Friday, August 31, 2012

விஸ்வரூபம் : முடிவில்தான் ஆரம்பம்..!!!

தலைப்பினை பார்த்தவுடன் எல்லோருக்கும் உலக நாயகனின் "விஸ்வரூபம்" படத்தின் நினைப்புதான் வந்திருக்கும் (அதுக்கு நான் பொறுப்பாளி அல்ல). ஆனால் இந்த பதிப்புக்கும் அந்த படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தலைப்பு மட்டும் கமல் சாயலில் விளங்காமல் வைக்கப்பட்டதே.!! இந்த பதிப்பு முற்றும் முழுதாக நீங்கள் எதிர் பார்க்காததை பற்றி எழுதப்பட்டிருக்கும்.!! சரி கனக்க பில்டப்பை குடுக்காமல் பதிப்புகள் செல்வோம்..!!

Post Comment

Monday, August 27, 2012

இலங்கையனாக வாழ்வோம்; இலங்கையானகவே இறப்போம்..!!!

உறுதியாக இந்த பதிப்பு ஏதாவது ஒரு தரப்பினரை மனதளவிலாவது காயப்படுத்துமாக இருந்தால் அதற்காக முன்கூட்டியே சமாதானத்தை கூறிக்கொண்டு எனது நாடான இலங்கை தொடர்பான பதிப்புகள் செல்வோம்...


என்ன இல்லை என் இலங்கையில் :- இந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப்படும் மிகவும் கேந்திரத்துவம் மிக்க ஒரு இடத்தில் அமைந்திருக்கின்றது.. இயற்கையாகவே அமைந்த துறைமுகம், எழில் கொஞ்சும் காடுகள், குளிர்ச்சியை ஊட்டும் மலைகள்.. என்று சொல்லிக்கொண்டே போகலாம்.. அந்த அளவுக்கு அழகான மதிப்பு மிக்க ஒரு நாடாக இலங்கை அமைந்திருக்கின்றது..

Post Comment

Friday, August 24, 2012

ஏன் நம்புகின்றார்கள் எதுக்காக நம்புகின்றார்கள்???

நீண்ட காலமாக எனக்கு மட்டும் இல்லை எல்லோருக்கும் இருக்கும் ஒரு கேள்வியைத்தழுவியதாக இந்த பதிவினை எழுதத்தொடங்குகின்றேன்.. என் சார்பில் கடவுள் இருக்கின்றார் என்பதையே ஏற்க மறுக்கின்றேன்!! இருந்தும் சமூகம் சார்ந்திருக்கும் போது இவற்றுள் நாமும் அடங்குவதாக ஒரு எண்ணம்!!! பகுத்தறிவு சார்ந்த கருத்துக்களை கூறும் அளவிற்க்கு எனக்கும் இன்னும் பக்குவநிலை ஏற்படவில்லை என நினைக்கின்றேன்.. நான் வாசித்த ஒரு பதிப்பின் சாயலில் எனது கருத்துக்களை உள்ளடக்கியதாக இந்த பதிப்பினை எழுதியுள்ளேன்.!!! சரி பதிப்பிற்குள் செல்வோம்!!!

Post Comment

Thursday, August 16, 2012

தமிழ் இனி மெல்லச்சாகும்...சாகுமா???

குறிப்பு :- தமிழில் இருக்கும் ஒரு அவாவில் கொஞ்சம் அதிகமாகவே எழுதிவிட்டேன்.. எழுதியவற்றை அழித்து அளவாக பதிவிட மனமில்லை.. என்னைப்போல உங்களுக்கும் பிரியம் இருந்தால் சலிப்பினை பொருட்படுத்தாது.. இந்த பதிப்பினை முற்றாக வாசித்து பாருங்கள்..!!! குற்றமும், குற்றவாளிகளும் எனது கருத்துப்பட நோக்கியுள்ளேன்.. குறைகள், பிழைகள் இருப்பின் பதிப்பினை நீங்கள் வாசிக்கும் முன்னதாகவே மன்னிப்பினை கேட்டுக்கொள்கின்றேன்..!!! 


உலகில் உள்ள தொன்மையான மொழிகளில் தமிழும் ஒன்று என்பது நாம் அறிந்ததே (தமிழ் பேசும் மக்கள் இதனை அறிந்து இருப்பார்கள் என்று நம்புகிறேன்). உலகில் இப்போது பேச்சு வழக்கில் உள்ள மொழிகளில், அந்த மொழிகளை தங்கள் பெயராகவோ, தங்கள் குழந்தையை தாலாட்டும் தாலாட்டுப் பாடல்களிலோ, தங்கள் காதலியை புகழ்ந்து பேசும் பொழுதோ , நாட்டுப் புறப் பாடல்களிலோ, அறு சுவைகளிலோ மொழியின் பெயரை வைத்திருக்கின்றார்கள்..

Post Comment

Monday, August 13, 2012

கமலுக்கு அதிகம் வாளி வைக்கும் : சூர்யா..!!!

சூர்யா ரசிகர்களுக்கு :- இந்த பதிப்பு ஓட்டு மொத்தமாக சூர்யாவை கலாய்ப்பதற்காகவே எழுதப்பட்டது. அண்மைக்காலமாக சூர்யாவின் நடவடிக்கைகள் திருப்தி தராதத்தனால் அவரை பற்றி அடுத்ததாக இன்னொரு பதிப்பினை எழுதுகின்றேன். நடிகர்களின் படங்களுக்கு வேட்டு வைப்பது, மற்ற நடிகர்கள் நடிக்க ஒத்துக்கொண்ட படத்துக்கு இடையில் புகுந்து சகுனித்தனம் செய்வது என்று இருந்த சூர்யா இப்போது கொஞ்சம் அதிகமாக போய் இரண்டாவது கமல் நான்தான் என்று சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டாராம். (இது உலக மகா நடிப்புடா சாமி..) சரி சூர்யாவுக்கு சங்கு ஊத தொடங்குவமன்..!!!

Post Comment

Sunday, August 12, 2012

தனுஷும் இருமுனையப் பிறழ்வும்(Bipolar disorder)..!!!

கூடிய எதிர்பார்ப்புடன் வெளிவந்து சொல்லிய விடயங்கள் எதுக்கும் மக்களுக்கு புரியவில்லை என்ற காரணத்தால் படம் தோல்வி அடைந்துவிட்டது என்ற நிலைமைக்கு தள்ளப்பட்ட படம்தான் "Why This Kolaveri..." புகழ் "3" திரைப்படமாகும். அந்த படத்தில் தனுஷுக்கு ஒரு விதமான மன நோய் இருப்பதாகவும் அதனால் தனுஷ் படும் அவஸ்தையையும் மிகவும் தத்துரூபமாக சொல்லியது. இந்த கதை ஒரு ஆங்கில படத்தின் தழுவல் என்றாலும் இவ்வாறான படங்கள் தமிழ் சினிமாவுக்கு கட்டாயமானது. எனவே அந்த படம் சொல்ல வந்த விடையத்தை கொஞ்சம் தெளிவு படுத்திப்பார்ப்போம்.!!! 

Post Comment

Tuesday, August 7, 2012

மைக்கல் ஜாக்சன் ஒரு சபிக்கப்பட்ட மனிதன்..!!!

எனக்கு மிகவும் பிடித்த ஒரு சில பேரில் மைக்கல் ஜாக்சனுக்கு என்று ஒரு தனி இடம் எப்போதும் இருக்கும்.. அவரின் பாடல்கள் எனக்கு விளங்காதா காலத்தில் இருந்து இப்போது வரைக்கும் அவரின் ஒரு தீவிர ரசிகன் நான் ஒரு MJ பைத்தியம் என்று கூட சொல்லலாம். எல்லோரும் அறிமுகத்தில் இருந்து பதிப்பிற்க்குள் செல்வார்கள் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக MJஇன் இறப்பில் இருந்து பதிப்பினை ஆரம்பிப்போம்..!!

இந்த பதிப்பினை மைக்கல் ஜாக்சனின் உயிர் ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்!!!

Post Comment

Monday, August 6, 2012

சூர்யா : போதும் நிறுத்திக்கொள்ளுங்க PLEASE..!!!

வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது :- இந்த பதிப்பு முற்றும் முழுதாக என் கருத்துக்களை கொண்டு எழுதப்படவில்லை. சக பதிவர் "சஜிரதன்" அவர்களின் கருத்துக்களை தழுவியதாக எழுதப்பட்டது என்பதை நீங்கள் பதிப்பை வாசிக்க தொடங்கு முன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

சூர்யாவின் சினி அத்தியாயமே மற்ற நடிகர்கள் குறிப்பாக அஜித் வேண்டாம் என்று கைவிட்ட படங்களால்தான் நிரப்பப்பட்டதென்பது எல்லோருக்குமே தெரிந்த விடயம்... அதை குறை சொல்லவும் முடியாது. வேண்டாம் என்று கைவிட்ட படங்களை எடுத்து நடிப்பது தப்பில்லை.. ஆனால், ஒரு நடிகனுக்கு புக் ஆகி அவரும் நடிக்க சம்மதிக்கும்போது இடையில புகுந்து ஆட்டையைப்போடுறதென்பது மகாகொடுமையான விடயம்....... இந்த விடயத்தில் சூர்யா இருக்கிறாரே ரெம்ப கில்லாடி..... அதுக்குமுதல் சின்னதா ஒரு அறிமுகத்தை சூர்யாவுக்கு வழங்கி விட்டு விடயத்துக்கு போவோம்.....

Post Comment

Sunday, August 5, 2012

குளுகுளு நயன்தாராவின் கிளுகிளுப்பு..!!!

இந்த பதிப்பு (2012.08.05) வீரகேசரியில் வெளியான நயன்தாரா சம்பந்தமான தகவலை தழுவியதாக எழுதப்பட்டது. முற்றும் முழுதாக சினிமா ஆர்வலர்களுக்காக கிளுகிளுப்புடன் எழுதப்பட்ட ஒரு பதிப்பாகும்.

"மாற்றம் ஒன்றே மாறதாது" ஆனால் இந்த மாற்றம் கூட சினிமாவில் மாறுபடும் அதுகும் நயன்தாராவின் வாழ்க்கையில் கட்டம் கட்டி கபடி ஆடியிருக்கின்றது என்றே சொல்ல வேண்டும். நயன்தாரா 2003ஆம் ஆண்டு சினிமாவுக்குள் வந்தார். அவரது முதல் தமிழ் படமாக 2004ஆம் ஆண்டு வெளியான "ஐயா" அமைந்தது. அந்த படத்தில் மிகவும் மென்மையான அடக்கமான குடும்பப்பாங்கான கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்திருப்பார். அந்த படத்தின் இயக்குநர் படத்தில் வரும் "அத்திரி புத்திரி கத்திரிக்கா.." என்ற பாடலில் ஒரு பள்ளி மாணவி போல நீல நிற பாவாடை போட்டு நடனம் ஆட வைத்திருப்பார். அந்த பாவாடையை கொஞ்சம் கட்டையாக மாற்றினால் என்ன?? என்று கேட்டதற்க்கு நயன்தாரா சொன்ன பதில் "நான் தமிழில் ஒரு சினேகாவாக வரவேண்டும் அப்படி நடிக்க முடியாது" என்று சொல்லி விட்டார். அப்போது நயந்தாரவிற்க்கு தெரியவில்லை வருங்காலத்தில் "சிலுக்கு சுமிதா"வின் இடத்தை தான்தான் நிரப்பப்போகின்றேன் என்று.!!

Post Comment

Thursday, August 2, 2012

தேவ(ர)டியார்கள் ஒரு கலாச்சாரம்!!!

தேவரடியார்கள் இவ்வார்த்தையின் பொருள் என்ன என்பதனை பார்த்தால், தேவர்களுக்கு அதாவது கடவுளுடைய அடியார்கள், கடவுளுக்கு சேவை செய்ய தலைப்பட்டவர்கள். ஆண்கள் எப்படி துறவு மேற்கொள்ளுகிரார்களோ அதே போல் பண்டைய தமிழகத்தில் பெண்களுக்கும் சுதந்திரம் இருந்தது. அவர்களும் தங்களின் மனத்துக்கு விரும்பிய கடவுளுக்கே தங்களின் வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்துவந்தார்கள். இவர்கள் தாங்களாகவே முன்வந்து, கோயிலில் சேவை செய்துவந்தார்கள். தேவரடியார்களுக்கு, வேண்டிய அளவுக்கு பொருளும் நிலமும், வீடும் மன்னர்களால் அளிக்கப்பட்டது. பண்டைய தமிழகத்தில் இவர்கள் மிக மிக உயர்ந்த இடத்தில வைத்து மரியாதை செலுத்தினார்கள் அக்கால மன்னர்கள். மன்னன், அந்தணனுக்கு அடுத்து இவர்கள் தான் மிகவும் மதிக்கபட்டார்கள். பல்லக்கில் ஏறி போகும் உரிமையும் இவர்களுக்கு இருந்தது. பலர் கோயில்கள் கட்டியும், கோயில்களுக்கு தானம் அளித்தும் சேவை செய்துள்ளார்கள்.

Post Comment