Friday, August 31, 2012

விஸ்வரூபம் : முடிவில்தான் ஆரம்பம்..!!!

தலைப்பினை பார்த்தவுடன் எல்லோருக்கும் உலக நாயகனின் "விஸ்வரூபம்" படத்தின் நினைப்புதான் வந்திருக்கும் (அதுக்கு நான் பொறுப்பாளி அல்ல). ஆனால் இந்த பதிப்புக்கும் அந்த படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தலைப்பு மட்டும் கமல் சாயலில் விளங்காமல் வைக்கப்பட்டதே.!! இந்த பதிப்பு முற்றும் முழுதாக நீங்கள் எதிர் பார்க்காததை பற்றி எழுதப்பட்டிருக்கும்.!! சரி கனக்க பில்டப்பை குடுக்காமல் பதிப்புகள் செல்வோம்..!!


கொஞ்சம் விமர்சனம், கொஞ்சம் புராதனம், கொஞ்சம் மத நம்பிக்கை இது போன்ற வேறுபட்ட அம்சங்களை உள்ளடக்கிய விடயம், மக்களை அதிகம் அச்சத்தில் ஆழ்த்திய விடயம், ஊடகங்கள் வாய் திறக்க பயப்படும் விடயம், எச்சரிக்கைகள், தீர்க்கதரிசனங்கள், ஆய்வுகள், நம்பிக்கைகள், மறுப்புக்கள், இரகசியங்கள், புராதன நம்பிக்கைகள் இவைகளை உள்ளடக்கிய விடயம், உலகையே ஆச்சரியப்பட வைத்த/வைக்கவிருக்கும் விடயம் பற்றித்தான் இந்த பதிப்பில் பார்க்கப்போகின்றோம். மத நம்பிக்கை உள்ளவர்கள், மத நம்பிக்கை இல்லாதவர்கள், ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், பத்திரிகையாளர்கள் என்று எல்லோரும் ஒருமிக்க ஒரே விதமான நம்பிக்கைகளை வெளிப்படுத்திய விடயம். நாம் வாழுகின்ற இந்த பூமி மிக விரைவில் ஒரு பாரிய அழிவினை சந்திக்க சந்தர்ப்பம் இருக்கின்றது. பூமியை அழித்துவிடும் வகையில் பூமிக்கு ஆபத்தை உண்டாக்கும் வகையில் பல்வேறு ஆபத்துக்கள் பூமியை நோக்கி மிக வேகமாக வந்துகொண்டு இருக்கின்றன. நாம் வாழுகின்ற, நாம் அளவுக்கு அதிகமாக நேசிக்கின்ற இந்த பூமி வெகுவிரைவில் ஒரு ஆபத்தை சந்திக்கப்போகின்றது. இப்படி பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்வுகள் கூறப்படுகின்ற ஒரு விடயம் பற்றித்தான் சற்று விரிவாகவும், ஆழமாகவும் பார்க்கப்போகின்றோம்.

 IRAS (Infrared Astronomical Satellite)

முதல் முதலில் 1983ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான NASA (National Aeronautics and Space Administrationஎன்ற அமைப்பு விண்வெளி தொடர்பான ஆய்வுக்காக ஒரு விண்கலத்தை வானுக்கு அனுப்பியது. அந்த விண்கலத்தின் பெயர் IRAS (Infrared Astronomical Satellite) என அழைக்கப்பட்டது. எதனையோ தேடிச்சென்ற விண்கலத்தில் வழமைக்கு மாறாக வித்தியாசமான காட்சி ஒன்று படம் பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த காட்சி தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட விஞ்ஞானிகள் இறுதியில் 1984ஆம் ஆண்டு "மாபெரும் மர்மப்பொருள் ஒன்று பூமியில் இருந்து 50 மில்லியன் தொலைவில் இருந்து பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது" என்று தமது ஆய்வு அறிக்கையில் கூறியிருந்தனர். அதனை தொடர்ந்து 1992ஆம் ஆண்டு அதே விஞ்ஞானிகள் இந்த மர்மப்பொருளுக்கு "X-கிரகம்" என்று பெயர் வைப்பதாக அறிவித்திருந்தது. இதன் பின் NASA இது பற்றி எதுவிதமான தகவலையும் வெளியிடவில்லை. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்ட போதும் உறுதியாக நம்பப்படுகின்ற ஒரு காரணமாக அமெரிக்க ஆட்சி வெளிவிட்ட உத்தரவாகும். அதாவது இது தொடர்பாக தகவல்கள் மேலும் வெளிவரும் போது மக்கள் பீதி அடைவர்; இயல்பு வாழ்க்கை குழம்பிப்போகும் என்பதற்காக அமெரிக்க அரசாங்கம் NASAவில் வாய்களை மூடியது. இந்த அழிவு தொடர்பான அச்சத்தை முதலில் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய பெருமையும், புகழும் NASA விஞ்ஞானிகளையே சாரும்.


 "NIBURU" (நிபுறு) 

காலப்போக்கில் விஞ்ஞானிகள் அந்த X-கிரகத்திற்க்கு சூட்டிய பெயர் "NIBURU" (நிபுறு) ஆகும்.இது ஒரு இருண்ட கோளாகும். இந்த கோளானது பூமியில் மோதும்போதோ அல்லது சூரிய குடும்பத்துக்குள் பிரவேசிக்கும் போதோ பாரிய ஆபத்தை ஏதிர்நோக்க வேண்டி இருக்கும் என விஞ்ஞானிகளால் நம்பப்படுகின்றது. இந்த இருண்ட கோள் பூமியை விட 1500 மடங்கு பெரியது. இதில் ஜீவராசிகள் விசிக்கின்றார்களா? காலநிலை எவ்வாறு இருக்கும்? கோளின் தன்மை எவ்வாறாக இருக்கும்? இது எதுவும் இன்னமும் கண்டுபிடிக்கப்பட்டதாக இல்லை. ஆனால் 2012ஆம் ஆண்டின் இறுதியில் சூரிய குடும்பத்தை அண்மித்துவிடும் என்பது மட்டும் உறுதி என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெருவிக்கின்றார்கள். 2012 - 2013ஆம் ஆண்டளவில் நிபுறு கிரகத்தை மக்கள் வெறும் கண்ணால் பார்க்க கூடியதாக இருக்கும். கிட்டத்தட்ட சூரியனைப்போல இருக்கும் என நம்பப்படுகின்றது.

நேர்கோட்டில் வரும் "NIBURU


சூரியன், நிபுறு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது பூமி அழிவினை சந்திக்கும் என்பது ஒரு தரப்பினரின் வாதமாகும். நேர்கோட்டில் வரும்போது பூமி இருளில் ஆளும், சந்திரன் சிகப்பு நிரமாக காட்சியளிக்கும், சூறாவளி, நிலநடுக்கம், சுனாமி போன்ற கடல் அழிவு என பேரழிவுகள் ஏற்படும் எனவும் நிபுறு கிரகத்தை சுற்றி இருக்கும் விண்கற்கள் பூமியில் மோதலாம் என்றும் சொல்லப்படுகின்றது. இவ்வாறு நேர்கோட்டில் சந்திக்கும் போது மறுபடியும் ஒரு முறை இன்னுமோர் துருவ மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நம்பப்டுகின்றது. பூமி சாதரணமாக நேராக நின்று சுற்றுவதில்லை.  23.5 கோணம் சாய்வில் சுற்றுகின்றது. இது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற ஒரு துருவ மாற்றத்தால் ஏற்பட்டதாக நம்பப்படுகின்றது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நேராக சுற்றிவந்த பூமி 23.5 கோணம் சாய்வாக சுற்றும் போது வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாகவும், தமிழர்கள் வாழ்ந்த குமரிக்கண்டம் (லெமூரியா கண்டம்) நீரினுள் அமிழ்ந்து போனதாகவும், ஒருகாலம் உலகையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த டைனோசர்கள் அழிந்துபோனதாகவும், நோலாவின் வெள்ளப்பெருக்கு இடம் பெற்றதாகவும் விஞ்ஞானிகள் யூகம் தெருவிக்கின்றனர்.

தலீவன் சூரியனும் குடும்பமும்.!!!

எல்லாவற்றுக்கும் தலைவன் அவர்தான் எங்கள் சூரியன்.. சூரியனை நம்பியே மற்ற கிரகங்கள் எல்லாம் இருப்பதாகவும், இவை சூரியனில் இருந்தே உருவானதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றாகள். சூரியனில் அவ்வப்போது வெடிப்புக்கள், புயல்கள் ஏற்படுவது வழமை.. இந்த விளைவுகளால் ஏற்படும் தாக்கம் பூமி உட்பட எல்லா கிரகங்களிலும் உணரப்படும். இது போன்ற ஒரு சூரியப்புயல் 19ஆம் நூற்றாண்டில் பூமியை கடந்ததாக சொல்லப்படுகின்றது. ஆனால் இந்த முறை ஏற்படவிருக்கும் சூரிய புயல் மிகப்பெரிய பாதிப்பை உண்டுபண்ணும் என்று நம்பப்டுகின்றது. இதற்க்கான காரணம் சூரியன் 24ஆம் கட்டத்தை எட்டுகின்ற படியினால் சூரியனின் மேற்பரப்பில் வெடிப்புக்கள் ஏற்படும் எதிலிருந்து பல வகையான இரசாயன கதிர்வீச்சுகள் வெளிவரத்தொடங்கும். சூரியனை சார்ந்து பூமி இருப்பதால் சூரியனின் அழிவுதான் பூமியின் அழிவு என்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். பூமியில் இருக்கும் கடல் நீர் வற்றிப்போகும் அளவுக்கு வெப்பம் உக்கிரகமாக இருக்கும். ஒரு கட்டத்தில் பூமியை போல எல்லா கிரகங்களையும் சூரியன் தனது ஈர்ப்பு சக்தியினால் உள் இழுத்து கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி பூமியை போல சிறிய அளவுக்கு வந்து பின்னர் கருமையான நட்சத்திரமாக மாறி காணமல் போகும் எனவும் ஒரு தரப்பினர் கருத்து தெருவிக்கின்றார்கள். இதனால் எல்லா விதமான இயற்கை அழிவும் ஏற்படும்.


பூமியை சுற்றி பாதுகாப்பாக இருக்கும் காந்தப்புலங்கள்!!!

அடுத்ததாக பூமியை சுற்றி பாதுகாப்பாக இருக்கும் காந்தப்புலங்கள் இந்த சூரிய புயலால் தாக்கப்படும். அப்போது பூமியில் இருந்து 36kmஇல் சுற்றிக்கொண்டிருக்கும் செயற்கை கோள்கள் அனைத்தும் தூள் தூளாகிவிடும். இதனால்தகவல் தொழில்நுட்பங்கள் பாதிக்கப்படும் (தொலைபேசி, இன்டர்நெட் எல்லாம் நிறுத்தப்படும்). சூரிய புயலால் தொடர்பாடல் எல்லாம் துண்டிக்கப்பட்ட நிலையில் கப்பல், விமானம் எதுக்கும் இயக்க நிலையில் இருக்காது. சூரிய புயலில் இருந்துவரும் ஒருவித இலத்திரனில் காந்த கதிர்ப்புக்களினால் மின்சாரம் துண்டிக்கப்படும். இதனால் பூமி முழுவதும் இருள் ஆக்கிரமிப்பு இருக்கும். இது தவிர கதிர்ப்புக்கள் மனித உடம்பில் படும் போது என்பு, சதை எல்லாம் உருகி சாம்பலாகிவிடும். இவ்வாறான ஒரு பேரழிவை தன்னகத்தே வைத்துக்கொண்டு ஒளி வீசிக்கொண்டிருக்கின்றது தலைவன் சூரியன்..!! சூரியனின் மேற்பரப்பு வெப்பம் ஒரு லட்சத்தி நாற்பத்தெட்டாயிரம் பரநைற்றுக்களாகும். இந்த சூரிய புயல் 2000 மைல் வேகத்தில் பூமியை கடக்கும் போது அதன் வெப்பம் 10000 பரநைற்றாக இருக்கும். இந்த வெப்பத்தாலும், புயளாலும் பூமியை சுற்றி காணப்படும் லட்சக்கணக்கான விண்கற்களில் 1000 கணக்கான விண்கற்களாவது பூமியின் மீது விழும் என்று நம்பப்படுகின்றது. இந்த கற்கள் சூரிய புயலின் வெப்பத்தால் அதிக வெப்பத்தோடு இருக்கும் இது பூமத்தியரேகைக்குள் நுழையும் போது தீ பற்றி எரியும். இந்த கற்களின் எடை சுமாராக குறைந்த பட்சமாக 3 டன்களும் அதிக பட்சமாக 20 டன்களும் இருக்கும்.

ஏரிகல் ஒன்று விழும்போது..!!!

இவ்வாறன கல் ஒன்று விழும்போது எத்தகைய அழிவு ஏற்படும் என்று எண்ணிப்பார்க்க முடியாது ஆனால் அழிவு வரப்போவது மட்டும் உறுதி.!! இவ்வாறான கற்கள் 2010ஆம் ஆண்டில் இருந்து அவதானிக்கக்கூடியதாக இருக்கும் என 2009ஆம் ஆண்டிலேயே விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். அதற்க்கமைய 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03 தேதி முதலாவது கல்லும், அக்டோபர் 12இல் இரண்டாம் கல்லும், 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி மூன்றாவது கல்லும் தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்டது. கடைசியாக கண்டறியப்பட்ட 15 அணுகுண்டுகளை போன்ற சக்தியினை உடையதாக இருக்கும் என விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். இந்த சூரிய புயல் 100 மில்லியன் ஐதரசன் குண்டுகளின் பலத்தினை உடையது என்று கருதப்படுகின்றது. இவ்வாறன அழிவுகள் பற்றியும் அதன் ஆய்வுகள் பற்றியும் விஞ்ஞானிகள் பலரும் பல தரப்பட்ட வகையில் குறிப்பிட்டிருக்கும் நிலையில்.. இது போன்ற ஒரு பேரழிவினை 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து திடீரெண்டு அழிந்துபோன ஒரு இனத்தவர்களின் (மாயன் இனத்தவர்) குறிப்புக்களும், அவர்களின் நாட்காட்டியும் துல்லியமாக கூறுகின்றது.

மாயன் இனத்தவர் கூறியவற்றை பார்க்கும் முன்னர் மாயன்கள் என்பவர்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன என்று கொஞ்சம் பார்ப்போம்.!!

மாயன் இனம் வாழ்ந்த இடம்.!!!

மாயன் வரலாறு :- அமேரிக்காவில் வாழ்ந்த செவ்விந்தியர்களிடம் காணப்பட்ட ஒரு நாகரீகம் தான் மாயன் நாகரீகம் ஆகும். கி.மு 2600 - கி.பி 900 ஆண்டளவில் மத்திய அமெரிக்காவில் தோன்றி வளர்ந்த நாகரீகம் தான் இந்த மாயன் நாகரீகம்.!! மாயன் இனத்தவர் முக்கியமாக கட்டடக்கலை, வானவியல், நாட்காட்டி தயாரிப்பு, அலங்காரத்துடனான வீடுகளை கட்டுவது என்று அக்காலகட்டத்தில் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு திறமைகளை வெளிக்காட்டியுள்ளனர். இவற்றை எல்லாம் விட எண்கணிதத்தில் இவர்கள் மிகவும் கை தேர்ந்தவர்களாக இருந்தனர். மாயன்கள் வாழ்ந்த இடம் இன்று காலத்தின் மாற்றத்தாலும், அரசியல் மாற்றத்தாலும் 5 நாடுகளாக இருக்கின்றன. அவையாவன மெக்ஸிகோ, குவாட்டமால, பெலிஸ், கொண்டுராஸ், எல்சல்வடோர் என்று 5 நாடுகளாக இருக்கின்றன. கி.மு 11ஆம் ஆண்டளவில் மாயன்களின் குடியேற்றங்கள் இடம் பெற்றதாகவும் கூறப்படுகின்றது. இவர்கள் அயல் நாடுகளில் இருந்து வந்து குடியேறி இருக்கலாம் என்று நம்பப்டுகின்றது. இவர்களில் காலமாக வேட்டையை மட்டும் நம்பி இருக்காமல் விவசாயம் செய்யத்தொடங்கிய காலமாகும்.

மாயன் இனத்தின் வரலாற்று இடங்கள்.!!!

இவர்களின் பிரதான உணவு சோளம், பிரதான குடிவகை கொக்கோ ஆகும். இவர்களின் உணவில் உப்பு மிக முக்கியமானதாக காணப்பட்டது. காய்கறி, இறைச்சி போன்றவற்றை உப்பில் போட்டு தமது தயாரிப்புக்களாக ஏற்றுமதியும் செய்து வந்தனர். இதற்க்காக அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் போக்குவரத்துக்கு பாதைகள் அமைத்தனர். இவர்களுக்கு கடவுள் நம்பிக்கை மிகவும் அதிகம். கல்வி, அன்பு, பிறப்பு, இறப்பு, செல்வம் என்று மொத்தமாக 160 கடவுள்களை வழிபட்டு வந்தனர். இதற்க்காக கோவில்கள் கட்டி அடிக்கடி திருவிழாக்களும் கொண்டாடி வந்தனர். கி.மு 50களில் "ரெறப்" என்ற நகரம் உருவானது. இதில் கோவில்கள், மண்டபங்கள் நிறைந்த நகரமாகும். மன்னர் அரண்மனை, கோவில்கள், எகிப்து பிரமிட் போன்ற கட்டடங்கள் எல்லாம் கலை நயத்துடன் நிர்மானிக்கப்பட்டிருந்தன. மனித உருவங்கள் துல்லியமாக செதுக்கப்பட்டிருந்தன. கடவுள் நம்பிக்கையை போல பலிகளும் சாதாரணமாக இடம்பெற்று வந்தன. விலங்குகள் முதல் குழந்தைகள் வரை சர்வ சாதாரணமாக பலிகள் இடம் பெற்று வந்தன. உலக மாற்றத்தை சரியாக கணித்த பிரபல நாகரீகத்துக்கு என்ன நடந்தது என்று கேட்டால் இது வெறுமனையே கேள்வியாகத்தான் இருக்கும் ஏன் என்றால் அவர்களுக்கு என்ன நடந்தது என்று கூற முடியாமல் திடீரெண்டு அழிந்து போய்விட்டார்கள்.

மாயன் நாட்காட்டி..!!!


மாயன் நாட்காட்டி சொல்வது என்ன :- நாட்காட்டியின் ஆய்வில் இருந்து பூமியின் அழிவு 2012.12.21 அன்று இடம் பெரும் என்று கூறுகின்றது. இந்த மாயன் நாட்காட்டியின் படிதான் 1000ற்க்கு மேலாக காலநிலைகளும், சூரிய நிலையம், சூரிய கிரகணமும் துல்லியமாக கணிக்கப்படுகின்றது. இவ்வாறான தெளிவான வானிலை குறிப்புக்களையும், இசைவுகளையும் கூறி வந்த மாயன் நாட்காட்டி 2012.12.21 உடன் முடிவடைந்து விட்டது. இந்த தினத்திற்க்கு பின்னர் என்ன நடைபெறப்போகின்றது? இதன் பின்னர் உலகம் அழிந்து விடுமா? இந்த அழிவு தொடர்பான குழப்பத்தை ஆணித்தளமாக மக்கள் மத்தியில் விதைத்தது இந்த மாயன் நாட்காட்டியின் முடிவுதான்.!!! எவ்வாறு நடந்தது என்று இன்றுவரை தெரியாமல் அழிந்துபோல மாயன் இனத்தவர்களை போல பூமியும் அழிந்து போகுமா???

மாயன் நாட்காட்டியை தொடர்ந்து ஆணித்தளமாக முன்வைக்கப்படும் கருத்து. பரிசுத்த வேதாகமத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கின்றது. அதாவது அங்கு குறிப்பிடப்பட்டிருப்பது இதுதான்..!!! அது மட்டும் இல்லாமல் மலைகள் இடம் மாறிப்போகும், கடல்கள் வற்றிப்போகும், பூமி இருண்டு போகும் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இந்த அழிவுக்கு முன்னதாக முக்கியமாக நான்கு அறிகுறிகள் தென்படுமாம். அவையாவன 1. சூரியன் கருப்பாக மாறும், 2. சந்திரன் ரத்தம் போல சிவப்பு நிறமாக மாறும், 3. நட்சத்திரங்கள் பூமியில் விழும், 4. இந்த ஆபத்துக்களுக்கு பயந்து மக்கள் மலைகளிலும் குகைகளிலும் பதுங்கிக்கொள்வர்.. சரி இந்த அறிகுறிகளை நியாயப்படுத்துவோம்..


கருப்பு நிறமாக மாறிகொண்டிருக்கும் சூரியன்.!!!

சூரியன் தன் நிலையில் இருந்து கருப்பு நிறமாக மாறிகொண்டிருக்கினறது. ஏறக்குறைய சூரியனின் மேற்பரப்பில் 10% கருப்பாக மாறிவிட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.


சந்திரன் சிகப்பு நிறமாக..!!!

சந்திரன் சிகப்பு நிறமாக கடந்த 2010.12.21 அன்று முதல் முதலில் மாறியது. மீண்டும் 2011.06.15 இல் மாறியது. இவ்வாறான நிலையை விஞ்ஞானிகள் நீண்ட சந்திர கிரகணம் என்று கூறுகின்றார்கள். பூமியை நோக்கி ஏறிகற்கள் வந்து விழுவது வழமைதான். ஆக மொத்தத்தில் அறிகுறிகளாக கூறப்பட்ட மூன்று குறிப்புக்களையும் நியாயப்படுத்தியாகிவிட்டது.


"GRAND TETON"

அழிவில் இருந்து எவ்வாறு தப்புவது :- இதுதான் அறிகுறி நான்கிற்க்கான நியாயப்படுத்தலாகும். அதாவது வரப்போகும் அழிவில் இருந்து மக்களை காப்பாற்றும் நோக்கில் மக்கள் மேல் அக்கரை இருக்கும் அரசாங்கங்கள் மட்டும் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அதாவது மலைகளுக்கு அடியில் பதுங்கு இடங்களை அமைத்திருக்கின்றன. கடவுள் நம்பிக்கையே இல்லாத கம்யூனிச நாடான ரஷ்யா "மொண்டோ" எனும் மலையின் அடியில் பல குகைகளை அமைத்து மொத்த நாட்டு மக்கள் தொகையில் பாதிப்பேர் பதுங்கக்கூடிய அளவுக்கு ஏற்பாடுகளை செய்து விட்டது. அடுத்ததாக 2341 அடிகளுக்கு கிழே "GRAND TETON" என்னும் மலைக்கு அடியில் மிகப்பெரிய சொகுசு பதுங்கு நகரம் ஒன்றை அமேரிக்கா உருவாக்கிவிட்டது. இதனை பல ஆண்டுகளுக்கு முன் அமேரிக்கா உருவாகும் போது இது ஒரு இராணுவ தளபாட முகாம் என்று கூறி வந்தது குறிப்பிடத்தக்கது ஆனால் இப்போது உண்மை தெரிய வந்துவிட்டது. அமேரிக்கா உருவாக்கிய இந்த பதுங்கு நகரத்தில் பாதுகாப்பு, சகல வசதிகளும் இருக்கின்றது என்பது முக்கியமான விடையமாகும். "சால்வேடார்" என்னும் பனிமலையில் நோர்வே 20 லட்சம் மக்களை தக்க வைக்கக்கூடிய இடத்தினை ஒழுங்கு செய்துவிட்டது. சீனா, வடகொரியா, மலேசியா போன்ற நாடுகளும் மக்களில் விருப்பம் உள்ள நாடுகள்தான். அவையும் பதுங்கு இடத்தினை அமைத்து விட்டன. இவற்றுள் ஆச்சரியம் என்னவென்றால் ஒரு நாடு மிகவும் மக்களில் விருப்பம் உள்ள நாடாக இருக்கின்றது. அந்த நாடுதான் சுவிஸ்ஸலாந்து. தன் நாட்டு மக்கள் அனைத்தையும் பாதுகாக்கக்கூடிய ஒரு இடத்தினை அமைதியாக உருவாக்கிவிட்டு உலக அழிவுக்காக காத்துக்கொண்டிருக்கின்றது.

உலக அழிவு..!!!

பரிசுத்த வேதாகமத்தை அடிப்படையாக கொண்டு கிறிஸ்தவ ஆராய்ச்சியாளர்கள் விவாதிக்கும் கணத்திலும், மாயன் நாட்காட்டியை அடிப்படையாக கொண்டு அழிவினை விவாதிக்கும் வரலாற்று புத்தி ஜீவிகளும், புத்தி மட்டும் தான் என நம்பும் விஞ்ஞானிகளும் வெளிப்படுத்திய உலக அழிவு தொடர்பான ஆதாரங்களையும், அழிவினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களையும் பார்த்தோம். எது எப்படியோ பூமி முழுமையாக அழியப்போகின்றதோ இல்லையோ..!! மிகப்பெரிய ஒரு உயிர், வள சேதத்தை வெகு விரைவில் சந்திக்கப்போகின்றது என்பது மட்டும் திண்ணம்.!! இவ்வளவு காலமும் மனிதன் உருவாக்கிய நுட்பமான தொழில்நுட்பங்கள் மனிதனை காக்குமா? மனிதன் அமைத்து வைத்த பதுங்கு நகரங்களாவது அழிவில் கண்ணில் இருந்து தப்பித்துக்கொள்ளுமா? இல்லை அவையும் அடியுடன் அழியுமா?

"சாகுற நாள் தெரிஞ்சுரிச்சுன்னா வாழுற நாள் நரகமாகிடும்.. வாழும் வரைக்கும் வாழ்வோம்"

Post Comment

No comments:

Post a Comment