே..என்ன நேரம்...?
கார்த்தி:-அரை மணித்தியாலம் ஆகியும் எந்த பதிலும் இல்லையே..
சந்தானம்:-பொறு மச்சான் அவன் முதல்ல கையை எங்க வைத்திருக்கிறான் என்று தேடி எடுத்த பிறகுதானே நேரம் சொல்ல முடியும்..(அவ்வவ்....முடியலை...சாவடிக்குறாங்க மை லோட்...)

குடைக்குள்ள தேடுறத்தை வெளிய எங்கையாவது தேடினால் ஏதாவது புராதன பொருட்கள் கிடைத்தாலும் கிடைக்கும்..தேடினதையே எத்தனை தரம்தான் தேடிப்பார்ப்பார்களோ தெரியலப்பா..!இருந்து கதையுங்க என்று நீட்டு நாற்காளியை போட்டு வைத்தால் இவங்க இருந்து கதைக்காமல் படுத்து புரளுறாங்க..

இது எல்லாம் நான் ஒன்னும் சமூக அக்கறை கருதி சொல்வதாக தயவு செய்து யாரும் நினைக்க வேண்டாம்..ஏன்னா அக்கறை என்பது இல்லாத சமூகத்துக்கு அக்கறை சொல்லும் அளவுக்கு நான் இன்னும் வளரலை..! ஒரு சில பேர் இருக்குறாங்க..இதனால் உங்களுக்கு என்ன என்று கேட்க்கும் பிறப்புக்கள்..??? அவர்களை அவ்வாறு செய்ய வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை..காதலின் முடிவிடம் காமம்(ஊடல்,கூடல்) தான் ஆதலால் அது முக்கியம் ஒரு ஆரோக்கியமான நல்ல காதலுக்கு அவை தேவை.. அதுக்காக போது இடத்தில்(தெரு நாய்களை போல) இப்படி தங்கள் அ(ரிப்)ன்பை??? வெளிக்காட்ட வேண்டும் என்றால் அதில் என்ன அர்த்தம் இருக்கு..?(அப்ப அவர்கள் என்ன (சொறி)நாய்களா???)

இப்படி போது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட அந்த ஜோடிகள் உண்மையிலையே திருமணம் செய்துகொள்ள போறார்களா என்று கேட்டால்..?இல்லை..ஒரு போது இல்லை...கடைசியில் யாரோ ஒட்டின சைக்கிளுக்கு ஒரு இளிச்சவாயன் ஓனர் ஆகபோறான்..என்றது மட்டும் உறுதி..(அப்ப நீங்க கேட்குறத்தை பார்த்தால் இது ஒரு கில்மா காதலா?)
நேரம் போக்குவதற்கும் கூடிக்குலாவும் அவனின் காசை கரைப்பதற்க்கும் எடுக்கும் காமப்பசியை தீர்த்துக்கொள்ளவும்தான் இப்போது (ஒரு சிலரை தவிர) எல்லோருக்கும் காதல் தேவைபடுகின்றது..

அனைவருக்கும் தெரிந்த கருத்துள்ள பாடல் வரிகள் இந்த பதிப்புக்கு முக்கியம் என்பதால்...
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்..அதை காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும்...அது எப்பவுமை போதையான நிலவரம்...
அப்ப ஆணும் பொண்ணும் ஒத்துமையா இருந்தீச்சு அது காதலில உலகத்தையே மறந்தீச்சு..அது வாழ்ந்த போதிலும் இல்ல இறந்த போதிலும் அது அழிந்ததே இல்லை...மறைந்ததே இல்ல..
இப்ப எல்லாம் தும்மலைபோல வந்துபோகுது இந்த காதலு..காதலுன்னு சொல்லுறாங்க கண்டபடி சுத்துறாங்க...டப்பு குறைந்தா மப்பு குறைந்தா தள்ளி போறாங்க..
கண்ண பார்க்குது கையை கோக்குது ரூம்ஐ கேக்குது..எல்லாம் முடிந்தபின்னும் FRIENDன்னு சொல்லிகிட்டு வாழுறவங்க ரொம்ப பேருடா..கேட்டு பாருடா...

காதலில் காமம் முக்கியம்...ஆனால் காமமே காதலாகிவிடக்குடாது...!

Post Comment

8 comments:

 1. Replies
  1. ஆமா...இவரு சொல்லணும் என்றுதான் பார்த்துட்டு இருந்தம்...:p

   Delete
 2. தமிழ்நாட்டில் மட்டும் என்ன வாழுதாம் இது தான் நடக்குது .. பலருக்குத் தேவை ஒருமணி நேரம் லாட்ஜ்கள் அவ்வளவே ! அரசாங்கம் அதனை அனுமதித்தால் பொது இடத்தில் இருப்போர் கொஞ்சம் நிம்மதியாகிவிடலாம் !!!

  //காதலில் காமம் முக்கியம்...ஆனால் காமமே காதலாகிவிடக்குடாது...!//

  மிகச் சரியாக சொன்னீர்கள் .. இதே வாசகத்தை சென்னையில் பேருந்தில் கிறுக்கப்பட்டு இருந்ததைப் பார்த்தேன். நீங்க தானா அது ?

  ReplyDelete
  Replies
  1. கண்டுபிடித்துட்டீங்களா??? வெளிய சொல்லாதீங்க..போது சொத்தை சேதப்படுத்தின குற்றத்துக்கு தூக்கிக்கொண்டு போடுவாங்கள்..!!நன்றி தோழா உங்கள் கருத்துக்கு..!

   Delete
 3. i like this page kohulan..... keep it up

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி..நிட்சையமாக தொடர்ந்தும் எழுதுவேன்...!

   Delete
 4. Replies
  1. neenka nakkalukku sollureenkalaa illai unmaikkumae sollureenkalaa??

   Delete