Tuesday, September 4, 2012

18 வயசு... பயத்தினில் பாதி பயங்கரம்..!!!

அண்மையில் வெளியாகி பலருக்கும் விளங்காமல் ஓடுதா.. இல்லையா என்ற நிலையில் இருக்கும் ஒரு படத்தினை பற்றியும் அந்த படத்தின் நாயகனுக்கு இருக்கும் வினோத நோயினைப்பற்றியும் தான் பார்க்கப்போகின்றோம்.. இதனை போல முன்பும் நோய்களுடன் படத்தினை ஒப்பிட்டு நோக்கிய நியாபகம் இருக்கின்றது.. அது வேறு எதுவும் இல்லை தனுஷ் நடித்த "3" படமும் இருமுனையப் பிறழ்வு நோயும் சம்பந்தமான பதிவுதான்.. தனுஷும் இருமுனையப் பிறழ்வும்(Bipolar disorder)..!!! "18 வயசு" படத்தில் ஜானிக்கு ஒரு விதமான மன நோய் இருப்பதாகவும் அதனால் ஜானி படும் அவஸ்தையையும் மிகவும் தத்துரூபமாக சொல்லியிருக்கும் படம்தான் "18 வயசு". அந்த படம் சொல்ல வந்த விடையத்தை கொஞ்சம் தெளிவு படுத்திப்பார்ப்போம்.!!! 
ஒரு சாராருக்கு இந்த நோயை பற்றி சொல்லும் போது புரிந்துகொள்ள முடியும்; அவ்வாறு புரிந்துகொள்ள முடியாதவர்கள் இந்த பதிப்பின் நடுப்பகுதியில் இந்த நோயை "18 வயசு" திரைப்படத்துடன் ஒப்பிட்டு தெளிவுபடுத்த முயற்சி செய்துள்ளேன் அதனை வாசிக்கவும். இந்த படத்தினை அநேகமானவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள் என்று தெரியும் இருந்தும் கால தாமதாமாக என்றாலும் இந்த பதிப்பினை எழுதியே தீர வேண்டும் என்று எழுதுகின்றேன்..!!!


முதலில் நோயை பற்றி கொஞ்சம் பார்ப்போம் :- மருத்துவ ரீதியாக தம்மை மிருகமாக சிந்திக்கும் மனக்கோளாறே(Clinical lycanthropy) இந்த நோயாகும். பாதிக்கப்பட்ட நபர் "உருமாறும் ஒரு மாயை" என்று ஒரு அரிய உளவியல் நோய்க்குள் வரையறுக்கப்படுகின்றார் அல்லது ஒரு மனித விலங்கு ஆகும். இது தம்மை மிருகமாக சிந்திக்கும் மனக்கோளாறு புதிரான நிலையில் இணைக்கப்பட்ட ஒரு சூப்பர் நேச்சுரல் துன்பத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பார்கள். இதில் பாதிக்கப்பட்டவரின் உடல் ஓநாய்யின் மாற்றத்தை வடிவமைக்கும் படியாக அமைந்திருக்கும்.


அறிகுறிகள் :- பாதிக்கப்பட்ட தனிநபர்கள் அவர்கள் ஒரு விலங்கு போன்ற செயல்பாட்டில் அல்லது ஏற்கனவே தாங்கள் ஒரு விலங்காக மாற்றப்பட்டுவிட்டோம் என்று ஒரு மருட்சி நம்பிக்கையுடன் செயற்படுவார்கள். அது மாற்றம் மட்டுமே மனதில் மற்றும் பாதிக்கப்பட்ட நபர் நடத்தை நடக்க தோன்றுகிற ஒரு மனநோய் (பொதுவாக மருட்சி மற்றும் மன பிரமைகள் அடங்கும்..) உண்மை இல்லை என்று தெரிந்துகொன்டாலும் தங்களால் மீள முடியாத நிலைமையில் இருப்பார்கள். ஒரு நோயாளி உள தெளிவு அல்லது அவர் சில நேரங்களில் ஒரு விலங்கு போல தெரிவது ஒரு நோயாளி, அழுது புலம்புகிறார், அல்லது ஊர்ந்து செல்கின்றார் (எடுத்துக்காட்டாக - விலங்கு போலவே வகையில் செயல்படும்). இது தம்மை மிருகமாக சிந்திக்கும் மனக்கோளாறு மனிதனில் இருந்து ஓநாய் மாற்றம். உயிரினங்கள் பல்வேறு உருவ அனுபவம் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழமைக்கு மாறாக வித்தியாசமான ஒரு ஒலியை கேட்டவுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிருக குணம் அதாவது தங்களை அந்த சந்தர்பத்தில் காணும் விலங்கினைப்போல சித்தரித்துகொண்டு அந்த விலங்கின் செயற்பாட்டினைப்போலவே இவர்களும் நடந்துகொள்வார்கள். அடிக்கடி கூக் குரல் எழுப்புவார்கள்.


முன்மொழியப்பட்ட வழிமுறைகள் :- மருத்துவ ரீதியாக தம்மை மிருகமாக சிந்திக்கும் மனக்கோளாறு (அரிதான நிலை) ஆகும் மற்றும் பெரும்பாலும் இத்தகைய மனச்சிதைவு, இருமுனை சீர்கேடு அல்லது மருத்துவ மன தளர்ச்சி மற்றொரு நிலை ஏற்படும் மன அத்தியாயத்தில் ஒரு தனிப்போக்கு வெளிப்பாடு கருதப்படுகிறது. எனினும், சில நரம்பியல் மற்றும் கலாச்சார தாக்கங்கள் நிலையில் வரையறுக்கிறது. ஒரு முக்கியமான காரணி மூளையின் பகுதிகளில் வேறுபாடுகள் அல்லது மாற்றங்கள் இருக்கலாம். ஒரு நரம்புப்படவியல் ஆய்வு மருத்துவ தம்மை மிருகமாக சிந்திக்கும் மனக்கோளாறு சிகிச்சை இரண்டு பேர் மக்கள் தங்கள் உடல்களை வடிவம் மாறும். அவர்கள் அந்த உணர்வுகளை உண்மையாக அறிந்து இருக்கலாம். அதாவது அவர்களுக்கு அந்த உணர்வுகள் உணரப்பட்டிருக்கும் ஆனால் சாதாரண நிலையில் இருக்கும் ஒருவரால் அதனை உணர முடியாது.

"18 வயசு" படத்தினை நோயுடன் ஒப்பிட்டு நோக்குவோம்..!!!

நடிகர்கள் :- ஜானி, காயத்ரி, ரோகினி, யுவராணி
இயக்கம் :- பண்ணீர் செல்வம்
ஒளிப்பதிவு :- சக்தி
இசை :- சார்லஸ் & கனகரத்னம்

நம்ம ஹீரோ சின்ன வயதினில் இருந்தே அப்பா செல்லம்.. இதுக்கு இயக்குநர் பல வலுவான காரணங்களை முன்வைத்துள்ளார்.. அதாவது அம்மா எப்பவும் அப்பாவுடன் சண்டை போட்டுகொள்வது, அப்பா எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு பொறுமையாக ஹீரோவை பார்த்துக்கொள்வது.. என்று வலுவான காரணங்களை முன் வைத்துள்ளார்.. அது மட்டும் இல்லாமல் ஹீரோவின் அம்மா நடத்தையில் பிழையானவள்.. வேறு ஒருத்தனுடன் தொடர்பு.. இதனை ஹீரோவின் அப்பா தெரிந்துகொண்டவுடன் அவர் அவமானம் தாங்காமல் தூக்கில் தொங்கி விடுகின்றார்.. சின்ன வயதில் தனக்கு பிரியமான, தனக்கு பல சுவாரஸ்யமான கதைகளை சொன்ன தனது அப்பா தனது கண் முன்னே தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதையும், நாக்கு வெளியே தள்ளி முகம் விகாரமாக மாறி இருப்பதையும் தனியே பார்த்து பயந்தபோகின்றார் சின்ன வயசு ஹீரோ.. இந்த நிகழ்வின் போது மழை, இடி என்று பலமாக இருக்கும்.. இந்த சத்தம் கேட்கும் போது எல்லாம் மருத்துவ ரீதியாக தம்மை மிருகமாக சிந்திக்கும் மனக்கோளாறு(Clinical lycanthropy) என்ற நோய் ஹீரோவின் சிந்தனையிலும் ஏற்படத்தொடங்கும்.. இது ஆரம்பத்தில் மந்தமான ஒரு வளர்ச்சியினையே ஏற்படுத்தும் போகப்போக பயங்கரமாக நோயாளியுள் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கிவிடும்.. அந்த இடி சத்தம் கேட்கும் போது ஹீரோவின் மன நிலை மாறும் அந்த கணம் அவன் எந்த விலங்கினை பார்க்கின்றானோ அதனை போலவே மாறி விடுவதாக எண்ணிக்கொள்வான்.. உதாரணமா மழை பெய்யும் போது வௌவால் ஒன்றை கண்டால் அதனை போலவே கத்துதல், தலை கீழாக தொங்குதல் என்று சேட்டைகளை செய்யத்தொடங்கி விடுவார்..


படத்தின் யாருக்கும் தெரியாமல் முக்கியமான கதாப்பாத்திரமாக விளங்குவது  ரோகினியாகும். படத்தில் இவர் ஒரு உளவியல் வைத்தியர் ஆவார். அவரின் கடமையினை ஒழுங்காக செய்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.. சொல்லப்போனால் விளக்கம் இல்லாத நிறைய இடங்களை விளங்கும் படி கூறியிருப்பது ரோகினி என்றே சொல்ல வேண்டும்.. முக்கியமானது இந்த நோய் பாதிக்கப்பட்ட ஒருவரினுள் இருக்கும் போது அவரை மேலும் மேலும் தொந்தரவு செய்தால் அவளும் பலம் அதிகமாகும் என்பது உண்மை.. அதுக்காக நூறு மடங்கு, ஆயிரம் மடங்கு எல்லாம் அதிகமாகிறது.. அவ்வாறு அதிகரிக்கும் போது அவனை யாராலும் கட்டுபடுத்த முடியாது என்பதே உண்மை.. எந்த மிருகமாக மாறுகின்றானோ அதனுடைய பலம் எல்லாவற்றையும் பெற்றுவிடுவது போல ஒரு உணர்வு இருக்கும்.. படத்தின் வரும் ஒரு காட்சி.. ஹீரோ "டிஸ்கவரி" சனலில் புலி வேட்டை ஆடுவதை பார்த்துகொண்டிருப்பான் அந்த சமயம் ஹீரோவின் கள்ள காதலன் T.Vயின் soundஐ குறைக்க சொல்லுவார்.. அங்க தொடங்குது புலியின் வேட்டை.. சும்மா துரத்தி துரத்தி கடித்து தள்ளுவான்.. அருமையான காட்சி.. அந்த நோயின் உச்சக்கட்டம் அதுதான்.. அதனை விட அவனை துரத்தி விட்டு வர ஹீரோவின் அம்மா தனது கள்ள காதலன் எங்கு என்று வினவுவாள்... அப்போது தனது அம்மா என்ற ஒரு நினைப்பு கூட இல்லாமல் கடித்து குதறிவிடுவான்.. பாவம் அவனும் எவ்வளவு காலம் தான் பொறுமையாக இருக்க முடியும்..


படத்தின் முக்கியமான திருப்பம்.. ஹீரோயின் சந்திப்பு.. சத்தியமா எனக்கு இது இவ்வளோ நாளாக புரியல.. கமல் ஒரு படத்தில் சொன்ன நியாபம் இருக்கு "கண்ணுக்க கண்ணு வைத்து பார்ப்பம்" என்று அது என்ன கண்ணுக்க கண்ணு வைத்து பார்ப்பது என்று நினைத்தது உண்டு.. இந்த படம் பார்த்த பின்தான் புரியுது.. ஓ.. இதுதான் கண்ணுக்க கண்ணு வைத்து பார்ப்பதா??? அந்த சந்திப்பில் இருந்து ஹீரோவின் நினைப்பு எல்லாம் ஹீரோயின்(காயத்திரி) தான்.. வழமையும் அதுதானே.. சும்மா சுத்தி விட்ட பம்பரம் போல ஆகின்றார்.. நம்ம ஹீரோ..!! அப்பாவுக்கு அடுத்த படியாக அதிகமாக பிடித்த ஒரு நபராக காயத்திரியை காட்டியிருப்பதும், அவளுக்காக ஹீரோ செய்யும் வினோத வேலைகளும்.. பஸ்ஸில் காயத்திரிக்கு சில்மிஷம் செய்யும் ஒருவரை புரட்டி எடுப்பது.. அவளுக்காக ஒரு நாள் முழுக்க காத்திருப்பது என்று ஒரு மன நிலை பாதிக்கப்பட்டவரின் செயற்பாட்டை மிகவும் அற்புதமாக காட்டியுள்ளார்.. காதல் வந்தாலே ஆண்கள் எல்லோரும் மன நோயாளிகள் தானே என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகின்றது.. உண்மைதான்.. அம்மாவை கொலை செய்தது, கள்ள காதலனை கொலை செய்தது எல்லாம் ஹீரோயினுக்கு தெரிய வந்ததும் வளமையை போல ஹீரோயின் பின் வாங்குகின்றாள்.. அந்த சந்தர்ப்பத்தின் போதும் கூட காயத்திரி மீது அன்பாகத்தான் இருக்கின்றார்..நம்ம ஹீரோ.. 


ரெண்டு முறை சர மாரியாக அடி வாங்கியும் திருந்தாதா ஒரு பொலீஸ்காரன்.. படத்தின் வில்லன் என்று கொடூர நோய்க்கு பிறகு பொலீஸ்காரன் தான் அந்த இடத்தை நிரப்புகின்றார்.. அட்டகாசம்.. பொலீஸ்காரனுடனான சண்டை படத்தின் உச்சகட்ட பைத்தியம்.!! ஹீரோவுக்கு நண்பனாக இருக்கும் இன்னொருவருக்கும் காதல் தோல்வியால் அவருக்கும் மன நோய் தான்.. எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொண்டாட்டம் தான்..!!! இந்த படத்தின் முக்கியமாக சில சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டது. ஹீரோவின் நண்பன் தான்.. இருக்கட்டும் யார் சொன்னால் என்ன நல்ல கருத்துக்களை வெளியே வந்தால் சரி தானே!! படத்தின் முடிவு வளமையை போல காத ஜோடிகள் ஒன்று சேருகின்றார்கள்.. படத்தின் ப்ளஸ், மைனஸ் என்று எதனையும் நான் முன்வைக்க விரும்பவில்லை ஏன் என்றால் இதனை பற்றி பிரபலமானவர்கள் எல்லோரும் விமர்சனம் செய்து கிழி கிழி என்று கிழித்து விட்டதால் நானும் அரைத்த மாவை அரைக்க விரும்பவில்லை.. வித்தியாசமான ஒரு படம்.. வளமையை போல ரெண்டு குத்து பாட்டு.. மொக்கை பஞ் வசனங்கள், இறுதியில் ஒரு மொக்கை சண்டை என்று வளமையை போல் இல்லாமல் இப்படியான படங்கள் தமிழுக்கு முக்கியம்.. அதை விட மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய நோயினை படமாக எடுப்பது அருமை.. என்னை பொறுத்த வரை குறை நிறைகளை தாண்டி..
18 வயசு...பயத்தினில் பாதி பயங்கரம்..!!! என்றுதான் சொல்ல முடியும்...!!!

சொல்ல வந்த நோயினை தெளிவாகவும் அந்த நோயின் அறிகுறிகளை மிகவும் தெளிவாக படமாக்கிய இயக்குநர் அவர்களுக்கு பெரிய ஒரு HANDS OFF... படம் வென்றதோ/தோல்வியடைந்ததோ... இவ்வாறான புதுமையான முயற்சிகள் தமிழ் சினிமாவுக்கு இனி முக்கியமானதாகும். இனி இவ்வாறான படங்கள் வரவேண்டும் என்று ஒரு குட்டி வாழ்த்தை சொல்லிக்கொள்வோம்.!!!

சில நல்ல படங்கள் ஏன் ஓடாவில்லை என்பதனை இலகுவில் விளங்கிக்கொள்ள முடியாது. அதனை விளங்கப்படுத்தவும் முடியாது. அதனைப்போல வித்தியாசமான கதையம்சத்தை கொண்ட "18 வயசு" படம் ஏன் தோல்வியடைந்தது என்பது வெருமனையே கேள்விக்குறி தான்!!! மக்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு நோயினை தெளிவாக கூறிய ஒரு படம் ஏன் மண்கவ்வியது/மண் கவ்விக்கொண்டிருக்கின்றது என்பது மக்களின் குயால், கும்மாள இரசனையை வெளிக்காட்டுகின்றது.

பொண்ணுங்க பக்கத்தில இருந்தா சந்தோஷம் தான் வரும், அழுகை எப்படி வரும்?

Post Comment

2 comments:

  1. படத்தை விரும்பி பார்க்கலாம் என்கின்ற ஆர்வத்தை ஏற்படுத்தியதிற்கு நண்றி

    ReplyDelete