Saturday, December 15, 2012

கமலஹாசனின் மறுரூபம் அதுதான் விஸ்வரூபம்...!!!

இந்த பதிப்பு கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நாட்களுக்கு பின்னர் எழுதும் பதிப்பாகும்.. நக்கல்,நையாண்டிகள்,குசும்பு எல்லாம் குறைந்து விட்டதா இல்லை இன்னும் அப்படியேதான் இருக்கின்றதா என்று சோதித்து பார்க்க இந்த பதிப்பு ஒவ்வாது.. ஆரம்ப காலம் முதல் கமலில் ஒரு நல்ல ஈடுபாடு இருந்த போதும் எனது வயதிற்கு அஜித்தும் அவரின் ஸ்டைலும் தான் பொருத்தமாக இருந்தது. ஆனால் அன்றும் சரி இன்றும் சரி கமலுக்கு என்று ஒரு மரியாதை, விருப்பம் என்றும் என்னுள் இருக்கத்தான் செய்கின்றது. நீண்ட விளக்கம் கொடுக்காமல் நேரடியாக நீண்ட பதிப்புக்கு செல்வோம்.! கொஞ்சம் நேரம் ஒதுக்கி இதனை வாசியுங்கள்.!!!

கமல் ஒரு வரலாறு...!!!கமல்–இந்த மூன்றெழுத்துப் பெயருக்கு பின்னால் தான் அத்தனை விஷயங்களும் உள்ளன. ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நடன இயக்குனராக பொறுப்பேற்று, துனை நடிகராகி, கதா நாயகனாக பதவி உயர்வு பெற்று இன்று உலக நாயகனாக இருக்கிறார். அவரின் இத்தகைய படிப்படியான வளர்ச்சிக்கு பின்னால் இருக்கும் அவரது உழைப்பையும் அர்பணிப்பையும் எம்மால் நன்றாக உணர முடிகிறது. கிட்டத்தட்ட 80 ஆண்டு கால சினிமா வரலாற்றினை ஜொலிக்க வைக்கும் அளவுக்கு இவருடைய படங்களும் இவருடைய திறமைகளும் இருந்தன; இன்னும் இருக்கின்றன என்றால் அது மிகையாகாது. இவரைப்பற்றி விமர்சிக்கவோ இவரின் கலை ரசனையை, கலை வெளிப்பாட்டினை விளக்கம் கொடுக்கும் அளவுக்கு நான் (நான் மட்டும் இல்லை எவரும்) விளக்கம் போதாதவ(வர்கள்)ன் ஆகையினால் வரவிருக்கும் விஸ்வரூபம் படத்தினை பற்றி கொஞ்சம் எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் எழுத முயற்சிக்கின்றேன்..

தடைகளை உடைத்து சரித்திரம் படைப்பவன்..!!

விஸ்வரூபம் படத்தினை உலக சினிமாவின் தரத்தில் கொடுக்க வேண்டும் என்று இந்த படத்தினை ஆரம்பித்ததும் ஆரம்பித்தார் ஆரம்பத்திலேயே தயாரிப்பாளர் சிக்கலை கொடுக்க சிக்கலே வேண்டாம் என்று சொந்த செலவில் படத்தின் வேலைகளை வெகு விரைவாக ஆரம்பித்தார். வளமை போல கமல் எது செய்தாலும் அதில் ஒரு நுணுக்கம், ஒரு அதிமேதாவித்தனம் இருக்கத்தான் செய்யும். ஏன் என்றால் அவர் வெறும் நாயகன் இல்லை உலக நாயகன்... (விரலை ஆட்டும் அவருக்கே...வேணாம் விடுங்கப்பா நமக்கு ஏன் அந்தாளு கதை..!!!) வளமை போலவே விஸ்வரூபமும் ஒரு கிறக்கத்தை கொடுத்தது. ஆனால் போகப்போக கமலஹாசன் விஜய் T.Vக்கு வழங்கிய பேட்டியில் படத்தின் போக்கு ஓரளவுக்கு விளங்கக்கூடியதாக இருந்தது. ஆனால் அப்போதும் கூட கொஞ்சம் குழப்பமாகவே இருந்தது.!!!

இவன் விளக்கத்துக்கே விளக்கம் கொடுப்பவன்.!

என்னதான் கமலே விளக்கம் கொடுத்தாலும் விஸ்வரூபம் என்னவோ குழப்பத்துக்கு குளிகை..கொடுப்பதாகவே இருந்தது. இறுதியாக எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த விஸ்வரூபத்தின் சுயரூபத்தினை கமல் தனது பிறந்தநாள் அன்று ரிரைலராக வெளியிட்டு பெரும் குழப்பத்தில் ஆழ்த்தினார். என்னதான் குழப்பம் இருந்தாலும் அந்த மூன்று நிமிடங்களை முழுமையாக ரசிக்க கூடியதாக இருந்தது(ரசனை என்ற ஒன்று இருப்பவர்களுக்கு மட்டும் பொருந்து மற்றவர்கள் குழந்தைகள் போல 3D பாருங்க...!!!). அந்த ரிரைலரின்ஆரம்ப இசை "கதக்" நடனத்திற்கான சங்கீதத்திற்கு ஏற்ப துப்பாக்கிகள் வெடிக்கும் ரிதமும் ஒருங்கமைவாக இருந்தது. அதனை கேட்கும் போதே நன்றாக தெரிந்தது விஸ்வரூபம் எதிர்காலத்துக்கு விளக்கம் கொடுக்க இருக்கும் கமலின் காவியம் என்று..!!! வளமையை போல கமல் அமெரிக்காவை கூண்டில் நிறுத்த போகின்றார் இல்லையேல் முஸ்லிம்களை அவமதிக்க போகின்றார் என்று ஒரு சிலர் குமுறியபோதும் நியம் அதுவாகப்போவது இல்லை என்பதே உண்மை..!! மற்றவர்கள் அனுமானிக்கும் திரைக்கதையினை வழங்கிவிட்டார் பிறகு கமலஹாசன் என்ற கலாரசிகனுக்கு என்ன மகுடம்?

வித்தியாசம் என்பது கமலுக்கு அல்வா சாப்புடுவது போல..!!

"போர் எங்கு தொடங்குகின்றது??? ஒரு புன்னகை நிராகரிக்கப்படுகின்ற இடத்தில் தான்" இப்படியான வித்தியாசமான வசன நடையினை பக்க பலமாக நிறுத்தி போர் சூழலை கூண்டில் நிறுத்தும் நோக்கில் எடுக்கப்படும் படமாக விஸ்வரூபம் அமையும் என்று கொஞ்சமாவது ரிரைலரினை பார்த்த பின்பு நம்பிக்கொள்ளலாம் போலும்.. ரிரைலர் மற்றும் கமலில் கருத்துக்களை வைத்து அனுமானித்த நமக்கு இன்னும் தீனி போடும் அளவுக்கு மிகவும் அற்புதமாக மிகவும் சிரமப்பட்டு தான் மட்டும் ஒரு நல்ல கதை உடைய படத்துக்காக பாடுபட்டால் போதாது என்று கூட பணியாற்றிய எல்லோரையும் பிழிந்து எடுத்திருக்கின்றார் என்பது படத்துக்கான பாடல்களில் விளங்குகின்றது.. அதுகும் பாடல்களின் வரிகளும் இசையும் இதயம் கனக்க வைக்கும் படியே இருக்கின்றது..

விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் விஸ்வரூபம்...!!!

"அணு விதைத்த பூமியிலே அறுவடைக்கும் அணுக்கதிர்தான்...." என்று தொடங்கும் பாடலில் தொடரும் வரிகளை கொஞ்சம் நோக்குங்கள் 'பேராசை கடல் பொங்கிவிட்டால் தங்கும் இடம் இல்லை... புது வீடு எதுவும் பால்வெளியில் இன்றுவரை இல்லை...போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன் தான் நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள்...கருவறையும் வீடல்ல கடல் சூழல் அதுகும் உனதல்ல நிரந்தரமாக நதுன்று சொல்லும் இடம் இல்லை நம் நோய்க்கு அன்பென்று சொல்லும் மதம் இல்லை..!' வரிகளை வாசிக்கும்போது ஒரு சிலருக்கு ஏனோ தானோ என்று இருக்கக்கூடும் ஆனால் ஷங்கள்-எஹ்சான்-லூய் இசையில் கேட்கும் போது எல்லோருக்கும் ஒருகணம் இதயம் கனக்கத்தான் செய்யும்..(இதயம் இருப்பவர்களுக்கு மட்டும் பொருந்தும்...) சரி இந்த பாட்டில் மட்டும்தான் இப்படி வரிகள் இருக்கின்றன என்று நினைத்தால் அது பிழை இன்னும் ஒரு பாடல் இருக்கின்றது..!!!

எங்களின் கையில் ஆயுதங்கள் இல்லை ஆயுதத்தின் கையில் எங்கள் உடல் உள்ளது..!

அடுத்த பாடல் ஆங்கில பாடல்களை போல வித்தியாசமான எங்கும் COPY அடிக்காமல் வித்தியாசமாக ஆரம்பமாகும். முதல் 1.30 நிமிடங்களும் ஆங்கில வரிகளாகத்தான் அமைந்திருக்கும் ஆனால் அதன் பின் சடுதியாக "துப்பாக்கி எங்கள் தோளிலே...துர்பாக்கியம்தான் வாழ்விலே...எப்போதும் சாவு நேரிலே...எப்போது வெல்வோம் போரிலே..." என்று தமிழ் வரிகள் நுழைகின்றது. அதன் பின் கமலின் குரலில் பாடல் தொடர்கின்றது. 'போர்களை நாங்கள் தேர்தேடுக்கவில்லை...போர்தான் எம்மை தேர்ந்தேடுத்துக்கொண்டது..!!! எங்களின் கையில் ஆயுதங்கள் இல்லை ஆயுதத்தின் கையில் எங்கள் உடல் உள்ளது..! ஊரை காக்கும் போருக்கு ஒத்திகை செய்கின்றோம்...சாவே எங்கள் வாழ்வென்று சத்தியம் செய்கின்றோம்...ஓட்டக முதுகின்மேல் ஒரு சமவெளி கிடையாது...டாலர் உலகத்தில் சம தர்மம் கிடையாது...நீதி காணாமல் போர்கள் ஓயாது...' இப்படியான போக்கினை உடைய பாடல்களை கேட்கும் போது விஸ்வரூபம் ஒரு விளையாட்டு அல்ல அது ஒரு வித்தை என்று மட்டும் தெளிவாக புரிகின்றது..!!!

உலக நாயகனே விஸ்வரூபம் தானே...!!!

"உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே..விதை இல்லாமல் வேர் இல்லையே..." என்று தொடங்கும் பாடல் ஒரு பக்திப்பாடல் போல இசையமைக்கப்பட்டிருப்பதும், வரிகளும், பாடகரின் குரலும் ஓம்..ஓம்.. சொல்லுகின்றது.. அது ஒரு பக்திப்பாடலாக இருக்கும் பட்சத்தில் இந்த பாடலினை போர் சூழலுடன் சம்பந்தப்படுத்தும் விஸ்வரூபத்தில் எந்த இடத்தில் பாடலாக்கப்போகின்றார்? அப்ப கதை என்ன? என்று குழப்பம் ஏற்படுத்தும் தருணத்தை இந்த பாடல் கொடுத்திருக்கின்றது.. இந்த பாடலை அடுத்து இனி எ(அ)ந்த தூ(மா)ஸ்..விரல் நடிகராலும் அசைக்க முடியாதா ஒரு ஒப்பினிங் பாடல் ஒன்றை ஷங்கள்-எஹ்சான்-லூய் இசையில் சுராஜ் ஜகன் குரலில் கேட்கும்போது இப்போதே தெரிகின்றது நிட்சயம் திரையரங்கமும் அதிரத்தான் போகின்றது என்று..!!!

இதை எல்லாம் சொல்லியா தெரிந்துகொள்ள வேண்டும்..!!!

"எவன் என்று நினைத்தாய்...எதை கண்டு சிரித்தாய்...விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் புது ரூபம்..நெருப்புக்கு பிறந்தான் நித்தம் நித்தம் வளர்ந்தான் வேளை வந்து சேரும்போது வெளிப்படும் சுயரூபம்..." இந்த அளவுக்கு ஒரு விளக்கத்தை கொடுத்து விட்டு அடுத்த வரியில் தொடங்குகின்றார். 'யாரென்று புரிகிறதா...இவன் தீ என்று தெரிகிறதா...தடைகளை வென்று சரித்திரம் படைப்பவன் நியாபகம் வருகிறதா...' கண்ணா மாஸ் என்றால் இதுதான் மாஸ் சும்மா விரலை மட்டும் ஆட்டினால் போதாது..கொஞ்சமாவது நடிக்கணும்...(சத்தியமா நான் அந்த பெரிய மனுஷனை சொல்லலீங்கோ..) பாடலிலும் சரி இதுவரைக்கும் வெளிவந்த ரிரைலர்களிலும் சரி வெளிப்படும் ஒவ்வொரு வரிகளும் விஸ்வரூபம்தான்..இவையே இப்படி இருக்கும் போது படம் எப்படி இருக்கும்..படத்தில் வரும் வரிகள் எப்படி இருக்கும்..இப்படியான ஒரு கிறுக்குத்தனமான ரசனையினை கமலால் மட்டும்தான் கொடுக்க முடியும்..!

என்ன "விஸ்வரூபம்" படத்துக்கும் 'A' சான்றிதழ்தான் கொடுத்திருக்கின்றார்களா? :- ஆரம்பத்தில் சாதாரணமாக எல்லோரும் கொடுப்பதை போல U/A சான்றிதழை கொடுப்பதாக சென்சார் முடிவு செய்திருந்தது. ஆனால் இந்த விஷயத்தில் கமல் நேரடியாக தலையிட்டு இல்லை எந்த படத்து நிட்சயம் 'A' வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கிஇருக்கின்றார். இதுக்கும் ஒரு காரணம் இருக்கத்தான் செய்கின்றது. இந்த படம் கொஞ்சம் விஞ்ஞான அறிவும் கொஞ்ச பொது அறிவும் இருக்கும் மக்கள் மட்டும் பார்க்க வேண்டும் என்பதற்க்காக இப்படி செய்ததாக ஒரு தகவல்...அதுகும் சரிதான்..."என்னதான் "தசாவதாரம்" நல்லா இருக்கு ஆனால் விளங்கவில்லை.." என்று சொன்ன ஆட்கள் தானே நாங்கள்..!! அதனால் இந்த முறையும் அப்படி நடந்துவிடக்கூடாது என்று முன்கூட்டியே கலத்தில தன் புத்திக்கு வேலையை கொடுத்து விட்டார் போல...!!

வாழும் வரலாறு..!!!

கமல் படத்தில் கமல் மட்டும்தான் :- இப்படி குற்றம் சாட்டும் புத்திஜீவிகளை என்ன செய்ய முடியும் திறமை உள்ளவன் தனது களத்தில் களம் இறங்காமல் மற்றவனின் கோதாவில் போய் கோஸ்ரி போடுவதா? கமல் படத்தில் கமலின் தலையீடுகள் நிறைய இருக்கத்தான் செய்யும் அப்படி இருந்தால்தானே அது கமல் படம்..(என்ன சொல்றது சரி தானே..??) ஒரு சிலருக்கு கமல் படத்தில் அதிகமாக 'A' சான்றிதழுக்குரிய காட்சிகள் அதிகம் வருவதால் சிலருக்கு கமலின் படங்களே பிடிப்பதில்லையாம்.. என்ன ஒரு உலக மகா நடிப்புடா..இப்படி விளக்கம் சொல்லும் நபர்களின் இன்டர்நெட் ஹிஸ்டரியை எடுத்து பார்த்தான் தெரியும் அவர்கள் எந்த இராசனையாளர்கள் என்று... இப்படியான அதிகமான கருத்துக்களை முன்வைப்பவர்கள் விரல் நடிகரின் ரசிகர்களே என்று ஊருக்குள் ஒரு பரவலான பேச்சு ஒன்று உலாவுகின்றது அதில் எவளவு உண்மை எவளவு போய் என்று தெரியவில்லை!!! எது எப்படியோ "நாய் சந்திரனை பார்த்து குறைத்தால் சந்திரன் என்ன குறைந்து போக போகின்றதா??" சந்திரன் சந்திரன்தான் கமல் கமல் தான்...!!!

ஆளவந்தான், ஹேராம், குருதிப்புனல், தசாவதாரம்....இன்னும் பல வித்தியாசமான படங்களை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கும் ஏன் என்றால் இப்படியான உலகத்தரம் வாய்ந்த படங்களை எடுக்கும் திறமை தகுதி ஒரு தமிழனுக்கும் இருக்கின்றது என்று தான்...(இனி கமலஹாசன் தமிழனா என்று எல்லாம் கேட்க கூடாது???) ஆனால் ஒரு பெரிய கவலை இப்படியான படங்களை முழுமையான விளக்கம், ரசனைத்தன்மை இல்லாதா பெரும்பான்மையான எம் மக்களிடையே இப்படியான திறமையை வெளிக்காட்டுவதுதான்.. எது எப்படியோ யாருக்கு புரிந்ததோ யாருக்கு புரியவில்லையோ, லாபமோ நஷ்டமோ கமல் தனது புதிய முயற்சிகளை கை விடுவதாக இல்லை.. அப்பாடா என் நீண்ட நாள் ஆசைக்கு இப்பதான் ஒரு தீர்வு வந்தது...கமல் அவர்கள் ஹொலிவூட்டிலும் நடிக்க போவதாக..இனி உலக சினிமாவிலும் ஒரு மாற்றம் வரும் என்றால் அதுகும் மிகையாகாது.

"விஸ்வரூபம்"படம் தொடர்பான எல்லா வேலைகளும் முடிவுக்கு வந்து தைப்பொங்கல் அன்று படத்தினை வெளிவிடுவதற்க்கு முழு ஏற்பாடுகளும் முடிந்து விட்டன. இந்த நிலையில் எனக்கு விஸ்வரூபம் படம் தொடர்பாக இருந்த அவாவையும் கமல் மேல் இருந்த விருப்பத்தையும் வெளிப்படுத்திக்கொள்வதற்க்கு இதுதான் சரியான நேரம் என்று எனக்கு தோன்றியதால் இந்த பதிப்பினை எழுதினேன்..!!! குற்றம் குறை ஏதும் இருப்பின்...இந்த சிறியவனை விடுவித்துக்கொள்ளுங்கள்..!!!

"யாரென்று புரிகிறதா...இவன் தீ என்று தெரிகிறதா...தடைகளை வென்று சரித்திரம் படைப்பவன் நியாபகம் வருகிறதா..."

Post Comment

11 comments:

 1. Replies
  1. மிக்க நன்றி...உங்கள் வருகைக்கும் உங்கள் பின்னூட்டலுக்கும்...மீண்டும் வருக..!!!

   Delete
 2. நன்றாக அலசியுள்ளீர்கள் கோசுபா... வாழ்த்துக்கள்... கமல் நல்ல நடிகர்,சிந்தனையாளர், புதிய பல யுக்திகளை சினிமாவுக்குள் கொண்டுவருபவர் என்று அவரின் தனித்துவமான திறமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.. ஆனால்,அவரின் படங்கள் ஆடியன்சை எந்தளவுக்கு கவருகின்றது என்பதையும் பார்க்கவேணும். இந்தவகையில் கமல் உண்மையிலே தோற்றுப்போகிறார் என்பதுதான் உண்மை... படத்தில சொல்லப்படுகிற விடயத்தை ஆடியன்ஸால் புரிந்துகொள்ளமுடியவில்லை அல்லது புரிந்துகொள்ள விரும்பவில்லை என்றால் அந்தப்படம் எடுத்ததில் பிரயோசனமில்லை... (கமலின் எல்லா படமும் அல்ல, சில படங்கள்)

  ReplyDelete
  Replies
  1. சகோ..நீங்கள் சொல்வது வேணுமென்றால் இப்படி அமையலாம்..கமல் நினைத்த அளவு கல்லாவை கட்டாமல்...இருக்கலாமே தவிர கமலின் முயற்சிகள் அன்றில் இருந்து இருவரை என்றும் தோற்றதாக நான் கேள்விப்படவில்லை...

   நன்றி சகோ..:)

   Delete
 3. welcome for your reentry

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி...உங்கள் வருகைக்கும் உங்கள் பின்னூட்டலுக்கும்...மீண்டும் வருக..!!!

   Delete
 4. திரு சஜிரதன், உங்கள் கருத்து சரி என்று தோன்றினாலும், அதன் காரணத்தை அறிய வேண்டும். உலகின் மற்ற பகுதிகளில் எல்லாம் ஈரானிய படங்கள் பெரும் வரவேற்ப்பை பெறுகின்றன. ஆனால் இந்தியாவில் திரை அரங்குகளில் அந்த படங்களை வெளியிட்டால் எத்தனை பேர் பார்க்க வருவார்கள்? இது அந்த திரைப்படத்தின் பலவீனம் அல்ல, அது போன்ற படங்களை பார்க்க தங்கள் அறிவையும், ரசனையையும் மக்கள் தான் வளர்த்துக்கொள்ள வேண்டும். இங்கு மசாலா நெடி தூக்கலாக அடிக்கும் சமையல் அறையில், கமல் தனியே போராட வேண்டி இருக்கிறது. யோசித்து பாருங்கள், பீட்சா, ந கொ ப காணோம், நீர்பறவை போன்ற சின்ன பட்ஜெட்டில் வந்த சிறந்த படங்கள், ஒரு ரஜினி படம் வரும் நேரத்தில் வந்து இருந்தால் சுனாமியால் தூக்கி எறியப்பட்ட குடிசைகள் போல கவனிப்பாரின்றி போய் இருக்கும். ஒரு ரஜினி படத்தின் அசுரத்தனாமான வீச்சு எல்லா புதிய மற்றும் வித்தியாசமான நல்ல முயற்ச்சிகளை நொறுக்கி விடுகிறது. சரி ரஜினி தான் எதையாவது புதியதாக செய்கிறாரா என்றால்..... பதில் உங்களுக்கே தெரியும். ஆக இங்கு ரசிகர்கள் தான் தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, கமல் படங்கள் புரியவில்லை என்று கூறுவது சரி இல்லை என்பது என் கருத்து. வணிக ரீதியில் வெற்றி பெறாத ஹே ராம், அன்பே சிவம் போன்ற படங்கள் எல்லாம் இன்றும் சிலாகித்து பேசப்படுகிறது. அப்படியானால் அவை வணிக ரீதியில் வெற்றி பெறாமல் போனதற்கு கமலா காரணம்?

  ReplyDelete
  Replies
  1. gobi@ நண்பரே ஒரு திரைப்படம் ஒன்று எடுக்கும்போது நிறைய விடயங்களில் கவனம் செலுத்தவேணும்.......
   1. தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என எல்லாத்தரப்புமே இலாபம் அடையவேணும்.
   2. மக்களின் விருப்பத்தை அறிந்து அவர்கள் புரியும்படியாக படம் எடுக்கவேணும்.
   மேற்க்கூறிய இரண்டும்தான் மிகமுக்கியம்.. அதைவிட்டுவிட்டு தயாரிப்பாளர்,விநியோகிஸ்தர்களின் வயித்திலடிச்சுத்தான் புதுமைகளை புகுத்தனும் என்றால் அப்பிடியான படங்களை தயாரிக்க எவரும் முன்வரமாட்டார்கள். தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் பி,சி தர ஆடியன்சே.... அப்பிடி இருக்கையில் குறைந்த பட்ஜெட் படங்களில் புதுமைகளை புகுத்தி பார்க்கலாம்.... அதைவிட்டுவிட்டு 50 கோடி செலவில் உருவான மன்மதன் அம்பு, 100 கோடி செலவில் உருவான விஸ்வரூபத்திலா இப்பிடியான விசப்பரீட்சைகளை செய்யணும்?? விஸ்வரூபம்தான் கமலின் தயாரிப்பென்று விட்டாலும் மன்மதன் அம்புவில் உதயநிதி அடைந்த நஷ்டத்துக்கு கமல் நஷ்டஈடு வழங்குவாரா?........ (மன்மதன் அம்புவில் பிரத்தியோகமாக டப்பிங் செய்யாமல் சூட்டிங் ஸ்பொட்டிலையே ரெக்கோட் பண்ணினாங்க...... இதை ஐந்து/ஆறு கோடி பட்ஜெட் படமான உன்னைப்போல் ஒருவனிலோ/அல்லது கமல் தான் தயாரிக்கும் படங்களிலோ முயற்சித்து பார்த்திருக்கலாமே!!!..... உதயநிதியின் முதலுக்கேன் ஆப்பு வைச்சீங்க? )

   Delete
 5. ///இது அந்த திரைப்படத்தின் பலவீனம் அல்ல, அது போன்ற படங்களை பார்க்க தங்கள் அறிவையும், ரசனையையும் மக்கள் தான் வளர்த்துக்கொள்ள வேண்டும். இங்கு மசாலா நெடி தூக்கலாக அடிக்கும் சமையல் அறையில், கமல் தனியே போராட வேண்டி இருக்கிறது./// சரி ரஜினி தான் எதையாவது புதியதாக செய்கிறாரா என்றால்..... பதில் உங்களுக்கே தெரியும்./// செருப்பால் அடித்தது போல நறுக்கென்று ஒரு கேள்வி... யாரப்பா அங்கை எவராது வந்து பதில சொல்லுங்கப்பா...?? ஆக மொத்தத்தில் கடைசியில் சொன்னீங்க பாருங்க "ஆக இங்கு ரசிகர்கள் தான் தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, கமல் படங்கள் புரியவில்லை என்று கூறுவது சரி இல்லை என்பது என் கருத்து. வணிக ரீதியில் வெற்றி பெறாத ஹே ராம், அன்பே சிவம் போன்ற படங்கள் எல்லாம் இன்றும் சிலாகித்து பேசப்படுகிறது. அப்படியானால் அவை வணிக ரீதியில் வெற்றி பெறாமல் போனதற்கு கமலா காரணம்?" இதுதான் சூப்பர்..அப்பு சூப்பர்... Gopi மிக்க நன்றி...உங்கள் வருகைக்கும் உங்கள் பின்னூட்டலுக்கும்...மீண்டும் வருக..!!!

  ReplyDelete
 6. Replies
  1. மிக்க நன்றி...உங்கள் வருகைக்கும் உங்கள் பின்னூட்டலுக்கும்...மீண்டும் வருக..!!!

   Delete