Saturday, January 5, 2013

மாயன்கள் தொடக்கம் ஏலியன்கள் - நம்பாவிட்டாலும் உண்மைதான்..!!! பாகம் - 01

அட்டேன்ஷன் ப்ளீஸ் :- இந்த பதிவு கொஞ்சம் நீண்டதாகாவே இருக்கும். காரணம்-இந்த பதிப்பில் அதிகம் படங்கள் சேர்க்கப்பட்டிருப்பதால் பதிவு கொஞ்சம் கனத்ததாகவே இருக்கும். நீளத்தை பொருட்படுத்தாது. அரிய தகவலை படியுங்கள்.!!! இந்த பதிப்பினை எழுத தூண்டிய நண்பன் Balamurali Ellamuruganக்கு நன்றியை கூறிக்கொண்டு, இந்த பதிப்பினை எழுதுவதற்க்கான அடிப்படை விளக்க ஆராய்ச்சிக்கட்டுரையை தந்துதவிய Mathavan Maheswaranக்கு நன்றியை கூறிக்கொண்டு பதிப்புக்குள் செல்வோம்.!!!

கொஞ்சம் விமர்சனம், கொஞ்சம் புராதனம், கொஞ்சம் மத நம்பிக்கை இது போன்ற வேறுபட்ட அம்சங்களை உள்ளடக்கிய விடயம், மக்களை அதிகம் அச்சத்தில் ஆழ்த்திய விடயம், ஊடகங்கள் வாய் திறக்க பயப்படும் விடயம், எச்சரிக்கைகள், தீர்க்கதரிசனங்கள், ஆய்வுகள், நம்பிக்கைகள், மறுப்புக்கள், இரகசியங்கள், புராதன நம்பிக்கைகள் இவைகளை உள்ளடக்கிய விடயம், உலகையே ஆச்சரியப்பட வைத்த/வைக்கவிருக்கும் விடயம் பற்றித்தான் இந்த பதிப்பில் பார்க்கப்போகின்றோம். மத நம்பிக்கை உள்ளவர்கள், மத நம்பிக்கை இல்லாதவர்கள், ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், பத்திரிகையாளர்கள் என்று எல்லோரும் ஒருமிக்க ஒரே விதமான நம்பிக்கைகளை வெளிப்படுத்திய விடயம்.
"நாம் வாழுகின்ற இந்த பூமி மிக விரைவில் ஒரு பாரிய அழிவினை சந்திக்க சந்தர்ப்பம் இருக்கின்றது" என்று கூறும் அளவுக்கு எல்லோரும் வியந்த விடயம். "பூமியை அழித்துவிடும் வகையில் பூமிக்கு ஆபத்தை உண்டாக்கும் வகையில் பல்வேறு ஆபத்துக்கள் பூமியை நோக்கி மிக வேகமாக வந்துகொண்டு இருக்கின்றன" என்று நம்மை நம்ம வைத்த விடயம். "நாம் வாழுகின்ற, நாம் அளவுக்கு அதிகமாக நேசிக்கின்ற இந்த பூமி வெகுவிரைவில் ஒரு ஆபத்தை சந்திக்கப்போகின்றது" என்று எம்மை கவலைக்கு உள்ளாக்கி எம்மை அசத்திய விடயம். இப்படி பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்வுகள் கூறப்பட்ட ஒரு விடயம் பற்றித்தான் சற்று விரிவாகவும், ஆழமாகவும் பார்க்கப்போகின்றோம்.


கடவுள் இருக்கு இல்லை என்பதை யார் சொன்னாலும், அவரவர் செயகையாலும் நம்பிக்கையிலும் வரும் வார்த்தைகளாகும் .இந்த உலகத்தை இயக்குவது யார் என்பதை உணர்ந்தால் நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இயக்கிக் கொண்டு உள்ளது, இருக்கிறது என்பது தெளிவாகும். அதைத்தான கடவுள் என்கிறார்கள் அந்த கடவுள் யார் என்பதில் தான் வேறுபாடுகள். ஒவ்வொரு ஞானிகளும் ஒவ்வொரு கருத்தை சொல்கிறார்கள். அந்த கருத்து பேதத்தை மாற்றி உண்மையைக் கண்டவர் வள்ளலார் அவர்கள். அந்த சக்தி உருவம் தாங்கிய மனிதர்கள் அல்ல தத்துவங்கள் அல்ல. அது மாபெரும் அருள் ஆற்றல் உள்ள பேரொளியாகும்.அதற்கு பெயர்-அருட்பெரும் ஜோதியாகும். அது தனிப்பெரும் கருனையாகும். அதற்கு ஈடு இணை எதுவும் இல்லை. அதுதான் பல கோடி அண்டங்களை தன் அருள் சக்தியால் இயக்கிக் கொண்டு உள்ளது. என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு தான் அறிந்து தெளிவு படுத்தியுள்ளார்.

இந்த கருத்துக்கு ஒப்பானது போலவே இந்த பதிப்பில் சொல்லவிருக்கும் விடையமும் அமைந்திருக்கும். எல்லாமே நாம் பார்ப்பதில் தான் அடங்கியிருக்கின்றது. கல் என்று பார்ப்போமே ஆனால் அது வெருமனையே கல் மட்டும் தான் அதனுள் கடவுள் இருக்கின்றார் என்று நம்பினால்தான் அது கல் இல்லாமல் கடவுளாக தெரியும்.. இதே போலதான் ஒவ்வொருவருடைய பார்வை கோணத்தை பொறுத்தே இந்த பதிப்பு அமையும். ஒரு சிலர்க்கு இந்த பதிப்பு நம்ம கூடியதாக இருக்கும்; மாற்றாக பலருக்கு இந்த பதிப்பு வெருமனையே பொழுது போக்காக இருக்கும். இந்த கருத்தினை நினைவில் வைத்துக்கொண்டு இந்த தலைப்பின் தொடர் பதிப்புக்கள் அனைத்தையும் படியுங்கள் "ஒரு விடயம் உண்மையாக இருக்க வேண்டும் என்று நம்பினால்தான்; அந்த விடயம் உண்மையாக இருக்கவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை". அழைத்ததையும் சரி பதிப்புக்கு கொடுத்த விளம்பரம் போதும் மேட்டர்க்கு போவமா? என்று நீங்கள் கொந்தளிக்கின்றது எனக்கு புரிகின்றது. சரி உடனடியா விடையத்துக்குள் போவோம்.!!!


சொல்ல மறந்த கதை.. சொல்லாமல் போன கதை..!!!

உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் வீட்டில் வசித்த அனைவரும், ஒருநாள் திடீரென அந்த வீட்டிலிருந்து, அவர்கள் இருந்த சுவடே இல்லாமல் மறைந்தால் என்ன முடிவுக்கு வருவீர்கள்? திகைத்துப் போய்விட மாட்டீர்களா? ஆச்சரியத்துக்கும், மர்மத்துக்கும் உள்ளாகுவீர்கள் அல்லவா? ஒரு வீட்டுக்கே அப்படீன்னா; அதுவே ஒரு வீடாக இல்லாமல், உங்கள் வீடு இருக்கும் தெருவுக்குப் பக்கத்துத் தெருவே திடீரென ஒரே இரவில் மறைந்தால்….? ஒரு தெருவுக்கே இப்படி என்றால், ஒரு ஊர் மக்கள் மறைந்தால்….? ஒரு நாட்டு மக்கள் மறைந்தால்….? ஆம்….! வரலாற்றில் இது நடந்தது (நான் சொல்ல வருவது "அத்திப்பட்டி' பற்றிய கதை அல்ல..). ஒரு நாட்டில் வாழ்ந்த, மிக மிக மிகச் சிறிய அளவினரை விட, மற்ற அனைத்து மக்களும், திடீரென அந்த நாட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக மறைந்துவிட்டார்கள். சரித்திரத்தில் எந்த ஒரு அடையாளங்களையும், மறைந்ததற்குச் சாட்சிகளாக வைக்காமல் மறைந்து போனார்கள். இவர்கள் எங்கு போனார்கள்? என்ன ஆனார்கள் என்று ஆராய முற்பட்டால் "ஆயிரத்தில் ஒருவன்" படத்தை போல இவர்களுக்காகவும் ஒரு படத்தை எடுக்க வேண்டிவரும்.


என்னவென்று சொல்வதம்மா மாயாவின் திறமைகளை..!!!!

ஏன் மறைந்தார்கள்? எப்படி மறைந்தார்கள்? என்னும் கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களை மட்டுமே மிச்சம் வைத்துவிட்டு, மாயமாய் மறைந்து போனார்கள். எங்கே போனார்கள்? எப்படிப் போனார்கள்? யாருக்கும் தெரியவில்லை. எதுவும் புரியவில்லை. இந்த மறைவின் மர்மத்தை ஆராய, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் சென்ற ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்தது எல்லாமே ஒரு மாபெரும் அதிர்ச்சி மட்டும்தான். மாயாக்கள் விட்டுச் சென்ற சுவடுகளை ஆராய்ந்த அவர்கள் பிரமிப்பின் உச்சத்துக்கே போய்விட்டார்கள். அறிவியல் வளரத் தொடங்கிய காலகட்டங்களில், இவை உண்மையாக இருக்கவே முடியாது, என்னும் எண்ணம் அவர்களுக்குத் தோன்றும்படியான பல ஆச்சரியங்களுக்கான ஆதாரங்கள் கிடைத்தன. அவை அவர்களை மீண்டும் மீண்டும் திக்குமுக்காடச் செய்தது. இது சாத்தியமே இல்லாத ஒன்று. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என அறிஞர்கள் சிலர் பிரமிக்க, பலர் பின்வாங்கத் தொடங்கினார்கள். மாயா என்றாலே மர்மம்தானா? என நினைக்க வைத்தது ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மாயன்களின் கண்டுபிடிபுக்கள். (எல்லாமே சூப்பர்ஸ்டாரும் ஷங்கரும் சேர்ந்து ஒரு படம் நடித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது).

சரி, அப்படி என்னதான் நடந்தது? ஆராய்ச்சியாளர்கள் அப்படி எதைத்தான் கண்டுபிடித்தார்கள்? ஆராய்ந்த சுவடுகளில் அப்படி என்னதான் இருந்தது?
இவற்றையெல்லாம் படிப்படியாக நாம் பார்க்கலாம், ஒன்று விடாமல் பார்க்கலாம். அவற்றை நீங்கள் அறிந்து கொண்டால், இதுவரை பார்த்திராத, கேட்டிராத, ஆச்சரியத்தின் உச்சத்துக்கே போய்விடுவீர்கள். பதிவின் தொடக்கத்தில் கூறியிருந்த சுவடே இல்லாமல் ஒரு இனம் எப்படி அழிந்திருக்கலாம் என மாயாக்கள் வாழ்ந்த இடங்களை ஆராயச் சென்ற ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைத்தது ஒரு மாபெரும் அதிர்ச்சி. மாயாக்கள் விட்டுச் சென்ற கல்வெட்டுகளை ஆராய்ந்த அவர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. அங்கு என்ன கண்டார்கள் என்று சொல்லுவதற்க்கு முன்னர்.. வேறு ஒரு தளத்தில் நடந்த, வேறு ஒரு சம்பவத்துடன் இதனை ஒப்பிட்டு நோக்குவோம். இப்போது சொல்லப் போகும் இந்தச் சம்பவத்துக்கும், மாயாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனாலும் வேறு வகையில் சம்பந்தம் உண்டு.


வெள்ளையனே வெளியேறு..!!!

இராஜராஜ சோழன் என்னும் மாபெரும் தமிழ் மன்னனை யாரும் மறந்திருக்க மாட்டோம். தமிழ்நாட்டில் கி.பி. 985ம் ஆண்டு முதல் கி.பி. 1012 ஆண்டு வரை தஞ்சையை தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த சோழ மன்னன்தான் இராஜராஜன். இன்றும் உலகம் தமிழனைத் திரும்பிப் பார்க்கும் வண்ணம், அவன் உலக அதிசயங்களுக்கு நிகரான ஒரு அழியாச் சின்னத்தைக் கட்டினான். அதுதான் தஞ்சையில் அமைந்துள்ள, ‘தஞ்சைப் பெரிய கோவில்’ என்றழைக்கப்படும் பிரமாண்டமான கோவில். அதன் மிகப் பிரமாண்டமான இராஜகோபுரம் மிகவும் அழகான கலை நயத்துடன் கட்டப்பட்டது. அதில் யாருமே எதிர்பார்க்காத விசேசம் ஒன்று இருந்ததுதான் இதன்னுள் ராஜராஜ சோழனை இழுப்பதற்குக் காரணம்.


தஞ்சைப் பெரிய கோவில் கோபுரத்தில் வெள்ளையனின் சிலை..!!!

அந்தக் கோபுரத்தில் காணப்பட்ட ஒரு உருவச் சிலை எல்லாரையும் புருவத்தை உயர்த்த வைத்தது. ஒரு இந்துக் கோவில் கோபுரத்தில் இது சாத்தியமா? என்னும் கேள்விகள் ஒலிக்கும் வகையில் இருந்தது அந்த உருவச் சிலை. கோபுரங்களில் இந்துக்களின் நாகரீகங்களையும், கலைகளையும், தெய்வங்களையும் சிலைகளாக வடிப்பதுதான் நாம் இதுவரை பார்த்தது. ஆனால் இது……..! அப்படி அந்தக் கோபுரத்தில் இருந்த உருவச் சிலை என்ன தெரியுமா….? ஒரு மேலைத் தேச நாட்டவன், தலையில் தொப்பியுடன் காணப்படுகிறான். தஞ்சை மன்னனுக்கும் இந்துக்களின் ஆச்சாரத்துக்கும் ஏற்ப இல்லாத் தன்மையுடன் அந்தச் சிலை தொடர்பு படுத்தப்படமுடியாத ஒரு இடத்தில் தொடர்புபட்டு இருப்பதுதான் வியப்பு..!!! இன்னும் கொஞ்சம் அந்த படத்தை பெரிதாக்கி பார்த்தால் சிலை சிறப்பாக தெரியும் அல்லவா..???


கண்டுகிட்டீங்க்களா...!!!

“முழங்காலுக்கும் மொட்டைதலைக்கும் முடிச்சுப் போடுவது போல” என்று சொல்வார்களே, அது போல இந்த மேலைத்தேச மனிதனின் சிலை, பாரம்பரியமிக்க இந்துக்களின் கோபுரத்தில் அமைந்திருக்கிறது என்றால், அதற்கென ஒரு காரணம் நிச்சயமாக இருந்தே தீருமல்லவா…? இராஜராஜ சோழனின் காலத்தில் யவனர்களாக வந்து, எமது கோவிலிலேயே உருவமாக அமைவதற்கு, அந்த மேற்குலகத்தவனுக்கு வரலாற்றில் பதிவாகாத வலுவான காரணம் ஒன்று இருந்திருக்கும் அல்லவா…? ஆனால், அதை ஆராய்வதல்ல இந்த பதிவின் நோக்கம்..!!! சம்பந்தமே இல்லாத இடத்தில், சம்பந்தமே இல்லாதவர்கள் தொடர்புபட்டிருப்பார்கள் என்பதற்கு எம்முள்ளேயே இருக்கும் சாட்சிதான் இது. "தசாவதாரம்" படத்தில் கமல் சொன்னது போல 'ஹஜஸ்' திஜறி என்றே இதனை எண்ணத்தோன்றுகின்றது. அதாவரு சம்பந்தமே இல்லாத பல விடயங்கள் ஒன்று சேர்ந்து கோர்வையாக நிகழ்வதே அதுவாகும். 

இந்தச் சம்பவம் போலத்தான் மாயா சமூகத்தை ஆராய்ந்த ஆய்வாளர்களுக்கும் சம்பந்தமே இல்லாத வடிவங்களில் ஆச்சரியம் காத்திருந்தது. அந்த ஆச்சரியத்தை எதனுடனும் முடிச்சுப் போட முடியாத அளவுக்கு மூச்சை அடைக்கும் ஆச்சரியமாக இருந்தது. தஞ்சையில் யவனன் இருந்தது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. ஆனால் மாயா இனத்தில் இருந்தவை திகைக்க வைத்தது.     


*** இன்னும் எத்தனை பாகம் இருக்கின்றது என்று தெரியவில்லை... இந்த பகுதியை படித்தமைக்கு நன்றி.. தொடர்ந்து வந்த பகுதிகளையும் படியுங்கள்... ***

Post Comment

8 comments:

 1. வெள்ளயனின் சிலை தஞ்சை கோவிலில் இருப்பதற்கு காரணங்கள் இரண்டு சொல்லப்படுகின்றன. ஒன்று இந்தியா பிற்காலத்தில் வெள்ளயனுக்கு அடிமையாக இருக்கும் என்ற தீர்க்கதரிசனத்தின் அடிப்படையில் செதுக்கப்பட்டது. இரண்டாவது சோழனின் சாம்ராஜ்யத்தில் வேற்று தேசத்தவருக்கும் கணிசமான தொடர்பு இருந்ததன் வெளிப்பாடாக செதுக்கப்பட்டது. இரண்டாவது காரணம் பெரும்பாலானோரால் ஏற்றுக்கொளப்பட்டுள்ளது.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ஆனால் கட்டாயம் நம்பியே தீர வேண்டும் என்று இல்லையே..!!! ///இரண்டாவது சோழனின் சாம்ராஜ்யத்தில் வேற்று தேசத்தவருக்கும் கணிசமான தொடர்பு இருந்ததன் வெளிப்பாடாக செதுக்கப்பட்டது/// இது நல்ல இருக்கு... சோக்காய் சொன்னப்பா...

   Delete
 2. மாயன்கள் வேறு பரிமானத்துக்குள் சென்று விட்டார்களா?

  ReplyDelete
  Replies
  1. திடீர் என்று காணாமல் போக இதுவும் ஒரு காரணம் தானே ! Hollywood படங்களிளெல்லாம் இப்படி தான் சொல்வார்கள்

   Delete
  2. ஹாலிவுட் படங்களில் எப்படி சொல்கின்றார்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதுதான் உண்மை என்றில்லை சகோ.. பதிவின் தொடக்கத்திலேயே இந்த பதிவினை பற்றி பூரண விளக்கம் கொடுத்தேன்.. அதன் பிற்பாடும் விளக்கம் குறைவானவர்களை போல் கருத்து கூறினால் நான் என் செய்வது?

   Delete
  3. அது சரி.. ஆனால் கடைசிவரை ஏன் மறைந்தார்கள் என்று இப்பதிவில் சொல்லவே இல்லை. அது தான் ஊகத்தில் - ஆர்வத்தில் பரிமாணத்தை பற்றி கதைத்து விட்டேன். மன்னித்து விடுங்கள்...

   Delete
  4. அப்படி எந்த பிழையும் நீங்க செய்து விட்டதாக எனக்கு தெரியவில்லை... இது தொடர்பாக இன்னும் மூன்று பதிவுகள் இருகின்றன தொடர்ந்து படியுங்க... ஆனால் கடைசிவரைக்கும் தெரியாதது ஒன்றே ஒன்றுதான் அதுதான் மாயன்களுக்கு என்ன நடந்தது என்பது... வெருமனையே யூகங்களை வேண்டுமே ஆனால் கூறலாம்... உண்மை தெரியாது...

   Delete