Sunday, March 24, 2013

தனி ஈழ நாடு கோரி "சூப்பர்ஸ்டார்" ரஜினிகாந்த் இமயமலைக்கு பாத யாத்திரை..!!!

பதிவும், பதிவில் தொடர இருக்கும் கருத்துக்களும் மிகவும் கவனிக்கப்பட வேண்டியது என்பதால் பதிவினை இரண்டாக பிரித்து பதிவிட உள்ளேன். முதல் பாதியிலேயே சினிமா கோமாளிகளை (ஓட்டு மொத்தமாக எல்லா நடிகர்களும்..) பற்றி எழுதுவதை விட... இந்த பிரச்சனையின் தோற்றம் பற்றி கொஞ்சம் சுருக்கமாக பார்த்து விட்டு... இந்த போராட்டத்துக்காக கோமாளிகளின் பங்களிப்பினை பற்றி விளக்கமாக பாப்போம்..!!!
ஏதோ எனக்கு தெரிந்த அரசியல் அறிவினை??? கொண்டு எழுதியுள்ளேன்.. ஏதும் பிழை இருப்பின் இளையவனை மன்னித்துக்கொள்ளவும்..!!!ஆரம்பித்து வைத்ததும் டெல்லி அரசாங்கம் முடித்துவைப்பதாக மோசடி செய்ததும் அதே அரசாங்கம்தான்...!!! ஓட்டு மொத்த போராட்டங்களின் முன்னதாகவும் இந்தியாவில் ஆரம்பிக்க பட்ட ஒரு போடட்டமே.. தனி தமிழ்நாடு நாடு வேண்டிய போராட்டம்...!!!

இப்பொழுது சில நாட்களாக தமிழக மக்கள் மத்தியில் தனி தமிழ்நாடு குறித்து பேசபடுகிறது.அதற்கு பலரால் பல காரணங்கள் கூறபடுகிறது.அவற்றில் நியாயம் இல்லாமலும் இல்லை.இது ஒன்றும் இப்போது மேலெழும்பும் கோரிக்கை அல்ல....பெரியார்,அண்ணா காலத்திலேயே தனி திராவிட நாட்டு கோரிக்கை முன்வைக்கபட்டு தமிழகத்தின் பரவலான ஆதரவுடன் அண்ணா தலைமையிலான தி.மு.க ஆட்சி அமைக்கவும் வழி கோலியது.தனி நாட்டு கோரிக்கையுடன் அரசியல் கட்சிகள் தேர்தல் அரசியலில் ஈடுபட முடியாது என்ற சட்டங்களால் தனி நாட்டுக்கான கோரிக்கை சுயாட்சி கோரிக்கையாக மாற்றபட்டது.அப்போது அண்ணா கூறிய வார்த்தைகள் தனி நாட்டு கோரிக்கையை கைவிடுகிறோம் ஆனால் தனி நாட்டுக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்று கூறி முடித்து வைத்தார்.அப்பொழுது தனி நாட்டுக்கான கோரிக்கைகள் மக்கள் மத்தியில் ஆதரவை பெற காரணமாக இருந்த முக்கியமான காரணம் ஹிந்தி தணிப்பு.சரி விடயத்துக்கு வருவோம்.ஹிந்தி திணிப்புக்கே தனி நாடு கோரிய தமிழன் இப்போது அதைவிட பலமான காரணங்கள் இருக்கும்போது தனி நாட்டு கோரிக்கைகளை மீண்டும் பேச ஆரம்பித்துள்ளான்.இப்போது தனி நாட்டுக்கான கோரிக்கைகள் எழ முக்கிய காரணங்கள், இலங்கை அரசின் ஈழ படுகொலைகளும் அதை தடுக்கமால் வேடிக்கை பார்த்தது மட்டுமல்லாமல் உலக ரீதியில் இலங்கையை காப்பாற்றும் முக்கிய சக்தியாக இந்திய இருக்கிறது.இதை எந்த தமிழனாலும் சகித்து கொள்ள முடியாது அடுத்து தமிழக மீனவர் படுகொலைகள், மலையாளி மீனவன் ஒருப்வனின் உயிருக்காக சர்வ வல்லமை பொருந்திய இத்தாலியை தூதரக உறவை துண்டித்து விடுவோம் என்று கூறி பணிய வைத்து குற்றவாளிகளை மீள அழைக்கும் இந்திய அரசு அறுநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவன் கொல்லபட்டும் ஒரு கண்டனம் கூட தெரிவிக்காமல ஐ.நா வில் இலங்கைக்கு வாழ்த்தும் இலங்கை எம் நட்பு நாடு என்று கூறிக்கொண்டு இருக்கிறது.ஈழத்தை அமைக்க பொது வாக்கெடுப்பு எடுக்க கோரிய மாணவர் போராட்டங்களைகூட உளவுத்துறையின் அழுத்தத்துக்கு இணங்க அமெரிக்க தீர்மானத்துக்கு ஆதரவான போராட்டம் என்றே பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிட்டன....இணையம் வந்துவிட்ட காலத்தில் தமிழனை தொடர்ந்து முட்டாளாக வைத்திருக்க இந்திய வல்லதிக்கதால் கண்டிப்பாக முடியாது.சேனல் 4 வெளியிட்ட ஈழ படுகொலை காணொளிகளை இணையத்தில் பார்வையிட்ட பல தமிழக மக்களும் எழுப்பும் கேள்வி இந்த படுகொலைகள் எல்லாம் ஈழத்திலா நடந்தது.எமக்கு எதுவுமே தெரியாதே.நாற்பது கிலோமீட்டர் கடலால் பிரிக்கபட்டு வாழும் சகோதர உறவுகளின் இனபடுகொளைகளை கூட தமிழக மக்களுக்கு தெரியாமல் மறைத்து வைத்தது இந்திய தமிழ் விரோதிகளின் மாபெரும் சதி என்பது தமிழன் உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மை.


சரி இதற்கெல்லாம் என்ன தான் தீர்வு? மேலே கூறியது போல சிலர் சொல்லும் தனி தமிழ்நாடு தீர்வகிவிடுமா? அது சாத்தியமா? என்பதை சற்று விரிவாக பார்ப்போம்.
இதற்கு நான் கூறுவது இரண்டு தீர்வுகளும் அவை பற்றியும் சற்று விரிவாக பார்ப்போம்....


1, தமிழன் சுயமரியாதையுடன சுயாட்சி பெற்று இந்தியாவின் ஒரு பலம்வாய்ந்த சக்தியாக வாழ்வது. அதுபோல ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு தனிநாடு பெற்று கொடுப்பது. இதன்மூலம் ஏனைய இந்தியர்களுக்கு சற்றும் குறையதவனாக எல்லோராலும் மதிக்கபடுபவனாக இந்தியாவுடன் இணைந்து இருக்க முடியும். இதற்கு முதல்கட்டமாக நாம் போராடி இந்தியாவை பணியவைத்து ஈழத்தில் தமிழர்களுக்கு ஒரு தனி நாட்டை பெற்று கொடுப்பதன் மூலம் இந்திய தமிழர்களின் நம்பிக்கையை பெற முடியும். அதன் பின்னர் தமிழ்நாட்டில் ஒரு சுயாட்சி அமைப்பை பெற்று எம் இன,மொழியை பாதுகாத்து ஒரு பலம்வாய்ந்த சக்தியாக இந்தியாவுடன் வாழ முடியும். ஈழம் தனி நாடகினால் அது தமிழ்நாடுக்கும் ஒரு பக்கபலமான நாடக இருக்கும். எனவே இவற்றை செயற்படுத்தும் போராட்டங்களை நாம் தீவிரபடுத்த வேண்டும்.

சரி எங்கள் போராட்டம் எல்லாம் தோல்வியடைந்து தொடர்ந்து ஈழ மக்கள் இந்தியாவின் துணையுடன் அடிமையாக வாழ்வது தொடர்ந்து...தமிழக மீனவன் தாக்கபடுவது தொடர்ந்து.எங்கள் கோரிக்கைகளை போராட்டங்களை இந்திய நிராகரிக்குமானால் நாம் விரும்பியோ விரும்பாமலோ செல்லவேண்டியது இரண்டாவது தெரிவு.

2, தனி நாடக பிரிந்து செல்வது. தனி நாடக பிரிந்து செல்வதெல்லாம் அவளவு இலகுவான விடயம் அல்ல. அனால் ஈழத்தை காத்து, தமிழக மீனவனை காத்து, உலகத்தில் தமிழ் இனத்தை தொடர்ந்து மானமுள்ள இனமாக வாழ வைக்க அது ஒன்றே நமக்குள்ள இறுதி தெரிவாக இருக்கும். தனி தமிழகத்துக்கான போராடம் என்பது இந்தியாவால் கொடுமையான அடக்குமுறைகளை எதிர்கொள்ளும் ஒரு வலிமிகு போராட்டமாகவே இருக்கும். அவற்றை எதிர்கொள்ள முடியாத காரணத்தால் தான் அண்ணாதுரை தனி நடுக்கண காரணங்கள் அப்படியே இருக்கின்றது என்று கூறிய போதும் தனி நாட்டு கோரிக்கையை கைவிட்டார். வலிகள், தியாகங்கள்,அடக்குமுறைகள் இழப்புக்கள் இவற்றையல்லாம் கடந்து தான் ஒரு போராட்டம் விடுதலையை வென்று எடுக்க முடியும். இழப்புக்களுக்கும் அஞ்சியும் தியாகத்துக்கு பின்னின்றும் வாழும் ஒரு இனத்தால் நிச்சயமாக விடுதலையை வேன்றேடுக்க முடியாது. இந்திய வல்லதிக்கதிடம் இருந்து பிரிந்து சென்று தனி நாடு அமைப்பது என்பது மிகுந்த சவால் மிக்கதாகவே இருக்கும். பாகிஸ்தானின் நேரடியான ஆதரவுடனும் வேறுபல சக்திகளின் தார்மிக ஆதரவுடனும் போராடும் கஷ்மீர் இன்னமும் தனது விடுதலையை வென்றெடுக்க முடியவில்லை. அனால் நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது அறுபது வருடங்களாகியும் தங்கள் விடுதலையில் உறுதியுடன் போடும் அவர்களின் தன்னம்பிக்கையை தான். விடுதலையை வென்று எடுக்கும் போராட்டத்தில் நாம் இறங்கிவிட்டால் எமக்கு புதிய எதிரிகளும் புதிய நண்பர்களும் உருவாகுவார்கள். தர்மதுடனும்,நேர்மையுடனும் ஜாதி,மதங்களை தூக்கி வீசிவிட்டு புரட்சியில் இறங்க வேண்டும். இழக்கும் பாதையும் சரியாக அமைக்கபட்டால் என்றோ ஒருநாள் நமது விடுதலை சாத்தியப்படும்...அதுவே ஈழத்தின் விடுதலைக்கும் உலக தமிழரின் எழுச்சிக்கும் வழிவகுக்கும்.


இறுதியாக டில்லிக்கு நாம் உரத்து சொல்ல வேண்டியது தமிழன் உன்னுடன் இணைந்து வாழ வேண்டுமா...இல்லை பிரிந்து செல்ல வேண்டுமா நீயே முடிவு செய்துகொள்... (தகவல்களுக்கு உதவிய 
Raj kumar நன்றி..!!)இப்படியான ஒரு தனிநாட்டுக்கொள்கை ஆரம்பத்திலேயே முன்வைக்கப்பட்டது இங்கு இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்திய தமிழ் நாட்டும் மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள், போராட்டங்கள் அனைத்தும் நியாயமானதாகவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும் மத்திய அரசாங்கம் இதனை அறிந்தது போலவோ, இப்படி ஒரு பிரச்சனை இருப்பது போலவோ காட்டிக்கொள்ள மாட்டார்கள்... ஏன் என்றால் அப்படி காட்டிக்கொள்ளும் பட்சத்தில் தனி தமிழ்நாட்டு கோரிக்கைக்கு தீர்வு கூற வேண்டி வந்துவிடும் என்பதற்காக இப்படி ஒரு வெளி வேசம் போடுகின்றது. டெல்லி அரசாங்கள் வைக்கோல் பட்டறை நாய் போன்றது ஏன் என்றால் அவர்கள் தன் நாட்டுக்குள்ளும் தனி நாடு கொடுக்க மாட்டார்கள் மற்ற நாட்டுக்கும் கொடுக்க விட மாட்டார்கள். இந்த பிரச்சனை என்றோ முடித்து வைத்திருக்கப்பட வேண்டி பிரச்சனை ஆனால் இன்னும் அது தொடரக்காரணம் என்னவோ டெல்லி தான்..???

ஆரம்ப காலத்தில் இலங்கையில் சிங்கள தமிழ் கலவரத்தை தானே தூண்டி... தமிழ் மக்களின் வாய்வுக்கு அச்சத்தை கொடுத்து விட்டு; அதனை மீட்டு எடுப்பதுக்காக போராட்ட இயக்கங்களை உருவாக்குவது போல ஒன்று அல்ல ரெண்டு அல்ல ஆறுக்கு மேற்பட்ட இயக்கங்களை உருவாக்கி, ஆயுத பயிற்சி வழங்கி இலங்கை எப்பவும் ஒரு பிரச்னையில் இருந்தால் தன் நாட்டில் அந்த நெருப்பில் குளிர் காயலாம் என்று இலங்கையில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை பிள்ளையார் சுழி போட்டு நன்கே ஆரம்பித்து வைத்தது. காலப்போக்கில் டெல்லியின் நினைப்புகள் எல்லாவற்றையும் தவிடு போடியாகினான் ஒருவன்...(...???...) கூட இருந்த சக இயக்கங்களை தங்களுடன் இணையுமாறு கோரிக்கை வைத்தான்... அதை ஏற்க மறுத்த அனைத்து சக இயக்கங்களையும் முகவரி இல்லாமல் ஆக்கப்பட்டது. இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத டெல்லி அவர்களை முழுதாக அளிப்பதுக்காக இலங்கைக்கே வந்து விட்டார்கள். இவர்களின் வருகை தமிழ் போராளிகளுக்கு பெரும் பின்னடைவாக இருந்தாலும், சமாளித்தார்கள்.வந்தவர்கள்... இலங்கை நாடும், இலங்கை மக்களும் குறிப்பாக அழகான பெண்களும் பிடித்துப்போக திரும்ப தங்கள் நாட்டுக்கு போக மனம் கொடுக்கவில்லை. இங்கையே தங்க முடிவு செய்து விட்டார்கள். இந்த கொடுமை தாங்க முடியாமல் பிரேமதாஸவின் அரசாங்கம் தமிழ் போராளிகளின் உதவியை நாடி... டெல்லியின் கைப்பிள்ளைகளை குளற குளற தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்... பிறகு மீண்டும் டெல்லி இரட்டை வேடம் போடா ஆரம்பித்தது. மறுபடியும் போராளிகளுக்கு ஆயுதங்களை கொடுத்து முழுமையாக வளர்ப்பது போல வளர்த்து சரியான சமயம் பார்த்து தனது அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இறுதிக்கட்ட போரை தொடங்க வைத்து முள்ளிவாய்க்காலில் எண்ணில் அடங்காத போர் குற்றங்களுக்கு மத்தியில் போட்ட நாடகத்தை முடித்து வைத்தது. என்னத்தை முடித்து வைத்தாலும் எங்காவது ஒரு சின்ன பிழை இருந்தாகத்தானே வேண்டும். போர் குற்றங்கள் காணொளிகளாக வெளிவர ஆரம்பித்தது. 

இந்த காணொளிகளை பார்த்ததும் டெல்லிக்கு மூச்சு அடைத்து விட்டது. இந்த அரசு சிக்கிக்கொண்டால் சர்வதேசத்தில் தன்னுடைய டெல்லி அரசும் சகயமாக மாட்டிக்கொள்ளும் என்ற பயமும் ஒரு பக்கம்... தமிழக சகோதரங்களின் போராட்டங்களுக்கு ஈடு கொடுத்து அரசியல் கருத்துகளை கூற முடியாமல் திணறும் தறுவாயில்.. வாக்களிப்பை இலங்கை அரசுக்கு எதிராக வழங்கியதாக... முடிவானது. ஆனால் உண்மை என்ன என்றால் இலங்கை அரசுக்கு எதிராக வாக்களித்தது என்னவோ உண்மைதான். ஆனால் மீண்டும் அமேரிக்காவின் காலில் விழுந்து டெல்லி அழுது ஒப்பாரி வைத்து ஒரு வருட தவணை அதுதான்... உள்ளக விசாரணை என்ற ஒரு முடிவுக்கு வந்தது. உள்ளக விசாரணை என்றால் இங்கு இலங்கையில் குற்றம் சாட்டப்பட்டது போல எந்தவிதமான போர்க்குற்றங்களும் இடம்பெறவில்லை என்று நிரூபிக்க வேண்டும்... அதுக்கான ஒரு ஆண்டு தவனைதான் இந்த தவணை... ஆனால் இந்த முறை அமேரிக்கா முன்வைக்க இருந்த தீர்மானம் என்ன என்று தெரியுமா???இதுக்கு முன்னமும் ஒரு முறை உள்ளக விசாரணைக்கு ஒப்பான ஒரு சந்தர்பத்தை இலங்கை அரசுக்கு வழக்கிய போதும் எந்த முடிவும் அவர்களால் எட்டப்படாத நிலையில் இந்த முறை தீர்மானத்தில் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை முன்வைக்க இருந்தது.. சர்வதேச விசாரணை என்றால்... இந்த போர் குற்றங்கள் பற்றி சர்வதேச நாடுகள் விசாரிக்கும்.. இந்த விசாரணை குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில்... இந்த போர் குற்றங்கள் ஒரு இன அழிப்பின் கீழ் கொண்டுவரப்படும்.. இன அழிப்பு இடம்பெற்ற நாடில் தமிழ் மக்களிடையே ஒரு வாக்கெடுப்பு செய்யப்படும்.. அதாவது இதன் பின்னும் சேர்ந்து இருக்க விரும்புகின்றார்களா? இல்லை பிரிந்துபோக விரும்புகின்றார்களா? என்பதே.. இந்த வாக்கெடுப்புக்கு இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள், இலங்கையை விட்டு 1987 ஆம் ஆண்டுக்கு பின்னர் யுத்தம் காரணமாக வெளிநாடு போனவர்களும் வாக்களிக்கலாம். ஈற்றில் மக்கள் தனியே செல்ல விரும்பும் பட்சத்தில் உலக நாடுகளால்... நாடு பிரித்து வழங்கப்படும்...!!! இந்த இன அழிப்பு..???, இயக்க அழிப்பு, அடிமைத்தனம் என்பன எவ்வாறு மிகவும் தத்துரூபமாக திட்டமிடப்பட்டு குறிப்பிட்ட நாடுகளின் ஆதரவுடன் செய்து முடிக்கப்பட்டதோ அதே போல... இந்த தனி நாட்டு கோரிக்கையும் நீண்ட கால திட்டமே..!!!

இப்படியான ஒரு தீர்மானத்தையே இந்த முறை வியாபார முதலாளி அமெரிக்காக கொண்டுவர இருந்தது... ஆனால் டெல்லிக்கு நன்கு தெரியும் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டால் தனது குரல்வளையும் நேரிக்கப்படும், தன் நாட்டிலும் தனி நாட்டு கோரிக்கைகள், போராட்டங்கள் முன்வைக்கப்படும் என்று பயத்து இலங்கை அரசுக்கு எதிராக வாக்கினை கொடுப்பது போல கொடுத்துவிட்டு அமெரிக்காவிடம் அழுது ஒரு வழியாக சர்வதேச விசாரணையை தள்ளி வைத்துவிட்டது... ஒரு வழியாக தமிழக மாணவர்களின் போராட்டத்துக்கு மதிப்பு கொடுப்பது போல வாக்கினை அழித்துவிட்டு மறைமுகமாக தனக்கு சாதகமான காய் நகர்வுகை செய்து கொண்டுதான் இருக்கின்றது... இதனை நினைக்கும் போது பூனை பால் குடிக்கும் போது கண்களை மூடிக்கொண்டு குடிக்குமாம் ஏன் என்றால் யாருக்கும் தெரியக்கூடாது என்று..!!! சர்வதேச விசாரணையை தள்ளி வைக்க மட்டும்தான் முடியும் நடந்த போர் குற்றங்களை இல்லாது ஒழிக்கவோ, மறைக்கவோ முடியாது... நீருக்கும் அமிழ்த்திய பந்து எப்படி என்றாலும் வெளியே வந்துதானே ஆக வேண்டும்...!!! எந்த தாக்கத்துக்கும் சமனும் எதிருமான மறு தாக்கம் உண்டு.. என்பது போல.. இதுக்கான தீர்வும் வெகு விரைவில் எட்டப்படும்.. அதுக்காக வழிமுறைகளையும் யார் யார் இதற்கு துணை நிற்க வேண்டும் என்பதையும் தொடர்ந்துவரும் பதிவில் பாப்போம்..!!! இந்த பதிவினை வாசித்தமைக்கு நன்றி... வரும் பதிவினையும் தொடர்ந்து வாசியுங்கள்..!!!

பதிவுகளும் தொடரும்... இந்த பதிவும் தொடரும்..!!!

Post Comment

2 comments:

 1. ஆரம்ப காலத்தில் இலங்கையில் சிங்கள தமிழ் கலவரத்தை தானே தூண்டி... தமிழ் மக்களின் வாய்வுக்கு அச்சத்தை கொடுத்து விட்டு; அதனை மீட்டு எடுப்பதுக்காக போராட்ட இயக்கங்களை உருவாக்குவது போல ஒன்று அல்ல ரெண்டு அல்ல ஆறுக்கு மேற்பட்ட இயக்கங்களை உருவாக்கி, ஆயுத பயிற்சி வழங்கி இலங்கை எப்பவும் ஒரு பிரச்னையில் இருந்தால் தன் நாட்டில் அந்த நெருப்பில் குளிர் காயலாம் என்று இலங்கையில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை பிள்ளையார் சுழி போட்டு நன்கே ஆரம்பித்து வைத்தது. //

  இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டால் தனது குரல்வளையும் நேரிக்கப்படும், தன் நாட்டிலும் தனி நாட்டு கோரிக்கைகள், போராட்டங்கள் முன்வைக்கப்படும் என்று பயத்து இலங்கை அரசுக்கு எதிராக வாக்கினை கொடுப்பது போல கொடுத்துவிட்டு அமெரிக்காவிடம் அழுது ஒரு வழியாக சர்வதேச விசாரணையை தள்ளி வைத்துவிட்டது...

  பார்ட் 2 விற்காக வெயிட்டிங்க்

  ReplyDelete
  Replies
  1. போட்டுட்டால் போச்சு...!!!
   வருகைக்கு நன்றி சகோ...!!!!

   Delete