Thursday, September 20, 2012

எப்பாடு பட்டாகினும் பெற்ற சுதந்திரம்..!!!

நடந்தவையும், நடந்துகொண்டிருப்பவையும் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.. ஆனால் இதற்க்கு எல்லாம் ஒரு ஆரம்பம் என்று ஒன்று நிட்சயம் இருந்தே ஆகவேண்டும்.. அந்த ஆரம்பத்தில் முக்கியத்துவம் பெற்ற பலர் இருந்திருக்க வேண்டும்.. அவர்கள் செய்தவற்றை கொஞ்சம் சுருக்கமாக பார்ப்போம்..!!!எப்படியாயினும் இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு சிறுபான்மையின தமிழர்கள் வழங்கிய பங்களிப்பு மிகவும் பெரியதாகும். நேரடியாக இலங்கை சுதந்திரத்துக்காக உழைத்த சேர்.பொன்.இராமநாதன், சேர்.பொன்.அருணாசலம் மற்றும் கலாயோகி ஆனந்தகுமாரசாமி ஆகியோருடன் தமது இன மக்களின் தனித்துவம் பேணப்பட வேண்டும் என்பதற்க்காக உழைத்த ஆறுமுகநாவலர், விபுலாநந்த அடிகள் போன்றோரும் எமது சுதந்திரத்திற்காக பங்களிப்பு செய்த தியாகிகளின் வரிசையில் சேர்க்கப்பட்ட வேண்டியவர்களே..!! மேற்குறிப்பிடப்பட்டவர்கள் இழந்த சுதந்திரத்தை மீளப் பெற பாடுபட்டவர்கள் ஆகும்.

அதேவேளை அந்நியர் எமது நாட்டில் காலடிவைக்க முனைந்தபோது அதற்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய சங்கிலியன், பண்டாரவன்னியன் மற்றும் விக்கிரம ராஜசிங்கன் போன்றோரும் நாட்டின் சுதந்திரத்தை காப்பாற்ற தமது இன்னுயிரை நீத்த வீரர்களின் வரிசையில் சேர்ந்தவர்கள். யாழ்ப்பாணத்து கடைசி மன்னன் சங்கிலியன் அந்நியர் நடுங்கும் அடலேறாக திகழ்ந்த தமிழன் ஆவான். கண்டிப்பகுதியை ஆண்ட போதிலும் இராஜசிங்கனும் ஒரு தமிழனே. இவனை எதிர்க்க போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் போன்றோரால் முடியாமல் போய்விட்டது. இறுதியில் வந்த ஆங்கிலேயர் இவனை உள்ளூர் எதிரிகளின் உதவியுடன் இவனை கைது செய்தனர். தென்னகத்தில் பரங்கியரை எதிர்த்த வீர பாண்டிய கட்டப்பொம்மன் கூட உயிருடன் பிடிக்கப்பட்டே தூக்கில் இடப்பட்டார். ஆனால் பண்டாரவன்னியனை உயிருடன் பிடிக்க முடியாமையினால் இறுதியாக சுட்டு கொல்ல வேண்டிய நிலை பறங்கியர்க்கு நேர்ந்தது.

தனது இறுதி இலட்சியம் இலங்கையின் சுதந்திரம் என் அறிவித்த சேர்.பொன். இராமநாதன், சிவில் சேவைத் தேர்தலில் முதன் முதலில் தேறிய இலங்கையர் என்ற பெருமையும் இவரையே சாரும். இவரது நாவன்மை இலங்கை மக்களை வெள்ளையர் ஆதிக்கத்துக்கு எதிராக திரள வைத்தது. சட்டத்துறை விற்பன்னரான இவர் கல்வியில் முக்கியத்துவம் அறிந்தவரும் கூட. அதனால் தான் ஆண், பெண் இருபாலருக்கும் சம கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கட்டாயக்கல்வி போன்ற விடயங்களை தனது கொள்கையாக கொண்டு செயற்பட்டார். இவரது ஆங்கில வன்மை ஆங்கிலேயராலேயே புகழ்ப்பட்டதாகும். இவரது நாட்டுப்பற்றும போராட்டத்திறனும் அப்போதைய சிங்களத் தலைவர்களாலேயே போற்றப்பட்டவை. அதன் விளைவாகவே ஒரு சந்தர்ப்பத்தில் சிங்களத் தலைவர்கள் இவரை குதிரை வண்டியில் அமர்த்தி குதிரைக்குப் பதிலாக தாம் அதனை இழுத்து ஊர்வலம் வந்தனர்.


இலங்கையின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தேசியத் தலைவராக மதிக்கப்படும் சேர்.பொன்.அருணாச்சலம் ஒரு கணக்கியல் மேதை. பதிவாளர் நாயகமாக பணியாற்றிய காலத்தி; இவரினால் சமர்ப்பிக்கப்பட்ட சில புள்ளி விபர அறிக்கைகள் இலங்கையின் நிலைமை பற்றி பல உண்மைத் தகவல்களை எடுத்தியம்பியதன் மூலம் சர்வதேச ரீதியில் புகழ் பெற்ற புள்ளி விபர அறிக்கையாகவும் மதிக்கப்பட்டது. இலங்கை பல்கலைக்கழக சங்கத்தை முதன் முதலில் ஆரம்பித்த பெருமை இவரையேசாரும். 1915இல் இடம் பெற்ற இணக்கலவரத்தையடுத்து அரசியல் சீர்திருத்த்திற்க்காக சீர்திருத்த லீக் என்னும் ஒரு அமைப்பை இவரே உருவாக்கினார். சுதந்திரத்துக்கு மட்டுமின்றி தமிழுக்காகவும், சைவத்துக்காகவும் இவர் பல சேவைகளை செய்துள்ளார்.

அடுத்து கலாநிதி ஆனந்தகுமாரசாமி. இவர் சரித்திரவியலாளர் ஆவார். கீழைத்தேய கலாச்சாரம் பற்றிய சிறந்த தெளிவான கொள்கையினை இவர் தன்னகத்தே வைத்திருந்தார். ஆங்கில கலாச்சார பரம்பளுக்கு இவர் என்றும் எதிரியே. அதேவேளை தேசிய மருமலர்ச்சியிலும் இவரது பங்களிப்பு அதிகமாகவே காணப்பட்டது. மேற்படி தலைவர்கள் சுதந்திரத்துக்கு நேரடியாக தமது பங்களிப்பை செய்த வேளையில் தமிழும், சைவமும், அந்நியர் வரவால் அழியும் நிலையில் இருப்பதை உணர்ந்து அவற்றை வளர்ப்பதில் பெரும் பாடுபட்டார். இவரினால் அச்சேற்றப்பட்ட நூல்களே எமது கலாச்சாரம் அந்நிய கலாசார புயலில் அடித்துப்போகாமல் இருக்க உதவியது. ஆங்கிலேயர் பசுவதைக்கு கொள்கை ஆசை காட்டி மேற்கொண்ட மத மாற்றத்துக்கு எதிராக குரல் கொடுத்து எமது கலாச்சாரத்தை காக்க உதவினார். இதன் மூலம் சுதந்திரத்தின் அடிப்படைகளின் ஒன்றான சுயகலாசார சிந்தனைகளின் எழுச்சிக்கு இவர் உதவினார்.

எமது நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்கள் இவர்கள் மட்டும் அல்ல.. பலர் விடுபட்டிருக்கலாம்.. (எமது நாட்டில் எங்கு சுதந்திரம் இருக்கு என்று வினவும் அன்பர்களுக்கு எனது சின்ன அறிவினால் பதில் கூற முடியாது என்பதை இப்போதே கூறிக்கொள்கின்றேன்..) அவர்கள் பாடுபட்டு பெற்றுத்தந்த சுதந்திரம் என்று என்னவாகிக்கொண்டிருக்கின்றது என்பது இடியப்ப சிக்கலே..!! எது எப்படியாகினும் இந்தியாவில் தமது சுதந்திரத்திற்காக எவ்வளவு பாடுபட்டனரோ அதனை போன்று அதற்க்கு ஈடாக இலங்கையிலும் போராடினர் என்பதே உண்மை.. "ஆங்கிலேயே போற போக்கில் எமக்கு சுதந்திரத்தை தந்துவிட்டு போய்விட்டான்.." என்பது அப்பட்டமானது..!! மேட்குறிப்பிட்டவர்கள் எமது நாட்டின் சுதந்திரத்திற்காகவும், தமிழ், சைவம் போன்றவற்றுக்கும் அதிகம் பாடுபட்டவர்கள் ஆகும்..

"சுதந்திரம்..சுதந்திரம்..சுதந்திரம்..அழைத்தும் எமக்காக வராதது..!!!"

Post Comment

3 comments:

 1. நீங்கள் குறிப்பிட்ட பெரியார்களின் தொண்டுகள் உண்மையில் இலங்கையின் கல்வி மற்றும் கலாசார வளர்ச்சியில் தனி இடம் பெறுபவை தான். அதை மறுப்பதற்கில்லை. ஆனால் இலங்கையின் சுதந்திரத்தில் அவை காத்திரமான பங்கு வகித்தது என்பது தான் நெருடல்! இந்தியாவினுடைய சுதந்திர போராட்டத்துடன் ஒப்பிட்டால் இலங்கையின் சுதந்திர போராட்டம் கால் தூசுக்கு சமனாகாது. இந்தியாவின் சுதந்திரம் அடையப்பட்டது, இலங்கையின் சுதந்திரம் கிடைக்கப்பட்டது.

  இந்தியாவின் சுதந்திர போராட்டம் பெரிது, ரத்தமும் சதையுமான அந்த போராட்டத்தோடு, வெறும் குழுக்களாக பணம் சேகரித்து லண்டன் சென்று மகஜர் கொடுக்க திராணியின்றி காவலாளியிடம் கொடுத்தது பாதியும் , தேம்ஸ் நதிக்கரையில் எறிந்தது பாதியுமாக எம்மவர்கள் முன்னெடுத்த சுதந்திர போராட்டத்தை ஒப்பிடாதீர்கள். அந்த காலத்தில் மகஜர்களை கொண்டு லண்டன் பயணாமானோரை "சுற்றுலா குழுவினர் " என்று பொதுமக்கள் கேலியாக் அழைத்த வரலாறும் உள்ளது, காரணம் மக்களீடம் பணம் சேகரிக்கப்பட்டு அவர்கள் லண்டன் போவார்கள். லண்டனை சுற்றிப்பார்த்துவிட்டு, கடைசி நாளில் கண்ணில் எதிர் படும் அதிகாரியிடம் மகஜரை கொடுத்து விட்டு வருவார்கள். இதனால் தான் அவர்கள் அப்படி அழைக்கப்பட்டார்கள்.

  இந்திய சுதந்திரத்தில் காந்தியின் பங்கு கூட ஒன்றுமில்லை என்பேன். ஆனால் வெள்ளயனுக்கு எதிராக 70% தமிழர்களைக் கொண்ட இந்தியன் நேஷனல் ஆர்மி போராடிய அந்த ரத்தம் சிந்திய வீர வரலாறுடன் ஒப்பிடுகையில் இலங்கயின் போராட்டம் ஒன்றுமேயில்லை. உண்மையில் இலங்கை சுதந்திரத்துக்காக போராடவேயில்லை, சுதந்திரத்துக்கான குழுக்களை அமைத்து மகஜர்களை கொடுக்க மட்டுமே செய்தார்களே ஒழிய யாரும் வெள்ளயனை "ஏய்" என்று அதட்டக்கூட இல்லை. நினைக்கவே காமடியாக இருக்கிறது, அடிமைப்படுத்தி வைத்திருப்பவனிடம் போய் என்னை விடுதலை செய் என்று கடிதம் கொடுப்பது தான் காமடி, அந்த போராட்டமே இலங்கையில் நடந்தது.

  இந்திய சுதந்திரத்தின் வீரியம் மிகப்பெரியது. அடக்குமுறை , கொலை, கற்பழிப்பு போன்றவற்றிற்கு மத்தியில் போராடி பெறப்பட்டது அது. அதனோடு இலங்கையின் சுதந்திர போராட்டத்தை (??????) ஒபிடாதீர்கள். உண்மையில் காந்திக்கு பணிந்து வெள்ளையன் சுதந்திரம் கொடுக்கவில்லை. சுபாஸ் சந்திர போஸ், மங்கல் பாண்டே போன்றோரின் தாக்குதல் தாள முடியாமலே தான் , காந்தியின் அஹிம்சையை காரணம் காட்டி மீசையில் மண் ஒட்டாமல் சுதந்திரத்தை கொடுத்தான் வெள்ளையன். இந்தியாவிற்கு சுதந்திரத்தை கொடுத்த பிறகு , கீழே தொங்கிக் கொண்டிருந்த இலங்கையை மட்டுமே வைத்து நிர்வாகிப்பது அநாவசியம் என்பதால் அடுத்த ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் "வழங்கப்பட்டது".

  ReplyDelete
  Replies
  1. அப்பு ராசா இந்தியாவுக்கு போனதும் அப்புக்கு இந்தியா மேல அம்புட்டு பாசம்.. அப்பு இந்தியாவுக்கு போனமா.. தாஜ்மஹால் சுத்தி பார்த்தமா பாணிப்பூரி வாங்கி சாப்புட்டமா என்று இருக்கணும்.. அதை விட்டுட்டு இப்படி எல்லாம் கமெண்ட் அடிக்கப்படாது... சரி சரி.. ஏதோ நம்ம பயபுள்ளைகளும் சுதந்திரத்துக்காக போராடினாங்க என்று எழுதுவம் என்று பார்த்தா இந்தாள் ஆரம்பத்துலையே கேட் ஐ போட்டுட்டு... இனி எங்கிட்டு இருந்து எழுதுறது.. சரி சரி ... இந்தியா சுதந்திரப்போராட்டம் என்பது தேவீகமானது அதனை நான் ஒரு போதும் குறை சொல்வதாகவோ.. குறைத்து மதிப்பிடப்போவதாகவோ இல்லை.. நாங்களும் செய்தோம் என்று சொல்லும் போது அதனை நல்லா போராடியவர்களுடன் ஒப்பிட்டால் தான்.. எமது போர்ராட்டமும் கொஞ்சமாவது எடுபடும் என்பதுக்காகவே.. இப்படி..!!! வர வர என் கூட சண்டை போடுவதே கிஷோகர் தம்பிக்கு வேலையா போச்சு...!!!

   Delete
  2. இங்கு பாசமும் கிடையாது பந்தமும் கிடையாது, உண்மையை சொன்னேன் அவ்வளவே! இந்திய சுதந்திர போராட்டத்தை விட புனிதமான , அதே நேரம் இந்திய போராட்டத்தை விட ஆயிரம் மடங்கு உணர்ச்சி மிக்கது, தியாகம் நிறைந்ததுமான போராட்டத்தை எமது நாடு கண்டுள்ளது. அது என்னால் மட்டுமல்ல , இந்தியரால் கூட மறுக்க முடியாதது. அதை எல்லாம் குறை சொல்வதாக இல்லை.

   ஆனால் பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற இந்தியாவுக்கு இணையான போராட்டத்தை இலங்கை முன்னெடுத்தது என்பதை தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

   இது சண்டையெல்லாம் கிடையாது.இதெல்லாம் ஒரு ஆரோக்கியமான விவாதம் தானே! அது மிகவும் முக்கியம் அமைச்சரே!

   Delete