Friday, August 24, 2012

ஏன் நம்புகின்றார்கள் எதுக்காக நம்புகின்றார்கள்???

நீண்ட காலமாக எனக்கு மட்டும் இல்லை எல்லோருக்கும் இருக்கும் ஒரு கேள்வியைத்தழுவியதாக இந்த பதிவினை எழுதத்தொடங்குகின்றேன்.. என் சார்பில் கடவுள் இருக்கின்றார் என்பதையே ஏற்க மறுக்கின்றேன்!! இருந்தும் சமூகம் சார்ந்திருக்கும் போது இவற்றுள் நாமும் அடங்குவதாக ஒரு எண்ணம்!!! பகுத்தறிவு சார்ந்த கருத்துக்களை கூறும் அளவிற்க்கு எனக்கும் இன்னும் பக்குவநிலை ஏற்படவில்லை என நினைக்கின்றேன்.. நான் வாசித்த ஒரு பதிப்பின் சாயலில் எனது கருத்துக்களை உள்ளடக்கியதாக இந்த பதிப்பினை எழுதியுள்ளேன்.!!! சரி பதிப்பிற்குள் செல்வோம்!!!
கடவுள் இருக்கு இல்லை என்பதை யார் சொன்னாலும், அவரவர் செயகையாலும் நம்பிக்கையிலும் வரும் வார்த்தைகளாகும் .இந்த உலகத்தை இயக்குவது யார் என்பதை உணர்ந்தால் நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இயக்கிக் கொண்டு உள்ளது, இருக்கிறது என்பது தெளிவாகும். அதைத்தான கடவுள் என்கிறார்கள் அந்த கடவுள் யார் என்பதில் தான் வேறுபாடுகள். ஒவ்வொரு ஞானிகளும் ஒவ்வொரு கருத்தை சொல்கிறார்கள். அந்த கருத்து பேதத்தை மாற்றி உண்மையைக் கண்டவர் வள்ளலார் அவர்கள். அந்த சக்தி உருவம் தாங்கிய மனிதர்கள் அல்ல தத்துவங்கள் அல்ல. அது மாபெரும் அருள் ஆற்றல் உள்ள பேரொளியாகும்.அதற்கு பெயர்-அருட்பெரும் ஜோதியாகும். அது தனிப்பெரும் கருனையாகும். அதற்கு ஈடு இணை எதுவும் இல்லை. அதுதான் பல கோடி அண்டங்களை தன அருள் சக்தியால் இயக்கிக் கொண்டு உள்ளது. என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு தான் அறிந்து தெளிவு படுத்தியுள்ளார்.கடவுள் என்றால் யார்? அவர் இருக்கின்றாரா? இல்லையா? கடவுள் இருக்கின்றார் என்றால் அவர் யார்? அவர் எங்கு இருக்கின்றார்? அவர் தன்னை வழிபடச் சொன்னாரா? ஏன் இத்தனை மதங்கள்? மதங்களால் ஏன் இத்தனை சண்டைகள்? கடவுள் இருந்தால் ஏன் இயற்கை அழிவுகளில் கோரச்சாவுகள்? ஏன் உலகில் அநியாயங்கள், அக்கிரமங்கள்? கடவுளுக்கு உருவம் உண்டா? கடவுள் இல்லை என்றால் பிரபஞ்சத்தை படைத்தது யார்? கடவுள் இருந்தால் எதற்கு அவருக்காக பூமியில் முகவர்கள்? இப்படியாக எண்ணற்ற கேள்விகள் கடவுளை மையப்படுத்தி கேட்க்கப்பட்டு வந்தாலும், இவை எவற்றுக்கும் விடை என்கின்ற ஒன்று இதுவரை உறுதியாக சொல்லப்படவில்லை!!! அவ்வாறு இருந்த போதும் நம்முள் நம்பிக்கை உள்ளவர்கள், நம்பிக்கை இல்லாதவர்கள், சந்தேகத்தில் உள்ளவர்கள் என மூன்று பிரிவுகளாக இந்தவிடயத்தில் மனிதர்கள் பிரிந்து கொள்ளலாம். இவர்களில் முதல் இருவரிடத்திலும் பெரும்பாலும் தங்கள் பக்கத்து கருத்துக்கள்தான் சரி என்கின்ற எண்ணமும், விவாதமும் காணப்படும்!!! யுகம் யுகமாக சண்டை பிடித்தாலும் தீர்வுக்கான முடியாத விடயத்தை; தங்கள் கருத்துக்கள் நியாயப்படுத்தும்/தீர்ந்துவிடும் என்கின்ற நம்பிக்கை இவர்களுக்கு!!! அது நம்பிக்கையா அல்லது அவர்களே அவர்களை ஏமாற்றும் செயற்பாடா என்பது புரியவில்லை!!மனிதன் எப்போது தோன்றினான்?? மனிதனுக்கு முன்பு இந்த பூமி எவ்வாறு தோன்றியது??(பெருவெடிப்பு (Big Bang இதனை தவிர்த்து வேறு ஏதாவது விளக்கம் இருக்கின்றதா??) முதல் ஜீவராசி எது?? அதன் தோற்றம் எவ்வாறு அமைந்தது?? இவை எல்லாவற்றையும் அறிந்தவர் யார்? இவை எல்லாம் தானாக தோற்றம் பெற்றது என்று எடுத்துக் கொண்டாலும்; அவை தோற்றம் பெறுவதற்க்கான பொறிமுறை எப்படி/யாரால் உருவாக்கப்பட்டது? (அதாவது இவற்றுக்கெல்லாம் ஆதி) இப்படி தெரியாத கோடிக்கணக்கான கேள்விகளும் சந்தேகங்களும்; கற்பனையில் அடங்காதா பிரபஞ்சம் என்கின்ற அதிசயத்தில் இருக்கும்போது எப்படி முழுமையாக அறியாத ஒன்றை மறுக்க முடியும்? அதாவது எப்படி கடவுள் இல்லை என்று சொல்ல முடியும்? சிறு உதாரணம் சொல்வதானால்; ஒரு மிகப்பெரும் பாலைவனத்தின் மணற் சமுத்திரத்தில் ஒரு 'குண்டு மணி' இருக்கின்றதா? இல்லையா? எனக் கேட்டால்; இல்லை என்று பதில் சொல்வதை ஒத்தது கடவுள் மறுப்பு!!!! எல்லாவற்றையும் அறிந்தவானால் மட்டும்தான் ஒன்றை இல்லை என்றோ, இருக்கின்றது என்றோ சொல்ல முடியும், மற்றவர்கள் சொல்வதெல்லாம் அவர்களது எண்ணங்களும், ஊகங்களும், அனுமானங்களும், நம்பிக்கைகளும் அன்றி உண்மையானவை அல்ல!!! அதேபோல் கடவுள் இருக்கின்றார் என்று அடித்து சொல்பவர்களும் இதே வகையில்தான் அடங்குவார்கள்!!! எப்படி காணாத ஒன்றை இல்லை என்று சொல்ல முடியாதோ; அதே போலவே அதனை உள்ளது என்றும் சொல்ல முடியாது!!! கடவுளை உணர்ந்ததால், நம்புவதால், மத சாட்சியங்களால் கடவுளை இருக்கின்றார் என முன்னிறுத்துபவர்களும் மேற்சொன்னது போல் அவர்களது தனிப்பட்ட எண்ணங்களும், ஊகங்களும், அனுமானங்களும், நம்பிக்கைகளும் அன்றி நிதர்சனமானவை அல்ல!! இப்படி கடவுளை இருக்கு என நம்புபவர்களை ஆத்திகர்கள் என்கின்றோம், நம்பாதவர்களை நாத்திகர்கள் என்கின்றோம்!!!

ஒப்பீட்டளவில் நாத்திகர்களைவிட ஆத்திகர்கள் உலகில் மிக மிக அதிகம்!!! அவர்கள் வணங்கும் கடவுள்களின் வடிவங்களும் அதிகம், அந்த வடிவங்களுக்கான கோவில்கள் மிக மிக மிக அதிகம். விடை கிடைக்காதா ஒன்றை உண்டென்று நம்புபவர்களும், அதனை ஏற்றுக்கொண்டு வழிபடுபவர்களும் அதிகமாக உளார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்? இவர்கள் தன்னம்பிக்கை இல்லாதவர்களா? இவர்கள் ஏதுமறியா முட்டாள்களா? இல்லை!!! படிப்பில், விளையாட்டில், அரசியலில், கலையில் விஞ்ஞானத்தில் சிகரம் தொட்ட பலரும் கடவுளை நம்புகின்றனர்!!! அப்படியானால் அவர்கள் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் பட்டியலிலும், நாத்திகம் பேசுபவர்கள் தன்னம்பிக்கை உடையவர்கள் பட்டியலிலும் அடங்குவார்களா!!! கடவுள் இல்லை என்று சொல்லுபவர்கள்.. எல்லாவற்றையும் தாங்களாகத்தான் செய்தார்கள் என்று சொல்வது வழமை.. அப்படியானால் இறுதியாக உடலில் இருந்து போகும் மூச்சையும் இழுத்துப்பிடிக்கலாம் தானே அதை மட்டும் ஏன் செய்ய மறுக்கின்றார்கள் என்பது ஒரு நடுநிலையானவனின் கேள்வி..!!!அப்படி என்றால் அறியப்படாத ஒன்றை (கடவுளை) அதிகமானவர்கள் ஏன் ஏற்றுக்கொண்டனர்? கடவுள் என்பவர் மனிதர்களுக்கு அவசியமா? என்னை கேட்டால் அவசியம் என்பதுதான் பதில்!!!! அது எந்த மதமாகட்டும், எந்த கடவுள் ஆகட்டும், கடவுள்/ஒருசக்தி நம்பிக்கை அவசியமானது!!! மதத்தின் பெயரை சொல்லி இன்று பல சண்டைகளும், குழப்பங்களும், படுகொலைகளும் நிகழாமல் இல்லை!!! அப்படி இருக்கையில் எதற்கு கடவுளுக்கு ஆதரவு என்கின்ற கேள்வி எழலாம்!! கடவுள் பெயரால் இல்லாவிட்டாலும் பூமியின் சமநிலையை பேணும் பொருட்டு அழிவுகள் வேறு வடிவங்களில் நிகழத்தான் போகின்றது, மதத்தின் பெயராலான அழிவுகளும் இவ்வாறான ஒரு சமநிலைக்கான காரணியே!!! அதற்காக மத கலவரங்கள், வன்முறைகள், கொலைகளை ஆதரிப்பதாக எண்ணவேண்டாம், இந்த விடயத்தை நேர்மறையாக அணுகுவதாயின் இப்படியான பார்வையிலும் பார்க்கலாம் என்பதற்காக சொன்னதுதான் இது!! ஒருவேளை மதங்கள் இல்லாமல் மனிதன் வளர்ச்சி அடைந்திருந்தால் இன்றைய நாகரிக வளர்ச்சி எட்டமுடியாத ஒன்றாககூட இருந்திருக்கலாம்!!! ஒவ்வொரு நாகரிக வளர்ச்சியும் ஏதாவதொரு மதத்துடன் பின்னிப்பிணைந்து ஏற்பட்டதுதான்!!! மற்றும் மதங்கள் போதித்த போதனைகளில் அதிகமானவை ஆதி மனிதனை நல்வழிப்படுத்தின என்பதையும் மறுக்க இயலாது!!! சில போதனைகள் அடக்குமுறை, பெண்ணடிமைத்தனம், அதிகாரத்துக்கு வழி கோலியதையும் மறுப்பதற்கில்லை, சில நேரங்களில் மத நெறிப்படுத்தல் இல்லாமல் இருந்திருந்தால் இதைவிட அவலமான ஆடக்குமுறை/அடிமைப்படுத்தல் இருந்திருக்கலாம்!!! இன்றைக்கும் கடவுளுக்கு/மனசாட்சிக்கு பயந்துதான் பெரும்பான்மையினர் தீமைகளை, அநியாயங்களை செய்ய பின்னிற்கின்றார்கள் என்பதை மறுக்க முடியாது!!!

இதற்குமேல் தன்னாலும், யாராலும் எதுவும் செய்யமுடியாதென்கின்ற சந்தர்ப்பங்களில் ஒரு மனிதனுக்கு இருக்கும் இறுதி நம்பிக்கை கடவுள்!!! மனதின் வலிகளை, துன்பங்களை, இழப்புக்களை, வெறுப்புக்களை, இயலாமைகளை சொல்லி புலம்பவும்; மனதை இறுக்கத்தில் இருந்து தளர்த்திக் கொள்ளவும்; மனதின் அமைதிக்கும் கடவுள்கள்/கோவில்கள் எவ்வளவு தூரம் மக்களுக்கு முக்கியம் என்பதை கணனியின் முன்னிருந்து பகுத்தறிவாதி முகமூடி போடுபவர்களுக்கு புரியாது!!! கடவுள் இருக்கின்றாரா? இல்லையா என்கின்ற இரட்டை மனநிலையில் உள்ளவனும் கடவுளை ஜாசிக்கிறான் என்றால் அதற்கு காரணம்; ஒருவேளை கடவுள் இருந்துவிட்டால் என்கின்ற பயம் மற்றும் நேர்மறையான நம்பிக்கைதான்!!! அவனுக்கு கடவுளை தொழுவதால் இழப்பு எதுவும் இல்லை; அதே நேரம் அவனுக்கு கடவுளிடத்தில் தன் மனப்பாரங்களை ஒப்பித்த பின்னர் அவனுக்கு ஒரு திருப்தி, நின்மதி கிடைக்கின்றது என்றால் கடவுள் இருப்பதில் என்ன தவறு? பிறப்பு, இறப்பு, மகிழ்ச்சி, துக்கம் என்பன எல்லோருக்கும் பொதுவானவை!!! மரணமும், துன்பமும் ஏற்ப்பட்டது என்பதற்காக அவர்கள் கடவுளை வணங்காமல் இருந்துவிடுவதில்லை!!! காரணம் இலகுவானது, அதாவது ஒருவருக்கு வாழ்ந்து முடிக்கு மட்டும் தங்களைவிட விஞ்சிய ஒரு சக்தியின் துணை தேவைப்படுகின்றது!!! இல்லை அப்படி ஒரு சக்தி எனக்கு தேவை இல்லை என நீங்கள் உணர்ந்தால் அது உங்களுக்கு இருக்கும் அபாரதிறன், அதை எலோருடத்திலும் எதிர்பார்க்க முடியாது!!!


இப்படியான பெரும்பான்மையை கடவுளை மறுப்பவர்கள் நம்பிக்கையீனம், இயலாமை உடையவர்கள் என எதிர்வாதம் செய்யாம்!!! ஆனால் யதார்த்தத்தில் சிந்தித்தால் இது ஒரு சாதாரண வெளிப்படை உண்மை!!! எல்லோருக்கும் சிந்தனைகள்,எண்ணங்கள் ஒரேமாதிரி இருப்பதில்லை, அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்!!! கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்கின்ற தலைப்பையே தொடாத மக்களின் எண்ணிக்கை பாதிக்கு மேல்!!! அதிலும் பூமியின் அதிகபட்ச குடிகளான படிப்பறிவு இலாத, சிந்திக்கும் திறன் குறைவான, வறுமையான, பாமர மக்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை, ஆறுதல் கடவுள்தான்!! எதுக்கு அந்த நம்பிக்கையில் அரைகுறை பகுத்தறிவை விட்டு எறியவேண்டும்!! கோவில்களின் செலவுகள், வீண் விரயங்கள் என சிலர் வாதிடலாம்!!! உண்மைதான்; அதேநேரம் பாலில்லாத குழந்தைக்கு பால்தான் நேரடியாக கொடுக்கவேண்டும் என்றில்லை, பீர் வாங்கும் காசிலும் பால்வாங்கி கொடுக்கலாம்!!! கோவிகளில் விரயமாவதை குற்றம் சொல்பவர்கள் சொந்த வாழ்வில் உணவு, உடை, தேவையான அளவிலான உறையுள்ளுக்கு அப்பால் மிகுதி அனைத்து பணங்களையும் ஏழைகளுக்கு கொடுக்கும் உள்ளங்களாக இருத்தல் அவசியம்!!! அதே நேரம் பல பொருட்கள்/பணம் கோவில்களில் வீணடிக்கப்படுவதாக சொல்வது மறுப்பதற்கில்லை; அதே நேரம் கோவில்கள் ஒரு ஊரின் அடையாளம் என்பதால் சில செலவுகளும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்!!! எந்த விடயத்தை எடுத்தாலும் அதில் குறை சொல்வதானால் சொல்லிக்கொண்டே போகலாம்!! கோவில்களின் குறைகளைவிட, அவற்றால் மக்கள் பெறும் மனநிறைவு, நின்மதி, அமைதிக்கு விலை அதிகம் என்பது என் எண்ணம்!!!

(போலிச்)சாமியார்களை பற்றி பார்க்கு முன் உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி பார்ப்போம். இலங்கையில் வவுனியாவில் தோணிக்கல் என்னும் ஊரில் அமைந்திருந்தது எனது நண்பன் ஒருவனின் வீடு.. வீடு என்று சொல்வதை விட ஒரு மாளிகை என்று சொல்லலாம்.. கொளுத்த பண பலம் உடையவர்கள்.. அங்கு நாங்கள் சென்றிருந்த போது வளமையை போலவே இரவில் நாங்களே உணவினை தயார் செய்யத்தொடங்கினோம்.. அன்று செய்த சமையல் "பாபி கியூப்" என்று சொல்லப்படும் ஒருவகை உணவு.. அதாவது இறைச்சியை புகையிலோ, நெருப்பிலோ போட்டு வாட்டி அதன் பின் உண்பதுதான் அந்த உணவின் சிறப்பு.. நாங்கள் அதனை செய்யத்தொடங்கியது மாலை ஆறு மணி அளவில் எல்லாம் செய்து சாப்பிட்டு முடித்தது நள்ளிரவு பன்னிரண்டு மணி அளவில்.!!! நாங்கள் உணவு சமைத்த நாள் அன்று பிரபலமான (என்று சொல்லிக்கொள்ளபடும் ஒரு சாமியார்) ஒரு சாமியார் அங்கு வந்து அடுத்தநாள் பூயைக்காக தங்கியிருந்தார்.. அவர் அன்று இரவு தூங்கும்போது அவரை ஏதோ ஒன்று தூக்கி நிலத்தில் அடித்து விட்டதாம்.. அவர் நிலத்தில் விழுந்து நெற்றியில் மட்டும் ஒரு சின்ன காயமாம் (ஆங்காங்கே நகங்களால் கீறிய காயங்களும் இருக்கின்றதாம்) என்று காட்டினார்.. இதுக்கு என்ன காரணம் என்று அவர் சிந்தையில் ஆழ்ந்து சிந்தித்த போது அவர் எங்களுக்கு சொல்லியது இதுதான் "சுடலை காளி வீட்டுக்குள் வந்துவிட்டாள்" என்று கூறினார். (கொய்யாலை வாடகை தராமலா வந்தா???) என்று யோசிக்கும் அளவிற்க்கு இருந்தது அவரின் காமடியான பேச்சு.!!! பிற்பாடு அதிகாலை நான்கு மணிவரை சாம்பிராணி, மற்றும் பேய்யினை விரட்டுவதற்க்கு என்று தயாரிக்கப்பட்ட ஒரு விதமான சாம்பிரானியுடனும் அதனால் எழுப்பப்படும் புகைகளுடனும் வீடு முழுவது நிறைந்து இருந்தது... அன்றைய நிம்மதியான தூக்கமும் நாசமாக போனது.. (இன்னும் சொல்லப்போனால் அந்த கடுப்புத்தான் என்னை எந்த பதிப்பினை எழுதத்தூண்டியது...!!!) பிறகு அவர் சாந்தி செய்து விட்டார் என்று கூறி அதற்க்கு ஒரு தொகை பணத்தை வாங்கினார்..

ஏன் இவ்வாறான சுடலைக்காளி எல்லாம் பணம் அதிகமாக உள்ளவர்கள் இறைச்சியை வாட்டும் போதுமட்டுமா சமூகம் அளிப்பாள்??? ஏன் நடுத்தர குடும்பம் ஒன்று வாழும் வீட்டுக்குள் ஏன் போவது கிடையாது?? அவ்வளவு அடிபட்ட (போலி)சாமியாருக்கு நெற்றியில் மட்டுமா அடிவிழ வேண்டும்.. இவ்வாறான கேள்விகள் எனக்கு அன்றைய நாளில் இருந்து இன்று வரை தெளிவு பெறாத வினாக்களாகவே இருந்துகொண்டு இருக்கின்றன.. எல்லோரும் முட்டாள்கள் என்று அவர்கள் நினைப்பதுதான் தப்பு.. அவர்களை விட அந்த சாமியார் இந்த அளவு நாடகம் போடுவதையும் அறிந்துகொள்ளத்தெரியாது அவருக்கு பணிவிடை செய்யும் என் நண்பனின் வீட்டாரை என்னவென்று சொல்வது... "ஏமாற்றுவது தப்பில்லை ஏமாறுவதுதான் தப்பு" இன்றைய அவசர உலகத்தில் காளி கூட பணக்கஷ்டத்தால் வாடகை தராமல் தங்கிவிட்டு போகும் நிலைமை என்று நினைத்துவிட்டு போவதை தவிர இதனை மாற்றவோ, திருத்தவோ முடியாது என்பது மட்டும் உறுதி...சாமியார்கள்/ஆன்மீக குருக்கள் - இது அதிகமாக இந்துமதம் சந்திக்கும் பிரச்சனைதான்!! இந்துக்கள்தான் அதிகமாக இவர்களின் பின்னால் செல்கின்றனர்!!! பிரேமானந்தா முதல் நித்யானந்தாவரை எத்தனையோ போலிகள் கண்டறியப்பட்டாலும் மக்கள் கூட்டம் மட்டும் இவர்கள் பின்னால் செல்வதை குறைத்தபாடில்லை!!! இவர்கள் தவிர அவதாரமாக சித்தரிக்கப்படும் சத்ய சாயிபாபா, அம்மா பகவான் போன்றோரும் மக்களால் அதிகம் பின்பற்றப்படுபவர்கள்!! மாற்றமே கிடைக்காமல் துன்பத்தோடு வாழ்வை நடத்துபவன், இன்னொருவன் பலன் கிடைத்தது என்று சொன்னதை நம்பி; தனக்கும் கிடைக்காதா! என நம்பி வந்தவன், சாமியாரை நம்பி சென்ற நேரம் நல்லது கிடைக்கப்பெற்றவன், எங்கு தேடியும் அமைதியை காண முடியாதவன், கடவுளாலும் ஏமாற்றமே மிஞ்சியதாக சோர்வடைந்தவன், திருமணமாகதவன், குழந்தை பேறில்லாதவன், தீராத நோயுடையவன் என எம்மை சுற்றி ஏகப்பட்ட இயலாமைகள் உள்ளனர்!!! அவர்களுக்கு தேவை தமக்கொரு தீர்வு!!! அது அங்கு கிடைக்காதா என்கின்ற சிறு நம்பிக்கைதான் அவர்களை அங்கு கொண்டு செல்கின்றது!!! அதனால்த்தான் பாமரன், படிக்காதவன், ஏழை தவிர்த்து படித்தவன், பணக்காரன், சாதனையாளன் என பலரும் இவர்களை நாடி செல்கின்றனர்!!! மக்களுக்கு பிரச்சனைகள் இருக்கும்வரை எத்தனை சாமியார்கள் தோன்றினாலும் அவர்களுக்கு வசூல் அள்ளத்தான் செய்யும்!!! இதை வைத்து மக்களை முட்டாள்கள் என முத்திரை குத்துவதை விடுத்து ஆக்கபூர்வமாக ஏதாவது சிந்திக்கலாம்!!! போலியாக அறியப்படும் சாமிக்கு இன்னொருவன் தன்னை சாமியாக நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவுக்கு கடுமையான தண்டனை கொடுத்தாலே பாதி போலிகள் ஒளியும்!!! அரசாங்கங்கள் நினைத்தால் இவற்றை ஒழிப்பது கடினமான வேலையில்லை; ஆனாலென்ன பாவம் அரசியல்வாதிகளும் அரசியல் செய்ய இவர்களைத்தான் நம்புகின்றார்கள், இதுகூட போலிகளுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதமாக அமைந்துவிடுகின்றது!!!

கடவுளுக்கு உருவம் கொடுத்தது போதாதென்று உயிர் கொடுக்க நினைப்பதுதான் சில இந்துக்களுக்கு இப்போதிருக்கும் பிரச்சனை; உருவத்திடம் கிடைக்காத பதிலை 'உயிர்' சீக்கிரமே கொடுக்கும் என்கின்ற நம்பிக்கைதான் இதற்கு காரணம். இதை பேராசை என்று சொல்வதா!!! இயலாமை என்று சொலவதா!!! இல்லை முயற்சி என்பதா!!! மூட நம்பிக்கை என்பதா!!!... இன்று வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் அவரவருக்கு உள்ள பிரச்சனைகள் அவரவர் பக்கம் நின்று பார்த்தால்த்தான் புரிந்துகொள்ள முடியும்!!! வெளியில் நின்று கருத்து சொவது சுலபம், சொன்னாம் புரிந்துகொள்ளும் நிலையில் அவர்களும் இல்லை!!! "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போலி சாமியார்களுக்கும் பொருந்தும்!!!" பிரபஞ்ச இயக்கத்தில் இவையெல்லாம் கடவுள்/இயற்கையின் அங்கம் என மனதை தேற்றுவதை தவிர வேறு வழியில்லை!!


கடவுள் இல்லை, கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் கடவுளை பரப்பியவன் அயோக்கியன் கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி. தந்தை பெரியார்.

Post Comment

14 comments:

 1. Replies
  1. உண்மையாவா??? ஓஓ அப்ப மிக்க நன்றி... அண்ணா :)

   Delete
 2. கடவுள் இருப்பதில் எமக்கு எந்தக் கவலையும் இல்லை. கடவுள் இருக்கின்றார் .. ஆனால் மனிதனின் மனதில் மட்டுமே என நம்புவோன் நான் .. பிரபஞ்ச சக்தி தான் கடவுள் என்போரும் உண்டு.. இருந்துவிட்டு போகட்டும், ஆனால் பிரபஞ்ச சக்தி நம் சொல்வதைக் கேட்கும், தரும் என்பதை எல்லாம் நான் நம்புவதில்லை.

  நாம் எதிர்ப்பது Organized religions-களைத் தான் அவை கடவுள் கும்பிடு என்பதையும் தாண்டி ஒருவன் ஒன்னுக்கு எப்படி போகணும் என்பது முதல் எத்தனைப் பேரைக் கட்டிக்கணும் வரை நம்மை ஆட்டுவிக்ககின்றார்கள் ... கடவுள் பெயரால் பணம், அதிகாரம் போன்றவற்றை சம்பாதிக்கின்றார்கள். அண்மையக் காலமாக அறிவியலிலும் மூக்கை நுழைக்க ஆரம்பித்துவிட்டார்கள் .. இவற்றைத் தான் நாம் எதிர்க்கின்றோம்.

  ReplyDelete
  Replies
  1. நிட்சையமாக.. எனக்கு கடவுள் இருக்கின்றார் என்பதில் உடன்பாடு இல்லை.. ஆனால் எங்களுக்கு மேல் ஒரு அதீதமான ஷக்தி இருக்கின்றது என்பதை நம்புகின்றவன்... இருப்பினும் உங்கள் வருகைக்கு நன்றி.. சகோ...

   Delete
  2. ஓ... ஓ... அப்படியா???? மிக்க நன்றி தோழி...
   உங்கள் வருகைக்கு நன்றி :)

   Delete
 3. அப்படியானால் இறுதியாக உடலில் இருந்து போகும் மூச்சையும் இழுத்துப்பிடிக்கலாம் தானே அதை மட்டும் ஏன் செய்ய மறுக்கின்றார்கள் என்பது ஒரு நடுநிலையானவனின் கேள்வி..!!!ஹி..ஹி..நல்ல கேள்வி நல்ல பதில்...முழுமையாக அறியாதவிடயத்தை எப்படி இல்லைஎன்று கூற முடியும்...பகுதியாக கூட அறிந்தவர்கள் யாரும் இல்லை ஒருவர் தான் கடவுள் அவதாரம் என நிரூபிப்பதற்கு அவர் செய்யும்வேலை வாயில் இருந்து லிங்கத்தை எடுப்பது மட்டுமே...ஏன் ஆதாரம் கேட்பவர்களை வேறு ஒரு கலக்ஸிக்காவது கொண்டு சென்று அல்லது அதை இங்கெ கொண்டுவந்து காட்டினால் என்ன நமக்கு எது முடியாமல் இருக்கின்றது அதை செய்பவன் கடவுள் ஆகின்றான். உதாரணத்திற்கு கி.மு 10 000 இல் துப்பாக்கியை ஒருவன் வைத்திருப்பானாயின் அவன் கடவுள்..அதே போல் நான் கேட்ட விடயத்தை எதிர்காலத்தில் ஒருவன் செய்து காட்டிவிட முடியும்..ஒவ்வொரு தடவையும் எம்மால் கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞானத்தால் முடியாத விடயம் எதுவோ அதை செய்பவன் கடவுள் ஆகின்றான்.ஆனால் விஞ்ஞானம் அடுத்தபடிக்கு சென்றுவிடும் உண்மையிலேயே கடவுள்வந்து நான் தான் கடவுள் என்று கூறினால் நம்புவீர்களா? எதைக்கொண்டு அவர் தன்னை கடவுள் என்று நிரூபிக்கமுடியும்?

  கடவுள் நம்பிக்கையில் அஸ்திவாரமே ஒரு பொருள் படைக்கப்பட்டதற்கு ஒரு படைப்பாளி இருக்கவேண்டும்.ஆனால் அதுவே அவர்களுக்கு எமனாகிவிட்டது கடவுள் தானாக படைக்கப்பட்டவராம்? கடவுள் தோன்றுவதற்கு முன் எது எப்படி இருந்தது அவர் தோன்றுவதற்கு காரணம் என்ன? பூமி தானாக தோன்றியது என்றால் நம்ம தயாரில்லை ஆனால் பிரபஞ்சட்தையே படைத்த கடவுள் தானாக தோன்றியவர் என்றால் ஆம் உடனே நம்பிவிடுகின்றோம்.

  யாராலும் கடவுள் இருக்கிறாரா என்பதை கூறமுடியாது.எமக்குமேல் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று நம்பினாலும் அதற்கும் காரணம் தெரியாது.

  எல்லாம் தற்செயலாக தோன்றியவை அவை பாட்டுக்கு தொடர்கின்றன அவ்வளவுதான். கடவுள் என்று ஒன்று இருக்கவேண்டிய அவசியமில்லை அப்படி இருந்தால் இரு மூலையில் இருந்து நடப்பவற்றை வேடிக்கை பார்க்கட்டும் இப்பொழுது அழிவுகளை வேடிக்கை பார்ப்பதுபோல்

  ReplyDelete
  Replies
  1. ///யாராலும் கடவுள் இருக்கிறாரா என்பதை கூறமுடியாது.எமக்குமேல் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று நம்பினாலும் அதற்கும் காரணம் தெரியாது/// செருப்பால் அடித்தது போல ஒரு பதிலடி...:) தோற்றமும் வழிபாடும் வேறுபட்டவை இருந்தும் மனிதம் அதனை ஒன்றாகக முயல்வதுதான் கவலைக்கு உரியதாக இருக்கின்றது... உங்கள் வரவுக்கு மிக்க நன்றி...

   Delete
 4. சிலர் இருக்குது என்பர். சிலர் இல்லை என்பர். எமக்கில்லை அந்த கவலை என்று பாரதிதாசன் சொல்வார்.கடவுளை - அந்த நம்பிக்கையை கவலை என்று மிக எளிதாக சொல்லுவார்.இறப்பு குறித்து எழும பயம் தான் கடவுளின் தோற்றுவாய்.
  வள்ளுவர் அதை மிக மிக இலகுவாக கடந்து செல்வார்.உறங்குவது போலும் சாக்காடு. விழிப்பது போலும் பிறப்பு.

  தினம் தினம் இறந்து பிறப்பது காண என்ன குழப்பம்?
  "ஆனால் எங்களுக்கு மேல் ஒரு அதீதமான ஷக்தி இருக்கின்றது என்பதை நம்புகின்றவன்" -
  ஓராயிரம் - பல கோடி மேலான (அதீதமான )வலு (ஷக்தி) இருக்கு. அதுக்கு என்ன ? யார் இல்லைன்னு சொன்னா? கடவுளை நம்பும் - நம்பாத யாரும் அதை மறுக்கலை. உங்கள் நம்பிக்கை - அதன்பால் எந்த தாக்கத்தையும் செய்ய முடியாது. இதில் தான் ஆத்திகம் - நாத்திகம் முரண் படுகிறது. உங்கள் நம்பிக்கை அடுத்தவரை பாதிக்காத வகையில் இருக்கட்டும் என விரும்புகிறவர் நாத்திகர்.

  ReplyDelete
  Replies
  1. உங்களைப்போல அதீத விளக்கம் படைத்தவர்கள் எனது பதிப்பினை வாசிப்பது சந்தோஷம்... உண்மைதான் கடவுள் என்று பொதுவாக பார்த்தால் பிரச்சனை இல்லை ஆனால் அதனை தனித்தனியாக பார்க்கும்போதுதான் மத,இன பிரச்சனைகள் தலை தூக்குகின்றது... தலையிடியே அங்குதான் ஆரம்பிக்கின்றது...உங்கள் வரவுக்கு மிக்க நன்றி...

   Delete
 5. சிலர் இருக்குது என்பர். சிலர் இல்லை என்பர். எமக்கில்லை அந்த கவலை என்று பாரதிதாசன் சொல்வார்.கடவுளை - அந்த நம்பிக்கையை கவலை என்று மிக எளிதாக சொல்லுவார்.இறப்பு குறித்து எழும பயம் தான் கடவுளின் தோற்றுவாய்.
  வள்ளுவர் அதை மிக மிக இலகுவாக கடந்து செல்வார்.உறங்குவது போலும் சாக்காடு. விழிப்பது போலும் பிறப்பு.

  தினம் தினம் இறந்து பிறப்பது காண என்ன குழப்பம்?
  "ஆனால் எங்களுக்கு மேல் ஒரு அதீதமான ஷக்தி இருக்கின்றது என்பதை நம்புகின்றவன்" -
  ஓராயிரம் - பல கோடி மேலான (அதீதமான )வலு (ஷக்தி) இருக்கு. அதுக்கு என்ன ? யார் இல்லைன்னு சொன்னா? கடவுளை நம்பும் - நம்பாத யாரும் அதை மறுக்கலை. உங்கள் நம்பிக்கை - அதன்பால் எந்த தாக்கத்தையும் செய்ய முடியாது. இதில் தான் ஆத்திகம் - நாத்திகம் முரண் படுகிறது. உங்கள் நம்பிக்கை அடுத்தவரை பாதிக்காத வகையில் இருக்கட்டும் என விரும்புகிறவர் நாத்திகர்.

  ReplyDelete
  Replies
  1. உங்களைப்போல அதீத விளக்கம் படைத்தவர்கள் எனது பதிப்பினை வாசிப்பது சந்தோஷம்...

   Delete
 6. கடவுள் இருப்பதை நம்பியதால் நான் எந்த சிரமமோ நஷ்டமோ அடைந்ததில்லை. மன நிம்மதி: போதும் என்ற மனம்: குழப்பமற்ற ஒரு வாழ்க்கைத் திட்டம் என்று இந்த மார்க்கத்தால் நான் சீரிய நிலையை அடைந்துள்ளேன். அதே மார்க்கத்தை தவறாக விளங்கி தவறான பாதையில் பயணிப்பவர்களுக்கு மார்க்கம் பொறுப்பாக முடியாது.

  ReplyDelete
  Replies
  1. நண்பா ஒரு நாணையத்துக்கு இரண்டு பக்கம்... அதுபோலதான் ஒரு கருத்துக்கும் ஏற்புடைய கருத்து ஏற்க்க மறுக்கும் கருத்து என்று மாறுபடும்.. உங்களுக்கு இருக்கு என்று தோன்றுகின்றது.. கடவுள்??? இருப்பதாகவே இருக்கட்டும்... மற்றவர்களை கட்டாயபடுத்தி இருக்கின்றது வழிபடுங்கள் என்று திணிக்காமல் இருந்தால் சரி... உங்கள் வரவுக்கு மிக்க நன்றி...

   Delete