Wednesday, March 27, 2013

"சூப்பர்ஸ்டார்" ரஜினிகாந்த் உட்பட நான்கு முக்கிய நடிகர்களுக்கு திடீர் மாரடைப்பு..!!!

இந்த பதிவு முன்னர் எழுதிய பதிவின் தொடர்ச்சியாகும். அதுக்காக முதல் பதிவு வாசித்தால்தான் இந்த பதிவு விளங்கும்... என்று கதை விட நான் என்ன "உலக நாயகனா???" இந்த பதிவு முழுக்க முழுக்க எல்லா நடிகர்களையும் ஒரு கை!!! பார்க்கும் நக்கல் பதிவு... நடிகர்களில் அதிக விருப்பம்... தீ(விர) ரசிகர்கள்... யாரும் இந்த பதிவினை அதிக சிரத்தை எடுத்து வாசிக்க வேண்டாம்... மாறாக வாசித்து விட்டு... "தேனா...மானா..." என்று எல்லாம் பின்னூட்டல்களை இட வேண்டாம்... பின்பு நடப்பவற்றுக்கு கம்பனி பொறுப்புக்கிடையாது என்பதை பதிவின் தொடக்கத்திலேயே கூறிவிடுகின்றேன்... சரி கமலஹாசனை போல கனக்க(அலம்பாமல்) கதைக்காமல் பதிவுக்குள் போவோம்..!!! 

இத்தனை மாணவ செல்வங்கள் பட்டினி போராட்டம் நடத்தியும் நடிர்களின் இன்னும் ஒரு நாய் கூட பெரிதாக முன் வரவல்லை என்பது சிந்திக்க வேண்டிய விஷயம்... சிந்திக்க வேண்டிய விடயம் மட்டும் இல்லை... உரிமையுடன் கேட்க வேண்டிய விடயம்... ஒரு படம் வெளிவரும் போது எப்படி எல்லாம் மைக் முன்னாடி வந்து "என்னை வாழவைக்கும் செல்வங்களே.." என்று கும்பிடு போட முடியுதோ... அதைப்போல ரசிகனும் அவர்களை பார்த்து கேட்கும் உரிமை இருக்கத்தானே... வேண்டும்... இல்லையேல் இது சர்வாதிகார தமிழ் சினிமா உலகமா? "கூப்பிடுறா சாலமன் பாப்பையாவை பட்டிமன்றம் வைத்து பைசல் பண்ணீடுவம்..."

இன்னும் எங்கள்,உங்கள் சுப்பர் ஸ்டார் என்று சொல்லி கொண்டு திரியும் மாணவ செல்வங்களே.... நீங்கள் போராட்டம் நடத்துறீங்க ஆனால் உங்க தலீவன் என்ன செய்யுறார் தெரியுமா? பத்திரிகை நண்பர்களை அழைத்து 'குட்டிக்கதை; சொல்கின்றார்... அதுதாங்க பேட்டி கொடுக்குறார். என்னான்னு கொஞ்சம் பார்பமே..!!! மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடையே நடிகர் சஞ்சய் தத்திற்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டதற்கு ரஜினியின் கருத்து :- "எனது அன்பான அருமையான நண்பருக்கு இந்தத் தீர்ப்பு கிடைத்ததை அறிந்து மிகவும் வருத்தப்பட்டேன். அவரை மன்னித்து விடுதலை செய்ய பலர் போராடுவது நம்பிக்கையூட்டுகிறது. அவர் மீதமுள்ள வாழ்க்கையை நிம்மதியாக செலவழிக்க கடவுளிடம் நான் பிராத்திக்கிறேன்...!!!" இதெல்லாம் அரசியலில சாதாரணம் அப்பா..!! அது சரி இவர்தான் அரசியலுக்கு வருவாரோ மாட்டாரோ என்று ஒரு புரளியை கிளப்பி விட்டவர் ஆச்சே.. நம்மாளுக்கு இது எல்லாம் "கண்ணா சும்மா அல்வா சாப்புடுற மாதிரி" சும்மா தலீவர் ஸ்டைல்ல சொன்னமில்லே...!!!

நீ உலக மகாநடிகன்டா...!!!

நடந்த போராட்டத்துக்கு மாணவருக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுக்க வில்லை, தீர்ப்புக்காக வருத்தபடுகிறார்... அதில மட்டும் குறிபார்த்து வருத்தத்தை சொல்லுறார்.. ஏன்னா ஐயாக்கு(இந்த இடத்தில ஐயா கருணாநிதி அவர்கள் கோபித்துக கூடாது...) ஹிந்திப்பக்கம் போய் அரசியல் அமைக்கும் யோசனைகளை ஏதாச்சும் இருக்கோ தெரியாது... இப்ப நீங்கள் நினைப்பது எனக்கு புரியுது... "ஆமா இவரு தமிழ் நாட்டில ஆச்சியை பிடித்துட்டார்... இனி ஹிந்தி பக்கம் போய் ஆச்சியை பிடிக்க போறார்.." இதைத்தானே நினைச்சீங்க... ஓ.. அப்ப அவர் பிடிக்க பார்த்தது ஆட்சி இல்லையா... ஆச்சியை பிடிப்பதுக்கா வருவான் வர மாட்டான் என்று பில்டப்பு விட்டார்... போங்க தலீவா... நீங்க ரொம்ப மோசம்... 

ஈழத்தில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இரத்த வெள்ளத்தில் பிணங்களாக மிதந்து கொண்டிருக்கும் வேளையில் வராத கவலை, தமிழ் பெண்களை சீரழித்து அதை படம் எடுத்து மகிழ்ந்த போது அந்த பெண்கள் மீது வராத கவலை, பாலச்சந்திரன் படுகொலையின் போது அந்த பாலகன் மீது வராத கவலை, தன்னை வாழவைத்த தமிழகத் தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படும் போது அந்த மீனவர்கள் மீது வராத கவலை, இப்போது சஞ்சய் தத் என்ற ஒரு நடிகன் குண்டு வெடிப்பு குற்றசாட்டுக்காக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கபட்ட போது மட்டும் இந்த கோமாளிக்கு வந்து இருக்கின்றது....

ரஜினியின் படங்கள் வந்தால் எப்படி முந்தி அடித்துக்கொண்டு ரசிகர்கள் போய் பார்கின்றார்களோ... அப்படி தன் ரசிகர்கள் போய் பார்க்க வேண்டும் என்று நடிகன் நினைக்கும் பட்சத்தில்.. தன் ரசிகர்கள் இறங்கிய போராட்டத்தில் ஒரு விதமான ஆதரவுக்குரலும் கொடுக்காமல் விட்டது ஏன்? என்ன பிரச்சனை நடந்தாலும் முதல் அடி என்னவோ ரஜினிக்குத்தான் விழும்.. ஏன்னா மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு பிரபல்யம் அடைந்திருக்கின்றார்களோ... அதே அளவில் தான் அவர் அவர்களுக்கான எதிர்ப்பும், கூச்சலும் வெளி வரும்... முதலில் ரஜினி அப்புறம் கமல்.. முடிவில் மிச்ச.. எச்ச.. சொச்சங்கள்...!!! எப்படி ஒரு ரசிகன் நடிகனை கடவுளின் அந்தஸ்த்துக்கு வைக்கின்றானோ.. அதே அளவுக்கு வெறுக்கவும் செய்வான் என்பதற்க்கு ஒரு உதாரணம் தான் இது..!!!

ஐ.. ரெண்டு "சூப்பர்ஸ்டார்"....!!!!

சாதாரண பஸ் கண்டக்டராக இருந்த இவரை, இன்று "சூப்பர்ஸ்டார்" எனும் உச்சத்தில் கொண்டு போய் வைத்தது இவர் பிறந்த கன்னடமோ, இல்லை அவர் தேசத்து மக்களோ அல்லது இப்போது இவர் பாசம் காட்டும் ஹிந்தியோ அல்ல.முழுக்க முழுக்க தமிழகமும் தமிழ் இனமுமே இந்த வளர்ச்சிக் கும் புகழுக்கும் காரணம்... (இதுக்கு எல்லாம் ஓட்டு மொத்தமா சேர்த்து தலீவன் அடித்தான் பாரு ஆப்பு...) 
அதை எல்லாம் மறந்து, தன்னை வளர்த்த தமிழகமும் தமிழ் இனமும் இன்று இது போன்ற ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் வேளையில், அதைப்பற்றி எந்த எந்தவிதமான அக்கறையும் இல்லாமல் இருந்து விட்டு இப்பொழுது யாரோ ஒருவருக்காக ஊளை இடுகின்றான்... தலீவன்...

பன்னாடைகள்... பரதேசிகள்... புறம்போக்குகள்...!!!


போராட்டக்கூட்டத்தில்...பேசும் உணர்ச்சிமிகுந்த ஒவ்வொரு பேச்சுக்களுக்கும் கைதட்டும் ஆராவாரமும் கேட்கும்... தியாகிகளைப்பற்றிக் கூறும்போது கைதட்டு வானைப்பிளக்கும்...ஊக்கப்படுத்துவது போல் என்னவும் பேசலாம் ஹிட்லரின் பேச்சு ஒன்று... நீங்கள் வரியாகக்கொடுக்கும் பணத்தை ஒரு கோர்வையாகக்கட்டினால் இங்கிருந்து நிலவுக்கு பாலம் அமைக்கலாம் அல்லது பூமியை 3 தரம் சுற்றிக்கட்டிவிடலாம்... அங்கே ஆதரவுக்குரலக்ள் கைதட்டல் சத்தங்கள்... தலைவா என்றகத்தல்கள் சமூக விடிவுக்காக விடிவு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கைகளின் எதிரொலிகள்... மாணவர் போராட்டத்திலும் இவ்வாறான எதிரொலிகள்தான் கிடைத்தது... 

ஓடு.. ஓடு.. ஓடு.. வரான் பாரு வேட்டைக்காரன்...!!!

நான் அடித்தால் தாங்கமாட்டா நாலு மாசம் தூங்கமாட்டா... விஜய் ஸ்பீச் எண்டு ஒரு வீடியோ போச்சுது... இதுக்குத்தான்யா நடிகர்களையெல்லாம் இதுக்குள்ள இழுக்காதீங்கன்னுறது...போராட்டம் செய்து களைத்ததும் ஆறுதலுக்கு ஒரு பொழுதுபோக்குக்கு அவர்களை கூப்பிட்டு என்ரர்ரெயின் பண்ணிக்கலாம்... இந்த என்ரர்ரெயின்மென்ற் ஐ கொடுப்பதுக்குத்தான் வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி எல்லா பண்ணிகளும் ஒன்று சேர்ந்து ஏதையோ கிழிக்க போகுதாம்... அப்டி என்னத்தை கிழிக்க போகுதுகள் என்று இருந்து பார்ப்பம்... (பண்ணிகளின் பட்டியல் ரஜினி முதல் நேற்று அறிமுகமாகிய மூதேவி வரைக்கும் பொருந்தும்...) இளைய தளபதி... இவருக்கு இன்னொரு பேரும் இருக்கு தலீவா...??? இவர் எல்லாம் ஏழைகளுக்கு கல்யாணம் செய்து வைக்கத்தான் சரி... இவர் எல்லாம் இந்த மேட்டர்க்கு சரிப்பட மாட்டார்... அட போங்கடா... ஆனால் படம் வெளியாகும் போது மட்டும் பிச்சைக்காரர்களை போல வந்து பிச்சை எடுங்கோ... 

ஆப்புக்களை தலீவன் சூப்பராக அடித்தும் இவனுக திருந்த மாட்டாங்க போல..!!!

இந்த போராட்டத்தை ஆதரித்து குறைந்த பட்சம் ஒரு அறிக்கை ஒன்று வெளி இட்டால் என்ன குறைந்து விடும். உன்னை இந்த அளவுக்கு வளர்த்து விட்டு இன்று உச்சத்தில் வைத்து அழகு பார்க்கும் தமிழ் இனத்துக்காக இதை செய்வதன் மூலம் இந்த ரஜினிக்கு அப்படி என்ன நஷ்டம் வந்து விடும். தெருவில் இறங்கி போராட்டம்தான் பண்ண வேண்டாம்... வீடில் இருந்துகொண்டு குட்டிக்கதை கூடவா சொல்ல முடியாமல் போய் விட்டது...

இருக்கும் தமிழர்கள் எல்லாம் வெறுத்து ஒதுக்கிய பின் யாருக்காக விளையாட போகிறாய்???

இலங்கை தமிழருக்கு ஆதரவாக ரஜனியையோ/கமலையோ குரல் கொடுக்கச்சொல்லி எவரும் வற்புறுத்தவும் முடியாது,எதிர்ப்பார்க்கவும் கூடாது. அது அவர்களின் தனிப்பட்ட சுதந்திரம். நாம லூசங்கள் மாதிரி அவங்களுக்கு ஜால்ரா அடிக்கிறது எங்க தப்பே தவிர அவங்க தப்பில்லை! ஆனா, எங்க பிரச்சினையை வைச்சு நீங்க சம்பந்தமே இல்லாம பப்ளிக்கில ஜோக் அடிச்சு,குட்டி கதை சொல்லி, தத்துவம் கதைச்சு,உங்களுக்கு உலக நடப்பு தெரியும் எண்டு காட்டிக்கொள்ள எந்தவொரு நடிகனுக்கும் உரிமை இல்ல.. போராட்டத்தில சட்டத்துக்கு கீழ போராடனுமாம்.சரி அது ஓகே, உண்ணாவிரதம் இருக்கிறது பிரயோசனமில்லையாம், அதை எவரும் கண்டுக்கமாட்டார்களாம், ஆனா ஜெயிலுக்கு போக தாயாராக இருக்கிறோம் என்று சொல்லலாமாம். இவர் நடிக்கிற படம்தான் சனங்களுக்கு புரியேல என்று பார்த்தால் பேசுற பேச்சும்தான் புரியேல.. கேட்டா பகுத்தறிவாளராம்.
ஆமா... அப்டியே இவர் வந்துட்டாலும்... நானும் எவளோ நாளைக்குதான் வீட்டுக்குள்ளையே இருக்கிறது???

பதிவில் பேரும் பகுதி ரஜினியை பாராட்டியதாகவும் இடைக்கிடையில் மானே தேனே என்று கமலஹாசன் அவர்களை பாராட்டியும், அப்டியே போற போக்கில் இளைய தலைமுறையின் புதிய தலீவா விஜய் அண்ணா??? அவர்களை பாட்டியும் பதிவு முடிவுக்கு வந்திருக்கும் நிலையில்... நம்ம "தல" அவர்களை பாராட்டாமல் விட்டால் கோடான கோடி "தல" ரசிகர்கள் மன்னிப்பார்களா? ஆக மொத்தத்தில் தலயையும் பாராட்டி விடுவோம்..!!! அப்படியே தவறி இவர் போராட்டம் நடக்கும் இடத்துக்கு வந்தால் ஆக மிஞ்சி மிஞ்சி என்ன சொல்ல போறார்.. மைக்கை எடுத்து "அன்பு தமிழ் மக்களே உங்களுக்காக போராட சொல்லி எங்களை, என்னை வீட்டுக்கு வந்து மிரட்டுறாங்க... பேசுறாங்க என்று எல்.கே.ஜி பையனைப்போல புகார் பண்ணுவாரு..!!! அஜித் "இலங்கை தமிழ் மக்கள் தன் படத்தை பார்ப்பது இல்லை.. அவ்வாறு இருக்கும் போது நான் ஏன் அவர்களுக்காக போராட வேண்டும்...?" என்று ஒரு கேள்வி எழுப்பியதாக ஒரு கேள்வி... கொய்யால இது மட்டும் உண்மையாக இருக்கட்டும்... நிட்சயம் தலக்கு பாலாபிசேகம் தான்... (சரி என் கணக்கும் தீர்ந்துது... யப்பா பிறகு யாரும் சொல்ல கூடாதுப்பா.. விஜய் ஐ பாராட்டீட்டு அஜித்தை விட்டுடீங்க.. என்று.. தலயையும் பாராட்டி இருக்கு.. )

நடிகர்களை எல்லாம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது பெரும் பாலான தமிழர்களின் எண்ணம். அவர்களின் தொழில் நடிப்பது..அவர்களிடம் இருந்து நடிப்பை தவிர வேற எதையும் எதிபார்ப்பது தவறு..அவர்கள் அரசியலில் எப்படிப்பட்ட நிலை எடுக்க வேண்டும் என்றோ அரசிலில் இறங்க வேண்டும் என்றோ அல்லது அவர்கள் சுயவாழ்வில் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்றோ எதிர்பார்ப்பது நியாமற்றது.... நடிகர்கள் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள், ஐயா ராசா நீங்க யாரும் எமக்காக தமிழக சகோதரங்களுடன் சேர்ந்து போராடவோ, புரட்சிசெய்யவோ வேண்டாம், நீங்கள் உங்கள் நலனை மட்டும் பார்த்து ஒதுங்கியே இருங்கள், அது உங்கள் தனி மனித சுதந்திரம், உங்களை போராடச்சொல்லி கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை, உங்கள் படங்களில் என்ன கருமத்தயாவது நடித்துவிட்டு போங்கள், எமக்கு எந்த பிரச்சனையும் இல்லை, நீங்கள் எமக்காக போராடாததால் உங்கள் படம் ஒன்றும் ஓடாமல் முடங்கிப்போகாது, படம் நன்றாயிருந்தால் பழகிப்போன பொழுதுபோக்காய் நாம்கூட பார்க்கத்தான் போகிறோம்.

தொடர்ந்தும் உங்களை கோடீஸ்வரராய் வாழவைப்போம், ஆனால் ஒன்றுமட்டும் சொல்கிறேன் இனிமேல் உங்கள் படங்களில் ஏழைக்கிழவியையும் ஏதுமற்ற சிறுவர்களையும் அணைத்து காக்க வந்த கடவுள் ஆவது, உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையென்று கூச்சலிடுவது, நாலுபேரை சுத்தி நிற்கவைத்து சுண்டங்காய் பயல்கலான உங்களைப்போய் தமிழர்க்கு சுபீட்சம் தரவந்த வீர தீர சூரர்களாய் நாக்கூசாமல் பாராடுவது, நான் கடவுள்...நான் கடவுள் என்று கொனட்டுவது 26 மணி நேரமும் [நேரம் போதாமல் அடுத்த நாளில் 2 மணித்தியாலம் கடன் வாங்கி] மக்கள் மக்கள் மக்கள் என்று மக்களுக்காக வியர்வையும் ரத்தமும் சிந்துவது, பச்சைத்தமிழன் சிவப்புத்தமிழன் என்று நீட்டி முழக்கி வசனம் பேசுவது, என்றெல்லாம் இனிமேல் எவனாவது இந்த மாதிரி மாதிரி தமிழருக்காக மயி* புடுங்குற மகாஉத்தமன் வேடம்போட்டால் என்ன ஆகும்னு தெரியுமில்லே.. ஒருவாடி முடிவு பண்ணீட்டா நா என் பேச்சையே கேட்க மாட்டேன்..!!! பாலாபிஷேகமும் பூமாலை தீப ஆராதனை மட்டும் கண்ட உங்கள் வானுயர்ந்த வண்ணப்படங்களுக்கு செருப்பே மாலையாகும், சேற்று எருமைச்சாணியும் சிலவேளை உதவக்கூடும், பார்த்து பக்குவமாய் நடந்து கொள்ளுங்கள், இந்த மாணவர் போராட்டம் தமிழனின் உரிமைக்குரலாய் மட்டுமல்ல இவ்வளவு காலமும் தமிழனை எழவிடாமல் கட்டிவைத்திருந்த பல மாயை விலங்குகளை தகர்த்தெறியத் தொடங்கியிருக்கிறது, இன்னும் உடைத்தெறியும் பல இழிவுகளை... அது ரடிகர்கலாகிய நீங்களாவும் இருக்கலாம்...

"நடிகனில் இருந்த மனிதம் எம்.ஜி.ஆர் உடனேயே அழிந்து விட்டது...!!! நடிகர்கள் மனதில் மனிதம் மரித்து விட்டது என்பதே நியம்...!!!"

Post Comment

No comments:

Post a Comment