Monday, October 8, 2012

சச்சின் கிரிக்கெட்டின் பிதாமகனா இல்ல பீத்தல் மகனா???

சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் என்ற சச்சின் நல்ல வீரர்..!! அவர் நல்லவர், வல்லவர் நானூறும் தெரிந்தவர். இது பிறந்த குழந்தையை கேட்டாலும் சொல்லும், ஆனால் இப்ப காலம் மாறிப்போச்சு.. அந்த மாறிப்போன காலத்தை பற்றி எழுதியே ஆகணும் என்ற ஒரு ஆர்வத்தில் இந்த பதிவினை எழுத தொடங்குகின்றேன். கன காலமாக உருப்படியாக எதுக்கும் எழுதவில்லை என்பதனால்(நாம எந்த காலம் விசயம் உள்ள பதிவுகளை எழுதியிருக்கம் நாம எழுதுறது எல்லாம் விசயமே இல்லாத பதிவுகள் தானே!!) மூத்த சகோதரர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்கவும் இந்த பதிவினை எழுத தொடங்குகின்றேன். அண்ணாத்த தான் தலீப்பு எல்லாம் எடுத்து தந்தவர். அப்டியே இனியது இணைய நிர்வாகி அண்ணைக்கு ஒரு நன்றியை சொல்லிக்கொண்டு உருப்படியாக உளற தொடங்குவம்..!!!


ஆரம்பம் ஏதோ நல்லா தான் இருக்கு...பாவமையா இந்த பச்ச குழந்தை..!!!


கடந்த 22 ஆண்டுகளாக ஒரே ஒரு ஆளாக நின்னு இந்திய அணிக்காக விளையாடும் வீரர் தான் சச்சின். இவர் அண்மையில் தின பூமிக்கு வழங்கிய பேட்டியில் இன்னா சொல்லியிருக்காருன்னா.. "கடந்த 22 ஆண்டுகளாக நமது நாட்டிற் காக நான் விளையாடி வருகிறேன்.. (அம்புட்டு காலமாய் சலிக்காமல் BAT பிடிக்கும் உழைக்கும் கரம் ஐயா நீர்..!!) இந்தியாவுக்காக விளையாடுவது பெரு மிதமும், கெளரவமும் மிக்க செயலாகும். (ஒருகாலம் நான் விளையாடுவது நாட்டின் வெற்றிக்காக இல்லை எனது சுய வெற்றிக்காக என்று சொல்லிய அதே சச்சின் தான் இப்ப இப்பூடி சொல்லுறார்..என்னால் சிறப்பாக விளையாட முடிய வில்லை என்பதை நான் உணரும் போது நான் விளையாடுவதை நிறுத்திக்கொள்வேன். (செல்லாது செல்லாது நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு..!!நான் ஓய்வு பெற வேண்டும் என்று சிலர் கூறி வருகின்றனர். (சிலர் இல்ல பலர்.. இதுக்காக வாக்கெடுப்பு எல்லாம் நடக்குதாமில்ல..அதிலையாவது பிரியாணிக்கும் குவாட்டருக்கும் VOTE போடாமல் ஒழுங்கா போடுங்கய்யா??) ஓய்வு விஷயத்தில் என் மனம் கூறும் போக்கில் செல்லவே நான் விரும்புகிறேன். தற்போது நான் நல்ல நிலையில் உள்ளதாகவே எனது மனம் கூறுகின்றது. (உனக்கு என்னய்யா குறை 100கோடிக்கு வீடு கட்டி ஈக்கியாம்..) வரும் நவம்பர் மாதத்தில் நான் விளையாடிய பிறகு, (அப்ப இப்போதைக்கு ஓய்வு இல்லைன்னு சொல்லாமல் சொல்லுறார்.. பெரிய அரசியல் வாதியாய் இருப்பார் போல..) மீண்டும் ஒரு முறை என் மனம் என்ன சொல்கிறது என்பதை மறு ஆய்வு செய்வேன். (அப்பவும் என்ன இதே பேட்டியை தானே திருப்பவும் கொடுக்க போறீங்க..நான் விளையாடுவதை நிறுத்தும் போது நான் சரியாக விளையாட வில்லையோ என்ற எண்ணம் எனக்கு ஏற்படுவதை நான் விரும்பவில்லை. (ஏழு கழுத வயசாகியும் நீங்க விளையாடுவதை யாருமே விரும்பலயே பாஸ்..)

ஓய்வு பெற சொன்னா ஓ..ஓ..ன்னு அழுதுடுவனாக்கும்..!!!

ஓய்வு என்பது எனக்கு கடினமானதாக இருக்கும் என கருதுகிறேன். ஏனென்றால் ஓய்வுக்குப் பிறகு என்ன செய்வது என்பதை நான் இதுவரை முடிவு செய்யவில்லை. (நல்ல ஒரு யோசனை சொல்லவா அடித்த சென்சுரிகளை காட்டி VOTE கேட்டு பிரதமராக வந்திடுங்க..அப்ப 1000கோடில கோவில் கட்டலாம்..என்னால் முடியும் என்ற எண்ணம் உள்ளவரை தொடர்ந்து நீடிப்பேன். (அப்ப ஓய்வு இந்த ஜென்மத்தில நடக்க போறதில்ல.. பஞ்சாயத்து முடிஞ்சிரிச்சு எல்லாம் வீட்டுக்கு போங்கப்பா...) வெற்றியை அடைவதற்கான குறிக்கோள் என்னிடம் உள்ளதா? அணியில் உச்சவரிசையில் நீடிப்பதற்கான தகுதி எனக்கு உள்ளதா என்பதை நமது அணியினர் உணர்வதைப் பொறுத்தும் எனது ஓய்வு திட்டம் இருக்கும். (காசு பாதாளம் வரைக்கும் பாயுமாம்.. புரிந்தவங்க கொஞ்சம் சிரிச்சுகோங்க..என்னைப் பற்றி மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் இருந்து நான் விலகி நிற்கவே நான் விரும்புகிறேன். நம்மை விமர்சிப்பவர்களையும், துதிப்பவர்களைப் பற்றி கவலைப்படாமல் அதிககவனத்துடன் விளையாட்டில் முன்னேற வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன். (ஐய் யாலி யாலி இதை அப்பூடியே ஒடோக்கு பின்னுக்கே எழுதலாமே..!!வரும் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் போது ஓய்வு பற்றி அறிவிப்பேனா என்பது குறித்து இப்போதைக்கு ஒன்றும் கூறுவதற்கு இல்லை. (அடப்பாவி கொழுந்து விட்டு எரியும் போது இந்தாளு கொட்டாவி விடுது..அடுத்த மாதத்திற்குப் பிறகு எனது விளையாட்டை நானே மறுமதிப்பீடு செய்து ஓய்வு பற்றியும் எதிர்கால திட்டம் பற்றியும் அறிவிப்பேன்...(அப்ப இந்தாள் மகன் கூடயும் விளையாடீட்டுதான் போகும் போல..)" இவ்வாறு அவர் கூறினார்...

என் உயரத்துக்கு பவுன்சர் போட்டா பேட்டாலயே எறிவன் பார்த்துக்கோ..

உலகக் கோப்பை போட்டிகளின் போது தனது 99ஆவது சதத்தை அடித்த டெண்டுல்கர் ஒர் ஆண்டுக்குப் பிறகு நூறாவது சதத்தை அடித்துள்ளார். (100ஆவது சதம் அடிக்க ஒரு வருஷம் ஆனால் 100கோடில மாளிகை கட்ட ஒரு மாசம்.. நம்மாலும் மாஸ்டர் பிளாஸ்டர் தானுங்கோ..) இடைப்பட்ட காலத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டிகளில் அவர் சரியாக விளையாடவில்லை. (கேட்டா இப்பூடி சொல்லிகொள்ளனும் என்று சிலருட்ட சொல்லி அனுப்பி வைக்குறது போல...) சிலமுறை நூறு ரன்களை நெருங்கும்போது ஆட்டமிழந்து அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார். (ஒரு வருசமா சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வாறார்..என்றது போல ஒரு பெரிய அலப்பரையை செய்தூ முடித்துட்டார்..) அதுகும் இந்த போட்டியை விட்டால் இவனுகள் அடித்து கலைத்து போடுவானுகள் என்று 43.3 வது ஓவரில் 138 பந்துகளில் சதம் அடித்தார். சச்சின் 147 பந்துகளில் 114 ரன்கள் எடுத்து அவுட்டானார். (இருந்தாலும் இது டூ மச்..இது டூ மச்..) இந்த ஒரு வருசத்தில் நல்ல போர்மில் இருந்த எத்தனை வீரர்கள் ஓரங்கட்டப்பட்டார்கள்..  மூத்த வீரர்கள் ஓடி ஒழிந்து கொண்டார்கள்.. இதுக்கான விளக்கத்தை கேட்க போனாலோ கொடுக்க போனாலோ.. (அட்டகாசம் பட பாடல் போல.. "உனக்கு என்ன..உனக்கு என்ன.." என்று கேட்பானுங்க நமக்கு எதுக்கு சாமி வம்பு..)

ஏய் அங்க என்ன கயிறும் கட்டையுமா தொங்குது..!!!

மும்பை செல்லும் அனைவரும், சச்சினின் புதிய சொகுசு மாளிகையை பார்க்க செல்கின்றனர். இதனால், சச்சினின் வீடு விரைவில் சுற்றுலா மையமாக மாறினாலும் ஆச்சரியம் இல்லை. (கலா ரசிகனையா நீர்.. என்னமா சிப்பி சோகி எல்லாம் சேர்த்து ஒல்லாந்தர் காலத்தில கழிப்பறை கட்டுவது போல கட்டியிருக்கியல்..சூப்பர் அப்பு.. இந்த ரசனையை கண்டு நான் வியக்கன்..) இதுக்கு 100கோடி செலவு செய்த நேரத்துக்கு அதை கொழுத்தியிருக்கலாம்.. 5 மாடிகள் கொண்ட சொகுசு மாளிகையில் சச்சின் சமீபத்தில் குடியேறினார். விநாயர் கோயில், நீச்சல் குளம், "மினி-தியேட்டர்' உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இங்குள்ளன. (இந்த வீட்டில சீ..சீ..மாளிகையில் எங்கிட்டு இருந்து 5மாடியை காட்ட முடியும்...) சச்சினின் இரசனை மிக்க 100கோடி மாளிகையை பார்த்து புல்லரித்துப்போக இங்கே கிளிக் செய்யவும்..!! இந்த வீடியோவை பார்க்கும் முன்னம் அனைவீருக்கும் ஒரு அன்பு வேண்டுகோள்... கண்ணுக்கு குத்தும் கண்ணாடி போட்டு விட்டு பார்க்கவும்.. (குழந்தைகள், கர்ப்பிணிகள், வயது வந்தவர்கள் யாரும் பார்க்க வேண்டாம்.. ஏதும் நடந்தா அதுக்கு கம்பனி பொறுப்பு கிடையாது..!!) அதுகும் 41 கார் விடுவதற்க்கு வசதிகள் இருக்குதாம்.. (அது சரி.. ஒவ்வொரு 100க்கும் ஒவ்வொரு கார்.. அற்பனுக்கு பவுசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்..)

இப்பூடியும் ஒரு சில பேர் இருக்கத்தான் செய்கின்றார்கள்..!!!

கொள்ளை உழைப்பில் ஒல்லாந்தர் காலத்து கழிப்பறை போன்ற மாளிகை..பொறுக்கின சிப்பி, சோகியில் ஆடம்பர வாழ்க்கை என்று இல்லாமல்.. உழைத்ததில் பெரும் பங்கை தன் மக்களுக்காக அள்ளி கொடுத்த அளவில்லாத கை.. அதுதான் இம்ரான்கான்.. 100கோடியில் தன் மக்களுக்காக புற்றுநோய்க்கான வைத்தியசாலை ஒன்று அமைத்து கொடுத்தார். (அரசியலில் நீடிக்க செய்தார் என்று சொல்ல வேண்டாம்..) ஆனால் நம்ம சக்கரை(வியாதி) சச்சின் கிட்ட என்ன வாழுது..செத்த சிப்பியும், சோகியும் வாழுது.. இந்த இடத்தில் இருவரில் யார் நல்லவர், வல்லவர் முன்னம் சொன்னது போல நானூறும் தெரிந்தவர் என்று பார்த்தால் உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் அது இம்ரான்கான் தான்.. மட்டும் தான்..!!

யாரு கிட்ட யாரு நிக்குறது..லாரா தள்ளி போய் நில்லும் பார்ப்பம்..!!

டெஸ்ட் போட்டியில் 400 ஓட்டங்களை அடித்தவுடன் சார்.பிரட்மென் உடன் தன்னை ஒப்பிட்டு கதைக்கும் போதும் பத்திரிகைகளில் செய்திகள் வரும்போதும் "இனி இப்படியான செய்திகள் இட வேண்டாம் அவரின் தூசுக்கு கூட நான் ஈடாக மாட்டேன்..என்னை தயவு செய்து அவருடன் ஒப்பிட்டு பேச வேண்டாம்..." என்று லாரா கூறினார். அது மட்டும் இல்லை இவர் ஓய்வு பெரும் போது மேற்கிந்தியத்தீவுகள் அணி மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது அப்போது இவரின் ஓய்வு இப்போது அவசியமா என்று பல விமர்சனக்கட்டுரை வெளி வந்தது.. ஆனால் தான் கூறியது போல ஓய்வு பெறுதல் அவசியம் என்று சார்.பிரட்மென் ஸ்டைல்லில் கூறிவிட்டு ஓய்வினை அறிவித்தார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத கறுப்பு தோலால் போற்றப்பட்ட தூய வெள்ளை உள்ளம் லாரா..!! (இனி அந்தாளை பற்றி சொல்லவா வேணும்..அவர் அப்பவே அப்பூடி இப்ப கேட்கவா வேணும்..)

புகழுக்கு அழுக்கு சேர்க்காமல் கொஞ்சம் தள்ளி நில்லுங்க..(யாரையோ சொன்னேங்க...!!!)

மானம், சூடு, சுரனை இல்லாமல் இன்னும் சார்.பிரட்மென் வாரிசு என்பதை நா கூசாமல் சொல்லிக்கொள்ளும் போதுதான் எனக்கு பச்சடி வார்த்தைகள் சில நியாபகத்து வரும்...(அப்புறம் நான் அதை சாட மாடையா போடா..(பிரபல???) பதிவர் தூசனத்தில் பதிவு எழுதுறார் என்று ஊர் பேசும் இந்த பேரை ஏன் கிரிக்கெட்டின் தந்தையாம் சச்சின் எனக்கு தாறீங்க...) சினிமாவுக்கு ரஜினி போல கிரிக்கெட்க்கு இன்றும் என்றும் சார்.பிரட்மென் தான். அதுக்காக சச்சின் எதுக்குமே லாயக்கு இல்லாதவர் என்று சொல்ல முடியாது.. அவரும் திறமையானவர்தான்.. ஆனால் சார்.பிரட்மென் உடன் ஒப்பிடும் அளவுக்கு அவர் எதுக்கும் செய்திட வில்லையே?? போட்டி தொடங்கு முன்னர் "இந்த போட்டியுடன் நான் ஓய்வு பெறுகின்றேன்.." என்று அறிவித்து விட்டு 00 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போது அவரின் சராசரி 99 அப்போது இந்த போட்டியில் ஓய்வு பெற வேண்டாம் அடுத்த போட்டியில் ஓய்வினை அறிவியுங்கள் என்று கூறிய போது.. ரஜினி ஸ்டைல்லில் "சொன்னது சொன்னது தான்.." என்று சொல்லி ஓய்வு பெற்ற சார்.பிரட்மென் எங்கே.. நம்ம டபுள் சார்.சச்சின் எங்கே.. இவீர் என்னான்னா 100வது சதம் அடிக்க ஒரு வருஷம் எடுத்தவர்.. ஓய்வு பெருவதற்க்கு மனித மனத்தை(அதனை குரங்கு என்று சொல்லுராங்கையா...!!) நம்பும் ஆ..சாமி எங்கே லிப்ட் வைத்தாலும் எட்டுமா??? இனியாவது யாருடனும் யாரையும் வீணாக ஒப்பிட வேண்டாமே!! (நாமளே சொல்லி கேட்க மாட்டம் இவீங்க எங்க கேட்க போறாங்க..!!)

என்ன..சாக்கடையில் நம்ம சச்சின் விளுந்துட்டாரா..???

இந்திய கிரிக்கெட் அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்" சச்சின் அரசியலில் குதித்தார். அவரை ராஜ்ய சபா எம்.பியாக்க மத்திய அரசு செய்த பரிந்துரையை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் ஏற்றார். சச்சினுடன் பாலிவுட் நடிகை ரேகா மற்றும் தொழிலதிபர் அனு அகா ஆகியோரும் ராஜ்யசபா எம்.பியாகின்றனர். (ஐயா இலக்கிய கிழவனையே நாடு தாங்காதம் இதுல இவருமா.. விளங்கிடும்)
அண்ணாத்த சாக்கடையில் விழுந்ததை பத்தி பிரபலம் என்ன சொல்லுதுன்னா "சச்சின் ராஜ்ய சபா எம்.பியாவதை காந்தியவாதி அன்னா ஹசாரே வரவேற்றுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹசாரே, சச்சின் ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் ஊழலுக்கு எதிராக போராடுவார் என தான் நம்புவதாக தெரிவித்தார்..." அப்ப இப்பூடி வாழ்க்கை வழுக்கல் ஆகிகொண்டிருக்கு என்று சொல்லுறீங்க.. (யாருகிட்ட வந்து என்ன பேச்சு பேசுறீங்க.. அவீர்தான் ஒழுங்காக வரி கட்டுற நல்ல கொள்ளை குடிமகனாகும்..!! அப்பூடியே இவீர் போராடி கீராடி கிளித்துட்டாலும்..கிளித்துட போறாரு.. வழி விடுங்கையா காத்து வரட்டும்..!!)

எனக்கு பிடித்த சச்சினும், புன்னகை அரசன் தாதா கங்குலியும்..!!!

ஒரு காலத்தில் எனக்கு அதிகம் பிடித்த கிரிக்கெட் வீரர்கள் படியலில் முன்னிடம் பிடித்த சிகரங்கள்..  சச்சினை அதிகம் பிடித்து போனதால் தான் என்னவோ தெரியவில்லை மற்றவர்கள் முனங்க தொடங்குவதுக்கு முன்னர் நானே ஊளையிட்டு விடுவோம் என்று முடிவு செய்தேன் அதன் விளைவே இந்த பதிவு..!! (கண்ணதாசனின் வரி ஒன்று நியாபகம் வருகின்றது 'இருக்கும் இடத்தில் எல்லாம் இருந்துகொண்டால் எல்லாம் சவுக்கியமே..!!') இது சச்சினுக்கு அதிகம் பொருந்தும் என்று நினைக்கின்றேன்...!!

அதென்ன வயது போன காலத்துல பங்களா நாய் போல மோச மோசன்னு முடிய வளத்துகிட்டு..என்ன ஸ்டைலா...???

இதையும் வாசிக்கவும் :- "புது தும்புத்தடி கொஞ்சம் நல்லா கூட்டத்தான் செய்யும்.." நான் சும்மா பொதுவா சொன்னேங்க.. நான் இலங்கையன் பிறப்பிடம் யாழ்ப்பாணம் பிடித்த அணி இலங்கை தேசிய கிரிக்கெட் அணி.. இதனால் தான் இவன் இப்பூடி எல்லாம் கிரிக்கெட்டின் தந்தை சச்சினை பத்தி எழுதுறான் என்று யாரும் நினைத்தால் அதுக்கு நான் பொறுப்பு கிடையாது.. உங்களுக்கு வேணும் என்றால் நீங்களும் யாரை பற்றியும் எழுதலாம். இலங்கை அணி வீரர்களை பற்றியும் எழுதலாம். சச்சின் என்பதால் மட்டும்தான் இப்பூடியான கொஞ்ச நஞ்சத்தோட கம்பனி விட்டிருக்கு.. அடுத்த இலக்கு வீறாத்து கோழி..!! (ஊர் கோழி கேள்விபட்டிருக்கன், பாம் கோழி கேள்விப்பட்டிருக்கன் இம்பூட்டும் ஏன் ஈமூ..கோழி கூட கேள்விப்பட்டிருக்கன்.. இது புது வகை கோழியாவில்ல இருக்கு..!!!)

"சத்தியமா இது எங்கயும் சுடலீங்கோ..சுயமா சுட சுட எழுதினதுங்கோ.."

Post Comment

No comments:

Post a Comment