Sunday, December 16, 2012

என்ன சமந்தா சினிமாவை விட்டுட்டு போகபோறாவா..?

கொஞ்சம் கேளுங்கோவன் :- கொஞ்சம் இல்லை மிகவும் பழமையான தகவல்.. எனக்கு இப்பதான் தெரியவந்தது, தெரியவந்த உடனையே "சமந்தா ஜொள்ளு சேவை மன்ற" "மைந்த"ர்களின் அனுமதியுடன் கிளுகிளுப்பாக எழுதியதே இந்த பதிப்பு..!!! ஆறி போனாலும் சமந்தா சூப்பர் தானே!!!

கவர்ச்சி காட்டுவதுக்கு என்று எத்தனை நடிகைகள் வந்தாலும், அழகால் மயக்குவதற்க்கு எத்தனை அழகிகள் வந்தாலும், ஒற்றைப்பார்வையால் ஓட்டு மொத்தத்தையும் அடக்கி ஒரு உயிருள்ள யடமாக்குவதுதான் அந்த பார்வை; அவை கண்கள் அல்ல ரசிகர்களை கவர்ந்து ஈர்க்கும் காந்தம்.. இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்.. எவ்வளவு சொன்னாலும் சொல்லி அடக்க முடியாத அழகினை உடைய ஒரு அழகி..இல்லை இல்லை அதுக்கும் மேலே.. அந்த அழகி வேறு யாரும் இல்லை சமந்தா ருத் பிரபு என்ற சமந்தா தான்..!!! இருந்தாலும் இவருடைய உண்மையான பெயர் "யசோதா" என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை..??? (இங்கை என்ன ஆண்டிறுதி பரீட்சைக்கா ஆட்கள் எடுக்கின்றார்கள் என்று நீங்கள் சிலுத்துக்கொள்வது புரிகின்றது...சமந்தாவுக்காக எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கின்றது..!!!)சமந்தா - கொள்ளையடிக்கும் பேரழகி..!சமூக வலைத்தளங்களில் சமந்தாவுக்கு என்று தங்களையே அர்ப்பணித்த எத்தனையோ கோடான கோடி தலைவர்கள்/ மகான்கள்/ பிரபுக்கள் இருக்கின்றார்கள்..(ஜொள்ளு சேவை செய்வதில் அம்புட்டு ஆசை...இதுலை இப்படி ஒரு விளம்பரம் வேறு என்று நீங்கள் கேவலமாக நினைப்பது எங்கை வரைக்கும் கேட்கின்றது...நம்மாளுக யாரு குஷ்புவுக்கே கோவில் கட்டினவர்கள் ஆச்சே...!!!) அந்த தலைவர்கள் பட்டியலில் அண்மையில் சேர்க்கப்பட்ட ஒரு சின்ன தொண்டன்தான் நான்..!!! ஆரம்ப காலத்தில் ஒரு கிளுகிளுப்புக்கு சமந்தா "எனக்குதான்......." என்று சவால் விட்டாலும்; சமூக வலைத்தளத்தில் காலடி எடுத்து வைக்கும்போதுதான் தெரிகின்றது எனக்கு முன்னாடியே எத்தனை பேர் லைன் கட்டி நிற்கின்றார்கள் என்று..!!!(அம்மணிக்கு அம்புட்டு மவுசு... சூப்பர் மவுத்து..!!!)

செம பீசு...இதுக்குதாண்டா அம்புட்டு காசு..!!!

இருபத்தி ஐந்து வயதாகும்(பிறப்பு:ஏப்பிரல் 28 ,1987) சமந்தாவின் பெற்றோர் மலையாள மற்றும் தெலுங்கு கலப்பாகும்.ஆனால் சின்ன வயதிலிருந்து வளர்ந்தது என்னமோ சிங்கார சென்னையில்தான்.சென்னை தியாகராஜ  நகரில்(தி நகர்) உள்ள ஹோலி ஏஞ்செல்ஸ்(Holly Anjels) மேல்நிலை பள்ளியில் பாடசாலை கல்வியையும் பின்னர் ஸ்டெல்லா மேரிஸில் உயர்கல்வியும் கற்ற சமந்தா ஒரு வணிகவியல் இளங்கலை பட்டதாரியாவார். பின்-பதின்ம வயதுகளில் மொடலிங் துறையில் நுழைந்ததன் மூலம் சினிமாவில் நடிப்பதற்கான அடித்தளத்தை தானாகவே அமைத்துக்கொண்டார். இவரது திரைவாழ்க்கை ஆரம்பித்தது ரவிவர்மனின் "மாஸ்கோவின் காவேரி" என்கின்ற டபுள் சூப்பர் படத்தின் மூலமாகத்தான். படம் மட்டும்தான் அப்படி ஆனால் படத்தில் நடித்த கதாநாயகி பயங்கர வடிவு.. சொல்லி மாளாது.. என்று சமந்தாவின் தொடக்க காலத்திலேயே கொஞ்சி குலாவ தொடங்கிவிட்டார்கள்.. (நான் என்ன சொன்னேன்னா...சமந்தாவின் புகைப்படத்தை தான் சொன்னேன்...சமந்தாவை இல்லை...யார் கண்டா..?)

பல்லு மட்டுமா வைரம்...எல்லாமே எல்லாமே...!!!

நீ தானே என் பொன்வசந்தம் போன்ற ஆறு படங்களையே இதுவரைக்கும் தமிழில் நடித்திருக்கின்றார். ஆனால் ஏதோ அறுபது படம் நடித்த நடிகைக்கு இருக்கும் மார்கெட் அம்மணிக்கு இருக்கின்றது என்னார் என்ன காரணம்..எல்லாம் எப்படி எப்படி இருக்க வேண்டுமோ அவை எல்லாம் அப்படி அப்படியே அம்சமாக இருப்பதனால்தான் இப்படி நடக்கின்றது. அதிலையும் நம்ம பயலுக(என்னையும் சேர்த்து) சமந்தாவை பத்தி கதைத்தாலே போதும் கையடக்க தொலைபேசியில் சமந்தாவின் ஒரு படத்தை எடுத்து வைத்துக்கொண்டு கன்னத்தை கிள்ளிக்கொண்டே(கன்னத்தை மட்டும் தானா? என்று நீங்கள் கள்ள பார்வை பார்ப்பது எனக்கு புரிகின்றது?) ஜொள்ளு கதை கதைக்க தொடங்குவார்கள். அந்த அளவுக்கு எல்லோரையும் பைத்தியமாக்கி வைத்திருக்கின்றார். என்னத்தை சொல்ல யார் கண் பட்டதோ தெரியவில்லை பைத்தியமாகியவர்கள் பைத்தியம் தெளியாமலேயே கோமாவுக்கு போய் விடுவார்கள் போல இருக்கின்றதே..!!! (மனதை திடப்படுத்திக்கொல்லுங்கள்.. அறிந்ததை சொல்லப்போகின்றேன்..)

எப்படி பார்த்தாலும் சூப்பரா இருக்காளே..!!!

சமந்தாவுக்கு ஒரு விதமான சரும நோயாம்...அதுதானுங்க வெய்யில பட்டால்   தோல் எல்லாம் உரிய தொடங்குகின்றதாம்... (சரும நோய் என்று மட்டும்தான் சொன்னேன்..வேறை எந்த வியாதியும் இல்லையாம்...) அதனால் மணிரத்தினத்தின் இயக்கத்தில் நவசர நாயகன் 'கார்த்திக்'கின் மகன் நடிக்கும் "கடல்" படத்திற்க்கான வாய்ப்பு கை நழுவிப்போனது.. (விடும்மா மணி அண்ணை படம் தானே எப்புடியும் இருட்டுக்கை தானே எடுப்பார்..நீ ஒத்துக்கொண்டிருக்கலாமே..!!) அடுத்ததாக ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் "ஐ" படத்துக்கான வாய்ப்பும் கடலில் கரைந்து போனது..இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட அம்மணி.. இது தொடர்பாக எதுக்கும் சொல்லவில்லை.. மீண்டும் இப்போது கவுதம்மேனன் இயக்கத்தில் "நீதானே என் பொன்வசந்தம்" படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது இது தொடர்பாக லைட் ஆக வாய்விட்டு புலம்பி இருக்கின்றா..!!! (சமந்தாவையே புலம்ப வைத்துட்டீங்களா??? எரியுங்கடா அந்த உருவ பொம்மையை...வெட்டுங்கடா அந்த பத்திரிக்கை நிருபரை..!!!)

நீங்களே சொல்லுங்க இதுல எங்கை தோல் உரிந்திருக்கு..?

உங்களையே பார்த்து சொல்ல சொன்னதுக்காக இப்படி படத்தை சாப்புடும் அளவுக்கு பார்க்க கூடாது. பாவம் சமந்தாவும் பெண் தானே வெட்கம் வருமா இல்லை...பார்த்தது போதும் நம்ம மேட்டர்க்கு வருவம்.. இது தொடர்பாக சமந்தா என்ன சொல்லியிருக்கின்றா என்றால் "எனக்கு எந்த சரும நோயும் கிடையாது. அது மீடியாக்கள் எனக்கு கொடுத்த நோய். திடீரென்று ஒரு நாள் காய்ச்சல் வந்தது. டாக்டரிடம் சென்று பரிசோதித்து பார்த்ததில் என் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சக்தியை வளர்த்துக் கொள்ள பூரண ஓய்வும், சிகிச்சையும் தேவை என்று டாக்டர்கள் சொன்னதால் வீட்டில் இரண்டு மாதம் பெட் ரெஸ்ட் எடுத்தேன். இதில் என் முகமும், உடலும் சோர்வடைந்து விட்டது. இந்த நேரத்தில்தான் கடல் வாய்ப்பும் ஐ வாய்ப்பும் வந்தது. நழுவிப்போனது. மிகப்பெரிய இரண்டு வாய்ப்புகள் நழுவிப்போனதால் ரொம்பவே கலங்கிப்போனேன். ஆனாலும் தைரியமாக இருந்தேன். குணமாகி வந்தேன். இப்போது மீண்டும் பிசியாகி விட்டேன். கடவுள் ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவை திறப்பார் என்பதை என் வாழ்க்கையில் அனுபவித்து உணர்ந்து விட்டேன்..." இந்த அளவுக்கு கலங்கு கலங்கு என்று கலங்கி தள்ளியிருக்கின்றார். (அது இடுப்பா இல்லை...நாயர் கட அடுப்பா??)

டவளை கழட்டினால் இன்னும் நல்லா இருக்கும்..நான் தலையில இருக்கிறதை சொன்னேங்க..!!!

ஆக மொத்தத்தில் இப்ப எந்த பிரச்சனையும் இல்லையாம்...இப்போதைக்கு மூன்று தெலுங்கு படங்களில் நடிப்பதாக ஒப்பந்தம் ஆகி இருக்கின்றதாம்.. வெகு சீக்கிரம் விஜய் அல்லது சூர்யாவுடனும் நடிக்க போவதாக கேள்வி..!!! (அடித்துதையா அவங்களுக்கு ஜாக்பொட்டு...!!! கொடுத்து வைத்தவங்க...) சமந்தாவுக்கு எந்த நோயும் இல்லை அவ நல்லாத்தான் இருக்கின்றா என்று எனது நண்பன் சமந்தா வெறியனான "அருளா"ந்தமூர்த்தி அவர்களிடம் இருந்து சற்று முன்னர்தான் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் பேஸ்புக் மூலமாக கிடைக்கப்பட்டது.. (இப்போதுதான் சமந்தாவின் விளுதுகளுக்கு நெஞ்சுக்குள் பால் வைத்தது போல இருக்கும்..) ஆறு படம் நடித்த நிலைமையிலேயே சமந்தா காய்ச்சல் இந்த அளவுக்கு பரவியிருக்கின்றது என்றால் இன்னும் தொடர்ந்து நடித்தால் என்னவாகுமோ தெரியவில்லை.. எது எப்படியானாலும் சமந்தாவுக்கு ஒன்றும் ஆகவில்லை என்றதே போதும்..!!! (பக்கத்து பிள்ளையாருக்கு நாளைக்கு போகும்போது ஒரு தேங்காய் உடைக்கணும்..)

தலைவி கையை தூக்கீட்டா...தொண்டர்கள் என்னத்தை தூக்க போகின்றீர்கள்?

எவ்விடத்தில் காய்ச்சல் உண்டோ அவ்விடத்தில் சமந்தா முத்தமிட்டா பிடிச்ச நோய் ஓடிப்போகும்..!!!

Post Comment

4 comments:

 1. சமந்தா பத்தி ஓகே,
  அவிங்கட இவ்ளோ குளு குளு போட்டோஸ் எங்க இருந்து தான் கிடைச்சிசோ!அவ்வவ்

  ReplyDelete
  Replies
  1. குளுகுளுவென்று பதிப்புக்களை எழுதுவதி கண்ணும் கருத்துமாக இருக்கும் என்னை போன்றவர்களுக்கு மட்டும்தான் இப்படியான படங்கள் சிக்கும் அண்ணனை போல "சமந்தா ஜொள்ளு சேவை மன்றம்" தலைவர்களுக்கு எல்லாம் எப்படி கிடைக்கும்.. இருந்தாலும் நீங்க பெரிய மனுசனையா???

   Delete
 2. தலையங்கத்தப்பாத்து எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திடிச்சு....சமந்து சமந்து....
  பதிவுக்கு நன்றி நான் போய் முழுகிட்டுவாறன் முடியல..

  ReplyDelete
  Replies
  1. நான் சொல்லல இப்படி நடக்கும் என்று... ஒண்ணுக்கும் கவலைப்படாதீங்க சமந்து சமத்து நம்மளை விட்டுட்டு எங்கயும் போக மாட்டா!! அது சரி இப்ப ஏன் முழுக போறீங்க??

   Delete