Saturday, March 30, 2013

குஷ்புவை அம்மா ஆக்கப்போவது யாரு..?

பிஞ்சு FACE..ஊ.. பஞ்சு...!!!

குஷ்பு - குறிப்பு :- இது தொடர்பாக வாசிக்க ஆவல், விருப்பம் இல்லாதவர்கள் தயவு செய்து வாசிக்க வேண்டாம். பிற்பாடு வாசித்து விட்டு "இந்த பதிப்பு எழுதின நேரத்திற்கு ஏதாவது உருப்படியான வேலை செய்திருக்கலாம்..." என்றது போன்ற பின்னூட்டல்களை பதிக்க வேண்டாம்.. அப்படி நடக்கும் பட்சத்தில் உங்கள் மானம், மரியாதைக்கு கம்பனி பொறுப்பு கிடையாது என்பதை தாழ்மையுடன் கம்பனி உறுப்பினர்கள் கூறிக்கொள்கிறார்கள்..!! தொடர்ந்து வாசிக்க விரும்புவோர் சங்கடம் இல்லாமல் சந்தோசப்படும்படி சங்கத்தார் வேண்டிக்கொள்கின்றார்கள். சரி சங்கடம் இல்லாம சமாச்சாரத்துக்குள் போவமா..?

Post Comment

Friday, March 29, 2013

கேடி பில்லா கில்லாடி ரங்கா - விமல் VS சிவகர்த்திகேயன் !!!

படத்தில் எப்படி கேடி, கில்லாடி ஹீரோக்கள் இருகிறாங்க்களோ அதே போல கிளுகிளுன்னு, குளுகுளுன்னு ரெண்டு ஹீரோயின்களும் இருக்கிறாங்க.. அட போங்க பாஸ் யாரு நடித்தால் என்ன நமக்கு செம டக்கர் ஹீரோயின் இருந்தால் போதுமே என்று என்னைப்போல எண்ணும் அன்பு உள்ளங்களுக்கு இயக்குனர் பாண்டியராஜ் ஒரு குறையும் வைக்கவில்லை. பாண்டியராஜின் வழமையான படங்களின் பாணியிலே இந்த படமும் முழு நீள காமடி படமாகவும்; இறுதியில் ஒரு மெசேஜ் சொல்லும் படமாகவும் உள்ளது.

நட்பின்றது கரண்டு மாதிரி..!!!

Post Comment

Wednesday, March 27, 2013

"சூப்பர்ஸ்டார்" ரஜினிகாந்த் உட்பட நான்கு முக்கிய நடிகர்களுக்கு திடீர் மாரடைப்பு..!!!

இந்த பதிவு முன்னர் எழுதிய பதிவின் தொடர்ச்சியாகும். அதுக்காக முதல் பதிவு வாசித்தால்தான் இந்த பதிவு விளங்கும்... என்று கதை விட நான் என்ன "உலக நாயகனா???" இந்த பதிவு முழுக்க முழுக்க எல்லா நடிகர்களையும் ஒரு கை!!! பார்க்கும் நக்கல் பதிவு... நடிகர்களில் அதிக விருப்பம்... தீ(விர) ரசிகர்கள்... யாரும் இந்த பதிவினை அதிக சிரத்தை எடுத்து வாசிக்க வேண்டாம்... மாறாக வாசித்து விட்டு... "தேனா...மானா..." என்று எல்லாம் பின்னூட்டல்களை இட வேண்டாம்... பின்பு நடப்பவற்றுக்கு கம்பனி பொறுப்புக்கிடையாது என்பதை பதிவின் தொடக்கத்திலேயே கூறிவிடுகின்றேன்... சரி கமலஹாசனை போல கனக்க(அலம்பாமல்) கதைக்காமல் பதிவுக்குள் போவோம்..!!! 

இத்தனை மாணவ செல்வங்கள் பட்டினி போராட்டம் நடத்தியும் நடிர்களின் இன்னும் ஒரு நாய் கூட பெரிதாக முன் வரவல்லை என்பது சிந்திக்க வேண்டிய விஷயம்... சிந்திக்க வேண்டிய விடயம் மட்டும் இல்லை... உரிமையுடன் கேட்க வேண்டிய விடயம்... ஒரு படம் வெளிவரும் போது எப்படி எல்லாம் மைக் முன்னாடி வந்து "என்னை வாழவைக்கும் செல்வங்களே.." என்று கும்பிடு போட முடியுதோ... அதைப்போல ரசிகனும் அவர்களை பார்த்து கேட்கும் உரிமை இருக்கத்தானே... வேண்டும்... இல்லையேல் இது சர்வாதிகார தமிழ் சினிமா உலகமா? "கூப்பிடுறா சாலமன் பாப்பையாவை பட்டிமன்றம் வைத்து பைசல் பண்ணீடுவம்..."

Post Comment

Sunday, March 24, 2013

தனி ஈழ நாடு கோரி "சூப்பர்ஸ்டார்" ரஜினிகாந்த் இமயமலைக்கு பாத யாத்திரை..!!!

பதிவும், பதிவில் தொடர இருக்கும் கருத்துக்களும் மிகவும் கவனிக்கப்பட வேண்டியது என்பதால் பதிவினை இரண்டாக பிரித்து பதிவிட உள்ளேன். முதல் பாதியிலேயே சினிமா கோமாளிகளை (ஓட்டு மொத்தமாக எல்லா நடிகர்களும்..) பற்றி எழுதுவதை விட... இந்த பிரச்சனையின் தோற்றம் பற்றி கொஞ்சம் சுருக்கமாக பார்த்து விட்டு... இந்த போராட்டத்துக்காக கோமாளிகளின் பங்களிப்பினை பற்றி விளக்கமாக பாப்போம்..!!!
ஏதோ எனக்கு தெரிந்த அரசியல் அறிவினை??? கொண்டு எழுதியுள்ளேன்.. ஏதும் பிழை இருப்பின் இளையவனை மன்னித்துக்கொள்ளவும்..!!!

Post Comment

Wednesday, March 20, 2013

கும்முன்னு இருக்கும் குஷ்பு; SUN T.Vயில் ராஜாதான் சுந்தர்.C...!!!

ஒரு நாட்டில் முன்னேற்றத்துக்கு அத்தியாவசியமானது என்று கருதப்படுவது பத்திரிகை துறை... நவீன காலம் என்பதால் ஊடகத்துறையும் இதில் பெரும் பங்கை வகிக்கிறது... அப்படி இருக்கும் போது இவர்களிடம் மட்டும் ஏன் இப்படியான 'மார்கழி மாதத்து நாய்க்குணம்' என்றுதான் புரியவில்லை.. இவர்களுக்கு இப்படியான செய்திகளை ஒளி,ஒலி பரப்புவது என்றால் அவ்வளோவு இஸ்டம்... காம கண்ணன் 'நித்தியானத்தா'வின் காணொளியினை உலகத்தொலைக்காட்சிகளில் முதல் முதலாக வெளியிட்ட பெருமை அந்த தொலைக்காட்சிக்கே சேரும்... அந்த தொலைக்காட்சியை குறை சொல்வதை விட அதன் தலைமைத்துவத்தையும் அதன் செய்திப்பிரிவையும் குறை சொல்லலாம்... ஏன்னா அவர்கள் தான் இதுக்கு முக்கிய காரணகர்த்தாக்கள்...!!!

Post Comment

Monday, March 18, 2013

அங்கு தீக்குளிப்பு; இங்கு விமானநிலையம் திறப்பு...!!!

இவ்வாறான பெயர்களை பார்க்கும் போது "தமிழ் படம்"த்தில் சிவா செய்யும் கூத்துக்கள்தான் நினைப்புக்கு வரும்...!!!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படு கொலைகளுக்கு எதிராக தமிழகத்தில் கோயம்பேடு பகுதியில் உள்ள செங்கொடி அரங்கத்தில் 'லயோலா' கல்லூரி மாணவர்கள் எட்டு பேருடன் உண்ணாவிரத போராட்டம் துணிச்சல் கரமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த போராட்டம் நான்காவது நாளிலேயே வாபஸ் வாங்கப்பட்டாலும் இந்த போராட்டம் ஏற்படுத்திய தூண்டுதலில் வீறுகொண்டு வீதிக்கு வரக்காரணமானது. சொல்லப்போனால் ஒட்டுமொத்த தமிழக மாணவர்களும் போராட்டத்தில் இறங்க்கியிருக்கின்றார்கள். எந்தவித கலவரமும் இல்லாமல் போராட்டம் நடத்துவதற்க்கு எத்தனை எதிர்ப்புக்கள். நீதி மன்றத்துக்குள் வெடிகுண்டு இருப்பதாக சொல்லி சென்னையில் சட்ட கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தை கலைக்க முயற்சி செய்தனர். ஆனால் பயன் இல்லை போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. போலீசார் படத்தில் வருவது போல மாணவர்கள் மீது தடியடி.. இப்படி பல வகையில் ஜெயலலிதாவின் அரசாங்கம் தன் இன மக்களுக்கு ஆதரவாக போராடும் போராட்டத்துக்கு எந்த விதத்தில் ஆதரவினை கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு ஆதரவினை வழங்க்கியவண்ணம் இருக்கின்றது..(விட்டா கிறுக்கன் ஆக்கீடுவாங்க போல...!!) ஆனால் கலைக்கிழவன் 'கருணாநிதி'யின் அரசாங்கம் செய்த உதவிக்கு ஜெயலலிதாவின் அரசாங்கம் செய்த உதவியாவது ஓரளவுக்கு பொறுத்துக்கொள்ளும் அளவிலான உதவியாகும்....!!!!!

Post Comment

Friday, March 15, 2013

பரதேசி என்றால் அது பாலாவின் "பரதேசி"தான்...!!!


இப்போது திரைக்கு வரும் படங்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் சர்ச்சையை எதிர்ப்பை தன்னுள்ளே வாங்கிக்கொண்டுதான் வெளிவருகின்றன. இது ஒரு விதத்தில் வியாபார யுக்தியாக இருந்தாலும் சர்ச்சைகள் எல்லோருக்கும் நல்ல வியாபாரத்துக்கு வழி வகுத்துவிட போவதில்லை. அதே போலதான் பாலாவின் "பரதேசி"க்கும் சர்ச்சை, ரசிகர்கள் மத்தியில் பாலா ஒரு காட்டுமிராண்டியாக சித்தரிக்கப்பட்டது என்று கொள்ளை சோகங்களோடு படம் திரைக்கு வந்தது. பாலா ஒரு காட்சியை படமாக்குவதற்க்கு முன்னர் அந்த காட்சியை தத்துரூபமாக தானே ஒரு முறை நடித்துக்காட்டுவார். அவ்வாறு அவர் நடித்துக்காட்டுவது போன்ற ஒரு காணொளி சில தினக்களுக்கு முன்னர் வெளியாகியதே இவ்வளவு சர்ச்சைக்கும், பாலா கத்தரிக்கப்படுவதற்க்கும் காரணமாகியது. தனது கடமையை, தனது பொறுப்பை எந்த வித குறையும் இல்லாமல் செய்து முடிக்க வேண்டும் என்பதில் பாலா அடித்த எந்த அடிகளும் சறுக்கிவிடவில்லை..!!! நடிப்பர்வர்களின் முழுமையான விளக்கமே அதனை பார்ப்பவர்களின் முழு திருப்தியாக அமையும்..!!!

Post Comment