Friday, October 19, 2012

ஜெனிஃபர் லோபஸ்(jennifer lopez) கன்னியா இல்ல கள்ளியா..???

இப்ப கம்பனி இன்னா சொல்லுதுன்னாக்க :- இந்த பதிப்பில் முக்கிய இடத்தினை வகிக்கும் ஜெனிஃபர் லோபஸ் பிரபல பாடகி, திரைப்பட நடிகை ஆதலால் அவரின் படங்கள் எல்லாம் அப்டி இப்டிதான் இருக்கும். இங்கே போடப்பட்டிருக்கும் படங்கள் யாருக்காவது முக சுழிக்கும் வகையில் இருப்பின் படங்களை பார்க்காமல் விஷயத்தை வாசிக்கும்படி கம்பனி அறுதியும் இறுதியுமா கூறுகின்றது...!!!

'வயசானாலும் அவ அழகும் உடல் கட்டும் இன்னும் கொஞ்சம் கூட குறையவில்லை' அப்டியே மெழுகில் செய்துவைத்த பொம்மை போல செமையாக இருக்கா..!!! ஜூலை இருபத்துநான்காம் தேதி 1969ஆம் ஆண்டு மழலையர் பள்ளி ஆசிரியையான கவுடலுப் ரோடிரிகியூஸ் மற்றும் கணினி நிபுனரான டேவிட் லோபஸ் ஆகியோருக்கு ஜெனிஃபர் லோபஸ் நியூயார்க்கின் சவுத் ப்ரோன்க்ஸில் பிறந்தார். இவருக்கு லிண்டா மற்றும் லெஸ்லீ என இரு உடன்பிறந்தவர்கள் உள்ளனர். லோபஸ் அவரது முழுமையான கல்வி வாழ்க்கையை கத்தோலிக்கப் பள்ளியில் கழித்தார். மகளிர் ப்ரெஸ்டோன் மேல்நிலைப்பள்ளியில் அவரது கல்வி வாழ்க்கையை முடித்தார். லோபஸின் 19வது வயதில் அவராகவே பாடுவுது ஆடுவது போன்ற திறமைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சட்ட அலுவலகத்தில் வேலை, நடன வகுப்புகள், மற்றும் மேன்ஹேட்டன் இரவு கிளப்புகளில் நடன நிகழ்ச்சி என லோபஸ் அவரது நேரத்தை பிரித்துக் கொண்டார். இங்கிருந்துதான் 'லோபஸ்' என்ற ஒரு காய்ச்சல் பரவத்தொடங்கியது..!!

Post Comment

Thursday, October 11, 2012

பதிவின் கருத்து ஆழமும், அது புரியாதவர்களின் கொக்கரிப்பும்..!!!

இந்த பதிவினை வாசிக்க தொடங்கும் முன் இந்த பதிவினை வாசித்துவிட்டு வரவும், அந்த பதிவுக்கான பின்னூட்டமே இந்த பதிவு! (பதில் பதிவு என்று பிரபல??? பதிவர் சொல்லலீங்கோ!!!) இந்த பதிவினை நான் எழுதுவதற்கு ஒரு காரணமும் இருக்கின்றது. முன்னம் கூறிய அந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் விடையங்களில் எனக்கும் 90%க்கும் அதிகமாக சம்மந்தம் இருப்பதால் இந்த பதிவினை நான் எழுதுகின்றேன்.. (தலீப்புக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல சக பதிவர் அண்ணாச்சிய கேட்டுதான் தலீப்பு வச்சன் என்ன பஞ்சாஜத்தாக இருந்தாலும் அவர் கூட வச்சுகோங்க..!!!)


ஒத்துகொள்கின்றேன்...!!!

Post Comment

Monday, October 8, 2012

சச்சின் கிரிக்கெட்டின் பிதாமகனா இல்ல பீத்தல் மகனா???

சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் என்ற சச்சின் நல்ல வீரர்..!! அவர் நல்லவர், வல்லவர் நானூறும் தெரிந்தவர். இது பிறந்த குழந்தையை கேட்டாலும் சொல்லும், ஆனால் இப்ப காலம் மாறிப்போச்சு.. அந்த மாறிப்போன காலத்தை பற்றி எழுதியே ஆகணும் என்ற ஒரு ஆர்வத்தில் இந்த பதிவினை எழுத தொடங்குகின்றேன். கன காலமாக உருப்படியாக எதுக்கும் எழுதவில்லை என்பதனால்(நாம எந்த காலம் விசயம் உள்ள பதிவுகளை எழுதியிருக்கம் நாம எழுதுறது எல்லாம் விசயமே இல்லாத பதிவுகள் தானே!!) மூத்த சகோதரர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்கவும் இந்த பதிவினை எழுத தொடங்குகின்றேன். அண்ணாத்த தான் தலீப்பு எல்லாம் எடுத்து தந்தவர். அப்டியே இனியது இணைய நிர்வாகி அண்ணைக்கு ஒரு நன்றியை சொல்லிக்கொண்டு உருப்படியாக உளற தொடங்குவம்..!!!


ஆரம்பம் ஏதோ நல்லா தான் இருக்கு...பாவமையா இந்த பச்ச குழந்தை..!!!

Post Comment