Tuesday, September 4, 2012

நாம் தமிழர் : இன்னமும் ஏழு மணித்தியாலங்களில் தமிழீழம் அறிவிக்கப்படும்..!!!

இலங்கையில் தமிழனாக பிறந்ததனால் இவன் அடிக்கடி புலம்புகின்றான் என்று நீங்கள் சொல்லி விடக்கூடாது என்பதற்க்காக அரசியல் பற்றி எதையும் எழுதாமல், புலம்பாமல் ஒரு கிழமையாக பேசாமல் இருந்தேன். "ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்காது என்று பெரியவங்க யாரோ சொல்லியிருக்காங்களாம்.. இப்ப புதுசாக எழுதின கையும் என்பதையும் சேர்த்திருக்காங்க அப்பு..!! அதற்க்கு அமைய சும்மா இருக்க முடியாமல் மீண்டும் ஒரு சர்ச்சையான ஒரு அரசியல் தலைப்பினுள் நுழைவோம். எல்லா நிகழ்வுகளும் அதன் போக்கில்தான் நிகழ்கின்றன எதனையும் எழுந்தமானமாக மாற்றிவிட முடியாது என்று தெரிந்தும் இது பற்றி புலம்பி எழுதாமல் இருக்க முடியவில்லை. தமிழக அரசியல், ஈழ அரசியல் என்று ஏதோ ஒரு பக்கத்தில் இருந்து எனக்குள் ஒரு சுமையினை ஏற்றிய வண்ணமே இருக்கின்றது. சுமைகளின் பாதிப்பினை இந்த பதிப்பினுள் பதிய முயல்கின்றேன். 
இலங்கை தமிழ் மக்களின் உரிமைப்பிரச்னையை மீண்டும் மீண்டும் அரசியல் சேறு அள்ளி பூசுவதில் என்ன சுகம்தான் காண்கின்றார்களோ தெரியவில்லை.. என்னை மிகவும் கவர்ந்த தமிழக அரசியலில் முக்கியமாக இரண்டு விடையங்களை சொல்லியே ஆக வேண்டும் அதனுள் முதல் இடத்தினை பிடிப்பது கலைக்கிழவன் கலைஞர் கருணாநிதி ஐயா அவர்கள் அரங்கேற்றும் டெசோ(TESO) மாநாடு ; இது பற்றி பெரிதும் அலட்டிகொள்வதில் எந்த பலனும் இல்லை என்ற முடிவில் இருப்பதினால் (கலைஞரின் கலைத்திறமைகளை பாராட்டி போதுமான பதிவுகள் எழுதியதன் காரணமாக) பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் அடுத்த விடையத்துக்குள் செல்வோம். மற்றையது அருமை அண்ணன் பாயும் புலி சீமான் தலைமையிலான நாம் தமிழர் அமைப்பும் அதன் செயற்பாடும்..!! இப்பபோது பெரிதும் அலச இருப்பது இரண்டாவதான விடையத்தை பற்றித்தான்..

இருந்த போதும் குறிப்பாக நாம் தமிழர் கட்சி தொடர்பான விமர்சனங்கள், நாம் தமிழர் கட்சியின் யாப்பு, அதன் யாப்பு பற்றிய விமர்சனங்கள், அவ் யாப்பில் ஈழத்தமிழர்களுக்கான சுயநிர்ணய(தமிழ்த்தேசியம்) அடங்கலாக அந்த யாப்பு பரம்பலடைந்திருப்பது என்று சிந்தனைக்கு எட்டாத நிறைய விடையங்கள் சுற்றி சுழன்றுகொண்டிருக்கும் போது என் சின்ன அறிவுக்கு எட்டிய விடையத்தை குறி தவறாமல் அடிக்கலாம் என்று முனைகின்றேன். தமிழகத்தின் எந்த அரசியல் கட்சியும் சொன்னால் என்ன இந்தியாவின் எந்த அரசியல் கட்சிகளும் ஈழத்தமிழ் மக்களின் அபிலாஷைகளை உண்மையாகவும், நியாயமாகவும் முன் நிறுத்தியது கிடையாது. இப்போது மட்டும் என்ன புதிதாக நாம் தமிழர் என்ற அமைப்பிற்க்கு என்றும் இல்லாதது போல் இப்போது மட்டும் ஏன் இந்த அளவுக்கு மூக்கு வியர்க்கின்றது? என்பதுதான் என் புதினமான கேள்வி.?? எல்லாவற்றுக்கும் மேலாக தமிழகத்தில் இருந்து ஈழ மக்கள் எதிர்பார்ப்பது ஒன்று திரட்டிய மக்கள் மயப்படுத்தப்பட்ட ஈழ ஆதரவு என்று புரிந்து கொண்டு ; அரசியல் காய் நகர்விற்க்காக நாம் தமிழர் அமைப்பின் முக்கிய புள்ளியான சீமான் ஈழ பிரச்சனையையும், ஈழ தமிழ் தேசியத்தையும் கையில் ஏந்தி நிற்பது, எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் ஈழ பிரச்சனையை எடுத்தாள்வது பெரிதும் கவலையினை ஏற்படுத்துகின்றது.!!இந்தியாவிற்கு செல்லும் சிங்களவர்கள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் "தமிழீழம்" பெற்றுவிடலாம் என்று எங்களை நம்பச் சொல்லுகின்றது "நாம் தமிழர் அமைப்பு".. இவ்வாறு துரத்தியடிக்கப்படுவதனால் இலங்கையில் உள்ள தமிழர்கள் மீது சிங்களவர்களுக்கு இன்னமும் காழ்ப்புணர்ச்சி அதிகரிக்கும் என்பது ஏன் இவர்களுக்கு புரியவில்லை. இவர்கள் உண்மையில் இப்போது இலங்கையில் உள்ள தமிழர்கள் பற்றி சிந்திக்கிறார்களா இல்லையா? என்று சராசரி இலங்கை தமிழன் ஒருவன் சிந்திக்கும் அளவில் இருக்கின்றது இவர்களின் நடவடிக்கை. இது இப்படியே தொடருமாயின் இலங்கையில் உள்ள தமிழர்கள் மாபெரும் ஒரு சிக்கல் நிலையினை மீண்டும் சந்திக்க/அனுபவிக்க நேரிடும். யுத்தத்தில் ஈடுபடாத ஆயுதம் தூக்காத எந்த ஒரு தரப்பினர் மீதும் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் கண்டிக்கப்பட வேண்டியவையே.. இறுதி யுத்தம் நடைபெற்ற போது அதனை நிறுத்துவதற்கும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்குமான மூலோபாயமாக விடுதலைப் புலிகளால் சிங்கள பிரதேசங்களிலும் சிங்கள மக்களை இலக்கு வைத்து பெரும் எடுப்பிலான தாக்குதல்கள் நடத்தப்படும் சாத்தியங்களை பலரும் முன்வைத்திருந்தனர். ஆனால் யுத்தத்தின் தோல்வியை விட மோசமான விளைவுகளை எதிர்காலத்தில் அவ்வாறான தாக்குதல்கள் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தும் என்ற காரணத்தால் அந்த மூலோபாயத்தை புலிகள் கைவிட்டதாக பரவலாக பேசப்பட்டது. ஆனால் இன்று தமிழர்களுக்கு நல்லது செய்கின்றோம் என்ற நோக்கில் களமிறங்கி இருக்கும் "நாம் தமிழர் அமைப்பு" செய்யும் செயற்பாடுகளை பார்த்தால் உதவியாக தெரியவில்லை.. இப்போது தமிழகத்தில் உள்ள "தமிழீழ பாதுகாவலர்கள்" என்று சொல்லும் இவர்கள் விடுதலைப் புலிகளால் கூட மேற்கொள்ளப்படாமல் கைவிடப்பட்ட மூலோபாயத்தைப் பிரியோகிப்பதன் மூலம் தமிழீழ விடுதலைக்கு உதவுகின்றாரகளோ? இல்லை மீண்டும் ஒரு தமிழ் இன அளிப்பிற்க்கு வழிவகுக்கின்றார்களோ? என்று சிந்திக்கும் அளவிற்க்கு இருக்கின்றது அமைப்பினரின் அரசியல் நகர்வுகள்..!!!

துரத்தியடித்தது மட்டும் இல்லாது.. இனி தொடர்ந்து இவ்வாறு நடக்கும் பட்சத்தில் நாடு தழுவிய மாணவர் போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டியிருக்கும் என்று ஒரு எச்சரிக்கை வேறு விடுக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான எச்சரிக்கைகளை விடும் நேரத்தில் மத்திய அரசாங்கத்தின் போக்கை கொஞ்சம் மாற்றினாலே போதுமே எல்லோரும் சுபீட்சமாக வாழ்ந்துவிட முடியும். வேண்டும் என்று நினைப்பதை செய்வது இந்திய அரசியலுக்கு முடியாத காரியம்.. வேண்டாம் என்று நினைப்பதை செய்து முடிப்பதையே கடமையகாக்கொண்டுள்ளது இந்திய அரசு..!! இன்னும் ஒரு சாரார் நாம் தமிழர் அமைப்பு பணத்திற்க்காக வேலை செய்யும் ஆட்கள் என்று குற்றம் சாட்டுகின்றார்கள்.. அது உண்மையோ பொய்யோ எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். சரி இவ்வாறு ஒரு மக்கள் அமைப்பினை உருவாக்கி இலங்கை தமிழர்களுக்கு உதவி??? செய்துகொண்டிருக்கும் சீமான்.. ஒருகாலம் "சண்டை என்றால் சட்டை கிழிவதைப்போல உயிர்களும் போகத்தான் செய்யும்.." என்று சொன்ன செல்வி.ஜெயலலிதாவுடன் கூட்டமைப்பு வைத்திருக்க வில்லையா?? கேட்டால் சொல்லுவார்கள் அரசியலில் இது எல்லாம் சாதாரணம் என்று.. இன்று நீங்கள் கத்தி கூச்சலிட்டு காப்பாற்ற துடிக்கும் இதே தமிழர்களை சாகட்டும் என்று சொன்னவர்தான் இன்றைய முதலமைச்சர் அப்படி இருக்கும் தறுவாயில் நீங்கள் கூட்டமைப்பு வைத்தது சரியா?? இது மட்டும் உங்கள் நாம் தமிழர் அமைப்பின் யாப்புடன் ஒத்துப்போகின்றதா?? இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் போது நீங்கள் நன்மைக்கு என்று எண்ணி செய்யும் செயல்கள் எம்மை எரிச்சல் ஊட்டுக்கின்றன. அது மட்டும் இல்லது ஆபத்தாகவும் உள்ளது. சும்மா யாத்திரைக்கு வாருபவர்களை எல்லாம் இன வெறியர்கள் என்று விரட்டியடித்தால் என்ன நியாயம்.. கொஞ்ச நஞ்சம் மிச்சம் இருக்கும் பாவமும் இல்லாமல் போய்விடும்.. இவ்வாறு இருக்கும் போது சகோதரத்துவத்தை தேட முற்பட்டது எனது பிழைதான்.. எல்லாம் புரிகின்றது என்றோ ஒருநாள் கருணாநிதி, அன்று ஜெயலலிதா... என்று நீண்டுகொண்டு போன ஈழ தமிழர்களுக்கான அரசியல் நாடகத்தில் இன்று நாம் தமிழர் அமைப்பு.. சேர்ந்து விடுமோ? என்ற சிந்தையினை உதிக்க வைக்கின்றது. அவர்களில் சிறுபிள்ளைத்தனமான செயற்பாடு..!!!


அண்மையில் வாசித்து மெய் சிலிர்த்துபோன ஒரு செய்தி என்னவென்றால் "சென்னை: தமிழகத்தில் கால்பந்துவிளையாட வந்த சிங்களவர்களை தமிழகத்திலிருந்து உடனே வெளியேற்றிய தமிழக முதலமைச்சரின் நடவடிக்கைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் பாராட்டு தெரிவித்துள்ளார்..." இன்னமும் நியாபகம் இருக்கின்றது இப்போதைய முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா அப்போது ஆற்றிய உரை..!!! ஈழ மக்கள் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இறந்து கொண்டிருக்கும்போது இதே ஜெயலலிதாதான் சொன்னார் "சண்டை என்றால் உயிர் போகத்தானே செய்யும்.." இலகுவில் மறந்திடவோ மறைத்திடவோ முடியாத வரிகளை உள்ளடக்கியதாக இருந்தது அந்த உரை..!!! இன்று என்ன திடீரெண்டு என்றும் இல்லாத அக்கறை..!!! ஒன்றை மட்டும் இதிலிருந்து விளங்கிக்கொள்ள வேண்டும்.. விரட்டி அடிக்கப்பட்டவர்கள் யாரும் இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக துப்பாக்கி ஏந்தியவர்கள் இல்லை; சாதாரண இலங்கை பிரஜைகள்.. முக்கியமாக இந்த பிரச்சனைகளை கண்டுகொள்ள வேண்டிய மத்திய அரசாங்கம் இன்னமும் மக்களை முட்டாள் என்று எண்ணிக்கொண்டு விளையாடி வருகின்றது. இந்த நிலையினை மாற்றி/புரிய வைத்து மத்திய அரசாங்கத்தின் மூலம் ஒரு நிவர்த்தியான நடவடிக்கையினை எடுக்க முடியுமா? சரி நடவடிக்கை எல்லாம் வேண்டாம்.. மத்திய அரசை ஈழ தமிழர் பிரச்னையை விளங்கப்படுத்த முடியுமா? என்று கேட்டால் இயலாது என்பதே பதில்.. ஆனால் சிவனே என்று விளையாட வந்தவர்களை திருப்பி அனுப்ப மட்டும் முடியும்.. அப்படித்தானே??

மேலும் செல்வி.ஜெயலலிதா செய்த வீர செயலின் பாராட்டு பின்வருமாறு தொடர்கின்றது "கால்பந்து போட்டிகளில் விளையாட வந்த சிங்களவர்களை தமிழகத்தின் உணர்வை அலட்சியப்படுத்தி சென்னை நேரு விளையாட்டரங்கில் விளையாட அனுமதித்த அந்த அரங்கின் பொறுப்பு அதிகாரியையும் உடனடியாக தற்காலிகப் பணி நீக்கம் செய்து துறை ரீதியான நடவடிக்கைக்கும் உத்தரவிட்டிருக்கும் தமிழக முதலமைச்சரின் நடவடிக்கையும் மிகவும் பாராட்டக்குரியது..." ஏன் யார் மேலோ உள்ள கோபத்தினை ஏன் அரங்க பொறுப்பதிகாரியின் மேல் திணித்தீர்கள்? சரி மேலே வாழ்த்தப்பட்டத்தை போல பார்த்தால் சிங்களவர்கள் மட்டுமா ஈழ தமிழர்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்துகின்றார்கள். ஏன் தமிழகத்தில் அரசியல் செய்கின்றோம் என்ற பேரில் பழநெடுமாறன், சீமான், கருணாநிதி, ஜெயலலிதா..இன்னும் பலர் செய்யும் அலட்சியத்தையும் வேண்டா வெறுப்பு போக்கையும் எந்த பட்டியலினும் சேர்ப்பது..? மீண்டும் ஒரு முறை தவறான முடிவினை எடுத்துள்ளீர்கள் என்பது மட்டும் தெளிவாக புரிகின்றது..அண்டைய நாட்டில் வாழும் தமிழ் மக்களின் நலன் கருதிதான் செய்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறு இருந்தால் உங்களுக்கு இலங்கையில் வசிக்கும் சிங்கள இனத்தவர்கள் தமிழக எல்லைக்குள் வரக்கூடாது என்றால் நீங்கள் மத்திய அரசுடன் ஒரு தீர்மானத்துக்கு வந்து; மத்திய அரசின் மூலம் இந்திய/தமிழக அரசியல் சட்டத்தில் இது தொடர்பாக ஒரு மாற்றத்தை கொண்டுவந்து "இலங்கை சிங்களவர்கள் யாரும் இனி தமிழக எல்லைக்குள் வரக்கூடாது" என்று ஒரு சட்டத்தையே கொண்டு வரலாமே அதை விட்டு விட்டு விளையாட வந்தவர்களை இன வெறியர்கள் என்று முத்திரை குத்தி திருப்பி அனுப்புவது, சாமி கும்பிட வந்தவர்களை அடித்து விரட்டுவது என்று செயற்படுவது சரியாகவா இருக்கின்றது? இவ்வாறு செய்வதனால் இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு கொண்டு வரப்படுமா? நாம் தமிழர் அமைப்பு இவ்வாறு செய்வதனால் தலைப்பு வைத்ததை போல நடைபெறுமா? அப்படி என்றாலும் பறவாயில்லை சுயநலப்போக்கில் செய்வது சரி என்று ஒரு மனதாக சொல்ல முடியும். அவ்வாறு ஒரு போதும் இவ்வாறு நாம் தமிழர் அமைப்பு செய்யும் பட்சத்தில் நிகழப்போவதில்லை. மாறாக இலங்கை தமிழர்களின் மீது வேண்டாத காழ்ப்புணர்வுதான் அதிகமாகும். மீண்டும் ஒரு இனக்கலவரம் தலை தூக்கும்..!! இது எல்லாம் தேவையா?தமிழக தமிழ் பேசும் மக்களுக்கு அன்பான ஒரு வேண்டுகோள் :- இது வரைக்கும் நீங்கள் இலங்கை தமிழ் மக்களுக்காக செய்த உதவிகளையும், உபசரிப்புக்களையும் என்றும் ஒரு இலங்கை தமிழனாக இருந்து மறந்துவிடவில்லை. உங்களில் எவரையும் குறை சொல்வதற்காக இந்த பதிப்பினை எழுதவில்லை. தமிழக மக்களை எந்த இடத்திலும் நான் குற்றம் சொல்லவில்லை, அவர்களால் அதிகபட்ச உணர்வுகள் வெளிக்காட்டப் பட்டிருக்கின்றன, வெளிக்காட்டப் பட்டுக்கொண்டும் இருக்கின்றன; அதற்க்கு பதிலான ஈடுபாட்டை  இலங்கைத் தமிழர்கள்  இதுவரை தமிழகத்தின் எந்த பிரச்சனைக்கும் வெளிக்காட்டியதில்லை, அந்தவகையில் இலங்கை தமிழனாய் நானும் குற்ற உணர்ச்சி உள்ளவன்தான்!! என் கோபம் அத்தனையும் எம்மை பலிக்கடா ஆக்கும் தமிழக அரசியால் சாக்கடைகள் மீதுதான் அன்றி மக்கள் மீதல்ல!!

பொங்கியது எல்லாம் போதும்.. மீதம் இருப்பதாவது எஞ்சட்டும்..!!!

Post Comment

18 comments:

 1. மீண்டும் ஒரு தமிழ் இன அளிப்பிற்க்கு ////எந்த அளிப்பு என்னு சொல்லுங்க நண்பரே! அத்தோட இந்த கற்பனையில் கட்டுரை எழுதி உங்க வெட்டி நேரத்த போக்கிறதுக்கு அடுத்தவங்களின் பொன்னான நேரத்தை எதுக்கு வீணாக்கிறீங்க? அந்த பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தியது நாம் தமிழர் அல்ல! மதிமுக! இலவசமா ஒரு புளொக்கும் வெட்டியா நேரமும் இருந்தா ரோட்டால போறவன் சொல்ற செய்திக்கே கட்டுரை எழுதுவிங்க என்னு இப்போதான் புரியுது! சந்திப்பம் என்ன?

  ReplyDelete
  Replies
  1. நிட்சையமாக சந்திப்போம்.. அளிப்பு என்றால் எல்லாவற்றையும்தான் குறிப்பிடுகின்றேன்.. அப்போ நீங்கள் சொல்வதை பார்த்தால் நாம் தமிழர் அமைப்பு முழுக்க முழுக்க இலங்கை தமிழர்களுக்கு அன்பும் ஆதரவும் வழங்குவதாக அல்லவா நீங்கள் கதைக்கிண்றீர்கள்..????

   Delete
  2. லோக. அஞ்சன்September 5, 2012 at 7:47 AM

   அது அ''ழி''ப்பு நண்பரே! நான் எதுவும் சொல்லவில்லை! நீங்கள் யார் அந்த சம்பவத்தோடு தொடர்பு பட்டார்கள் என்று விவரம் தெரியாமலே இப்படி இட்டுக்கட்டி எழுதுவது கண்டிக்கத்தக்கது! ஒழுங்காக செய்தியை பெற்றுக் கொள்ளாது செவிவழி செய்தியை/ கற்பனையை வைத்துக்கொண்டு ஒரு பத்தி எழுதுவதோ ஒரு அமைப்பினை சாடுவதோ ஏற்றுக் கொள்ள முடியாதது!

   Delete
  3. இலங்கை யாத்ரிகள் தஞ்சை மாவட்டம், பூண்டி மாதா திருக்கோயிலுக்கு பயணமாக 03.09.2012 அன்று வந்தனர். இதையறிந்த தமிழ்த தேசப் பொதுவுடமைக் கட்சி, நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் தோழர்கள் சுமார் 100க்கு மேற்பட்டோர் பூண்டி மாதா திருக்கோயிலை முற்றுகையிட்டனர்.

   Delete
  4. இதிலிருந்து என்ன சொல்ல முற்படுகிண்றீர்கள்?? @லோக. அஞ்சன் இதில் என்ன பிழை என்று கொஞ்சம் சொல்ல முடியுமா?? உண்மையை கொஞ்சமும் பொய் கலக்காமல் அப்படியே எழுதினேன்.. அதுதான் இவ்வளோவு கசப்புக்கும் காரணம்...:) உங்களின் வருகைக்கும்...உங்களின் பின்னூட்டலுக்கும்..:)

   Delete
 2. மீண்டும் அதே உணர்வுகள் தம்பி...
  // விட்டு விளையாட வந்தவர்களை இன வெறியர்கள் என்று முத்திரை குத்தி திருப்பி அனுப்புவது, சாமி கும்பிட வந்தவர்களை அடித்து விரட்டுவது//

  அந்த விளையாட்டு வீரர்கள் அனைவருமே பாடசாலை மாணவர்கள்.. சிறுவர்கள், ஒன்றுமே அறியாதவர்கள்... இந்த நான் தமிளரும், ம.தி.மு.க வும், இன்ன பிற போலிகளும் செய்யும் இந்த வீண் செயல்களினால் "இந்த சின்ன வயதிலேயே அந்த பிஞ்சுகளின் மனதின் துவேஷ விஷத்தை விதைக்க முற்படுகிறார்கள்....

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்... சின்னஞ்சிராகளின் மனதில் இப்பவே நல்ல விதாமாக தமிழர்களை பற்றி எடுத்து கூறி விட்டார்கள்.. அவங்க எல்லாம் நல்லா வருவாங்க.. முடியலை.. இவங்க செய்யுரத்தை பார்த்தான் மறுபடியும் நிட்சையமாக ஒரு இன கலவரம் கட்டாயம்... இருக்கின்ற மிச்ச தமிழர்களையும் இப்படி வேண்டாத வேலை செய்து அழித்து துடைத்து விட்டு யாருக்காக இயங்க போகின்றது அமைப்புக்களும், கட்சிகளும்...???
   மிக்க நன்றி அண்ணா.. உங்களின் வருகைக்கும்...உங்களின் பின்னூட்டலுக்கும்..:)

   Delete
  2. இந்த நாமத் தமிழர்களின் அட்டூழியம் தாங்கமுடியவில்லை. தமிழர்களை காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று தமிழ்நாட்டில் இவர்கள் போடும் ஆட்டம் இருக்கிறதே, இவர்களுக்கும் கொலைஞருக்கும் உலகத் தமிழர்களை காப்பதில் போட்டி. மற்றவர்கள் அனைவரும் தமிழின விரோதிகள் என்பது இவர்களின் பரப்புரை,

   இவர்களின் வீரம் எல்லாம் அப்பாவி தமிழர்கள்,சிங்களவர்கள் மற்றும் மலையாளிகளிடம் மட்டுமே, இவர்கள் இருக்க இருக்க தமிழர்களை மற்ற தேசிய இனத்திடமிருந்து அந்நியப்படுத்துகின்றனர்,

   கால்பந்து விளையாடவந்த மாணவர்களிடம் காட்டிய வீரத்தை இங்கிருந்து கிரிக்கெட் விளையாடச் செல்லும் கிரிக்கெட் வீரர்களிடம் காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம், துரோக இனவெறிக் கும்பல்,

   நல்லதொரு தெளிவானதொரு கருத்தாடல், இலங்கைத் தமிழர்கள் பற்றிய சரியான கண்ணோட்டத்தை வழங்குகிறது, நன்றி...

   Delete
  3. தங்கள் தங்கள் வேலையை ஒழுங்காக செய்தால் எல்லாமே நல்லதாக நடக்கும்.. யாரு யாருக்காகவும் துரோக இனவெறி போராட்டம் செய்ய வேண்டிய தேவை இல்லை... மிக்க நன்றி.. உங்களின் வருகைக்கும்...உங்களின் பின்னூட்டலுக்கும்..:)

   Delete
 3. // சாமி கும்பிட வந்தவர்களை அடித்து விரட்டுவது/// அவர்களில் ஒரு சாரர், தமிழ் கிருத்தவர்கள்.... இது தெரியுமா? அந்த போலிகளுக்கு!! இன்னும் கொஞ்சம் விட்டால், இலங்கையில் இருந்து எந்த குடிமகன் (தமிழரையும் சேர்த்தே) தமிழ் நாடு சென்றாலும் அடிப்பார்கள் போல...

  ReplyDelete
  Replies
  1. அதைத்தான் செய்ய போகிறார்கள்.. முக்கியமானவரை தமிழகத்துக்குள் கூபிட்டு நல்லா விருந்துபசாரம் செய்ய முடியும்.. அப்பாவி இலங்கை சிங்களவரை மட்டும் அடித்து விரட்ட முடியும்... நல்ல நியாயம்.. போற போக்கை பார்த்தால் தமிழகத்துக்குள் யாரும் வரகக்கூடாது என்று சொன்னாலும் ஆச்சரியப்பட இடமில்லை... :) மிக்க நன்றி அண்ணா.. உங்களின் வருகைக்கும்...உங்களின் பின்னூட்டலுக்கும்..:)

   Delete
  2. லோக. அஞ்சன்September 5, 2012 at 7:45 PM

   முள்ளி வாய்க்காலில் யாரை கும்பிட்டார்கள் தமிழர்கள்?

   Delete
  3. //முள்ளி வாய்க்காலில் யாரை கும்பிட்டார்கள் தமிழர்கள்?// போது நீங்கள் யாரை கும்புட்டுகொண்டு இருந்தணீங்க?? சும்மா போங்கையா..

   Delete
 4. Whether their will be a racial riot or not. Now you are suggesting them
  to start a racial riot in Srilanka. Very good suggestion for the amount you received from the Srilankan Government.M.Baraneetharan

  ReplyDelete
  Replies
  1. நாங்கள் தமிழ் பதிவுகளுக்கு ஆங்கிலத்தில் பின்னூட்டல் செய்பவர்களுக்கு பதில் அழிப்பது இல்லை... :)

   Delete
 5. தமிழீழம் தொடர்பிலோ, தமிழ் மக்கள் தொடர்பிலோ தமிழக அரசியல் வாதிகள் சமகாலத்தில் ஒன்றும் கிழித்துவிடவில்லை என்ற கூற்று உண்மை தான். ஆனாலும் நீங்கள் சொன்னது போல் இலங்கை தமிழர் விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வு உன்னதமான‌து!

  ReplyDelete
  Replies
  1. உன்னதமானது என்று சொல்வதை விட புனிதமானது.. மிக்க நன்றி அண்ணா.. உங்களின் வருகைக்கும்...உங்களின் பின்னூட்டலுக்கும்..:)

   Delete
 6. கோசுபாவின் நல்ல பதிவு.

  இலங்கை தமிழன் பிரதீப்September 4, 2012 10:24 PM
  இன்னும் கொஞ்சம் விட்டால் இலங்கையில் இருந்து எந்த குடிமகன் (தமிழரையும் சேர்த்தே) தமிழ் நாடு சென்றாலும் அடிப்பார்கள் போல...

  கொஞ்சம் பொறுங்கள்.என்டா தமிழீழம் கேட்டு போர் செய்யாமல், குண்டு வைக்காமல் தமிழ்நாட்டிற்கு ஏன் வந்தாய் என்று கேட்டு இலங்கை தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் பயங்கரமான (புலிகளின் மரண அடி)இருக்கிறது.

  ReplyDelete