Thursday, February 7, 2013

தசாவதாரம் தொடக்கம் விஸ்வரூபம் வரைக்கும் திரைவிமர்சனம்..!!!

"விஸ்வரூபம்" என்ற படத்தை பற்றி விமர்சனம் எழுதும் தகுதி எனக்கு மட்டும் இல்லை யாருக்குமே இல்லை.. ஏன்னா படத்தை அவளவு சூப்பர் ஆக எடுத்திருக்கார். நானும் "விஸ்வரூபம்" என்ற பேரில் ஏதாவது விமர்சனம் எழுதணும் என்ற ஆவலில் எழுதலாம் என்று ஆரம்பித்தே ஆனால் முடியவில்லை.. (முன்ன பின்ன விமர்சனம் எழுதி இருந்தால் தானே..!!! அவ்வ்..) சப்பை கட்டு கட்டுவதற்க்காக "தசாவதாரம்" படத்தின் விமர்சனத்தில் தொடங்கி "விஸ்வரூப"த்தில் முடித்து விடலாம் என்ற குட்டி ஆசையில் ஏதோ எழுதி முடித்திருக்கின்றேன். கோப படாமல் பொறுமையாக வாசித்து; உங்கள் கார சாரமான கருத்தினை கூறவும்..!!! 


இந்துக்குள்ள சைவம் வைணவம்..!!!

படத்தில முதற்காட்சி. 12ம் நூற்றாண்டு சைவ வைணவ மோதலை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். வைதீக மதம் சனாதன மதம் போன்ற கதைகள கிளப்பி இப்ப தூள் கிளப்பும் இந்துத்துவக் காரர்களுக்கு கழுவில ஏற்றியும் தூக்குக்காவடியில கொழுவி சாட்டையால அடிச்சும்தான் வைதீக மதம் திணிக்கப்பட்டது என்ற உண்மையைச் சொல்லுது முதற்காட்சி. இதை இன்னும் விரிவாக்கினா இந்துமதம் என்ற மதமே இல்லே அது வெள்ளக்காரனுக்கு பின்னால வந்த கற்பிதம் என்டது தெரியும் பாருங்க. எனக்குத் தெரிஞ்சு பத்துக்கும் மேற்பட்ட பெரும்மதங்கள் தம்மை நிலைநிறுத்த அந்தகாலத்தில போட்டிபோட்டவை. சைவத்தோட சமணம் பௌத்தம் போட்ட போட்டி ரொம்பப்பிரபலம் திருஞானசம்பந்தர் 60000 சமணரை கழுவில ஏற்றினத (அது என்னண்டா பின்னால கம்பிய அடிச்சு உச்சந்தலையால வெளியவரப்பண்ணி ஆக்களைக் கொல்லுறது. சில கிராமக்கோயிலில கோழிகுத்துவினம் அப்படித்தான் ) பெருமையா 5ம் 6ம் வகுப்பு சமயப்புத்தகத்தில போட்டிருக்கிறான். இதைப்படிக்கிறவன் மற்றமதக்காரனை கொல்லாம என்ன செய்வான். மற்றமதம் தேவேல்ல சைவத்துக்குள்ளேயே சுத்தசைவம் வீரசைவம் கபாலீகம் என்று போட்டிபோட்டான்கள். எல்லாம் அகிம்சையில்ல எல்லாம் கொலையும் கொலைமுயற்சியும்தான். சைவம் எண்டில்ல வைணவத்துக்குள்ளேயும் போட்டி இருக்கு இப்பவும் திருவரங்கத்தில (ஸ்ரீரங்கம்தான்) வடகலை தென்கலை பாகுபாடு இருக்கு.நடிகன்..மகா...நடிகன்..!!!

இதெல்லாத்தையும் மறைச்சுத்தான் இப்ப இந்து என்ற புனிதமதத்தை சொல்றாங்கள் படத்தில பழசு ஞாபகப்படுத்தப்பட்டது பாருங்க அது இந்துத்துவாக்கு ஒரு சறுகக்கல்தான். சரி அப்ப இந்து என்ற அடையாளம் எப்ப வந்தது. அதையும் பாத்திட்டு அங்கால போவம் என்ன. வரலாற்றறிஞர் பொ.ரகுபதி சொல்லுறார் ‘ஒருமைத்தன்மையான சமய சிந்தனைக்குப் பழக்கப்பட்ட மேற்கத்தையார், அதே கண்களோடு தென்னாசிய சமய ஓட்டத்தைப் புரிந்துகொள்ள முயற்சித்து, அதற்கு ஒற்றைத் தன்மையான ஒரு பொதுச் சொல் கொடுக்க முனைந்தபோது வசதியாக அகப்பட்டது, ஆதிசங்கருடைய வைதிகம் அவைதிகம் என்ற பிரிப்பு. வேதத்தை முன்னிறுத்தி, அதற்கூடாகப் பிராமணியத்தை முன்னிறுத்திய சமய சிந்தனையே இந்து சமயத்தின் மூலம் என்ற கருத்தை, மேற்கத்தேய கீழைத்தேய வாதிகள் சொல்லப்போக, அவர்கள் கண்களுக்கூடாக எம்மை நாம் பார்ப்பதுதான் நாகரிகம் என்று நினைத்த எமது தேசியவாதிகளும் சேர்ந்து செய்த கற்பிதம் தான் இந்து சமயம் என்ற இன்றைய கருத்து.

வேதத்தையும் வேதியரையும் எமது பக்தி இலக்கியங்கள் முன்னிறுத்தவில்லையா என்று கேட்போருக்கான பதில் அந்தப் பக்திஇலக்கியங்களிலேயே இருக்கிறது. சந்தேகம் இருப்போர் மாணிக்கவாசகருடைய போற்றித் திருவகவலை ஒரு தடைவ படிக்கவும் இப்ப விளங்கும் இந்து என்ற கருத்து. சுமார் 200 ஆண்டுகால இந்த இந்துசமய கருத்தோட்டம் சைவ வைணவ சண்டையை இல்லாமல் செய்திருக்கலாம். இப்போது அது ஒரு பாசிசமாக உருவெடுக்கையில் பழைய வராலற்றை பேசுவதனூடகத்தான் ஒடுக்கப்பட்ட தலித்துக்கள், ஆதிவாசிகள், மற்றும் சூத்திரர் பார்ப்பனிய இந்துத்தவத்துக்குள் சிக்காமல் காப்பாற்ற வழி இதை பார்ப்பனியம் ஆதிக்கம் செய்யிற நாட்டில ஒரு பார்ப்பான் அதை வெகுசன சினிமாவில காட்டறது எப்படிச் சொல்லுறது.

திருவரங்கநாதர் உலா...!!!

அது மட்டுமில்ல வைணவ கோயில்ல விதவைகள் கோயிலுக்குள்ளே போறது இப்பவும் குறைவு அதிலயும் அவர்கள் சாமிய தொடுவது நடக்காத காரியம் ஆனா படத்தில விதவை மூதாட்டி உலாவரும் உற்சவ மூர்த்திய தொட்டு அதுக்குள்ள கிருமி குண்டைப் போடுறா. இந்துக்கடவுள்மார் தலித்துக்கள்ற ஏரியாப்பக்கமே போமாட்டினம் ஆனா படத்தில திருவரங்கர் தலித்துகள்ர சுடலைக்கு போறது மட்டுமல்லாம சுடலைக்குள்ளேயும் தாட்டுவைக்கப்படுகிறார். பிறகு முஸ்லிம்களோட வானில போகிறார் சீக்கியர் மருந்துபெட்டிக்குள்ள போகிறார் கடசியா வேதக்கார சேர்ச்சில நிற்கிறார். கடவுளை பயபக்தியோடு தூக்கிறதுதான் இந்துசமய வழக்கம் ஆனா படத்தில பொம்மையமாதிரி எறிஞ்சு விளையாடப்படுகிறார். கடசியா முதலமைச்சர் பிரதமர் எண்டு ஆட்சிபீடத்தின்ர உச்ச ஆக்கள் பேசுற மேடையில நடுநாயகமாக நிற்கிறார் ஆட்சிசெய்யிறது ஆரா இருந்தாலும் அவை இந்துப் பார்ப்பனிய சொல்படிதான் நடப்பினம் என்றத எப்படி காட்டியிருக்கினம் பாருங்க. இப்படி புனிதமானதை கிண்டலடிக்கிறது தமிழ் சீரியஸ் படங்களில கூட கிடையாது மசாலாப்படத்தில இதெல்லாம் சாத்தியமாகியிருக்கு என்னண்டு சொல்லுறது... (ஏனையா இந்து மன்றம் என்று ஏதாவது இருந்தா நீங்களும் உங்க பங்குக்கு போன புறாவுக்கு மணி அடியுங்கோவன்...!!!)


அமெரிக்காவும் புஷ்ஷும்...!!!

படத்தில அமெரிக்கக்காரன் தன்ர ஆதிக்க வெறிக்காக உயிர்கொல்லி கிருமிகளை உற்பத்தி செய்யிறதும் அதை அழியாமல் காப்பாத்த CIA செய்யிற பிரயத்தனங்களும் அதிகளவாச் சொல்லப்பட்டிருக்கு. அதிலையும் CIA ஏஜென்ட கமல்ர விசயம் இந்தியாவில காரில வார புஷ்ஷுக்கு சொல்லுறது மூலம் அமெரிக்கா எந்த நாட்டில போய் என்னத்தை கக்கினாலும் தன்ர கொள்கையை மாத்தாது என்டதும் விளங்கியிருக்கும். எல்லாத்துக்கும மேல அமெரிக்காவுக்கு போற பாப்பான்கள் தான் இப்படியாக கொடிய ஆயுதங்களுக்கு கைக்கூலி வேலைசெய்யிறதையும் காட்டியிருக்கினம். CIA செய்யிற கொலைகளில சிலதை காட்டியிருக்கினம் பாருங்க இப்படி படத்தில அமெரிக்க எகாதிபத்தியத்தின் உண்மைமுகம் மேலோட்டமாக சொல்லப்பட்டிருக்கு.. எத்தனை பே கவனித்தார்களோ தெரியாது.. அமெரிக்கா இலட்சனையில் இருக்கும் கழுகு அமெரிக்க அதிபருக்கு ஒரு பிரச்சனை என்ற போது தலை கீழாக இருப்பதை... உண்மையில் வழக்கமும் கூட அதுதான்.. முடிந்தால் மீண்டும் ஒரு முறை பாருங்க... (இப்படியான ஒருவரை தான் இன்று தமிழகத்தை விட்டு போகலாம என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு... போராட்டம் செய்தார்கள்..)


தலித்துக்கள்...!!!

‘உங்கள்ள எவண்டா படிச்சவன் இருக்கான்’ என்டு மணல்க்கொள்ளைக்காரன் கேக்க ‘இப்ப எங்களில படிக்காதவன் இல்ல’ எண்டு தலித் இளைஞர்கள் சொல்லிற மாதிரிகாட்சி தலித்மக்களை இனியும் எமாத்த ஏலாது என்றதை காட்டுது. ஆறுகளில் மணல்கொள்ளை போன்றவற்றை தலித்துக்கள்தான் தடுத்து சூழலியல் கேடுகள் வராம எதிர்க்கினம் இதில சாதி மசிர் ஒன்டும் இல்ல எண்டதும் காட்டப்படுகிறது. கடசியா மணல் முதலாளி தலித்தலைவர்ர காலை தொட்டுக்கும்பிடுற காட்சி என்ன சொல்லுது. கிளைமாக்ஸ்ல ஒரு வசனத்தை சொல்வாரு கமல் ‘கடவுள் இல்லையெண்டு நான் சொல்லேல்லே. இருந்தா நல்லது எண்டுதானே சொல்லுறன்’ இதைத்தான நானும் சொல்ல விரும்பினான் இப்படி படத்தில கொம்பில கறக்க தல நிறைய முயற்சிசெஞ்சிருக்கிறார் ஆனால் பாவம் அவர்ர கைதான் நொந்துபோயிருக்கும். நம்மட சனத்துக்கு உது விளங்கியிருக்குமா?


சொல்லப்போனால் :-  "தசாவதாரம்" படத்தில் இந்துக்களையும் வைனவர்களையும் முடியுமானவரை கூண்டில் ஏற்றி இருந்தார்.. ஆனால் அந்த படத்துக்கு எதிர்ப்புக்கள் கிளம்பிய போதும் "விஸ்வரூப"த்திற்கு எழுந்த அளவுக்கு இல்லை.. (குலைக்குற நாய்... நாய்... கடிக்காது கமல் சார்... ஒன்னுத்துக்கும் யோசிக்காமல் பாகம் இரண்டையும் கூடிய சீக்கிரம் வெளிவிடுங்கோ..!!!) ஆக மொத்தத்தில் என்ன தெரியுது படத்தினை பகுத்தறியும் நிலைமை இருக்கின்றவர்கள் புரிந்து கொள்வார்கள்.. (நான் சொல்லறது புரியுறவங்களுக்கு புரிந்தால் சரி...) அப்துல்கலாம் அவர்களை எப்படி மரியாதை செலுத்த வேண்டும்.. ஒசாமாவுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டும் என்ற பகுத்தறிவு.. உள்ளவர்கள் படத்தினை தடுத்து அலப்பறை செய்திருக்க மாட்டார்கள்.. ஆனால் இல்லாதவர்கள்... என்ன செய்வது புத்தி வளர்ச்சி போதாது போல...!!!


சொல்வதுக்கு பெரிதாக எதுக்கும் இல்லை... "விஸ்வரூபம்" விமர்சனத்துக்குள் செல்வோம்..!!!

ஐம் த ஹீரோ..ஐம் த வில்லன்..!!!

படத்தில் கமல் தன்னை மூன்று நிலைகளில் நிறுத்தி காட்டியுள்ளார். எதிர்பதுக்கு இந்த படத்தில் அப்படி என்னதான் இருந்தது என்று தெரியவில்லை.. படத்தில் கமல்ஹாசன் கூட ஒரு முஸ்லிம்தான்.. ஹீரோவே அந்த மார்க்கத்தை பின்பற்றும் போது எந்த வகையில் அந்த மார்க்கத்தை சாட முடியும்.. இவர்கள் கத்தியது; போராடியது; தடை விதித்தது எல்லாம் மார்க்கத்துக்காகவா இல்லை அல்கொய்தாவிற்க்காகவா என்று தெரியவில்லை.. படத்தின் களம் என்னவோ ஆப்கானிஸ்தானில் தான் இருக்கின்றது.. (ஓ..ஓ.. புல்லு இல்லாத இடத்தை காட்டும் போதே நினைத்தேன் இவர்களுக்கு எங்கு ஈரம் இருக்க போகின்றது என்று..!!!

அல்கொய்தாவிற்க்கு பயிற்சி கொடுப்பவராகவே கமல்ஹாசன் நுழைகிறார். ஆனால் அவரது நோக்கம் வேறாகவே இருந்தது. இது ஒரு புலனாய்வு துறை சம்பந்தமான படம் என்பதால் ஒவ்வொரு காட்சிகளையும் மிகவும் அவதானிப்பாக பார்க்க வேண்டும்..(கமல் படம் என்றாலே அவதானமாகத்தான் பார்க்க வேண்டும்..!) அல்கொய்தாவில் கமல் இருக்கும் குழுவில் அவர்க்கு மேலே ஒரு உறுப்பினர் இருக்கின்றார் அவர்தான் "உமர்".. படத்தின் கதை இவர்கள் இருவரையும் சார்ந்தே நகரும்.. படத்தில் ரசிக்க கூடிய; கமலின் வழமையான பாணியில் ஒரு கதை நடந்துகொண்டிருக்கும் போது முன்னம் நடந்த கதையை சொல்லும் முறை இந்த படத்துக்கு சூப்பர் ஆக பொருந்தியுள்ளது. படத்தின் ஆரம்பத்தில் கமல் 'கதக்' ஆசிரியராக வருகின்றார். அது கூட நிரந்தரம் இல்லை என்பது போக போக கமலே சொல்லிக்கொண்டு போவார்.

மொத்தத்தில் 'தொப்பிக்கு' மொட்டை போட்ட ரூபம்.. இது விஸ்வரூபம்..!!!

படத்தில் நாசர்க்கு என்று பெரிதும் பகுதி இல்லாவிட்டாலும் கொடுத்த பகுதியினை நன்றாக செய்துள்ளார். படத்தில் சொல்ல வேண்டியவரை விட்டு விட்டு எங்கயோ போய்ட்டேன்.. பார்த்தீர்களா?? அதுதானுங்க அ..ன்..ரி..யா..!! மற்ற படங்களை போல ஏதாவது கில்மா இருக்கும்; இது வேற கமல் படம் ரெண்டும் சேர்ந்த கலவையாக இருக்கும் என்று பார்த்தால்.. ஒண்ணும் இல்லை.. படம் குளிரில் எடுத்ததால் அன்ரியா புல்லாக மூடிய படியே வருகின்றார்.. இது கொஞ்சம் மனதுக்கு கவலை தந்தாலும் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பும் கதை சொல்லும் விதமும் பிரமாதம்.. அதிலும் அல்கொய்தா அமைப்பின் பின்னல்களை அவிழ்க்கும் காட்சிகள் மிகவும் சுவாரசியம்.. "அப்பன் யார் என்றே தெரியாதவங்கள் இன்னும் உசாரா இருப்பாங்களாம் உங்களை மாதிரி!!!" படத்தில் இந்த வார்த்தை குத்த வேண்டியவர்களுக்கு நன்றாக குத்தும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை..!!! 

மிகவும் பொருட்செலவில் ஏதுக்க வேண்டிய படத்தை எப்படி நூறு கோடியில் எடுத்தார் என்று பார்த்தால் எல்லாத்துக்கும் ஒரு பெரிய நன்றியை கமரா அண்ணைக்கு தான் சொல்லணும்.. கலரிங்; வெளிச்சம்; காட்சியின் கோணம் எல்லாம் பக்கா.. சும்மா "அந்தாள்" படத்தில வாறது போல காலை காட்டி கையை காட்டி மூஞ்சிஜை... என்று எல்லாம் இழுத்தடிக்காமல் படத்தின் கதைக்கு ஏற்றால் போல கமரா அண்ணை செயற்பட்டிருக்கிறார். படத்தில் ஹீரோயின் அவவா இல்லை இவ்வா என்று குழப்பம் வந்தாலும் கடைசியில் "என்ன ஆனாலும் நான் உங்க கூடத்தான் வருவேன்" என்று சரோயாதேவி போல சொல்லு வசனத்தில் இருந்துதான் முடிவுக்கு வர முடிந்தது அவவா இல்லை இவ்வா ஹீரோயின் என்று...!!! (ரொம்ப குழப்பம் அப்பா...) கடைசியாக "அதுக்கு" குறை வைக்காத கமல்ஹாசன் அவர்கள் 'ஜேம்ஸ்பாண்ட்' படத்தில் வருவது போல இரண்டு கில்மா காட்சிகள் வைத்து இது தொடரும் என்று வேறு சொல்லியிருக்காரு.. அதுதானுங்க பாகம் இரண்டும் வரும் என்று சொன்னாரு..!!!

போராட்டம்.. ஆர்ப்பாட்டம் பார்ட் டூ வெகு விரைவில்..!!!

முன்னம் சொன்னது போல மொத்தத்தில் விஸ்வரூபம் ஷங்கரின் பிரம்மாண்டம், மணிரத்னத்தின் விஷுவல், ராஜேஷ்குமார் நாவலின் துறுதுறுப்பு எல்லாவற்றுக்கும் மேல் இந்த "விஸ்வரூபம்".. ஆக மொத்தத்தில் இந்த ஆண்டில் பெருமளவு விருதுகளை அள்ளப்போகும் படம் என்ற பட்டியலில் முதலிடத்தில் இருக்கப்போகும் படம் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை..!!!

மொத்தத்தில் படம் டக்கர்..!!!

எத்தனை தரம் என்றாலும் படத்தை பாருங்கள்... கட்டாயமாக படத்தை திரையரங்கில் பாருங்கள்... ஏன்னா ஒரு உண்மையான நடிகனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்ததே ஆக வேண்டும்... இரண்டு தடவைகளுக்கு அதிகமாக பார்க்க கூடிய படம்..!!!

"வெளி வரமுன்னமே வெற்றி பெற்ற படம்... ஏன்னா தாண்டி வந்த தடைகள் அப்படி.."

Post Comment

2 comments:

 1. சூப்பர் விமர்சனம் //60000 சமணரை கழுவில ஏற்றினத (அது என்னண்டா பின்னால கம்பிய அடிச்சு உச்சந்தலையால வெளியவரப்பண்ணி ஆக்களைக் கொல்லுறது. சில கிராமக்கோயிலில கோழிகுத்துவினம் அப்படித்தான் ) பெருமையா 5ம் 6ம் வகுப்பு சமயப்புத்தகத்தில போட்டிருக்கிறான். // ஹி ஹி
  சுடலைக்கு போறது மட்டுமல்லாம சுடலைக்குள்ளேயும் தாட்டுவைக்கப்படுகிறார். பிறகு முஸ்லிம்களோட வானில போகிறார் சீக்கியர் மருந்துபெட்டிக்குள்ள போகிறார் கடசியா வேதக்கார சேர்ச்சில நிற்கிறார். கடவுளை பயபக்தியோடு தூக்கிறதுதான் இந்துசமய வழக்கம் ஆனா படத்தில பொம்மையமாதிரி எறிஞ்சு விளையாடப்படுகிறார்.

  இது எனக்கு நல்லா பிடிச்சுது பாஸ்
  //ஓ..ஓ.. புல்லு இல்லாத இடத்தை காட்டும் போதே நினைத்தேன் இவர்களுக்கு எங்கு ஈரம் இருக்க போகின்றது என்று..!!!//

  சூப்பர் பாஸ்

  ReplyDelete
  Replies
  1. விடுங்க பாஸ் நமக்கும் இருக்கும் ஆதங்கத்தை எப்படியாவது வெளிக்காட்டனும் தானே அதுக்கு விமர்சனம் என்ற பேர்ல ஏதாவதை போட்டு தாக்கினால் தான் உண்டு.. அதுக்காகத்தான் இந்த ஏற்பாடு...!!!

   Delete