Thursday, August 16, 2012

தமிழ் இனி மெல்லச்சாகும்...சாகுமா???

குறிப்பு :- தமிழில் இருக்கும் ஒரு அவாவில் கொஞ்சம் அதிகமாகவே எழுதிவிட்டேன்.. எழுதியவற்றை அழித்து அளவாக பதிவிட மனமில்லை.. என்னைப்போல உங்களுக்கும் பிரியம் இருந்தால் சலிப்பினை பொருட்படுத்தாது.. இந்த பதிப்பினை முற்றாக வாசித்து பாருங்கள்..!!! குற்றமும், குற்றவாளிகளும் எனது கருத்துப்பட நோக்கியுள்ளேன்.. குறைகள், பிழைகள் இருப்பின் பதிப்பினை நீங்கள் வாசிக்கும் முன்னதாகவே மன்னிப்பினை கேட்டுக்கொள்கின்றேன்..!!! 


உலகில் உள்ள தொன்மையான மொழிகளில் தமிழும் ஒன்று என்பது நாம் அறிந்ததே (தமிழ் பேசும் மக்கள் இதனை அறிந்து இருப்பார்கள் என்று நம்புகிறேன்). உலகில் இப்போது பேச்சு வழக்கில் உள்ள மொழிகளில், அந்த மொழிகளை தங்கள் பெயராகவோ, தங்கள் குழந்தையை தாலாட்டும் தாலாட்டுப் பாடல்களிலோ, தங்கள் காதலியை புகழ்ந்து பேசும் பொழுதோ , நாட்டுப் புறப் பாடல்களிலோ, அறு சுவைகளிலோ மொழியின் பெயரை வைத்திருக்கின்றார்கள்..
என்று யாரும் சொன்னதாக கேள்விப்படவில்லை.. உதாரணத்திற்கு தமிழ் அரசன், தமிழ்ச்செல்வன், தமிழ் அரசி  என்ற பெயரில் தமிழ் என்பது மொழியை குறிக்கும். வேறு எந்த மொழி பேசுவர்களும் அந்த மொழியின் பெயரை தங்கள் பெயராக வைத்து கொண்டதாக படித்ததில்லை. அதே போல "தமிழின் சுவை போல" என்று கவிஞர்கள் கூறி கேட்டு இருக்கலாம். உண்மையில் மொழிக்கு சுவை உண்டா? காதலர்கள் கூட தன் காதலியை "அவள் தமிழ் போல் அழகு" என்று சொல்லுவார்கள். மொழிக்கு என்ன மனிதனை போல உடல் இருக்கிறதா? இவ்வாறான பல சிக்கலானா குதர்க்கமான கேள்விகளை தன்னுள்ளே கொண்டு இவ்வளவு காலமும் அமைதியாக பல சந்ததி தாண்டி வந்துள்ளது இனிய தமிழ்..!!!


தமிழைப்பற்றி கதைக்கும் போது எல்லோரும் சொல்லும் ஒரு கருத்து "தமிழை வளர்க்க வேண்டும்..." என்று அவ்வாறு சொல்லுபவர்களுக்கு தெரியாது தாங்கள் பிறப்பதற்க்கு முன்பே தோன்றிய தமிழ் இன்று வளர்ந்து ஆலமரமாக நிற்கின்றது என்று... குறிப்பாக இவர்கள்தான் தமிழை போற்ற வேண்டும் என்று ஒரு சட்டமும் இல்லை யாரும் அதனை போற்றலாம் புகழலாம்... ஆனால் அடுத்து அடுத்து வரும் தலைமுறைக்கு தமிழை கடத்த வேண்டிய பொறுப்புக்கள் ஒரு சில நபர்களுக்கு இருக்கின்றது. குறிப்பாக அது தொலைக்காட்சி நிகழ்ச்சி செய்பவர்கள், வானொலி நிகழ்ச்சி செய்பவர்கள் இவர்களை எல்லாம் விட முக்கியமாக சினிமாவில் முக்கிய இடம் பிடித்த நாயகன், நாயகி, இயக்குநர், பாடகர்... இவ்வாறு தமிழ் சுத்தமாக அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதில் இவ்வாறானவர்கள் பெரிதும் செல்வாக்கு செலுத்த வேண்டும்.. ஆனால் அவர்கள் அவ்வாறு செய்தார்களா??? என்று கேட்டால் உடனடியாக செய்தார்கள் என்று சொல்ல முடியாது.. இன்னமும் திருந்த இடம் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்...

சினிமா சார்ந்த ஒரு கருத்தாடல் :- அழகிய தமிழ் மகன் என்ற ஒரு படத்தில் 
"நீயும் நானும் ஒண்ணு
காந்தி பொறந்த மண்ணு 
டீக்கடையில நின்னு 
தின்னுப் பாரு பன்னு.." இவ்வாறான கவிதை ஒன்று வரும்.. இந்த கவிதையை பற்றி கொஞ்சம் பார்ப்போம்..!!! இந்த கவிதையை நான் எடுத்ததன் காரணம் இது ஒரு பிதற்றல் கவிதை என்று சொல்லலாம்.. ஆனால் அந்த கவிதை வரும் சந்தர்ப்பம் பிழையானது ஏன் என்றால் நாளைக்கு உண்மையாகவே ஒரு பள்ளியில் "நாடு" தலைப்பில் கவிதைப்போட்டியோ கட்டுரைப்போட்டியோ நடந்தால் யாராவது ஒரு குழந்தை இந்த மாதிரி அபத்தமாக எதாவது எழுதக்கூடிய சந்தர்ப்பம் வராது என்று என்ன நிச்சயம்.?? இந்த இடத்தில் விஜய்யை எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாது இந்த கவிதையை அந்த இடத்தில் உள்வாங்கிய இயக்குநரைதான் முற்றும் முழுதாக குறை சொல்ல வேண்டும்.. மக்களுக்கு இலகுவில் போய் செல்லக்கூடிய சினிமாவில் இப்படியான சின்னப்பிள்ளை தனமான கருத்தாடல்கள் இருப்பது இளமையில் தமிழை சரியாக ஒருவரினும் உள் நுழையும் தன்மையையோ அளவினையோ அல்லது அதன் வினைத்திறனையோ குறைக்கலாம்.. இப்படியானவற்றை கொஞ்சம் குறைத்துக்கொண்டால் மெல்ல செத்துக்கொண்டிருக்கு தமிழ் இன்னும் கொஞ்ச நாட்களாவது உயிர் வாழும்..!!!


அடுத்ததாக தொலைக்காட்சி, வானொலி என்பவற்றில் ஒலிபரப்பு நிகழ்ச்சிகளை செய்பவர்கள் செய்யும் அட்டகாசத்திற்கும், தமிழை கொலை செய்யும் அளவிற்கும் அளவே இல்லாமல் போய்விட்டது.. எல்லா நிகழ்ச்சிகளையும் அவ்வாறு சொல்ல முடியாது அரட்டை அரங்கம், மக்கள் அரங்கம், தமிழ்ப்பேச்சு... போன்ற பல நிகழ்ச்சிகள் தமிழுக்கு உறுதுணையாக இருக்கின்றன.. இருந்த போதும் மக்களை அதிகமாக போய் சேரும் நேரடி நிகழ்ச்சிகளில் நடைபெறும் தமிழ் கொலைகளுக்கு அளவே இல்லை.. தமிழ் கதைக்க சொன்னால் "தங்கிலிஷ்" பேசுறாங்க.. நாக்கை நன்றாக சுழற்றி தமிழை அழகாக உச்சரிக்க வேண்டிய வார்த்தைகளை எல்லாம் போலியான வடிவிற்காக சுழற்ற வேண்டிய நாவினை பல்லில் போட்டு உச்சரிப்பை கேடுக்கின்றார்கள்.. அதுகும் நடிகைகள் செய்யும் நிகழ்ச்சிகள் என்றால் சொல்லவே தேவை இல்லை... அந்த நிகழ்ச்சிகளில் தமிழ் கதறும் கதறலுக்கு அளவே இருக்காது... சொல்லப்போனால் இடுப்பழகி சிம்ரன் செய்யும் "ஜக்பாட்" நிகழ்ச்சி, கோவை சரளா செய்யும் நிகழ்ச்சி, மானாடமயில் ஆட.. (இது மானாட மயிலாட அவை எல்லாம் ஆட தமிழ் சாகும் நிகழ்ச்சி..) இவ்வாறன தமிழ் சுத்தமாக வராத நாயகிகளை வைத்து ஏன் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி செய்ய வேண்டும்??? அந்த சாபக்கேடான நிலமையிலா தமிழ் இருக்கின்றது???


அடுத்ததாக சிவாஜி படத்தில் "வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி..." என்று ஒரு பாடல் வரும்.. அந்தப்பாடலில் தமிழின் அருமையினையும் தமிழுக்கு என்றே இருக்கும் ஒலிநயத்தினையும் எவ்வளவத்துக்கு சொல்லமுடியுமோ அவ்வளவு அருமையாக பாடலாசிரியர் சொல்லியிருப்பார்..அந்த பாடலில் இடையில் ஒரு அழகான வரி "அன்பால் ஆணையிடு அழகை சாணைஇடு..." என்ற அந்த வரியை பாடகி மதுஸ்ரீ அவர்கள் 'அழகை சாணியிடு' என்று பாடியிருப்பார்கள்.. இயல்பாகவே தமிழ் வளம் இல்லாதவர்களை ஆங்கிலத்தில் தமிழை எழுதி பாடவைத்தால் இந்த நிலமைதான் வரும் இவர்கள் எல்லாம் பாடல் பாடி அதனை இசைப்புயல் இசையில் கேட்கவேண்டும் என்று தமிழரின் தலை எழுத்து.. என்ன செய்ய முடியும்.. அவர்கள் எல்லோரும் சேர்ந்து தமிழர்களின் இரசனையை மாற்றினார்களா இல்லை எங்களின் இரசனைக்கு ஏற்றால் போல ஆங்கிலத்தில் எழுதி தமிழ் பாடல் பாடுகின்றார்களா.. என்பது விளக்கம் இல்லாத கேள்வியாகவே இருக்கின்றது.. இவ்வாறு எத்தனையோ பாடல்களையும் பாடகர்களையும் சொல்லிக்கொண்டே போகலாம்.. அந்த அற்புதமான நிலைமையில் இன்று இலகுவில் மக்களிடம் தமிழை கொண்டுபோய் சேர்க்கக்கூடிய நிலைமையில் இருக்கும் சினிமாவும், அதன் ஓருடல் ஈருயிர் இசையும் பாடல்களும் இருக்கின்றது.. (என்ன கொடுமை சரவணா இது... என்று சொல்லி தலையில் அடித்துக்கொள்வதை தவிர எங்களால் என்ன செய்ய முடியும்..???)

"இனி மெல்லத் துளிர்க்கும் தமிழ்" என்பது முகப்புத்தகத்தில் அதிகம் பாவிக்கப்படும் ஒரு மேற்கோள். நான் ஏதிர்வினையாக எண்ணுவதாய் நீங்கள் சிந்திக்க வேண்டாம். என்மனதிற்குள்ளும் 'இனி மெல்லத் துளிர்க்கும் தமிழ்' என்றே ஆகவேண்டும் என்பதே அடங்காத ஆதங்கமாக இருக்கிறது. ஆதங்கங்களோ,கற்பனைகளோ,வீரவசனங்களோ யதார்த்தங்கள் ஆவதில்லை.அவர்கள் எங்களை அரசியலில், இராணுவத்தில் படுகிடையாக்கியபோது வாயடைத்து நிற்கிறோம். நடைமுறையில்லாத கற்பனா வாதங்களால் எங்களுக்கு நாங்களே தாராளமாகக் குழிவெட்டிக் கொள்ளமுடியும். அதைவிட உருப்படியாக எதையும் செய்ததாக இல்லை என்பது நிதர்சனம். பிரச்சினை இருக்கிறது என்கின்ற போதுதான் அதற்கு மருந்து கொடுக்க முயற்சிக்கலாம். வருத்தத்தை வைத்துக் கொண்டு எனக்கு வருத்தமே இல்லை என்றால் மருந்து கொடுக்க முடியாது. மரணம்தான் அவனை அரவணைக்க முடியும். 'இனி மெல்லத் துளிர்க்கும் தமிழ்' என்பது மருந்து வேண்டாம் என்று அடம்பிடிப்பது போல் இருக்கிறது.தமிழின் பிறப்பிடமான தாய்த் தமிழ் நாட்டில் முத்திரை, அரிசி என்பனவற்றை தமிழில் கூறினால் அவமானமாம்... 'றைஸ்' என்று சுத்தத்தமிழில் சொல்லையா' என்கின்ற போது வேட்டி உரிந்த வெக்ககேடாக இருக்கின்றது. ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்த எம்மினம் அவர்களை மேன்மையானவர்களென எண்ணி, அவர்கள் கூறுவது எல்லாம் சரி, செய்வது எல்லாம் சரி என்கின்ற அடிமை மனப்பாண்மையில் அழுந்திக் கிடக்கின்றனர். அதுவே ஆங்கிலத்திற்கு நாங்கள் அடிமையாவதை ஊக்கிவித்தது. ஆங்கிலம் ஒரு மொழி. அது இரண்டாவது மொழியாக எமக்குத் தேவைப்படுகிறது. அது சிலவேளைகளில் மற்றைய மனிதர்களோடு தொடர்பு கொள்வதற்கோ, அல்லது எமது மொழியில் இல்லாத அறிவு நூல்களை வாசிப்பதற்கோ உதவி செய்கிறது. ஆங்கிலத்தை நோர்வேயிலும் படிக்கிறார்கள். அழகாகப் பிரித்தானிய ஆங்கிலம், அமெரிக்கன் ஆங்கிலம் எனத் தெளிவாகப் பிரித்து, ஆழமாகக் கற்கிறார்கள். அதைத் தேவையானபோது பயன் படுத்துகிறார்கள். அதற்காக அதில் மோகம் கொண்டு, தங்கள் சொந்த மொழியைத் தொலைக்கும் அறிவீனம் அவர்களுக்கு இல்லை. சில பயன்பாட்டிற்கான மொழி வேறு, தாய் மொழி வேறு என்பதில் அவர்கள் நன்கு தெளிவாக இருக்கிறார்கள். வீட்டில் ஆங்கிலம் பேசுவதால் சமூக அந்தஸ்து கிடைக்கும் என்கின்ற போலிக் கௌரவத்தில் அவர்கள் வாழ்வதில்லை.(தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளுங்கள்!!!)

தமிழரின் அடிமைவிசுவாசம் ஆங்கிலத்தின்மீது அதீதமாய் இருக்கிறது. பயன் பாட்டிற்கு மாத்திரம் பாவிக்க வேண்டிய மொழியை, அடிமை மோகத்தால் தாய்மொழியாக்கும் அவலம் அரங்கேறுகிறது. ஒருவன் தமிழ் பேசப்படும் நாட்டில் இருந்தாலும், வீட்டிலே அனைவரும் ஆங்கிலத்தில் கதைத்தும், எழுதியும் வந்தால் அவர்கள் தாய்மொழி எது? அல்லது ஒரு பிள்ளை ஆங்கில மொழியில் மாத்திரம் பாடங்களைத் தனது பாடசாலையில் பயின்று வந்தால் அவனது எண்ண உருவாக்கம், எழுத்து உருவாக்கம் எந்த மொழியில் வரும்? அவனுக்கு பின்வரும் சந்ததிகள் எந்த மொழியில் அதைச் சிந்திப்பார்கள்? இன்றைய தமிழ் பேசும் நாட்டில் பெருமளவில் ஆங்கிலத்தில் எழுதி, ஆங்கிலத்தில் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். ஒரு பயன்பாட்டு மொழியாக வைத்திருக்க வேண்டியதைத் தாய் மொழியாக்கி, தமிழரின் பண்பாடாக போற்ற தமிழ் மொழியைப் புறக்கணிக்கிறார்கள். இங்கே நோர்வே மக்களுக்கும் தமிழ் பேசும் நாட்டு மக்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன வென்றால்... எந்த மொழிக்கு எந்த இடம் கொடுக்கப்பட வேண்டும் என்கின்ற தெளிவு நோர்வே மக்களிடம் இருக்கிறது. தமிழர்களிடம் அது பொதுவாக இல்லை(பொதுவாகத்தான் இல்லை மொத்தமாகவே இல்லை என்று சொல்லவில்லை..). நான்கு மில்லியன் மக்கள் பேசும் நோர்வே மொழி வாழ்வதற்கு தமிழைவிட நிறையவே சந்தர்ப்பம் உண்டு. ஒன்று மக்களிடம் இருக்கும் மொழிபற்றிய தெளிவு. இரண்டு அந்த மொழிக்கான ஒரு நாடு. இவை இரண்டும் அதற்கு உறுதுணையாக இருக்கிறது. எழுபது மில்லியன் மக்கள் பேசும் தமிழ் அழிந்து போகலாம். அதற்கென்று ஒரு நாடும் இல்லை. அவர்களிடம் மொழியின் பயன்பாடு பற்றிய தெளிவும் இல்லை. இந்த இரண்டுமே இல்லாது, தமிழில்படிப்பதே அவமானம் என்கின்ற தமிழ் பேசும் நாட்டில், தமிழ் இப்போதே திரிந்து தங்கிலீசாய் மாறிவிட்ட ஒரு நாட்டில், ஆங்கிலத்தில் மோகம் கொண்டுவிட்ட ஒரு நிலையில் இன்னும் ஒரு இருபது வருடங்களில் தமிழ் பேசும் நாட்டில் தமிழைவிட ஆங்கிலத்தில் அதிக புத்தகங்கள் வெளி வரலாம். தனக்கு மிகவும் பரீட்சயமான மொழியில்தானே மனிதனால் சிந்திக்கவும் எழுதவும் முடியும்? அப்போது புரியும் எல்லோருக்கும் ஒரு தெளிவு பிறக்கும் இப்போது நாங்கள் எங்கிருக்கின்றோம்.. எதனை நோக்கியதாக எமது பயணம் இருக்கின்றது என்று கொஞ்சம் போகப்போகத்தான் தெரியும்...

இலங்கையில் சிறுபாண்மை மொழியான தமிழ் சிங்கள மயமாக்கப்படுவதோடு, தமிழர்களின் பொருளாதார நாடோடி மனப்பாண்மையால் வேற்று நாடு சென்று அவர்கள் குடியேறுதல் தொடர்ந்து கொண்டே இருக்கும். அத்தோடு இலங்கையின் இன முரண்பாடு தொடர்ந்து கொண்டு இருப்பதால் தமிழன் இருப்பை அது இங்கு கேள்விக் குறியாக்குவதோடு, இருப்பவர்களும் சிங்களமயமாதலை தடுக்க முடியாது போய்விடப் போகிறது. 'மைக்ரோ' சிறுபாண்மையாக இருந்து கொண்டு தமது மொழியைத் தக்கவைத்துக் கொள்வது ஒன்றும் நடமுறைச் சாத்தியம் அல்லாது போகும். இனிச் சிங்களம் படித்தால்தான் வாழ்வு உண்டு, வேலை உண்டு என்கின்ற இயலாமைக்கு இங்கே நடைமுறை வழிகோலிக் கொண்டு இருக்கிறது. தமிழில் படிப்பதோ கதைப்பதோ நடமுறை வாழ்க்கையில் சிக்கல்களை உண்டுபண்ணிக் கொண்டே இருக்கிறது. புலம் பெயர்ந்தவர்கள் எப்போதும் தங்கள் மொழியை இழப்பது மாற்ற முடியாத நியதியாகும். வந்தேறு குடிகளின் முதலாவது பரம்பரை போற்றும் மொழி இரண்டாவது அல்லது மூன்றாவது பரம்பரையில் முற்றும் மறக்கப்பட்டு விடும். இன்று நோர்வேயில் வாழும் பிள்ளைக்கு நோர்வேமொழிதான் தாய் மொழியே தவிரத் தமிழ் மொழி இல்லை. தமிழ் பேசி அவர்கள் விளங்கிக் கொண்டாலும் பதில் மட்டும் நோர்வே மொழியில் வருகிறது. இவர்களின் பிள்ளைகள் எப்படி இருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்.இனியாவது தழிழைக் காப்பாற்ற வேண்டும் என்றால், ஆங்கில மொழியின் பயன்பாடு எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்கின்ற தெளிவான அறிவை மக்களுக்கு ஊட்டி, 'இனி மெல்லத் துளிர்க்கும்' என்கின்ற கனவை நிறுத்தி, 'இனி மெல்லச் சாகும் தமிழ்' என்பதைப் புரிந்து கொண்டு, அதற்கு எதிராக என்ன செய்ய முடியும் என்பதைப் சிந்திக்க வேண்டும். இன்றைக்குத் தமிழ் வளர்க்கப் பாடுபடும் அத்தனை தமிழ் குடிதாங்கிகள், தமிழன்னையின் மானம் காப்போர், மேடைகளில் புலம்பும் வாய்ச்சொல் வீரர் எல்லாரும் பயன்படுத்தும் அந்த புகழ்பெற்ற வாசகம் அடங்கிய கவிதை இதுதான். முழுமையாக எல்லோரையும் ஒரே தடவையில் கூண்டில் நிறுத்த முடியாது என்பதனால் பாகம் பாகமாக ஏற்றுவோம்.. அதிகம் தமிழ் படித்து மூக்குவரை தமிழ் ஜீரணிக்க முடியாமல் தள்ளாடி தள்ளாடி.. தமிழின் அருமை பற்றி பேசும் பெரிய ஐயாமார்களே கொஞ்சம் தெளிவினை பெற்றுக்கொள்ளுங்கள்... இனியாவது திருத்தமான கருத்துக்களை முன்வையுங்கள்...

ஆதிசிவன் பெற்று விட்டான் - என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான். (1)

மூன்று குலத் தமிழ் மன்னர் - என்னை
மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்;
ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன். (2)

கள்ளையும் தீயையும் சேர்த்து- நல்ல
காற்றையும் வான் வெளியையும் சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல
தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார். (3)

சாத்திரங் கள்பல தந்தார் - இந்தத்
தரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
நேத்திரங் கெட்டவன் காலன் - தன்முன்
நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான். (4)

நன்றென்றுந் தீதென்றும் பாரான் - முன்
நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
சென்றிடுங் காட்டுவெள் ளம்போல் - வையச்
சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான். (5)

கன்னிப் பருவத்தில் அந்நாள் - என்றன் 

காதில் விழுந்த திசைமொழி யெல்லாம் 

என்னென்ன வோபெயருண்டு - பின்னர் 

யாவும் அழிவுற் றிருந்தன கண்டீர். (6)
 

தந்தை அருள்வலி யாலும் - முன்பு 

சான்ற புலவர் தவவலி யாலும் 

இந்தக் கணமட்டும் காலன் - என்னை 

ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான் (7)
 

இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி 

ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்! 

கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு 

கூறத் தகாதவன் கூறினன் கண்டீர் (8)
 

'புத்தம் புதிய கலைகள் - பஞ்ச 

பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
 
மெத்த வளருது மேற்கே - அந்த 

மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை (9)
 

சொல்லவும் கூடுவதில்லை - அவை 

சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை 

மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த 

மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்' (10)

என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ! 
இந்த வசையெனக் கெய்திடலாமோ? 

சென்றிடு வீர் எட்டுத் திக்கும் - கலைச் 

செல்வங்கள் யாவுங்கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! (11)
 

தந்தை அருள் வலியாலும் - இன்று 

சார்ந்த புலவர் தவ வலியாலும் 

இந்தப் பெரும்பழி தீரும் - புகழ் 

ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன். (12)

அடப் பாவிகளா...சற்றே கூர்ந்து கவனியுங்கள். திரும்பத் திரும்ப வாசியுங்கள். தமிழ் அழியும், மற்ற மொழிகளும் கலாசாரங்களும் அதை அழிக்கும் என்றா பாடினான் அவன்? 48 வரிப்பாடலில் இந்த ஒரு வரியை மட்டும் வைத்துக்கொண்டு பாடலின் நோக்கத்தையே கிட்டத்தட்ட 88 வருடங்களாக (பாரதியின் இறப்பு செப்டெம்பர் 11, 1921) மானபங்கப்படுத்தி வருகிறோம். அவன் சொன்ன கருத்தைத் திரித்து உண்மையிலேயே தமிழைக் கொன்று வருகிறோம். பாரதியாவது தமிழ் சாகும் என்று புலம்புவதாவது. ஆகவே மெத்தப்படித்த மேதாவித்தனம் நிறம்பியவர்களே இத்தால் உங்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால் “மெல்லத்தமிழ் இனி சாகும்" என மகாகவி பாடினானே... அது போல தமிழ் அழிகிறதே” அப்படி இப்படி எவனாவது (காதைக் கடிக்க) பேச ஆரம்பிச்சா.... கல்லெடுத்து அடிங்க.. முடிந்தால் அவனை பிடித்து.. தூக்கில் போடுங்க...

நல்ல சினிமா :- சீமான் இயக்கி மாதவன் நடித்த ஒரு அருமையான பல அர்த்தங்களை அகத்தே கொண்டு வெளியாகி பல சர்ச்சைகளை சந்தித்த படம்தான் "தம்பி".. இந்த படத்தில் ஒரு பாடல் "என்னம்மா பேரு ஜெக்கம்மா..." அதில் செருப்பால் அடித்தது போல ஒரு அருமையான வரி "பசுமாடு ஆத்தாவை அம்மான்னு சொல்லுது பச்சதமிழனோ அம்மாவை மம்மின்னு சொல்லுறான்..." இதுக்கு மேல் என்ன சொல்ல வேண்டும்.. இவ்வாறன வரிகள் இன்னும் தமிழ் சாகவில்லை என்பதனை அவ்வப்போது நினைவுகூர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.. 

இது எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடுவது போல தனது ஒவ்வொரு படத்திலும் தமிழுக்காகவே ஒரு கட்சியையாவது அமைத்திருப்பார் கமலஹாசன்.. அவ்வாறான வகையில் "தசாவதாரம்" படத்தி ஒரு காட்சி..


தஞ்சாவூர் என்னா தமிழன் தானே??? என்று சிபிஐ அதிகாரி பலராம் நாயுடு கேட்க விஞ்ஞானி கமல் ஆங்கிலத்தில் பீட்டர் விட தொடங்குவார்.. அப்போது பலராம் நாயுடு "இந்தியாவில் அதிகம் கதைக்கும் மொழி எது தெரியுமா?? முதலாவது ஹிந்தி, ரெண்டாவது தெலுங்கு, மூணாவதுதான் தமிழ்.. நான் தெலுங்கு.. நானே தமிழ் கத்துகொன்னு இவ்வளோ அழகா??? தமிழ் பேசுறேன் நீ என்னன்னா தமிழனாக இருந்துகொன்னு இங்கிலீஷ் கதைகுறாய்.. அப்புறம் எங்கையிருந்தையா தமிழ் வளரும்.." என்று கேட்க அதுக்கு நம்ம கமலோ அசால்ட்டாக ஒரு பதில் சொல்லுவார் "உங்களைப்போல யாரவது தெலுங்குக்காரங்கள் வந்து வளரப்பாங்க.." என்று சொல்லுவார்.. இதை வெளிப்படையாக நோக்கினால் கமல் அவதூறாக நடப்பது போலதான் தோன்றும்.. அது பிழை.. ஏன் தமிழை யாரவது வளர்த்தால்தான் வளரனுமா??? அப்போ இவ்வளோ காலமும் யாரும் வளர்த்துதான் தமிழ் வளர்ந்ததா??? இந்த விடயத்தில் நான் கமல்ஹாசன் பக்கம்.. கமலுக்கு இருக்கும் அளவுக்கு தமிழின் மேல் பற்றும பிரியமும் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை அதில் ஒரு சிறிய அளவாவது இருந்தால் நல்லது என்றுதான் சொல்லுறேன்.. (கடவுள் இல்லேன்னு நான் எப்ப சொன்னன் இருந்தா நல்லா இருக்கும் என்று சொல்றன்..)..

கமலின் வலுவான கருத்து "நீங்கள் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளுங்கள்... அவையாவும் ஒரு வீட்டில் உள்ள யன்னலை போல வைத்துகொள்ளுங்கள் ஆனால் உள் நுழையும் கதவாக தமிழை வைத்துக்கொள்ளுங்கள்"... (facku..factu..factu...) கமலின் அளவுக்கு விளக்கமாக??? தமிழ் கதைக்க சொல்லவில்லை.. நீங்கள் கதைக்கும் தமிழ் கமலுக்காவது விளங்கக்கூடியது போல கதையுங்கள் என்றுதான் சொல்லுகின்றேன்.. கமலின் அளவிற்க்கு தமிழ் கதைக்கவோ எழுதவோ வேண்டும் என்றால் இறந்துபோன பாரதியாரைத்தான் எழுப்பிக்கொண்டுவந்து மேடையேற்ற வேண்டும்.. யாரையும் தமிழை வளர்க்க சொல்லவில்லை.. வளர்ந்துகொண்டிருக்கும் தமிழை பிழை கூறி குறையாக்காதீர்கள் என்பதுதான் எனது வாதம்..!!!

எவர் ஒருவர் தனது தாய்மொழியில் மிகச்சிறப்பான புரிந்துதலுடன் இருக்கின்றாரோ அவர் மற்ற மொழியினையும் இலகுவில் கற்றுக்கொள்வார்.. தமிழை முதலில் தெளிவாக கற்றுக்கொள்ளுங்கள் அதன் பிறகு மற்ற மொழிகள் தானாகாவே உள்வாங்கிகொள்ளப்படும்.. உலகம் பூராகவும் வேற்று மொழிகளில் காதலும் மோகமும் இருக்கின்றது இது தமிழருக்கு மட்டும் இருக்கும் சாபக்கேடு இல்லை... ரஷ்யர்களுக்கு லத்தீன் மொழி மீது ஆசை, ஆங்கிலேயருக்கு ஐரோப்பிய மொழி மீது காதல்... தயவு செய்து பிள்ளைகளை வீட்டில் ஆங்கிலத்தில் கதை என்று கொட்டாதீர்கள்.. பிற்பாடு பிள்ளைக்கு ஆங்கிலமும் வராது தமிழும் வராது.. ஏதோ கொட்டும் நீங்கள் எல்லோரும் IAS படித்து விட்டு வேலைக்கு போக விருப்பம் இல்லாதவர்கள் போலவும் பிள்ளைகள் எல்லோரும் மக்காக இருப்பது போலவும் நடந்துகொள்ளாதீர்கள்.. ஆங்கிலத்தின் மீது அளவுக்கு அதிகமான மோகமும் வேண்டாம்.. தாய் மொழியின் மீது அர்த்தம் அற்ற வெறியும் வேண்டாம்.. தமிழ் உங்களது தாய் மொழி அதை காதலியுங்கள் ஆங்கிலம் வேற்று மொழி அதை ரசியுங்கள்.. ரசிப்பதற்காக தொடங்கி அதற்க்கு அடிமையாகி விடாதீர்கள்..!!!

முதலில் தமிழை முழுமையாக புரிந்து புரிந்துகொள்ளுங்கள்.. தமிழ் வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல அவை வார்த்தையில்லை அவையாவும் உணர்வு.. கோபம் என்னும் வார்த்தையில் கோபம் இருக்கின்றது அக்கறை என்னும் வார்த்தையில் அக்கறை இருக்கின்றது.. தமிழ் ஒரு மொழி என்று மட்டும் நினைவில் கொள்ளாதீர்கள் தமிழ் ஒரு உணர்வு.. முதலில் இந்த உணர்வை முழுமையாக உணர்ந்துகொள்ளுங்கள்.. அதன் பிறகு வேற்று மொழி தானாகவே உங்களுள் வளரும்... மொழியினை அதற்கு இருக்கும் மிடுக்குடன் உணர்ந்துகொள்ளுங்கள்.. போலியாக கற்காதீர்கள்... மொழியினை உங்களுள் திணிக்காதீர்கள்... ஆங்கிலத்தையே திணிக்காதீர்கள்.. எல்லோரும் ஆங்கிலம் படிக்கின்றார்கள் ஏன் என்றால் வியாபாரம் முழுவதும் ஆங்கிலத்தில்தான் நடக்கின்றது.. ஆனால் ஆங்கிலேயன் மட்டும் யாருக்கும் தெரியாமல் மாண்டலின் படிக்கின்றான் ஏன் என்றால் அந்த வியாபாரமே இன்று சீனாவின் கையில் இருக்கின்றது... நீங்கள் பலசாலிகளாக இருந்தால் உங்கள் மொழியினை உலகம் கற்கும்.. இந்த நிலமைதான் வேண்டும்.. உலகம் தமிழை கற்கக வேண்டும்..!! ஒரு மொழியினுடைய வளர்ச்சி என்பது அதனுடைய கலாச்சாரத்தோடும் தன்மையோடும் தொடர்புடையது.. உ(எ)ங்கள் மொழி பலமானதாக இருந்தால் உ(எ)ங்கள் மொழியினை உலகம் பேசும்.. பேச வேண்டும்..!!!

முடிவில் ஒரு கவிதையுடன் பதிவினை முடித்துக்கொள்கின்றேன்..!!

வலம் வருகின்றாள் என் அன்புத் தமிழ்த்தாய்..!

சொல்வதற்கு அரிய எளிமை மொழியில், 
கொல்வதற்கு அரிய உயிர்மை போரால், 
வெல்வதற்கு அரிய வாய்மை கூர்மையால், 
உண்டானதே தமிழ் அன்னையின் தொன்மை... 

கயல்விழி மாதர் அழகெலாம் அழகா, 
கண்டவர் மேல் கொள்ளும் காதல் நிலையா, 
இயல்,இசை,நாடகம் மூன்றையும் மூச்சாய்க் கொண்டவர் வாழ்வே என்றும் அழியா..

நல்லோர் நாவில் நடனம் புரிவாள், 
நல்மனத்தோர்க்கெலாம் கலசம் அருள்வாள், 
வன்மங்கள் கண்டு இடியென எழுவாள், 
வாடிடும் உயிர்க்கெலாம் அன்பினை ஊட்டிடுவாள்... 

திருமூலரின் சிவபூமியாம் ஈழ நாட்டில், 
தலைநகராம் கொழும்பு மாநகரில், 
தமிழ் என்ற வற்றாத சுனையை ஊட்டுகின்ற, இந்துத்தாய்க்கு என் பணிவான வந்தனங்கள்... 

"சொல்லாடற்களரி" எனும் மகுடமிட்டு, 
சொற்கணைகளை களத்திலே கொண்டு, 
இலங்கை நாட்டிலே அழியாப் புகழுடன் 
வலம் வருகின்றாள் என் அன்புத்தாய்... 

சொல்லணாத் துன்பங்கள் இங்கு வந்தாலும் 
தாய் அவள் நிலை குலையவில்லை - வீணர்கள் 
நினைப்பு முழுமையாக நிறைவேறாவிட்டாலும் தாய் என்ற தமிழன்னை தன்மானமாக வலம் வருகின்றாள்... 

அநியாயத்திற்கு நியாயம் கேட்ட 
வரலாறுகள் எல்லாம் ஏடுகளாகி விட்டன, 
கயவம் கொண்டவர்கள் நினைக்கவில்லை அதர்மம் அழியும் ஒரு நாளில் என்று... 

முடக்கப்பட்டவர்கள் வெற்றி 
கொண்டனர் என்பது உலக வரலாறு, 
அதன் நிதர்சனமாக ஒளிர்கின்றது சூடான் இன்று, 
தர்மத்தை போதித்த அன்னைக்கு தர்மம் கிடைக்கும் - ஒரு நாளில்... 

தாசனின் கவிவரிகளை இன்று இருப்போர் நினைவில் 
கொள்வார்களானால் தமிழன்னை வீறு நடை 
கொள்வாள் வரும் நாட்களில் - நீதி தேவதை கண்களைத் திறந்து நீதியுரைப்பாள் உலகிற்கு...!
                                                
என் பதிப்புக்குள் கவிதையை புகுத்திடும் நோக்கில் கிறுக்கிய வரிகள் இவை..!!!


மொழியே இனத்தின் அடையாளம்; மொழியாலே ஒன்றிணைவோம். எட்டுத்திக்கும் ஓங்கி ஒலிக்கட்டும் தமிழ்..!!

Post Comment

17 comments:

 1. ட்ழ்ட் ஃப்டுஹ்ஹ் ப்ஹ்ஜ்ச்ட்ச்ட்க்ஷ் ப்ப்ம் ந்வ் ச்ட்க்ஷ் ந்ன்ல்ல் க்ச்ட் வ்க்வ்ஜ் க்ஃபுஜ்ன் ப்க்ஷ்ச்க்ஷ்க்ஹ்வ் வ்க்ஷ்க்ச் ப்ச்க்ட்ட்ட் வ்க்வ்ப்ன்ப் ட்க்ஷ்கி க்க் ஹ்ஹ்குஒ ஜ்ம்ன்ம் ஹ்ஜிம் ப்வ்க்ஷ்ட்ச் க்சிய்கின்

  ReplyDelete
  Replies
  1. மிகவும் அ(எ)ருமையாக சொன்னீங்க..பாஸ்... மிக்க நன்றி...

   Delete
 2. மூச்சு விடாமல் படித்தாயிற்று தோழரே...

  இந்த ஆலமரத்தின் வேர்கள் வெட்டிட
  உலகத்தில் எந்த கோடரியும் இல்லை...

  தமிழ் வாழும்,, வாழ வைக்கும்,,,

  ReplyDelete
  Replies
  1. ///தமிழ் வாழும்,, வாழ வைக்கும்,,/// அருமையான கருத்து பதிப்பினை ஆழமாக வாசித்திருக்கின்றீர்கள் என்றது மட்டும் விளங்குகின்றது.. மிக்க நன்றி தோழா.. உங்கள் வருகைக்கும் உங்கள் commentக்கும் மிக்க நன்றி... :)

   Delete
 3. ஆழமான கருத்துகளை உடைய பதிப்பு.
  எனினும் எனது சில தனிப்பட்ட கருத்துகளை சொல்லியே ஆக வேண்டும்.
  தமிழ் வளர்வதற்கோ அல்லது சாவதற்கோ சினிமா மட்டுமே காரணம் ஆகி விட முடியாது. அது எல்லாருடைய கையிலும் உள்ளது. குறிப்பாக நாம் என்ன மொழியை பயன்படுத்துகிறோம் என்பதில் உள்ளது.
  எத்தனையோ பெற்றோர் தன் பிள்ளை ஆங்கிலத்தில் படிக்கின்றது அன்று மார்தட்டி பெருமைபடுகின்றார்கள். இங்கு தமிழ் மெல்ல அல்ல விரைவாகவே சாகின்றது. வெளிநாட்டில் இருந்து தமிழில் சரளமாக கதைக்கும் பிள்ளைகள் இருக்கின்ற போதிலும் உள்நாட்டில் குறிப்பாக இலங்கையில் தமிழ் பேச தடுமாறும் பிள்ளைகள் இருப்பது வருத்தத்திற்குரிய விடயம். தமிழை கொலை செய்யும் எத்தனையோ விளம்பர பலகைகளையும் குறிப்பாக அரசாங்க அறிவுறுத்தல், பெயர்ப்பலகைகளையும் இலங்கையில் தாரளமாக காணலாம். இதை யார் தட்டி கேட்பது. அங்கு வேலை செய்யும் தமிழனுக்கு பலகையில் தமிழ் எழுத்து இருப்பதே போதுமானதாக உள்ளது. காலம் அவ்வாறு உள்ளது. இப்படி எத்தினையோ விடயங்களை கூறிக்கொண்டே போகலாம். இவற்றில் எல்லாம் எப்பொழுது மாற்றம் வருகிறதோ அது வரை தமிழின் பாடு கொஞ்சம் கஷ்டம் தான்.

  பிற்குறிப்பு : தமிழை பற்றி அழகாக எழுதி இருக்கும் தாங்களே சில இடங்களில் எழுத்து பிழைகள் விட்டிருப்பது வருந்தத்தக்கது. அதிலும் தமிழ் என்பதற்கு பதிலாக "தமில்" என்று எழுதியிருப்பது கண்டிக்கத்தக்கது.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது உங்களின் கருத்துக்களை பார்க்கும் போது.. உண்மைதான் தோழா.. எல்லோரும் இதில் கவனம் செலுத்ததான் வேண்டும்.. ஆனால் முக்கியமான இடங்களில் இருப்பவர்கள் அதனை செய்ய மறப்பதுதான் வருந்தத்தக்கது..

   Delete
 4. ஆழமான கருத்துகளை உடைய பதிப்பு.
  எனினும் எனது சில தனிப்பட்ட கருத்துகளை சொல்லியே ஆக வேண்டும்.
  தமிழ் வளர்வதற்கோ அல்லது சாவதற்கோ சினிமா மட்டுமே காரணம் ஆகி விட முடியாது. அது எல்லாருடைய கையிலும் உள்ளது. குறிப்பாக நாம் என்ன மொழியை பயன்படுத்துகிறோம் என்பதில் உள்ளது.
  எத்தனையோ பெற்றோர் தன் பிள்ளை ஆங்கிலத்தில் படிக்கின்றது அன்று மார்தட்டி பெருமைபடுகின்றார்கள். இங்கு தமிழ் மெல்ல அல்ல விரைவாகவே சாகின்றது. வெளிநாட்டில் இருந்து தமிழில் சரளமாக கதைக்கும் பிள்ளைகள் இருக்கின்ற போதிலும் உள்நாட்டில் குறிப்பாக இலங்கையில் தமிழ் பேச தடுமாறும் பிள்ளைகள் இருப்பது வருத்தத்திற்குரிய விடயம். தமிழை கொலை செய்யும் எத்தனையோ விளம்பர பலகைகளையும் குறிப்பாக அரசாங்க அறிவுறுத்தல், பெயர்ப்பலகைகளையும் இலங்கையில் தாரளமாக காணலாம். இதை யார் தட்டி கேட்பது. அங்கு வேலை செய்யும் தமிழனுக்கு பலகையில் தமிழ் எழுத்து இருப்பதே போதுமானதாக உள்ளது. காலம் அவ்வாறு உள்ளது. இப்படி எத்தினையோ விடயங்களை கூறிக்கொண்டே போகலாம். இவற்றில் எல்லாம் எப்பொழுது மாற்றம் வருகிறதோ அது வரை தமிழின் பாடு கொஞ்சம் கஷ்டம் தான்.

  பிற்குறிப்பு : தமிழை பற்றி அழகாக எழுதி இருக்கும் தாங்களே சில இடங்களில் எழுத்து பிழைகள் விட்டிருப்பது வருந்தத்தக்கது. அதிலும் தமிழ் என்பதற்கு பதிலாக "தமில்" என்று எழுதியிருப்பது கண்டிக்கத்தக்கது.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் பிற்குறிப்புக்கு மிக்க நன்றி... நிட்சையமாக அதனை திருத்திக்கொள்கின்றேன்.. ஒரு முறை எழுதி விட்டு திரும்ப வாசிக்க தவறியதுதான் இந்த பிழைகளுக்கு காரணம்... அடுத்த முறை இந்த பிழை வராது தோழா... :)

   Delete
 5. Kaalaththirketra arumaiyaana padhivu. Mobilil padiththadhaal mulumaiyaana karuththuraiyai alagu thamilil piragu tharugiren. Ungalai anbodu enadhu thalaththirkum varaverkiren.

  http://newsigaram.blogspot.com

  ReplyDelete
 6. ungal pathivirku en manamana nandri, thamizh mozhiyai valarpom

  ReplyDelete
  Replies
  1. thamil moliyin varachchi enpathu naankalum neenkalum sernthuthaan saiya vendum enru illai nanbaa... thamil etkanavae valarnthu mudinthu viddathu... athanai aliyaamal paarththaalae athu pothum... mikka nantri unkAlin commentkku... nantri thola... :)

   Delete
 7. தங்களைப் போன்ற கடைசித் தமிழன் இருக்கும் வரை தமிழிற்கு எதுவும் ஆகாது...

  ReplyDelete
  Replies
  1. mikka nantri aanal neengka ninaikura alavukku naan illai :P

   Delete
 8. மெல்லத் தமிழ் இனி வளரும்..

  ReplyDelete