Friday, March 29, 2013

கேடி பில்லா கில்லாடி ரங்கா - விமல் VS சிவகர்த்திகேயன் !!!

படத்தில் எப்படி கேடி, கில்லாடி ஹீரோக்கள் இருகிறாங்க்களோ அதே போல கிளுகிளுன்னு, குளுகுளுன்னு ரெண்டு ஹீரோயின்களும் இருக்கிறாங்க.. அட போங்க பாஸ் யாரு நடித்தால் என்ன நமக்கு செம டக்கர் ஹீரோயின் இருந்தால் போதுமே என்று என்னைப்போல எண்ணும் அன்பு உள்ளங்களுக்கு இயக்குனர் பாண்டியராஜ் ஒரு குறையும் வைக்கவில்லை. பாண்டியராஜின் வழமையான படங்களின் பாணியிலே இந்த படமும் முழு நீள காமடி படமாகவும்; இறுதியில் ஒரு மெசேஜ் சொல்லும் படமாகவும் உள்ளது.

நட்பின்றது கரண்டு மாதிரி..!!!


சரி இனி விமர்சனத்துக்கு போவோம்.... 


நடிகர்கள் - விமல், சிவகர்த்திகேயன், பிந்து மாதவி, Regina Cassandra, பரோட்டா சூரி...
இயக்கம் - மெரீனா புகழ் பாண்டியராஜ்
இசை - யுவன் சங்கர்ராஜா
தயாரிப்பு - பாண்டிராஜ், மதன்
வெளியீடு - Pasanga Productions Escape Artists Motion Pictures

முதற்பாகம்...

படத்தின் தொடக்கமே குடியில் தான் ஆரம்பிக்கும்... அப்பவே எனக்கு தெரியும் இது செம ஹிட் படம்ன்னு... கிக்கில ஆரம்பித்து ஹிட் ஆகாமல் போகுமா??? 'ஒரு புறம்போக்கு முத முதலில்...' என்று ஆரம்பிக்கும் சிம்பு, யுவன் பாடிய பாடல் ஆரம்பத்திலேயே கலக்கலாக்கி விட்டது. விமல், சிவகர்த்திகேயன், பரோட்டா சூரி ஆகியோர் நண்பர்கள்... அதிலும் விமல், சிவகர்த்திகேயன் யாராலும் பிரிக்க முடியாத நண்பர்கள்.. இதுதவிர விமலின் அப்பாவும், சிவகார்த்திகேயனின் அப்பாவும் நல்ல நண்பர்கள் ஆனால் பிள்ளைகளின் போக்கினால் 'உன் பிள்ளைதான் என் பிள்ளையை கெடுத்தான்..' என்று வாய்ச்சண்டை தொடங்கி முறாய்ப்பில் வந்து நிற்கின்றது அவர்களின் நட்பு! 

உண்மையிலேயே அம்மணி மைல் தானுங்கோ..!!!

ஆனால் நம்ம ஹீரோக்களுக்கு அதுதானே ஜாலி... ஹீரோக்களுக்கு எந்த வேலையும் இல்லை.. வேலை செய்வதே பிடிக்காது என்றுதான் சொல்லணும்.. ஆனால் இவர்களுக்குள் ஒரு இலட்சிய வெறி இருக்கின்றது அது என்னவென்றால் ஏரியா கவுன்சிலர் ஆகணும் என்று... இந்த இலட்சிய வெறிக்கு மத்தியில் குடியும் கூத்தும் என்று காலம் போகிறது; வழமையை போல அப்பா, அம்மா 'நீ ஏன் பிறந்தாய் மகனே...' என்று நல்ல கருசனை காட்டுகின்றார்கள். அப்பா, அம்மான்னா இது எல்லாம் சகயம் தானே??? பொண்ணுங்க வந்துட்டா தங்க நட்பை பிரித்து விடுவாங்க என்று பொண்ணுங்களையே பார்க்காமல் திரிகின்றார்கள்.. (பயபுள்ளைகள் உண்மைய எப்படி புரிந்து வைத்திருக்குராங்க..)

ம்ம்ம்... ம்ம்ம்... அடச்சீ வாசிங்க பாஸ்சு...!!!

இதுக்காகவே 'பொண்ணை கண்டால் மண்ணை பார்த்து நடக்கும் சங்கம்' என்று ஒரு சங்கம் வேறு வைத்திருக்கிராங்க என்றால் பார்த்துகொள்ளுங்களேன்... என்ன தான் இருந்தால் என்ன சும்மா போற போக்கில் சனியன் ஹாய் சொல்லாமலா போக போகுது... அம்புட்டும்தான் விமல் பிந்து மாதவியை லவ்வு பண்ண, நம்ம சிவாக்கு கிடைத்த வாய்ப்பு லட்டு போல இருக்கும் அந்த பொண்ணு... ஆனால் என்ன பேருதான் வரமாடேங்குது... Regina Cassandraவை சிவா லவ்வு பண்ணுறார்.. பிந்து மாதவி வைத்திய சாலையில் டோக்கன் கொடுக்கும் பிரபல பரபரப்பான வேலையில் இருக்கின்றார்... Regina Cassandraவுக்கு சொந்தமாக ஜிராக்ஸ் எடுக்கும் கடை இருக்கு.. விமல் அடிக்கடி வைத்திய சாலை போவது... சிவா ஜிராக்ஸ் கடைக்கு போவதுமாக படம் நகர்கின்றது. இந்த காதல் லீலைகளுக்கு மத்தியில் உள்ளுராட்சி தேர்தல் வருகின்றது. இதில் அவர்களில் இலட்சிய வெறிக்கு ஏற்றால் போல வெற்றி பெறுவார்களா இல்லையா? என்ற ஏக்கத்துடன்... இன்டர்வெல் வருகின்றது..!!!

இரண்டாம் பாகம்...

சாதிச்சுபுட்டியலேடா...!!! 

ஒரு மாதிரி லோ..லோன்னு பின்னாடி அலைந்து லவ்வில் சாதிச்சுபுராங்க நம்ம பசங்க..!!! இடை இடையே சொல்லி அடக்க முடியாத சிரிப்புக்கள் எக்கச்சக்கம்... எல்லாத்தையும் சொல்லிட முடியாது. இந்த நிலையில் இருவரும் தங்கள் காதலை வீட்டுக்கு தெரியப்படுத்துகின்றார்கள். அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளகின்றார்கள். ஆனால் சிவாவை மட்டும் உள்ளுராட்சி தேர்தலில் வெற்றி பெற்றால்தான் கல்யாணம் என்று சொல்லி புடுறார் அவீங்க மாமா..!!! விமல், சிவாவின் காதலி, பரோட்டா சூரி இவர்களின் உதவியுடன் சிவா உள்ளுராட்சி தேர்தலில் வெற்றி பெற்றாரா இல்லையா? என்பதுதான் கதை... என்று சொல்லி விட மாடேன்.

டேய் சிவா... உனக்கு வாழ்வுடா... வாழு வாழு..!!!

வீட்டுக்கு உதவாத பிள்ளையாக இருக்கும் ஹீரோக்கள் வீட்டுக்கு நல்ல பிள்ளைகளாக எப்படி மாறுகின்றார்கள்.. அதில ஒரு செண்டிமெண்ட், காதல் என்று சும்மா கிளைமாக்ஸ்ல பட்டைய கிளப்பி இருப்பாபில... எவ்வளோவு சிரித்தோமோ அதே அளவுக்கு யோசிக்கவும் வைத்திருக்கின்றார் பாண்டியராஜ். படத்தின் இறுதிக்கட்டம் நியமாகவே கருத்துதான்...(எல்லாமே காமடிதான் பாஸ்...) படத்தில் இயக்குநர், நடிகர்கள் என்று எல்லோரும் ஒட்டுமொத்தமாக சேர்ந்து சாதித்திருக்கின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையிலேயே முழு நீள படம்... படத்தில் ஒவ்வொரு வார்த்தைகளும் கவுண்டர்கள்..(சென்ஸ் ஜோக்குகள்...டெ(அ)லக்ஸ்பண்டியன் படத்தில் சந்தானம் காமடி என்ற பேரில் செய்தும் கூத்துக்கள் போல இல்லாமல் சகலரும் எந்தவித சங்கடத்துக்கும், முகச்சுளிப்புக்கும் உள்ளாகாமல் மனம் விட்டு சிரிக்க கூடிய படம்...) படத்தில் ஹீரோக்கள் போனில் கேட்கும் ரிங்டோன் உட்பட எல்லாமே டைமிங்.. கலக்கல்... நக்கல், நையாண்டி, சின்ன சின்ன சண்டை எல்லாத்திலும் காமடி வெறி ஊறிப்போன படம்... இது..!!!

மரியாதைக்குரிய இயக்குநர் பாண்டியராஜ்...!!!

சாதித்தவை :- படத்தில் மிகவும் முக்கியமான, பாராட்ட வேண்டிய விடயம் என்னவென்றால் ஆபாசத்தையே மையமாக வைத்து படம் எடுக்கும் இந்த காலத்தில், அதை விட்டால் தமிழ் ரசிகர்கள் படத்தை ரசிக்க மாட்டார்கள் என்ற கருத்தை உடைத்தெறிந்து... எந்தவித ஆபாசமான காட்சிகள் இல்லாமல் ரெண்டு ஹீரோஜின்களின் உண்மையான அழகை வடிவாக படத்துக்கு கொடுத்திருப்பது மிகவும் சூப்பர் ஆக உள்ளது. இதுக்காகவே படத்தை ரெண்டாம் தடவை பார்க்கலாம்... இது மட்டுமா படத்தில் எந்த வித இரட்டை அர்த்தமுள்ள காமடிகள் கூட இல்லை என்பது பாண்டியராஜ் மேல் ஒரு மரியாதையை கொண்டுவருகின்றது.

இது நம்ம பசங்களுக்காக...என்ஜாய்..!!!

இசையமைப்பாளராக யுவன் தனது முழு பங்கையும் கொடுத்துள்ளார். முதல் பாடலில் இருந்து கடைசி பாடல் வரைக்கும் காட்சிகளுடன் பார்க்கும் போது மிகவும் சூப்பர் ஆக இருக்கின்றது. அதிலும் சிம்புவுடன் சேர்ந்து பாடிய பாடல் "குடி மக்களுக்கு...ஒரு தேசிய கீதம்.." இசையமைப்பாளராக என்ன செய்ய முடியுமோ அதனை முழுமையாக 'கேடி பில்லா கில்லாடி ரங்கா'வுக்காக கொடுத்துள்ளார்.

அதிஸ்டக்கார கண்ணாடி எங்க போய் உக்காந்திருக்கு பாருயா..!!!

ஹீரோக்கள் பத்தி சொல்லவே தேவையில்லை... தனித்தனிய வந்தாலே மாதக்கணக்காக சிரிக்க வைப்பாணுக.. சேர்ந்து வந்திருக்காணுக வருசக்கணக்காக சிரிக்க வைக்காமல் போக மாட்டாங்கள் என்று நினைத்தது சரியாக போச்சு.... படத்தில் கடைசி பத்து நிமிடத்தை விட மிச்சம் எல்லாமே சிரிப்பு மயம் தான்... கவுண்டர் மன்னன் சிவகார்த்திகேயன் சும்மா பின்னி பிடல் எடுத்திருப்பாபில... விமல் கலகலப்புக்கு பிறகு கொஞ்சம் முயற்சி செய்து சிவா அளவுக்கு வராட்டியும் ஓரளவுக்கு காமடி பண்ணியிருக்கார். ஆனால் சொதப்பல் என்று சொல்ல முடியாது. சிவா வரும் போது சும்மா திரை அரங்குகள் கைதட்டலில் அதிருது....!!! 

படம் பத்தி தயாரிப்பாளரும் இயக்குனருமான பாண்டியராஜ் எந்த வித கவலையும் கொள்ள வேண்டியதில்ல.. இந்த படம் செமயாக கல்லா கட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. நிட்சயமாக நான் சொல்ல தேவையில்லை.. ஒரு முறை படம் பார்த்தால் எல்லோரும் இரண்டாம் முறை படம் பார்க்கணும் என்று ஒடுவீங்க.. அப்டி உங்களை ஈர்க்கும் அளவுக்கு இருக்கும் படத்தில் காமடிகாட்சிகள்... சூப்பர் மாப்பு... மொத்தத்தில் படம் டக்கர்..!!! கவர்ச்சி இல்லாத குக்கர்..!!!

ஹீரோ எல்லாம் மேட்டர் கிடையாது மேட்டர்தான் ஹீரோ, டைம் பாஸ் ரொம்ப முக்கியம் ஜீ, பெண்ணை பார்த்தால் மண்ணை பார்த்து நடப்போர் சங்கம், நட்பு என்றது கரண்டு மாதிரி, பெண்களால் கழட்டி விடப்பட்ட காளையர் சங்கம்...!!!

Post Comment

No comments:

Post a Comment