Friday, March 15, 2013

பரதேசி என்றால் அது பாலாவின் "பரதேசி"தான்...!!!


இப்போது திரைக்கு வரும் படங்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் சர்ச்சையை எதிர்ப்பை தன்னுள்ளே வாங்கிக்கொண்டுதான் வெளிவருகின்றன. இது ஒரு விதத்தில் வியாபார யுக்தியாக இருந்தாலும் சர்ச்சைகள் எல்லோருக்கும் நல்ல வியாபாரத்துக்கு வழி வகுத்துவிட போவதில்லை. அதே போலதான் பாலாவின் "பரதேசி"க்கும் சர்ச்சை, ரசிகர்கள் மத்தியில் பாலா ஒரு காட்டுமிராண்டியாக சித்தரிக்கப்பட்டது என்று கொள்ளை சோகங்களோடு படம் திரைக்கு வந்தது. பாலா ஒரு காட்சியை படமாக்குவதற்க்கு முன்னர் அந்த காட்சியை தத்துரூபமாக தானே ஒரு முறை நடித்துக்காட்டுவார். அவ்வாறு அவர் நடித்துக்காட்டுவது போன்ற ஒரு காணொளி சில தினக்களுக்கு முன்னர் வெளியாகியதே இவ்வளவு சர்ச்சைக்கும், பாலா கத்தரிக்கப்படுவதற்க்கும் காரணமாகியது. தனது கடமையை, தனது பொறுப்பை எந்த வித குறையும் இல்லாமல் செய்து முடிக்க வேண்டும் என்பதில் பாலா அடித்த எந்த அடிகளும் சறுக்கிவிடவில்லை..!!! நடிப்பர்வர்களின் முழுமையான விளக்கமே அதனை பார்ப்பவர்களின் முழு திருப்தியாக அமையும்..!!!உலகத்தரமான படத்தை எடுக்க வேண்டும் என்றால் வெளிநாடு போய்த்தான் எடுக்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டத்தை இந்த படத்தின் மூலம் பாலா கரி பூசி அழித்து இருக்கின்றார் என்றுதான் சொல்ல வேண்டும். பாலாவின் ரசிகர்கள் ஒரு பெரிய பெருமூச்சி விட்டுக்கொள்ளலாம் "அப்பாடா சூப்பர் படம் மாப்பிளை இது..." என்று...! அதுக்காக பாலா எடுத்த படத்திலேயே இதுதான் சூப்பர் படம் என்று சொல்லி பாலாவின் திறமையை சோதித்து விட முடியாது!! தன் குரு மகேந்திரன் விட்டுச்சென்ற இடத்தை தன் வசமாக்கிக்கொள்ளும் ஒரு நல்ல முயற்சியில் பாலா இறங்கியிருக்கின்றார்..! படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது கண்கள் எல்லாம் உருட்டும், உச்சியை பிளக்கும் வெய்யில் கண்களை திறக்க விடாமல் செய்யும்.. ஏன்னா படத்தில் ஒளி என்பதே இல்லை.. இந்த விஷயத்தில் பாலா நம்ம மணிரத்தினத்தை முந்திவிடுவார் போல இருக்கின்றது. இருந்தாலும் அவ்வாறன ஒளியே படத்தின் கதைக்கு ஏற்ற அளவான ஒளியாகும். இப்படி ஒவ்வொரு விடயத்திலும் மிகவும் கவனமாக எடுத்த ஒரு தேசிய விருதுக்கான படம் தான் "பரதேசி"... பாலாவின் பரதேசி...!!


படத்தின் ஆரம்பம் என்னவோ வழமையான பாலாவின் படத்தினை போலவே கொஞ்சம் சிரிக்கும் படியாக இருந்தது. ஆரம்பம் 'சாலூர்' என்ற கிராமத்து மக்களின் பழக்கவழக்கங்கள், திருமண முறைகள் என்று சொல்ல வேண்டியது எல்லாவற்றையும் சுருங்க வடிவாக சொல்லி முடித்திருக்கின்றார். படத்தில் தண்டோரா போடுபவனாக அதர்வா, அதர்வாவை காதலிக்கும் வெகுளிப்பொண்ணாக வேதிகா என படத்தின் கதாபாத்திரங்களை பச்சை குத்துவது போல.. தெளிவாக தெரிவு செய்திருக்கின்றார். இந்த விடயத்தில் பாலா என்றைக்கும் குறை விட்டதுகிடையாதே..!!!படத்தின் கதை பெரும்பாலான இடங்களில் "இடலாக்குடி ராசா" என்ற சிறுகதையினை நினைவு படுத்திவிட்டு செல்கின்றது. இருந்தாலும் பாலா இதனை ஒரு பேட்டியிலேயே ஒத்துக்கொண்டது தானே.. ஆக இது ஒரு பெரிய சிக்கல் இல்லை..!! என்ன இல்லைத்தானே..!!!


பசி, உண்ணாமை, வறுமை, வறட்சி என்ற கொடுமைகளால் பக்கத்து ஊருக்கு செல்லும் அதர்வா அங்கு ஒரு கங்காணியை சந்திக்கின்றார். அதில் இருந்துதான் ஊர் மக்கள் கொத்தடிமைகளாகிய கதை ஆரம்பமாகின்றது. வளமையை போல எல்லா பெருச்சாளிகளை போலவே கங்காணியும் ஆரம்பத்தில் இனிக்க இனிக்க பேசி ஊர் மக்களை மலைப்பிரதேசத்தில் வேலைக்காக அழைத்துப்போகின்றார். அதுகும் ஒருநாள் ரெண்டுநாள் பயணம் இல்லை நாற்பத்து எட்டு நாள் நடைப்பயணம்.. இதன் முடிவில் வேலைக்கான இடத்திற்க்கு வந்து சேருகின்றார்கள். இந்த இடையில் அதர்வாவுக்கும் வேதிகாவுக்கும் இடையிலான காதலால் அவள் ஒரு ஆண் குழந்தைக்கு தாய் ஆகின்றாள்.. வளமையை போலவே இந்த விசயம் வீட்டாருக்கு தெரியவர அவளை அடித்து வீட்டை விட்டு துரத்துகின்றார்கள். அவளும் அதர்வாவின் பாட்டியுடன் வந்து இருந்துவிடுகின்றார். இங்கு காதலி கருவுற்ற நிலையில்.. அங்கோ காதலன் காட்டுக்குள் வேலை..!!


உண்மையிலேயே ஆங்கிலேயர்களால் ஒரு காலகட்டத்தில் என்ன என்ன கொடுமைகள் நடத்தப்பட்டது என்பதை படம் போட்டு காட்டியிருக்கின்றார்.. படத்தின் இரண்டாம் பாதி அப்பாவி மக்கள் படும் துயரத்தையும், பெண்களின் கற்பு வெள்ளை நிற வெளிநாட்டு அட்டைகளால் உறிஞ்சப்படுவதையும், விடுப்பு தருவதாக கூறி ஓய்வே இல்லாமல் வேலை வாங்குவதையும், கொடுமை தாங்காமல் தப்பி ஓடுபவர்களை பிடித்து சித்திரவதை செய்வதையும் அவர்களில் கால் நரம்பை அறுத்து விடுவது என்று... கொடுமைகள் அளவு கணக்கில்லாமல் தொடர்ந்துகொண்டே போகின்றது..!!! இந்த நிலைமையில் கருவுற்றிருந்த அவள் ஆண் குழந்தையை பெற்று எடுக்கின்றாள்... இந்த கஷ்டங்களுக்கு மத்தியில் அந்த யோடிகளின் வாழ்க்கை எப்படி தொடர்கின்றது.. அவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் ஒரு எதார்த்தமான முடிவு..!!! இந்த படத்தில் எந்த இடத்திலும் எதார்த்தத்தை சற்றும் தவற விடவில்லை என்பது மிகவும் உன்னிப்பாக ரசிக்க வேண்டிய விடையமாகும்.!!!படத்தில் ஆங்கிலேயர்களை மட்டும் குறை சொல்லாமல், அவர்களை தேயிலை தோட்டத்துக்கு அழைத்து வந்து அடிமைகளாக வேலை வாங்கும் ஒரே இன மக்களையும் சாட்டையடி அடித்திருக்கின்றார். உண்மையான ஒரு திறமைசாலியால்தான் நிலை குழம்பாது நடு நிலையாக இருந்து சாதிக்க முடியும். மறுபடி ஒருமுறை பாலா அதனை நிரூபித்திருக்கின்றார்.!! இந்த வருடத்தில் வந்த உருப்படியான படங்களில் பாலாவின் "பரதேசி"க்கு முதல் இடம் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. இந்த வருடத்தின் தேசிய விருதுகளை அள்ளிக்குவிக்கப்போகும் ஒரு படமாக இந்த படம் அமையும்..!! இப்படியான நடுநிலை தவறாத, உண்மையான படம் எடுத்த பாலாவிற்க்கு நன்றிகள்.. அவரின் வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்..!!!டிஸ்க்கி :- கண்டிப்பாக எல்லோரும் படத்தை பாருங்க "நான் கடவுள்" படத்தி இருப்பது போல யாரும் யாரையும் கடித்து தின்னவில்லை.. பயப்படாமல் போய் பார்க்கலாம்.. என்ன போகும் போது நல்ல 'டோச் லைட்' ஒன்னு கொன்னு போங்க ஏன்னா படம் அம்புட்டு இருட்டு..!!! அழகான ஹீரோவையும் அம்சமான ஹீரோயின்களையும் இப்படி காட்ட அந்த மனுஷனால மட்டும்தானையா... முடியும்..!!!

"பாலா.... மகேந்திரன் ஆக எடுத்து வைத்த இந்த முயற்சியும் சக்சஸ்...!!!"

Post Comment

4 comments:

 1. நாளை படம் பார்க்கிற ஐடியா இருப்பதால் படத்தின் கதை தவிர மிகுதி பகுதிகளை படித்துள்ளேன். அருமையான பதிவு....

  ReplyDelete
  Replies
  1. படத்தை பாருங்க பாஸ் அப்பதான்... புரியும்... அவீங்க படும் பாடு..!!!

   சஜி ஜீ வருகைக்கு நன்றி..!!!

   Delete
 2. நானும் படம்பார்த்தபின் வருகின்றேன் பட் பாலாவில் நம்பிக்கையிருக்கு நிச்சயம் தனது நிலையில் இருந்து தவறமாட்டார்

  ReplyDelete
  Replies
  1. நிட்சயமாக படம் பார்த்தால் பிடிக்கும்.. நிலை நியாயம் தவறாத பாலாவின் இன்னொரு படைப்பு...!!

   வருகைக்கு நன்றி...!!!

   Delete