Wednesday, July 18, 2012

நடிகர்களின்(ரஜினி,அஜித்,விஜய்) கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது சரியா...பிழையா...?

எனக்கும் எனது ஸ்கூலில் படித்த ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் அடிப்படையிலேயே இந்த பதிப்பினை எழுதும் யோசனை வந்தது..!அவர் சொன்ன எந்த கருத்துகளிலும் எனக்கு சற்றும் உடன்பாடு இல்லை..!சரி எது எப்படியோ இப்ப நாங்கள் பதிப்பிற்க்குள் போவோம்..!

இந்த பிரச்சனை முன்னம் இருந்தே பரவலாக கதைக்கப்பட்டு வந்த ஒரு விடையமாகும்.அதாவது புத்திமதி, பகுத்தறிவு, கம்மியூனிசம் பேசும் ஆயிரக்கணக்கான அதிபுத்திசாலிகள்(தங்களை தங்களே நினைத்து கொள்பவர்கள்) மற்றவர்கள் எல்லோரையும் அடிமுட்டாள்கள் என்று நினைத்துக்கொண்டு ஒரு சில கேள்விகளை...கேள்விகளை கேட்டா..பரவயில்லை சமூக வலைத்தளங்களில் தங்களை மற்றவர்கள் சமூக அக்கறை உள்ளவர் என்று நினைக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் போடும் அலப்பரைக்கு அளவே இல்லை...!எதோ அப்படி STATUS போடுபவர்கள் மட்டும்தான் நல்லவர்கள் என்றும் மற்றவர்கள் எல்லோரும் நாசமாய்போனவர்கள் என்றும் சமுதாயம் நினைக்கும் என்று ஒரு நப்பாசைதான் அவர்களுக்கு..! 


சரி அண்மையில் ஒருவர் சமூக வலைத்தளமான முகப்பொத்தகத்தில்(FACEBOOK) போட்ட ஒரு STATUSஐ பார்ப்போம்...!


STATUS:- "யாழ் மனோகரா தியேட்டரில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அஜித் நடித பில்லா- 2 திரையிடப்பட்டது. சும்மா சொல்லக்கூடாது அஜித் ரசிகர்கள் கூடி ஆரவாரப் படுத்தினார்கள். அது அவர்கள் தமது ஹீரோவுக்கு தெரிவிக்கும் ஆதரவு.


மறுப்பதற்கில்லை. ஆனால் அதிலும் சிலர் பணத்தை வாரி இறைத்து வெடிகளை வாங்கிக் கொழுத்தினார்கள். வேறு சிலர் தேங்காய்களை கொண்டு வந்து அடித்து உடைத்தார்கள். கடவுளை வணங்குவதுபோல கற்பூரம் கொழுத்தினார்கள். இதற்கு எல்லாம் மேலபோய் பால் அபிஷேகம் வேற நடந்திருக்கண்ணா பாத்துங்களேன்.


வன்னியில் மக்கள், அவையங்களை இழந்து, அன்றாடம் ஒருவேளை சோற்றுக்கு அல்லலுறுகிறார்கள். வறுமையின் காரணத்தால் தற்கொலைசெய்கிறார்கள். ஆனால் அஜித்தின் உருவப்படத்துக்கு பாலை ஊற்றி, சம்பல் செய்ய உதவும் தேங்காயை நிலத்தில் அடித்து உடைத்து இவர்கள் அடிக்கும் ரவுசு தாங்க முடியவில்லை.. :("

விசாரணைக்கு  STATUSஐ இழுப்பம்:-இங்கு அவர் அஜித்தின் பில்லா-2 இனை பற்றி கூறியிருப்பதால் அதனையே தொடர்ந்து நோக்குவோம்..!

தைப்பொங்கல்,சித்திரைப்புத்தாண்டு,தீபாவளி.... போன்ற ஒரு வருடத்திற்க்கு ஒருமுறை வரும் சிறப்பு பண்டிகைகளில் நீங்கள் புத்தாடை அணிந்து கோவிலுக்கு(கடவுளே இல்லை என்று சொல்லிக்கொண்டு) சென்று நல்ல உணவுகள் உண்டு.போதாக்குறைக்கு பட்டாசுகள் எல்லாம் முதல் நாள் இரவில் இருந்தே வெடிக்க ஆரம்பித்து என்று நீங்கள் அந்த பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடும்போது...!ஏன் ஒரு அஜித்தின்(ரஜினி,கமல்,விஜய்) படத்துக்கு பால் ஊற்றினால், பட்டாசு வெடித்தால், தேங்காய் உடைத்தால் மட்டும் குற்றம் சொல்லிக்கொண்டு வருகின்றீன்கள்...?


உங்களிடம் நான் ஒன்று கேட்க ஆசை படுகின்றேன்:-உங்களுக்கு நிம்மதி வேண்டும் என்பதற்காக நீங்கள் கோவில்,குளம்(காதலியுடன்) என்று போகின்றீன்கள்.அவ்வாறு இருக்கும்போது அதே அமைதியையும் அபரீத நிம்மதியையும் திருப்தியையும் தனக்கு பிடித்த நடிகனின் படத்திற்கு போய் அதற்க்கு பால் ஊற்றி, வெடி வெடித்து, தேங்காய் உடைத்து கொண்டாடுவதில் என்ன குறை இருக்கிறது...?

எல்லோரும் நாயாய் பேயாய் உழைப்பது கோடி கொடுத்து வாங்க முடியாத அந்த நிம்மதிக்கும் சந்தோசத்திற்க்கும்தானே..!அவ்வாறு இருக்கும்போது அந்த நிம்மதியை அந்த சந்தோசத்தை ஒரு ரசிகனின் தலைவன்(நடிகன்) பூர்த்தி செய்து விடுவான் என்றால் அந்த நடிகனின் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதில் என்ன பிழை இருக்கின்றது..?

நான் எனக்கு பிடித்த நடிகனின் படம் வெளியாகும்போது என்னால் பிறருக்கு பாதிக்காதவகையில் எவ்வாறெல்லாம் கொண்டாட முடியுமோ அவ்வாறெல்லாம் கொண்டாடுவேன், இதுவரை எனக்கு பாலாபிசேகம் செய்யும் சந்தர்ப்பம் மட்டும் கிடைக்கவில்லை, கிடைத்தால் நிச்சயம் கட்டவுட்டுக்கு பாலூற்றி கொண்டாடுவேன்.கட் டவுட்டுக்கு ஊற்றும் பாலை இல்லாதவர்களாய் பார்த்து கொடுத்தால் அவர்களுக்கு பயன்படுமேயென நீங்கள் கேட்கலாம்.(இதைதான் அந்த  STATUS போட்டவரும் கேட்க வருகின்றார்) உண்மைதான்,நானும் ஒத்துக்கொள்கிறேன்,ஆனால் என்னை கேள்விகேட்கும் நீங்கள்(நீ) உங்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த வேறெந்த மகிழ்ச்சியான விடயங்களுக்கும் பணத்தை செலவழிக்காமல் உங்களுக்கு தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு மீதிப்பணத்தை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துபவர்களாக இருக்கவேண்டும். அதாவது குடி, புகைத்தல், பொழுதுபோக்கு அம்சங்கள், ஆடம்பர உணவு, அலங்கார பொருட்கள், ஆடம்பர பொருட்கள் என பணத்தை எந்தவிதமான சந்தோசமான காரியங்களுக்கும் விரயமாக்காதவர்களாக இருக்கவேண்டும். அப்படியாராவது இருந்தால் உங்களிடம் கட் அவுட்டுக்கு பால் ஊற்றுவதற்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன்...!

சுயநலம் பொதுநலம் என்பன பேச்சுக்கு சரியே தவிர ஆழ்ந்து பார்த்தால் மனிதனின் அனைத்து செயலுமே சுயநலம்தான்.மற்றவர்களுக்கு உதவுதல்,கொடை,தர்மம் எல்லாமே நல்ல விடயங்கள்தான்.ஆனால் இவற்றால் ஒருவர் அடையப்போகும் மனநிறைவுதான் அவரை இவற்றை செய்யத் தூண்டுகிறது.(எல்லோரும் அலைவது அந்த மன நிறைவுக்குதானே..!) மன நிறைவு என்னும் சுயநலத்திற்காகவே இவ்விடயங்களை அவர் செய்வாரெனில் அதுவும் சுயநலமே.ஆக சுயநலமில்லாமல் வாழவேண்டுமென ஒருவர் நினைப்பதே சுயநலம்(சத்தியமா சொந்த டயாலாக் இல்ல).எனவே அவரவர் மனதிற்கு சந்தோசம் எதுவோ அதையே அனைவரும் செய்கின்றனர்.அது இன்னொருவரை அல்லது மற்றவர்களின் உணர்வை காயப்படுத்தாதவரை ஆரோக்கியமான விடயமே...!


சரி இப்ப சொல்லுங்க..இவ்வாறு தேங்காய் உடைப்பதால், பால் ஊற்றுவதால் உங்களுக்கு என்ன இடையூறு வந்துவிடபோகின்றது.நீங்கள்(நீ) எல்லா விதமான தேவைகளையும்(பொழுதுபோக்கு அம்சங்கள், ஆடம்பர உணவு, அலங்கார பொருட்கள், ஆடம்பர பொருட்கள்) முழுமையாக நிவர்த்தி செய்துவிட்டு இப்போது வந்து அவனை நீ பால் ஊற்றாதே, தேங்காய் உடைக்காதே என்றால் என்ன நியாயாயம்..?(கொய்யாலே மாதமாதம் பாருக்கு தண்ணிக்கு கோடிக்கணக்கில குடுக்கும் போது வராத விழிப்புணர்வு 10 லீட்டர் பாலூத்தினதும் வந்திட்டுதா!!! கண்ணுங்களா பாலில்லாத குழந்தைகளுக்கு நேரடியா பாலைத்தான் கொடுக்கணும் என்றில்லை!! பீர் வாங்கிற காசிலும் பால் வாங்கலாம்!!! ரசிப்புத்தன்மை என்பது மாறுபட்டது!!! பாலூத்துவது உனக்கு கேவலமா பட்டா, இன்னொருத்தனுக்கு விசிலடிப்பது கேவலமா படும், இன்னொருத்தனுக்கு கை தட்டுவது கேவலமா படும், இன்னொருத்தனுக்கு தியேட்டருக்கு போய் படம் பார்ப்பதே கேவலமாய் படும்; ரசிகன் கொடுக்கிற பாலும், பணமும் நடிகனுக்கல்ல; அது ரசிகனது மகிழ்ச்சிக்கு, கொண்டாட்டத்திற்கு கொடுக்கப்படுவது; வருடத்தில் ஒருநாள் கொண்டாடிவிட்டு மறுநாள் அவன் வேலையே அவன் பார்க்க போய்விடுவான், இந்த சமூக விழிப்புணர்வு புண்ணாக்குகள் அதையே வருடம் முழுவதும் சொல்லி சொல்லி தங்களை ஹீரோவாக்கிக்கும்!!!!)

அதுசரி போகட்டும் இவ்வாறு ஒரு நடிகனுக்கு பால் ஊற்றுவது,தேங்காய் உடைப்பது என்று இருப்பவர்கள் யார்..என்று பார்த்தல் அவர்கள் பெரும்பாலும் மிகவும் உடலை வருத்தி தினமும் அயராது உழைபவர்கள்(மரம் வெட்டுபவர், கூலி வேலை செய்பவர், பதநீர் அரிபவர்...) இவர்கள் தங்களது குடும்பத்துக்கு கொடுக்காமல் இவ்வாறு செய்தால் கொஞ்சம் யோசிக்கலாம்..அனால் அவர்கள் குடும்பத்தையும் திருப்திகரமாக பார்த்து; ஒரு வருடத்தில் ஒரு முறை வரும் தனது தலைவனின் படத்துக்கு தனக்கு பிடித்தது போல தன்னை திருப்திப்படுத்துவது போல நடந்து கொள்வதில் என்ன பிழை இருக்கின்றது..?அவ்வாறு கஷ்டப்பட்டு உழைப்பவன் ஊற்றும், உடைக்கும் பாலையும், தேங்காயையுமா சமூக அக்கறைகொண்ட அதிகமாக நிரம்பி வழியும் நீங்கள் கஷ்டத்தில் வாழும் மக்களுக்கு கொடுக்க போகின்றீன்கள்..?(இப்படி நீங்கள் பீத்திக்கொள்வதை விட ரோட்டில இறங்கி பிச்சை எடுக்கலாமே...? மானம்கெட்டவங்களா..!)    

இவர்கள்(நாங்கள்)தான் ஒருநாள் அதுக்கும் முதல்நாள் முதல் காட்சிக்கு மட்டும் தனக்கு பிடித்த தனக்கு முழுமையான திருப்தியையும் சந்தோசத்தையும் தரபோகின்ற ஒரு நடிகனின் ஒரு வருடத்து ஒருமுறை வரும் பண்டிகை போன்ற படத்துக்கு பால் உற்றுகின்றார்கள்..தேங்காய் உடைகின்றார்கள்...இதை எல்லாம் உங்கள் சாயலில் இருந்து சரி என்றே வைத்துக்கொண்டு அடுத்த கொளுக்கியை போடுவம்...!


கடவுள் இல்லை என்பவர்களை தவிர்த்து ஏனையவர்கள் ஏதாவதொரு கடவுளை வழிபடுகின்றனர், கோவில்களுக்கு போகின்றனர், கடவுளுக்காக பணத்தை செலவு செய்கின்றனர், சாமியார்களை நாடிப்போகின்றனர்(நித்தியானந்தா, அம்மாபகவான் உட்பட ). இதனால் கடவுள் இல்லை என்பவர்களுக்கு என்ன நஷ்டம் வந்திச்சு? ஒருவன் நம்பிக்கையில் வழிபடலாம் , ஒருவன் பயத்தில் வழிபடலாம், ஒருவன் மனத்திருப்திக்காக வழிபடலாம் , சிலர் கடமைக்காக கூட வழிபடலாம். ஆக மொத்தத்தில் கடவுளை வழிபாடும் எல்லோருமே ஏதோ ஒரு காரணத்திற்க்காகத்தானே வழிபடுகிறார்கள்? இதனால் அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் மனநிறைவு கிடைக்கின்றது என்றால் கடவுள் இல்லை என்று வைத்துக்கொண்டால் கூட அவர்களது வழிபாடு அவர்களுக்கு நேர்மறையான சக்தியை கொடுக்கும். அதை விடுத்து கடவுள் இல்லை எதற்காக இந்த முட்டாள்கள் வழிபடுகிறார்கள் என்று கத்திக்கத்தியே பகுத்தறிவாதிகள் சக்தி வீணடிக்கப்படுகிறது. 

ரி இவளவும் சொல்லுறீங்கதானே நீங்கள் மட்டும் இல்லாத கடவுளுக்கு தினமும் மூன்று வேலையும் எத்தனை லீட்டர் பால், எவ்வளவு தேங்காய் என்று அநியாயம் செய்கின்றீர்கள்..அப்படி என்றால் நீங்கள் அதை எல்லாம் சேகரித்து உங்கள் கடவுளின் பெயரை சொல்லி இல்லாதவர்களுக்கு கொடுத்து இருக்கலாம்தானே..?ஆனால் இங்கை கூட பாருங்க ஏதோ கடவுளை கும்புடுறம் என்று பீத்திக்கொள்ளும் நீங்கள் செய்யாத ஒன்றை அந்தே நடிகனின் ரசிகன் தனது தலைவனின் பிறந்தாநாளை முன்னிட்டு எத்தனை பேருக்கு சாப்பாடு கொடுக்கின்றான்...ஆனால் நீங்கள் உங்கள் சொந்தகாரர்கள் வீட்டில் சமைக்காமல் கோவிலில் வந்து செம கட்டு கட்டுவதட்க்கு என்று அன்னதானம் என்று ஒரு இழவை வைக்கின்றீர்கள் இதிலும் உங்கள் சாதி மக்கள் மட்டும்தான் கலந்துகொண்டு ஒரே பந்தியில் அமர்ந்து சாப்பிட முடியும்..அப்படி உங்கள் சாதி இல்லாதவர்கள் கோவிலுக்கு ஒதுக்கு புறமாக இருக்கு மரத்துக்கு கீழ் மிருகங்கள் போல நீங்கள் போடும் மிச்ச சொச்சத்தை சாப்பிட வேண்டும்...!

இவ்வாறு மனிதாபிமானம் இல்லாமல் போலியாக சமூக அக்கறை உங்களுக்கு மட்டும் இருக்குக்கின்றது என்று காட்டிக்கொள்ளும் உங்களை விட தனது தலைவனுக்காக நியமாகவே பசியாலும் பட்டினியாலும் வாடும் ஏழைகளை தேடி ஒரு நேர உணவு என்றாலும் கொடுக்கும் அந்த ரசிகர் பட்டாளத்தை என்னவென்று சொல்லி புகழ்வது..(இது எல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியாது..சும்மா போவீங்களா..காத்து வார இடத்தை எல்லாம் மூடிக்கொண்டு...கடுப்பாக்கிறார் மை லோட்..!)

ஆக மொத்தத்தில் இது அவரவர் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விடயம் என்பதைவிட உணர்வு சம்பந்தப்பட்ட விடயம் எனலாம், ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு சுயம் உண்டு, ஒருவர் கடவுள் இல்லை என்று உணர்ந்திருக்கலாம், அதேபோல இன்னொருவர் கடவுள் இருப்பதை உணர்ந்திருக்கலாம், பலர் இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கலாம், அதற்காக தங்களைத் கருத்தை திணிப்பதும் ஏற்றுக்கொள்ளாதவனை முட்டாள் என்பதும் மன நோயாளிகளின் செயற்பாடே(நீங்கள் சமூக வலைத்தளங்களில் இப்படியான உங்கள் முட்டாள் தனமான STATUSகளை போடும்போது அது உங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ மற்றவுக்குள் திணிக்கப்படுகின்றது...!இதை புரிந்துகொள்ளும் போதுமான மன நிலை உங்களுக்கு(உனக்கு) இருக்கும் என்று நம்புகின்றேன்). ஒருவர் கடவுள் இருக்கின்றார் என்று நம்புவது அவருக்கு ஆரோக்கியமான விடயமாக இருந்தால் அதில் தவறென்ன இருக்கிறது?தாராளமாக நம்பலாம்..அதை திணிக்க கூடாது..நீங்கள் எவ்வாறு கடவுளுக்கு பால் ஊற்றுவதையோ தேங்காய் உடைப்பதையோ நாங்கள் எவ்வாறு அது உங்கள் சுதந்திரம் என்று பெரிய மனதுடன் எவ்வாறு வீட்டு விடுகின்றோமோ...அதை போல் நீங்களும் உங்களது புண்ணாக்கு சமூக அக்கறையை ஒரு மூலையில் வைத்துவிட்டு இருக்கலாம்தானே...?

இது மட்டுமா ஒரு ரசிகனாக இருப்பவன் எத்தனை விடையங்களை சமாளிக்க வேண்டி இருக்கின்றது..(சப்பா முடியலை இப்பவே கண்ணை கட்டுதே...!)அண்மையில் யாழ்பாணத்தில் பிரபல்யமான(உதயமான) பத்திரிகை ஒன்று பால் ஊற்றுவது, தேங்காய் உடைப்பது போன்றவற்றை அந்த STATUSக்கு ஒப்பான கருத்துக்களை சரமாரியாக முன்வைத்து ஒரு விளக்க(அலம்பல்) கட்டுரை ஒன்று வெளிவிட்டு இருந்தனர்..இவர்கள் பத்திரிகையாளர்கள் இவர்களை பார்த்து நான் கேட்க முடியாது நீங்க என்ன சமூக அக்கறையோடு செய்தநீங்க என்று..?மாறாக ஒரு கருத்தினை முன்வைக்க விரும்புகின்றேன்..நீங்கள் உங்களது பத்திரிக்கையின் ஆண்டு முடிவு விழா கொண்டத்தத்தின் செலவழிக்கும் செலாவழிப்பின் ஒரு பங்கை இவளோ மூச்சு முட்ட சமூதாய அக்கறை இருக்கும் நீங்கள் ஏன் அதே காசை அந்த சமூதாயத்துக்கு செலவழிக்க கூடாது..?
யாரவது பத்திரிக்கை நண்பர்களே இதுக்கு பதில் கூற முடியுமா..?
(சும்மா போங்கையா ஆளுக்கு ஆயிரம் வேலை இருக்கு...இதைத்தானே சொல்ல வாறீங்க..எனக்கு இங்கை வரைக்கும் அது கேட்குது..)

உங்களது கருத்துக்களுக்கும் மதிப்பு இருக்கின்றது..சமுதாயம் அதனையும் ஏற்கின்றது..ஆகவே மற்றவர்களை முட்டாள்களாக்க முயல்வதை விட்டு விட்டு உருப்படியாக எதாவது செய்யுங்க..?(சக தோழனாக சொல்லும் ஒரு ஆறுதல் வார்த்தை..அறிவுரை இல்லை...)

இறைநம்பிக்கை ஆகட்டும் , சினிமா ஆகட்டும் எதுவுமே பிறரை மனரீதியாகவும் , உடல்ரீதியாகவும் பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். அதேபோல இவை அனைத்துக்கும் ஒரு எல்லை உண்டு, அந்த எல்லை உணவை போலவே ஒவ்வொருவருக்கும் மாறுபடும், இதுதான் வாழ்க்கை என்று இல்லாமல் வாழ்க்கையில் இவை ஒரு அங்கங்கள் என இருந்தால் மகிழ்ச்சியோடு வாழலாம்...!

என்னை பொறுத்த வரைக்கும் நான் சொல்லுவேன் அவ்வாறு பால் உற்றுவதோ, தேங்காய் உடைப்பதோ பிழை இல்லை...இது எனது அறுதியும் இறுதியுமான முடிவு..!


என் தலைவனுக்கு நான் பால் ஊற்றினால் உனக்கென்ன; என் தலைவன் படத்தை இமயமலையில் வைத்தால் உனக்கென்ன..உனக்கென்ன உனக்கென்ன தம்பி உனக்கென்ன...!

Post Comment

15 comments:

 1. Well.. this culture has been there since MGR and Sivaji era. Its not new. but do we really need to continue this culture?? I do understand your points. Thala him self said, take care of your family and your education. We can enjoy the movie without doing this... thats what my point is.

  ReplyDelete
  Replies
  1. இந்த இடத்தில் என்னை பொருத்தவரைக்கும் ஒரு சராசரி மனிதனின் கஷ்டமும் அவனின் விருப்பமும்தான் முக்கியமாக தெரிகின்றது...இதனை நீங்கள் ஏன் கலாச்சாரமாக பார்கின்றீர்கள்...சாதாரண ஒரு நிகழ்வாக நினைத்துவிடு போகலாம்தானே..?கலாச்சாரம் என்பது ஆரம்பித்து எவளோ காலம் என்று தெரியாத ஒரு அம்சம் அதனை ஏன் இதனுடன் சம்பந்தப்படுத்துகின்றீர்கள் என்றுதான் தெரியவில்லை...!

   Delete
  2. தான் தனது உடைகளைதனது விருப்பத்துக்கு அணிவது கலாச்சாரம் எனில் இது ???

   Delete
  3. இதுக்கும் கலாச்சாரம் என்று சொல்ல வரவில்லை இது காலச்சாரமாக மாறினால் என்ன தப்பு என்றுதான் கேட்கின்றேன்...?

   Delete
 2. தான் தனது உடைகளைதனது விருப்பத்துக்கு அணிவது கலாச்சாரம் எனில் இது ???

  ReplyDelete
  Replies
  1. இதுக்கும் கலாச்சாரம் என்று சொல்ல வரவில்லை இது காலச்சாரமாக மாறினால் என்ன தப்பு என்றுதான் கேட்கின்றேன்...?

   Delete
 3. Replies
  1. நன்றி மச்சான்...:)

   Delete
 4. //அதாவது புத்திமதி, பகுத்தறிவு, கம்மியூனிசம் பேசும் ஆயிரக்கணக்கான அதிபுத்திசாலிகள்(தங்களை தங்களே நினைத்து கொள்பவர்கள்) மற்றவர்கள் எல்லோரையும் அடிமுட்டாள்கள் என்று நினைத்துக்கொண்டு ஒரு சில கேள்விகளை...கேள்விகளை கேட்டா..பரவயில்லை சமூக வலைத்தளங்களில் தங்களை மற்றவர்கள் சமூக அக்கறை உள்ளவர் என்று நினைக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் போடும் அலப்பரைக்கு அளவே இல்லை...!எதோ அப்படி STATUS போடுபவர்கள் மட்டும்தான் நல்லவர்கள் என்றும் மற்றவர்கள் எல்லோரும் நாசமாய்போனவர்கள் என்றும் சமுதாயம் நினைக்கும் என்று ஒரு நப்பாசைதான் அவர்களுக்கு..! //

  மச்சி செம.. நான் உன் கட்சியா..

  ReplyDelete
  Replies
  1. நன்றி மச்சான்..உள்ளதை சொன்னால் கொஞ்ச பேர் பைத்தியம்என்று சொல்லுறாங்க..என்ன செய்யுறது...?

   Delete
 5. muttal mattrum moodargalukku enna sonnaalum edupadadhu
  ozhiga ippadiyaana tharudhalai koottam

  ReplyDelete
  Replies
  1. neenkal yaarai solla vaarenka enru theriyalai...apdi neenkal ennaithaan solla vanthirunthaal..neenkal athukku thakuthiyaanavaraa enru muthalila paarththu kolla vendum sariyaa?

   Delete
 6. சூப்பரா சொன்ன தல ,வருஷா வருஷம் வர பண்டிகையில நமக்கு இதுவும் ஒன்னு so dont miss it

  ReplyDelete
  Replies
  1. படம் மட்டும் வரட்டும்... எப்படி கொண்டாடுறம் என்றதை அடுத்த பதிவில பார்ப்பீங்க... நன்றி சகோ...!!!

   Delete