Thursday, January 17, 2013

வெள்ளைக்காரன் பெற்ற பிள்ளைக்கு கவுதம்மேனனும், கே.வி.ஆனந்தும் அப்பா ஆக்கினார்கள்...!!!

கண்ணா இதை கொஞ்சம் வாசி :- இரண்டு இயக்குனர்களை பற்றி புகழ்ந்து எழுதுவதனால் பதிப்பு நீளமானதாகவே இருக்கும். இஷ்டப்படுபவர்கள் கொஞ்சம் கஷ்டத்தை பொறுத்து வாசிக்கவும். இவ் இரண்டு இயக்குனர்களுக்கு வாளி வைக்கும் ரசிகர்கள் இந்த பதிவு தொடர்பாக கடுப்பு, கோபம் அடைந்தால் அதுக்கு கம்பனி பொறுப்பாகாது என்பதை பதிவின் ஆரம்பத்திலேயே கூறிக்கொள்கின்றோம்..!!! அவசர அவசரமாக எழுதிய பதிப்பு என்பதனால் எழுத்து பிழைகள் , தகவல்களில் சற்றே குறைகள் இருந்துவிட கூடும் இந்த இளையவனை விடும் பிழைகளை பொருட்படுத்தாது வாசிக்கவும்..!! இந்த பதிப்பினை எழுதுவதுக்கு உதவிய.. சமூக வலைத்தள நண்பர்க்கு.. (அவரின் பெயர் எனக்கு தெரியாமையால் குறிப்பிட முடியவில்லை..) இந்த நேரத்தில் நன்றியை சொல்லிக்கொண்டு... பதிப்புக்குள் செல்வோம்..!!! 


அந்த நண்பரின் முகப்பொத்தகத்தின் page ஐ பார்க்க இங்கே கிழிக்கவும்..!!!


சொந்தமாகக் கற்பனைத் திறனே இல்லாத ஒரு இயக்குநர் என்ற வகைப்பிரிவில் இன்றைய தமிழ் சினிமா இயக்குனர்களை நிறுத்தினால் கனமான இடத்தை தாங்கிக்கொள்ளும் ரெண்டு பேர் இருக்கின்றார்கள். அதிலும் அநியாயத்துக்கு அலப்பறை அடிக்கும் கெளதம் மேனனுக்கு முதல் இடத்தை கொடுக்கலாம். "மிகப் பெரிய ஏமாற்றுப் பேர்வழிதான் இந்த கெளதம் மேனன்" என்று சொன்னால் கல் எடுத்து அடிக்கும் அளவுக்கு அவர் வெகுவாரியான ஆட்களை தன்வசப்படுத்தியிருக்கின்றார்.


சரக்கு தீந்து போச்சே..!!!

ஹாலிவுட்டில் வெளியாகும் ஒவ்வொரு படத்தையும் காப்பி அடித்தே படம் எடுத்துப் பழக்கப்பட்டவர் இவரென்பது நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.. படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கு முன்பே ஸ்கிரிப்ட்டை ரெடி செய்ய வேண்டும் என்பது ஒரு அடிப்படை. ஆனால் கெளதம் மேனனுக்கு மட்டும் அது தெரியவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போவாராம், அங்குதான் வசனமே எழுதுவாராம். இந்த குசும்பு தனத்தால்தான் அஜித்துடன் "சுராங்கனி" விஜய்யுடன் "யோகன் அத்தியாயம் ஒன்று" போன்றவற்றை தவறவிட்டார். இன்னும் இறங்கி தூர் வாரினால் தெரியவருவது என்ன என்றால் அவருடைய மேனரிசம் கூட ஒரிஜினல் கிடையாதாம்.. பேட்டிகளின்போது அவர் காட்டும் மேனரிசங்கள், குறுக்கிட்டுப் பேசுவது எல்லாமே பிரபலமான இயக்குநர்கள், படைப்பாளிகளின் பேட்டிகள், பேச்சுக்களைப் பார்த்து காப்பி அடித்து மேனரிசத்தை கற்றுக்கொள்கிறார் என்று ஆய்வு அறிக்கை சொல்லுகின்றது. கெளதம் மேனன் ஒரு செயற்கையாக தன்னை தானே வடிவமைத்துகொண்ட ஒருவர்.


ப்ளீஸ் நாலு இங்கிலீஷ் பட DVD தாங்க...!!!

மேலும் சிக்கலில் சிதம்பரம் என்னன்னா... தனது படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையரிடம் ஸ்கிரிப்ட்டை இவர் சொல்வதே கிடையாது. இதனால்தான் தபு போன்றவர்கள் கூட இவருடன் பணியாற்ற மறுத்துவிட்டனர். நடிகர்கள், டெக்னீஷியன்களுடன் மோதுவதே இவரது வழக்கமாகிவிட்டது. முன்பு ஹாரிஸ் ஜெயராஜுடன் மோதினார். பிறகு அஜீத்துடன் மோதியுள்ளார். தனக்கு சரக்கு தீர்ந்து போய்விட்டது என்பதை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும். இதுக்கு முன்னம் இருந்திருந்தால் தானே தீர்வதற்க்கு என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகின்றது. தான் காப்பி அடித்த டிவிடிகளின் பெயர்களை பட டைட்டிலின்போது போட முன்வர வேண்டும். இப்படிக் கூறும் அறிக்கையின் மீது கௌதம் எவ்வகையில் தனது எதிர்வினையைக் காட்டுவார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!


காக்க காக்க..!!!

"The Untouchables" இந்த அமெரிக்க திரைப்படம் June 3, 1987 வெளியானது. இந்த படம் American துப்பறியும் நாடகங்கள், படங்களை இயக்குவதில் கில்லாடியான Brian De Palma இனால் இந்த படம் உருவாக்கப்பட்டது. இந்த படத்துக்கு திரைக்கதை எழுதியவர் David Mamet ஆவார். இந்த திரைப்படம் "The Untouchables" என்ற பொத்தகத்தின் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதாகும்.  இந்தப்படம் $20 million பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு $80 million பணத்தை உழைத்துக்கொடுத்தது. இந்த படம் சிறந்த துணை நடிகருக்கான விருதினை sean conneryக்கு வாங்கிக்கொடுத்தது. இந்த படத்தினைப்பற்றி பேசுவதற்கான சந்தர்பத்தை வழங்கிய கவுதம்மேனனுக்கு நன்றியை கூறிக்கொண்டு "காக்க காக்க" படத்தின் கதைக்களத்திற்குள் செல்வோம்.

The Untouchables..!!!

என்ன ஆச்சரியம் என்றால் June 3, 1987 இல் வெளியான "The Untouchables" என்ற படத்தில் வந்ததைப்போல சற்றும் மாறாமல் திரைக்கதை நகர்கின்றது. அந்த படத்திலும் ஒரு குழுத்தலைவன் அவனை கொல்வதற்க்காக ஹீரோவும் அவருடன் வேலை செய்யும் நண்பர்களும் பாடுபடுவதுமாக படத்தின் கதை அமைந்திருக்கின்றது. ஆனால் ஆங்கிலேயரின் ரசனை வேறு என்பதால் "ஓமக சீய..." பாடல் "The Untouchables" இல் இடம்பெறவில்லை. மாறாக யோதிகாவை சூர்யாவுடன் நெருக்கமாக காட்டி விட்ட மிச்ச சொச்சத்தை கிறக்கத்தை ஏற்படுத்தி கவுதம்மேனன் படத்தை எடுத்து முடித்தார். படத்தின் அடிப்படை கதை களவாடப்பட்டிருந்தால் போகட்டும் என்று விடலாம் கொஞ்சம் கூட மாற்றம் செய்யாமல் அப்படியே எடுத்தால் என்ன செய்வது..??? இருந்தும் அந்த படத்துக்காக சூர்யா முழுமையாக தன்னை அர்ப்பணித்திருந்தார் ஆனால் என்ன பிரியோசனம் கதை சொந்த கதையில்லையாமே? "1987 ஆம் ஆண்டு பிறந்த "காக்க காக்க"வுக்கு 2003 ஆம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் அப்பா ஆகீனார்.!!!"

வேட்டையாடு விளையாடு 1/3 

"15 minutes" இந்த அமெரிக்க திரைப்படம் March 9, 2001 வெளியானது. இந்த படம் ஆட்கொலைகளை துப்பறியும் கதைக்களத்தை உடையதாக John Herzfeld இனால் உருவாக்கப்பட்டது. இந்த படத்துக்கு திரைக்கதை எழுதியவரும் படத்தினை இயக்கியவரும் John Herzfeld ஆவார். இந்தப்படம் $42 million பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு $56 million பணத்தை உழைத்துக்கொடுத்தது. இந்த படத்துக்கு விருதுகள் என்று எதுக்கும் கிடைக்காவிட்டாலும் பாக்ஸ் ஆபீஸில் கல்லாவை முழுக்க நிரப்பிக்கொண்டது. முக்கியமாக இந்த படத்தில் அவதானிக்கப்படவேண்டிய விடையமாக படத்தின் ஹீரோ துப்பரிவதற்காக பயன்படுத்தும் யுத்திகள் முக்கிய இடத்தை பிடிக்கின்றது. ஏன் இந்த சீனை மட்டும் முக்கியப்படுத்த ஒரு வலுவான காரணம் இருக்கின்றது..???

வேட்டையாடு விளையாடு 1/3 

"The Bone Collector" இந்த அமெரிக்க திரைப்படம் November 5, 1999 வெளியானது. இந்த படம் Phillip Noyce இனால் இந்த படம் இயக்கப்பட்டது. இந்த படத்துக்கு திரைக்கதை எழுதியவர் Jeremy lacone ஆவார். இந்த திரைப்படம் "The bone collector" என்ற துப்பறியும் நாவலின் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதாகும். "15 Minutes" இலும் "The bone collector" இலும் வரும் கொலைகளையும் அதனை துப்பறியும் விதமும் முக்கியமாக கவனிக்க படவேண்டியதாகும். இந்தப்படம் $73 million பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு $157 million பணத்தை கொட்டிக்கொடுத்தது. இந்த படத்துக்கு விருதுகள் என்று எதுக்கும் கிடைக்காவிட்டாலும் போட்ட காசின் இரண்டு மடங்கினை அள்ளி இறைத்தது. ஏன் அந்த சீனை மட்டும் முக்கியப்படுத்த ஒரு வலுவான காரணம் இருக்கின்றது..???

வேட்டையாடு விளையாடு 1/3 

"Mystic river" இந்த அமெரிக்க திரைப்படம் October 15, 2003 வெளியானது. இந்த படத்தினை Clint Eastwood இயக்கினார். இந்த படத்துக்கு திரைக்கதை எழுதியவர் Brian Helgeland ஆவார். இந்த திரைப்படம் "Mystic river" என்ற அதே நாவலின் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதாகும்.  இந்தப்படம் வெருமனையே $30 million பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு $156 million பணத்தை கொட்டிக்கொடுத்தது. இந்த படத்துக்கு எக்கச்சக்கமான விருதுகள் வழங்கப்பட்டது. போட்ட காசை லாட்டரி டிக்கெட் விழுந்தது போல ஐந்து மடங்காக்கி கொடுத்த இந்த படம் விருதுகளையும் தன் வசப்படுத்த மறந்துவிடவில்லை. முன்னம் கூறிய அந்த மூன்று படங்களுக்கு இனி வரப்போகும் படத்துக்கும் சீன் ; சீனாக ஒற்றுமை இருக்கின்றது. இனி புரியும் ஏன் ஒரு சில சீன்களை முக்கியப்படுத்தினேன் என்று..!!!

15 minutes , The Bone Collector , Mystic river சேர்ந்து செய்த கலவை..!!!

செம கடுப்பு என்னவென்றால் முன்னம் கூறிய அந்த மூன்று படங்களையும் அடுத்தடுத்து பார்த்து விட்டு வேட்டையாடு விளையாட்டை நினைத்து பாருங்கள்.. அந்த நேரம் கவுதம்மேனனுக்கு செருப்பால் அடித்தால் கூட பிழை இல்லை என்று நினைப்பீர்கள்.. ஆனால் ஆங்கிலேயரின் ரசனை வேறு என்பதால் "நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே.." பாடல் அந்த மூன்று படங்களிலும் இடம்பெறவில்லை. மாறாக ஆங்காங்கே கிளுகிளுப்பான ரேப் சீன்களை வைத்து விட்ட இடைவெளிகளை அப்படியே சீமேந்து பூசி மறைத்து விட்டதாக நினைத்துக்கொண்டார். "மூன்று வெள்ளைக்காரர்கள் கூடிப்பெற்ற "வேட்டையாடு விளையாடு"வுக்கு 2006 ஆம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் தனி ஒருவனாக அப்பா ஆகீனார்.!!!"

பச்சைக்கிளி முத்துச்சரம்..!!!

"Derailed" இந்த அமெரிக்க திரைப்படம் November 11, 2005 வெளியானது. இந்த படம் Mikael hafstrom இனால் இந்த படம் இயக்கப்பட்டது. இந்த படத்துக்கு திரைக்கதை எழுதியவர் ஆவார். இந்த திரைப்படம் "Jame siegel" என்ற நாவலின் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதாகும்.  இந்தப்படம் $22 million பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு $100 million பணத்தை உழைத்துக்கொடுத்தது. திரில்லர் வர்க்கத்தை சார்ந்த படமாக இந்த படம் அமைந்தது. என்ன கொடுமை என்றால் திரில்லர் படங்களை குறிபார்த்து சுடும் கவுதம்மேனன் கண்களுக்கு இந்த படம் மட்டும் என்ன சிக்காமலா போகப்போகின்றது. சிக்கின அந்த படம் என்னாகீச்சு என்று நீங்களே பாருங்களேன்..!!!

Derailed..!!!

"Derailed" கொஞ்சம் கூட மாற்றமில்லாமல் அப்படியே சீன் பை சீன் ஆக எடுத்தார். ஆனால் ஆங்கில படத்தில் வரும் கசமுசா சீன்களை விட இந்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. என்னதான் இருந்தாலும் அன்ரியாவை அதிகமாக அந்த படத்தில் மிதமிஞ்சிய அளவில் பயன்படுத்தியிருந்தார். என்னவாக இருந்தாலும் முழுக்க முழுக்க அந்த படத்தையே அப்படியே எடுத்தார். ஆனால் கேட்டால் சொல்லுவார் தனது சொந்த கதை என்று..!!! இப்படியான படத்தை இவர் எடுக்கும் நேரத்திற்க்கு ஏன் இவர் ஒரு முழு நீ(ல)ள ஆங்கில படத்தை எடுக்க முயற்சிக்க கூடாது.?? ஒரு முறை செய்வது பிழை என்றாகாது இருந்தும் எல்லா படத்தையும் ஆங்கிலேயர்களிடம் இருந்து பிச்சை எடுத்து இயக்கினால் என்ன செய்வது.. இப்படியே தொடருமானால் சின்ன பிள்ளை கூட படத்தை எடுக்கலாம் என்ற நிலைமை வரும்..!!! 

வாரணம் ஆயிரம்..!!!

"Forrest gump" இந்த அமெரிக்க திரைப்படம் July 6, 1994 வெளியானது. இந்த படம் ரொமான்டிக், காமடி நாடகங்களை இயக்குவதில் கை தேர்ந்தவரான Robert Zemeckis இயக்கினார். இந்த படத்துக்கு திரைக்கதை எழுதியவர் Eric roth ஆவார். இந்த திரைப்படம் "Forrest gump" என்ற நாவலின் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதாகும். இந்தப்படம் $55 million பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு $670 million பணத்தை உழைத்துக்கொடுத்தது. இந்த படத்திற்க்காக மொத்தமாக பரிந்துரை செய்யப்பட்ட, வெற்றி பெற்ற விருதுகள் மொத்தமாக 50 ஆகும். மிகவும் பிரபலமான சூப்பர் ஆனா படத்தை தமிழில் தர வேண்டும் என்ற ஒரே ஒரு நல்ல நோக்கத்துக்காக மட்டும் கவுதம் இந்த படத்தை தான் வாரணம் ஆயிரம் என்ற பேருடன் வாங்கினார்..!!! 

Forrest gump..!!!

இந்த படத்துக்கும் பச்சைக்கிளி முத்துச்சரத்துக்கும் கொஞ்சம் சம்பந்தம் இருக்கின்றது.. அதாவது ரெண்டு படங்களும் சுட சுட சுட்ட படங்களாகும். மாற்றங்களுக்கு கூட மாற்றம் கொடுக்காமல்.. அப்படியே அப்பட்டமாக தன் வசப்படுத்திக்கொண்ட ஒரு கேவலத்தை கவுதம் இந்த படத்தில் செய்து முடித்து பல பாராட்டுக்களையும் வாங்கிக்கொண்டார். இந்த படத்தில் சூர்யா ஆர்மி போன்ற ஒரு கதாப்பாத்திரத்தில் அசத்தியிருப்பார் அதே போலவே அந்த ஆங்கில படத்திலும் மாற்றங்கள் எதுக்கும் பெரிதாக செய்யப்படாமல் காட்சிகள் இருந்தது.. அதாவது பார்பவர்களுக்கு தோன்றும் கவுதமின் படத்தைதான் ஆங்கிலேயர்கள் சுட்டது போல தோன்றும்..!!! என்ன கொடுமை என்றால் கவுதம் மட்டும் இப்படி வெள்ளைக்காரன் பெற்ற பிள்ளைக்கு விடாமல் அப்பா ஆவது எப்படித்தான் அவரால் மட்டும் முடிகின்றது என்று தெரியவில்லை...!!!!
விண்ணைத்தாண்டி வருவாயா..!!!

"500 days of summer" இந்த அமெரிக்க திரைப்படம் January 17, 2009 வெளியானது. Marc webb இந்த படத்துக்கு திரைக்கதை எழுதியவர் Michael H. Weber ஆவார். இந்தப்படம் $7.5 million பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு $60 million பணத்தை உழைத்துக்கொடுத்தது. இந்த படம் இதுவரைக்கும் நாற்பதுக்கு அதிகமான விருதுகளை குவித்து விட்டது. அதனால் தான் என்னவோ தெரியவில்லை கவுதம் இந்த படம் தமிழர்களுக்கு புரியாது தமிழில் எடுத்து தமிழர்களுக்கு உதவி செய்வோம் என்ற நல்ல நோக்கில் எடுத்த படம் தான் அடுத்த... பிள்ளை... அதை பெத்தது அவர்கள் உரிமை கொண்டாடுவது இவரு..!!

500 days of summer..!!!

படத்தின் முக்கியமான காதல் காட்சிகள் என்னவோ கவுதமுக்கு சொந்தம் என்று ஓரளவுக்கு நம்பும் படியாக திருப்திகொள்ள வைத்த படம் என்றால் அது விண்ணைத்தாண்டி வருவாயா மட்டும்தான்... இருந்தாலும் ஆங்காங்கே அந்த ஆங்கிலப்படத்தின் காட்சிகள் அப்படியே எட்டிப்பார்ப்பது ரெண்டு படத்தையும் பார்த்தவர்களுக்கு தெரியும்..!!! தனது சொந்த காதல் கதை என்று பீட்டர் விட்ட கவுதம் ஆக மொத்தத்தில் அம்மண உடம்புக்கு ஆடை போட்டது என்னவோ ஆங்கிலேயனின் தயவில்தான்.. என்பதை அவர் எப்போதுதான் ஒத்துக்கொள்ள போகிறார் என்று தெரியவில்லை..!!! சிம்புவுக்கு இந்த படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது ஆனால் எந்தப்படம் கவுதமுக்கு சொந்தமான படம் என்று கேட்டால் அதுகும் கேள்விக்குறியும் ஒன்றுதான்..!!!

சைக்கோ..!!!

இதை எல்லாத்தையும் தாண்டி நடுநிசி நாய்கள் என்று ஒரு படம் எடுத்தார்... பெரிதாக அந்த படம் ஓடவில்லை என்றாலும் வித்தியாசகாக படங்களை எடுப்பவர் கவுதம்.. என்ற பேரை அவர் தொடர்ந்தும் தக்க வைத்துக்கொண்டார். ஆனால் யாருக்கு தெரிந்திருக்கும் அந்த படம் "சைக்கோ" என்ற ஒரு மிகப்பழைய ஆங்கிலப்படத்தின் ரீமேக் என்று... பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம் வரிசையில் நடுநிசி நாய்யும் இணைந்து கொண்டது. ஆக மொத்தத்தில் இவர் எடுத்த படத்தில் எதுதான் இவர் எடுத்த படம் என்பது... அதாவது உண்மையான கதை கவுதமுடையது என்று சொல்லும் அளவுக்கு இவர் எப்பதான் படம் எடுக்கப்போகின்றார் என்று தெரியவில்லை..!!!

இப்படித்தான் சிம்பு நாலு இங்கிலீஷ் படம் பார்த்து கதை சுடுறது...!!!

இல்லை..இல்லை.. கவுதம் எடுத்த சீ சீ காப்பி பண்ணின படங்கள் எல்லாம் ... என்னவோ ஒரு இங்கிலீஷ் ல சொல்லுவாங்களே... ஆ..ஆ.. இன்ஸ்பிரேசன் என்று சொல்லுவீன்களோ இல்லை காப்பிரேசன் என்று சொல்லுவீங்களோ தெரியாது.. படம் தழுவிய படங்கள் தான்.. இந்த பதிப்புக்கு இது சார்பாக பின்னூட்டல் பதிக்க இருக்கும் சகோக்கள் இதனையும் கருத்தில் கொள்ளவும்..!!!

அவர் பிள்ளைக்கு இவர்கள் அப்பா ஆவது அடுத்த பதிப்பிலும் தொடரும்..!!!

"ப்ளீஸ் கவுதம் நீங்க நல்ல ஒரு இயக்குநர்.. ஆனால் நீங்க இன்னும் சொந்தமாக படம் பண்ணாதது..எமக்கு கவலையே.. உங்களை நீங்க எப்ப நிரூபிக்க போறீங்கள்...??"

Post Comment

6 comments:

 1. ellam puthiya thakaval

  nandri!


  ReplyDelete
  Replies
  1. நிட்சையமாக... பாகம் இரண்டையும் படியுங்கள்...

   Delete
 2. என்பதாய் இருக்கின்றது நிலமை

  ReplyDelete
  Replies
  1. ஆமா ஆமா அப்டியே தான் இருக்கு நிலைமை...

   Delete