Tuesday, August 7, 2012

மைக்கல் ஜாக்சன் ஒரு சபிக்கப்பட்ட மனிதன்..!!!

எனக்கு மிகவும் பிடித்த ஒரு சில பேரில் மைக்கல் ஜாக்சனுக்கு என்று ஒரு தனி இடம் எப்போதும் இருக்கும்.. அவரின் பாடல்கள் எனக்கு விளங்காதா காலத்தில் இருந்து இப்போது வரைக்கும் அவரின் ஒரு தீவிர ரசிகன் நான் ஒரு MJ பைத்தியம் என்று கூட சொல்லலாம். எல்லோரும் அறிமுகத்தில் இருந்து பதிப்பிற்க்குள் செல்வார்கள் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக MJஇன் இறப்பில் இருந்து பதிப்பினை ஆரம்பிப்போம்..!!

இந்த பதிப்பினை மைக்கல் ஜாக்சனின் உயிர் ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்!!!புகழின் உச்சியில் இருந்த போது தனது செய்திகள் அடிக்கடி வருவதை போதையாக அருந்திய ஜாக்சன் நேரெதிரான காலத்தில் வரும் செய்திகளுக்காக இடிந்து போயிருப்பார் என்றால் மிகையில்லை. ஜாக்சன் இருந்தாலும் ஆயிரம் பொன் அவர் ஒழிந்தாலும் ஆயிரம் பொன் என்று சிறுவர்கள் மீதான பாலியல் விவகாரத்தில் ஊடகங்கள் நடந்து கொண்டன. நீதிமன்றத்திற்கு முன்பாகவே அவர்கள் தீர்ப்பு வழங்கி ஆயுள் சிறையிலிருக்கும் ஜாக்சனது வாழ்க்கை குறித்தெல்லாம் அலசி ஆராய்ந்தார்கள். இங்கு வெள்ளை நிறவெறியும் சற்று கூடுதல் அக்கறையுடன் செயல்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இப்படித்தான் உலகை ஒரு காலத்தில் ஆடவைத்த கலைஞன் ஈவிரக்கமின்றி சித்திரவதை செய்யப்பட்டார். இதனை எத்தனை பேர் நம்புவீர்கள் என்று தெரியாது ஆனால் இதுதான் நியம்!!!
வழக்கிற்காக மனநிம்மதியை இழந்த ஜாக்சன் அதற்காக பெரும் செல்வத்தையும் இழந்தார். பண்ணை வீட்டையும் காலி செய்தார். ஆடம்பரத்தில் உழன்று கொண்டிருந்த நேரத்தில் பிற்காலத்தில் இப்படி ஒரு நிலை வரும் என அவர் கனவிலும் கருதியிருக்க முடியாது. வீட்டில் நிம்மதி இல்லை, வெளியே நடமாடினால் விசிரிகளினால் நிம்மதி இல்லை, தொழில் இல்லை, கலை இல்லை என்றால் அவர் எதை வைத்து வாழ்ந்திருக்க முடியும்??? போதை மருந்துகள், வலி நிவாரணிகள் மூலம்தான் அவரது இறுதி காலம் வேறு வழியின்றி நகர்த்தப்பட்டது. கட்டாயத்தின் மத்தில் வாழ்த்திருக்கின்றார் என்று சொன்னால் அது மிகையாகாது. பரவியிருக்கும் செய்திகள் படி அவரது உடலில் இருந்த அளவுக்கு அதிகமான மருந்துகளே அவரது உயிரைப் பறித்திருக்கலாம் எனவும கூறப்படுகிறது.
ஆனாலும் ஆயுள் கைதியாக மருந்துகளின் உதவியால் ஒரு பைத்தியக்காரனைப் போல வாழ்ந்து வந்த ஜாக்சனை இசை நிறுவனங்கள் விடுவதாக இல்லை. ஒரு சிறிய காலம் அந்த நிறுவனங்களை ஆட்டிப்படைத்த அந்த கலைஞன் இப்போது அந்த நிறுவனங்களுக்கு மறுப்பேதும் சொல்லும் நிலைமையில் இல்லை. ஐம்பது வயது, முடி இல்லாத தலை, உரியும் தோல் துணுக்குகள், மருந்தின்றி நடமுடியாத நிலை, உடல் எடை குறையும் நோய், இப்படி ஆயிரத்தெட்டு பிரச்சினைகளோடு இருந்த அந்த கலைஞனை ஐம்பது நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என உத்திரவிடுவதற்கு எத்தனை கொடூர மனம் வேண்டும்??? இவர்கள் எல்லாம் மனிதர்களா?? என்று நினைக்கும் அளவுக்கு அநியாயமாக நடந்து கொண்டார்கள். வந்த வரை இலாபம் என்பதால் முதலாளிகள் ஜாக்சனது கட்டாய நிலையை நன்கு பயன்படுத்திக் கொண்டனர். பொழுது போக்கு தொழிலில் அங்கமாகிப் போன இசைச் சந்தையை விரிப்பதற்கு, புதிய தலைமுறைக்கு பழையதை அறிமுகம் செய்து ஈர்ப்பதற்கு முதலாளிகள் நினைத்திருக்கலாம்.
இந்த இசை நிகழ்ச்சிகளுக்கான ஒப்பந்தத்தில் என்னென்ன விதிகள் இருந்தன என்பது நமக்கு தெரியாது. ஒருவேளை இந்த விவரங்கள் பிரேதப் பிரிசோதனையைவிட முக்கியமானது என நமக்குத் தோன்றுகிறது. நோய்வாய்ப்பட்டிருக்கும் சிங்கத்தை அடித்து வேலை வாங்கும் ரிங் மாஸ்டர் வேலையை முதலாளிகள் செய்தனர். ஆனால் சிங்கமோ வேலை செய்ய இயலாமல் செத்துப் போனது.
நிகழ்ச்சிகள் நடந்தால் கடனிலிருந்து மீளலாம், அதற்கு நலிவிலிருக்கும் உடலை எப்படி தயார் செய்வது? எப்படியும் தயார் செய்தே ஆகவேண்டும். மருந்துகள், இன்னும் அதிக மருந்துகள், புதிய நிவாரணிகள், மயக்க மருந்து எல்லாம் பயன்படுத்தி எப்படியாவது உடலை தயார் செய்ய வேண்டும். நிவாரணிகளின் தயவில் புகழ்பெற்ற அந்த இரகசியக் குரல் தனது பொலிவை எடுத்து வரவேண்டும். மூளையை ஏமாற்றியாவது இரசிகர்களை சொக்கவைத்த நிலவு நடனத்தை ஆட வேண்டும். எதாவது செய்ய வேண்டும். மைக்கேலின் இறுதிக்காலம் இப்படித்தான் மிகப்பெரிய சித்திரவதையுடன் இருந்திருக்க வேண்டும். நல்ல வேளையாக இறந்ததன் மூலம் அவர் தன்னைக் காப்பாற்றிக் கொண்டார்.
முதலாளித்துவம் ஒரு கலைஞனை உருவாக்கி கொன்ற கதை இதுதான்!!! மைக்கேல் பிரபலமான காலத்திலும், புகழ் சரிந்த காலத்திலும் அவர் சுதந்திரமாக இல்லை. வியாபார சந்தையால் கட்டுப்படுத்தப்பட்டு ஆடினார், பாடினார். அதே வியாபார் சந்தைக்காக ஆடவும், பாடவும் முடியாமல் இறந்து போனார். அவரை வைத்து வளர்ந்த எம்.டிவியும், சோனி நிறுவனமும் இன்று பகாசுர பலத்தில் வளர்ந்துள்ளன. அவர்களது விளம்பர வித்தைப் பலகையில் இப்போது புதிய நட்சத்திரங்கள் மின்னுகிறார்கள். நட்சத்திரங்கள் மாறலாம். ஆனால் மைக்கல் ஜாக்சனின் எந்த ரசிகனும் அவரை விட்டுக்கொடுப்பதாகவோ.. தூக்கிப்போடுவதாகவோ..இல்லை..
தரையிலிருந்து அந்த பிரம்மாண்டமான விளம்பரப்பலகையை பார்க்கும் இரசிகனுக்கு மேலே நடக்கும் சூட்சுமங்கள் புரிவதில்லை. அவனுக்குத் தேவை நரம்பை நிமிட்டும் இசையும் நடனமும்தான். அப்படித்தான் அவன் பழக்கப்பட்டிருக்கிறான்.
ஒரு இருபதாண்டு காலம் உலக மக்களை இசையிலும் நடனத்திலும் சற்றே மெய்மறக்கச் செய்த மைக்கேல் ஜாக்சன், கம்யூனிசம் தோற்று விழுந்த காலத்தில் முதலாளித்துவத்தின் வெற்றியை பறைசாற்றும் அமெரிக்காவின் தூதனாக உலகை வலம் வந்த நாயகன், அமெரிக்காதான் இந்த உலகின் மையம், துவக்கம் என நம்பிய கலைஞன், இப்போது அமெரிக்காவின் சூதாட்டப் பொருளாதாரம் வீழ்ந்த காலத்தில் தனது மாயவலைப் புகழை இழந்து மறைந்திருக்கிறான்.உலகத்தின் முன்னால் சிறந்த பாடகராகவும், சர்ச்சைக்குரிய மனிதனாகவும் இருந்தவர் மைக்கல் ஜாக்சன். கறுப்பராக பிறந்த இவர் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை மூலம் வெள்ளைக்காரனாக தனது தோற்றத்தை மாற்றினார். அதனால் தோல் அழுகல் உள்ளிட்ட பல நோய்களுக்கு ஆளானார். அமெரிக்க அரசின் பல வழக்குகளை சந்தித்து அவமானங்களுக்கு உள்ளானார். 1993ல் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகக் குற்றமும் இவர் மீது சுமத்தப்பட்டது. 13 வயது சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக 23 மில்லியன் டாலர் தண்டம் கட்ட வேண்டிய நிலை உருவானது. 1995 ல் இந்த வழக்கில் இருந்து விடுதலையானார். மேலும் அமெரிக்க அரச அதிகார வர்க்கத்துடன் பகைத்து மத்திய கிழக்கில் குடியேற முயலும் அளவிற்கு அதிகார வர்க்கத்தின் நிந்தனைகளையும் சந்தித்தார்.

இவருடைய கடன் 500 மில்லியன் டாலர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. இவருடைய பாடல்கள் சுமார் 750 மில்லியன் இசைத்தட்டுக்களுக்கு மேலாக விற்பனையாகியுள்ளன. இவருடைய பாடல்களின் வருமானம் 100 கோடி டாலர்கள் வரை மதிப்பிடப்பட்டுள்ளது. 1982 வெளியிட்ட திரில்ரர் என்ற இசைத்தட்டு மட்டும் 100 மில்லியன் பிரதிகள் விற்றுள்ளது. இங்கிலாந்து கச்சேரிக்காக 7.50.000 டிக்கற்றுக்கள் விற்பனையாகின. மொத்தம் 85 மில்லியன் டொலர்களுக்கு டிக்கட்டுக்கள் விற்க்கப்பட்டன. இதில் ஜாக்சனின் சம்பளம் மட்டும் 50 மில்லியன் டாலர்களாகும். மைக்கல் ஜாக்சனின் புதிய நிகழ்ச்சிகளை நடாத்தவிருந்த ஏ.ஜி.எப் நிறுவனம் புதிய நிகழ்ச்சிக்கான பயிற்சிகளுக்கே 20 மில்லியன் டாலர்களை செலவழித்துவிட்டது. இதனுடைய மொத்த வருமானம் 115 மில்லியன் டாலர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

சிலருக்கு பணத்தை கொடுத்து சோதிக்கும் இயற்கை, சிலருக்கு புகழைக் கொடுத்து சோதிக்கும், ஆனால் இவருக்கோ பணத்தையும் புகழையும் கொடுத்து, அதை அனுபவிக்க முடியாத வெறுமையையும் கொடுத்து சோதித்தது. ஆணா பெண்ணா இல்லை அலியா, கறுப்பா, வெள்ளையா இல்லை இரண்டுமா, இயல்பான மனிதனா இல்லை உளவியல் நோயாளியா என்று மர்மமான வாழ்வு வாழ்ந்த அரை நூற்றாண்டு புத்தகம் மைக்கல் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இசை மேதை மைக்கேல் ஜாக்சன் ஓர் இசையின் வரலாறு! இதனை யாராலும் எந்த கம்யூனிசத்தாலும் மாற்றவோ அழிக்கவோ முடியாது!!!
இளமைக்காலம் :- மைக்கேலின் குழந்தைப்பருவம் தந்தையின் கண்டிப்பான அணுகுமுறையில் கடந்து சென்றதால் மற்ற குழந்தைகளின் வழக்கமான வளர்ச்சியையும், மகிழ்ச்சியையும் அவர் அடையவில்லை என்பது அவரும் பலரும் ஒத்துக் கொண்ட விசயம். இதனாலேயே சிறு பிராயத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையின் மனபாதிப்பு பின்னாளில் பல்வேறு வகைகளில் வெளிப்பட்டது என்பதும் பல விமரிசனர்களின் கணிப்பு.

மைக்கேலின் தந்தை தனது மகன்களை வளர்த்த விதத்தில் வில்லனாக்கப்பட்டார். 1969இல் ஜாக்சன் சகோதரர்களால் வெளியிடப்பட்ட “தி ஜாக்சன் ஃபைவ்” பலரது கவனத்தைப் பெற்றது. அப்போது பதினொரு வயதான மைக்கேல் மற்றவர்கள் குறிப்பிட்டு பாராட்டும் பங்களிப்பை செய்திருந்தான். இதன் மீட்சியாக 1979இல் மைக்கேல் ஜாக்சனது “ஆஃப் தி வால்” முதல் தனி ஆல்பம் வெளியாகி விற்பனையில் சாதனை படைத்தது. 21வயதில் அவர் நட்சத்திரமாக உதித்தார்.
பலரும் நினைப்பதைப்போல குதுகலமான குழந்தைப் பருவத்தை இழந்தததனால் மட்டும் ஒரு அழுத்தமான தனிமையுணர்ச்சிக்கு அவர் ஆளாகவில்லை. இந்த மனச்சோர்வே பிற்காலத்தில் MJஐ வாட்டி வதைத்திருக்கும் என்றும் இதனால்தான் அவர் ஓரினச்செயற்கையாளராக மாறினார் என்றும் விதண்டாவாதம் கதைக்கவும் ஒரு சில பேர் இன்னமும் பூலோகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர். சிறு வயதிலேயே மேடை நிகழ்வுக் கலைஞனின் செயற்கையான மற்றவர்களை கவரும் காட்சி நடத்தைகளை அவர் கற்றுக்கொண்டார். பளிச்சென தெரிய வேண்டும் என்பதற்க்காக பிஞ்சிலே ஒரு குழந்தையை பழுக்கவைத்தால் என்ன பாதிப்பு ஏற்படுமோ அது மைக்கேலுக்கும் நடந்தது.
மைக்கேலின் குரலையும், காலையும் பயிற்றுவித்த தந்தை இந்த நடத்தை மாறும் மனவளத்தை வலுவாக்கும் பயிற்சிகளை தரவில்லை. இப்படித்தான் மைக்கேலின் இசையும் நடனமும் புத்தாக்க உணர்வுடன் மெருகேறி வளர்ந்த அதே காலத்தில் அவரது நட்சத்திர வாழ்க்கைக்கான பண்புகளும் சேர்ந்தே வளர்ந்தன. இசைத் திறமையும், நட்சத்திர பண்பும் ஒன்றையொன்று சார்ந்தும் விலகியும் விரிந்தன. சகோதரர்களெல்லாம் இசைக் குடும்பமாய் இருந்த போதும் சிறுவன் மைக்கேலின் திறமைகள் தனித்து தெரிந்தன.

இசையுலகில் கடந்த 1971 முதல் தனி ஆவர்த்தனம் செய்ய ஆரம்பித்த ஜாக்சன், தனது நிகழ்ச்சிகளை ஆல்பங்களாகவும் வெளியிட்டு வந்தார். இது உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களையும் அவருக்கு பெற்றுத் தந்தது. 1972ல் ‘காட் டு தி தேர்’, 1979ல் ‘ஆப் தி வால்’, 1982ல் ‘திரில்லர்’, 1987ல் ‘பேட்’, 1991ல் ‘டேஞ்சரஸ்’ மற்றும் 1995ல் ‘ஹிஸ்டரி’ போன்ற ஆல்பங்கள் உலகளவில் விற்பனையில் சக்கப்போடு போட்டன. 1980களில் பாப் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த நிலையில், மேற்கத்திய கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் எம்.டி.வி. தனது ஒளிபரப்பை துவக்கியது. அந்த டிவியில் ஜாக்சன் நடத்திய ‘பீட் இட்’, ‘பில்லி ஜூன்’ மற்றும் ‘திரில்லர்’ போன்ற இசை நிகழ்ச்சிகள், அவரது புகழை உலகம் முழுவதும் பரப்பியதோடு, அந்த டிவியையும் குறுகிய காலத்தில் பிரபலப்படுத்தியது. தொடர் வெற்றிகள் காரணமாக, 75 கோடி ஆல்பங்கள், 13 கிராமி விருதுகள் பெற்று, ஈடு இணையற்ற பாப் பாடகராக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றார் மைக்கேல் ஜாக்சன்.
ஆனால், கடந்த 1990களின் கடைசியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சரிவை சந்திக்க ஆரம்பித்தார் ஜாக்சன். பிளாஸ்டிக் சர்ஜரி முறையில் பலமுறை முகத்தை மாற்றியது மற்றும் பண விவகாரம் போன்றவற்றால் பெரும் சர்ச்சைகளில் சிக்கினார். தனது பண்ணை வீட்டில் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் நீதிமன்ற படியேறினார். வழக்கு விவகாரங்களுக்காக தனது சொத்துக்கள், பண்ணை வீடுகள் போன்றவற்றை இழந்தார். எனினும், கடந்த 2005ம் ஆண்டு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். மைக்கேல் ஜாக்சனின் இல்லற வாழ்க்கையும் நீண்ட காலம் இனிமையானதாக நிலைத்திருக்கவில்லை. கடந்த 1996ல் பிரஸ்லி என்ற பெண்ணை திருமணம் செய்தார். பின்னர் 1999ல் டெபோரே என்ற பெண்ணையும் மணந்தார். எனினும், மைக்கேல் ஜாக்சனில் வினோத நடவடிக்கைகள் பிடிக்காமல் இந்த இரு திருமணங்களுமே விவாகரத்தில் முடிந்தது. மைக்கேல் ஜாக்சனுக்கு பாரிஸ் மிசேல் காதரின் என்ற மகளும், ஜோசப் ஜாக்சன் மற்றும் மைக்கேல் ஜாக்சன்-2 ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.

கொடுத்தது எல்லாம் கொடுத்தான் எல்லாம் கொட்டிக்கொட்டி கொடுத்தான்.. முழுதாக அனுபவித்ததாக தெரியவில்லை.. சர்ச்சிகளும் சிக்கல்களும் தான் வாழ்வில் மிச்சமானது.. நிம்மதியாக அழுவதற்க்கு கூட நேரமும் அதற்க்கான சுழலும் கிடைத்திருக்கவே மாட்டாது என்பது யாராலும் மறுக்கவே முடியாத விடயம். சாதிக்க வேண்டியது எல்லாம் சாதித்துவிட்டு சாதனைப்பட்டியலை நிரப்பிவிட்டு அமைதியாகிய கோடி POP இசையின் ரசிகர்களின் KING!!! இசை மேல் நாட்டு இசை எனக்கு தெரிந்தது மைக்கல் ஜாக்சன் மட்டும்தான்!!!


மேலும் தகவல்களை பெற இங்கே CLICK செய்யவும்..!!!
நன்றி:-இணையம்..!!!


MJ இருந்தாலும் புகழ் MJ இறந்தாலும் புகழ் MJ என்றாலே புகழ்தான் போல!!! 

Post Comment

2 comments:

 1. எனது கடவுள்களில் ஒருவரான மைக்கலைப்பற்றிய கணிய தரவுகள் நான் அறிந்தது தான் என்றாலும், அத்தரவுகளூடே உணர்வுகளையும் வடித்திருப்பது ரசிக்க வைத்தது. சில இடங்களில் மனம் கனத்தும் போனது.

  மைக்கேலின் வாழ்வில் தொடர்கதையாக தொடர்ந்த சர்ச்சைகளில் அனேகமானவை அவராகவே உருவாக்கியது. ( உதாரணம் மாடியிலிருந்து குழந்தையை வீசுவது போல் பாசாங்கு செய்தது, பணத்தை மழையாக்கி குளித்தது என்பன) . அவரது வசீகர குரல் ( ஹஸ்கி என்பதை தமிழில் மொழி பெயர்க்க தெரியவில்லை) காரணமாகவும் , அவரது புகழ் பொறுக்காமலும் தான் அவரை அலி என்று பழி முடித்தது உலகம். அதற்காக ஒரு பெண்ணை வாடகைக்கு அமர்த்தி , அந்த பெண்ணுக்கு புழு பூச்சி உண்டாக்கி தான் ஆண் மகன் என்று மைக்கேல் நிரூபித்தது நீங்கள் குறிப்பிட மறந்த கதை.

  சிறுவர் துஷ்பிரயோக வழகில் தான் மைக்கேல் அதிகம் மனஉழைச்சலுக்கு ஆளானார் என்பது உண்மை தான், ஆனால் அவர் பாலியலுக்காக அல்ல, இயல்பிலேயே குழந்தைகளின் பால் நாட்டம் உள்ளவர் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானோர். அவரது பங்களாவில் குழந்தைகளது பரிசு பொருள் பொதி செய்வதற்கென்றே ஒரு பிரத்தியேக மையம் இருந்ததும், அவரது ஒவ்வொரு அல்பத்திலும் குழந்தைகளை மையப்படுத்தி ஒரு பாடல் வருவது நினைவிருக்கலாம். ஆனாலும் எதிர்மறையாக இருந்தாலும் கூட தனக்கு புகழ் வருகிறதே அல்லது தனது பெயரை உலகு உச்சரித்துக்கொண்டு இருக்கிறதே என்பதற்காக , அந்த சர்ச்சைகளையும் ரசித்தார் மைக்கேல். "இசை + சர்ச்சை = மைக்கேலின் புகழ்' இது தான் மைக்கேலின் சூத்திரம்.

  அருமையான பதிவு, நன்றி இணையம் என்று போட்டிருக்கிறதே , நெட்டில் சுட்டதோ?

  ReplyDelete
  Replies
  1. இல்லை சுட்டது இல்லை...அப்படி சுட்டு பதிப்பு எழுதுவதில் என்ன இருக்கு...எல்லாம் ஒன்று திரட்டி..மொத்தமாக வாசித்து..எனக்கு தெரிந்த அளவை வைத்துக்கொண்டு..கொஞ்சம் வித்தியாசமாக எழுதினேன்..அப்படி சுட்டால் பதிப்பு தொடங்குவதற்க்கு முன்னம் இன்னாரிடம் இருந்து சுட்டது என்று போட்டு விடுவேன்...நன்றி உங்கள் வருகைக்கும் உங்கள் COMMENTக்கும் நன்றி...:)

   Delete