Monday, November 11, 2013

அஜித், விஜயை தொடர்ந்து கார்த்தியை தாக்கும் மீடியாக்கள்!!!

இதனால தான் நான் எதுகுமே பேசுவதில்லை!!!

இன்று தமிழ் சினிமாவே தூக்கி கொண்டாடும் ஒருகால ’அல்டிமேட் ஸ்டார்’ இப்போதைய ‘தல’ அஜித்குமார் மற்றும் இளைய தளபதி விஜய் இந்த இரண்டு துருவங்களை பின்னியே இன்றைய தமிழ் சினிமா தனது வெகுவான வருவாயை சம்பாதித்து வருகின்றது. ஆனால் ஒரு காலம் இவ்விருவரும் பத்திரிகையாளர்களால் காய்ச்சி கழுவி ஊத்தப்பட்டதை யாராலும் மறந்திருக்க முடியாது! வெளிப்படையான பேச்சின் மூலம் அஜித் பேசுவதை பத்திரிகைகள் விற்றுப்போக வேண்டும் என்று அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என்று உரு மாற்றிஅஜித்தை சிக்கலில் மாட்ட வைத்தனர். ஒரு காலம் இவர் வெளிப்படையாக பேசுவதனால் இவரை கேலி, கிண்டல் செய்த அதே திரையுலகம் தான் இப்போது அதே வெளிப்படையான பேச்சுக்காக அஜித்தை புகழ்ந்து தள்ளுகின்றது. இந்த புகழுக்கு ஏதோ ஒரு காரணமாக பத்திரிகையும் தொலைக்காட்சிகளும் இருக்கத்தான் செய்கின்றன. அதனால் தான் அஜித் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின்பு பேட்டி கொடுப்பதை விட்டுவிட்டார் போலும்! அஜித்தை பார்க்க வேண்டுமானால் திரையரங்கிற்கு சென்றால் மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலமையை உருவாக்கினார். இப்போது அஜித்தை தங்கள் தொலைக்காட்சியில் காட்டினால் தங்கள் தொலைக்காட்சியின் டீ.ஆர்.பி எகிறும் என்றும் அஜித் பற்றிய செய்திகளை அதிகம் பகிர்ந்தால் தங்கள் பத்திரிகைகள் அதிகம் விற்கப்படும் என்று அஜித் பற்றிய செய்திகளுக்காக அலைகின்றது சுயநலம் கொண்ட மானம் கெட்ட மீடியாக்கள். பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் அஜித்தை படாது பாடுபடுத்தும் போது சிக்கலே இல்லாமல் முதலிடம் காணும் சந்தோஷத்தில் இருந்தார் இளைய தளபதி! ஆனால் ஈற்றில் அவரையும் விட்டு வைக்கவில்லை!!!

Post Comment

Wednesday, October 30, 2013

ஆரம்பம் - சினிமா விமர்சனம்!!!

படம் அப்படி இருக்கு, இப்படி இருக்கு, உலக சினிமாவுக்கு நிகராகா இருக்குன்னு சும்மா பீலா விட இயக்குநரும் விரும்பவில்லை நம்ம ‘தல’யும் விரும்பவில்லை! அப்படி இருக்கையில் விமர்சனத்தில் மட்டும் ஏன் கெத்து காட்ட வேண்டும்? படத்தில் ரசிக்க கூடியவற்றையும் படத்தில் நடித்தவர்களில் கெரெக்டர் பத்தியும் ஆர்பாட்டம் இல்லாமல் சொல்லுவோம். அதுக்காக ‘ஆரம்பத்தின் கதை இதுதான்’ என்று எல்லாம் சொல்ல முடியாது! பில்லா-2007க்கு பிறகு விஸ்னுவும் அஜித்குமாரும் கை கோர்க்கும் இரண்டாவது படம் தான் ‘ஆரம்பம்’ படத்திற்கான தலைப்பு வைப்பதிலேயே எவ்வளோ தாமதம்! படமாவது சொன்னது போல தீபாவளிக்கு வருமா? என்று நினைத்ததுண்டு ஆனால் படம் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வந்து விட்டது! அதுகும் சும்மா வரவில்லை அதிரடியாக ஆரம்பித்திருக்கின்றது ‘ஆரம்பம்’ படம் தனது ஹிட்டை!!! படத்தின் இவங்க இவங்க நடித்திருக்காங்க...!!! அவங்க பேர் பட்டியல் எல்லாத்தையும் போட்டு பதிவை இழுத்தடிக்க விருப்பமில்லை! வந்த விடயத்தை சுருங்க சொல்லி விட்டு போவோம்! சரி இனி தலயின் ’ஆரம்பம்’ விமர்சனம் ஸ்டாட்டு!!!

சைலெற்றாக ஹிட்டுக்கொடுக்கனும்!!!

Post Comment

Tuesday, October 22, 2013

அஜித்குமாரின் 55வது படத்தின் இயக்குநரும், தலைப்பும்!!!

நிகழும், நிகழ்ந்த பல நிகழ்ச்சிகளுக்கு அந்த சந்தர்ப்பத்தில் எந்த விளக்கமும் கொடுக்காமல் பொறுமை காத்தால் சொல்லால் சுட்டவர்களை அன்பு கரம் நீட்டி அவர்கள் செய்த பிழையை உண்ர வைக்கலாம் என்பதை மிகவும் சாதூர்யமாக அஜித் அவர்கள் தனது உயிர் ரசிகர்களுக்கு சொல்லி இருக்கின்றார். தலயின் 53வது படம் ‘ஆரம்பம்’ என்பது எல்லொரும் அறிந்ததே அதே போல அந்த படத்தின் இயக்குநர் ஏ.எம்.ரத்தினம் என்பதும் எல்லோரும் அறிந்ததே எல்லாவற்றுக்கும் போதியளவு விளம்பரம் செய்யப்பட்டும் 2013.10.30 ஆம் திகதியோ அல்லது 31ஆம் திகதியோ படம் வெளியிடப்படும் என்ற நிலமையும் வந்தாகிவிட்டது. ஏ.எம்.ரத்தினம் சாய் பாபா கோவில் ஒன்றின் அஜிதை சந்தித்து தனது நிலமையை சொல்லி வருந்திய நிலமையிலே அஜித் தனது 53வது படத்தினை தயாரிக்கும் உரிமையினை ஏ.எம்.ரத்தினத்திடம் கொடுத்தார். இப்போது படத்தினை நினைத்த அளவை விட அதிகமாகவே விற்று விட்டார்கள். ஆனால் இன்னும் ரத்தினத்தின் கடன் முடிந்த பாடாக இல்லை. இந்த சந்தர்பத்தின் தான் அந்த அதிர்ச்சி தரும் நிகழ்ச்சி நடந்தது!


யாரு யாரை சினிமாவை விட்டு அனுப்புவது!!!

Post Comment

Friday, October 11, 2013

நய்யாண்டி - சினிமா விமர்சனம்!!!

இந்த படத்துக்கு ’நய்யாண்டி’ என்று பேர் வைத்ததுக்கு பதிலாக ‘கல்யாணத்துக்கு பொண்ணு தேவை’ என்று வைத்திருக்கலாம்... யோ..டிரெக்ரரு உமக்கு கருனையே இல்லையா? ஒரு தேசிய விருது பெற்ற இயக்குனர் இயக்கிய படம்... இது கூட பரவாயில்லை... தேசிய விருது வென்ற நடிகரும் சேரும் போது படம் எப்படி இருக்கும்? இப்படியான ஒரு நினைப்பில தான்யா படம் பார்க்க போனன். ஏண்டா வந்தா ஏண்டா வந்தா?? என்று கேட்டு வாயிலயே குபிகீர் குபிகீர் என்று குத்தி குத்து கேட்டாங்கையா? என்ன படம் என்ன படம்!!! ஒரு இடத்தில் கூட தேசிய விருது வாங்கிய இயக்குனர் படம் போல இல்லையே... அப்ப இவர் பேர்ல யாரோ இயக்கிபுட்டாங்க என்று சோல்லுறீங்களா? இருக்கும் இருக்கும்... நஸ்ரியா தொப்புளுக்கே டூப்பு போடும் போது இயக்குனருக்கு டூப்பு போட மாட்டாங்களா என்ன!!!

Post Comment

Monday, September 9, 2013

ஆர்யா - நயன்தாரா காதலும்; விளக்கு பிடிக்கும் விஜய் தொலைக்காட்சியும்!!!

இந்த பதிவு சமூக நலன் கருதி எழுதப்பட்டதாகும். நலன் காக்கும் சங்கத்தை சேர்ந்த எவரும் பொங்கி எழ வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். ‘விநாயகர் சதுர்த்தி’ வந்ததும் வந்தீச்சூ டீ.விகளில் ஒரே பிரோகிராம் அப்படி நடந்த ஒரு பிரோகிராமின் பின்னனி என்ன என்பதைதான் இப்போது சமூகத்துக்கு எடுத்துரைக்க முற்படுகின்றோம். அதாகப்பட்டது என்னவென்றால் நாய்களுக்கு மார்கழி மாதம் சீசன் வருவது போல நயன்தாராவுக்கு மூன்று வருடத்துக்கு ஒருக்கா ஆளை மாத்தாவிட்டால் சரியாக(???) தூக்கம் வராது போல! நயனின் காதல் விளையாட்டுக்களை போதுமான வரை பல பதிவுகளில் தாக்கி எழுதியமையால்; அதற்க்கு எல்லாம் மன்னிப்பு கேட்கும் முகமாக இந்த பதிப்பை எழுத முற்படுகின்றேன்.!!!

ஒண்ணுமே தெரியாத பாப்பா!!! போட்டாளே தாப்#!!!

Post Comment

Friday, September 6, 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் சிவகார்த்திகேயனுக்கு 6வது படம் ஆகும். ஹீரோ ஆக கலக்கும் 5வது படம் இதுதான். இதனை தொடர்ந்து ‘மான் கராத்தே’ படத்திலும் ஒப்பந்தமாகி, நடிக்கவும் தொடங்கி விட்டார். மிக மெதுவாகவும், உறுதியாகவும் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார். நடிக்கும் படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கை பெற்று கொடுக்கின்றது என்று தெரிந்தும் அவசரம் இல்லாமல் ஆறுதலாக ஒவ்வொரு படங்களும் முடிந்த பின் அடுத்த படத்தில் ஒப்பந்தமாகி ‘கால் சீட்’ பிரச்சனைக்குள் சிக்கிக்கொள்ளாமல் நடிக்கின்றார். என்ன தான் ‘கால் சீட்’ சிக்கலில் சிக்காமல் அவதானமாக இருந்தாலும் கிசு..கிசு என்ற வலையில் சிக்காமல் தப்ப முடியாது. ஆனால் கிசு கிசு என்று எழுதப்படும் விடையங்கள் அனேகமாக உண்மையாகத்தான் இருக்கும் ஆனால் என்ன கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டு எழுதப்படும். அதே போலத்தான் சிவகார்த்திகேயனும் கிசு கிசுவில் சிக்கியுள்ளார். சரி சுற்றி வளைக்காமல் நேரடியாக கிசு கிசுக்கு செல்வோம்!

இப்டி..இப்டி நடந்தா அவீங்க அப்டி..அப்டி கிசுகிசுப்பாங்கதானே!!!

Post Comment

Saturday, August 24, 2013

குத்து ரம்யாவின் தேர்தல் வெற்றி - ஒரு சிறப்பு அலசல்!!!

குத்துவிளக்கு!!!

நடிகர்களோ நடிகைகளோ அரசியலுக்கு வருவது என்பது இந்தியாவை பொறுத்த மட்டில் சர்வ சாதாரணமான விடயம் தான். ஏன் உலக அளவில் கூட இதுதான் உண்மை. ஆனால் இந்தியாவில் மட்டும் அரசியலுக்கு வரும் நடிகைகள் சமூக வலைத்தளங்களில் ’கொத்து புரோட்டா’ போடப்படுகின்றார்கள். சமூக வலைத்தள போராளிகளிடம் இருந்து தமிழகத்தை மூன்றாவது தடவையாக ஆட்சி செய்யும் ”ஜே” முதல் சல்லித்தனமான அரசியலை காட்டும் ரோஜா, குஸ்பூ வரை யாருமே தப்பிக்கவில்லை. இருந்தும் ’ரம்யா’ அத்தான்பா நம்ம சிம்பு கூட குத்து படத்தில் செம குத்துப்போட்ட நடிகைதான் இப்போது சமூக வலைத்தள போராளிகளிடம் சிக்கி ’நூடில்ஸ்’ ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார். இந்த சமூக வலைத்தள போராளிகள் இப்படி நடந்துகொள்ள காரணம் என்ன? என்ன தப்பு தான் குத்து ரம்யா செய்தார்? பார்ப்போமா?

Post Comment

Thursday, August 15, 2013

அடோஃப் ஹிட்லரின் மரணமும் மர்மமும்...!!!

தன் மக்களுக்காக போராடினால் தீவிரவாதியா? சர்வாதிகாரியா?
(இருட்டடிக்கப்பட்ட உலகப்பிரபலங்களின் வரலாறு!!!பாகம்-01 இருட்டடிக்கப்பட்ட உலகப்பிரபலங்களின் வரலாறு!!! பாகம்-02 இந்த பதிவுகளை வாசிப்பதற்கு இங்கே சொட்டுங்கள்) இந்த பதிவுகளில் சிறப்பித்த பிரபலங்களில் ஒருவராக ஹிட்லர் இருந்தார். அந்த பதிவில் ஹிட்லர் பற்றி பதிவிட்டவற்றை கொஞ்சம் விளக்கமாக மீண்டும் பதிவிடும் படி ஒருவர் கேட்டுக்கொண்டதற்கு அமைய இந்த பதிவை விளக்கமாக பதிவிட முயற்சிக்கின்றேன்.

Post Comment

Thursday, August 8, 2013

தனுஷ் கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல - புலம்பும் உண்மையான பெற்றோர்...!!!

எனக்கொரு உண்மை தெரிந்தாகனும்!!!

“ரஞ்ஜனா’ இந்திப் படம் மூலம் டெல்லிச் சீமை வரை கொடிநாட்டிய நடிகர் தனுஷுக்கு சிவ கங்கை சீமையிலிருந்து புது சிக்கல் உருவாகியுள்ளது.
இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் என்ற அடையாளத்துடன் “துள்ளு வதோ இளமை’ பட நாயக னாக அறிமுகமானார் தனுஷ். அறிமுகமான ஆண்டு 2002. அதே ஆண் டில், தொலைந்த தன் மகன் கலைச்செல்வன்தான் இன் றைய நடிகர் தனுஷ் என புதிய விவகாரத்திற்கு கோடிட்டுள்ளார் சிவகங்கை பேருந்து நிலையத்தில் டைம் கீப்பராக பணியாற்றும் கதிரேசன். “என் சொந்த ஊரு திருப்பாசேத்திப் பக்கத்திலுள்ள கல்லூரணி. என் மனைவி பேரு மீனாள். எங்களுக்கு இரண்டு குழந்தை கள். மூத்தவன் கலைச்செல்வன். இரண்டாவது தன பாக்கியம். நான் கண் டக்டரா வேலை பார்த்துக்கிட்டிருந்தப்ப எங்க வீடு மேலூர் பக்கத்தில எம். மலம் பட்டி ஆர்-டி.ஓ. ஆபீஸ் பக்கம் இருந்துச்சு. 10-ம் வகுப்பில் 365 மார்க் எடுத்தான் கலை. திருப்பத்தூரில் உள்ள ஆறுமுகம் சீதையம்மாள் பள்ளியில் +1 சேர்த்துவிட் டோம். ஹாஸ்டலுடன் சேர்ந்தது அந்த ஸ்கூல். ஹாஸ்டல் வார்டன் சீதாபதி எங்க ஊருக்காரரு என்பதால் அவர் பொறுப்பில் இவனை விட்டோம். கொஞ்ச நாளிலேயே இவன் வைச்சிருந்த டிரங்க் பெட்டியில்… “அம்மா, என்னை மன்னிச்சிடுங்க. எனக்கு இந்த படிப்பு பிடிக்கலை. நான் ஊரைவிட்டே போறேன். எனக்கு எப்பத் தோணுதோ, அப்ப உங்களைத் தேடி வருவேன்” அப்படின்னு எழுதி வைச்சுட்டு வெளியேறிட்டான்’. அவன் போனது 2002-ம் வருஷம்.

Post Comment

Wednesday, August 7, 2013

தலைவா - முதல் விமர்சனம் - பிரீமியர் ஷோ!!!!

பார்க்க போனவங்க சாகும் நேரம்...!!!

ஒரு காலத்தில் தெலுங்கு படங்களை குறி வைத்து ரீ-மேக் என்கிற பேரில் COPY பண்ணி வந்த இளைய தளபதி விஜய் இப்போது தனது ரிரெண்டை மாத்தி தமிழ் படங்களையே நேரடியாக உள்ட்டா பண்ணி படமாக்கி இருக்கிறார் என்பது ‘தலைவா’ படம் பார்க்கும் போது தெளிவாக தெரிகின்றது. நல்ல கதைகளை மறுத்து விட்டு பிறகு தான் மறுத்த படங்கள் மெகா ஹிட் ஆகும் போது மொக்கையாகிக்கொள்வதே வழக்கமான விஜய் இந்த முறை தனது அரசியல் கனவை நிஜத்தில் நிறைவேற்றிக்கொள்ள முடியாது என்று தெரிந்த உடனே படத்திலாவது அதை பூர்த்தி செய்துகொள்வோம் என்று கிளம்பி இருக்கின்றார் என்பது மட்டும் படத்தை பார்க்கும் போது நன்றாக தெரிகின்றது. “நாலு அல்லக்கைகள் தலைவா...தலைவான்னு கத்தினா தவக்கல எல்லாம் தலைவா ஆகிடுமா?” என்று எங்க ஊரில் தேர்தலின் போது ரோட்டு ரோட்டாக செய்த பிரச்சாரம் தான் நியாபகம் வருகின்றது. இந்த வாசகம் நிட்சயமாக விஜய்க்கு ’தலைவா’ படத்தில் பொருந்தும்.!!! ஏன்யா...ஏன் படத்துக்கு வைத்த டைட்டிலை நாம மறந்திடுவம் என்று படம் பூராக கோசம் போட்டு காதைக்கிழித்துப்புட்டீங்களே...!!!

Post Comment

Sunday, August 4, 2013

சேரனின் மகளில் காதல் விவகாரம் - நடந்தது என்ன?

ஒரு தகப்பன் செய்யாததை தான் செய்ததாக சொல்லுகின்றார் சேரன். குற்றச்சாட்டுக்களை சந்துரு மீது அடுக்கிகொண்டே பொகின்றார். அதில் அதிகம் நம்பும் படியாகவே உள்ளது. சினிமாவிலும் சரி, சாதாரண வாழ்க்கையிலும் சரி சேரன் அமைதியாகவே இருப்பார். அவருக்கா இந்த நிலமை என்று சொல்லும் அளவுக்கு பிரச்சனை உருவெடுத்துள்ளது. பிரபலங்களின் பிரச்சனை என்றால் சும்மாவா? சரி என்ன என்ன நடந்தது என்று பார்ப்போம்...!!!


ஒரு வெண் புறா...!!!

Post Comment

Wednesday, July 31, 2013

’தல’யின் “ஆரம்பம்” படத்தின் கதை என்ன? இதுதானா அது...!!!

ரஜினியின் படங்களுக்கு இருக்கும் வரவேற்ப்பை போலவே இப்போது அஜித்தின் படத்துக்கும் வரவேற்ப்பு இருப்பதை தல ரசிகர்கள் ‘மங்காத்தா’ படத்தின் வெளியீட்டின் போது நிறுபித்தார்கள். தல-53 என்று சொல்லப்பட்ட படத்தின் டைட்டிலை கண்டு பிடிப்பதே பெரிய பிரச்சனை; இப்போதுதான் அது ஓய்ந்தது. ஒரு படத்துக்கு பேர் வைக்க ஒரு வருஷமா? என்னு சலுத்துகாதீங்க மக்கள்ஸ்...இது சாதாரன ஹீரோவின் படமில்லையே...பிரபலங்கள் படம் என்றால் அப்படித்தான்...!!! சரி படம் பற்றியும் படத்தின் கதை பற்றியும் விஷ்னுவர்தன் என்ன சொல்லுகின்றார் என்று பார்ப்போம்...!!!

’தல’ ரசிகர்களின் பீலிங்...!!!

‘மாஸ் ஓப்பனிங்’… அஜித் ஸ்பெஷல். ஆனால், அவர் நடிக்கும் படத்துக்குத் தலைப்பு பிடிப்பதையே மாஸ் கொண்டாட்டம் ஆக்கிவிட்டது ‘ஆரம்பம்’ டீம்! 

Post Comment

ஹிந்திக்கு போகும் விஜய்; அதை தடுக்கும் ஷாருக்கான்...!!!

என்னதான் விஜயும் விஜயின் ரசிகர்களும் முதல் தரம், முதல் தரம் என்று மூக்கு வியர்க்க கத்தினாலும் ஒன்னும் வேலைக்கு ஆகாது; ஆகவும் முடியாது! என்னதான் ஷாருக்கான் விஜய் T.Vயின் அவாட்டு நிகழ்ச்சியில் விஜயை புகழ்ந்தது போல பார்வையாளர்களுக்கும்; ரசிகர்களுக்கும் இருந்தாலும் அது உண்மையில்லை. பலரும் நியாபகம் வருவது 2007ஆம் ஆண்டு தீபாவளி தான். சரி என்ன அந்த தீபாவளியில் ஸ்பெஷல் என்று கேட்கிறீர்களா? அதுதாங்க விஜயின் ‘அழு(ழ)கிய தமிழ் மகன்’ வெளிவந்தது. அது மட்டும் வந்திருந்தா பறவாயில்லை. கூடவே கொஞ்ச படங்களும் வந்தது. அதுதான் அவருக்கு வழமையை போல ஆப்பாக அமைந்தது.

படத்தோட பேர்ல மட்டும்தான்...!!!

Post Comment

Monday, July 29, 2013

தாலிகள் சொல்லும் சேதிகள் - ஆழம் அறியாத தேடல்...!!! பாகம்-01

இந்த பதிப்பில் முழுக்க முழுக்க தாலி, தாலியுடன் சம்பிரதாயங்கள் போன்றன மட்டுமே இருக்கும். பதிவின் நீளம் கருது இரண்டு பாகங்களாக எழுதியுள்ளேன். இந்த பதிவை எத்தனை பேர் வாசிக்கின்றார்கள் என்பதோ; எத்தனை பேரை சென்றடகின்றது என்பதோ எனது நோக்கம் இல்லை. எத்தனை நாட்களுக்குதான் சினிமா, ஹீரொ, ஹீரொயின் என்று புளிச்சல்களை எழுதிக்கொண்டே இருக்க முடியும். என்னதான் சொன்னாலும் அந்த பதிவுகளுக்கு இருக்கும் வரவேற்பை போல எந்த காத்திரமான பதிவுக்கும் வாசகர்கள் மத்தியில் வரவேற்ப்பு கிடைக்காது. இருந்தாலும் இவை பற்றியும் எழுத வேண்டும் என்பது எனது அவா..!!! சரி பதிப்புக்குள் செல்வோம்...!!! தாலி, எனும் பொழுது ஒன்பது இழைகளுக்கும் தாலிக்கும் என்ன சம்பந்தம் என்று முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டும்!!!

தாலியின் பகத்துவம்!!!

Post Comment

தாலிகள் சொல்லும் சேதிகள் - ஆழம் அறியாத தேடல்...!!! பாகம்-02

பதிப்பின் பாகம்-1 ஐ வாசிப்பதற்கு இந்த தொடுப்பை சொட்டுங்கள்...!!!
சரி விட்ட ஒன்பதின் பெருமைகளை தொடருவோம்..!!!

அடியார்களின் பண்புகள்
1.எதிர்கொள்ளல், 2.பணிதல், 3.ஆசனம் (இருக்கை) தருதல், 4.கால் கழுவுதல், 5.அருச்சித்தல், 6.தூபம் இடல், 7.தீபம் சாட்டல், 8.புகழ்தல், 9.அமுது அளித்தல்,

விக்ரமார்க்கனின் சபையிலிருந்த 9 புலவர்கள்; நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்கள்
1நவரத்னங்கள் (முனிவர்கள்)தன்வந்த்ரி, 2.க்ஷணபகர், 3.அமரஸிம்ஹர், 4.சங்கு, 5.வேதாலபட்டர், 6.கடகர்ப்பரர், 7.காளிதாசர், 8.வராகமிஹிரர், 9.வரருசி

அடியார்களின் நவகுணங்கள்
1.அன்பு, 2.இனிமை, 3.உண்மை, 4.நன்மை, 5.மென்மை, 6.சிந்தனை, 7.காலம், 8.சபை, 9.மவுனம்

நவ நிதிகள்
1.சங்கம், 2.பதுமம், 3.மகாபதுமம், 4.மகரம், 5.கச்சபம், 6.முகுந்தம், 7.குந்தம், 8.நீலம், 9.வரம்

பிரதான விருத்தம்
1.நவவித பக்தி 2.சிரவணம், 3.கீர்த்தனம், 4.ஸ்மரணம், 5.பாத சேவனம்அர்ச்சனம், 6.வந்தனம், 7.தாஸ்யம், 8.சக்கியம், 9.ஆத்ம நிவேதனம்

நவ பிரம்மாக்கள்
1.குமார பிரம்மன், 2.அர்க்க பிரம்மன், 3.வீர பிரம்மன், 4.பால பிரம்மன், 5.சுவர்க்க பிரம்மன், 6.கருட பிரம்மன், 7.விஸ்வ பிரம்மன், 8.பத்ம பிரம்மன், 9.தராக பிரம்மன்

Post Comment

Friday, July 26, 2013

பட்டத்து யானை - சினிமா விமர்சனம்...!!!

பட்டத்து யானையாவது விஷாலுக்கு கை கொடுக்குமா???

கொஞ்சம் படத்தைப்பற்றி :- மலைக்கோட்டை படத்தை தொடர்ந்து ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷால்-பூபதி பாண்டியன் கூட்டணி மீண்டும் கைகோர்த்திருக்கும் படம் பட்டத்து யானை.இந்த படத்தை மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்போடைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.  காமெடி மற்றும் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும்  மொத்தம் 850 பிரிண்டுகள் போடப்பட்டுள்ளதாக இணையத்தளங்கள் செய்தி தெருவிக்கின்றன. ’பட்டத்து யானை’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமாகியுள்ளார் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா.திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை தனது மகளுக்கு இருந்ததால்தான் பட்டத்து யானை படத்தின் மூலம் அறிமுகம் செய்தாராம் அர்ஜூன்.

Post Comment

சிம்புக்கு ஹன்சிகா இன்னொரு நயன்தாரா போல - செம கிளுகிளுப்பு..!!!

என் அருமை சினிமா பக்தகோடிகளே!!! எல்லோருக்கும் இனிய வணக்கம்... நாங்கள் எல்லம் எப்படியானதொரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று புரியவில்லை(இந்த டயலொக் உரிமையாளர் மனுஷபுத்திரன் அவர்களுக்கு நன்றி...!!!). சினிமா பக்கம் போனாலே ஒரே அழுகிய மீன் செத்த வாடைதான் வருகின்றது. எல்லொரும் அலப்பரை பண்ணுகின்றார்கள் என்றால் நம்ம விரல் ஆட்டுறதில் மன்னன் எங்கல் ‘வேட்டை மன்னன்’ பங்கு தமிழ் சினிமாவுக்கு அதிகமாகவே இருக்கின்றது. அதாகப்பட்டது என்ன வென்றால் மார்கழி மாதத்தில் நாய்களுக்கான சீசன் போல விரல் மன்னன் சிம்புவுக்கும் ஒரு சீசன் உண்டு. இது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.(வாங்கையா எல்லாரும் லைன்ல வரணும்..) முழுசா 25படம் கூட நடித்து முடியல அதுக்குள்ள புனைப்பெயர்களுக்கு மட்டும் ஒன்றும் குறைவில்லை. சரி நாம நம்ம மேட்டருக்குள் போவோமன்..!!!

ஒரு கிஸ் அடிக்க பலகோணத்தில திங் பண்ணுவார் போல...!!!

Post Comment

Tuesday, July 23, 2013

சூர்யா - பிறந்தநாள் ஸ்பெசல்(BIRTHDAY SPECIAL)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!!!


இப்ப எல்லாம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்களை நஸ்டப்படுத்தாத நடிகர்கள் யாரெண்டு பார்த்தா ரஜினிக்கு அப்புறம் எல்லா சினிமா விற்பன்னர்களும் முணுமுணுப்பது சூர்யாதான்... சூர்யாவிடம் கால்சீட் பெற்றுவிட்டால் கோடிகளில் இலாபத்தில் புரளலாம் என்பது அவர்களின் எதிர்பாப்பு.. உண்மையும்கூட! தொட்டதெல்லாம் பொன் என்று உச்சத்துக்கு சென்றார் சூர்யா. அதீத நம்பிக்கை, அதிகூடிய முயற்சி என்று சினிமாவுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த சூர்யா இன்று(2013.07.23) தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். இவர் சினிமாவுக்குள் நுழைந்து 16 ஆண்டுகள் முடிவடைகின்றன. நேருக்கு நேர் படத்தில் விஜய்யுடன் திரையை பகிர்ந்துகொண்டு சூர்யா தனது திரையுலக வாழ்க்கைக்குள் காலடி எடுத்து வைத்தார். பல கஸ்டங்கல், பல தோல்விகள் எல்லாவற்றையும் தாண்டி இன்று தமிழ் சினிமாவில் முக்கிய புள்ளியாக திகழ்கின்றார். சரி பிறந்தநாளுக்கு வாழ்த்தியாச்சு... இனி கொஞ்சம் சினிமா பக்கம் போய் அலசிப்பார்ப்பம்...!!!

Post Comment

Thursday, July 18, 2013

மரியான் விமர்சனம்..!!!

ராசா... கடல் ராசா...!!!!

தனுஷ், பார்வதி மேனன் மற்றும் பலரின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படத்தினை பரத்பாலா இயக்கியிருக்கின்றார். பெரும் பாலான படங்கள் இந்த பாணியில் படம் வருவதில்லை. ‘நமக்கு எதுக்கு வீண் பொல்லாப்பு..’ என்று அரைத்த மாவையே அரைத்து விட்டு போய் விடுவார்கள். ஆனால் ’மரியான்’ வழமையான மசாலா படங்களின் இருந்து கொஞ்சம் வித்தியாசம். தமிழில் சர்வதேச பிரச்சினைகளின் பின்னணியில் படங்கள் வருவதில்லை. அப்படி வந்தால் கமல் போல எந்த பிரச்சனை வந்தாளும் தாக்குப்பிடிக்க கூடியவர்களிடம் இருந்துதான் எதிர்பார்க்க முடியும் என்ற நிலைப்பாட்டை உடைத்தெறிந்து வெளியாகியிருக்கும் படம் தான் தனுஷின் மரியான். மிகவும் பலமான கதைக்களம் தான் இந்த மரியான். ஒரு தனி மனிதனின் எமோஷனை காட்டும் படம், காதல், ஆக்‌ஷன் என்று எல்லா கோணத்திலையும் படத்தை பின்னி எடுத்திருக்காரு இயக்குநர்...!!!

Post Comment

Tuesday, July 16, 2013

அஜித்-53 டைட்டிலே பரபரப்புத்தானே...!!!

எப்போதும் அஜித்துக்கு இறங்கு முகம் இல்லை. அதாவது அஜித் ஹிட் கொடுத்தாலும் சரி.. பிலாப் கொடுத்தாலும் அஜித்தின் மார்க்கட் ஒரு போதும் ஆட்டம் கண்டதே இல்லை. முந்தய காலத்தில் எல்லாம் அஜித்தின் பட வெளியீட்டில்தான் சஸ்பன்ஸ், பரபரப்பு இருக்கும் இப்ப அதை விஸ்னுவர்தன் முழுமையாக மாற்றிவிட்டார். இப்ப தலைப்புக்காக ஒரு வருடம் காத்திருக்க வேண்டி இருக்கின்றது. விஸ்னுவர்தன் படம் எடுக்க ஆரம்பித்த நாளில் இருந்து படம் முடிந்துவிட்டதாக சொல்லப்படும் இந்த காலம் வரை படத்தின் தலைப்பு பற்றி பல வதந்திகள் வந்தன. இன்னும் வந்திகொண்டுதான் இருக்கின்றன. என்ன செய்ய அஜித்தின் பட தலைப்பை ’நாங்கள்’தான் முதலில் வெளியிட்டோம் என்று மார்தட்டிக்கொள்ள யாருக்குத்தான் ஆசை இருக்காது..!!!

டைட்டில் இன்னும் வைக்கல...!!!

Post Comment

Saturday, July 13, 2013

விஜய்யை சீண்டிப் பார்க்கும் பிரபுதேவா..!!!

யார் ரசிகன் என்பது முக்கியம் இல்லை. ஆனால் ஒருவரின் திறமையை தனிப்பட்ட வெறுப்புக்காக கேவலப்படுத்துவது நல்லது இல்லை. அதுகும் பிரபுதேவா போன்ற மக்கள் மனதில் நல்ல இடம் பிடித்த ஒரு சக திறமைசாலிக்கு நல்லது இல்லை. என்னவோ தெரியவில்லை பாரதிராஜாவுக்கும் பிரபுதேவாவுக்கும் காலம் சரியில்லை போல இருக்கின்றது. பாரதிராஜா கதை எல்லோரும் நன்கு அறிந்ததே.! ஆனால் இப்ப தேவா கொடுத்த பேட்டி அவரையும் குழப்பகாரர்கள் லிஸ்ற்ரில் சேர்த்து விட்டது. ஒரு காலகட்டத்தில் இந்த ரெண்டு பேரும் மிகவும் ஒற்றுமையாக இருந்தார்கள். தேவா இவரை வைத்து இரண்டு படங்களை இயக்கி இருக்கின்றார். அதில் போக்கிரி என்ற படம் வசூல் அள்ளிய படம். அதே போல இவர்கள் இருவரும் இணைந்த அடுத்த படம் வில்லு. வில்லு பத்தி சொல்லத்தான் வேணுமா? இந்த இடத்தில்? சரி என்ன மேட்டர் என்று பார்ப்பம்..!!! 

நல்ல டான்ஸ்சர்...இப்ப கிழியுது டவுசர்...!!!

Post Comment

Thursday, July 11, 2013

சப்ப பிகரு சமந்தா; நச்சு பிகரு நஸ்ரியா...!!!

இந்த பதிவு முழுக்க முழுக்க சமந்தாவை கலாய்ப்பதற்காக எழுதப்படும் பதிவாகும். இந்த பதிவினை வாசித்த பின்பு சமந்தாவின் எந்த ஒரு ரசிகனும் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். (சமந்தாவுக்கு ரசிகர்கள் இருப்பதே பெரிய விசயம் இதில தற்கொலை... ரைட்டு விடு.. நீங்க கடுப்பாவது புரியுது...!!!) தமிழ் மொழியில்(ஆமா ஆமா சமந்தா உலக மொழிகளில் எல்லாம் நடிக்கும் நடிகை தானே... குறிப்பிட்டு தமிழ் மொழி என்று சொல்லத்தான் வேணும்...இப்படி டென்ஷன் ஆகாதீங்க பாசூ...)உருப்படியாக ஒரு படம் ஒரு படம் கூட நடித்து ஹிட் கொடுக்கவில்லை அதுக்குள் சித்தார்த்துடன் கிசுகிசு..!!! எங்க இருந்துதான் கூடுறாங்களோ தெரியவில்லை. எச்ச சோற்றுக்கு காகம் வருவது போல வந்து தொலைகின்றார்கள்...(பாருயா...காகம் என்று திட்டியதும் காகத்து வாற கோபத்தை...!!!) சரி சரி ஆரம்பத்திலேயே போட்ட மொக்கை போதும்.. இனியாவது தலைப்புக்குள் போவோமா?

ம்ம்ம்...ஒரு பக்கமா பார்த்தா...!!!

Post Comment

Wednesday, July 10, 2013

இருட்டடிக்கப்பட்ட உலகப்பிரபலங்களின் வரலாறு!!! பாகம்-01

இந்த பதிவு நிட்சயமாக நீண்ட பதிவாகத்தான் இருக்கும். பதிவில் சம்மந்தப்பட்டவர்களின் முக்கிய படங்கள் சேர்க்கப்பட்டிருப்பதனால் பதிவு கொஞ்சம் இல்லை அதிகமாகவே நீண்டதாகத்தான் இருக்கும். சரி அப்படி என்னதான் எழுதப்போகின்றேன் என்று பார்ப்போம். அதாவது உலகில் பல பிரபலங்கள் இருந்திருக்கலாம் ஆனால் நாம் குறிப்பிட்ட ஒரு சிலரைத்தான் மறக்காமல் நியாபகம் வைத்திருப்போம். அப்படியானவர்களில் அதிகம் எதிர் பார்க்கப்படும் முதற்பத்து பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக எழுதுகின்றேன். இதிலும் என்ன ஒற்றுமை என்றால் இந்த பத்து பேரின் இறப்பிலும் ஏதோ ஒரு வகையில் ஒன்றாகத்தான் இருக்கும். இந்த பிரபலங்களில் அதிகமானவர்களின் இறப்பு எப்படி நடந்தது? என்று சரியான ஒரு முடிவினை சொல்ல முடியாததாகவே இருக்கும். எப்படி இறந்தார்கள் என்று தெரியாமல் இறந்தால் தான் மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம் போல் இருக்கின்றது. சரி அதிகம் பேசாமல் பிரபலங்களின் முடி(க்கப்பட்ட)ந்த வாழ்க்கை வரலாற்றினை பார்ப்போம்...!!!

Post Comment

இருட்டடிக்கப்பட்ட உலகப்பிரபலங்களின் வரலாறு!!! பாகம்-02

என்னால் அனுமானிக்கப்பட்ட பிரபலங்கள் பத்துப்பேரில் கடைசி ஐந்து பேரின் வாழ்க்கை சுவாரசியங்களை(பாகம்-01 இனை) படிக்க இங்கே சொட்டுங்கள்...!!!

05. சுபாஸ் சந்திர போஸ்

”ஆகஸ்ட் 18, 1945-ல் தைவான் தலைநகர் தாய்பேய் விமான நிலையத்திலோ, அதற்கு அருகாமையிலோ நடந்த விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை. எப்படியென்றால், நேதாஜி மரணம் குறித்து இந்திய அரசால் அமைக்கப்பட்ட முகர்ஜி கமிஷனிடம், அமெரிக்க உளவுத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் இதனை உறுதிபட அமெரிக்கா தெரிவித்துவிட்டது. தைவான் நாட்டு அரசும், ”தன் நாட்டு எல்லைக்குள் அன்று அப்படி எந்த விபத்தும் நடக்கவில்லை” என்று கூறிவிட்டது. ஆக மொத்ததில் இவர் இறந்தாரா? இல்லையா? என்பதே இங்கு சந்தேகம்..!!! உண்மையான இந்திய சுதந்திர போராளி..!!! உண்மையானவர்கள் நீண்ட காலம் உயிர் வாழ மாட்டார்கள் என்பது உண்மைதான் போல இருக்கின்றது.


இந்திய சுதந்திர போராளி...!!!

Post Comment

Thursday, July 4, 2013

சிங்கம்-2 விமர்சனம் !!!

போஸ்டரிலேயே பயம் காட்டுறதுன்னா அது நீ தான்லே...!!!

ஹரிக்கு ஏற்ற ஹீரோ சூர்யாதான் என்றதை மாற்றுக்கருத்தில்லாம நிரூபித்த திரைப்படம். போலிசுக்கேற்ற கட்டான,மிடுக்கான உடல், சத்தமாக,வேகமாக வசனங்களை உச்சரிக்கும் திறமை இன்றைய நிலையில் சூர்யாவுக்கென்று உள்ள தனித்துவங்களில் ஒன்று. பட்டி தொட்டியெங்கும் தூள் கிளப்பிய திரைப்படம் சிங்கம். இதன் வெற்றியை தொடர்ந்து உருவாக்கிய படம்தான் சிங்கம் பாகம்-2 ஆரம்பத்தில் பலரின் கிண்டல்களை சம்பாதித்த இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் ஐ அடிக்கும் என்று சொன்னால் கிண்டல் செய்தவர்களுக்கு வியர்க்கத்தான் செய்யும் ஆனால் உண்மையும் இதுவே..!!! சிங்கம்-1 வெளிவந்த பொது நஸ்டத்தில் மூடிக்கிடந்த பல திரையரங்குகள் திறக்கப்பட்டதும் தற்போது வரைக்கும் போட்டதை எடுத்துக் கொண்டிருக்கின்றது என்றால் அது முழு காரணமும் சிங்கம்-1 தான்லே...!!!

Post Comment

Sunday, June 30, 2013

"தலைவா" COPY அடிப்பதில் உனக்கு நிகரில்லை...!!!

முன்குறிப்பு :- இது தொடர்பாக வாசிக்க ஆவல், விருப்பம் இல்லாதவர்கள் தயவு செய்து வாசிக்க வேண்டாம். பிற்பாடு வாசித்து விட்டு "இந்த பதிப்பு எழுதின நேரத்திற்கு ஏதாவது உருப்படியான வேலை செய்திருக்கலாம்..." என்றது போன்ற பின்னூட்டல்களை பதிக்க வேண்டாம்.. அப்படி நடக்கும் பட்சத்தில் உங்கள் மானம், மரியாதைக்கு கம்பனி பொறுப்பு கிடையாது என்பதை தாழ்மையுடன் கம்பனி உறுப்பினர்கள் கூறிக்கொள்கிறார்கள்..!!!

விஜய்..விஜய்.. ஜெய்கோ..!!!

Post Comment

Tuesday, June 25, 2013

சுருதி ஹாசனும் கிளாமரும்...!!!

இந்த பதிவு சுருதிஹாசனின் ரசிகர்களுக்கு மிகவும் கொண்டாட்டமான பதிவாகும். நீண்ட நாட்களாக சுருதிஹாசன் பற்றி ஏதாவது நாமும் கிறுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்க்கு சரியான சந்தர்பம், அள்ள அள்ள குறையாத கவர்ச்சி பொங்கும் படங்களும் கிடைக்கப்பெற்ற பின்னரே கிறுக்கலை ஆரம்பித்தேன். என்னதான் இருந்தாலும் ஆரம்பத்தில் சுருதிஹாசன் பற்றி கொஞ்சம் அறிந்ததை சொல்லி விட்டு பின்னர் நீங்க எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்ததை போல ஜொள்ளுக்களை ஆரம்பிப்போம்...!!! (நம்ம பக்கம் வாசிக்க வருபவர்கள்... தகவல் அறியவா வாரப்போகின்ரார்கள்... பூறா ஜொள்ளுப்பார்டிகள்... சரி சரி வந்த அலுவலை பாருங்கள்...)

முதுகிலேயே... இப்டீன்னா...!!!

Post Comment

Tuesday, April 16, 2013

கமல் கொடுத்த சில்மிஷ முத்தம் DD பொண்ணு வெட்கம்...!!!

கமல் முத்தத்தில் நனையாத நடிகைகள் குறைவு, அந்த அளவுக்கு முத்தம் கொடுப்பதில் பேர் போன அவர் , இனி தன் படங்களில் முத்த காட்சி இல்லை என்ற அதி முக்கிய செய்தியை சொன்னால் எத்தனை பேருக்கு மூச்சு இறுகப்போகுதோ தெரியவில்லை. இருந்தாலும் சொல்லித்தானே ஆக வேண்டும்.


அண்ணைக்கு அடித்த லிப்-லிப் இன்னைக்கு வரைக்கும் கவுதமி கமலிடம் இனித்(ருந்)துட்டே இருக்கு..!!!

Post Comment

Wednesday, April 10, 2013

அஞ்சலியை காணவில்லை - கடத்தியது குஸ்பு சுந்தர்.C ??? பலகோண விசாரணையின் முடிவு..!!!

அஞ்சலி என்று சொன்னால் யாருக்குமே தெரியாமல் இருக்காது என்பது நம்பிக்கை. ஆனால் இப்ப அஞ்சலி காணமல் போய் விட்டார் என்றால் அதையும் நம்பித்தான் ஆகவேண்டும். ஆரம்பத்தில் இந்த செய்தி கேள்விப்பட்டதும் நானும் நம்பவில்லை. ஆனால் என்ன செய்வது ஒரே விடயம் திரும்ப திரும்ப உறுதியாக சொல்லப்படும் போது நம்பித்தானே ஆக வேண்டும். சரி அப்படி என்னதான் நடந்தது என்று பார்ப்பம்.


இதுதான் தப்பு... ஆனா கொஞ்சம் மப்பு..!!!

Post Comment

Saturday, March 30, 2013

குஷ்புவை அம்மா ஆக்கப்போவது யாரு..?

பிஞ்சு FACE..ஊ.. பஞ்சு...!!!

குஷ்பு - குறிப்பு :- இது தொடர்பாக வாசிக்க ஆவல், விருப்பம் இல்லாதவர்கள் தயவு செய்து வாசிக்க வேண்டாம். பிற்பாடு வாசித்து விட்டு "இந்த பதிப்பு எழுதின நேரத்திற்கு ஏதாவது உருப்படியான வேலை செய்திருக்கலாம்..." என்றது போன்ற பின்னூட்டல்களை பதிக்க வேண்டாம்.. அப்படி நடக்கும் பட்சத்தில் உங்கள் மானம், மரியாதைக்கு கம்பனி பொறுப்பு கிடையாது என்பதை தாழ்மையுடன் கம்பனி உறுப்பினர்கள் கூறிக்கொள்கிறார்கள்..!! தொடர்ந்து வாசிக்க விரும்புவோர் சங்கடம் இல்லாமல் சந்தோசப்படும்படி சங்கத்தார் வேண்டிக்கொள்கின்றார்கள். சரி சங்கடம் இல்லாம சமாச்சாரத்துக்குள் போவமா..?

Post Comment

Friday, March 29, 2013

கேடி பில்லா கில்லாடி ரங்கா - விமல் VS சிவகர்த்திகேயன் !!!

படத்தில் எப்படி கேடி, கில்லாடி ஹீரோக்கள் இருகிறாங்க்களோ அதே போல கிளுகிளுன்னு, குளுகுளுன்னு ரெண்டு ஹீரோயின்களும் இருக்கிறாங்க.. அட போங்க பாஸ் யாரு நடித்தால் என்ன நமக்கு செம டக்கர் ஹீரோயின் இருந்தால் போதுமே என்று என்னைப்போல எண்ணும் அன்பு உள்ளங்களுக்கு இயக்குனர் பாண்டியராஜ் ஒரு குறையும் வைக்கவில்லை. பாண்டியராஜின் வழமையான படங்களின் பாணியிலே இந்த படமும் முழு நீள காமடி படமாகவும்; இறுதியில் ஒரு மெசேஜ் சொல்லும் படமாகவும் உள்ளது.

நட்பின்றது கரண்டு மாதிரி..!!!

Post Comment

Wednesday, March 27, 2013

"சூப்பர்ஸ்டார்" ரஜினிகாந்த் உட்பட நான்கு முக்கிய நடிகர்களுக்கு திடீர் மாரடைப்பு..!!!

இந்த பதிவு முன்னர் எழுதிய பதிவின் தொடர்ச்சியாகும். அதுக்காக முதல் பதிவு வாசித்தால்தான் இந்த பதிவு விளங்கும்... என்று கதை விட நான் என்ன "உலக நாயகனா???" இந்த பதிவு முழுக்க முழுக்க எல்லா நடிகர்களையும் ஒரு கை!!! பார்க்கும் நக்கல் பதிவு... நடிகர்களில் அதிக விருப்பம்... தீ(விர) ரசிகர்கள்... யாரும் இந்த பதிவினை அதிக சிரத்தை எடுத்து வாசிக்க வேண்டாம்... மாறாக வாசித்து விட்டு... "தேனா...மானா..." என்று எல்லாம் பின்னூட்டல்களை இட வேண்டாம்... பின்பு நடப்பவற்றுக்கு கம்பனி பொறுப்புக்கிடையாது என்பதை பதிவின் தொடக்கத்திலேயே கூறிவிடுகின்றேன்... சரி கமலஹாசனை போல கனக்க(அலம்பாமல்) கதைக்காமல் பதிவுக்குள் போவோம்..!!! 

இத்தனை மாணவ செல்வங்கள் பட்டினி போராட்டம் நடத்தியும் நடிர்களின் இன்னும் ஒரு நாய் கூட பெரிதாக முன் வரவல்லை என்பது சிந்திக்க வேண்டிய விஷயம்... சிந்திக்க வேண்டிய விடயம் மட்டும் இல்லை... உரிமையுடன் கேட்க வேண்டிய விடயம்... ஒரு படம் வெளிவரும் போது எப்படி எல்லாம் மைக் முன்னாடி வந்து "என்னை வாழவைக்கும் செல்வங்களே.." என்று கும்பிடு போட முடியுதோ... அதைப்போல ரசிகனும் அவர்களை பார்த்து கேட்கும் உரிமை இருக்கத்தானே... வேண்டும்... இல்லையேல் இது சர்வாதிகார தமிழ் சினிமா உலகமா? "கூப்பிடுறா சாலமன் பாப்பையாவை பட்டிமன்றம் வைத்து பைசல் பண்ணீடுவம்..."

Post Comment

Sunday, March 24, 2013

தனி ஈழ நாடு கோரி "சூப்பர்ஸ்டார்" ரஜினிகாந்த் இமயமலைக்கு பாத யாத்திரை..!!!

பதிவும், பதிவில் தொடர இருக்கும் கருத்துக்களும் மிகவும் கவனிக்கப்பட வேண்டியது என்பதால் பதிவினை இரண்டாக பிரித்து பதிவிட உள்ளேன். முதல் பாதியிலேயே சினிமா கோமாளிகளை (ஓட்டு மொத்தமாக எல்லா நடிகர்களும்..) பற்றி எழுதுவதை விட... இந்த பிரச்சனையின் தோற்றம் பற்றி கொஞ்சம் சுருக்கமாக பார்த்து விட்டு... இந்த போராட்டத்துக்காக கோமாளிகளின் பங்களிப்பினை பற்றி விளக்கமாக பாப்போம்..!!!
ஏதோ எனக்கு தெரிந்த அரசியல் அறிவினை??? கொண்டு எழுதியுள்ளேன்.. ஏதும் பிழை இருப்பின் இளையவனை மன்னித்துக்கொள்ளவும்..!!!

Post Comment

Wednesday, March 20, 2013

கும்முன்னு இருக்கும் குஷ்பு; SUN T.Vயில் ராஜாதான் சுந்தர்.C...!!!

ஒரு நாட்டில் முன்னேற்றத்துக்கு அத்தியாவசியமானது என்று கருதப்படுவது பத்திரிகை துறை... நவீன காலம் என்பதால் ஊடகத்துறையும் இதில் பெரும் பங்கை வகிக்கிறது... அப்படி இருக்கும் போது இவர்களிடம் மட்டும் ஏன் இப்படியான 'மார்கழி மாதத்து நாய்க்குணம்' என்றுதான் புரியவில்லை.. இவர்களுக்கு இப்படியான செய்திகளை ஒளி,ஒலி பரப்புவது என்றால் அவ்வளோவு இஸ்டம்... காம கண்ணன் 'நித்தியானத்தா'வின் காணொளியினை உலகத்தொலைக்காட்சிகளில் முதல் முதலாக வெளியிட்ட பெருமை அந்த தொலைக்காட்சிக்கே சேரும்... அந்த தொலைக்காட்சியை குறை சொல்வதை விட அதன் தலைமைத்துவத்தையும் அதன் செய்திப்பிரிவையும் குறை சொல்லலாம்... ஏன்னா அவர்கள் தான் இதுக்கு முக்கிய காரணகர்த்தாக்கள்...!!!

Post Comment

Monday, March 18, 2013

அங்கு தீக்குளிப்பு; இங்கு விமானநிலையம் திறப்பு...!!!

இவ்வாறான பெயர்களை பார்க்கும் போது "தமிழ் படம்"த்தில் சிவா செய்யும் கூத்துக்கள்தான் நினைப்புக்கு வரும்...!!!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படு கொலைகளுக்கு எதிராக தமிழகத்தில் கோயம்பேடு பகுதியில் உள்ள செங்கொடி அரங்கத்தில் 'லயோலா' கல்லூரி மாணவர்கள் எட்டு பேருடன் உண்ணாவிரத போராட்டம் துணிச்சல் கரமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த போராட்டம் நான்காவது நாளிலேயே வாபஸ் வாங்கப்பட்டாலும் இந்த போராட்டம் ஏற்படுத்திய தூண்டுதலில் வீறுகொண்டு வீதிக்கு வரக்காரணமானது. சொல்லப்போனால் ஒட்டுமொத்த தமிழக மாணவர்களும் போராட்டத்தில் இறங்க்கியிருக்கின்றார்கள். எந்தவித கலவரமும் இல்லாமல் போராட்டம் நடத்துவதற்க்கு எத்தனை எதிர்ப்புக்கள். நீதி மன்றத்துக்குள் வெடிகுண்டு இருப்பதாக சொல்லி சென்னையில் சட்ட கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தை கலைக்க முயற்சி செய்தனர். ஆனால் பயன் இல்லை போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. போலீசார் படத்தில் வருவது போல மாணவர்கள் மீது தடியடி.. இப்படி பல வகையில் ஜெயலலிதாவின் அரசாங்கம் தன் இன மக்களுக்கு ஆதரவாக போராடும் போராட்டத்துக்கு எந்த விதத்தில் ஆதரவினை கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு ஆதரவினை வழங்க்கியவண்ணம் இருக்கின்றது..(விட்டா கிறுக்கன் ஆக்கீடுவாங்க போல...!!) ஆனால் கலைக்கிழவன் 'கருணாநிதி'யின் அரசாங்கம் செய்த உதவிக்கு ஜெயலலிதாவின் அரசாங்கம் செய்த உதவியாவது ஓரளவுக்கு பொறுத்துக்கொள்ளும் அளவிலான உதவியாகும்....!!!!!

Post Comment

Friday, March 15, 2013

பரதேசி என்றால் அது பாலாவின் "பரதேசி"தான்...!!!


இப்போது திரைக்கு வரும் படங்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் சர்ச்சையை எதிர்ப்பை தன்னுள்ளே வாங்கிக்கொண்டுதான் வெளிவருகின்றன. இது ஒரு விதத்தில் வியாபார யுக்தியாக இருந்தாலும் சர்ச்சைகள் எல்லோருக்கும் நல்ல வியாபாரத்துக்கு வழி வகுத்துவிட போவதில்லை. அதே போலதான் பாலாவின் "பரதேசி"க்கும் சர்ச்சை, ரசிகர்கள் மத்தியில் பாலா ஒரு காட்டுமிராண்டியாக சித்தரிக்கப்பட்டது என்று கொள்ளை சோகங்களோடு படம் திரைக்கு வந்தது. பாலா ஒரு காட்சியை படமாக்குவதற்க்கு முன்னர் அந்த காட்சியை தத்துரூபமாக தானே ஒரு முறை நடித்துக்காட்டுவார். அவ்வாறு அவர் நடித்துக்காட்டுவது போன்ற ஒரு காணொளி சில தினக்களுக்கு முன்னர் வெளியாகியதே இவ்வளவு சர்ச்சைக்கும், பாலா கத்தரிக்கப்படுவதற்க்கும் காரணமாகியது. தனது கடமையை, தனது பொறுப்பை எந்த வித குறையும் இல்லாமல் செய்து முடிக்க வேண்டும் என்பதில் பாலா அடித்த எந்த அடிகளும் சறுக்கிவிடவில்லை..!!! நடிப்பர்வர்களின் முழுமையான விளக்கமே அதனை பார்ப்பவர்களின் முழு திருப்தியாக அமையும்..!!!

Post Comment

Thursday, February 7, 2013

தசாவதாரம் தொடக்கம் விஸ்வரூபம் வரைக்கும் திரைவிமர்சனம்..!!!

"விஸ்வரூபம்" என்ற படத்தை பற்றி விமர்சனம் எழுதும் தகுதி எனக்கு மட்டும் இல்லை யாருக்குமே இல்லை.. ஏன்னா படத்தை அவளவு சூப்பர் ஆக எடுத்திருக்கார். நானும் "விஸ்வரூபம்" என்ற பேரில் ஏதாவது விமர்சனம் எழுதணும் என்ற ஆவலில் எழுதலாம் என்று ஆரம்பித்தே ஆனால் முடியவில்லை.. (முன்ன பின்ன விமர்சனம் எழுதி இருந்தால் தானே..!!! அவ்வ்..) சப்பை கட்டு கட்டுவதற்க்காக "தசாவதாரம்" படத்தின் விமர்சனத்தில் தொடங்கி "விஸ்வரூப"த்தில் முடித்து விடலாம் என்ற குட்டி ஆசையில் ஏதோ எழுதி முடித்திருக்கின்றேன். கோப படாமல் பொறுமையாக வாசித்து; உங்கள் கார சாரமான கருத்தினை கூறவும்..!!! 

Post Comment

விஸ்வரூபமும் வில்லங்கமும்...!!!

பொதுவாக எனது பதிப்புக்களில் அரசியல் பதிக்கப்படாமலே இருக்கும்..!! ஆனால் காலப்போக்கில் எல்லாம் மாற்றமடையும் என்பது போல இப்படியான பதிப்பினை எழுதியே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு உள்ளானேன்.. உள்ளானேன் என்று சொல்வதை விட உள்ளாக்கப்பட்டேன் என்பதே நிஜம்.. இவ்வளவு காலமும் இப்படியான ஒரு காரமான பதிப்பினை போடாமல் இப்போது மட்டும் போடுவதற்காக உங்களில் பலருக்கு கோபமும், எரிச்சலும் ஏற்படலாம்.. மற்ற பதிப்புக்களை போல ஒரு சின்ன விடயத்தை வைத்துக்கொண்டு சப்பைக்கட்டு கட்டிவிட்டு போக முடியாது... அது சினிமா இது அரசியல் நிறைய வாசிக்க வேண்டும்... அதைவிட அதிகமாக எல்லாவற்றையும் ஒரு புள்ளியில் கொணர்ந்து நிறுத்தி அலச அல்லது அல்லோசிக்க வேண்டும். ஆக மொத்தத்தில் வெகுவான ஒரு முன்னாயத்தம் வேண்டும். அதுக்காகவே இந்த பதிப்பிற்கு இந்தளவு கால தாமதம்..!!!

Post Comment

Thursday, January 17, 2013

வெள்ளைக்காரன் பெற்ற பிள்ளைக்கு கவுதம்மேனனும், கே.வி.ஆனந்தும் அப்பா ஆக்கினார்கள்...!!!

கண்ணா இதை கொஞ்சம் வாசி :- இரண்டு இயக்குனர்களை பற்றி புகழ்ந்து எழுதுவதனால் பதிப்பு நீளமானதாகவே இருக்கும். இஷ்டப்படுபவர்கள் கொஞ்சம் கஷ்டத்தை பொறுத்து வாசிக்கவும். இவ் இரண்டு இயக்குனர்களுக்கு வாளி வைக்கும் ரசிகர்கள் இந்த பதிவு தொடர்பாக கடுப்பு, கோபம் அடைந்தால் அதுக்கு கம்பனி பொறுப்பாகாது என்பதை பதிவின் ஆரம்பத்திலேயே கூறிக்கொள்கின்றோம்..!!! அவசர அவசரமாக எழுதிய பதிப்பு என்பதனால் எழுத்து பிழைகள் , தகவல்களில் சற்றே குறைகள் இருந்துவிட கூடும் இந்த இளையவனை விடும் பிழைகளை பொருட்படுத்தாது வாசிக்கவும்..!! இந்த பதிப்பினை எழுதுவதுக்கு உதவிய.. சமூக வலைத்தள நண்பர்க்கு.. (அவரின் பெயர் எனக்கு தெரியாமையால் குறிப்பிட முடியவில்லை..) இந்த நேரத்தில் நன்றியை சொல்லிக்கொண்டு... பதிப்புக்குள் செல்வோம்..!!! 

Post Comment

Monday, January 7, 2013

மாயன்கள் தொடக்கம் ஏலியன்கள் - நம்பாவிட்டாலும் உண்மைதான்..!!! பாகம் - 02

பாகம் - 01 இனை வாசிக்க இங்கே சொட்டுங்கள்...!!!


பாகம் - 01 இல் ஆய்வாளர்களை வியப்புக்கு உள்ளாக்கியது என்ன? பெரிய 'பில்டப்'புடன் முடித்திருந்தேன். கொடுத்த 'பில்டப்'புக்கு அதிகமாகவே நீங்கள் தொடர்ந்து வாசிக்கவிருக்கும் பதிப்பு அமைந்திருக்கும். நான் அப்புடியே ஷாக்காகீட்டேன் என்று நினைக்கும் அளவுக்கு இருக்கும்..!!

மாயாக்களின் கல்வெட்டுகளை ஆராய்ந்தபோது அங்கு கிடைத்த சித்திரங்களிலும், சிலைகளிலும் வித விதமான இதுவரைக்கும் கண்டிராத வினோத உருவங்கள் கிடைக்கப்பெற்றன. (அட….! இதுவரை நல்லாத்தானே போய்கிட்டு இருந்தீச்சு திடீரெண்டு ஏன் ஆச்சு..!!! என்று நீங்கள் குழம்புவது புரிகின்றதுஎன்ன இது புதுக்கதையாக இருக்கிறதே என்பீர்கள்.
ஆனால் அவை உண்மைதான்; புதுக்கதைதான். புதுக்கதை மட்டும் அல்ல, புதிர்க்கதையும் கூட. எனவே அவை பற்றி நிறைய எழுத வேண்டும். அதனால் முதலில் படம் வெளிவரும் முன்னர் வெளிவிடப்படும் 'டிரைலர்' போல ஒரு படத்தை போடுகின்றேன் பாருங்கள்..!!!

Post Comment

Saturday, January 5, 2013

மாயன்கள் தொடக்கம் ஏலியன்கள் - நம்பாவிட்டாலும் உண்மைதான்..!!! பாகம் - 01

அட்டேன்ஷன் ப்ளீஸ் :- இந்த பதிவு கொஞ்சம் நீண்டதாகாவே இருக்கும். காரணம்-இந்த பதிப்பில் அதிகம் படங்கள் சேர்க்கப்பட்டிருப்பதால் பதிவு கொஞ்சம் கனத்ததாகவே இருக்கும். நீளத்தை பொருட்படுத்தாது. அரிய தகவலை படியுங்கள்.!!! இந்த பதிப்பினை எழுத தூண்டிய நண்பன் Balamurali Ellamuruganக்கு நன்றியை கூறிக்கொண்டு, இந்த பதிப்பினை எழுதுவதற்க்கான அடிப்படை விளக்க ஆராய்ச்சிக்கட்டுரையை தந்துதவிய Mathavan Maheswaranக்கு நன்றியை கூறிக்கொண்டு பதிப்புக்குள் செல்வோம்.!!!

கொஞ்சம் விமர்சனம், கொஞ்சம் புராதனம், கொஞ்சம் மத நம்பிக்கை இது போன்ற வேறுபட்ட அம்சங்களை உள்ளடக்கிய விடயம், மக்களை அதிகம் அச்சத்தில் ஆழ்த்திய விடயம், ஊடகங்கள் வாய் திறக்க பயப்படும் விடயம், எச்சரிக்கைகள், தீர்க்கதரிசனங்கள், ஆய்வுகள், நம்பிக்கைகள், மறுப்புக்கள், இரகசியங்கள், புராதன நம்பிக்கைகள் இவைகளை உள்ளடக்கிய விடயம், உலகையே ஆச்சரியப்பட வைத்த/வைக்கவிருக்கும் விடயம் பற்றித்தான் இந்த பதிப்பில் பார்க்கப்போகின்றோம். மத நம்பிக்கை உள்ளவர்கள், மத நம்பிக்கை இல்லாதவர்கள், ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், பத்திரிகையாளர்கள் என்று எல்லோரும் ஒருமிக்க ஒரே விதமான நம்பிக்கைகளை வெளிப்படுத்திய விடயம்.

Post Comment

Thursday, January 3, 2013

அன்றைய சிவன் கோவில் தான் இன்றைய தாஜ்மஹால்...!!!

இந்த தலைப்பிலான கட்டுரைகள், ஆய்வுகள் எல்லாம் ஓய்வுக்கு வந்த பிற்பாடு இதனை தலையங்கமாக கொண்டு எனது பதிப்பை நகர்த்துவது சுலமம் என்பதனால் கொஞ்சம் இல்லை அதிகம் காலம் தாழ்த்தி இந்த பதிப்பினை எழுதுகின்றேன். பதிப்பின் ஆரம்பத்திலேயே இதனை சொல்லிவிடுகின்றேன். "யார் மனதையும் புண் படுத்தவேண்டும் என்ற நோக்கிலோ, என் சமயம் சாராதவர்களை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலோ இந்த பதிப்பினை எழுதவில்லை.." உலகத்தில் இருக்கும் எல்லோரும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் இடமாக தாஜ்மஹால் இருக்கின்ற போது அதனை பற்றி வெளிவரும் தகவல்களும் அந்த அளவுக்கு சுவாரஸ்யம் தாங்கியதாகவே இருக்கும். இதில் எந்த ஐயப்பாடும் இல்லை.. வெளிவந்த அனைத்து தகவல்களையும் ஒன்று திரட்டி அதிகளவு புகைப்படங்களுடன் இந்த பதிப்பினை உங்களுக்கு சமர்பிக்கின்றேன்..!!!

Post Comment