Monday, January 7, 2013

மாயன்கள் தொடக்கம் ஏலியன்கள் - நம்பாவிட்டாலும் உண்மைதான்..!!! பாகம் - 02

பாகம் - 01 இனை வாசிக்க இங்கே சொட்டுங்கள்...!!!


பாகம் - 01 இல் ஆய்வாளர்களை வியப்புக்கு உள்ளாக்கியது என்ன? பெரிய 'பில்டப்'புடன் முடித்திருந்தேன். கொடுத்த 'பில்டப்'புக்கு அதிகமாகவே நீங்கள் தொடர்ந்து வாசிக்கவிருக்கும் பதிப்பு அமைந்திருக்கும். நான் அப்புடியே ஷாக்காகீட்டேன் என்று நினைக்கும் அளவுக்கு இருக்கும்..!!

மாயாக்களின் கல்வெட்டுகளை ஆராய்ந்தபோது அங்கு கிடைத்த சித்திரங்களிலும், சிலைகளிலும் வித விதமான இதுவரைக்கும் கண்டிராத வினோத உருவங்கள் கிடைக்கப்பெற்றன. (அட….! இதுவரை நல்லாத்தானே போய்கிட்டு இருந்தீச்சு திடீரெண்டு ஏன் ஆச்சு..!!! என்று நீங்கள் குழம்புவது புரிகின்றதுஎன்ன இது புதுக்கதையாக இருக்கிறதே என்பீர்கள்.
ஆனால் அவை உண்மைதான்; புதுக்கதைதான். புதுக்கதை மட்டும் அல்ல, புதிர்க்கதையும் கூட. எனவே அவை பற்றி நிறைய எழுத வேண்டும். அதனால் முதலில் படம் வெளிவரும் முன்னர் வெளிவிடப்படும் 'டிரைலர்' போல ஒரு படத்தை போடுகின்றேன் பாருங்கள்..!!!இந்த படத்தை பார்த்தீர்கள் தானே ஏதாவது புரியுதா? இந்த படத்தில் உள்ளது ராக்கெட், அந்த மனிதன் விண்வெளிக்கு செல்லும் மனிதன் என்று சொன்னால் நம்புவீர்களா? என்ன காட்டுவாசி காலத்தில ராக்கெட்டா, விண்வெளிக்கா என்று புருவத்த உயர்த்தி போப்பா நீயும் உன் கட்டுக்கதையும் என்று எரிச்சலடைவது புரிகின்றது..!!! இன்னும் சில படங்கள் போடுறேன் நம்ப முடியுகின்றதா என்று பாருங்க..!!!


விளக்கத்துக்கா வரையப்பட்டது..!!!

மாயன் வாழ்ந்த இடங்களில் அமைந்த பிரமிடுகளுக்கள் ஒன்றில் அமைந்திருந்த சுரங்கத்தில் அவர்களின் அரசன் ஒருவன் புதைக்கப்படிருக்கிறான். அந்த அரசனின் உடலை வைத்து மூடிய இடத்தில் இந்தச் சித்திரம் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சித்திரத்தில் இருப்பது மாயன்களின் அரசனாக இருப்பதற்கும் சான்றுகள் உண்டு என்றாலும், அந்தச் சித்திரம் ஏன் அப்படி வரையப்பட்டிருக்கிறது என்பது மிகப் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. இல்லப்பா, இது வேற நீதான் ராக்கெட், விண்வெளி என்று குழப்புறாய் என்று எண்ணத்தோன்றுகின்றதா? உங்களப்போலவே இது தற்செயலாக நடந்த ஒன்றாக இருக்கலாம் அல்லது இந்தச் சித்திரம் வேறு எதையோ குறிக்கலாம் என்று ஒதுங்கப் போனவர்களுக்கு, அவற்றுடன் கிடைத்த வேறு பல பொருட்கள் சந்தேகங்களை மேலும் வலுவடையச் செய்தது. இது ராக்கெட் ஆக இருக்க முடியாது என்கிற அவர்களின் நம்பிக்கையை தகர்த்தது அப்படி என்னதான் கிடைத்தன..?


அந்தச் சித்திரத்தை மிகச் சரியாக உற்று நோக்கிப் பாருங்கள். அதில் ஒரு ஒழுங்கு முறையையும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இல்லாத அமைப்பையும், காட்சியையும் அது கொண்டிருப்பது, நிச்சயம் எமக்குத் தெரிகிறது. எதுவுமே இல்லாத ஒரு காலத்தில், எதையும் பார்க்காத ஒன்றை வைத்து இப்படி ஒரு கலை வடிவைப் படைக்கும் சாத்தியம் அக்காலங்களில் இருந்ததாகத் தெரியவில்லை. அத்துடன் இந்தச் சித்திரம் மாயன்களால் கட்டப்பட்ட ‘பிரமிட்’ (Pyramid) வடிவக் கட்டடங்களுக்குக் கீழே இருந்த ஒரு சுரங்கத்தில், பாதுகாப்பாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பும் முக்கியத்துவவும் இருந்திருக்கும் போது இந்த சித்திரத்தின் மூலம் ஏதோவொன்றை சொல்ல வருகின்றார்கள் என்பது மட்டும் உண்மை..!! அந்தச் சித்திரம் கண்டெடுக்கப்பட்ட பிரமிட்டையும், அதன் சுரங்கவழியைக் கீழேயும் தந்திருக்கிறேன். இதைப் பார்க்கும்போது, மாயாக்கள் இந்தச் சித்திரத்துக்குக் கொடுத்த முக்கியத்துவம் உங்களுக்குப் புரியும்.அதெல்லாம் சரிதான். இது ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு மாயாக்களுக்கும், ராக்கெட்டுக்கும் சம்பந்தம் உண்டு என்று, எப்படி முடிவெடிக்க முடியும்.. என்ற கேள்வி சுலபமாக எமக்குத் தோன்றுவது இயல்புதான். ராக்கெட்டுடன் சம்பந்தம் என்றால், அப்புறம் விண்வெளிதானே! இதற்கெல்லாம் சாத்தியம் என்பதே கிடையாது என்று அடித்துச் சொல்லும் உங்கள் மனது. அதனால் மாயன்கள் வாழ்ந்த இடங்களில் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்த இவற்றை முதலில் பார்க்கும் போதுதான் இன்னும் கொஞ்சமாவது தெளிவு பிறக்கும். நவீன வின்வெளிப் பிரயாணியின் படத்துக்கும், மாயாக்களின் மற்ற இரண்டு படங்களுக்கும் உள்ள தொடர்பை ஒப்பிட்டுப் பாருங்கள். ஏதோ ஒன்று நடந்திருக்கின்றது. நடந்தது எம் சிந்தைக்கு மீறியதாக இருந்திருக்கின்றது என்பது மட்டும் நியம்..!!!

கண்டுபிடிக்கப்பட்ட சிலை..!!!

இக்காலத்தில் விண்வெளிக்கு போகும் மனிதன்..!!!

அதே ஒப்பான ஓவியம்..!!!

இத்துடன் இவை முடிந்து விடவில்லை. மாயன்களின் ஆச்சரியங்கள் எம்மைத் தொடர்ந்தே தாக்குகின்றன. அந்த ஆச்சரியங்களை சொற்களால் வடிப்பதை விடப் படங்களாகவே உங்களுக்குத் தந்தால்தான், அதிகமான விளக்கங்கள் பெறப்படும். ‘ஆயிரம் வார்த்தைகள் சொல்லும் கருத்தை ஒரு காட்சி சொல்லிவிடும்’ என்பார்கள். அதனால் உங்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக, படங்களைத்தான் இனி அதிகமாகத் தரலாம் என நினைக்கிறேன். மாயன் கட்டடங்களை மேலும் ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் மாயன் பிரதேசமான மத்திய அமெரிக்காவில், அடுத்ததாக ஒன்றைக் கண்டதும் வெலவெலத்தே போய்விட்டனர். அவர்கள் ஏன் வெலவெலத்தனர் என்று நீங்கள் நினைக்கலாம். அவர்கள் எதைக் கண்டெடுத்தார்கள் என்பதை நீங்களே பாருங்க. நீங்கள் யோசிக்கலாம் என்னடா இவன் சம்பந்தமே இல்லாமல் சொல்லிகொண்டே போகின்றான் என்று.. இனி என்ன சொல்ல போகின்றானோ என்றெல்லாம் சிந்தனைக்குள் வந்து போகும்.. அதனை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு பதிப்பை தொடருங்கள்..!!

அப்டியே ஷாக் ஆகீட்டேன்..!!!

இந்தப் படத்தைத் தனியாகப் பார்த்தால் உங்களுக்குப் புரிவதற்கு சற்றுக் கடினமாக இருக்கலாம். எனவே, ஒரு நவீன விண்கலத்தில் நெருப்பைக் கக்கும் கீழ்ப்பகுதியையும், இந்தப் பொருளையும் சற்று ஒப்பிட்டுத்தான் பாருங்கள்.


இவற்றையும் தற்செயலென்றே நாம் வைத்துக் கொள்வோம். மாயன் சமூகத்தினர் எதையோ செய்து வைத்திருக்க, நான் அதை ராக்கட்டுடன் (Rocket) ஒப்பிட்டு சும்மா தேவையில்லாமல் பீதியைக் கிளப்புகின்றேன், அறிவியல் பற்றிப் பேசுவதாகச் சொல்லிவிட்டு ஒட்டுமொத்தமாக மூட நம்பிக்கையை வளர்க்கிறேன் என்றே வைத்துக் கொள்வோம்.
ஆனால் அடுத்து அகப்பட்டவை, எல்லாவற்றையும் அடியோடு தூக்கிச் சாப்பிட்டது. அதைப் பார்ததும் நான் சொல்வதில் ஏதும் உண்மை இருக்கலாமோ என்றும் நீங்கள் நினைப்பீர்கள். ராக்கெட்டைப் படமாக வரைந்திருப்பவர்கள் அதில் பயணம் செய்தவர்களையும் படமாக வரைந்துதானே இருக்க வேண்டும். இப்போது இந்தப் படங்களையும் பாருங்கள்.

இது ஒரு தற்கால, விண்வெளிக்குச் செல்லும் நவீன மனிதனின் படம்.

கண்டெடுக்கப்பட்ட சிலை..!!!

செம மேட்டர் மா..!!!


இதற்கு மேலும் இந்த விண்வெளி உடை போன்ற தோற்றத்துடன் படம் போடத் தேவையே இல்லை என்றே நினைக்கிறேன். இந்தப் படங்களே உங்களுக்குப் பல செய்திகளை விளக்கியிருக்கும். மாயா சமூகத்தினரின் கலாச்சாரத்தை ஆராயும்போது கிடைத்த ஓவியங்கள், சிலைகள் போன்றவற்றில், நவீன விண்வெளி ஆராய்ச்சி சம்பந்தமான பலவற்றைக் காணக் கூடியதாக இருந்தது என்னவோ உண்மை. அவை உண்மையிலேயே விண்வெளி சம்பந்தமானவைதானா? அல்லது வேறு அர்த்தங்கள் உள்ளனவா என்னும் கேள்வி தொடர்ந்து எமக்குத் தோன்றுவதில் ஆச்சரியமில்லை. ஆனாலும் இது விண்வெளி சம்பந்தமானதுதான் என்றால், அதற்கு இதுவரை நான் கொடுத்த சாட்சியங்கள் போதுமானவைதானா?
அட, எப்பவும் விண்வெளி உடையிலேயே இருக்கிறீர்களே, வேறு எதுவுமேயில்லையா? என்கிறீர்களா! அதுக்காகத்தான் உங்களுக்காகவே ஒரு சூப்பர் மேட்டர் இருக்கு..!!! சரி, இப்பொழுது இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, இது எப்படிச் சாத்தியம் என்று சொல்லுங்கள். இவை எதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்ல முடிகிறதா என்று கொஞ்சம் பாருங்கள்..?

என்ன இது?

நம்பலாமா? வேண்டாமா??

பறவைகளா? பூச்சிகளா? இல்லை மீன்களா?
அல்லது…………….!
ஆகாய விமானங்களா….?
நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்……..! அப்படியே நீங்கள் யோசித்துக்கொண்டு இருங்கள்..!!! மீண்டும் பாகம் - 03 இல் சந்திப்போம்..!!!

"ஒரு விடயம் உண்மையாக இருக்க வேண்டும் என்று நம்பினால்தான்; அந்த விடயம் உண்மையாக இருக்கவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை"


***இன்னும் எத்தனை பாகம் இருக்கின்றது என்று தெரியவில்லை... இந்த பகுதியை படித்தமைக்கு நன்றி.. தொடர்ந்து வரும் பகுதிகளையும் படியுங்கள்..***


Post Comment

6 comments:

 1. நம்பவும் முடியல .. நம்பாம இருக்கவும் முடியல, எகிப்திய பிரமிட்டு குகைகளில் எப்படி ஏலியன்களை சித்தரிக்கும் படங்கள் வந்தது என்பதற்கு எப்போது விடை கிடைக்கிறதோ அப்போது இதற்கும் விடை கிடைக்கலாம். அது வரையில் எல்லாம் 50-50 தான். ஆனால் நீ கோர்வையாக போட்டுள்ள விடையங்களும் படங்களும் இவை வெறுமனே தற்செயலாக இருக்க முடியாது என்று தோன்ற வைக்கிறது.

  மாயன்கள் விண்வெளிக்கு போயிருக்கிறார்கள் என்று எடுத்து கொள்வதா? அல்லது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கால கணிதம் கணித்தவர்கள் விண்வெளிக்கு செல்வதானால் இம்மாதிரியான ஏற்பாடுகள்தான் தேவைப்படும் என்று தமது அறிவைக்கொண்டு , உத்தேச அடிப்படையில் உருவாக்கிய மாதிரி ( மொடல்) சிலைகளா என்று எடுத்துக்கொள்வதா? ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் சித்தர் பாடல்களில் ரொக்கட்டுகள் மீதேறி விண்வெளி செல்வது பற்றி குறிப்பிடுவது போலவும், விமானம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரே லியானாடோ டாவின்சி விமான மற்றும் இலத்திரனியல் பாகங்கள் பற்றியும் உத்தேசித்து வரைந்து வைத்திருந்ததற்கு இதனை ஒப்பிடலாமா?

  எனக்கு ஒன்றும் சொல்லத்தெரியவில்லை....

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் எல்லாமே ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உள்ளது என்று தெரியாமல் சேர்ந்து கோர்வையாக இருப்பதுதான்... வரலாறு..??? எந்த பதிவு சம்பந்தமான தகவலை முழுமையாக வாசித்த பிற்பாடு எனக்கு என்ன நடந்திருக்கின்றது.. என்ன நடக்க போகின்றது என்று எதுக்குமே புரியவில்லை...

   Delete
 2. நீ இதுவரை எழுதிய பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பதிவு... வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. இல்ல... மச்சான் முதல்ல இந்த பதிப்பு பத்தி என் கூட கதைத்த ஆர்வத்தை உண்டுபண்ணிய ரெண்டு போரையும் புதல பாகத்தின் ஆரம்பத்திலேயே கூய் இருந்தேன்... அதையும் விட இந்த பதிப்பின் முக்கால் வாசிக்குமான தகவல்களையும் முழு படங்களையும் ராஜ்சிவா என்பவரின் வழி திரட்டில் இருந்து எடுத்தேன்... ஆக மொத்தத்தில் இந்த பதிப்புக்கும் எனக்கும் ஒரு பத்து வீதம் கூட தொடர்பு இருக்குமோ தெரியவில்லை... அவரின் பதிப்பினை தொடர்ந்து பலர் அதனுடன் சார்ந்த பதிப்புகளை எழுதி குமித்து விட்டார்கள்.. அந்த பட்டியலில் நானும் செர்ந்துகொண்டேன்... அவ்வளவும்தான் சகோ...

   Delete
 3. Adhutha baagam yepozhudhu??????????

  ReplyDelete
 4. Adutha baagam yepozhudhu?????????

  ReplyDelete