Monday, August 27, 2012

இலங்கையனாக வாழ்வோம்; இலங்கையானகவே இறப்போம்..!!!

உறுதியாக இந்த பதிப்பு ஏதாவது ஒரு தரப்பினரை மனதளவிலாவது காயப்படுத்துமாக இருந்தால் அதற்காக முன்கூட்டியே சமாதானத்தை கூறிக்கொண்டு எனது நாடான இலங்கை தொடர்பான பதிப்புகள் செல்வோம்...


என்ன இல்லை என் இலங்கையில் :- இந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப்படும் மிகவும் கேந்திரத்துவம் மிக்க ஒரு இடத்தில் அமைந்திருக்கின்றது.. இயற்கையாகவே அமைந்த துறைமுகம், எழில் கொஞ்சும் காடுகள், குளிர்ச்சியை ஊட்டும் மலைகள்.. என்று சொல்லிக்கொண்டே போகலாம்.. அந்த அளவுக்கு அழகான மதிப்பு மிக்க ஒரு நாடாக இலங்கை அமைந்திருக்கின்றது..
இது மட்டுமா வெறுமனையே மூன்று மணித்தியாலங்களில் காலநிலைகள் மாற்றத்துக்கு உரிய இடங்களுக்கு சென்று விடலாம்.. அதாவது மத்திம வெப்ப பிரதேசத்தில் இருந்து மத்திம குளிர் பிரதேசத்திற்கு சென்று விடலாம்.. அங்கிருந்து குளிர் பிரதேசத்துக்கு அதே மணித்தியால பிரயாணத்தில் சென்றுவிடலாம்.. வெருமனையே எட்டு - ஒன்பது மணித்தியாலத்தில் இலங்கையின் கிழக்கில் இருந்து தெற்கிற்க்கு சென்று விடலாம்.. சுற்றும் முற்றும் அழகான இடங்கள்.. எல்லோரும் எம்மையும் எம் நாடையும் பயன்படுத்துகின்றார்கள்.. நாங்கள் பயன்படுத்துகின்றோமா??? அண்மையில் ஒரு சிலரின் சமூக வலைத்தளங்களில் பார்க்க கூடியதாக இருந்த விடயம் என்னவென்றால் இலங்கையில் அண்மைக்காலமாக கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் இருக்கும் சின்ன பிரச்சனைகளை தூக்கி பிடித்து அதற்கு ஒரு விளக்கம் கொடுத்து விட்டு இறுதியில் "இதுவா ஆசியாவின் அதிசியம்???" என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.. இல்லை தெரியாமல்தான் கேட்கின்றேன் இலங்கை ஆரம்ப காலத்தில் இருந்தே ஆசியாவின் ஒரு அதிசயம்தான்.. நான் உட்பட இங்கு இப்போது யாருக்கு இருக்கின்றது நாட்டின் மேல் அக்கறை??? பிறகு ஏன் சும்மா நடிக்கின்றீர்கள்.!!! இருக்கும் மட்டும் எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டியது.. கடனை வாங்கி வெளிநாடு போனதும் கொடியை பிடிக்க வேண்டியது?? அங்கை போய் இங்கை என்ன இருக்கு என்று கேட்க வேண்டியது??? நல்லா இருக்கு ராசா உங்க பேச்சு!!! போனவர் எல்லாம் போகட்டும் போகப்போரவர்கள் எல்லாம் போகட்டும்.. இலங்கை என்றும் மாறது.. எம் நாடு.. எம் தேசம்.. வாழ்வோம் வளமாக..!!!


ஏன் முடியவில்லை :- ஒரு காலகட்டத்தில் அமெரிக்காவில் அடக்க முடியாத குற்றங்களை செய்பவர்களை திருத்த முடியாமல் நாடு கடத்தி வந்தனர். அப்படி நாடு கடத்துவதற்க்காக அவர்கள் பயன்படுத்திய நாடுகள் எவை என்று தெரியுமா??? இன்றைய நவீன அழகு நாடு சிங்கப்பூர், மற்றும் காடுகளுடன் கூடிய இலங்கைக்கு ஒப்பான காலநிலையை உடைய கங்காருகளின் தேசமான அவுஸ்திரேலியா.. நினைத்து பாருங்கள் வெறுமனையே குறுகிய கால கட்டத்தில் இரண்டு நாடுகளின் வளர்ச்சியையும்.. அந்த நாடுகள் இரண்டுக்கும் குடியேற வேண்டும் என்றே நாங்கள் உழைக்கின்றோம்.. ஆனால் அவர்கள் தங்கள் நாட்டில் மற்றவர்கள் குடியேற வேண்டும் என்று நினைக்க வேண்டும் என்பதற்க்காக உளைக்கின்றார்கள்... வெருமனையே இருபத்தைந்து கிலோமீட்டர்களை உடைய சிங்கப்பூர் இரண்டாயிரத்து ஐம்பதாம் ஆண்டு உலகின் முதலாவது நாடாக இருக்கும் என்று ஒரு கணிப்பு கூறுகின்றது.. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்பது போல இலங்கையை போலவே இருகின்ற அவுஸ்திரேலியாவுக்கு போகணும் என்பதுதான் இப்போதைய எல்லோரினதும் ஆசையும் அவாவும்..!!! அப்படி எல்லோரும் போனால் இலங்கையை மாடுகள் மேய்வதற்க்கு விடப்போறீர்களா? அண்மை நாடான இந்தியாவில் ஒரு தேசம் குயராத்... இந்த மாநிலத்தின் பெயரை கேட்டாலே அல்லோல கல்லோல பட வேண்டி இருக்கும்... அது ஒரு காலம் ஆனால் இப்போது குயராத் என்பது எப்படி இருக்கின்றது... ஒரு கலக்கல் மாநிலமாக இருக்கின்றது.. எத்தனை முன்னேற்றம், எவ்வளோவு வளர்ச்சி.. கூட்டு முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி..!!! ஆனால் இங்கு என்ன வாழுது.. குறை சொல்லுவதில் மட்டும் நல்ல கூட்டு முயற்சி.. யாரும் திருந்தவில்லை ஆதலால் நானும் திருந்தவில்லை என்று சொல்ல மனமில்லை... என் நாடு இலங்கை.. நான் இலங்கையனாகவே இருப்பேன்.. முடிந்தவரை இலங்கைக்காக வாழ்வேன்..


ஏன் பெரிதாக்குகின்றோம் :- இலங்கையில் முப்பத்துமூன்று வருடங்களாக யுத்தம் நடை பெற்று மூன்று வருடங்களுக்கு முன்பு தான் நிறைவுக்கு வந்தது..!! இறந்த உயிர்கள், அளிக்கப்பட்ட சொத்துக்கள், இழந்த நிம்மதி... இது தமிழனுக்கு மட்டும் இல்லை.. இறந்த உயிர்கள் இலங்கை இராணுவ வீரர்களின் உயிரும் உயிர்தான்.. அவர்கள் இல்ங்கையர்தான்... ஏன் அனுராதபுரத்தில் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் சந்தோசமா?? இங்கு ஏவ்வாறு கஷ்டப்பட்டு சொத்துக்களை சேர்த்தோமோ அதனை போலதானே அவ் மக்களும் சேர்த்திருப்பார்கள்.. செத்தோம் செத்தோம் என்று குமுறுகின்றோம்... வெறுமனையே இன்னமும் குமுறிக்கொண்டுதான் இருக்கின்றோம்.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன செய்தோம்??? ஏன் உதவி என்றால் தமிழனுக்கு மட்டும்தான் செய்யவேண்டுமா??? ஏன் ஒரு தமிழன் முஸ்லீமுக்கு உதவினால் அது உதவியாகாதா??? சகோதரர்கள் நாம் எல்லோரும்.. சிங்கள சொந்தங்களுக்கு தமிழ் சொந்தங்கள் அண்ணன்கள், முஸ்லிம்கள் தமிழர்க்கு தம்பிகள்.. ஏன் இவ்வளோவு பிளவு??? எல்லோரும் ஒரு நாட்டவர்.. இலங்கையர்... யுத்தத்தில் எத்தனை உயிர் போயிருக்கும்.. எத்தனை பேர் வாழ்கையை இழந்து கஷ்டத்தில் இருக்கின்றார்கள்??? என்ன செய்தோம் இன்னமும் ஐநா வந்து ஆணியை புடுங்கும்.. அமேரிக்கா வந்து மயிரை புடுங்கி கயிறாக திரித்து தரும் என்று பார்த்து பார்த்தே... பழகிவிட்டோம்.. இது எம் நாட்டு பிரச்சனை.. உள்நாட்டு பிரச்சனை.. சண்டை இல்லாத வீடு எங்கே??? இனியும் புத்தி மங்கி இருந்தால் சொத்துக்கு வழியில்லாதா சோமாலியா ஆக வேண்டியதுதான்!!! இதுதான் மிச்சம்..!!!


தனி நாடு :- கிடைத்து விட்டால் மட்டும் கிழித்து விடப்போகின்றீர்களா??? அப்படி ஒன்று நடந்தால்??? அங்கும் ஒரு சண்டை அதிலும் ஒரு முப்பத்துமூன்று வருடம் அங்கும் ஒரு தனி நாடு என்று எமது தனி நாட்டு அவா.. பசி எம்மை விட்டு போகாது.. இருக்கும் நாடு இலங்கையை வைத்து சிறப்பாக வாழ முடியவில்லை.. இதுக்குள் தனி நாடு??? எல்லோரும் வந்து இருக்கின்ற வளம் எல்லாவற்றையும் சுரண்டியவண்ணம் இருக்கின்றான்.. நாம் இன்னும் "நாங்கள் என்ன செய்வது செய்ய வேண்டியவர்கள் எதுக்கும் செய்யவில்லை" என்று குறை கூறிகொண்டு இருக்கின்றோம்.. இருக்கும் போது இணைந்து வாழ முடியவில்லை... இல்லாததை ஏற்படுத்தி அதன் பின் இணைந்து வாழப்போகின்றீர்களோ??? இல்லை தெரியாமல் தான் கேட்கின்றேன்.. இப்போது இலங்கையில் தமிழனுக்கு என்ன குறை??? ஓ...ஓ... விடுதலை போராட்டத்தை பற்றி கதைக்க சுதந்திரம் இல்லை என்பதால் தமிழன் சுதந்திரமாக இல்லை என்று சொல்லுகிண்றீர்களா??? அப்படி என்றால் இங்கு தமிழருக்கு சுதந்திரம் இல்லைதான்!! அப்படி கதைத்து என்னத்தைதான் செய்யப்போகின்றீர்கள்??? என்னத்தை செய்தீர்கள்??? போதுமடா சாமி.. இனியாவது உங்கள் விடைத்த மூக்குக்குகளை இலங்கை மக்களிடையே திணிக்காமல் இருங்கள்.. பிறந்த எல்லோருக்கும் வாழ வழி தெரியும்... யாரும் அவ்வளோ விரைவில் அழிந்து போக மாட்டோம்.. இருப்பதை வைத்து வாழுவோம் இலங்கையன் என்றே வாழுவோம்.. இலங்கையனாகவே இறப்போம்..


பொருளாதாரம், கல்வி :- இந்த இரண்டையும் தான் எல்லோரும் முதுகு சொறிவதற்க்கு பயன்படுத்துகின்றார்கள்.. ஓ..ஓ.. கல்வியில் தமிழனுக்கு பிரச்சனையாம்.. "Z" புள்ளிகளில் குளறுபடியாம்??? ஏன் தமிழன் மட்டுமா?? பாதிக்கப்பட்டான்.. ஒட்டுமொத்த இலங்கை மாணவ தேசமும் பாதிக்கப்பட்டது.. ஒன்றுமே இல்லாத விடையத்துக்கு சாணி பூசி சந்தனம் வைப்பதில் நம்ம ஆட்களை அடித்துக்கொள்ள முடியாது?? ஏன் ஒரு சிங்கள மாணவன் கூட இந்த "Z" புள்ளி குளறுபடியால் பாதிக்க படவில்லையா??? உங்களுக்கு சும்மா இருபவர்களை சொரிய தமிழும், தமிழனும் தேவை.. அப்படிதானே.. சரி ஏன் தமிழனுக்கு மட்டுமா பாண் அதிக விலையில் விற்கப்படுகின்றது?? இது பொருளாதார பிரச்சனையே தவிர தமிழ் பிரச்சனை இல்லை?? சரி இலங்கை வங்கிளில் காசு இல்லையாம்.. அதனால் பொருளாதார வீழ்ச்சியாம்!! கொய்யாலை யாருகிட்ட.. இலங்கையில் கொழும்பில் மட்டும் எத்தனை BMW, ஜகுவார், அவுடி.. இதுக்கு எல்லாம் காசு எங்கிருந்து வந்தது??? முதலில் சமூக அக்கறை புத்திஜீவிகளே!!! நீங்கள் உங்கள் முதுகில் இருக்கும் ஊத்தையை சுத்தம் செய்யுங்கள் பின்பு மற்றவனின் ஊத்தையினை பற்றி பேசலாம்?? காசு இல்லையாம்.. யுத்தம் முடிந்து இப்போது மக்கள் வசிப்பதற்கு விடப்பட்ட இடங்களை போய் பாருங்கள்.. என்ன வீடுகள்.. எத்தனை சுகம்!! அழகான தீந்தைகள்.. கண்கவரும் வாகனங்கள்.. காசு இல்லையாம்.. இவ்வளவு புழுத்த காசு உள்ளவர்கள் யாராவது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார்களா?? இல்லை ஏன் செய்யவில்லை என்று கேட்டால்.. நாங்கள் ஏன் செய்ய வேண்டும் அதுக்குத்தானே அரசாங்கம் இருக்கு என்று நொண்டி சாட்டு சொல்லுகின்றார்கள்.. கொள்ளை அடிக்கும் காசில் கொஞ்சத்தை தானம் செய்தால் என்ன??? என்பதுதான் எனது அடுத்த கேள்வி??? (பதில்???)


இலங்கை கிறிக்கட் அணியை ரசிக்கும் இலங்கை தமிழர்களை துரோகிகள் :- இலங்கை கிறிக்கட் அணியை ரசிக்கும் இலங்கை தமிழர்களை துரோகிகள், சிங்களவனுக்கு செம்பு தூக்குபவர்கள், தம் இனத்து மீது அக்கறை இல்லாதவர்கள் போன்ற சொற்களால் காயப்படுத்தும் தமிழ் உணர்வு மிக்க 'சில' ஆசாமிகளுக்காகவே இதை சொல்லியே ஆகவேண்டும்.. அதிலும் இவர்களுக்கு இனப்பற்று இலங்கை நன்றாக விளையாடும்போதுதான் அதிகரிக்கும்!!! இலங்கை உதை வாங்கும்போது நமட்டு சிரிப்பு சிரிக்கும் இவ்வகை ஆசாமிகளுக்கு இலங்கை வெற்றி பெறும்போதுதான் எம்மை பார்த்தால் தமிழ் இன உணர்வு மூக்கு, வாய், கண், காது, ..... என உடம்பின் ஒன்பது துவாரங்களின் ஊடாகவும் வழியும்!!!! இலங்கை அணிக்கு ஆதரவாக, இலங்கை அணியை ரசிப்பவர்கள் துரோகிகள் என்றால் இலங்கை தமிழர்களில்(கிறிக்கட் பார்ப்பவர்களில்) பாதிப்பேர் துரோகிகள்தான்!!!! டீ கடை முதல், பாடசாலை, பல்கலைகழகம், அலுவலகம் என கிறிக்கட் பற்றி இலங்கை தமிழர்கள் விவாதிக்கும் இடங்களில் எல்லாம் இலங்கை கிறிக்கட் அணியின் ரசிகர்கள் பாதிப்பேராவது இருப்பார்கள்!!!! அப்படியானால் அந்த பாதிப்பேரும் துரோகிகளா? இலங்கைக்கு அல்லாமல் வேறு அணிகளை ரசிப்பவர்கள் அனைவரும் தமிழ் இன உணர்வாளர்களா? 

இலங்கை அரசை எதிர்க்கும் இலங்கை தமிழர்களில் பாதிப்பேர் எப்படி இலங்கை கிறிக்கட் அணிக்கு ரசிகர்களாக இருக்கின்றார்கள் என்கின்ற சந்தேகம் இந்திய நண்பர்கள் சிலருக்கும் ஏற்ப்படலாம்!!! ஆச்சரியமாக கூட இருக்கலாம்!!! சிலருக்கு கோபம்கூட வரலாம்!! இலங்கை கிறிக்கட் அணிக்கு பல இலங்கை தமிழர்கள் ரசிகர்களாகிய காலம் 1996 காலப்பகுதிதான்; அன்றைய நாட்களில் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த யாழ்ப்பாணமும் பாரிய இடம்பெயர்வை சந்தித்திருந்த நேரம்; உடைமைகள், சொத்துக்கள் போன்றவற்றை இழந்த நிலையிலும் அன்று பாதி இலங்கை தமிழர்கள் இலங்கை கிறிக்கட் அணிக்கு ரசிகர்களாக இருந்தார்கள் என்பது ஆச்சரியமான உண்மை. அதற்க்கு முக்கியகாரணம் இனப்பிரச்சனையையும் கிறிக்கட்டையும் அதிகமானவர்கள் ஒன்றுபடுத்திப் பார்க்கவில்லை என்பதுதான்... 

இவை தவிர்த்து தமது நாட்டு அணி மீது அதிகமானவர்களுக்கு இயல்பிலேயே பிடிப்பு ஏற்படுவது இயற்கை; அதனால்த்தான் பங்களாதேசில் அவுஸ்திரேலியா ஆடும்போதும் அந்நாட்டு ரசிகர்கள் தங்கள் அணியினருக்கு ஆதரவாக மிகப்பெரும் ஊக்கத்தை கொடுக்கிறார்கள்!!! இலங்கை தமிழர்களும் அதற்கு விதிவிலக்கல்ல; என்னதான் அரசினால் பிரச்சனைகள் இருந்தாலும் சிறுவயதில் பாடசாலையில் தொடக்கம் ஒரு விண்ணப்பபடிவம் நிரப்புவது வரையில் எமதுநாடு - இலங்கை என்றே சொல்லி எழுதிப் பழகிவிட்டோம்!!!! வரலாறு, சமூககல்வி என சிறுவயது முதல் இலங்கைதான் எமதுநாடு என்பதை கல்வியும் அடிமனதில் ஏற்றிவிட்டது; அந்த வயது இனப்பிரச்சனை, நாட்டுப் பிரச்சனை எதுவும் புரிகிற வயதில்ல; ஆனால் அவற்றை புரியும் வயது வரும்போது கிறிக்கட்டையும், நாட்டுப்பிரச்சனையும் ஒன்றுபடுத்தி பார்த்தால்கூட அதிலிருந்து வெளிவர முடியாது!!! என்னதான் கிறிக்கட் வேறு, நாட்டுப் பிரச்சனை வேறு என்று சொன்னாலும் ஒருசில மோசமான சம்பவங்கள் நிகழ்ந்தபோது இனிமேல் இலங்கை கிறிக்கட்டை ரசிப்பதில்லை என்று முடிவெடுத்து சிலகாலம் ஒதுங்கியிருந்தாலும், மனதளவில் ஒதுங்க முடியாது!! ஒரு சிறந்த போட்டி ஒன்றை வெற்றி பெறும்போதோ, அல்லது தனிமனித சாதனை நிகழும் போதோ மனம் அனைத்தையும் மறந்து மீண்டும் இலங்கை கிறிக்கட்டை வெளிப்படையாக ஆதரிக்கும்!!! மது, மாது மீதான காதல் போலத்தான் கிறிக்கட்டும்; பிரச்சனைகள் வரும்போது இனிமேல் அந்த பக்கமும் போவதில்லை என்று அந்த கணம் தோன்றும், சில நாட்களிலேயே மனதுக்குள் ஏக்கம் உண்டாகிவிடும்; ஆனால் வெளியில் காட்டிக்க முடியாது, பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் எல்லாவற்றையும் மறந்து ஐக்கியமாகிவிடுவார்கள். (சூதாட்டம் பிடிபடும் சந்தர்ப்பங்கள்; மோசமான தோல்விகளில் பிடித்த அணி தவிக்கும்போது ஏனைய நாட்டு ரசிகர்களுக்கும் இதே மனநிலை வந்திருக்கலாம்)

இல்லை இலங்கை கிறிக்கட் அணிக்கு நீங்க ரசிகர்களாக இருப்பதால் நீங்கள் எல்லோரும் தமிழ் இன துரோகிகள்தான், நீங்க சிங்களவனுக்கு கொடி பிடிக்கிறவங்கதான், உங்களுக்கு இனப்பற்றே இல்லை... இப்படி என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக்கோங்க; எங்களுக்கு கவலையில்லை!!! ஏன்னா எங்களுக்கு நாங்க யார்? நாங்க செய்யிறது சரியா? தவறா? என்கின்றதை சிந்தித்து பாக்கிற அளவுக்கு ஏதோ கொஞ்சமாச்சும் புத்தி இருக்கென்று நம்புகிறேன்; அதுவும் இல்லை என்று சொல்கிறீர்களா பரவாயில்லை, சொல்லீட்டு போங்க; உங்களுக்கு அப்படி சொல்வதில் ஒரு அற்ப சுகம் கிடைக்குமென்றால் அதை எதுக்கு நாம் தடுக்கணும்!!!! ஆனால் ஒன்று இதனால் நீங்கள் தமிழ் இன உணர்வாளர்கள் என்றோ, நாம் தமிழ் உணர்வில்லாதவர்கள் என்றோ நீங்க நினைத்தால் VERY SORRY. com

பழகிவிட்டோம் :- எல்லாவற்றிலும் மற்றவனை குறை சொல்லியே பழகி விட்டோம்.. எல்லாவற்றையும் எங்களுக்கு கொண்டுவந்து தரவேண்டும் என்றே எதிர்பார்க்கின்றோம்.. வாழைப்பழத்தை உரித்து தருவது போதாது என்று ஊட்டி வேறு விட வேண்டுமாம்.. இப்படி இருந்தால் நல்ல முன்னேறும்.. உண்மையில் சொல்லுங்கள் யார்தான் உண்மையிலேயே (நான் உட்பட) நாடு நல்லா இருக்க வேண்டும்.. சார்க்நாடுகளுள் இலங்கைக்கு என்று தனி மரியாதை இருக்க வேண்டும்.. இலங்கை காசுக்கு மதிப்பு இருக்க வேண்டும், விமான நிலையத்தில் இலங்கையரை மொள்ளமாரி கள்ளர் கூட்டம் என்று சொல்லாமல் எங்களையும் மதிக்க வேண்டும், இலங்கையன் என்று சொன்னது ஒரு மரியாதை வர வேண்டும் என்று யார்தான் நினைத்தீர்கள்?? எல்லாவற்றியும் அவசரம். எதனையும் ஒழுங்காக செய்வதில்லை.. சொந்தங்களுக்கான வாழ்க்கை.. தான் நினைத்ததைதான் எல்லோரும் செய்ய வேண்டும் என்ற முட்டாள் தனம்.. வீண் பந்தா.. இப்படியான இயல்புகள் எல்லாம் இயல்பாகவே உள்ள தலைமை..(இப்போதைய தலைமை இல்லை) அழிவு ஆனது இல்லை.. ஆக்கப்பட்டது... அவ்வாறு எல்லாவற்றை செய்துவிட்டு இப்போது நல்லவர் போல நாடகம் போட்டால் என்ன நியாயம் இருக்கின்றது?? இனியாவது மக்களை மக்களாக வாழ விடுங்கள்.. இப்போது மிஞ்சி இருப்பதாவது வாழட்டும்.. இருப்பதாவது இருக்கட்டும்.. அதையும் உங்கள் சுதந்திர நெருப்புக்கு விறக்காக்காதீர்கள்...(தொப்பி அளவானர்கள் போட்டு கொள்ளுங்கள்)

போனவர் எல்லாம் போகட்டும் போகப்போரவர்கள் எல்லாம் போகட்டும்.. இலங்கை என்றும் மாறது.. எம் நாடு.. எம் தேசம்.. வாழ்வோம் வளமாக..!!!

Post Comment

30 comments:

 1. இந்த வருட ராஜபக்சே விருது இந்த பதிவுக்குத்தான்!

  இன்னும் கொஞ்சம் சேற்றில் புரண்டால் இன்னும் சுகமே!

  ReplyDelete
  Replies
  1. அப்பு ராஜ!!! உங்களைப்போல அதிமேதாவித்தனம் எனக்கு இல்லை... நான் எனது பதிவில் எந்த இடத்திலும் "ராஜபக்சே" பற்றி குறிப்பிடவில்லை.. எனது பதிப்பின் இலக்கு முழுது எனது நாட்டினை பற்றியே இருந்தது.. உன்ன உணவு, உடுத்த உடை, வாழ வீடு என்பவற்றை எல்லாம் கடன் கேட்டு வாங்கினோம்.. வாழ நாட்டையும் வாங்க வேண்டுமா??? இருப்பதை வைத்துக்கொண்டு வாலத்தேரியாதவன் முட்டாள்.. போதும் எல்லாம் தமிழன் இறந்தால் தான் அது கவலையா??? ///சார்க்நாடுகளுள் இலங்கைக்கு என்று தனி மரியாதை இருக்க வேண்டும்.. இலங்கை காசுக்கு மதிப்பு இருக்க வேண்டும், விமான நிலையத்தில் இலங்கையரை மொள்ளமாரி கள்ளர் கூட்டம் என்று சொல்லாமல் எங்களையும் மதிக்க வேண்டும், இலங்கையன் என்று சொன்னது ஒரு மரியாதை வர வேண்டும் என்று யார்தான் நினைத்தீர்கள்/// எனது கனவுகள் மெய்ப்படும் ஒரு நாளில்...!!! உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.. :)

   Delete
 2. அடடே!உங்க பெயரை இப்பத்தானே கவனித்தேன்.கோத்தபய தமிழ் கத்துகிட்டு பதிவுலகுக்கு வந்துட்டாரோன்னு நினைச்சேன்:)

  நான் ராஜபக்சே விருது கொடுக்கலாமென்றுதானே சொன்னேன்!நீங்கள் பதிவில் குறிப்பிட்டதாகவா சொன்னேன்.இந்திரா காந்தியை கொன்ற சர்தார்ஜி சமூக கட்டமைப்புக்குள்ளிருந்தே ஒரு பிரதமரை இந்தியா உருவாக்கியுள்ளது.சிறுபான்மையிலிருந்து அப்துல் கலாம் என்ற ஜனாதிபதியை தந்திருக்கிறது.தகுதியும் சந்தர்ப்பங்களும் கிடைத்தால் யார் வேண்டுமானாலும் நாட்டை ஆளும் தகுதியை இந்திய அரசியலமைப்பு தந்திருக்கிறது.உங்களுக்குத்தான் அந்த மாதிரி கனவும்,சம உரிமையும் தேவையில்லைங்கிற போது ஒற்றை இலங்கை கனவிலே சாக வரம் தருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. சகோதரரே!!! உண்மைகள் கொஞ்சம் கசக்கும்.. உங்களுக்கு என்ன காண்டு என்று தெரியவில்லை.. இருக்கட்டும்... ஏன் உங்கள் நாட்டில் மட்டும்தானா??? அரசியலமைப்பு மாற்றங்கள் இடம்பெற்ற வேண்டும்... இருந்து பாருங்க.. இலங்கையிலும் நாடாக்கும்.. மூன்று இன மக்களும் ஒன்றாக ஒரு நாட்டின் கீழ் வாழ்வோம்.. இது எழுதப்படாத விதி... :)

   Delete
 3. உண்மையை படம் பிடித்து காட்டி பாடம் நடத்தி இருக்கிறீர்கள்.புலம் பெயர்ந்து ஏதோ தங்களை ஐரோப்பியர்களாக எண்ணி இறுமாப்பில் இருப்பவர்களுக்கு சாட்டை அடி இந்த பதிவு

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் நண்பா!!! கூச்சல் போடுவதாலோ, கொடி பிடிப்பதாலோ ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை... முதலில் ஒன்றாக வேண்டும்.. ஒற்றுமை என்பதுதான் தமிழரின் அகராதியிலே விளக்கம் இல்லாத சொல் ஆகிவிட்டதே.. எனக்கு வெளிநாட்டில் போய் கொடி பிடிப்பவர்களின் தேச பக்தியில் உடன்பாடு இல்லை... இருக்கும் போது என்ன செய்தார்கள்..??? இருக்கட்டும்.. நமது கடமையை உரிமையுடன் செய்வோம்.. இலங்கையில் நிம்மதியாக வாழ்வோம்.. :)உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.. :)

   Delete
 4. I agree with your points, but I still beleive our politicians who were behind our 30 yrs war. They let our youngsters to take the weapon and India pad them.

  ReplyDelete
  Replies
  1. முக்கியமாக மூக்கை நுழைக்க வேண்டியவர்கள் எல்லோரும் அமைதி காத்தனர்.. சும்மா தெருவில் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் கையில் ஏந்தினர்.. சுதந்திர வேட்கைக்கு விறகாயினர்.. அரசியலையோ அரசாங்கத்தையோ பற்றி கதைக்கும் அளவிற்க்கு நான் இன்னும் வளரவில்லை.. எனக்கு அறிவு போதாது என்று நினைக்கின்றேன்.. எனக்கு என் நாடு என் மக்கள் என்ற நோக்கிலேயே நான் எனது கண்ணோட்டத்தை முன்வைத்தேன்.. மிகவும் நன்றி தோழா.. உங்களது பின்னூட்டலுக்கும் உங்களது வருகைக்கும்... :)

   Delete
 5. http://kishoker.blogspot.com/2012/08/blog-post_28.html

  ReplyDelete
  Replies
  1. சரி ///இந்தா பாருங்கோ நாமெல்லாம் சகோதரங்கோ.. நம்மாண்ட சண்ட கூடாது.. அப்பன் செத்தா என்ன .. அது போகட்டும் அழகா பரந்து விரிஞ்சி இருக்கிற இலங்கையோட அழகை பாருங்கோ.... ஜாலியா லைஃப எஞாய் பண்ணுங்கோ.... அட ! /// உண்மையில் இதைதான் செய்ய வேண்டும்.. ஐநா இவ்வளோ காலமும் புடுங்கினா ஆணி பத்தாதா??? இனியும் என்னதான் கிடைக்கும் என்று பொறுமையாக இருக்க வேண்டும்.. இறந்தவர்கள் யாரும் எழுந்து வரமாட்டார்கள்... இந்த நிலைமை இன்னமும் ஒரு யுத்தத்தை தான் வளி வகுக்கும்... கொடுக்குறத்தை பிடுங்குறது.. எங்கள் அன்பான அரசாங்கம்.. எந்த ஒரு சிங்கள, முஸ்லிம்களும் உதவி செய்ய வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்.. அரசியலுக்கும், அரசாங்கத்துக்கும் உள்ள பகையினை மக்களிடையே ஏன் திணிக்க வேண்டும்...????

   Delete
  2. ///ஒரு நாட்டின் அதியுயர் கல்வி பீடங்களாக இருக்கக்கூடிய பல்கலைகழகங்களை இரண்டு மாதகாலமாக மூடி வைத்திருப்பது சின்ன பிரச்சினை தானே?/// இல்லை பல்கலைகழகங்கள் எல்லாவற்ரையும் திறந்து வைத்ததும்.. படித்து விட்டு வெளிநாட்டுக்கு போய் வெள்ளை காரனுக்கு கழுவுரதுக்கு (நான் கோப்பை கழுவுரத்தை சொல்லுறேன்) பேசாமல் பல்கலைகழகங்கள் எல்லாம் இவ்வாறே மூடியே இருக்கலாம்... :)

   Delete
  3. உங்கள் அறிவுத்திறனை கண்டு நான் வியக்கிறேன், தொடருங்கள் வாழ்த்துக்கள்!

   Delete
 6. கொசுபா!நீங்க பத்தி பிரிச்சு பதிவு போட்டு கருத்து சொன்னதும் கொஞ்சம் சரக்கோடுதான் தூண்டில் போடுறீங்கன்னு நினைச்சேன்.ஆனால் பல்கலைக்கழகமெல்லாம் மூடி வச்சிட்டா நல்லதுதான்னு சொல்றீங்களே!அப்படி புல்லரிச்சு புடலங்காய் காயபோட தோணுது.

  பல்கலைக்கழகமெல்லாம் மூடனும்ன்னு சொல்ற உங்ககிட்ட செகுவாரா பற்றியெல்லாம் சொன்னா மூளைல ஏறவா போகுது?தெரிஞ்சாலும் அர்ஜென்டினாவில் பிறந்தவன் கியூபாவுக்கு எதுக்கு சண்டைக்கு போகனும்.சரி அப்படியே போனாலும் மறுபடியும் பொலிவியாவுக்கெல்லாம் ஏன் போகனும்ன்னு கேட்டாலும் கேட்பீங்க. நீங்க பேசுற மெட்ராஸ் பாஷைக்கான விளக்கமிது.

  ஈழத்தமிழர்கள்....இல்ல....இலங்கைத்தமிழர்கள் மெடராஸ் பாஷை கத்துக்கிற அளவுக்கு இலங்கை முன்னேறியிருக்குதுன்னா இன்னும் முன்னேறுவீங்க.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. அன்பு ராஜ நடராஜன் நான் சொல்ல வந்த விடயம் "இலங்கையில் என்ன இல்லை; எல்லாம் இருந்தும் என்னத்தை செய்துகொண்டிருக்கின்றோம்" என்பதை குறிப்பதாக எழுதப்பட்ட பதிப்புக்கு உதாரணமாகவும், குறிப்புக்களாகவும் என்னால் எடுக்கப்பட்ட உதாரணங்கள் பிழையாகும்... அதுக்காக என்னை "சே" ஐ தெரியாத அளவுக்கு முட்டாள் என்று சொல்ல வேண்டாம்... ///ஈழத்தமிழர்கள்....இல்ல....இலங்கைத்தமிழர்கள் மெடராஸ் பாஷை கத்துக்கிற அளவுக்கு இலங்கை முன்னேறியிருக்குதுன்னா இன்னும் முன்னேறுவீங்க/// இது மட்டும் எனக்கு விளங்கவில்லை...????

   Delete
 7. இலங்கையனாக வாழ்வோம்; இலங்கையானகவே இறப்போம்..!!!
  I take my hat off to you Sir

  ReplyDelete
  Replies
  1. இது வேறையா??? மிக மகிழ்ச்சி :(

   Delete
 8. Replies
  1. மிக்க மிக்க நன்றி... :)

   Delete
 9. இது உங்களின் தனிப்பட்டக் கருத்து ! வடக்கு கிழக்கு வாழ் தமிழர்களின் பெரும்பான்மைக் கருத்து எது என்பதை நாம் அறிய ஆவலாக இருக்கின்றோம். ஒரு பொதுசன வாக்கெடுப்பை நடத்த ஏற்பாடு செய்வீர்களானால் ! இந்த சிக்கல் தீர்ந்துவிடும் அல்லவா ?

  அப்புறம் அண்டையார், அயலார் எவனும் மூக்கை நுழைக்க மாட்டார்கள் .. ஜெயாவும், கருணாவும் கூட அந்தமான் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கக் கிளம்பிவிடுவார்கள் அல்லவா ?

  சிக்கலே இது தான் .. ஒருவரின் கருத்தை மற்றவர் மீது திணிக்க முற்படுகின்றனர். முக்கியமாக இலங்கையில் !!!

  சிங்கள அரசு கைசுத்தமாக சர்வதேச கண்காணிப்போடு ஒரு வாக்கெடுப்பை வடக்கு கிழக்கில் நடத்த முனையுமானால் ! நாமும் அதனை வரவேற்கின்றோம். அதன் முடிவு எப்படியானதாக இருந்தாலும் ஒரு ஜேய் !!!

  அதுவரை பேஸ்புக்கில் செம பிகர் மச்சி தளத்தைப் பார்த்துக் கொண்டே பொழுதுப் போக்குவோமாக !!!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் இக்பால் செல்வன்.. தேவை இல்லாமல் ஒரு தலைப்பினை எடுத்து எழுதி விட்டேனோ என்று தோன்றுகின்றது.. நான் சொல்ல வந்ததை யாரும் புரிந்து கொள்வதாக இல்லை... அப்படி ஒரு வாக்கெடுப்பை செய்தாலாவது பறவாயில்லை... பொறுத்திருப்போம்... எல்லாம் நடக்கும் போது பார்த்துக்கொள்வோம்...மிகவும் நன்றி தோழா.. உங்களது பின்னூட்டலுக்கும் உங்களது வருகைக்கும்... :)

   Delete
 10. நல்ல பதிவு ஆனால் புரிதல் தவறாகி விடுகிறது... இங்கு எதி பேசினாலும் அரசியலாகிவிடுகிறது.. பகிர்வுக்கு நன்றி...
  அரசியல் பற்றி குறிப்பிடாமல் பேசுங்கள். எனது தளத்தில்
  http://varikudhirai.blogspot.com/2012/08/they-planted-tea-on-hills.html

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி..:) உண்மைதான் புரிதல் என்பது மிகவும் முக்கியமானது ஆகும்.. அதனை கொஞ்சம் தவற விட்டு விட்டேன் போலதான் இருக்கின்றது..மிகவும் நன்றி தோழா.. உங்களது பின்னூட்டலுக்கும் உங்களது வருகைக்கும்... :)

   Delete
 11. தேவை இல்லாமல் ஒரு தலைப்பினை எடுத்து எழுதி விட்டேனோ என்று தோன்றுகின்றது.
  இல்லை மிக தேவையான நியாயமான கருத்தையே கூறியிருக்கிறீர்கள் நன்றி.

  மற்றும்படி தமிழகத்தவர்கள் கற்பனையில் இருக்கிறார்கள் பாகிஸ்தானில் உள்ளவர்கள் சிலர் கஸ்மீர் மீது சர்வதேச கண்காணிப்போடு ஒரு வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கேட்டுவிட்டதிற்காக இந்தியா அப்படி ஒரு வாக்கெடுப்பை நடத்த வேண்டியதில்லை.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்.. ஆரம்பத்தில் இந்த பதிவினை எல்லோரும் ஏதோ இன எதிர்ப்பு வெறியன் ஒருவன் எழுதியது போலவே பார்த்தார்கள்.. என்ன சொல்வது.. புரிதல் எல்லாம் கால தாமதமாகத்தான் நடை பெறுகின்றது.. :) மிகவும் நன்றி தோழா.. உங்களது பின்னூட்டலுக்கும் உங்களது வருகைக்கும்... :)

   Delete
 12. தோழர் கோசுபா,
  அது என்ன ஒரு பொதுசன வாக்கெடுப்பை நடத்த ஏற்பாடு செய்வீர்களானால் ஜெயாவும், கருணாவும் கூட அந்தமான் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கக் கிளம்பிவிடுவார்கள் என்றால் தமிழ்நாட்டு ஜெயாவும் கருணாவும் இலங்கை தமிழர்களின் மீது அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்களா? நல்ல கொமடி. தமிழ்நாட்டுக்கு வந்த இலங்கை அகதிகள் அங்கேயுள்ள அகதி முகாமில் துன்பங்களை அனுபவிப்பது போல் வேறு எங்கேயும் அனுபவித்ததில்லை. தங்கள் தமிழ்நாட்டு பிரச்சனைகளை மறக்கடிப்பதற்கு இலங்கை தமிழர்கள் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள். இலங்கையிலிருந்து தமிழ் நாட்டுக்கு திருத்தல சுற்றுலா வந்திருந்த பயணிகளை இலங்கை தமிழர்களையும் சேர்த்து தாக்கியிருக்கிறார்கள் தமிழ்நாட்டுகாரர்கள்.

  ReplyDelete
  Replies
  1. தமிழக தமிழ் பேசும் மக்களுக்கு அன்பான ஒரு வேண்டுகோள் :- இது வரைக்கும் நீங்கள் இலங்கை தமிழ் மக்களுக்காக செய்த உதவிகளையும், உபசரிப்புக்களையும் என்றும் ஒரு இலங்கை தமிழனாக இருந்து மறந்துவிடவில்லை. உங்களில் எவரையும் குறை சொல்வதற்காக இந்த பதிப்பினை எழுதவில்லை. தமிழக மக்களை எந்த இடத்திலும் நான் குற்றம் சொல்லவில்லை, அவர்களால் அதிகபட்ச உணர்வுகள் வெளிக்காட்டப் பட்டிருக்கின்றன, வெளிக்காட்டப் பட்டுக்கொண்டும் இருக்கின்றன; அதற்க்கு பதிலான ஈடுபாட்டை இலங்கைத் தமிழர்கள் இதுவரை தமிழகத்தின் எந்த பிரச்சனைக்கும் வெளிக்காட்டியதில்லை, அந்தவகையில் இலங்கை தமிழனாய் நானும் குற்ற உணர்ச்சி உள்ளவன்தான்!! என் கோபம் அத்தனையும் எம்மை பலிக்கடா ஆக்கும் தமிழக அரசியால் சாக்கடைகள் மீதுதான் அன்றி மக்கள் மீதல்ல!!

   Delete
 13. தோழர் கோசுபா-விற்கு அன்பு வணக்கங்கள். உங்கள் நாட்டு பற்று மதிப்பிற்குரியது. ஆனால் அது வரவேற்பிற்கு உரியதா என்றுதான் எங்களுக்கு(தமிழன் - இந்தியா) தெரியவில்லை. ஏனெனில் இலங்கையில் தமிழனின் நிலை எங்களுக்கு புரியவில்லை. நாங்கள் எண்ணுகிறோம் அங்கு இலங்கை அரசு உங்களுக்கு(தமிழிழம்) சமநிலை அழிக்கவில்லை என்று. அந்த ஒரே காரணத்தால் தான் நாங்கள் இலங்கையை எதிரியாக கருதுகிறோம். நன்றாக புரிந்து கொள்ளுங்கள் உங்களுக்காக மட்டும்தான். ஆனால் நீங்கள் கூறுவதை வைத்து பார்க்கும் போது, இலங்கை அரசால் உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது போல் தோன்றுகிறது. எங்கள் ஒரே நோக்கம் நம் தமிழ் மக்கள் எங்கு இருந்தாலும் நன்றாகவும், மதிப்புடனும் இருக்கவேண்டும் என்பதுதான். நீங்கள் கேட்பது இலங்கை தமிழனாகவே இருக்க வேண்டும், அதுதான் உங்களுக்கு விருப்பம் என்றால், உங்கள் விருப்பம் நிறைவேற எனது வாழ்த்துக்கள்... -ramasamy.srce@gmail.com

  ReplyDelete
  Replies
  1. தமிழக தமிழ் பேசும் மக்களுக்கு அன்பான ஒரு வேண்டுகோள் :- இது வரைக்கும் நீங்கள் இலங்கை தமிழ் மக்களுக்காக செய்த உதவிகளையும், உபசரிப்புக்களையும் என்றும் ஒரு இலங்கை தமிழனாக இருந்து மறந்துவிடவில்லை. உங்களில் எவரையும் குறை சொல்வதற்காக இந்த பதிப்பினை எழுதவில்லை. தமிழக மக்களை எந்த இடத்திலும் நான் குற்றம் சொல்லவில்லை, அவர்களால் அதிகபட்ச உணர்வுகள் வெளிக்காட்டப் பட்டிருக்கின்றன, வெளிக்காட்டப் பட்டுக்கொண்டும் இருக்கின்றன; அதற்க்கு பதிலான ஈடுபாட்டை இலங்கைத் தமிழர்கள் இதுவரை தமிழகத்தின் எந்த பிரச்சனைக்கும் வெளிக்காட்டியதில்லை, அந்தவகையில் இலங்கை தமிழனாய் நானும் குற்ற உணர்ச்சி உள்ளவன்தான்!! என் கோபம் அத்தனையும் எம்மை பலிக்கடா ஆக்கும் தமிழக அரசியால் சாக்கடைகள் மீதுதான் அன்றி மக்கள் மீதல்ல!!

   Delete
 14. தோழர் கோசுபா-விற்கு அன்பு வணக்கங்கள். உங்கள் நாட்டு பற்று மதிப்பிற்குரியது. ஆனால் அது வரவேற்பிற்கு உரியதா என்றுதான் எங்களுக்கு(தமிழன் - இந்தியா) தெரியவில்லை. ஏனெனில் இலங்கையில் தமிழனின் நிலை எங்களுக்கு புரியவில்லை. நாங்கள் எண்ணுகிறோம் அங்கு இலங்கை அரசு உங்களுக்கு(தமிழிழம்) சமநிலை அழிக்கவில்லை என்று. அந்த ஒரே காரணத்தால் தான் நாங்கள் இலங்கையை எதிரியாக கருதுகிறோம். நன்றாக புரிந்து கொள்ளுங்கள் உங்களுக்காக மட்டும்தான். ஆனால் நீங்கள் கூறுவதை வைத்து பார்க்கும் போது, இலங்கை அரசால் உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது போல் தோன்றுகிறது. எங்கள் ஒரே நோக்கம் நம் தமிழ் மக்கள் எங்கு இருந்தாலும் நன்றாகவும், மதிப்புடனும் இருக்கவேண்டும் என்பதுதான். நீங்கள் கேட்பது இலங்கை தமிழனாகவே இருக்க வேண்டும், அதுதான் உங்களுக்கு விருப்பம் என்றால், உங்கள் விருப்பம் நிறைவேற எனது வாழ்த்துக்கள்... -iniyan.social@gmail.com

  ReplyDelete
  Replies
  1. தமிழக தமிழ் பேசும் மக்களுக்கு அன்பான ஒரு வேண்டுகோள் :- இது வரைக்கும் நீங்கள் இலங்கை தமிழ் மக்களுக்காக செய்த உதவிகளையும், உபசரிப்புக்களையும் என்றும் ஒரு இலங்கை தமிழனாக இருந்து மறந்துவிடவில்லை. உங்களில் எவரையும் குறை சொல்வதற்காக இந்த பதிப்பினை எழுதவில்லை. தமிழக மக்களை எந்த இடத்திலும் நான் குற்றம் சொல்லவில்லை, அவர்களால் அதிகபட்ச உணர்வுகள் வெளிக்காட்டப் பட்டிருக்கின்றன, வெளிக்காட்டப் பட்டுக்கொண்டும் இருக்கின்றன; அதற்க்கு பதிலான ஈடுபாட்டை இலங்கைத் தமிழர்கள் இதுவரை தமிழகத்தின் எந்த பிரச்சனைக்கும் வெளிக்காட்டியதில்லை, அந்தவகையில் இலங்கை தமிழனாய் நானும் குற்ற உணர்ச்சி உள்ளவன்தான்!! என் கோபம் அத்தனையும் எம்மை பலிக்கடா ஆக்கும் தமிழக அரசியால் சாக்கடைகள் மீதுதான் அன்றி மக்கள் மீதல்ல!!

   Delete