Thursday, January 3, 2013

அன்றைய சிவன் கோவில் தான் இன்றைய தாஜ்மஹால்...!!!

இந்த தலைப்பிலான கட்டுரைகள், ஆய்வுகள் எல்லாம் ஓய்வுக்கு வந்த பிற்பாடு இதனை தலையங்கமாக கொண்டு எனது பதிப்பை நகர்த்துவது சுலமம் என்பதனால் கொஞ்சம் இல்லை அதிகம் காலம் தாழ்த்தி இந்த பதிப்பினை எழுதுகின்றேன். பதிப்பின் ஆரம்பத்திலேயே இதனை சொல்லிவிடுகின்றேன். "யார் மனதையும் புண் படுத்தவேண்டும் என்ற நோக்கிலோ, என் சமயம் சாராதவர்களை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலோ இந்த பதிப்பினை எழுதவில்லை.." உலகத்தில் இருக்கும் எல்லோரும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் இடமாக தாஜ்மஹால் இருக்கின்ற போது அதனை பற்றி வெளிவரும் தகவல்களும் அந்த அளவுக்கு சுவாரஸ்யம் தாங்கியதாகவே இருக்கும். இதில் எந்த ஐயப்பாடும் இல்லை.. வெளிவந்த அனைத்து தகவல்களையும் ஒன்று திரட்டி அதிகளவு புகைப்படங்களுடன் இந்த பதிப்பினை உங்களுக்கு சமர்பிக்கின்றேன்..!!!காதல் சின்னமாக இன்றுவரை நம்பப்படும் கோவில்.!!!

காதல் மனைவி மும்தாஜ் நினைவாக மாமன்னர் ஷாஜகானால் கட்டப்பட்ட நினைவுச் சமாதிதான் தாஜ் மஹால் என்றுதான் நாம் எல்லோரும் நம்பிக் கொண்டு இருக்கின்றோம். ஆயினும் இது ஒரு பழைய சிவன் கோவில் என்கிற அதிரடி உண்மை தெரியவந்துள்ளது. தாஜ் மஹால் விடயத்தில் முழு உலகமும் கண்மூடித்தனமாக நம்பவைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. தாஜ் மஹால் மும்தாஜின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில் என்று ஆதாரங்களுடன் அடித்துக் கூறுகின்றார் பேராசிரியர் பி. என். ஓக். பேராசிரியர் பி. என். ஓக் என்பவர் யார் என்று கொஞ்சம் சுருக்கமாக பார்த்துவிடுவது இந்த பதிப்புக்கு இன்னமும் வலுச்சேர்க்கும்.!!!


Purushottam Nagesh Oak

முன்பு தேஜோ மஹாலயா என்கிற பெயரால் தாஜ் மஹால் அழைக்கப் பெற்றது என்கிறார். ஜெய்ப்பூர் ராஜா ஜெய் சிங்குக்கு சொந்தமாக இருந்த சிவாலயத்தை ஷாஜகான் மன்னர் பிடுங்கிக் கொண்டார் என்றும் ஷாஜகான் மன்னரின் சொந்த வாழ்க்கைக் குறிப்பான பாத்ஷா நாமாவில் ஆகராவில் மிகவும் அழகான மாளிகையை மும்தாஜின் உடலை அடக்கம் செய்கின்றமைக்கு தேர்ந்தெடுத்தமை குறித்து குறிப்புக்கள் உள்ளன என்றும் பேராசிரியர் கூறுகின்றார். 

மாற்ற தெரிந்தவர்கள் முழுதாக மாற்ற மறந்ததேன்.!!!

இச்சிவன் கோவிலை கையளிக்க சொல்லி ஷாஜகான் மன்னரால் ஜெய் சிங் ராஜாவுக்கு அனுப்பப்பட்ட இரு ஆணைகள் இன்றும் பத்திரமாகவே உள்ளன என்கிறார் பேராசிரியர். கைப்பற்றிக் கொள்கின்ற கோயில்கள், பெரிய மாளிகைகள் ஆகியவற்றில் முகாலய மன்னர்கள் மற்றும் இராணிகள் ஆகியோரின் உடல்களை வழக்கமாக புதைத்து வந்திருக்கின்றனர் முகாலய மன்னர்கள், ஹுமாயூன், அக்பர், எத்மத் உத் தவுலா, சப்தர் ஜங் ஆகியோரின் உடல்கள் புகைக்கப்பட்ட இடங்கள் இதற்கு சான்று என்கிறார் பேராசிரியர்.


அது மட்டும் இல்லாமல்; தாஜ்மஹாலில் இருக்கும் கற்கள் அனைத்தும் சம காலத்தை சேர்ந்தவை இல்லை என்று ஒரு கூற்று பரவியவண்ணம் உள்ளது. அதாவது தாஜ்மஹாலில் சில பகுதியில் காணப்படும் கற்கள் அண்மித்த காலத்தை உடையதாகவும் மிகுதியுள்ள அதிகமான பகுதிகள் மிகவும் பழைய காலத்தை உடையதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் இருந்த ஒன்றை மீள வடிவமைத்து இவ்வாறு ஆக்கியிருக்க வேண்டும் என்பதையே அந்த கூற்று வெளிப்படுத்தி நிற்கின்றது.

தாஜ் மஹால் என்கிற பெயரை எடுத்துக் கொள்கின்றபோது ஆப்கானிஸ்தான் முதல் அல்ஜீரியா வரையான எந்தவொரு இஸ்லாமிய நாட்டிலும் மஹால் என்கிற பெயர் எந்தக் கட்டிடத்துக்கும் கிடையாது, மும்தாஜின் முழுப் பெயர் மும்தாஜ் உல் ஜமானி என்பது. மும்தாஜ் நினைவாக ஷாஜகான் சமாதி கட்டி இருப்பாரானால் மும்தாஜ் என்கிற பெயரில் இருந்து 'மும்' என்பதை அப்புறப்படுத்தி விட்டு 'தாஜ்' என்பதை மாத்திரம் நினைவுச் சின்னத்துக்கான பெயரில் ஏன் பயன்படுத்தி இருக்க வேண்டும்? என்று பேராசிரியர் ஒரு நியாயமான கேள்வியை கேட்கின்றார்.
அளவுகடந்த ஆக்கிரமிப்புக்கள்... இன்றைய வியப்புகள்..!!!

தாஜ் மஹாலின் உண்மையான வரலாற்றை மறைக்க பிற்காலத்தில் புனையப்பட்ட பொய்தான் சாஜகான் – மும்தாஜ் காதல் கதை என்கின்றார். நியூயோர்க்கை சேர்ந்த பேராசிரியரான மார்வின் மில்லர் தாஜ் மஹாலின் மாதிரிகளை எடுத்து கார்பன் டேட்டிங் முறைப்படி தாஜ் மஹாலின் ஆயுளை கணித்தார். மில்லரின் கருத்துப்படி தாஜ் மஹாலின் வயது 300 வருடங்களுக்கு மேல். இதையும் பேராசிரியர் ஓக் ஆதாரமாக சொல்கின்றார். ஐரோப்பிய நாட்டு சுற்றுலா பயணியான அல்பேர்ட் மாண்டேஸ்லோ என்பவர் 1638 ஆம் ஆண்டு அதாவது மும்தாஜ் இறந்து ஏழு ஆண்டுகளுக்கு பின் ஆக்ரா வந்திருந்தார். இவரது குறிப்புக்களில் ஆக்ரா பற்றி விதந்து எழுதப்பட்டு இருக்கின்றன, ஆனால் தாஜ் மஹால் கட்டப்படுகின்றமை சம்பந்தமாக எக்குறிப்புக்களும் இடம்பெற்று இருக்கவில்லை.
வெளியிட மறுப்பு தருவிக்கப்பட்ட பொத்தகம்..!!!

ஆனால் மும்தாஜ் இறந்து ஒரு வருடத்துக்குள் ஆங்கில பயணியான பீட்டர் மண்டி ஆக்ரா வந்திருந்தார். இவரது குறிப்புக்களில் தாஜ் மஹாலின் கலை நயம் பற்றி விதந்து எழுதப்பட்டு இருக்கின்றது. ஆனால் இன்று சொல்லப்படுகின்ற வரலாற்றின்படி மும்தாஜ் இறந்து 20 வருடங்களுக்கு பிறகல்லவா தாஜ் மஹால் கட்டப்பட்டு இருக்கின்றது? இவற்றையும் ஆதாரங்களாக முன்வைக்கின்றார் பேராசிரியர் ஓக். தாஜ் மஹாலின் பெரும்பகுதி பொதுமக்களின் பாவனைக்கு இன்னமும் அனுமதிக்கப்படவில்லை, காரணம் கேட்டால் பாதுகாப்பு என்று சொல்லப்படுகின்றது, தாஜ் மஹாலினுள் தலையில்லாத சிவன் சிலையும், இந்துக்கள் பூசைகளுக்கு பயன்படுத்துகின்ற பொருட்களும் இருக்கின்றன என்கிற பேராசிரியர் தாஜ் மஹாலின் கட்டிட கலை நுட்பங்களை பார்க்கின்றபோதும் இது ஒரு இந்துக் கோவில் என்பது தெளிவாக தெரிகின்றது என்கிறார்.
கட்டடம் கட்ட சொன்னா நல்லா கதைய கட்டுறாங்கள்..!!!

பேராசிரியர் இவ்வளவு விபரங்களையும் தாஜ் மஹால் – உண்மையான வரலாறு என்கிற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கின்றார். ஆனால் அரசியல் காரணங்களுக்காக இவரது புத்தகம் இந்திரா காந்தி தலைமையிலான அரசால் தடை செய்யப்பட்டு உள்ளது. உண்மை இனியாவது வெளி வர வேண்டுமானால் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் சர்வதேச நிபுணர் கொண்ட குழுவால் தாஜ் மஹாலில் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்கிறார் பேராசிரியர்.

மோசமானத்தில் முக்கியமானது...!!!

ஆய்வுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட பொத்தகத்தை வெளியிட இந்திரா அரசு மறுத்தது ஏன்... இதனைப்போலதான் காந்தி பற்றி வெளிவந்த ஒரு பொத்தகத்தை இந்தியாவில் விற்க தடை விதிக்கப்பட்டது.. பொத்தகங்களுக்கு மட்டும் ஏன் இப்படி கண்ணும் கருத்துமாக தடைகளை விதிக்கின்றார்கள் என்று தெரியவில்லை... எது எப்படியாக இருந்தாலும் ஒரு ஆக்கிரமிப்பின் விளைவாகவே "தாஜ்மஹால்" என்ற ஒரு இடம் உருவாக்கப்பட்டு இன்று சினிமா வரை படர்ந்து பரவிக்கிடக்கின்றது.. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் தாஜ்மஹாலை இடித்து கோவிலாக மாற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. வரலாறுகள் தெளிவாக தெளிவு படுத்தப்பட வேண்டும்.. 

பதிவு நீண்ட்கொண்டே போவதன் காரணமாக; இது தொடர்பான மேலும் தகவல்களை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினால் உங்களின் பின்னூட்டல்களை பதிவு செய்யுங்கள்.. அது தொடர்பான விளக்கங்களையும் ஆதாரத்தையும் மொத்தமாக வெளியிடுகின்றேன்..

"வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே! உண்மை கசக்கத்தான் செய்யும்...!!!"

Post Comment

3 comments:

 1. அதே சிவன் கோயிலுக்கு கீழே சமண கோயில் இருந்ததா சொல்லுறாங்க. அப்படியே தமிழ்நாட்டில் எத்தனை சிவன் கோயிலுக்கு கீழே சமண கோயில் இருக்கிறது என்று ஒரு நீண்ட பதிவு வெளியிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

  பாபர் மசூதி இடித்தாகி விட்டது. அடுத்த கர சேவைக்கு வழி காட்டுவதாகவே இப்பதிவு அமைகிறது.

  ReplyDelete
  Replies
  1. இல்லை சகோ நீங்கள் கேலி செய்வது போல எண்ண தோன்றினாலும்.. உள்ளதை சொன்னேன்... தெரியாத ஒரு விடையத்தை சொன்னேன்... உங்களுக்கு நம்ப விருப்பம் என்றால் நம்புங்கள் இல்லையேல் உங்கள் இஸ்டம்... பதிவின் ஆரம்பத்தில் சொன்னது போல எந்த நோக்கத்துக்காகவும் இந்த பதிவிடப்படவில்லை... ஒரு புதிய தகவலை அறிந்தேன் அதனைப்பற்றி ஆராய்ந்தேன் எழுதினேன்... பதிவிட்டேன்... நன்றி தோழா உங்கள் கருத்துக்கு...!

   Delete
 2. இஸ்லாமிய நாடுகளில் பல ஆலயங்கள் இடித்து தரைமட்டமாக்கப் பட்டதற்கு இந்த நடுநிலைவாதிகள் குரல் எழுப்புவார்களா?

  ReplyDelete