Thursday, October 11, 2012

பதிவின் கருத்து ஆழமும், அது புரியாதவர்களின் கொக்கரிப்பும்..!!!

இந்த பதிவினை வாசிக்க தொடங்கும் முன் இந்த பதிவினை வாசித்துவிட்டு வரவும், அந்த பதிவுக்கான பின்னூட்டமே இந்த பதிவு! (பதில் பதிவு என்று பிரபல??? பதிவர் சொல்லலீங்கோ!!!) இந்த பதிவினை நான் எழுதுவதற்கு ஒரு காரணமும் இருக்கின்றது. முன்னம் கூறிய அந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் விடையங்களில் எனக்கும் 90%க்கும் அதிகமாக சம்மந்தம் இருப்பதால் இந்த பதிவினை நான் எழுதுகின்றேன்.. (தலீப்புக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல சக பதிவர் அண்ணாச்சிய கேட்டுதான் தலீப்பு வச்சன் என்ன பஞ்சாஜத்தாக இருந்தாலும் அவர் கூட வச்சுகோங்க..!!!)


ஒத்துகொள்கின்றேன்...!!!ஒத்துகொள்கின்றேன் :- ஒரு மாதத்துக்கு முன்பு நான் POST செய்த ஒரு பதிவு "குயால் ஆகியதால் டமால் ஆகும் பஸ்கள்" ஆகும்.(அதனுடைய ஒரிஜினல் பதிவினை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்) இந்த பதிவு சொல்ல வந்த விடயம் என்னவென்றால் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பஸ்களில் நடை பெரும் லீலைகளையும் யாழ்ப்பாணத்தின் இப்போதைய நிலைமை வெளிப்பாடும்.. போன்ற விடையங்களை உள்ளடக்கியதாக அந்த பதிவு இருந்தது. இந்த பதிவில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பஸ்களில் நடை பெரும் லீலைகள் என்ற பகுதியின் கீழ் வந்த அனைத்து சொற்களும் சுட(திருட)ப்பட்டவையே.!! நான் பதிவினை வெளியிட்டு ஒரு மணித்தியாலத்தில் உண்மையில் அந்த பதிவுக்கு சொந்தகாரருடன் முகப்பொத்தகத்தின் மூலம் தொடர்பு கிடைத்தது அதன் போது ஆரம்பத்தில் நான் செய்ததில் பிடிப்பில்லாமல் இருந்த அண்ணா!!! இறுதியில் 'இப்பதானே பதிவுகள் எழுத ஆரம்பித்து இருக்கின்றாய்.. இப்ப ஓகே இனி இப்படி செய்யாத நான் என்றதால் சும்மா இருக்குறேன் வேறையாரும் என்றால் உன் பதிவுகள் நாசமாகி விடும்..' என்று கூறிய அதே அண்ணா!!! இப்படி ஒரு பதிவினை வெளியிட்டது என்னை மிகவும் வருந்த வைத்தது. இவ்வாறு அவர் பதிவிட கூற முடியாத பல பின்னணி காரணங்கள் இருந்த போதும் மூத்த பதிவர்(2009ஆண்டளவில் எழுத ஆரம்பித்தவர்) அண்ணா!!! இப்படி செய்தது கவலையே..!!! முதலும் கடைசியுமாக இருக்கட்டும் என்பதனால் நான் POST செய்த அந்த பதிவினை உடனடியாக மன உறுத்தலால் நீக்கிவிட்டேன்.(நான் எழுதிய பதிவு என்று அந்த பதிவினை நான் எங்கேயும் குறிப்பிடவில்லை..)

என் பக்க நியாயம் :- நான் அந்த பதிவினை சுட்ட(திருடிய)மைக்கு காரணம் நான் கூற வந்த விடையத்தை அதே பாணியில் கூறியிருப்பதால் அதனை எடுத்துக்கொண்டேன். அது மட்டும் இல்லாமல் நன்றாக தெரிந்த அண்ணா இதனை பெரிய விடயமாக கருத மாட்டார் என்பதனாலும் எடுத்துக்கொண்டேன். அதற்காக "புது தும்புத்தடி நல்லாதான் கூட்டும்.." என்று இந்த சின்னவனை மூத்தவர்கள் சொல்லியது கொஞ்சம் கவலை. சரி பதிவுகளை சுட்டால் கூட பறவாயில்லை சுட்ட பதிவுகளில் LINKஐயாவது மேலே போடலாம் தானே..! என்று நீங்கள் கேட்பது நியாயம் தான்.. ஆனால் என் கேள்வி என்னவென்றால் 'எத்தனை பேர் அந்த லிங்க் ஊடாக போய் பதிவின் சொந்தக்காரரை பார்க்கின்றார்கள்?' அர்த்தமில்லாத ஒன்றினை கடமைக்காக ஏன் போடவேண்டும் என்பதற்காக அதனை நான் போடவில்லை. கண்முன்னே எத்தனையோ என் பதிவுகளும் களவு போயுள்ளன அதனை நான் கண்டுகொள்வதே இல்லை ஏன் என்றால் நான் இங்கே பதிவிடும் பதிவுகள் எழுதுவது எதுக்காக?மற்றவங்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தானே. எனது வலைபூக்குள் வர முடியாதவர்கள், முகவரி தெரியாதவர்களுக்கு எனது கருத்து இன்னொருவர் மூலம் போய் சேருகின்றது என்றால் சந்தோஷம் தானே.!! இறுதியில் எதனை நினைத்து எழுதுகின்றோமோ அது நடை பெறுகின்றது தானே.. அது போதும் என்பதனால் நான் இந்த எழுத்து திருட்டு பத்தி அக்கறை கொள்வதில்லை..!! (என்னை போல எல்லோரையும் நினைத்தது பிழை தானுங்கோ..) "தூற்றுபவர் தூற்றட்டும் போற்றுபவர் போற்றட்டும்நான் எனது வழியில் முன்னேறி செல்வேன்.." யாரோ சொன்னார்களாம் "அணையப்போற விளக்கு பிரகாசமாகத்தான் எரியும்.." என்று இதுக்கு நான் விளக்கம் சொல்வதாக இல்லை..போக போக செயலில் காட்டுவதாக இருக்கின்றேன்..!!


இது செல்லாது செல்லாது...!!!

விசயமே அற்ற பதிவுகள் :- சரி அண்ணா நான் சுட்ட(திருடிய)து பற்றி எழுதியிருந்தார் அதில் ஒரு நியாயம் இருக்கு.. ஆனால் இப்படி சொல்வதில் என்ன நியாயம் இருக்கின்றது என்று எனக்கு தெரியவில்லை?? சரி இப்பூடி சொன்னது எனக்கு சொல்ல வில்லை என்றாலும் இந்த கருத்தினை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அது பற்றி கொஞ்சம் பாப்போம்..!!!

இது வரைக்கும் நான் எழுதிய பதிவுகள் (சுட்ட(திருடிய) அந்த பதிவினை விட்டு) 51 ஆகும். அது தொடர்பான விபரங்கள் பின்வருமாறு..!!

1. எனது வலைப்பூ பதிவின் பெயர் உருவாகியதற்கான அறிமுகம்...
2. தமிழ் உலகின் முதல்வரலாற்று நாவல்...
3. நிஜ ஹீரோ 'தல'தான்.... (பாகம்-1)
4. தமிழா ஒருமுறை திரும்பி பார்...?
5. நிஜ ஹீரோ 'தல'தான்.... (பாகம்-2)
6. சிங்கள மொழியும் அதன் வரலாறும்...(பாகம்-1)
7. சிங்கள மொழியும் அதன் வரலாறும்...(பாகம்-2)
8. ஒல்காப் புகழ் தொல்காப்பியம்..(பாகம் - 1)
9. வன்னியில் விபச்சாரமாம்,அடுத்தகட்ட போருக்கு தயாரா...
10.ஒல்காப் புகழ் தொல்காப்பியம்...(பாகம் - 2)
11.மறைக்கப்பட்ட ஈழத்தந்தை "செல்வா"வின் புகழ்..
12.போரும் இல்லை,பொழிவும் இல்லை...?
13.(ஜீ.ஜீ.)பொன்னம்பலமும் பொற்சுவடுகளும்...
14.தமிழக சினிமாவில் இலங்கை தமிழர்கள் அங்கீகரிக்கப்படுவார்களா?
15.சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்கம் 2011 உலக கிண்ணம் வரை..
16.அம்மா பகவான் ஒரு ச(த)ரித்திரம்...
17.கருணாநிதி நீங்கள் எந்த ஆணியையும் புடுங்கவேண்டாம்.....
18.நிலா ரசிகை காதல்கொள்கிறாள்...
19.உலகம் போற்றும் மகாத்மாவின் மறுபக்கம்...?
20.அஜித்தின்னா அஜித்தான்...
21.சகுனி..நியத்திலும் சகுனி...!
22.ஜோதிடத்தை நம்பலாமா..வேண்டாமா..?
23.SU KO's முதற்கனவு...!!!
24.அஜித்தின் நிஜ ரசிகன் தனுஷா...சிம்புவா...?
25.சந்தானம் காமடியனா ஹீரோவா...?
26.சிங்கள Girls VS தமிழ் Girls...!
27.டேய் என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷம...
28.யாராலும் கணிக்க முடியாதவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன்..
29.நடிகர்களின்(ரஜினி,அஜித்,விஜய்) கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது    பிழையா சரியா?
30.இனி ஒரு முறை இலங்கையில் இனப்பிரச்சனை தலை தூக்குமா....
31.தல ரசிகனாக இருக்கிறதுக்கு எந்த தகுதியும் தேவையில்ல...
32.காதல் ஜோடி...காதல் ஜோடி...கேட்டியா..? அவங்க கடற்கர...
33.தேவ(ர)டியார்கள் ஒரு கலாச்சாரம்!!!
34.குளுகுளு நயன்தாராவின் கிளுகிளுப்பு..!!!
35.சூர்யா : போதும் நிறுத்திக்கொள்ளுங்க PLEASE..!!!
36.மைக்கல் ஜாக்சன் ஒரு சபிக்கப்பட்ட மனிதன்..!!!
37.தனுஷும் இருமுனையப் பிறழ்வும்(Bipolar disorder)..!!...
38.கமலுக்கு அதிகம் வாளி வைக்கும் : சூர்யா..!!!
39.தமிழ் இனி மெல்லச்சாகும்...சாகுமா???
40.ஏன் நம்புகின்றார்கள் எதுக்காக நம்புகின்றார்கள்???
41.இலங்கையனாக வாழ்வோம்; இலங்கையானகவே இறப்போம்..!!!
42.விஸ்வரூபம் : முடிவில்தான் ஆரம்பம்..!!!
43.கருணா.. நல்லவர் ரொம்ப ரொம்ப நல்லவர்!!!
44.தல.. தல.. தல.. தல மட்டும்தான்..!!!
45.18 வயசு... பயத்தினில் பாதி பயங்கரம்..!!!
46.நாம் தமிழர் : இன்னமும் ஏழு மணித்தியாலங்களில் தமிழீழம் அறிவிப்பு..
47.பூனம் பாண்டே எங்களை பொங்க வைக்கும் கவர்ச்சி புயல்....
48.எப்பாடு பட்டாகினும் பெற்ற சுதந்திரம்..!!!
49.பதற வைக்கும் நடிகைகளின் படுக்கையறை காட்சிகள்...!!!...
50.SEXY ஆன அமலா பால் ; நாளைய அண்ணா ஹசாரே..!!
51.சச்சின் கிரிக்கெட்டின் பிதாமகனா இல்ல பீத்தல் மகனா?...

இதில் எந்த பதிவினை/பதிவுகளை விசயம் அற்ற பதிவுகள் என்று சொல்கின்றார்கள் என்று தெரியவில்லையே..!! (எல்லாமே அப்படி இருக்குமோ.!!) மொத்தத்தில் 26 பதிப்புக்கள் சினிமா, விளையாட்டு தவிர்ந்த பதிப்புகள்.. அதாவது அரசியல், தமிழ், வரலாறு, ஈழம், இலங்கை, இந்தியா போன்ற வகைகளுள் அடக்க கூடியவை..மிகுதி 25 பதிவுகளும் தான் சினிமா, விளையாட்டினை கொண்ட பதிவுகள்.. இப்ப சொல்ல வாற விசயம் என்னன்னாக்க "தமிழ் இனி மெல்ல சாகும்???" என்ற பதிவின் மூன்று மடங்கு வாசகர்களை கொண்ட பதிவு "பூனம் பாண்டே எங்களை பொங்க வைக்கும் கவர்ச்சி புயல்" என்ற பதிவு ஆகும். குற்றம் என்னில் உள்ளதா இல்லை என்னை இது போன்று எழுத தூண்டும் வாசகர்களில் உள்ளதா?? ஒரு சமூகம் எதனை எதிர்பார்க்கின்றது என்பதனைத்தான் ஒரு எழுத்தாளனால் கொடுக்க முடியும்.. (சாட்டோட சாட்டாக நம்மள நாமளே எழுத்தாளன் என்று சொல்லிக்கொண்டால் தான் உண்டு..இல்லையேல் எவனும் சொல்ல மாட்டான்...) அதை விட்டு விட்டு நான் சமூக அக்கறையுடன் தான் பதிவினை போடுவேன் என்றால் சத்தியமாக எனக்கு அந்த அக்கறை, சக்கரை எல்லாம் கொஞ்சமும் கிடையாது..!! தமிழ் சாகுமா?? இல்லை தவழுமா?? என்று பட்டிமன்றம் வைக்க வேண்டிய காலம் எல்லாம் முடிந்து விட்டது. அப்படியான தலைப்பினை போட்டால் யாருமே வர மாட்டார்கள். (அப்ப என்ன ஈ..ஈ..ஈ.. கலைகுறதா??) ஒரு சின்ன உதாரணம் பிரபல பதிவர் Kishoker Andrés Lionel Yuva அண்மையில் ஆர்வம தாங்க முடியாமல் FOOTBALL வீரர்களை பற்றி ஒரு பதிவு எழுதினார் அந்த பதிவு 200 வாசகர்களை தாண்ட பட்ட பாடு.. ஆனால் அதே பதிவர்தான் "குஷ்பூவின் இடுப்பை கிள்ளியது யார்?" என்று ஒரு பதிவினை எழுதினார். அந்த பதிவு 2000 அதிகமான வாசகர்களை கொண்டு அவரின் வலைப்பூவில் வாசகர்களுக்கு பிடித்த முதலாவது பதிவாக இருக்கிறது. (இப்ப புரியனுமே யார் மேல பிழை என்று..) வாசகர்களில் எண்ணிக்கையை அதிகரிக்க கிளுகிளுப்பாக எழுதவேண்டும் என்றால் அதுக்கு எத்தனையோ கா...கதைகள் தளங்கள் இருக்கின்றது. (இந்த விசர் கதை எல்லாம் கதைக்க கூடாது என்ன புரிகிறதா) அதனால இப்ப கம்பனி என்ன சொல்லுதுன்னா.. விசயம் உள்ளதோ இல்லாததோ வாசகர்கள் என்டேர்டைன்மென்ட்டாக, FUN ஆக வாசிக்க கூடிய பதிவுகைளை எழுதும் போது தான் அவ்வப்போது எழுதப்படும் விசயம் உள்ள சக்கரை..சீ..சீ அக்கறை பதிவுகளையும் வாசகர்கள் கண்டுகொள்வார்கள்.. அந்த பதிவுகளை வாசகர்களை போய் சேரும் என்பதே ஆகும்..!!!


நான் என்ன சொல்லீலீங்கோ..!!

விமர்சனம் எழுதுவது எப்படி :- மூத்த பதிவர்கள் அல்லது முக்கிய நபர்கள் அல்லது சமூக அக்கறை புத்திஜீவிகள் யாரவது இருந்தால் இதனை கொஞ்சம் சொல்லி தாங்கோ.. :P பில்லா-ii இனை பற்றி நான் எழுதிய கருத்து மிகவும் பிரபலமாக நோண்டியாக்கப்பட்டது. ஏன்னா அந்த படம் உட்ட்டர் பிளாப்பாம் அப்படியே வைத்துகொள்ளுவம்.. (SORRY MY DEAR THALA..) உங்களது ரசனை வெறு எனது ரசனை வேறு.. ஒரு படத்தின் விமர்சனம் எழுதும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை.. தல படம் என்பதனால் ஒரு ஆர்வத்தில் எழுதிவிட்டேன். அது மட்டும் இல்லை எனக்கு அந்த படம் பிடித்திருந்தது.. கத்திரிகள் பல இடத்தில் விளையாடி இருந்தாலும் ஒரு gangster இன் வாழ்க்கையை காட்டிய படம் என்பதனால் எனக்கு அதனை பிடித்தது. (எனக்கு ரசனையே இல்லை.. பில்லா-iiவை போய் நல்ல படம்ன்னு சொல்லுறானே..என்று யாரும் நினைத்தால் அவர்களுக்கு ஒண்ணு சொல்லுறேன் முகமூடி, தாண்டவம் ரெண்டையும் சூப்பர் ஹிட் படம்ன்னு சொன்னவர்களும் முகமூடி ஒரு சூப்பர் ஹீரோ படம்ன்னு விழுந்து விழுந்து பார்த்தவர்களும் கூட்டத்தில் இருக்கின்றார்கள் என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கின்றேன்....) எனக்கு பிடித்ததை தான் எனது வலைப்பூவில் எழுத முடியும். உங்களுக்கு பிடிக்க வேண்டும் என்பதற்காக எனது ரசனையை விற்று/விட்டு எழுத வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. உங்களுக்கு விருப்பம் என்றால் வாசியுங்கள் இல்லையேல் போங்கள் கட்டாயமாக வாசிக்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லையே..!!! இப்போது கூட நான் ஒத்துகொள்ள மாட்டேன்.. பில்லா-ii தொடர்பான என் கருத்து பிழை என்று ஒரு ரசிகன் என்ற வகையில் என்னை திருப்தி செய்த படம்.. உங்களுக்கு எப்படி முகமூடி, தாண்டவமோ அது போலதான்.. (அதுக்காக அந்த படங்களுடன் பில்லா-ii ஒப்பிட முடியாது..)

சத்தியமா என்ன எழுதியிருக்கு என்று புரியலீங்கோ..!!!

என்னடா இவன் "முதல் சொல்லி இருக்கின்றான், வாசிக்கிற ஆக்களுக்குபிடிச்சத தான் எழுத முடியும் என்று, பிறகு சொல்றான், வாசிக்கிற ஆக்களுக்கு பிடிச்சத எல்லாம் எழுத முடியாது என்று... எனக்கு பிடிச்சதத்தான் எழுதுவன் எண்டு" ஆக மொத்தத்தில் இவீன் நல்லவனா இல்லை கெட்டவனான்னு நீங்க குழம்புறது எனக்கு புரியுது... ஆக மொத்தத்தில பஞ்சாஜத்து என்ன விளக்கம் சொல்லுதுன்னா "இப்ப நான் x என்ற மூத்த பதிவர் ஒருத்தருட்ட இருந்து காம கதைகளை அவர் எழுதணும் என்று எதிர் பார்க்குறேன் ஒரு வாசகனாக...அதுக்காக அந்த x என்ற மூத்த பதிவர் காம கதைகளை bloggஇல் எழுத முடியுமா...???
என்ன தான் வாசகனாக இருந்தாலும் எழுதுபவனுக்கும் வாசிப்பவர்களுக்கும் ஒத்து போகணும் அப்டியான ஒரு தலைப்பு இருந்தால் கட்டாயம் எழுதுவேன் யார் என்ன சொன்னாலும் எழுதுவேன்..." இப்ப புரிஞ்சுகுநீங்களா?? புரிஞ்சுகோங்க..நல்லா புரிஞ்சுகோங்க..!!

வழமையாக எல்லோரும் போடுவது போல சொல்லுறது எல்லாத்தையும் சொல்லிவிட்டு கடைசியில்... சமாளிப்புக்காக போட்டு முடித்து விடுவம்..!!!

"இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை, அவ்வாறு இருந்தால் இந்த சிறியவனை மன்னித்துக்கொள்ளுங்கள்.."

Post Comment

4 comments:

 1. அடிக்கடி பதிவுலகம் வராததால் இருண்டதும் தெரிவதில்லை விடிந்ததும் தெரிவதில்லை ஆனால் ஏதோ நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிகிறது...

  தங்கள் பதிவுகளை இதற்கு முன்னர் படித்தேனோ இல்லையோ தெரியவில்லை... ஆனால்...

  பதிவுத்திருட்டு என்பது பதிவர்களின் ஆரம்ப நாட்களில் இடம்பெறும் சாதாரண நிகழ்வு என நினைக்கிறேன்...

  ஆனால் இந்த இடத்தில் அதை நீங்கள் உணர்ந்து கொண்டது. தங்களுக்கு கிடைத்த முதல் பெரும் வெற்றி... மற்றும்படி மற்றவர் கதைக்கெல்லாம் செவி கொடுக்கத் தேவையில்லை என நினைக்கிறேன்..

  நீங்கள் தனித்து நிலைத்து நிற்க வேண்டும் என்றால் உங்களுக்கென ஒரு பாதை அமைத்து அதில் நடவுங்கள் உலகம் தானே உங்களைத் திரும்பிப் பார்க்கும் சகோ...

  ReplyDelete
  Replies
  1. எனது முதல் முதல் பதிவில் உங்களது வாழ்த்தும்..."உண்மையில் ஆழமான தொரு விடயத்துடனேயே தங்கள் ஆரம்பம் மகிழ்ச்சி தருகிறது...

   தொடருங்கள்...

   தங்களை ஒரு குழுமத்தில் அறிமுகப்படுத்துகிறேன்..

   அன்புச் சகோதரன்...
   ம.தி.சுதா
   இலங்கைப் பதிவரின் முதல் குறும்பட வெளியீடும் தமிழ் இணைய உலகில் வித்தியாசமான வெளியீடும்" comment உம் இருக்கின்றது... நீங்கள் மறக்கலாம் ஏன்னா நீங்க ஆயிரம் பதிவுகளை வாசித்து இருப்பீர்கள் ஆனால் நான் மறக்க முடியாது ஏன்னா நான் எழுதினது 52 பதிவுகள் தான்....

   ///ஏதோ நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிகிறது.../// எபூட்டு முடியுமோ அம்புட்டும் செய்துட்டாங்க... சரி முடிந்தது முடிந்திரிச்சு...இனி அப்டி நடக்காமல் பார்த்துகொள்ளுவம்.. நிட்சையமாக ///மற்றும்படி மற்றவர் கதைக்கெல்லாம் செவி கொடுக்கத் தேவையில்லை என நினைக்கிறேன்../// யார் பேச்சையும் கணக்கில் கொள்வதாக இனி எண்ணம் இல்லை...போற்றினாலும் சரி தூற்றினாலும் சரி...

   //நீங்கள் தனித்து நிலைத்து நிற்க வேண்டும் என்றால் உங்களுக்கென ஒரு பாதை அமைத்து அதில் நடவுங்கள் உலகம் தானே உங்களைத் திரும்பிப் பார்க்கும் சகோ..// அடுத்து வரும் பதிப்புகளில் உங்கள் கருத்துகளுக்கு வலு சேர்ப்பது போல எனது ஆக்கங்கள் இருக்கும்..நன்றி சகோ...மதி...சுதா..

   Delete
 2. ம் இப்போது அப்படியே நினைவில் இருக்கிறது....

  உண்மையில் பதிவுலகத்தை பொறுத்த வரை போராடியே தான் தீரவேண்டும் சகோ.. அது எழுதாத விதி...

  குறுக்கு சந்தில் முன்னேறுவதென்றால் எப்படி என்று நிங்களே சொல்லிவிட்டீர்களே...

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்..ம்ம்ம்.. உங்களை போன்ற ஒரு சிலர் சொல்லும் ஒரு சில வார்த்தைகளில் தான் நானும் ஏதோ எழுதுகின்றே...எழுத முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுகின்றது.. மிக்க நன்றி...

   Delete