Thursday, February 7, 2013

விஸ்வரூபமும் வில்லங்கமும்...!!!

பொதுவாக எனது பதிப்புக்களில் அரசியல் பதிக்கப்படாமலே இருக்கும்..!! ஆனால் காலப்போக்கில் எல்லாம் மாற்றமடையும் என்பது போல இப்படியான பதிப்பினை எழுதியே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு உள்ளானேன்.. உள்ளானேன் என்று சொல்வதை விட உள்ளாக்கப்பட்டேன் என்பதே நிஜம்.. இவ்வளவு காலமும் இப்படியான ஒரு காரமான பதிப்பினை போடாமல் இப்போது மட்டும் போடுவதற்காக உங்களில் பலருக்கு கோபமும், எரிச்சலும் ஏற்படலாம்.. மற்ற பதிப்புக்களை போல ஒரு சின்ன விடயத்தை வைத்துக்கொண்டு சப்பைக்கட்டு கட்டிவிட்டு போக முடியாது... அது சினிமா இது அரசியல் நிறைய வாசிக்க வேண்டும்... அதைவிட அதிகமாக எல்லாவற்றையும் ஒரு புள்ளியில் கொணர்ந்து நிறுத்தி அலச அல்லது அல்லோசிக்க வேண்டும். ஆக மொத்தத்தில் வெகுவான ஒரு முன்னாயத்தம் வேண்டும். அதுக்காகவே இந்த பதிப்பிற்கு இந்தளவு கால தாமதம்..!!!


இப்படியான ஒரு பதிப்பினை "விஸ்வரூபம்" படத்தினை திரையிட விடாமல் ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று தெருவில் இறங்கிய போதே இதனை எழுதியிருக்க வேண்டும்.. ஒரு வேளை அப்போது எழுதியிருந்தால் சொல்லுவதற்க்கு அதிகம் இருந்திருக்காது.. ஆனால் இப்போது அலசிப்பார்க்க.. கொஞ்சம் அதட்டிப்பார்க்க தகவல்கள் அதிகமாகவே இருக்கின்றன.. சரி முதலில் "விஸ்வரூபம்" பற்றிய பிரச்சனைக்கு பஞ்சாஜத்தை கூட்டுவோம்..!!! (என்னப்பா பதினெட்டு பட்டியும் வந்தாச்சாப்பா..???)

ஏன்பா இந்தாளு இந்தியாவில பிறந்தார்..!!!

படம் ஆரம்பிக்கும் முன்னமே இப்படியான பிரச்சனைகள் வரும் இதனை எல்லாம் சமாளிக்க வேண்டிவரும் என்று தெரியாமல் இந்த படத்திற்கான பூயையை கமல்ஹாசன் போட்டிருக்க மாட்டார். படத்தில் சொன்ன எந்த விடயமும் சிக்கல் இல்லை என்று உறுதியான பின்னரே படத்தினை தொடங்கியிருப்பார்கள்.. ஆனால் இப்ப சிக்கல் சீப்பை கொண்டுவத்து சீவு.. சீவு என்று சிலுப்பிகிட்டு நிக்குது..!! விஸ்வரூபத்துக்கு தடை விதித்தது இன்று வரை இந்தியாவில் தமிழகத்திலும், இலங்கையிலும்.... படம் திரையிடப்படாமல் இருப்பது எல்லோரும் அறிந்த ஒரு விடயம்..!!! இப்ப வெகுவான கேள்வி என்னவென்றால்.. ஒரு மூன்று மணித்தியாள படத்தில் கமல் சொல்லும் விடயத்தால் உங்கள் மதம் மாசுபட்டு போகும் என்ற அளவில்தான் மத வலிமை இருக்கின்றதா??? படத்தை பிரச்சனையான மத, இன தலைவர்களுக்கு??? திரையிட்டு படத்தினை விளக்கியும் புரிந்துகொள்ளாமல் அலுப்படிப்பது எந்த வகையில் நியாயம்..? சரி அப்படி கமல்ஹாசன் படத்தில் மதத்தை சமயத்தை வரலாற்றை கொச்சிப்படுத்துவதாகவே வைத்துக்கொள்வோம்... ஏன் இதுக்கு முன்னர் "தசாவதாரம்" என்ற படத்தில் சைவம், வைஷ்ணவம் கோட்பாட்டுகளுக்கு இடையில் சிக்கல் வரவில்லையா??? இல்லை அவர்கள் தான் படத்தை தடுத்து நிருத்திவிட்டார்களா??? அதே படத்தில் ஒரு கிறிஸ்த்த ஆங்கிலேயராக "பிளச்சர்" என்பவர் வருவார்.. இதனால் இது பிழை என்று எந்த கிறிஸ்த்தவனாவது வீதிக்கு இறங்க்கினானா??? (ஆக மொத்தம் ஆர்ப்பாட்டம் உங்களுக்கு பொழுதுபோக்கு... சினிமா மட்டும் உங்களுக்கு போராட்டமா??) இப்படிப்பார்த்தால் இந்தியாவில் இனி பாம்பு கூட படம் எடுக்க பயப்படுமையா..!!!

பார்த்தியா அவன் வெள்ளைக்காரன் என்பதை நிரூபித்துட்டான்..!!!

விஸ்வரூபம் படத்திற்காக நான் ஆப்கனிஸ்தான் காரனுக்கு துணை நிற்க முடியாது...நான்­­ இந்தியனே .. இந்திய மண்ணின் மைந்தனான ஒரு முஸ்லிமை தீவிரவாதி என கூறுவதை எதிர்ப்பேன் .. அவன் என் சகோதரன் அதற்காக மத்த நாட்டுக்காரன் மதவெறியை உருவாக்கி என் தாய் நாட்டை சிதைக்க நினைத்தால் என் தாய்மண்ணில் அதை அனுமதிக்க மாட்டேன். உங்களுக்கு இருப்பது மதவெறி.. எனக்கு இருப்பது தேச வெறி. எது சிறந்தது என நீங்களே முடிவு செய்யுங்க்ள்.. இந்த கருத்தினை கடைசியாக கமல்ஹாசன் கூறியதாகும்.. இவ்வளவு நாளும் முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் தான் என்று காட்டிய சினிமாவில்... முஸ்லிம்கள் வேறு தீவிரவாதிகள் வேறு என்று பிரித்துக்காட்டியிருக்கிறார்கள் விஸ்வரூபத்தில்... ஏதோ ஒரு அரசியல் கட்சியின் பேச்சை கேட்டு உங்களுக்கு ஆதரவான ஒரு திரைப்படத்துக்கு ஏன் எதிர்ப்பை காட்டுகிறீர்கள் என்று தான் புரியவில்லை...படம் பார்த்த அனைவரும் முஸ்லிம்களை இவ்வளவு நல்லவர்களாக எந்த சினிமாவிலும் காட்டவில்லை என்று சொல்கிறார்கள்... ஆனால் அவர்களோ நடுத்தெருவில் ஆடை எதுவும் இல்லாமல் நிற்கின்றார்கள்..!! ஒரு சில தீவிர மதவாதிகளின் பேச்சை கேட்டு அவர்களின் அரசியல் லாபத்திற்காக இவர்களும் படத்தை பற்றி முழுமையாக அறியாமலேயே போராடுவது மிகவும் கவலைக்குரிய விடயம்.. இதுவே இப்போதைய நிலைப்பாடு..??? இந்த படம் பத்திய கருத்துக்கள் இத்துடன் நின்றதா.. இல்லை அடுத்ததாக ஒரு செம மேட்டர்.. ஆமா.. ஆமா அவர் எல்லாம் செம மேட்டர்தான்... (என்ன செல்லுரீங்க.. இது சுட்டி னா என்ன செல்லுதுன்னா..!!!)


இவன் எல்லாம் தலைவனாக இருந்தால் தொண்டர்களின் நிலைப்பாடு என்ன?

விஸ்வரூபம் வெளியாவதை எதிர்கிறார்களே காரணம் எதாவது இருக்குமோ என்று சந்தேகம் வந்தது.. தமிழ்நாட்டில் இருக்கும் "jainul abitheen"(இவர் தமிழ் நாடு வாழ் முஸ்லிம்களின் முனொடியாம்.. இன்னும் சொல்லப்போனால் இந்த பதிப்பினை ஆக்ரோஷமாக எழுத தூண்டியவரும் இந்தாள் தான்..!!அவர் பொது சபையில் பேசும் ஒளி காட்சி ஒன்றை பார்த்தேன். அந்த காட்சி அந்தாள் கதைத்தது பற்றி எழுத இஸ்டம் இல்லை... அதற்க்கான லிங்க் ஐ தர முயற்சிக்கின்றேன்.. இவளவு ,கேவலமாகவும் அநாகரீக வார்த்தை பிரயோகங்களையும் பொது சபையில் ஒலி பெருக்கி முன்னாள் ஒரு மதத்தின் முன்னோடி கதைக்க முடியுமா? அதை கேட்டு கைதட்டவும் ஒருகூட்டம் இருக்கிறதா என்று மலைப்பாய் இருந்தது.. என் சமூக வட்டத்துக்குள்ளும் பேர் சொல்லக்கூடிய எத்தனையோ முஸ்லீம் நண்பர்கள் இருக்கின்றார்கள்.. அப்படியான நல்ல உள்ளங்களுக்கு இவர்களால் இழுக்குத்தான் வந்து சேர்கின்றது..!!! மேடையில் ஊளை இடுவதனால் ஒரு சமூகத்தை காத்தருளி விட முடியாது.. இந்த மேடைப்பேச்சுக்கு செவி மடிக்கும் கூட்டங்கள் அடோப் ஹிட்லர் காலத்திலேயே ஓய்ந்து விட்டது.. 


1)விஜயகாந்த் இதுவரை நடித்த எதாவது ஒரு படத்தில் இந்து , கிறிஸ்தவர் தீவிரவாதியாக காட்டப்பட்டுள்ளதா? அவரின் எல்லா படத்திலும் விரட்டி விரட்டி பிடிக்காத தீவிரவாதிகள் இல்லை அவர்கள் அனைவரையும் முஸ்லீம்களாகவே அவர் சித்தரித்து காட்டியிருப்பார்... (அப்போது இவர்க எங்கே நிதிரை கொண்டு கொண்டிருந்தார்களா... இல்லை என்றால்.. இருக்கிறது பத்தாது என்று பெருக்கிறதுக்கு பொய் இருந்தார்களா??)
2) ரிஸானா தலைதுண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட போது இவர்கள் எங்கே தொளுகையிலா நின்றார்கள்? இல்லையே அந்த நேரத்திலும் அந்த நினைப்பிலா இருந்தார்கள்..!!! இப்படி ஆயிரம் விடயங்கள் முக்கியமான அனைத்துக்கும் வெறும் மௌனிகளாக இருந்து இதற்க்குமட்டும் குரல் கொடுப்பதுதான் வியப்பளிக்கிறது.!! குரல் கொடுத்தால் பரவாயில்லை.. இப்படி கீழ் தரமாக கதைப்பதா ஒரு முஸ்லீமின் முறை... நான் வாசித்து முடித்த அல்குரானில் அப்படி எதுக்கும் சொல்லப்பட்டதாக தெரியவில்லையே..!!!
இந்தத் தலைமுறையிலும் இனம், மொழி என்று பாகுபாடு இருப்பது அதனை தூண்டும் வகையிலான இனவெறிச்செயற்பாடுகள் மிகவும் கண்டிக்கப்பட வேண்டியவை.. இவர்களின் இந்த செயற்பாடுக்கு அடிபணிந்து படத்தை தடை செய்வது இவர்களை மேலும் ஊக்குவிக்கும் செயற்பாடாகவே மாறும்.. ஆக மொத்தத்தில் இந்தியாவில் தமிழகத்திலும், இலங்கையிலும் அமோக வரவேற்புடன் படத்தினை வெளியட வேண்டும்..!!!

கடைசியில் ஒரு கருத்து :- தரம் கேட்ட வார்த்தைகளை உபயோகித்து மற்றவர்கள் மனதை புண் படுத்துபவன் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியாது. இதை முஸ்லிம்கள் சொன்னார்கள் என்று தயவு செய்து செய்தி பரப்பாதீர்கள்.. (ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றும் ஒரு கூற்று இருக்கத்தான் செய்கின்றது எதை நம்புவது..!!!இந்துகளுக்கு தெரியும்! சில இஸ்லாமிய மூன்றாம் தர அரசியல்வாதிகள் செய்யும் செயலை இஸ்லாமியர்கள் செய்தார்கள் என்று ஒரு போதும் சொல்லமாட்டோம். எங்களது கோபம் உன்மேல் அல்ல உங்கள் பெயரை சொல்லி வயிறு வளர்க்கும் சிலர் மேல் மட்டும்.. (சோற்றுக்கும் கருத்துக்கும் ரொம்ப சம்பந்தம் இருக்கு போல..!!!டேய் மானங்கெட்ட அரசியல்வாதிகளா உங்க பேச்ச கேட்டு வாழ்ந்த காலம் எல்லாம் மலை ஏறி போச்சு... விஸ்வரூபம் இஸ்லாம் மதத்தை அவமதிக்கவில்லை என்றால் ரிலீஸ் பண்ணுங்கன்னு என் இஸ்லாமிய சகோதரன் சொல்லுறான் ....... இஸ்லாம் மதத்தை அவமதிப்பது போல் இருந்தால் நாங்களும் எதிர்க்கிறோம் என்று என் இந்து சகோதரன் சொல்லுறான்..... இதுக்கு பிறகு என்ன??? ஆக மொத்தத்தில் படம் இஸ்லாமியர்களை அவமதிப்பதற்காக தடை செய்யவில்லை... குறிப்பிட்ட ஒரு குழுவினை சாடி நிற்கின்றது என்பதுக்காக அந்த குழுக்களுக்கு அவர்களது ஆதரவினை வெளிக்காட்டும் முகமாகவே இந்த தடை விதிக்கப்பட்டிருக்கின்றது... இது எல்லாம் என்ன புளைப்புடா...!!!

படத்தின் படி இவளவு காலமும் ஆசாத்தியமாக சினிமா எடுத்து வந்தவர்களை சாத்தியமாக அசர வைத்த படம் என்றால் ஈற்றில் அது விஸ்வரூபமாகவே இருக்கும்... படத்தில் இஸ்லாத்தையோ இஸ்லாமியர்கலையோ கொச்சை படுத்தும்; புண் படுத்துவது போல எந்த காட்சிகளும் இல்லை... மாற்றாக உண்மைகளை எந்த வித ஒழிவு மறைவும் இல்லாமல் வெளிச்சம் போட்டு வெள்ளித்திரையில் காட்டியுள்ளார் என்பதே உண்மை.. இந்திய தமிழ் சினிமா இருந்த இடத்தை காட்டியதும் கமல்ஹாசன்தான் இப்போது ஆங்கிலேய தரத்தில் (சொன்னால் என்ன ஆங்கில படமே தான்...) ஒரு படம் தமிழனால் எடுக்க முடியும் என்று காட்டியதும் கமல்ஹாசன் தான்... இப்போது இருக்கும் சினிமாவை கையை பிடித்து ரெண்டு படி மேலே கொண்டுபோய் சேர்த்தவருக்கான மரியாதையை தான் தமிழக அரசும்; ஒரு பாக சகோதர இனமும் அவருக்கு ரெண்டு கிழமையாக கொடுத்தது..!!!

இந்த படத்துக்கு ஏன் இவளோ எதிர்ப்பு என்று பார்த்தால் படத்தில் கமல்ஹாசன் ஒரு முஸ்லீம் அதுக்கா இந்த எதிர்ப்பு.. என்றால் அதுக்கும் இல்லை.. படத்தில் முஸ்லீம்கள் பற்றியோ அவர்களது மார்க்கத்தை பற்றியோ பிழையாக கூறப்பட்டுள்ளது என்பதுக்காகவா இந்த எதிர்ப்பு.. காரணம் அதுகும் இல்லை... படத்தில் "அல்கைதா" என்ற அரக்கர்களையும் அவர்களது நடவடிக்கையையும் வெளிப்படையாக காட்டியதும்; நடந்த உண்மைகளை காட்டியதும் தான் பிழையாம்.. (அட போங்கடா... கொங்கனாங்கிகளா...) ஏதோ பெரும் பாடுபட்டு படம் இன்று ஏழாம் திகதி வெளியாகியது. ஆனால் இங்கு.. இலங்கையில் பெரும் இழுபறிக்கு மத்தியில் வருமோ வராதோ என்ற நிலைமைக்கு எம்மை தள்ளி ஒரு முடிவாக முதல் காட்சியாக இரவு காட்சி காண்பிக்கப்படும் என்று முடிவு செய்துள்ளார்கள்.. (இனியும் மாத்தீடாதீங்கையா தாங்க முடியலை..)

படம் பார்க்க போக நேரம் கூடி வந்து விட்டமையால் இந்த பதிப்பின் பாகத்தை இத்துடன் முடிவுக்கு கொண்டுவந்து விட்டு.. அடுத்து பாகத்தில் இவர்கள் சமூகத்தினரை வம்புக்கு இழுத்தமையால் இவர்களது இனம் எப்படி தோன்றியது என்றும்; இவர்களது நடவடிக்கைகளையும்; அரசியல் சின்னாபின்னங்களையும் சற்றே கூர்ந்து பார்ப்போம்..!!!

"மொத்தத்தில் படிப்பறிவால் பகுத்தறிவை பெறாத கூட்டம்..."

Post Comment

8 comments:

 1. அவசியமான பதிவு சகோ

  ReplyDelete
  Replies
  1. நக்கலுக்கு சொல்றீங்களோ பாஸ்... :)

   Delete
 2. Best Free Premium Blogger,Blogspot Templates for your blog.Latest High Quality Free Premium Blogger Templates,Themes,Layouts http://bigmasstemplate.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. நிட்சயமாக வந்துட்டு போயிட்டால் போச்சு....

   Delete
 3. HAte you guys...Kamal sucks as you bloddy bustard from sri lanka..Iam a Indian

  ReplyDelete
  Replies
  1. அயலவனை மதிக்க தெரியாத நீங்கள் எல்லாம் புனிதர்கள் பிறந்த தேசத்தின் பேரை சொல்லாதீர்கள்... வெட்கக்கேடு...

   Delete
 4. இவனுங்களால தமிழ் நாடு மிகப்பெரிய மதக்கலவரத்தை எதிர் நோக்கியிருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. மனமளவில் மதமுள்ளவர்கள் ஒரு போதும் கலவரத்தில் ஈடு படமாட்டார்கள்.. ஆனால் அவர்கள் தான் அப்படி இல்லையே... என்ன செய்ய.. ஒன்றுமே இல்லாத விசயத்துக்கு இந்தா ஆர்ப்பாட்டம் தேவையா??

   Delete