Sunday, August 12, 2012

தனுஷும் இருமுனையப் பிறழ்வும்(Bipolar disorder)..!!!

கூடிய எதிர்பார்ப்புடன் வெளிவந்து சொல்லிய விடயங்கள் எதுக்கும் மக்களுக்கு புரியவில்லை என்ற காரணத்தால் படம் தோல்வி அடைந்துவிட்டது என்ற நிலைமைக்கு தள்ளப்பட்ட படம்தான் "Why This Kolaveri..." புகழ் "3" திரைப்படமாகும். அந்த படத்தில் தனுஷுக்கு ஒரு விதமான மன நோய் இருப்பதாகவும் அதனால் தனுஷ் படும் அவஸ்தையையும் மிகவும் தத்துரூபமாக சொல்லியது. இந்த கதை ஒரு ஆங்கில படத்தின் தழுவல் என்றாலும் இவ்வாறான படங்கள் தமிழ் சினிமாவுக்கு கட்டாயமானது. எனவே அந்த படம் சொல்ல வந்த விடையத்தை கொஞ்சம் தெளிவு படுத்திப்பார்ப்போம்.!!! ஒரு சாராருக்கு இந்த நோயை பற்றி சொல்லும் போது புரிந்துகொள்ள முடியும்; அவ்வாறு புரிந்துகொள்ள முடியாதவர்கள் இந்த பதிப்பின் நடுப்பகுதியில் இந்த நோயை "3" திரைப்படத்துடன் ஒப்பிட்டு தெளிவுபடுத்த முயற்சி செய்துள்ளேன் அதனை வாசிக்கவும்.(எல்லோரும் "3" படம் பார்த்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் பதிப்பினை எழுதியுள்ளேன்..!)


முதலில் நோயை பற்றி கொஞ்சம் பார்ப்போம் :- இருமுனையப் பிறழ்வு (Bipolar disorder அல்லது bipolar affective disorder) அல்லது இருதுருவக் கோளாறு என்பது கிளர்ச்சி-சோர்வு கோளாறான ஓர் உளநோய் ஆகும். உளநோய் கண்டறிதலில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அதீத உற்சாக நிலை நிகழ்விருந்து ஒன்று அல்லது மேற்பட்ட சோர்வு நிகழ்வுகள் இருப்பினும் இல்லாதிருப்பினும் அது இருமுனையப் பிறழ்வாக வகைப்படுத்தப்படுகிறது. உள்ளம் மிகவும் உயர்ந்த உணர்ச்சிகளுடன் இருக்கும் நிலை பித்து என அழைக்கப்படுகிறது. இவ்வாறான மிக உயர்ந்த மன உணர்நிலைகளை எட்டியவர்கள் பொதுவாக உளத்தளர்ச்சி உணர்நிலைகளையும் உணர்வதுண்டு. சில நேரங்களில் இரண்டும் ஒரே நேரத்தில் நிகழும் கலந்த உணர்நிலையிலும் அவர்கள் இருக்கலாம். இத்தகைய இருவேறு அதீத மனநிலைகளுக்கு இடையே "வழமையான" உணர்நிலைகளிலும் இருப்பார்கள்; ஆனால், சில நபர்களுக்கு தளர்வும் உற்சாகமும் விரைவாக மாறிக்கொண்டிருக்கலாம் - இது "விரைவுச் சுழற்சி" எனப்படுகிறது. தீவிரமான பித்து நிலைகளில் உளப்பிணி அறிகுறிகளான திரிபுக்காட்சிகளும் மாயத் தோற்றங்களும் வெளிப்படும். இந்த மனக்கோளாறை உணர்நிலை மாற்றங்களின் தன்மை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து இருமுனையம் I, இருமுனையம் II, சைக்ளோதைமியா என்ற பிற துணை பகுப்புகளில் வகைப்படுத்துகின்றனர். இவை அனைத்துமே இருமுனையக் கற்றை (bipolar spectrum) எனப்படுகிறது.

இருதுருவக்கோளாறு உள்ள ஒருவர் பித்துஉளச்சோர்வு ஆகிய இரு உளப்பிரச்சினைகளுக்கும் மாறி மாறி உட்பட்டு துன்பப்படுவார். சாதாரண மனச்சோர்வை ஒருதுருவ மனச்சோர்வு எனலாம். இருதுருவக் கோளாறில் பெரும்பாலும் முதலில் தோன்றுவது பித்து நிலையாகும். அக்காலப்பகுதியில் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு உயர்ந்த சக்தியுள்ள மனோபாவத்துடன் இருப்பதோடு, வன்முறை, குற்றச்செயல்கள், மதுப்பாவனை, குடும்ப பிரச்சினைகள் ஆகியவற்றிலும் ஈடுபடக்கூடும். சிறிது காலம் பித்து நோய் நீடித்த பின் மனச்சோர்வு வரலாம். பித்து நிலையோடு ஒப்பிடும் போது மனச்சேர்வுக்குறிய காலம் குறைவாக இருந்த போதிலும் அதிக வலிமையுடன் தோன்றுவதால், இக்காலப் பகுதியில் தற்கொலை எண்ணங்களுடன் இருக்கக்கூடும். ஒருதுருவ மனச்சோர்வை விட இருதுருவக் கோளாறில் தற்கொலைக்கான வாய்ப்புக்கள் அதிகம்.

அறிகுறிகள் :- இந்தக் கோளாறு உள்ளவர்களின் மூளை உயர் ஆற்றல் நிலையில் இருக்கும். அல்லது மிகக் குறைந்த ஆற்றல் நிலையில் இருக்கும். இரு முனையம் என்பது மூளையின் இந்த இரு தீவிரநிலைகளையே குறிக்கிறது. மூளை உயர்ந்த நிலையில் இருக்கும்போது உணர்ச்சிகள் தீவிரமாக இருக்கின்றன; பயம், மகிழ்ச்சி போன்றவை கடுமையாக உணரப்படும். இந்த நிலையில் பித்து இருக்கும்போது தங்களுக்கான தெரிவுகளை சிந்தித்து செயலாற்றும் பொறுமை இருக்காது; பிறருக்கு கொடை அளிப்பதோ பணத்தைச் செலவழிப்பதோ இயல்புக்கு மாறாக இருக்கும். எது உண்மை எது மனத்தோற்றம் என்று பிரிக்க முடியாத நிலையில் இருப்பர். வெகுண்டெழும்போதும் வன்முறையில் இறங்குவர்; இருப்பினும் இது பொதுவான கருத்துக்கு மாறாக அடிக்கடி நிகழ்வதில்லை. மேலும் பித்து பிடித்தவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடனும் நேர்மறை நோக்குடனும் காணப்படுவர்.இதனால் பெரும் சிக்கலானா செயல்களில் இறங்குவர். பணம் இல்லாதபோதும் நிறைய தங்களிடம் இருப்பதாக எண்ணுவர். இறந்தவர்களை உயிருடன் இருப்பதாக எண்ணிச் செயல்படுவர். மிகவும் உரக்கவும் விரைவாகவும் பேசுவர். இவை எல்லாமே ஒருவரிடம் காணப்படத் தேவையில்லை; உள நோயில் ஒவ்வொருவருமே வெவ்வேறானவர்கள். இந்தக் கோளாறு உள்ளவர்களுக்கும் படைப்பாற்றுத் திறனுக்கும் தொடர்பு இருப்பதாகச் சில ஆய்வுகள் வெளிப்படுத்தி உள்ளன. சிலருக்கு இந்தக் கோளாறால் தங்கள் காதலை பராமரிக்கத் தெரிவதில்லை.

சிகிச்சை :- பிற உளநோய்களைப் போலவே இருமுனையப் பிறழ்வும் மருந்துகள் மூலமாகவும் பிற சிகிச்சை முறைகள் மூலமாகவும் கட்டுப்படுத்த முடியும். இவை ஒவ்வொருவருக்கும் அவரது நோய்த்தன்மை மற்றும் தீவிரம் பொறுத்து மாறுபடும். தங்களால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும் என்று மருந்தை நிறுத்தினால் மீளவும் இந்நோய்க்கு ஆளாவது நிச்சயம். எனவே இந்நோயுடன் வாழ்தல் கடினமாயினும் நோயாளியும் அவரைச் சார்ந்தவர்களும் நோய்த்தன்மை குறித்து முழுமையாக அறிந்து கொண்டால் எளிதாகும். சில நேரங்களில் நோயாளியின் விருப்பத்திற்கு எதிராக மருந்து கொடுக்க வேண்டி வரலாம். மேலும் நோய்த்தன்மையை ஒட்டி சிலர் தற்கொலைக்கும் முயல்வர். இருப்பினும் இந்த நோயைக் குறித்து முழுவதுமாக விளக்குவது உதவுகிறது; சில முறைகள் இந்த நோயை எதிர்கொண்டவர்கள் மெதுவாக தங்கள் நோய்நிலையை உணர்ந்து சிகிச்சைக்கு ஒத்துழைப்பார்கள்.
இருமுனைப் பிறழ்வு சில மருந்துகள் அல்லது பானங்களால் மோசமடையலாம்:
 • காஃவீன் (caffeine) உள்ள தேநீர்காப்பி போன்றவை உணர்வுதூண்டிகள்; உறக்கத்தைக் கெடுப்பதால் இவை இந்நோயுள்ளவர்களுக்கு சிக்கலைத் தரும்.
 • மது அருந்துதல் உறக்கத்தின் ஆழத்தையும் நேரத்தையும் பாதிக்கிறது; மேலும் உளச்சோர்வை உண்டாகும். பழக்கத்திற்கும் அடிமையாக்கின்றது.
 • சிலநேரங்களில் கஞ்சா எடுத்துக் கொள்ளலாம்; ஆனால் பித்து பிடித்த நிலையில் யாரேனும் தனக்கு கெடுதல் விளைவிப்பார்கள் என்ற பயம் உண்டாகக்கூடிய நிலையில் செயலின்றி இருப்பதை மனச்சோர்வாக புரிந்து கொள்ளும் அபாயம் உண்டு.
"3" திரைப்படமும் இருமுனையப் பிறழ்வு (Bipolar disorder) நோயும் :- முழுமையாக திரைப்படத்தை பார்த்தவர்களுக்கும் பார்க்காதவர்களுக்கும் தெளிவாக விளங்கக்கூடிய வகையில் நோயினை(Bipolar disorder) திரைப்படத்துடன் ஒப்பிட முயற்சி செய்கின்றேன்.!! இலகுவில் இந்த நோய் வராது அதையும் தாண்டி இந்த நோய் ஒருவருக்கு வந்தால் இலகுவில் குணமடையாது. நோய்க்கு அடிமையாகி இறுதியில் இறப்பு நிட்சயம் என்பதை தெளிவாகவும் கட்டாயம் எல்லோரும் விளங்கிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் எடுக்கப்பட்டு மக்களின் விளக்கமில்லாத தன்மையாலும் தோல்வியடைந்த "3" படத்தின் காட்சிகளுக்குள் பிரவேசிப்போம்..


இந்த நோய் ஒரு மனிதனை மனிதனாகவே வைத்துக்கொண்டு மனிதனுள் இருக்கக்கூடிய நிதத்தை முழுமையாக இல்லாமல் ஆக்கிவிடும். இந்த படத்தின் தொடக்கக்காட்சியில் இருந்து சந்தோஷம், பயம், கோபம், காதல் என்பவற்றை தனுஷ் வழமையான மனிதர்கள் வெளிப்படுத்துவதை விட கொஞ்சம் அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்டு வெளிக்காட்டுவார். அதுகும் குறிப்பாக சுருதியை பார்க்கும் போதும் காதலை வெளிக்காட்டும்போதும் மிகவும் தீவிரமாக வெளிக்காட்டுவார். இழப்புக்களை எளிதில் தாங்கிக்கொள்ள மாட்டார் என்பதனை சிவகார்த்திகேயன் வெளிநாடு போகும் போது தனுஷ் படும் பாட்டை பார்க்கும் போது இந்த நோய் எந்த அளவுக்கு தனுஷில் செல்வாக்கு செலுத்தியிருக்கின்றது என்பதை மிகவும் திருத்தமாக இயக்கியிருந்தார் இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ்..

தனுஷ் தனது நண்பனுடன் சேர்ந்து குடிக்கும்போது நண்பன் தனுஷுக்கு நோயின் வெளிப்பாட்டை விளங்கப்படுத்த முற்படுவார் அந்த நேரத்தில் தனுஷ் மிகவும் கோபமடைந்து நண்பனுக்கு அடித்து மண்டையை விட்டு Roadடில் தனியே வாகன நெரிசலையும் கவனத்தில் கொள்ளாது இரவில் நடந்துபோகும் நிலை நோயின் உச்சக்கட்ட நிலை என்றுதான் சொல்லவேண்டும். தனக்கு என்ன நடக்கபோகின்றது, சுருதியின் வாழ்க்கை என்னவாகப்போகின்றது என்ற நினைப்பின் வெளிப்பாடாக சபரி மலைக்கு மாலை போடுவது போல ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இந்தக்காட்சி தனுஷ் வெளிக்காட்டும் பயத்தின் அளவினை தெளிவாக காண்பித்திருக்கின்றது.இது மட்டும் இல்லாமல் தான் சுருதியுடன் இருந்தால் தன்னால் சுருதிக்கு ஏதாவது நடந்துவிடும் என்பதற்க்காக தனது நண்பனை அழைத்து வீட்டில் தங்குவது தனுஷின் பயத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடாகும். படத்தில் தனுஷின் பயத்திற்க்கு அளவில்லாமல் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது இந்த படத்தின் அடிக்கோடிடப்படாத பக்கங்கள் என்றே சொல்ல வேண்டும். உலகப்புகழ் பெற்ற "Why This Kolaveri.." பாடளின் Video காட்சியை பார்க்காதவர்கள் இருக்கவே மாட்டார்கள். அந்த பாடலின் இடையிடையே யாருக்குமே தெரியாத சுருதி தனுஷுக்கு மட்டும் தெரிவது போலவும் பாடலின் இறுதில் சுருதி அழைப்பதாக எண்ணி கடலுக்குள் தனுஷ் போவதுபோலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த காட்சி சொல்ல வருவது நோய் வந்த பிறகு நோயாளி சுய கட்டுப்பாட்டை இழந்து விடுவார் என்பதை வெளிக்காட்டியுள்ளது. தான் என்ன செய்கின்றேன் என்பதை உணர முடியாமல் தனுஷ் நடந்து கொள்வதை மிகவும் தெளிவாக வெளிக்காட்ட வைத்திருப்பார் இயக்குநர்..!


தனுஷ் வாங்கிக்கொடுத்த நாயை பிஸ்னஸ்ஸில் வந்த நஷ்டத்தால் அதிக கோபத்து உள்ளாகி அந்த நாயை அடித்துக்கொள்வது போல ஒரு காட்சி இருக்கும் இது தனுஷின் கோபத்தை வெளிக்காட்டி நிற்கின்றது. அடித்துக்கொன்ற நாயை தானே தேடுவது போலவும் ஒரு காட்சி இருக்கும் இது பொதுவாக எல்லோரையும் குழப்பிஇருந்தாலும் அந்த நோயின் வெளிப்பாட்டை ரசிகர்களுக்கு புரிய வைப்பதற்க்கு இவ்வாறான காட்சிகள் அவசியம் என்றுதான் சொல்லவேண்டும். இதை எல்லாவற்றையும் விட "கிளப்"பில் இடம்பெறும் சண்டைக்காட்சியில் தனுஷ் அடிக்கும் ஒவ்வொரு அடியும் பயங்கரமாக இருக்கும். தனுஷ் தனது தலையை தானே காரில் இடிப்பார். வித்தியாசமாக கத்துவார். நடப்பது, அடிப்பது என்பது எல்லாம் முற்றும் முழுதாக முன்னைய தனுஷுக்கு மாற்றமுடையதாக இருக்கும். இதுதான் தனுஷ் இந்த நோய்க்குள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டார் என்பதை எடுத்துக்காட்டும் காட்சியாகும்.

நோயினை குணப்படுத்துவதற்க்காக தனுஷை வைத்தியரிடம் அழைத்து சென்று எவ்வளவு முயற்சி செய்தாலும் தனுஷ் அதற்க்கு முழுமையாக ஒத்துழைக்க மாட்டார். இதுதான் இந்த நோய்க்கு அடிமையாகி விட்டார் என்பதனை வெளிக்காட்டும் உச்சக்கட்ட காட்சியாகும். முழுமையாக இந்த நோய் நோயாளியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவது நோயாளியை இறுதியில் தற்கொலையோ கொலையோ செய்ய வைக்கும் நிலைக்கு தள்ளி விடும். இறுதியாக நோயின் முழுமையான வெளிப்பாடாக இல்லாத யாருக்குமே தெரியாத பச்சையான கலங்கலான ஒரு உருவம் தனுஷுக்கு மட்டும் தெரியும் அந்த உருவம் தனுஷை தற்கொலை செய்ய சொல்வது போலவும் இல்லையே சுருதியை கொலை செய்ய சொல்வது போலவும் இறுதிக்காட்சிகள் அமைந்திருக்கும். இல்லாத ஒன்று நோயாளியை முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும். இதுதான் இந்த படத்தின் இறுதிக்கட்டமாகும். இது படத்தின் இறுதிக்கட்டம் மட்டும் இல்லை இதுதான் இந்த நோயின் இருதிக்கட்டமாகும். கடைசியில் தனுஷ் தற்கொலை செய்வதற்கு படும் கஷ்டத்தையும் கடைசியாக தனது கழுத்தை தானே அறுத்துக்கொண்டு இறப்பது போன்ற காட்சிகள் இயக்குநர் நோயாளியையே நியமாகவே உருவமித்ததாக இருக்கின்றது.

சொல்ல வந்த நோயினை தெளிவாகவும் அந்த நோயின் அறிகுறிகளை மிகவும் தெளிவாக படமாக்கிய தமிழ் சினிமாவின் புது இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ் அவர்களுக்கு பெரிய ஒரு HANDS OFF... படம் தோல்வியடைந்ததாகவே இருக்கட்டும் இவ்வாறான புதுமையான முயற்சிகள் தமிழ் சினிமாவுக்கு இனி முக்கியமானதாகும். இனி இவ்வாறான படங்கள் வரவேண்டும் என்று ஒரு குட்டி வாழ்த்தை சொல்லிக்கொள்வோம்.!!!

சில நல்ல படங்கள் ஏன் ஓடாவில்லை என்பதனை இலகுவில் விளங்கிக்கொள்ள முடியாது. அதனை விளங்கப்படுத்தவும் முடியாது. அதனைப்போல உலகப்புகழ் பெற்ற பாடலை உள்ளடக்கிய "3" படம் ஏன் தோல்வியடைந்தது என்பது வெருமனையே கேள்விக்குறி தான்!!! மக்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு நோயினை தெளிவாக கூறிய ஒரு படம் ஏன் மண்கவ்வியது என்பது மக்களின் தெளிவில்லாத இரசனையை வெளிக்காட்டுகின்றது. என்னை பொருத்தவரை "3" திரைப்படம் எல்லோரும் நிட்சயம் எல்லோரும் விளங்கிப்பார்க்க வேண்டிய சமூக விழிப்புணர்வுடன் கூடிய திரைப்படமாகும்.

"தோல்வியடைந்த படங்களில் "3" படம் முக்கியமானது"

Post Comment

7 comments:

 1. அது தான் சாதாரண மக்களுக்கு புரியும் வரையில் திரைப்படம் இருக்க வேண்டும் அது இயக்குனர் கையிலே இருக்குது அப்பிடின்னு பிரபல சினிமா விமர்சகர்கள் கூறி இருக்கின்றனர் :)

  ReplyDelete
  Replies
  1. இந்த காலகட்டத்தில் விமர்சகர்களின் கருத்தை கேட்டு படம் பார்த்தால் அதோ கதிதான்.. ஒரு தொகை மக்களின் இரசனையை எப்படி ஒரு ஆளின் விமர்சனம் திருப்திப்படுத்த முடியும்... என்னை பொறுத்தவரைக்கும் "3" என்ற படத்துக்கு இதை தவிர இயக்குரர் என்ன செய்ய முடியும்...??? விமர்சகர்கள் சொல்லுறது போல எல்லாம் நடப்பது இல்லை என்றும் வெளிய கதைக்குறாங்க...:)

   Delete
 2. அது எப்படிங்க திடீர்னு இந்த நோய் வருவதாக காட்டுறத ஏத்துகிறீங்க

  ReplyDelete
  Replies
  1. இல்லை நண்பரே தொடக்கத்தில் இருந்தே அந்த நோய் அவருக்கு இருப்பது போலதான் காட்சிகள் நகரும் ஆனால் அது எங்களுக்கு தான் புரியாது...இதுக்கு நல்ல உதாரணமான படம் ஆளவந்தான்...ஆனால் இந்த படத்தில் கமலுக்கு இருக்கும் நோய் வெறு விதமானது...அந்த நோயை பற்றியும் அடுத்து வரும் பதிப்புக்களில் எழுதவுள்ளேன்...:) உங்களின் கருத்துக்களுக்கு நன்றி...

   Delete
 3. நண்பா நோய்குறித்த உனது விளக்கம் எல்லாம் சரி தான் , பாராட்டப்படக்கூடியது கூட!

  ஆனால் உனது வாதத்தை போல , ஐஸ்வர்யா என்ன சொல்லவந்தார் ? இருமுனைபிறழ்வை என்னவென்று விளக்கப் போய் , அது மக்களுக்கு விளங்காதபடியால் படம் தோல்வி கண்டது என புலம்ப போகிறாரா? படம் என்றால் அதன் திரைக்கதையில் ஒரு கோர்வை இருக்கவேண்டும் , அதன் சீர்த் தன்மை எப்போதும் கெட்டுவிடக்கூடாது. முதல் பாதிக்கும் , இரண்டாம் பாதிக்கும் சுத்தமாய் எந்தவித தொடர்புமே கிடையாது. முதல் பாதியை நன்றாக நகர்த்திய இயக்குனர் "அடடே எல்லாம் கைகூடி வந்திருச்சே, இரண்டாம் பாதியில் என்ன பண்ணலாம்" என்று தட்டு தடுமாறி இரண்டாம் பாதியில் தனுசை வியாதிக்காரனாக்கியது தெள்லத்தெளிவாக தெரிகிறது.

  அந்த தடுமாற்றத்தை , ரசிகனுக்கு வியாதி என்னவென்று புரியவில்லை என்பதால் , படம் தோற்றுப் போனது என்று தமிழ் ரசிகனின் அறியாமை மேல் பழியை போட்டு தப்பித்துக்கொள்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் சொலவது போல இந்த படம் ஒரு நோயின் தாக்கத்தை காட்ட வெளிவந்தது என்பதை இயக்குனர் கூட இதுவரை கூறவில்லை. சரி ... அப்படி நோயின் தாக்கத்தை காட்டத்தான் படத்தை எடுத்தார் என்றால் , அந்த இடத்தில் கூட படம் தோலிவிதான். காரணம் அப்படியான ஒரு படத்தில் இளமைதுள்ளும் முதல் பாதி அனாவசியமானது. இளமையுடன் ஒரு படத்தை கொடுக்கநினைத்த ஐஸ்வர்யா , முதல் பாதியிலேயே அது முடிந்து போனதால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் , வியாதியோடு படத்தை முடித்தது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

  இல்லை வியாதியை காட்டத்தான் படம் எடுத்தார் என்றால், அதற்கு முன் பாதிக்கும் , பின்பாதிக்கும் சம்மந்தமே இல்லை. அப்படியான ஒரு மொக்கை படம் தோற்றதற்கு ரசிகர்களின் அறியாமையை குறை சொல்வது அபத்தம் நண்பா. காரணம் ஆரம்பகால சினிமாக்களில் ஏதாவது ஒரு கதாபாத்திரம் வீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டால் , அது ஒரு லெட்டர் எழுதிவைத்துவிட்டு போகும். அதனை கூட புரிந்துகொள்ள முடியாத ரசிகனுக்கு அந்த கடிதத்துக்குள் அந்த கதாபாத்திரத்தின் முகம் தோன்றி அந்த கடித்தத்தின் சாராம்சத்தை அதன் வாயாலேயே சொல்லும். அப்படியாக பாமரனாக இருந்த ரசிகன் இன்று தசாவதாரம் "வயல்" மேட்டரை கூட புரிந்துகொள்ளும் அளவுக்கு வள‌ர்ந்திருக்கிறான். எனவே இந்த படம் தோற்றதற்கு காரணமாய் தயவு செய்து ரசிகனின் அறியாமையை காரணம் காட்டாதீர்கள். ரஜினியாகவே இருந்தாலும் "பாபா" போன்ற கொட்டாவிகளை திரைக்கு அனுப்பினால் , அந்த படத்தை தோற்கடிக்கும் தெளிவான மனநிலையில் இருக்கிறான் தமிழ் ரசிகன். இந்த தோல்வி முழுக்க முழுக்க இயக்குனரின் மோசமான திரைக்கதையே காரணம். தான் முற்பாதியில் சொல்லவந்த காதலையும், பிற்பாதியில் சொல்லவந்த தனுசின் வியாதியையும் முழுமையாக சொல்லத்தவறியது முதல் சறுக்கல் . அல்ல்து இரண்டுக்கும் முடிச்சு போட தவறியது அடுத்த சறுக்கல். அடுத்து உணர்வுகளின் கலவை என்று ஏதேதோ சொல்லவந்து இரண்டாம் பாதியை முழுக்க அழுகாச்சியாகவே படம் பிடித்தது அடுத்த எரிச்சல்.

  ஆளவந்தானை இங்கு , இந்த படத்தோடு ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது, காரணம் ஆளவந்தானில் அந்த நோயாளி கமல் ஆரம்பத்திலில் இருந்தே நோயாளிதான், அதோடு அந்த படத்தில் இரண்டு கமல் பாத்திரங்கள் இருக்கும். ஒன்று ஆரம்பத்தில் இருந்தே நல்லாவே இருக்கும் , இன்னொன்று ஆரம்பத்தில் இருந்தே கழன்ற கேஸ் தான். ஆள‌வந்தானுக்கும் இந்த படத்துக்கும் ரொம்ப தூரம்.

  அப்படியானால் முற்பாதியில் நன்றாக இருக்கும் ஒருவனை இரண்டாம் பாதியில் பிறழ்வு நடத்தை உடைய ஒருவனாக காட்டமுடியாதா ? அப்படி காட்டினால் அது தவறா என்கிறீர்களா? ஓ! தாராளமாக காட்டலாம், ஆனால் அதற்கு ஒன்ன்றுடன் ஒன்று தொடர்புபட்ட திரைக்கதையும் , நேர்த்தியான திரைக்கதை பயணமும் இருக்க வேண்டும். சேது படம் பார்த்திருப்பீர்கள். அதுவும் கிட்டத்தட்ட இது மாதிரியான படம் தான் முற்பாதி இளமையோடும் , பிற்பாதி பிறழ்வு நடத்தையோடும் பயணிக்கும். எப்பேற்பட்ட திரைக்கதை? மன்னிக்கவும் .. பாலா போன்ற ஒரு சாதனையாளனை ஐஸ்வர்யாவுடன் ஒப்பிட்டதற்கு. ஆனாலும் நேர்த்தியான ஒரு திரைக்கதைக்கு உதாரணத்திற்காக சொன்னேன். விக்ரமுக்கு மன வியாதி இல்லை, அது ஃபிசிக்கலாக வந்தது என்கிறீர்களா? அப்படியாக இருந்தால் 'ஷட்டர் ஐலேண்ட் " படம் பாருங்கள். அதைவிட சிறந்த உதாரணம் எனக்கு வேறு தெரியவில்லை. மனபிறழ்வு நடத்தையை சொல்லவரும் படம் ஒன்று எப்படி இருக்கவேண்டுமென்று அந்த படம் ஒரு உதாரணம்.

  இப்படியான ஒரு மொக்கை படம் தோற்று போனதற்கு ரசிகர்களது அறியாமையை காரணம் காட்டுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது நண்பா! மறுடியும் உன்பதிவில் தனுசை உயர்த்திவிட வேண்டுமென்ற ஒரு நோக்கம் தெரிவதை தவிர்க்கமுடியாதுள்ளது.சாரி நண்பா........

  நன்றி இவளவு பெரிய பின்னூட்டத்தை வாசித்ததற்கு!


  ReplyDelete
  Replies
  1. இல்லை நண்பா... எனக்கு தனுஷ், சிம்பு என்று ஒரு வேறுபாடும் இல்லை.. எனக்கு அஜித் தான் முக்கியம்..நான் அஜித்தின் தீவிர வெறியன்...என்னை பொறுத்தவரையில் எனது குட்டி அறிவுக்கு எட்டிய வரைக்கும்.. "3" படத்தை நோயுடன் ஒப்பிட்டு நோக்கினேன்... படத்தின் தொடக்கத்தில் இருந்தே தனுஷை ஒரு மன நோயாளி என்று காட்டிஇருக்கின்றார்.. ஆனால் அது தெளிவாக புரிந்துகொள்ள வில்லை.. புரிந்து கொள்ளவில்லை என்று சொல்லுவதை விட புரிந்துகொள்ளப்படவில்லை என்று சொல்லவேண்டும்.. தசாவதாரம் படத்தில் "வயல்" என்ற விடையத்தை படம் பார்த்தவர்களில் எத்தனை பேருக்கு விளங்கியது என்று சொல்ல முடியுமா??? எல்லோருக்கும் புரிந்தது என்று இல்லை.. ஒரு சமுதாயம் மட்டும்தான் முன்னேறி இருக்கின்றது.. ஆனால் இன்னும் அதை விட அடிமட்டத்தில் ஒரு ரசனை உடைய கூட்டம் இருக்கின்றது அதனை நீங்கள் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்..!!!

   Delete
  2. ஒத்துக்கொள்வது இருக்கட்டும், படத்தில் ஆரம்பம் முதலே தனுசின் நோய்பற்றி இயக்குனர் சொல்ல வருகின்றார் என நீங்கள் சொல்வது தான் செம காமடியாக இருக்கின்றது. நல்ல சினிமாவை மக்கள் எப்போதும் ஏற்பார்கள், அது வணிக வெற்றியாக இல்லாமல் போனாலும் குறைந்தது பேசப்படும் சினிமாவாகவாது இருக்கும் . மொக்கை படத்தை எடுத்து விட்டு மக்களுக்கு புரியவில்லை என்றால், வெரி சார்... நாங்கள் முட்டாள்களாகவே இருந்துவிட்டு போகிறோம்.

   Delete