Sunday, August 5, 2012

குளுகுளு நயன்தாராவின் கிளுகிளுப்பு..!!!

இந்த பதிப்பு (2012.08.05) வீரகேசரியில் வெளியான நயன்தாரா சம்பந்தமான தகவலை தழுவியதாக எழுதப்பட்டது. முற்றும் முழுதாக சினிமா ஆர்வலர்களுக்காக கிளுகிளுப்புடன் எழுதப்பட்ட ஒரு பதிப்பாகும்.

"மாற்றம் ஒன்றே மாறதாது" ஆனால் இந்த மாற்றம் கூட சினிமாவில் மாறுபடும் அதுகும் நயன்தாராவின் வாழ்க்கையில் கட்டம் கட்டி கபடி ஆடியிருக்கின்றது என்றே சொல்ல வேண்டும். நயன்தாரா 2003ஆம் ஆண்டு சினிமாவுக்குள் வந்தார். அவரது முதல் தமிழ் படமாக 2004ஆம் ஆண்டு வெளியான "ஐயா" அமைந்தது. அந்த படத்தில் மிகவும் மென்மையான அடக்கமான குடும்பப்பாங்கான கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்திருப்பார். அந்த படத்தின் இயக்குநர் படத்தில் வரும் "அத்திரி புத்திரி கத்திரிக்கா.." என்ற பாடலில் ஒரு பள்ளி மாணவி போல நீல நிற பாவாடை போட்டு நடனம் ஆட வைத்திருப்பார். அந்த பாவாடையை கொஞ்சம் கட்டையாக மாற்றினால் என்ன?? என்று கேட்டதற்க்கு நயன்தாரா சொன்ன பதில் "நான் தமிழில் ஒரு சினேகாவாக வரவேண்டும் அப்படி நடிக்க முடியாது" என்று சொல்லி விட்டார். அப்போது நயந்தாரவிற்க்கு தெரியவில்லை வருங்காலத்தில் "சிலுக்கு சுமிதா"வின் இடத்தை தான்தான் நிரப்பப்போகின்றேன் என்று.!!


வருங்கால சிலுக்கு..!

நயன்தாராவின் குடும்பப்பாங்கான கதாப்பாத்திரத்திற்க்கான ஆசை நீண்ட நாள் நிலைத்திருக்கவில்லை. அடுத்ததாக நயன்தாரா தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் சேர்ந்து "சந்திரமுகி" என்ற படத்தில் நடித்தார். இந்த படத்திலும் அவரின் ஆசையை போலவே குடும்பப்பாங்கான பொண்ணாகவே நடித்திருந்தார். நயன்தாரா "கஜினி" படம் நடிப்பதற்க்கு இடையில் இரண்டு மலையாள படங்கள் (Thaskara VeeranRappakalநடித்தார் அந்த படங்கள் நயன்தாராவில் ஆசை, கனவு எல்லாவற்றையும் முழுமையாக புரட்டிப்போட்டது என்றுதான் சொல்லவேண்டும். அடுத்ததாக இவர் நடித்த படம் "கஜினி" குறிப்பாக இந்த படத்தில் ஒரு மருத்துவபீட மாணவியாக சும்மா கும்முன்னு வந்திருப்பா.. அதுகும் "X மச்சீ Y மச்சீ..." பாடலில் சும்மா ஒரு கலக்கு கலக்கிஇருப்பா.. அந்த பாடல் எல்லா இளைஞர்களையும் கண்ணீர் பொங்க வைத்தது..(பொங்க வைத்தது என்றால்??? வேறை ஒன்றும் இல்லை கண்ணீரைத்தான்!!!)

                           குலை குலையா முந்திரிக்காய்??? நயன்தாராவை சுத்திவா!!!

அதனை தொடர்ந்து இளைய தளபதியின் "சிவகாசி" படத்தில் ஒரு ITEM SONG ("கோடாம்பாக்க ஏரியா...ஓட்டுப்போட வாரியா...'")ஒன்றுக்கு DANCE பண்ணினார். கதாநாயகியாக நடிப்பதில் இருந்து ஒரு ITEM SONGக்கு ஆடும் அளவுக்கு நயன்தாராவை அந்த மலையாள படங்கள் மாற்றி விட்டன. அதனை தொடர்து நயன்தாரா நடித்த அந்த படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும் அந்த படத்தில் வந்த எந்த காட்சிகளையும் ரசிகர்கள் மறப்பதாக இல்லை. அதுகும் அந்த படத்தின் கதாநாயகனின் பேரை சொன்னாலே கிளுகிளுப்புக்கு குறைவிருக்காது அவர் வேறு யாரும் இல்லை நம்ம "இருக்கு ஆனா இல்ல.." புகழ் S.J.சூர்யாதான். அந்த படம் "கள்வனின் காதலி" நல்லவனின் காதலி என்றாலே நயன்தாராவின் தாராளமாக கவர்ச்சி இருக்கும். இது கள்வனின் காதலி சொல்லவா வேண்டும். அதுகும் அந்த படத்தில் "தாஜ்மஹால் ஓவியக்காதல்..." என்று ஒரு பாடல் வரும் அதில் வயலின் வாசிப்பதற்க்கு புதியதோர் இடத்தையே S.J.சூர்யா கண்டு பிடித்திருப்பார். என்ன வாசித்தார் அந்த படத்தில் வயலினை???

                                                 தெரியுது ஆனா தெரியலை???

இதுவரைக்கும் கள்வனின் காதலியாக இருந்த நயன்தாரா அடுத்ததாக வல்லவனின் காதலியாக மாறினார். S.J.சூர்யா போல்தான் சிலம்பரசனும் அவரின் படங்களிலும் கிளுகிளுப்புக்களுக்கு குறைவிருக்காது. சொல்லி வைத்தது போல எப்படியாவது ஒரு முத்தக்காட்சி படத்தில் இருந்தே தீரும். ஆனால் "வல்லவன்" என்று படத்திற்கு பெயரை வைத்து விட்டு சும்மா முத்தக்காட்சிகளை மட்டும் வைத்தால் போதுமா?? அதுக்காகவே விதம் விதமாக வித்தியாசமாக முத்தக்காட்சிகளை எடுத்திருந்தார் எங்கள் முத்த அரசன் சிம்பு!!! அந்த காலத்தில் பத்திரிகைகளில் சினிமா பக்கங்களை நிரப்பியதே இவர்களின் காதல் கிசுகிசுக்கள்தான். இவற்றை கிசுகிசு என்று சொல்லுவதை விட உண்மையாக நடந்தவை என்றே சொல்லிக்கொள்ளலாம்.

                       இதுதான் மன்மதன்..வாயில வாய் வைக்குறதில இவன்தான் வல்லவன்!!!
 

முத்தக்காட்சிகளோடு நிறுத்தினாரா?? இல்லை அதை எல்லாம் தாண்டி ஒரு படி மேலே(மாடியில்) படுக்கை அறை காட்சிகளையும் இந்த படத்திற்காக எடுத்து விட்டார். தனது காதலை தான் மறந்தாலும் தனது ரசிகர்கள் யாரும் மறந்துவிடக்கூடாது என்பதற்க்காக போட்டிபோட்டு முத்தக்காட்சிகளிலும் படுக்கை அறைக்காட்சிகளிலும் இருவரும் நடித்திருப்பார்கள். இது மட்டுமா படத்தில் வந்த புகைப்படங்கள், வீடியோக்களை தவிர தனிப்பட்ட ரீதியிலும் நிறைய கிளுகிளுப்பு ஊட்டும் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளிவந்திருந்தன. அவை இப்ப கூட YOU TUBE இல் இருக்கின்றன என்பதே அதிசயமான விடையமாகும். சிம்பு நிறைய இடங்களில் பேட்டிகளில் நயன்தாராதான் தனது மனைவி என்று சொல்லாமல் சொல்லிக்காட்டியிருப்பார். யார் கண்ணு பட்டதோ?? நல்லா போய்க்கொண்டிருந்து அவர்களின் காதல் சட்டென்று முடிவுக்கு வந்தது. "நயன்தாராவின் காதல் பாகம் ஒன்று" முடிவுக்கு வந்தது. ஆனால் அவர்களில் காதல் காலகட்டத்தில் வெளியான படங்கள் மட்டும் இன்னும் INTER NETஇல் சக்கை போடு போட்டுகொண்டு இருக்கின்றது.

                   இதுவா குடும்பப்பாங்கான பொண்ணு!!! வாய் வலிக்க போகுது போதும்!!

வல்லவன் செய்த வில்லத்தனமான வேலைகளுக்கு பிறகு நயன்தாரா சாதாரணமாக நடித்த படங்கள் "தலைமகன்", "ஈ", "சிவாஜி" ஆகும். இவற்றில் சும்மா சாதாரணமாக ஒரு ஹீரோயின் கிளாமர் காட்டுவது போல நடித்திருந்தார். ரசிகர்களை குளிர்ச்சிப்படுத்துவதற்காகவே விஷ்ணுவர்தன் எடுத்த படம்தான் "பில்லா-2007" இந்த படத்தில்தான் நயன்தாரா சக நடிகைகளுக்கு கவர்ச்சி என்றால் என்ன என்று பாடமே நடத்தியிப்பா.. அதுகும் கவர்ச்சிப்புயல் நமீதாவுக்கு சவாலாக நடித்த படம்தான் "பில்லா". இந்த படத்தில் சும்மா TWO பீஸ்ஸில் வந்திருப்பா.. அதை எல்லாம் சொல்லில் அடக்க முடியாது (சொல்லியும் அடங்காது ஏன்னா எல்லாம் அவ்வளோ பெரிசு!!!). அவாளோ ரசனை மிக்கதாக இருக்கும். அதுமட்டுமா.. எங்கை எங்கை எல்லாம் பச்சை குத்தக்கூடாதோ அங்கை அங்கை எல்லாம் பச்சை குத்தியிருப்பா.. (அதுகும் வடிவுதான்...)

                                      அதிகமாக ஆடை அணிந்த நயன்தாரா!!!


பில்லாவில் வந்த ஷாசாவை தொடர்ந்து கிளாமருக்கு லீவு கொடுத்துவிட்டு "யாரடி நீ மோகினி", "குசேலன்" போன்ற படங்களை பெரிதும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடித்து முடித்தார். அதனை தொடர்ந்து நயன்தாரா நடித்த படம் "சத்யம்" இந்த படத்தில் கவர்ச்சிக்கனா காட்சிகள் இல்லா விட்டாலும் பாடல்களில் நயன்தாரா தனது ரசிகர்களை திருப்திப்படுத்தி விட்டார். "சத்யம்" படத்திற்காக உயர்ந்த மனிதர் SIX PACKS எடுத்திருந்தார், ஆனால் சம்பந்தமே இல்லாமல் நயன்தாராவுக்கும் ஒருசில PACKS தெரிந்தன. அந்த அளவுக்கு நயன்தாரா ஹீரோவுடன் நெருக்கமாக இருந்திருக்கின்றார். நயன்தாராவுக்கு ஜிம் செய்வதற்கு விஷால் தான் உதவி செய்தாராம் (ஜிம் செய்வதில் மட்டுமா???இல்லை???) "சத்யம்" படத்தின் போது இருவருக்கும் காதாலா இல்லையா என்று தெரியாமல் கிசுகிசு எழுதுபவர்கள் தலையை பித்துக்கொண்டு அலைந்த காலம் அது. ஆனால் நயன்தாரா வளமையை போல ஹீரோவுடன் ஊர் சுற்றுவது, ஒன்றாக தங்குவது என்று வளமையை போலவே இருந்தார். இருவரும் இறுதியில் தங்களுக்கும் எதுக்கும் இல்லை வளமையை போல எங்களுக்குள்ளும் இருப்பது வெறுமனையே நட்புதான் என்று பழைய பாலை புளிக்க வைத்தனர். எது எப்டியோ எங்களுக்கு அவர்களின் காதலா வேண்டும் நல்ல கிளுகிளுப்பான படங்கள் வந்தால் போதும்..(அப்டிதானே???)

                                 என்னவென்று சொல்வதம்மா நயனின் உடலழகை???

அடுத்ததாக கவர்ச்சிகளுக்கு இடையில் அமைதியான படங்களை நடிப்பதை போலவே கொஞ்சம் அடக்கி கவர்ச்சியை காட்டியிருந்த படம்தான் "ஏகன்" ஆனால் இந்த படத்திலும் கொஞ்சம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கவர்ச்சியை காட்டியிருப்பா.. சாரியில் வந்தாலும் சரமாரியாக இருக்கும்!! நயன்தாராவின் அடுத்த காதலுக்கு அத்திவாரம் போட்ட படம்தான் "வில்லு". வழமையாக படத்தின் ஹீரோவுக்கும் ஹீரோயின்னுக்கும்தான் காதல் வரும் ஆனால் நயன்தாராவின் வாழ்கையில் இதுதான் முதல் தரம் ஒரு இயக்குநருடன் காதல் கொண்டது (இந்த விடயத்தின் மட்டும் பிரபுதேவாதான் நயந்தாராவிற்க்கு முதலாவது!!!). இந்த நிலையில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதுவாவது திருமணத்தில் முடியும் என்று பார்த்தால் திருமணம் நடந்ததா இல்லையா என்று எல்லோரையும் குழப்பும் அளவுக்கு இவர்களின் காதல் இருந்து. இவர்களின் காதலை விட சிதம்பர ரகசியத்தை இலகுவில் கண்டு பிடித்து விடலாம் போலிருக்கின்றது.

                                                     நடந்துதா?? நடக்கலையா??

திருமணம் நடக்காமலே "சிறந்த தம்பதி"களுக்கான விருதினை வாங்கினார்கள். இதை எல்லாம் விட ஒரு பெரிய கூத்து என்னவென்றால் நயன்தாரா கிறிஸ்தவ மதத்தை விட்டு பிரபுதேவாவை திருமணம் செய்வதற்க்காக இந்து மதத்திற்க்கு மாறினார். இரண்டு உயிர் ஒரு உடலாக ஊர் உலகம் எல்லாம் சுற்றி, ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடி முடித்து மூன்றரை வருடங்களுக்கு பிறகு இந்த காதலும் ஓய்வுக்கு வந்தது. இவர்களின் காதலித்துகொண்டிருந்தபோது நயன்தாரா சுமாராக கவர்ச்சி காட்டிய படங்களாக "ஆதவன்", "பாஸ் என்கின்ற பாஸ்கரன்", "கோவா" போன்றவை அடங்கும். கடைசியில் சினிமாவுக்கு முழுக்குப்போட்டு விட்டு பிரபுதேவாவே கதி என்று இருந்த நயன்தாராவுக்கு இறுதியில் ஏமாற்றம் தான் மிச்சம்.. பிரபுதேவாவின் காதல் உண்மை இல்லை.. அது காசுக்காக அவர்கள் போட்ட நாடகம் என்பதை அறிந்து இறுதியில் காதலை முறித்துக்கொண்டார். மீண்டும் இப்போது காதல் முறிவுக்கு பின்னர் ரசிகர்களை சந்தோசப்படுத்த ஒரு கவர்ச்சிப்புயலாக நடிக்க தொடங்கி விட்டார். இப்போது அஜித்துடன் பெயர் வைக்கப்படாத ஒரு படத்திலும் "ஓங்காரம்", "ஜெகன் மோகன் IPS" போன்ற படங்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றார்..
                                                                                          (கவர்ச்சி வேட்டை தொடரும்...)

நயன்தாராவை பிடிக்காதவர்கள் அவரை பிடிவாதக்காரி என்று சொல்வார்கள். ஆனால் அது உண்மை இல்லை நயன்தாரா ஒரு வெகுளித்தனமான பெண்! "வல்லவன்' படத்தின் வெளியீட்டுக்கு பண உதவி செய்தத்தில் இருந்து பிரபுதேவாவும் ரம்லத்தும் காசுக்காக நாடகம் ஆடுகின்றனர் என்பது அறியாமல் தான் 8 வருடங்களாக உழைத்த உழைப்பை வாரி கொடுத்தது ஒன்றுமே தெரியாமல் கண்மூடித்தனமாக எல்லோரையும் நம்பும் அப்பாவிப்பெண்!! இப்போது கூட இறுதியாக கொடுத்த பேட்டியில் "தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய செய்திகளை எல்லோருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியம் தனக்கு இல்லை..காதலிக்கும் போது நல்ல புரிந்துணர்வு இருக்க வேண்டும்..அப்படி இல்லை என்றால் ஒரு எல்லையை மீறும்போது இப்படிதான் காதல் முடிவுக்கு வரும்.." என்று சொல்லிஇருந்தார். உண்மைதான் இனியாவது யாரையும் நம்பாமல் நல்ல படியாக இருந்தால் சரி..(உங்களை நம்பி எத்தனை உயிர் ரசிகர்கள் இருக்கின்றார்கள் இப்படி இடையிடையே நீங்கள் நடிப்பை விட்டு விட்டு போவது நியாயமா???)

ஏன் நயன்தாராவின் வாழ்கையில் சோதனைகள் சுற்றிச்சுழல்கின்றது என்பதை யாராவது யோசித்தீர்களா??? அது பற்றி யோசித்தால் உடனே நியாபகத்துக்கு வருவது நயன்தாராவின் இடது கையில் இருந்து ஆறாவது விரல். இந்த விரலை அகற்றியதால் தான் இந்தளவு வினையும் என்று ஹரிகர சுவாமிகள் சொல்லியிருக்கின்றார். ஆண்களுக்கு வலது கையிலும் பெண்களுக்கு இடது கையிலும் இவ்வாறு ஆறு விரல் இருப்பது அதிஸ்டமாம். ஆனால் நயன்தாரா அந்த ஆறாவது விரலை நடிக்க வந்ததால் அகற்றிவிட்டதால் அதிஸ்டம் போய் துரதிஸ்டம் ஆகிவிட்டது என்று அந்த சுவாமிகள் சொல்லியிருக்கின்றார். இது மட்டுமா நயன்தாராவின் இயற்பெயர் Diana Mariam Kurian ஆகும். இவர் நயன்தாரா என்று தனது பெயரை மாற்றியதால் தப்பித்துகொண்டார் இல்லை என்றால் எப்போதோ இவரது வாழ்க்கை முடிந்திருக்கும் என்று சொல்லிஇருக்கின்றார். அவ்வாறு பெயரை மாற்றி இருக்காவிட்டால் இப்போது இருக்கும் பேரும் புகழும் மண்ணோடு மண்ணாக போயிருக்கும் என்று சொல்லியிருக்கின்றார். எது எப்படியோ நயன்தாரா இப்போது நல்லா இருக்கின்றா??? அது போதும்!!! அடுத்த படங்கள் வரும் வரைக்கும் "கள்வனின் காதலி" "வல்லவன்" "சத்யம்" "பில்லா" போன்ற படங்களை பார்த்துக்கொண்டிருப்பதை தவிர வேறு என்ன வழி இருக்கின்றது??

"போனதெல்லாம் போகட்டும் திருப்பி நடிக்க வந்ததே போதும்.."

Post Comment

No comments:

Post a Comment