Monday, March 18, 2013

அங்கு தீக்குளிப்பு; இங்கு விமானநிலையம் திறப்பு...!!!

இவ்வாறான பெயர்களை பார்க்கும் போது "தமிழ் படம்"த்தில் சிவா செய்யும் கூத்துக்கள்தான் நினைப்புக்கு வரும்...!!!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படு கொலைகளுக்கு எதிராக தமிழகத்தில் கோயம்பேடு பகுதியில் உள்ள செங்கொடி அரங்கத்தில் 'லயோலா' கல்லூரி மாணவர்கள் எட்டு பேருடன் உண்ணாவிரத போராட்டம் துணிச்சல் கரமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த போராட்டம் நான்காவது நாளிலேயே வாபஸ் வாங்கப்பட்டாலும் இந்த போராட்டம் ஏற்படுத்திய தூண்டுதலில் வீறுகொண்டு வீதிக்கு வரக்காரணமானது. சொல்லப்போனால் ஒட்டுமொத்த தமிழக மாணவர்களும் போராட்டத்தில் இறங்க்கியிருக்கின்றார்கள். எந்தவித கலவரமும் இல்லாமல் போராட்டம் நடத்துவதற்க்கு எத்தனை எதிர்ப்புக்கள். நீதி மன்றத்துக்குள் வெடிகுண்டு இருப்பதாக சொல்லி சென்னையில் சட்ட கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தை கலைக்க முயற்சி செய்தனர். ஆனால் பயன் இல்லை போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. போலீசார் படத்தில் வருவது போல மாணவர்கள் மீது தடியடி.. இப்படி பல வகையில் ஜெயலலிதாவின் அரசாங்கம் தன் இன மக்களுக்கு ஆதரவாக போராடும் போராட்டத்துக்கு எந்த விதத்தில் ஆதரவினை கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு ஆதரவினை வழங்க்கியவண்ணம் இருக்கின்றது..(விட்டா கிறுக்கன் ஆக்கீடுவாங்க போல...!!) ஆனால் கலைக்கிழவன் 'கருணாநிதி'யின் அரசாங்கம் செய்த உதவிக்கு ஜெயலலிதாவின் அரசாங்கம் செய்த உதவியாவது ஓரளவுக்கு பொறுத்துக்கொள்ளும் அளவிலான உதவியாகும்....!!!!!


போராடும் புனித உறவுகள்...!!!

போராட்டம் நடக்கும் இடத்துக்கு எந்த அரசியல் கட்சிகளை சேர்ந்த கடைநிலை ஊழியனை கூட மாணவர்கள் எவரும் அனுமதிக்கவில்லை. அரசியலும் அரசியல்வாதிகளையும் நம்பி எந்த பயனும் இல்லை என்று இலங்கை பிரச்சனையில் உணர்த அவர்கள் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டனர். ஒரு சில இடத்தில் சுத்த தமிழன், பேச்சு பீரங்கி, கொள்கைப்புயல் "சீமான்" அவர்களையே அனுமதிக்கவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். உண்ணாவிரதம்... உண்ணாவிரதாமாக நின்றுவிடாமல் மதுரையில் நேற்று ஒருவர் தீக்குளித்து உயிர்துறந்துள்ளார். யார் என்றே அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் முழுதும் கருகியிருக்கிறது. அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கி தீ வைத்து கொண்டே ஈழ தமிழ் மக்களை காப்பாற்றுங்கள் என்று அலறியபடியே இறந்துள்ளாராம்... திரைப்படங்களில் வருவதுபோல் பெரும்புள்ளிகளின் சதிவேலையால்தான் அப்பாவிகள் இவ்வாறு தீக்குளிக்கப்படுகின்றனரா? என்னவென்றே புரியவில்லை.... அரசியல் குரங்குகள் நடத்தும் போலிப்போராட்டங்களினால் உண்மை எது அரசியல்(பொய்) எது என்று குழப்பமான நிலையில்... மாணவனாக இருந்தாலும் சரி இல்லையே அரசியல் கட்சியின் தீக்குளிப்பு பினாமியாக இருந்தாலும் சரி... எம் மக்களுக்காக விடப்பட்ட உயிர் அதுக்கான சகல மரியாதைகளையும் வழங்க வேண்டும்...!!!


தமிழனுக்கு தைரியம் யாஸ்த்தி...!!!

இவ்வாறு யார் என்றே தெரியாதா அன்பு உள்ளங்கள் போராடிக்கொண்டு இருக்கும் போது.. இங்கு நாம என்ன பேசிக்கொண்டு இருக்கின்றோம்... 'கொய்யாலே எம்மாம்பெரிய ரன் வே...' ஆமா உ(அவ)ன் பொண்டாடியை கூடீட்டு தானே ஓட போறாய்... இது கூட பறவாயில்லை இங்கு இருக்கும் தமிழ் வானொலி ஒன்று... வானொலி என்றாலே அந்த வானொலி தானாமில்லே..!!! அவர்கள் நேற்று விடியும் போதே கொடுத்த அலப்பறை என்னவென்றால் "நாட்டின் முன்னேற்றத்துக்கு நாம என்ன பண்ண வேண்டும்..??" ஆமா... ஆமா... பயபுள்ளை நீங்க எதுவும் பேசலாம் ஏன்னா உள்ள அம்புட்டும் ஏ.சி வெளிய வந்து நின்னு முப்பத்திரெண்டு செல்சியசில் அடிக்கும் வெயிலில நின்னு ஒருக்கா வீட்டை பத்தி யோசியுங்கோ அப்புறம் நாட்டை பத்தி யோசிக்கலாம்... தலைப்பு கொடுக்குறாங்கலாமில்ல... தலைப்பு..!!! சரி நீங்க சொல்லுவது போல நாட்டின் அபிவிருத்திக்கு நாலு ஐந்து (இந்த நாட்டுக்கு அம்புட்டு யோசனைதான் கொடுக்கலாம்...) யோசனை கொடுத்தால் மட்டும் என்ன உடனையே அவாடா கொடுக்க போறாங்க... நித்திரையால் எழும்பி ரேடியோவை போட்டால் அபிவிருத்தியாம்... கடையில காக்கிலோ மூணு ரூபாக்கு கிடைக்குதாம் வாங்கிக்க சொல்லுங்க... இங்க இப்ப அது ஒண்ணுதான் விலை குறைவாம்..!!! யோ.. கைல எதுனாத்தையும் கொடுத்த உம்ம இஸ்டத்துக்கு எதுனாத்தும் பேசீடுவீரோ..??? இதுக்குதான் அந்த பெரிய மனுஷன் இருக்கணும்... அந்தாளுக்கு நாக்கில சனி... 

முந்தி ஒரு காலம் உருப்படியாக உண்மைகளை தெளிவாக சொல்லிக்கொண்டு இருந்த காலை நேர நிகழ்ச்சி ஏன் இப்படி புஸ் பிடித்த புண்ணாக்கு ஆனது..?? ஓஓ அதுக்குதான் அந்த பெரிய மனுஷன் வேணும என்று சொல்லுறது... இபோதைக்கு அந்த வானொலியில் அந்த (பெரிய)மனுஷன் எடுத்துக்கொடுத்த பேரு மட்டும்தான் மிச்சம் இருக்கு... அதையும் எப்ப மாத்த போறாங்களோ..!!! ஒண்ணுத்துக்கும் யோசிக்காதீங்க அண்ணே... அப்டி அவீங்க அந்த பேரை மாத்தினால் நீங்கள் அடுத்ததாக வேலை செய்ய இருக்கும் புதிய வானொலிக்கு அந்த பேரையே வைத்து விடுங்கோவன்...!!! இது எல்லாம் என்ன நம்மளுக்கு புதுசா என்ன???(விடுடா சூனா.பானா... நீ பாக்காதா அடியா? ஆ..ஆ..ஆ.. யாரும் பார்க்கலை கெத்த போடா..போ...ம்ம்ம்...ம்ம்ம்...!!!)

இப்ப அண்ணே என்ன சொல்லுதுன்னா கவனமா கேட்டுக்கணும்... இந்த அண்ணே சொல்லுர யோசனைக்கும் அந்த அண்ணே சொன்ன யோசனைக்கும் என்ன வித்தியாசம்னு நீங்களே பாருங்களேன்.... ///....உண்ணாவிரதம், பகிஸ்கரிப்பு, தீக்குளிப்பு இவை யாவுமே சாமானியர்களால் சாதாரணமாக செய்துவிடக் கூடிய இலகுவான விடயங்கள் அல்ல. ஆனால் ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்த அரிய தியாகங்கள் வீண் விரயமாகிவிடும் எங்கள் அன்புக்குரிய தமிழக உறவுகளே.. மனசாட்சிக்கே பயப்படாத 2/3 ஐயும் தாண்டிய ஒரு மாபெரும் பெரும்பான்மை சக்தி உலகின் எந்தவொரு அழுத்தத்தையும் அசட்டை செய்துவந்த/வரும் வரலாறைக் கண்டுள்ளோம். விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவது உண்மையில் மிகப் பெரிய சேவை. ஆனால் அநியாயமாக உயிர்களை மாய்க்கும் முயற்சியில் இறங்காதீர்கள். உணர்ச்சிவயப்படலை விட நிலை, காலம் உணர்ந்து சாதுரியமாகவும் காலம் சார்ந்த திட்டமிடலுடனும் செய்யப்படும் முயற்சிகளே நீண்ட காலத்திலாவது வெற்றியைத் தரும்..../// கருத்து சொன்ன ரெண்டு அண்ணே மாறும் பெரிய மனுசங்கதான் (உடம்பில) ஆனால் இந்த அண்ணே பொய் சொல்லாது ஏன்னா வடிவேலு சொல்லி இருக்காரு சிகப்பா இருக்குறவங்க பொய் சொல்ல மாட்டாங்கன்னு..!!!

அண்டைக்கு 'பரா'சக்தி... இன்னைக்கு 'பல்ட்டியே'சக்தி...!!!

இந்த அளவுக்கு இந்திய, தமிழக அரசியல் எம்மிடத்தில் மிகுந்த கவனத்துடத்துடனும், அக்கறையுடனும் இருக்கும் போது நாங்கள் என்ன செய்யவேண்டும்..??? இப்படியான அரசாங்கத்து மத்தியில் எந்த ஒரு எதிர்பார்ப்புமே இல்லாமல் தன் இன மக்கள் என்ற ஒரே காரணத்துக்காக உண்ணாவிரதம், போராட்டம், தீக்குளிப்பு என்று நெஞ்சை குழைய வைக்கும் போராட்டங்கள்.. நடந்துகொண்டிருக்கும் போது இங்கு இருக்கும் நீங்கள்/இவர்கள்/நாங்கள் என்ன செய்ய வேண்டும்... ஒண்ணு அவர்களுக்கு வெளிப்படையாக ஆதரவினை கொடுக்க வேண்டும், இல்லை ஆதரவு கொடுக்கின்றோம் என்று சொன்னால் 'டும்' ஆகீடுமா? அப்ப நவத்துவாரங்களையும் மூடிக்கொண்டு இருக்கணும்... வந்தமா... காலமை விடிய "பேப்பர் பாய்" வானொலியில் நாலு நக்கல் விட்டமா... நல்ல கில்மா சோங்ஸ் போட்டமா என்று கிளம்பி இருக்கணும்.. அதை விட்டுட்டு என்னமோ எகிருறாய்..??? ஆமா ஆமா பயபுள்ளைக்கு நாட்டில பாயாசம் ரம்பா(ரம்பா இல்லை ரொம்ப) அதிகம்..!!! அட போங்கடா நீங்களும் உங்க நாட்டு பற்றும்..!!!

இப்பவாச்சும் சேர்துகிட்டமே...!!!

இந்த/எந்த போராட்டங்களாலும் எந்த மனதை குளிர வைக்கும் தீர்வு எதுவும் எட்டப்பட போவதில்லை... அதுக்காக அந்த நல்ல உள்ளங்கள் செய்யும் இந்த உரிமைப்போராட்டத்தை குறை சொல்ல முடியாது. இந்த போராட்டம் வலியுறுத்தி நிற்பது 'எங்கை இருக்கும் தமிழனுக்கும் அடித்தால் ஓட்டு மொத்த தமிழனும் ஒன்று சேருவான்.." என்பதுதான்...!!! ஒற்றுமை என்பது மிகவும் முக்கியமானது... அது இவ்வ்வ்வ்வளவு காலம் தாழ்த்தி சேர்ந்து இருப்பது மிகவும் சந்தோஷமாக விடையமாகும்.. இவ்வாறு எமக்கா செய்யும் அவர்களுக்கு என்ன கைமாறு செய்ய போகின்றோம்..??? வெருமனையே நன்றிகளை மட்டும் சொல்லி விட முடியாது... நன்றிக்கு மேல் ஏதும் வார்த்தைகள் இருந்தால் அந்த வார்த்தையை அவர்களுக்காக ஆயிரம் தடவை உரக்க சொல்லலாம்...!!! எங்களுக்காக யாரும் இல்லை என்ற நிலைமை மாற்றி நாம் இருக்கின்றோம் என்று குரல் கொடுத்தார்கள்.. நேற்றுடன் உயிரும் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்... எதிர்ப்பை காட்டலாம் உயிர் கொடுப்பது வேண்டாம்... ஒரு உயிரின் மதிப்பு எம் தேசத்தில் பிறந்த பச்சைக்குழந்தைக்கும் நன்கு தெரியும்... உயிரை கூட கொடுக்க ஒரு சமூகம் எமக்காக இருக்கு என்னும் போது... பெருமையாக இருக்கின்றது... போன உயிர்கள் போதும் இனியும் இழப்புக்கள் வேண்டாம்... எமக்காக போனவை போதும் இனியும் போக வேண்டாம்...!!!

இது எனது தமிழ் உறவுகளுக்கான தாழ்மையான வேண்டுகோள்...!!! இந்த இளையவனின் வேண்டுகோளையும் கொஞ்சம் செவி சாயுங்களேன்...!!!

 உணர்ச்சிவசப்படலை விட நிலை, காலம் உணர்ந்து சாதுரியமாகவும் காலம் சார்ந்த திட்டமிடலுடனும் செய்யப்படும் முயற்சிகளே நீண்ட காலத்திலாவது வெற்றியைத் தரும்...!!!

Post Comment

No comments:

Post a Comment