Sunday, September 2, 2012

கருணா.. நல்லவர் ரொம்ப ரொம்ப நல்லவர்!!!

தலைப்பை வாசித்தவுடன் எவருக்கும் கருணாநிதியை நியாபகத்துக்கு வந்திருக்காது. இந்த பதிப்பு முற்றும் முழுதாக கருணாநிதியை சார்ந்ததாகவே எழுதப்பட்டிருக்கின்றது. போதுமான அளவிற்க்கு கருணாநிதியை வம்புக்கு இழுத்துவிட்டதனால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக கருணாநிதியை நல்லவராக சித்தரித்து பார்ப்போம் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றேன்.!!! எல்லோருக்கும் உடனடியாக தெரிவது கருணாவின் 'மைனஸ்' மட்டும்தான் ஆனால் கருணாவிடம் எவ்வளோவு 'ப்ளஸ்' இருந்தாலும் அது தெரிவதில்லை அல்லது தெரியவராமல் தடுக்கப்படுகின்றது. இந்த கண்ணோட்டத்தில் இந்த பதிப்பை வாசிக்க "தில்" இருப்பவர்கள் இதனை தொடர்ந்து வாசிக்கவும்...!இவரை நியாபகப்படுத்தியவுடன் எல்லோருக்கும் முதலில் நியாபகம் வருவது 2009ஆம் ஆண்டு இறுதி தமிழருக்கான யுத்தம்தான்!!! உண்மையை சொல்லப்போனால் அந்த காலகட்டத்தில் கருணாநிதி வெறுமனையே ஒரு கை பொம்மைதான் அந்த நேரத்தில் இந்திய மத்திய அரசாங்கம் ஆட்டி வைப்பதை செய்யும் ஒரு அடியாளாகவே கருணா இருந்தார். பழிக்கு பழி வாங்கும் நோக்கத்துடன் சோனியாகாந்தி காய் நகர்வுகளை செய்துக்கொண்டிருந்தார். ஏனெனில் கலைஞரின் கைகளில் அன்று களமுனை மக்களை  காப்பாற்றும் அளவிற்கு சக்தி இருக்கவில்லை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது! கருணாநிதி மத்திய ஆட்சியில் இருந்து விலகிவிடுவேன் என எச்சரித்து, விலகியிருந்தாலும் ஆளும் காங்கிரஸ் கூட்டணி;  தான் முன்வைத்த காலை பின்வாங்கும் நிலையில் இல்லை  என்பது வெட்டவெளிச்சமாக உணரக்கூடிய  உண்மை! அந்த விடயம் கருணாவுக்கும் தெரியும், ஜெயலலிதாவிற்கும் நன்கு தெரியும்!!  கருணாநிதி காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகாததை வைத்து கருணாவை தமிழினத்  துரோகி போலவும், தன்னை ஈழத்து காவலாளி போலவும் பிரச்சாரம் செய்த ஜெயலலிதா ஒன்றும் ஈழத்துப் பிடிப்பில் அதை செய்யவில்லை என்பதும்,  அதுவொரு  பக்கா அரசியல் என்பதும்  சிந்திக்கத் தெரிந்தவர்க்கு தெரிந்த உண்மை!!!


அந்தவகையில் எனக்கு கருணாநிதி காங்கிரசை விட்டு விலகாததுகூட ஆச்சரியமோ, கோபமோ இல்லை; அவர் தனக்கெதிராக தமிழக எதிர்கட்சிகள் கொண்டு நடாத்தும் தமிழினத் துரோகி பட்டத்தை மறைக்க, தனக்கான இமேஜை நிலை நிறுத்த;  தமிழக 'பாமர'மக்களை முட்டாளாக்கத் திட்டமிட்டு  நடத்திய உண்ணாவிரத போராட்ட  நாடகம்தான் இத்தனைநாள்  மாறாத கலைஞர் மீதான கோபத்திற்கு காரணம். அவரது நாடகத்தின் இறுதியில் இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்ப்பட்டுவிட்டதாக  சொல்லிய பொய்களை இப்போது நினைத்தாலும் மனம் குமுறுகின்றது!!! (குமுறுறது எல்லாம் இருக்கட்டும் விடயத்துக்கு வா... என்று நீங்க நினைப்பது எனக்கு புரிகின்றது!!!)யார் ஆட்சிக்கு வந்தாலும்(ராவணன் ஆண்டால் என்ன சூர்ப்பனகை ஆண்டால் என்ன..) ரஜினிகாந்த்துக்கு மட்டும் எந்த சிக்கலும் வருவது இல்லை..ஏன்னென்றால் அவர் எல்லோருடனும் நல்ல மாதிரி என்று சொல்ல வாறீங்களா?? அதுதான் இல்லை.. ரஜினிகாந்த் தனது தேவைக்காக அவர்களை பயன் படுத்துகின்றார்.. அதைப்போல அவர்களது தேவைகளையும் முன்கூட்டியே அறிந்து அதனை நிறைவு செய்தும் வைக்கின்றார்.. (தலைவர் பிழைக்கத்தெரிந்தவர்) ரஜினி மட்டும் இல்லை இந்திய தமிழ் சினிமாவில் பிழைக்க தெரிந்தவர்கள் நிறையப்பேர் இருக்கின்றார்கள்.. முக்கியமாக இளையதளபதி விஜய், பிரசாந்த்... இப்படியே அடுக்கிக்கொண்டே போகலாம்..!!

ஒருவரை குறை சொல்வது என்றால் ஓட்டுமொத்தமாக குறை சொல்வதில் எங்களை அடித்துக்கொள்ள ஆட்களே இல்லை.. எல்லோருக்கும் தெரியும் தமிழ்நாட்டு அரசியலும் சரி; இந்தய மத்திய அரசியலும் சரி ஈழத்தமிழர்களை வைத்துதான் பிழைப்பு நடத்திகொண்டிருக்கின்றது என்று!!! எல்லோரும் பரவலாக முன்வைத்த கருத்து "கருணாநிதி ஒரு துரோகி.." என்பதுதான். அது உண்மையாக கூட இருக்கட்டுமே இப்ப அதுக்கு என்ன??? இவ்வளவு யோசிக்கின்ற நாங்கள் கருணாநிதி ஏன் இப்படி துரோகம் செய்கின்றார் / செய்தார்?? என்பதை எப்போதாவது நினைத்தோமா??? இல்லை.!! ஒருவர் குறை சொன்னால் சேர்ந்து குறை சொல்லுவது என்பது ஆங்கிலேயர் காலத்தில் இருந்து நாங்கள் உருப்படியாக செய்து கொண்டிருக்கும் ஒரு வேலை.!!!

தமிழர்களை கருணாநிதியும் அவர்களின் அரசியலும் ஓட்டு மொத்தமாக பயன்படுத்துகின்றார்கள். இவ்வளவு மக்களின் தலையெழுத்தையும் அவர் மட்டுமே நிர்ணயம் செய்தார். தமிழர்களை அவரால் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு அவருக்கு புத்திசாலித்தனம் இருக்கின்றது என்றால் ஏன் தமிழர்கள் அவரை பயன்படுத்தக்கூடாது??? இதை யாருமே நினைத்திருக்க மாட்டார்கள்.. ஏன் என்றால் குறை சொல்லியே பழகிப்போய்விட்டது!!! இப்போது கூட ஏதோ புரியாத ஒரு மாநாட்டை தமிழர்க்காக நடத்துகின்றார். ஆனால் இன்னும் குற்றம் சொல்வதிலேயே தமிழர்கள் இருக்கின்றார்கள்.

யாரும் அவ்வளவு இலகுவில் மறந்திருக்க முடியாத நாட்கள் 2009ஆம் ஆண்டை ஆட்டிப்படைத்த கொடூர கோர நாட்கள் அவை.. அந்த நேரத்தில் தமிழர்களை நோக்கி ஓங்கிய கைகளில் ஒன்பது நாடுகளில் கைகள் இறுக்கமாக இருந்ததாம். (இது நான் சொல்லலை 7ஆம் அறிவில் சூர்யாதான் சொன்னார்..என்ன செய்வது என்றாலும் அவரை செய்யுங்க!!) அதில் இந்தியா, பாகிஸ்தான் போன்றவை முக்கியமானவை. இதில் இந்தியா, பாகிஸ்தான் பற்றி கொஞ்சம் பார்ப்பம்.. இந்த ரெண்டு நாடுகளும் ஒரு போதும் ஒன்று சேராது. சின்ன ஒரு உதாரணம் கிரிக்கெட் விளையாட்டில் கூட ஒற்றுமை இருக்காது. ஏதோ ஒரு பகையினை மனதில் நிறுத்தியே விளையாடுவார்கள். விளையாட்டை கூட விளையாட்டாக எடுக்க முடியாத அவர்கள் எப்படி தமிழர்களுக்கு எதிராக கை ஓங்க மட்டும் ஒன்றானார்கள்???அவ்வாறான முழு நேர எதிராளிகளை ஒன்றாக்கி தனது தேவைக்காக ஒருவர் பயன் படுத்தி அவர் நினைத்ததை முற்றும் முழுதாக அடைந்து விட்டார் என்றால் அவர் எவ்வளோவு புத்திசாலித்தனம் உடையவராக இருக்க வேண்டும். ஏன் அந்த ஆற்றல் தமிழர்களுக்கு இல்லை??? போராடும் திறமை பற்றி தமிழர்களுக்கு யாரும் சொல்லித்தர வேண்டிய அவசியமோ கட்டாயமோ இல்லை... ஆனால் புத்திசாலித்தனத்தை கொஞ்சம் யாராவது சொல்லித்தந்தால் நல்லா இருக்கும் என்று தோன்றுகின்றது.. (இப்படி சொல்லும் போது கோபம் வரத்தான் செய்யும் ஆனால் இதுதான் நியம்.!!)
இன்று கூட எத்தனை அரசியலும் அதன் அரசாங்கமும் தமிழர்களையும் அவர்களின் பிரச்சனைகளையும் வைத்து பிழைத்து கொண்டிருக்கின்றார்கள்.. ஆனால் தமிழர்களுக்கு அது ஏன் முடியவில்லை??? முடியவில்லை என்று சொல்வதை விட தமிழர்கள் யாருமே அதற்க்கு முயற்சி செய்யவில்லை என்பதே சரியாகப்பொருந்தும்!!! (புரிந்தவன் கைல பண்ணு புரியாதவன் வாயில மண்ணு..!!) 

ஒரு சில சமூக அக்கறை ஜீவிகளின் கருத்து என்னவென்றால் "அழித்தவனை கூட நம்புவோ ஆனால் அழிக்க துணை நின்றவனை நம்ப மாட்டோம்.." இதைதான் சொல்லுறது வேண்டாத வேலை என்று ஒன்றுமே செய்ய முடியாத ஆளை இன்னமும் ஏன் வம்புக்கு இழுக்கின்றீர்கள்?? உங்களுக்கு எவ்வளோவோ வேலை இருக்கின்றது.. ஒரு சமுதாயத்தை உயர்த்த நிலைமைக்கு வர வேண்டும் என்றால் அதற்க்கு தகுந்த, மிகுந்த கல்வி, பொருளாதாரம் வேண்டும். இந்த இரண்டும் இருக்கும் பட்சத்தில் ஒரு நல்ல சமூதாயம் அமைக்கப்படும்.. அதனால் அந்த இரண்டையும் குறிக்கோளாக கொண்டு பயணிக்க வேண்டும்.. 

நாடு கடந்து தமிழ் மக்களுக்காக நன்மை செய்வதற்கு என்று நிறைய பேர் இருக்கின்றார்கள்.. அவர்களிலும் நான்கு, ஐந்து பிரிவுகள் இருக்கின்றதாம்??? பிரிவுகளாக பிரிந்தவுடன் ஒருவரை ஒருவர் குறை சொல்லுவதையே வழக்கமாக கொண்டுள்ளார்கள்.. 
குட்டி கதை :- ஒரு ஓட்டப்போட்டியில் பத்து பேர் ஓடுகின்றார்கள் என்றால் அதில் ஐந்து பேர் மட்டும் ஓட்டப்பந்தயம் நடக்கும் போது ஓடாமல் இடை நடுவில் நின்று ஒருவரை ஒருவர் குறை சொல்லுகின்றார்கள்.. அவன் வேகமாக ஓடுகின்றான்.. இவன் மிக மெதுவாக ஓடுகின்றான்.. என்று குறை சொல்லுகின்றார்கள்.. ஆனால் இறுதியில் ஓட்டப்பந்தயம் முடிவுக்கு வர வெற்றி பெற்றவர்களுக்கு மக்களின் கை தட்டல்கள் கிடைக்கும் ஆனால் அந்த ஐந்து பேருக்கு மாறி மாறி சொல்லிக்கொண்ட குறைகள் மட்டும்தான் மிச்சம்!! எத்தனை பிரிவுகளும் இருக்கட்டும் பிரிவுகள் எத்தனையாக பிரிந்தாலும் பிரிந்ததன் நோக்கம் நினைவில் இருந்தால் போது!!!

கருணாநிதியை ஒன்று எமக்கு புத்திசாலித்தனம் இருந்தால் எங்களின் தேவைக்கு பயன் படுத்திக்கொள்ள வேண்டும்..இலையேல் அவர் கையால் ஆகாதவர் என்று ஒதுக்கி வைத்துவிட வேண்டும். குறை சொல்லுவதை விட்டு விடுவோம்.. எங்களை ஒருவர் பயன்படுத்தினார் என்றால் நாங்கள் ஏன் அவரை பயன்படுத்த நினைக்கவில்லை??? "தில்" இருந்தால் இதை கொஞ்சம் சிந்தனையில் எடுத்துக்கொள்ளுங்கள்... முடிந்தால் நடைமுறையிலும் செய்துபாருங்கள்... (இந்த பதிப்பு யாரும் மாற வேண்டும் என்ற நோக்கில் நிட்சையமாக எழுதப்படவில்லை.. ஏன்னா எனக்கு தெரியும் யாரையும் யாராலும் மாற்ற முடியாது என்று..!!) 

மீண்டும் சொல்கின்றேன் அன்புள்ள தமிழ்நாட்டு அரசியலே :- உங்கள்  அரசியல் சுயலாபத்துக்கு எங்களது நின்மதியை விலைபேசாதீர்கள்!!! போதும், தயவு செய்து உங்களது  ஈழத்து மீதான ஒப்பாரியை நிறுத்திக்கொள்ளுங்கள்!!! இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஈழத்து பெயர் சொல்லி பிச்சை எடுக்கப்போகின்றீர்கள்!! தமிழக தலைமைக்கு எம்மீது உண்மையான அக்கறை இருந்தால் தயவுசெய்து இனிமேலாவது எங்களை வைத்து அரசியல் செய்யாமல் விட்டுவிடுங்கள் கோடி புண்ணியமாக போகும்!! நீங்கள் காட்டும் குரங்கு வித்தைகள் எம்மை இன்னமும் கோபமும், காயமும் படுத்துகின்றது என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்!!!

தமிழக மக்களை எந்த இடத்திலும் நான் குற்றம் சொல்லவில்லை, அவர்களால் உண்மையான உணர்வுகள் வெளிக்காட்டப் பட்டிருக்கின்றன, வெளிக்காட்டப் பட்டுக்கொண்டும் இருக்கின்றன; அதற்க்கு பதிலான ஈடுபாட்டை  இலங்கைத் தமிழர்கள்  இதுவரை தமிழகத்தின் எந்த பிரச்சனைக்கும் வெளிக்காட்டியதில்லை, அந்தவகையில் இலங்கை தமிழனாய் நானும் குற்ற உணர்ச்சியில் உள்ளவன்தான்!! என் கோபம் அத்தனையும் எம்மை பலிக்கடா ஆக்கும் தமிழக அரசியல் சாக்கடைகள் மீதுதான் அன்றி மக்கள் மீதல்ல!!!


"யாரையும் யாராலும் மாற்ற முடியாது என்பது மாற்ற முடியாத உண்மை"

Post Comment

8 comments:

 1. /// ஒரு சமுதாயத்தை உயர்த்த நிலைமைக்கு வர வேண்டும் என்றால் அதற்க்கு தகுந்த, மிகுந்த கல்வி, பொருளாதாரம் வேண்டும். ///

  அமைதியான கோபம்..

  உங்கள் கருத்துகளில் உடன் படுகிறோம்.

  தனி மனிதன் முதலில் தன்னை திருத்திக்கொள்ளட்டும்.. நாடு தானாக சாரியாகி விடும்.

  வாழ்துக்கள்!!!

  ReplyDelete
  Replies
  1. நிட்சையமாக உண்மையான கருத்து.. ஆனால் தனி மனிதன் திருந்திக்கொள்வானா என்பதுதான் சந்தேகம்???? நன்றி உங்களின் வருகைக்கும் உங்களின் கருத்துக்கும்...:)

   Delete
 2. நல்ல இருக்கு பாஸ் பதிவு fbook coment box error வருகிறது meta tag சேர்த்ததில் இடைவெளி விட்டால் இப்படி தான் வரும் சரி செய்யவும் எந்த அரசியல்வதியும் நல்லவன இல்ல எனக்கு இருக்கும் சந்தேகம் எல்லாம் கருணா வா மட்டும் துரோகி
  சொல்லுங்க அப்ப ஜெ ..............எல்லாம் ஒன்னு தான் பிறகு எதற்கு கருணா வா மட்டும் சொல்லணும்

  ReplyDelete
  Replies
  1. நல்ல கேள்விதான்..ஆனால் இலங்கையில் பிரச்சனை காலத்தில் அரசியல் ஆதிக்கம் செலுத்தியவர் கருனாதானே அதனால் தான் நான் அவரை பற்றி அதிகம் கதைத்தேன்...மற்றும்படி ஜே...எல்லாம் நல்லவங்க என்று யார் சொன்னது??? உங்கள் கருத்துக்கும் அக்கறைக்கும் நன்றி..நிட்சயம் இதனை திருத்த வேண்டும்...கூடிய விரைவில் திருத்திக்கொள்வேன்.. நன்றி பாஸ்...:)

   Delete
 3. உண்மையை சொல்கிறேன் நண்பா இந்த பதிவை நான் வாசிக்கவே இல்லை, தலைப்பை தவிர! இந்த மஞ்சள் துண்டு டைனோசரை பற்றி எந்த் செய்தியானாலும், வாசிக்கும் பொறுமை எனக்கு கிடையாது. வாசிக்காமலேயே கிளம்புகிறேன், மன்னித்துவிடு நண்பா!

  ReplyDelete
  Replies
  1. சும்மா வாசித்து பாருங்க...ஆனால் பெரிய comment அடித்தாலும் என்னை பேசக்கூடாது..ஓகே வா... :)

   Delete
  2. இப்போ தான் படித்தேன், நீங்கள் சொல்வது போல அந்த நாயை எல்லாம் எமது நன்மைக்காக பயன்படுத்த முடியாது, அந்த நாயும் பயன் படாது. ஒருவனை ஒட்டுமொத்த உலகமுமே குறை சொல்கிறது என்றால், அவன் அந்த குறை சொல்லுதல்களுக்கு ஏற்றது போல் இருப்பது தானே காரணம்.

   Delete
  3. இதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்...இறுதி வரைக்கும் தமிழர்கள் பயன்பாட்டு பொருளாக இருப்பது கவலைக்கு உரிய விடையமாகும்...

   Delete