Monday, August 6, 2012

சூர்யா : போதும் நிறுத்திக்கொள்ளுங்க PLEASE..!!!

வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது :- இந்த பதிப்பு முற்றும் முழுதாக என் கருத்துக்களை கொண்டு எழுதப்படவில்லை. சக பதிவர் "சஜிரதன்" அவர்களின் கருத்துக்களை தழுவியதாக எழுதப்பட்டது என்பதை நீங்கள் பதிப்பை வாசிக்க தொடங்கு முன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

சூர்யாவின் சினி அத்தியாயமே மற்ற நடிகர்கள் குறிப்பாக அஜித் வேண்டாம் என்று கைவிட்ட படங்களால்தான் நிரப்பப்பட்டதென்பது எல்லோருக்குமே தெரிந்த விடயம்... அதை குறை சொல்லவும் முடியாது. வேண்டாம் என்று கைவிட்ட படங்களை எடுத்து நடிப்பது தப்பில்லை.. ஆனால், ஒரு நடிகனுக்கு புக் ஆகி அவரும் நடிக்க சம்மதிக்கும்போது இடையில புகுந்து ஆட்டையைப்போடுறதென்பது மகாகொடுமையான விடயம்....... இந்த விடயத்தில் சூர்யா இருக்கிறாரே ரெம்ப கில்லாடி..... அதுக்குமுதல் சின்னதா ஒரு அறிமுகத்தை சூர்யாவுக்கு வழங்கி விட்டு விடயத்துக்கு போவோம்.....
1997 இல் நேருக்குநேர் என்ற படத்தின்மூலம் அறிமுகமானவர்தான் இந்த சூர்யா... அதுசரி, எப்படி அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்று தெரியுமா?? இந்த படத்தில் ஆரம்பத்தில் வசந்த் இயக்கத்தில் அஜித்-விஜய் ஆகிய இருவரும்தான் இணைந்து நடிக்கவிருந்தார்கள்.. அதனால் கதையமைப்பு கிட்டத்தட்ட சரிசமனாகவே உருவாக்கப்பட்டது.அஜித்துக்கு சிம்ரனும்,விஜய்க்கு கௌசல்யாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.. இதில் இருநடிகைக்களுமே அந்த காலத்தில் தமிழுக்கு பெரிதாக பிரபல்யம் இல்லாவிடினும் சிம்ரன் ஓரளவுக்கு கௌசல்யாவைவிட பிரபல்யமானவர் என்றே சொல்லணும்... சரி, இவ்வாறே திட்டமிட்டு தொடங்கப்பட்ட படப்பிடிப்பில் ஒருவாரத்துக்கு பிறகு அஜித் அதிலிருந்து விலக, அந்த இடத்தை நிரப்பியவரே சரவணன் என்ற இப்போதைய சூர்யா....


அப்பொழுது பூவே உனக்காக, லவ்டுடே என்ற இரு ஹிட்களை கொடுத்த விஜய் தனக்கு ஈகுவலா சூர்யா நடிப்பதை மறுத்திருக்கலாம்.. ஆனால், நண்பராச்சே! என்பதுக்காக மறுக்கவில்லை.... அது மட்டுமல்ல, இந்த பட பாடல்கள் வெளியாகியபோது சூர்யாவுக்கு உருவான "அவள் வருவாளா", "மனம் விரும்புதே" என்ற இரண்டு பாடல்களும் பயங்கர ஹிட் ஆகின.. ஏன் இப்பவும் இந்த இரண்டு பாடல்களும் நிறையப்பேரின் உதடுகள் உச்சரித்துக்கொண்டுதான் இருக்கின்றது.. மறுபக்கம் விஜய்க்குரிய பாடல்கள் பெரிதாக ஹிட் ஆகவில்லை... இதனால் இன்றும் சிலர் நேருக்குநேர் சூர்யாவின் படம்போலவே கருதுவார்கள்.. அதற்க்குப்பிறகு 2001 இல் மீண்டும் விஜய்-சூர்யா கூட்டணி "பிரண்ட்ஸ்" படத்தில் ஒன்று சேர்ந்தது... அப்பொழுதுகூட சினிமாவில் சூர்யா பெரிதாக ஒன்றுமே சாதிக்கவில்லை.. இருந்தாலும் கிட்டத்தட்ட அரைக்கரைவாசி முக்கியத்துவம் சூர்யாவுக்கு வழங்கப்பட்டது... உண்மையை சொல்லப்போனால் சூர்யாவை சினிவாழ்வுக்கு அத்திவாரமிட்டதே விஜய்தான்.. (உண்மைகளை சொல்லித்தான் ஆகவேண்டும் உண்மை சில சமையங்களில் கசக்கத்தான் செய்யும்..)


ஆனால் இப்ப சூர்யாவுக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை விஜயை பரம எதிரியாயே பார்க்கிறார், விஜயின் ஒவ்வொரு நகர்வுக்கும் செக் வைக்கிறார்... இன்று பெரும்பாலான விஜய் ரசிகர்கள் அஜித்தை காட்டினும் சூர்யாவின்மேல் எரிச்சலாய் இருப்பது சமூகவலைத்தளங்களில் பார்க்கக்கூடியதாயுள்ளது... இது சிங்கம் படத்திலிருந்தே ஆரம்பமானாலும் விஜய் ஒப்பந்தமான நண்பன் படத்தை ஆட்டையைப்போட வெளிக்கிட்டதிலிருந்து பூதாகாரமாக வெடிக்க தொடங்கியது... அந்த சமயம் சங்கருக்கு விஜயை வைத்து எடுக்கத்தான் விருப்பம் இருந்தது, ஆனால் தயாரிப்பு தரப்புக்கு சூர்யாவை வைத்து எடுக்கவே விருப்பம் இருந்தது.. ஆனால், சூர்யா கேட்ட மலையளவு சம்பளத்தால் நிலைகுலைந்த படத்தரப்பு சூர்யாவை நிரந்தரமாகவே தூக்கி எறிந்தது.. நண்பன் படத்தில் விஜயை தூக்க முற்பட்டத்தில் அரசியல் காரணங்களும் இருந்தாதகவும் அப்போது மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டது.. எது எப்பிடியோ அந்த பிரச்சனை ஓவர்...


அதுக்கப்புறம் விஜய் டீ.வியால் நடத்தப்படும் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சிக்கும் முதலில் ஒப்பந்தமானவர் விஜய்தான்.. பிறகு உள்ளுக்குள் என்ன நடந்ததோ தெரியவில்லை அந்த நிகழ்ச்சி தொகுப்பு உரிமை சூர்யாவுக்கு கைமாறிட்டு.... உண்மையில் உள்ளுக்குள் என்னதான் நடந்துதோ..!! என்ன நடந்தது என்பதை ஆராய்வதை விட "நீங்களும் வெல்லாலாம் ஒரு கோடி" நிகழ்ச்சியில் என்ன என்ன நடக்கின்றது. எப்படி எல்லாம் எமாற்றுகின்றார்கள் என்று கொஞ்சம் பார்ப்போம்...

"நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சியின் தொடக்க நாளில் இருந்து இன்று வரை :- முதல் நாள் ஷூட்டிங் சுதா ரகுநாதன் பாட்டு பாட, நடிகை ருக்மணி டான்ஸ் ஆட, மங்கள கரமாக (ஓஓ..இதைதான் ஆட்டமும் பாட்டமுமாக ஆரம்பிக்கின்றது என்று சொல்வார்கள் போல..!!!) தொடங்கினார்கள். சூர்யா வந்ததும் ஹாட் சீட், "மணி அண்ணே" (நேர காப்பாளர்), "கம்பியூட்டர்ஜி" போன்றோரை அறிமுக படுத்தினார். இது எல்லாம் ஒரு அறிமுகமா?? சொல்லியதையே திரும்ப திரும்ப சொல்லுவார்.

நிகழ்ச்சிக்கான செட், இடை வேளைக்கு செல்லும் போது வரும் மியூசிக், விதிகள் , கோட், "உங்களை நேரில் பார்த்ததே போதும்" என்று கலந்து கொள்வோர் சொல்லும் வார்த்தைகள் என அப்படியே கோடீஸ்வரனை உரித்து வைத்துள்ளது நிகழ்ச்சி. எது எப்படியோ "கோடீஸ்வரன்" நிகழ்ச்சியை அப்படியே விஜய் டி.வியில் செய்வது என்று முடிவு செய்த பிறகு COPY அடித்தால் என்ன?? சொந்தமாக செய்தால் என்ன?? கடைசியில் COPY பண்ணியது என்றுதானே பேர் வரப்போகின்றது!!! (ஆனால் இவ்வாறு சொல்லுக்கு சொல்லு "கோடீஸ்வரன்" நிகழ்ச்சியை COPY பண்ண வேண்டுமா??)


முதல் வாரம் கலந்து கொண்டோரில் பல வகை மனிதர்களும் இருந்தனர். குறிப்பாக சுனாமியை நேரில் பார்த்த பாதிக்க பட்ட ஒருவர்,  கிராமத்திலிருந்து வரும் பெண், 13 டிகிரி வாங்கிய நபர் (இவரால் பல முயற்சியிலும் ஹாட் சீட்டுக்கு வர முடியலை), சாப்ட்வேர் இஞ்சினியர் பெண், IAS aspirant ,  இரு குழந்தைகளுக்கு தாயான, சற்று வயதான பெண்  (இவருக்கு சூர்யா "வாரணம் ஆயிரம் ஸ்டைலில் " I love you "சொல்லணுமாம் அப்ப திருமணம் செய்த கணவன் என்ன சொல்லுறது???) இப்படி கலவையான மக்களாய் பார்த்து எடுத்திருக்காங்க. இது எல்லாம் ஒரு விளம்பரம்தான். கட்சிவரைக்கும் சூர்யாவும் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களும் மக்களை சுரண்டுவது என்றே முடிவு செய்து விட்டார்கள்?? (ரொம்ப குஷ்டம் அப்பா..சீ சீ கஷ்டம் அப்பா!!!)

இவர்களில் ஒவ்வொருவராய் ஹாட் சீட் வந்து அவுட் ஆக, மீண்டும் "Fastest Finger " ஆடுகிறார்கள். நான்கு நாளில் ஆறு பேருக்கு வாய்ப்பு வர, மீகுதியாக இருக்கின்ற நான்கு பேருக்கும் 'வீட்டுக்கு போற வழி இதுதான் என்று சொல்லி' அனுப்பி விடுவார்கள். இனி அடுத்த வாரம் புதிதாய் வேறு பத்து பேர் வருவார்கள். எனக்கு இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது "கோவை பிரதர்ஸ்" படத்தில் வடிவேலுவும் சத்தியராஜ்யும் கிரிகெட் விளையாட ஆட்கள் சேர்கின்ற காட்சிதான் நியாபகத்துக்கு வரும். நல்லா கூட்டுராங்கையா கூட்டம்..!!

தொடக்கத்தில் அனைவரையும் சூர்யா அறிமுகப்படுத்தும் போது அனைவரையும் பற்றிய குறிப்பையும் பார்க்காமல் பேசுகிறார். "எப்படி இப்படி எல்லாம் நியாபகமாக கதைக்கின்றார்?" என்று நீங்கள் வியக்கின்றீர்களா?? இது அவ்வளோ பெரிய வேலை இல்லை பார்த்து வாசிக்க தெரிந்தால் இந்த வேலையை சுலபமாக செய்யலாம். அநேகமாய் எதிரில் ஸ்கிரீனில் அவர் பேச வேண்டியது ஓடும் அதை பார்த்து தான் வாசிக்கின்றார். ஏமாறுபவர்கள் இருக்கும் மட்டும் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். தில்லு முள்ளு கொஞ்சம் சொல்லுறேன் கேளுங்க!! ஹாட் சீட்டில் கேள்வி ஆரம்பிக்கும் போது "நல்ல ஆரம்பம் ஆக இருக்கட்டும்" என சூர்யா சொல்வார். அதை கூட பார்த்துதான் சொல்வார் என்றால் நம்புவீர்களா?? அவர் சொல்லுவதற்க்கு முன் அவர் மறந்தாலும் என்று நினைவு படுத்துவதற்க்காக முன்னுக்கு இருக்கும் கம்பியூட்டரில் "நல்ல ஆரம்பம்" என விளம்பரம் ஒளிருகிறது. இப்படி மிஸ் பண்ணிடாமல் சரியாக சொல்ல அவருக்கு நினைவூட்டல் கூட கம்பியூட்டர் திரை உதவி செய்கின்றது.

முதலில் கேட்கும் கேள்விகள் மிக எளிதாய் உள்ளது. உதாரணமாக எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்?? என்று கேட்கும் கேள்விகளாக அவை அமைந்திருக்கும். ஆனால் யோசித்து பார்க்கையில், லட்ச கணக்காக கலந்து கொண்டோரில், இறுதி வரை தேர்வாகி ஹாட் சீட் வரும் நபர் ஓரிரு 
ஆயிரங்களோடு போனால் அவருக்கும் அசிங்கம்; பார்க்கும் நமக்கும் என்னவோ போல் இருக்கும் என்பதால் தான் இந்த "ஏற்பாடு(பம்மாத்து)" என தோன்றுகிறது! இத்தகைய எளிய கேள்விக்கே சிலர் குழம்பி விடுவது ஆச்சரியமாக உள்ளது.

ஒவ்வொரு பிரேக்கிலும் விளம்பரங்கள் மிக அதிகம் தான். பிரேக் வரும் போது ஐந்து நிமிடம் டி.வியை OFF செய்வதே வழக்கமாக்கி விட்டது (இதே நேரம் மற்ற சானல்களில் சீரியலை போட்டு எல்லோரையும் சொல்லுவார்கள்!) ஐந்து நிமிடம் கழித்து வந்தால் சரியா இருக்கு! 


சூர்யா நிச்சயம் இடது கை பழக்கம் உள்ளவர் இல்லை (கை எழுத்து வலக்கையில் தான் போடுகிறார்) ஆனால் பேசும் போது நிறைய இடக்கையை ஆட்டி ஆட்டி பேசுகிறார். இடது கை பழக்கம் உள்ளவர் தான் இப்படி கை ஆட்டி பேசுவார்கள். கஜினியில் பாத்திரத்துக்காக ரெண்டு கையிலும் வேலை செய்யும் பழக்கம் வந்ததால் இப்படி ஆகியிருக்கும் போல இல்லை என்றால் இதுக்கும் எங்கையிருந்தோ COPY பண்ணினதோ தெரியவில்லை!!!
சூர்யா சிரிப்பு மற்றும் அழகு பெண்களை இந்த நிகழ்ச்சி பார்க்க வைக்கின்றதாம்(???). ஆனால் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்த நிகழ்ச்சிக்கு இவர் பொருத்தம் இல்லாதவர் என்றுதான் சொல்லவேண்டும்.

ஒரு போட்டியாளர் வெளியேறியதும், அமிதாப் போலவே வேகமாக நடந்து சென்று நடுவில் நின்று கொண்டு பேசுகிறார் சூர்யா. எல்லாம் அமிதாப்பை பார்த்து செய்யமுடியுமா?? நான் என்ன சொல்ல வாறேன் என்று உங்களுக்கு விளங்குகின்றது தானே??

இந்த நிகழ்ச்சி செய்வதால் என்ன பயன்:- நிகழ்ச்சியை பார்த்து அதில் உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்ல முயற்சிப்பதால் கொஞ்சமாவது அறிவு வளரும். ஏதோ இப்படி கொஞ்சம் பொது அறிவு வளர்ந்தால் சரிதான் !

சூர்யா அகரம் குறித்து நிகழ்ச்சியில் பேச வில்லை. ஆனால் Participants-ல் சிலர் அகரம் பற்றி குறிப்பிட்டனர். சூர்யா அகரம் குறித்த செய்தி நிறைய பேருக்கு சேர, அவ்வப்போதாவது பேசலாம் என தோன்றுகிறது. 

Facebook-ல் இந்த நிகழ்ச்சியை திட்டி நிறைய பேர் எழுதி கொண்டிருக்கின்றனர். எனக்கு என்னவோ தற்சமயம் பிடிக்கவே செய்கிறது. கூடிய விரைவில் எனக்கும் அலுக்கலாம். முதல் வாரம் ஹாட் சீட்டுக்கு வந்த நான்கு பெண்களில் அந்த அழகான இளம் பெண்ணிடம் மட்டும் சூர்யா சற்று வழியவே செய்தார். அவர் தந்த Flying-KISS ரீப்பீட்டு என சொல்லி மீண்டும்(மீண்டும் ) கேட்டு வாங்கினார். மொத்தம் மூணு தடவை மை லார்ட்! ஜோதிகா நிகழ்ச்சி பார்த்திருந்தா, வீட்டுக்கு வந்ததும் நிச்சயம் சூர்யாவை மொத்தி இருப்பாங்க. யாருக்கு தெரியும் அடி விழுந்ததோ என்னவோ தெரியவில்லை!!! அந்த பெண் ஜோவை விட அழகாகவே இருந்தார். (சூர்யாவுக்காக பெண்கள் வழிகின்றனர் என்ற நிலைமை போய் இப்ப சூர்யா வழிய தொடங்கி விடார். என்ன ஜோ வெறுத்து விட்டதோ??

ஹாட் சீட் வருவோர் பற்றி க்ளிப்பிங் காட்டுகிறார்கள். நிஜ கோடீஸ்வரனிலும் இப்படி க்ளிப்பிங் காட்டினார்களா என்ன? நினைவில்லை. சில க்ளிப்பிங் சற்று நெகிழ்வாக இருந்தது. இப்படி ஹாட் சீட் வருவோர் பற்றி, வெவ்வேறு மனிதர்கள்/அவர்கள் வாழ்க்கை குறித்து நாம் அறிய இது ஒரு வாய்ப்பு தான் ! 

ஆனால் விஜய் டி.வி இதை எதற்கு யூஸ் பண்ணுவார்கள் என தெரியும். அவர்களை ஒரே அழுகாச்சியா காட்டி எல்லாரையும் கர்சீப்பை தேட வைப்பார்கள். அடுத்த வாரம் கூட இத்தகைய அழுகை உள்ளதை இப்பவே கிளிப்பிங்கில் காட்ட ஆரம்பித்து விட்டார்கள். (அழும் போது ஸ்லோ மோஷன் உறுதி! இது விஜய் டிவி-டா! சீன் போட சொல்லியா தர வேண்டும்..?) நிஜ கோடீஸ்வரனில் "லாக் பண்ணிடலாமா?" என்பது மாதிரி இங்கு "பிக்ஸ் பண்ணிடலாமா?" என சூர்யா கேட்க, எல்லோரும் "பிக்ஸ் பண்ணிடுங்க" என்கின்றனர். 

மின்னல் விரல்கள் மூலம், ஹாட் சீட்டுக்கு தேர்வாகி விட்டார்கள் என்று சொன்னதும், எல்லாரையும் இரு கையை உயர்த்தி குதிக்கணும் என சொல்லி கொடுத்திருக்கிறார்கள் என்பது நன்கு தெரிகிறது. தேர்வாகும் ஒவ்வொருவரும் இப்படி செயற்கையாய் கையை உயர்த்தி குதிப்பது பார்க்கும் போதே தெரிகின்றது. கலந்து கொள்ளும் பலர் சூர்யாவிற்கு "சர்ப்ரைஸ் கிப்ட்" என்று சொல்லி தருகிறார்கள். ஹாட் சீட்டுக்கு வரும் எல்லோரும் கிப்ட் தரும் பழக்கும் துவங்கி விடும்! இனியும் சர்ப்ரைஸ் கிப்ட் என்று சொல்லாதீர்கள்! (கடுப்பாக்குறாங்க மை லோட்!!)


கிடைக்கும் பணம் குறித்து சில உண்மைகள்:- நிஜமாவே இவ்வளவு பணம் ஜெயித்தவர்களுக்கு எவ்வளவு பணம் கையில் கிடைக்கும் என தெரியலை. நிச்சயம் TDS(Tax Deducted at source) என சொல்லி ஒரு பகுதி (கிட்டதட்ட 20 %) பிடித்து விடுவார்கள் என்பது உறுதி! மீதமாவது அவர்களுக்கு கிடைத்தால் நன்றாய் இருக்கும்! அதையாவது குடுங்கையா!!! எப்படி சூர்யா செக்கில் கையெழுத்து போடுகிறார்? விஜய் டிவி,  சூர்யாவுக்கு செக்கில் கையெழுத்து போடும் அதிகாரம் தந்திருக்கும் என தோன்றவில்லை. நாம் பார்க்கும் செக் நிச்சயம் கொடுக்கப்படாது. அது டம்மி செக். TDS -ம் பிடித்து விட்டு, சரியான தொகை போட்டு, சரியான கையெழுத்துடன், பின்னர் தருவார்கள் என நினைக்கிறேன்.

சூர்யா ஆங்காங்கு சில நல்ல Quote சொல்கிறார். கடைசியாய் பேசும் போது "ஆரம்பத்தில் வந்த படங்களில் எனக்கு நடிக்க மட்டுமல்ல, ஒழுங்காய் டான்ஸ் ஆட, சண்டை போட, நடக்க கூட தெரியாது. அங்கிருந்து இவ்வளவு தூரம் வளர்ந்து, உங்கள் அன்பை எல்லாம் பெற்று இந்த இடத்துக்கு வந்திருக்கேன் என்றால் அதுக்கு காரணம் உழைப்பு தான். நீங்களும் உழையுங்கள். இது அறிவுரை அல்ல. அனுபவம்" என்றார். இது உண்மை ஆனால் சூர்யாவை தாங்கிப்பிடிக்க தூக்கி வைக்க அவர் அப்பா இருந்தார் ஆனால் யாருமே இல்லாமல் தனி மரமாக வளர்ந்து நிற்பவரும் இருக்கின்றார். அவர் பெயரை சொல்லித்தான் அவர் யார் என்று சொல்ல வேண்டுமா??

சில சில குறைகள் இருந்தாலும், நிகழ்ச்சி இப்போதைக்கு ஓகே. விரைவில் அலுக்க ஆரம்பிக்கலாம்! வார இறுதியில் Viwers-ஐ, தங்கள் கிரியேட்டிவ் நிகழ்ச்சிகளால் தன் வசம் வைத்திருந்த விஜய் இப்போது வார நாட்களிலும் தூள் கிளப்புகின்றது. சன் டி.விக்கு கிலியை கிளப்பி விட்டிருக்கும் என்பது மட்டும் நிச்சயம். இதற்கு போட்டி நிகழ்ச்சி SUN T.Vயில் இருந்து விரைவில் எதிர் பார்க்கலாம்!
அப்புறமாய் தெலுங்கில் மகேஷ்பாபு நடிச்சு வெற்றிகரமாய் ஓடிய "பிஸ்னஸ் மன்" திரைப்பட உரிமையை முந்தியடிச்சுக்கொண்டு சூர்யா தரப்பு வாங்கிவிட்டது, சரி அப்படி வாங்கினாலும் அதை சூர்யாவோ,கார்த்தியோ நடிக்கப்போவதாக தெரியவில்லை.. சூர்யா பொதுவாக தெலுங்கு காரமசாலா பார்முலாவை விரும்பமாட்டார்.. சரி கார்த்தியை பார்த்தால் தற்போது "அலெக்ஸ் பாண்டியன்" இல் நடிக்கிறார்.. இதுமுடிய ராஜேசுடன் "ஆல் இன் அழகுராஜா" வில் நடிக்கவுள்ளார்.. அதன் பிறகு வெங்கட்பிரபுவுடன் "புரியாணி" படத்துடன் இணையவுள்ளார்... அப்படி என்றால் ஏன் "Business man" இன் உரிமையை முந்தியடிச்சுக்கொண்டு வாங்கினார்கள்? விஜய் வாங்கக்கூடாது என்ற காரணத்துக்காகவா?.. ஏனென்றால் பொதுவா மகேஷ்பாபுவின் ஹிட் படங்களை விஜய்தான் தமிழ் ரீமேக் பண்ணி தமிழில் நடிப்பார்... அதை தடுப்பதற்க்காக செய்தார் போல இருக்கின்றது.!!


சூர்யாவின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையை தொடக்கி வைத்தது விஜய் கடைசியில் விஜய்க்கே ஆப்பு அடித்துவிடார். விஜய் கொடுத்த தொடர் பிளாப்க்களும் அந்த காலகட்டத்தில் சூர்யாவுக்கு அமைந்த சூப்பர் ஹிட் படங்களும் தான் அவரின் வாழ்க்கையையே மாற்றிப்போட்டது. சொல்லப்போனால் சூர்யாவின் ரசிகர்களில் அரைவாசி பேர் விஜய்யின் தோல்விகளில் விஜய்யிடம் இருந்து விடுதலை பெற்று வந்த ரசிகர்களாகத்தான் இருக்கின்றார்கள். இப்படி எல்லா விடையத்திலும் உதவி செய்த விஜய்யை இவ்வாறு செய்வது நியாயமா???

இடைப்பட்ட காலத்தில் அஜித் வேண்டாம் என்று சொன்ன படங்களை நடித்து தனது திறமையால் முன்னேறினார். ஆனால் அவருக்கு அனுபவம் போதாது என்றுதான் நினைக்க தோன்றுகின்றது. அண்மையில் ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் "ஐ" படத்தில் தான் நடிப்பதாக கூட கேட்டிருக்கின்றார். இது எல்லாம் நல்லாவா இருக்கின்றது. மூவாயிரம் தடவை மகாபாரதத்தை, இராமாயணத்தை வாசித்த சூர்யாவின் அப்பா சிவகுமார் கூட இது எல்லாவற்றையும் கண்டும் காணாததுபோல நடந்து கொள்வது வருந்தவேண்டிய ஒரு விடயம் ஆகும். அஜித், விஜய் இருவருக்கும் இடையில் ஐக்கியமான போட்டி இருக்கின்றது ஆனால் ஒரு போதும் ஒருவர் படத்தை ஒருவர் தட்டிப்பறிப்பது இல்லை. ரஜினி, கமலுக்கு போட்டி இருந்தது ஆனால் பொறாமை இருந்தது இல்லை. ஆனால் சூர்யா செய்வது விஜய்யை வம்புக்கு இழுப்பதை போல இருக்கின்றது. 

ஒரு சக நடிகனை நடிகனே மதிக்கா விட்டால் எவ்வாறு ரசிகர்கள் மதிப்பார்கள்.?? மிகவும் கஷ்டப்பட்டும் கடின உழைப்பால் முன்னுக்கு வந்தவர் தான் சூர்யா..ஆனால் இப்போது அவர் செய்வதை பார்த்தால் "யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போடுவதைப்போல" இருக்கின்றது. இவற்றை எல்லாம் நிறுத்தி விட்டு முன்னணி நடிகருக்கு இருக்க வேண்டிய சக பண்புகளையும் மரியாதைகளையும் வளர்த்துகொண்டால் நல்லது. இல்லையேல் இது மேலும் தொடருமானால் சூர்யாவின் சினிமா வாழ்க்கை..முற்றுப்பெருவது நிட்சயம்..!!!

வேண்டாம் விட்டுடுங்க..என்று சொன்னால் கேட்கவா போறீங்க.. நடத்துங்க...
நீங்க நடுத்தெருவில நிற்கும்போது.. அதுக்கும் ஒரு பதிப்பு எழுதுவம்.. :P

Post Comment

34 comments:

 1. நீங்களும் வெல்லாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் சூர்யாவின் சில அளப்பரைகள் பொறுக்கமுடியாதது தான், அது குறித்து நானும் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். முடிந்தால் வந்து பார்க்கவும்.

  ஆனால் சூர்யாவின் சினிமா அத்திவாரத்துக்கு விஜய் தான் அஸ்திவாரமிட்டார் என்ற கருத்து முழுவதுமாக ஒத்துப்போக முடியாதது. அது போக பிரண்ஸ் படம் வெளியான போது சூர்யாவுக்கென்றே ஒரு ரசிகர் படை இருந்தது, குறிப்பாக பெண்கள்.

  அத்தோடு நீங்களும் வெல்லாம் ஒரு கோடி நிகழ்ச்சி என்னை பொறுத்தவரை மகா மொக்கை தான், ஆனால் எனக்கு தெரிந்து எனது பல்கலை கழக தோழிகள் அனைவரும் அதற்கு அடிமைகளாக இருந்தனர். ஆக , இந்த நிகழ்ச்சியை பெண்கள் விரும்பி பார்க்கிறார்கள் என்ற வாதத்திலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது.

  அத்தோடு நீங்கள் சொல்லிய நிறைய ஆதாரங்கள் சூர்யாவின் மேல் பழி முடித்துவிட வேண்டும் என்பதில் குறியாய் இருப்பது போல ஒரு உண்ர்வை தருகின்றது. ( நீங்கள் சொல்லிய சில தரவுகள் சரி என்ற போதும்), உதாரணமாக அந்த தெலுங்கு பட உரிமை விவகாரம். நண்பரே இது சினிமா! ஒரு உயர்ரக வியாபாரம், முந்திக்கொள்பவன் ஜெயித்துவிடுகிறான். அதை குறை சொல்லிவிட முடியாது. தல விஜய் ரசிகரோ?

  அடுத்து விஜய் டி.வி யின் நிகழ்ச்சி பற்றியது, நான் ஏற்கனவே சொல்லியது போல் எனக்கு இந்த நிகழ்ச்சியை பிடிக்கா விட்டாலும் சூர்யாவின் தொகுப்பாக்க திறன் செம்மையானது. அதனை தவிர்ந்த ஏனைய கோர்ப்புக்கள், ' இசை, கிஃப்ட், செட்டு, இயக்கம்" என்பன சூர்யாவின் கைகளில் இல்லை, அதனை தயாரிப்பு மற்றும் இயக்குனர் தரப்பே கவனித்து கொள்கிறது. நான் அறிய இந்த நிகழ்ச்சிக்கு சூர்யாவுக்கு முன்னர் அணுகப்பட்டவர் விஜய் அல்ல விக்ரம். சின்னத்திரை பால் தனக்கு ஈர்ப்பு இல்லாததால் அந்த வாய்ப்பை மறுத்து விட்டார் விக்ரம். சின்னத்திரையில் அடிக்கடி வந்ததால் சூர்யாவின் முகம் மக்களுக்கு பழகிப்போய் , தியேட்டரில் அவரது படங்களை பார்க்கும் ஆர்வம் மக்களிடத்தில் குறைய கூடிய வாய்ப்புக்கள் அதிகம் என வேண்டுமானால் சொல்லலாம்.

  ///நிகழ்ச்சியை பார்த்து அதில் உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்ல முயற்சிப்பதால் கொஞ்சமாவது அறிவு வளரும்.///
  அந்த நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விகளை பார்த்தால் அறிவை வளர்ப்பது போலவா இருக்கிறது. உண்மையை சொல்லுங்கள்??? எதற்கும் எனது பதிவை பார்த்துவிடுங்கள்.http://kishoker.blogspot.com/2012/04/blog-post_13.html நான் ஒன்றும் சூர்யா ரசிகனும் கிடையாது, வேண்டுமானால் இந்த பதிவையும் பார்த்து விடுங்கள்!http://kishoker.blogspot.com/2012/08/blog-post.html

  அருமையான பதிவு , நல்ல அலசல், சில இடங்களில் நீங்கள் விஜயின் தீவிர ரசிகரோ என எண்ண்த்தோன்றுகிறது தான் ஒரு உறுத்தல். ஆனாலும் சிறந்த எழுத்துநடை, தொடருங்கள், அடிக்கடி சந்திக்கலாம், நீங்கள் அனுமதித்தால்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ஆரம்ப கேள்விகள் சொதப்பலாக இருந்தாலும்..போகப்போக... கொஞ்சம் நல்ல கேள்விகள் எல்லாம் இருக்கின்றது... சினிமா ஒரு வியாபாரம்தான் ஒத்துக்கொல்கின்ரேன்...ஆனால் வியாபாரத்திலும் ஒரு நேர்மை இருக்க வேண்டும்..சினிமாவில் ஆரம்பம் தந்தவனையே சீண்டிப்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது...???????? பிரெண்ட்ஸ் நடிக்கும் போது சூர்யாவுக்கு ஒரு ரசிகர் பட்டாளம் இருந்திருக்கலாம்... அப்ப நீருக்கு நேர் நடிக்கும் போது????

   Delete
  2. சூர்யா அந்த படத்தை வாங்கியதில் என்ன நேர்மை இல்லா தனம் தெரிகிறது? விஜய் ஏற்கனவே வாங்கிய படத்தையா சூர்யா அபகரித்தார்? இல்லையே!

   என்னப்பா நீங்கள் தானே சொன்னீர்கள் ஃபிரண்ஸ் படத்தின் போது சூர்யா அதுவுமே சாதிக்கவில்லை என்று , இப்போ ஜகா வாங்குறீங்களே!

   Delete
  3. அப்போ..இவ்வளோ காலமும் வாங்காமல் இப்ப மட்டும் வாங்கியதில் என்ன நியாயம்??? எது எப்படியோ விஜய்க்கு சூர்யா தெரிந்தே ஆப்பு அடிப்பது...உண்மையா இல்லை????

   Delete
  4. Ennaka comedy panringa Kishokar.. Friends padam nadikkum pothu Surya vukkunnu fans specially ladies fan irunthankala..?!

   Delete
  5. அன்பு அப்ப நீங்க என்ன சொல்லவாறீங்க??? அந்த காலகட்டத்தில் அவருக்கு ரசிகர்களே இல்லையா??? என்ன உண்மை...நடந்தது என்ன???

   Delete
  6. திரு அன்பு, சூர்யாவுக்கு நான் அறியவே என் கண் முன்னரே நிறைய ரசிகைகள் இருந்தார்கள், அந்த அனுபவத்தில் தான் சொன்னேன், இங்கே ஈழத்தில் அவளோபேர் இருக்கும் போது தமிழ் நாட்டில் எவளவு பேர் இருந்திருப்பார்கள்? # பின்னே ஒரு நடிகருக்கு இவளவு ரசிகர்கல் இருகிறார்கள் என தொகைவாரி கணக்கெடுப்பு ஏதும் நடாத்தப்படுகிறதா என்ன?

   சரி நான் காமடி பண்ணுவதாகவே இருந்தால், என் தயவில் சிரித்துவிட்டு போங்கள், உங்களை சிரிக்கவைத்த புண்ணியமாவது என்னை வந்து சேரட்டும்!

   Delete
  7. @கோசுபா யோவ்! அவருக்கு இப்போ தான் பிஸ்னெஸ் டக்டிக்ஸ் புரிஞ்சிருக்கு வாங்குறாரு, விட்டா சூர்யா ஏன் விஜய் சாமான் வாங்கின மளிகைக் கடையில் புளி வாங்கினார்? சூர்யா ஏன் விஜய் போன ரோட்டில் கார் ஓட்டினார்ன்னு கேள்வி கேப்ப போல! இதெல்லாம் ரொம்ப அநியாயம்பா!

   Delete
  8. அண்ணைக்கு ஒரே குசும்புதான்...பழைய மல்லிகைக்கடை நியாபகம் எல்லாம் வருகின்றது போல..:)

   Delete
 2. தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

  வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!

  தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....

  ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....

  அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....


  மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
  95666 61214/95666 61215
  9894124021

  ReplyDelete
 3. pathetic , ungal exhuthil thani manitha thuvesham than therigirathu.
  venda pondati kaal patta kutram kai patta kutram :-)

  ReplyDelete
 4. Top class write up.... Will comment u in detail in da evening

  ReplyDelete
  Replies
  1. எனக்கு மொக்கை போடாமல்...நல்ல கமெண்ட் ஆக அடித்தால் சரி...:)

   Delete
 5. Top class write up.... Will comment u in detail in da evening

  ReplyDelete
 6. Yuvaranikku unambiguous matti thane vijay Annan pad am hit koodutharu.....appa vijay Annan yuvaranikku ethaavuthu seithu irukkara....

  ReplyDelete
  Replies
  1. நீங்க அடித்த கமெண்ட் தமிழா???இல்லை வேறு ஏதும் மொழியா??? சத்தியமாக விளங்கவில்லை...பாஸ்...anyhow உங்கள் கமெண்ட்க்கு நன்றி...:)

   Delete
 7. உனக்கேன் இந்த வேண்டாத வேலை? உன் பதிவுகள் எல்லாம் அதிகப்பிரசங்கித்தனமாகவே உள்ளது. நீ நடிகர்களைப்பற்றி ஏதோ பக்கத்தில இருந்து பார்த்தவன் போல எழுதி சும்மா எதுக்கு எதிர்ப்ப ஈழத்தமிழன் மேல சம்பாதிக்கிற? பதிவு போடணுன்னா யாழ்பாணிதானே நீ யாழ்பாணத்தபத்தி மட்டும் எழுது. எப்ப பாத்தாலும் அடுத்தவன் பிரச்சனேக்க மூக்க நுழைக்கிறது நொட்ட நோடாலம் சொல்லிக்கொண்டிருக்கிற அதே பழக்கத்த இண்டர்நெட்டிலயும் தொடர்றீங்களா?

  ReplyDelete
  Replies
  1. உங்களைப்போன்ற ஒரு சில முத்துக்களை தான் நான் தேடிக்கொண்டு இருக்கின்றேன்...என்ன ஒரு முத்தானா கருத்துக்கள்..அது என்ன ஈழத்ததமிழர்கள் மேல் நான் எதிர்ப்பை சம்பாதிக்கின்ரேனா?? ஏன் யாழ்பாணியாக இருந்தால் யாழ்பாணத்தை பற்றி மட்டுமா எழுதணும்...நீங்கள் முதலில் பெயரை போட்டு COMMENT அடிக்க பழகுங்கோபார்ப்பம்... தம்பி உங்களுக்கு அனுபவம் போதாது என்று நினைக்கின்றேன்.. சினிமா பற்றி கதைக்கும் போது ஈழத்தமிழர்களை பற்றி ஏன் இழுக்கிண்றீர்கள்?? உங்களுக்கு அம்பிட்டு குசும்பு...போங்கையா...போங்க...

   Delete
 8. நல்ல அலசல்... சூர்யாவின் தொடக்க காலகட்டத்தை அசை போட வைத்த பதிவு

  ReplyDelete
 9. குப்பை அலசல். இதில் எங்கயும் சூர்யா மேல் குறை காண இடமில்லை. வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதும் அல்லது உருவாக்கி கொள்வதும் ஒருவரின் திறமை. அதை தவறென்று சொல்வது சிறுபிள்ளைத்தனமானது.

  ReplyDelete
  Replies
  1. ///வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதும் அல்லது உருவாக்கி கொள்வதும் ஒருவரின் திறமை/// இது நியாயமா??? அப்ப எப்டியும் சினிமா செய்யலாமா??? யாரையும் யாரும் எப்டியும் ஏமாற்றலாமா? எனது கருத்துக்கள் எல்லாவற்றையும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று இல்லை...உங்களுக்கு உடன் பாடு இல்லை என்றால்..நான் என்ன செய்ய முடியும்??? என்னை பொருத்தவரை சூர்யா நல்ல நடிகர்..கஷ்டத்துக்கு மத்தியில் நடிப்பை பலகிக்கொண்டவர்...ஆனால் அவர் இப்படி நடந்துகொள்வது சரியல்ல...அவ்வளவும் தான்..:)

   Delete
 10. I think you have some personal problem with Sooriya.Because of your crooked
  mind you are trying to bring wedge between Vijay and Sooriya.
  M.Paraneetharan.

  ReplyDelete
  Replies
  1. அப்புராசா..ரெண்டு போரையும் கோத்துவிட்டுட்டு கோக் குடிக்கின்ற ஆள் இல்லை..நான்!!! அப்ப சூர்யா அப்படி இல்லை என்று சொள்ளவாரீங்களா?? ஏனையா?? ஏன்?? இப்ப புரியாது போகப்போக தானாக தெரியவரும்..சூர்யா..கார்த்தியின் காய் நகர்த்தல்கள்..கள்ளனை நம்பினாலும்....?????????????????

   Delete
  2. Eppidi vijayum avanga appavum TMK sonthamana sun tv ya vaichchu ajithukku aappu adichcha maathiriya

   Delete
  3. ponka thampi ponka...naanka kathaikka thodankinaal neenka thaanka maadenka muthalila valarnthuddu vaanka ponka...:P

   Delete
 11. நீங்கள் சொன்ன விஷயத்தை கிளற மனமில்லை. இருந்தாலும் எனக்கு தெரிந்து,சூர்யா அடிக்கடி ஒரு மாதிரி விஜயை வம்பிழுப்பார்.அதாவது விஜய் மேல் சொல்லப்படும் குறைகள் என்ன? எல்லா படமும் ஒரே மாதிரி இருக்கும்,போன படம் போலவே அடுத்த படமும் இருக்கும் என்பது.சூர்யாவிடம் அவர் படங்கள் பற்றி கேட்ட்கும்போது அவர் சொல்லும் விஷயம் "நான் என் போன படத்திற்கும் இந்த படத்திற்கும் வித்யாசம் காண்பிக்க முயற்சிப்பேன்.ஒரே மாதிரி இருக்க கூடாது எனக்கு ,என் படம் பார்பவர்கள் இந்த வித்தியாசத்தை உணர வேண்டும் " இது சூர்யா கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து எல்லா பேட்டிகளிலும் சொல்லிவரும் மேட்டர்.
  என்னது பிரண்ட்ஸ் படம் வரும் போதே சூர்யாவுக்கு பெண் ரசிகைகளா? செம காமெடி.காக்க காக்க படம் தான் அவருக்கு முதல் ரசிகரையே பெற்று தந்திருக்கும்.அதுவரை அவரிடம் கவனிக்கும்படி ஒன்றும் இல்லை.இது அவரே ஒத்துகொள்ளும் விஷயம்.
  தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. யார் யார்..எப்படி என்று தெரியும்??? நான் இருவரில் யார் நடிகர் என்று விவாதிக்க வரவில்லை...சூர்யா மிகவும் நல்ல நடிகர்... ஆனால் அவர் நல்ல நடிகருக்கான பண்புகளை இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை கருத்தாக வைத்தே இந்த பதிப்பை எழுதினே...!!! சூர்யாவுக்கும் ரசிகர்கள் இருக்கின்றார்கள்...அதுகும் விஜய்க்கு சரி சமமாக உள்ளார்கள்...உங்கள் பின்நூட்டலுக்கு நன்றி....

   Delete
 12. epi irunthalum power star mathiri varathu. avar than adutha super star

  ReplyDelete
  Replies
  1. neenka enna sollavaareenka enpathai thelivaaka sonnaal naan reply panna vasathiyaaka irukkum....aww awww

   Delete
 13. உங்கள் bloggil உள்ள கருத்துக்கள் மிகவும் நன்றாக உள்ளது.. மேலும் தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 14. உங்கள் bloggil உள்ள கருத்துக்கள் மிகவும் நன்றாக உள்ளது.. மேலும் தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி...உங்களது கருத்துக்களுக்கு...

   Delete