Friday, October 19, 2012

ஜெனிஃபர் லோபஸ்(jennifer lopez) கன்னியா இல்ல கள்ளியா..???

இப்ப கம்பனி இன்னா சொல்லுதுன்னாக்க :- இந்த பதிப்பில் முக்கிய இடத்தினை வகிக்கும் ஜெனிஃபர் லோபஸ் பிரபல பாடகி, திரைப்பட நடிகை ஆதலால் அவரின் படங்கள் எல்லாம் அப்டி இப்டிதான் இருக்கும். இங்கே போடப்பட்டிருக்கும் படங்கள் யாருக்காவது முக சுழிக்கும் வகையில் இருப்பின் படங்களை பார்க்காமல் விஷயத்தை வாசிக்கும்படி கம்பனி அறுதியும் இறுதியுமா கூறுகின்றது...!!!

'வயசானாலும் அவ அழகும் உடல் கட்டும் இன்னும் கொஞ்சம் கூட குறையவில்லை' அப்டியே மெழுகில் செய்துவைத்த பொம்மை போல செமையாக இருக்கா..!!! ஜூலை இருபத்துநான்காம் தேதி 1969ஆம் ஆண்டு மழலையர் பள்ளி ஆசிரியையான கவுடலுப் ரோடிரிகியூஸ் மற்றும் கணினி நிபுனரான டேவிட் லோபஸ் ஆகியோருக்கு ஜெனிஃபர் லோபஸ் நியூயார்க்கின் சவுத் ப்ரோன்க்ஸில் பிறந்தார். இவருக்கு லிண்டா மற்றும் லெஸ்லீ என இரு உடன்பிறந்தவர்கள் உள்ளனர். லோபஸ் அவரது முழுமையான கல்வி வாழ்க்கையை கத்தோலிக்கப் பள்ளியில் கழித்தார். மகளிர் ப்ரெஸ்டோன் மேல்நிலைப்பள்ளியில் அவரது கல்வி வாழ்க்கையை முடித்தார். லோபஸின் 19வது வயதில் அவராகவே பாடுவுது ஆடுவது போன்ற திறமைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சட்ட அலுவலகத்தில் வேலை, நடன வகுப்புகள், மற்றும் மேன்ஹேட்டன் இரவு கிளப்புகளில் நடன நிகழ்ச்சி என லோபஸ் அவரது நேரத்தை பிரித்துக் கொண்டார். இங்கிருந்துதான் 'லோபஸ்' என்ற ஒரு காய்ச்சல் பரவத்தொடங்கியது..!!


நெஞ்ச தொடுறதுன்னா இதுதானா???

இப்படியே காலம் போய்க்கொண்டிருக்கும் போது 1987 ஆம் ஆண்டில் 'மை லிட்டில் கேர்ல்' எனற திரைப்படத்தில் ஒரு சிறிய பகுதியில் வாய்ப்பு கிடைத்தது. சில மாதங்கள் நடன வாய்ப்புக்கள் பல கிடைத்தன. பின் நடனக் கலைஞராக பல்வேறு ராப் இசை வீடியோக்களில் லோபஸ் தேர்வு செய்யப்பட்டார். "கேம்ஸ்" பாடலுக்காக 1991 ஆம் ஆண்டின் அமெரிக்க இசை விருதை அவர்கள் பெற்றனர். 1990 ஆம் ஆண்டில் 'இன் லிவ்விங் கலர்' என்ற தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சியில் "ஃப்ளை கேர்ல்" நடனக் கலைஞராக முதன் முதலில் நிரந்தர இடத்தைப் பிடித்தார். ஜானெட் ஜாக்சனுக்காக நடனக்கலைஞராக மாறினார் மேலும் அவரது 1993 ஆம் ஆண்டு வீடியோவான "தட்ஸ் த வே லவ் கோஸ்" இல் லோபஸ் நடனமாடி கலக்கி இருந்தார். வெருமனையே 24 வயதில் புகழின் உச்சத்துக்கு ஏணியை போட்டுவிட்டார். அன்று தொடங்கிய ஆட்டம் இன்றுவரை கோலாகலம்..!!

லோபஸ் ஆட்டத்துல இது புது ரகமா இல்லே இருக்கு..!!!

1993ஆம் ஆண்டிலிருந்து 1999ஆம் ஆண்டுவரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஒரு சில வீடியோக்களிலும் தலையை காட்டி வந்தார். முழு உருவத்தையும் பிரபஞ்சம் அறிய வைத்தது என்னவோ 1999ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட முதலாவது இசை தட்டுதான். ஆறு சுரங்கப்பாதை இணைப்புகளை மேற்கோள் காட்டி கேஸ்டில் ஹில்லில் எடுக்கப்பட்ட லோபஸின் முதல் ஆல்பம் ஜூன் மாதம் 01ஆம் தேதி 1999ஆம் ஆண்டு வெளிவந்து பட்டையை கிளப்பியது. மேலும் "பில்போர்ட்" 200 இல் முதல் பத்து இடத்தை அடைந்தது. இந்த ஆல்பம் "பில்போர்ட் ஹாட்" 100 இன் முதல் தர முன்னணி தனிப்பாடலாக "இப் யூ ஹேடு மை லவ்" என்ற பாடலும் அதே போன்று சிறந்த பத்து பட்டியலில் "வெய்ட்டிங் பார் டுநைட்" என்ற பாடலும் இடம் பெற்றது. ஆரம்பமே அமர்க்களமாக தொடங்கியது. தொட்டது எதுவோ அதுவெல்லாம் பொன்னாக மாறத்தொடங்கியது..!!! ஜெனிஃபர் லோபஸ்ஸின் குரலும் கும்முன்னு இருக்கும் உடல் வாகுவும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது. சொன்னால் என்ன 'ஜெனிஃபர் லோபஸ் பத்தியம்' என்று சொல்லும் அளவுக்கு பலர் இருந்திட இப்போதும் காண்கின்றேன். இப்பவே இப்டீன்னா அப்ப கேட்கவா வேணும்.!!!

யு ஆர் செக்ஸ்ய் ஐ நோ இட்..!!!

தந்தைக்கோ, தாய்க்கோ பாடலுக்கும், நடனத்துக்கும் சம்மந்தம் இல்லை. தானாக வந்த கலை என்பதனால் அதில் உள்ளா ஈடுபாடும், ஆர்வமும் ஜெனிஃபர் லோபஸ்க்கு அதிகம். இதனால்தான் 43 வயது ஆனா பின்பும் புகழும் குறையவில்லை திரையில் தெரியும்போது அழகும் கொஞ்சம் கூட குறையவில்லை. லோபஸின் இரண்டாவது ஆல்பமான "ஜே.லோஜனவரி 23, 2001 அன்று வெளியிடப்பட்டது. இரண்டாம் ஆல்பம் முக்கியமாக எந்த எந்த பரிசுகளை தட்டி செல்ல வேண்டுமோ அத்தனையையும் தன்பக்கம் ஈர்த்துக்கொண்ட்டது. அந்த பாரிய வெற்றிக்கு பிறகு லோபஸ் அவரது மூன்றாவது ஸ்டுடியோ ஆல்பமான "திஸ் இஸ் மீ... தென் அண்ட்..நவம்பர் 26, 2002 அன்று வெளியிட்டார். இந்த ஆல்பத்தில் இடம்பெற்ற "ஆல் ஐ ஹொவ்.." என்ற பாடல் பல வருடங்களாக முக்கியமான ஹாட் பாடல் வரிசையில் முன்னிலையில் இருந்தது. ஒரு ஆண்டு இசைத் துறையில் இருந்து விலகி இருந்த பிறகு மார்ச் 1, 2005 அன்று லோபஸ் அவரது நான்காவது ஸ்டூடியோ ஆல்பமான "ரீபர்த்தை வெளியிட்டார். இதன் பிறகு ஐந்தாவது, ஆறாவது ஆல்பமாக ரீமிக்ஸ் பாடல்களை வெளியிடார். லோபஸ் அவரது ஏழாவது ஸ்டூடியோ ஆல்பமாக "லவ்" அமைந்தது. எத்தன ஆல்பம் வந்தாலும் "ஜே லோ" ஆல்பத்தில் வரும் பாடல்களையும் அந்த காலத்து ஜெனிஃபர் லோபஸ்சையும் யாராலும் மறந்துவிட முடியாது..!! எல்லாமே சூப்பர்..அத்தனையும் சூப்பர்..!!!

இது என்ன கோவில் உண்டியலா..???

எவ்வளவத்துக்கு எவ்வளவு புகழும் பேரும் இருக்கின்றதோ அவ்வளவத்துக்கு அவ்வளவு சர்ச்சைகளும் கிசுகிசுக்களும் இருக்கத்தான் செய்யும். அதனை எல்லாம் தூசு போல தட்டி போட்டுவிட்டு முன்னேறும் நபர்களால்தான் மேலும் முன்னேற முடியும் என்பதற்க்கு ஜெனிஃபர் லோபஸ் ஒரு பெரிய உதாரணம். 15வது வயதில் இருந்து சர்ச்சைகளும் கிசுகிசுக்களும் இன்றுவரை ஜெனிஃபர் லோபஸ் பின்னே வலம் வந்துகொண்டுதான் இருகின்றது. ஆரம்பத்தில் 1984 ஆம் ஆண்டில் மேல்நிலைப்பள்ளியில் லோபஸுக்கு பதினைந்து வயதிருக்கும் போது டேவிட் குரூஸுடன் நட்பு வைத்திருந்தார். நட்பு என்றால் நட்பு மட்டுமா??? இல்ல??? நமக்கு ஏன்யா இந்த ஊர் வம்பு..!! 1994 ஆம் ஆண்டில் அவர்கள் இருவரும் பிரிந்தனர். அவர்கள் பிரிந்தபோதும் மேலும் பத்து வருடங்களுக்கு குரூஸின் நெருக்கமான நட்பை லோபஸ் தொடர்ந்தார். 2004 ஆம் ஆண்டில் லோபஸ் கூறும் போது: "அவர் எனது நண்பர் மேலும் மற்றவர்களுக்கு தெரிந்ததை விட என்னைப்பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும்" எனக் கூறினார். அதுசரி தெரிந்திருக்கத்தானே வேணும்..ஏன்னா அம்புட்டு நெருக்கமா தானே நட்பு..நட்பு வைத்திருந்தார்கள்.!!

கிஸ் அடிச்சா மூக்கும் மூக்கும் முட்டிக்குமா... இப்ப என்ன சொல்லுறீங்க இளைய தளபதி...!!!

இந்த பிரிவுக்கு இடையில் 1997ஆம் ஆண்டு முதல் முதலில் ஜெனிஃபர் லோபஸ் திருமணம் செய்தார். (திருமணம் மட்டும்தான் முதல் முதலில்..!!! புரிஞ்சவன் சிரிச்சுக்கோ..!!!) மியாமி உணவுவிடுதியில் பணியாளராக இருந்த சமயத்தில் லோபஸ் நோவாவை சந்தித்தார். சந்தித்த உடனேயே இருவருக்கும் காதல்..காதல் வந்ததும் கல்யாணம்..கல்யாணம் முடிந்த உடன் விவாகரத்து...1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருவரும் விவாகரத்து செய்தனர். இத்தோட நின்னதா...இல்லை... தொடருமா?? கல்யாணங்கள்..!! பிறகு 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் லோபஸ் பாசதெனாவில் உள்ள மேட்ரீஸ் உணவுவிடுதியின் மேலாளராக நோவாவை நியமித்தார். ஆனால் 2002 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். பதவி நீக்கத்தின் காரணமாக லோபஸின் மேல் நோவா வழக்குத் தொடர்ந்ததுக்குப் பிறகு அவர்கள் ஒரு இரகசிய ஒப்பந்தத்தை அமைத்தனர். இவர் வாழ்கையில் வந்த சட்ட சிக்கல்களை எழுத போனால் பார்ட்-2உம் எழுத வேண்டும் என்பதால் இதுபத்தி விளாவரியாக கதைக்காமல் அடுத்த கல்யாணத்தை பற்றி பார்ப்பம்..!! இறுதியாக அவரது இசை தொகுப்புக்கு உதவியாக இருந்த நடிகர் ஒருவரான "மார்க் அந்தோனி" என்பவரை திருமணம் செய்தார். 2008ஆம் ஆண்டு காதலர் தினமன்று அவரையும் விவாகரத்து செய்ய போவதாக கூறி எல்லோரின் மனதிலும் அடுத்தது யார்?? என்ற ஒரு கேள்வியை கிளப்பிவிட்டார். ஆனால் இப்போதுவரைக்கும் இருவரும் ஒன்றாக இருபதாக கேள்வி.!! உள்ளுக்கு என்ன நடக்குதோ தெரியாது..!! நட்புக்குள் இதெல்லாம் சாதாரணமப்பா..!!!

பத்தோட பதினொன்னு..!!!

ஜே.லோ எனப் பெரும்பாலும் செல்லப்பெயரால் அழைக்கப்படும் இவர் ஒரு அமெரிக்க நடிகை, பாடகி, இசைப்பதிவு தயாரிப்பாளர், நடனக்கலைஞர், ஆடை அலங்கார வடிவமைப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்பாளர் ஆவார். ஃபோர்ப்ஸை பத்திரிகையின் படி ஹாலிவுட்டின் லத்தின் அமெரிக்க தலைமுறையினரில் லோபஸ் மிகவும் செழிப்பானவர் ஆவார். இப்படியான பல போஸ்ட்க்களை தன் பக்கம் வைத்திருக்கும் அம்மணி..!! அண்மையில் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற 'லடினோ டிஸ்கோ' இசை நிகழ்ச்சியில் இவ்வருடம் ஜூன் மாதம் பதின்நான்காம் தேதி கலந்துகொண்டு நிகழ்ச்சியை பார்க்க வந்த எல்லோரையும் கவர்ச்சியால் உறைய வைத்தார். இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போது அவருக்கு சரியாக 43 வயதாகின்றது என்பதை சொல்லிகொள்கின்றேன். மேலும் சொல்லபோனால் நம்ம S.J.SURYA சொன்னது போல "இருக்கு ஆணா இல்ல.." என்றது போல ஒரு பீதியை கிளப்பி விட்டார்.. அது என்னன்னா அந்த இசை நிகழ்ச்சிக்கு அவர் ஒருவிதமான ஆடை அணித்து வந்தார் அந்த ஆடையில் துணி இருக்கா இல்லையா?? அது துனியா இல்லை ஜெனிஃபர் லோபஸ்ஸின் தோலா?? என்று எல்லோரையும் யோசிக்க வைத்தது..!!(எல்லோரும் யோசிச்சாங்கலாம்..நீங்களும் கொஞ்சம் யோசியுங்கோவன்..யோசிக்க மட்டும்தான் இந்த படங்கள்..!!!)

எங்க கொஞ்சம் சொல்லுங்க பார்ப்பம்..!!!

இருக்கு ஆனால் இல்லை..!!

இழுத்த மூச்ச விட்டுட்டு பாருங்க..!!!

சில்மிசம்,கவர்ச்சி,நடனம் என்பதோடு நின்றுவிடாமல் சமூக அக்கறையோடு உழைத்த காசை கொஞ்சம் செலவு செய்கின்றார். தற்போது லோபஸ் கக்குவான் இருமலுக்கான தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு ஊக்குவிப்பதிலும் ஈடுபட்டு வருகிறார். லோபஸ் அந்த நோய்க்கான விழிப்புணர்வு மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஊக்குவிப்பதற்காக செய்துவருகிறார். 

இன்று வரைக்கும் 24 படங்களை நடித்திருக்கின்றார். இன்னும் 3 படங்கள்(த பேக்-அப் ப்ளான், த கவர்நெஸ், டெட் சீரியஸ்) வரவிருக்கின்றன. இப்படியான கவர்ச்சி, இசை, நடனம் சேவை செய்த அம்மணிக்கு ஒரு வாழ்த்துக்களை சொல்லிக்கொண்டு அப்டியே இந்த பதிவினை முடித்துகொள்ளுவோம்..(இருங்க பாஸ் எங்க தப்ப பார்க்குறீங்க.. பதிவின் தலைப்பு பத்தி எதுக்குமே சொல்லவில்லையே..?? என்று நீங்க கேட்பது எனக்கு புரிகின்றது..) ஆக மொத்தத்தில் கம்பனி என்ன சொல்லுது என்றால் ஜெனிஃபர் லோபஸ் கன்னியா???(இதுக்கு பதில் 15வயதிலேயே தெரிந்திருக்கும்..) இல்ல கள்ளியா?? என்ற கேள்விக்கு இதயத்தை கொள்ளையடிக்கும் கள்ளி என்று தீர்ப்பு கூறுகின்றது. தீர்ப்பில் பிழை இருந்தால் மேன்முறையீடு செய்யலாம்..!!!

"அழகு..அழகு..ஜெனிஃபர் லோபஸ் என்றால் அழகுக்கே அழகு..!!!"

Post Comment

1 comment:

  1. எனக்கு பயனுள்ள தகவல் அவங்க படம்லாம் பார்த்து இருக்கேன் என்னா உடம்பு ம்ம்ம்ம் அப்டியே அவங்க க்ளாமர நடிச்ச படத்தையும் வரிசை படுத்தி இருக்கலாம்

    ReplyDelete